Tuesday, December 09, 2008

அவந்திகாவின் அழைப்பை ஏற்று......

உண்மையைச் சொன்னாக் கண்டதையும் போனதையும் எழுதிக்கிட்டு இருக்கும் நான் மும்பைச் சம்பவம் பற்றியும் சொல்லி(?) இருக்கணும்தான். ஆனா.... தொலைக் காட்சியில் பார்த்து திக்கிச்சுப்போய் இருந்தேனே.....


சாதாரண மக்களுக்கு இருக்கும் போக்குவரத்துகளில் ரொம்பவே முக்கியமானது ரயில்வண்டிகள்தான். (ரெயில்வே சம்பந்தம் இன்னும் கொஞ்சம் என் ரத்தத்தில் ஒட்டியிருக்கு) அங்கேயும் தீவிரவாதமுன்னா.....

அதான் மீடியா பண்ண அட்டகாசத்தில் பார்த்துருப்பீங்களே..... என்ன? இல்லையா? ஆமாம். நீங்க சொல்றது ரொம்பச் சரி. தாஜ் ஹோட்டல் அமர்க்களத்தைக் காமிக்கத்தான் டைம் இருந்துச்சு. ரெயில்வே ஸ்டேசனையும், ஏழைபாழைகளையும் கவனிக்க யாருக்கு நேரம் இருக்கு?

சம்பவம் நடந்த மறுநாளும் அதுக்கு அடுத்த நாளும் நான் ஆஸ்தராலியாவில் இருந்தேன். அங்கே தொலைக்காட்சியில் 'தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகளால் ரெண்டு ஆஸ்தராலியர்கள்' கொல்லப்பட்டதைத் திரும்பத்திரும்பக் காட்டிச் சொல்லிக்கிட்டே இருந்தாங்களா....... கேட்டுக்கேட்டு ஒரு கட்டத்தில் அது என்னவோ 'நேற்று மழை பெய்தது' ன்னு சொல்றது போல ஒரு காதுக்குள்ளே புகுந்து மறு காது வழியா வெளியே போச்சு.

முதலில் கேட்ட,அதிர்ச்சியான நிகழ்வுகளை போகப்போக மனம் எப்படிச் சர்வசாதாரணமா எடுத்துக்குதுன்னு பார்த்தப்ப.....

உண்மை முகத்தில் வந்து அறைவது போல்,

இதுதான் தீவிரவாதிகளின் தாக்குதல் முதல்முறையா நடக்குதா? காலங்காலமாய்ப் பட்டுமா புத்தி வரலை? எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார் அமெரிக்காவைப் பாருன்னு சொல்றதை இங்கேயும்சொல்லியாச்சு அங்கத்து 9/11 மாதிரி இங்கே நடந்துருக்குன்னு.

உலகத்துக்கே ஒரே ஒரு 9/11 போதாதா? அதுலே இருந்து,மத்த நாடுகள் ஒன்னுமே படிக்கலையா? இதென்ன திருவிழாவா? எங்க நாட்டுலேயும் கொண்டாடுறோமுன்னு பெருமையடிச்சுக்க........


நாட்டின் பாதுகாப்பைப் பலமாக்கி இருக்கவேணாமா ? இதுக்குன்னு வருசாவருசம் ஒதுக்கும் மக்கள் வரிப்பணம் எங்கே போகுது? தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுன நம்ம பாதுகாப்பு வீரர்கள் ரெண்டு பேர் ஒரு துப்பாக்கியை மாத்திமாத்திப் பங்குவச்சுக்கிட்டு எதிரியைச் சுட்டுத் தள்ளுனாங்களாம்- எங்கூர் டிவி நியூஸ். விடிஞ்சது போங்க.

'என் கண்ணுக்குத் தீவிரவாதி தெரியறான். கொஞ்சம் துப்பாக்கியைத் தரயா? சுட்டுட்டுத் திருப்பிக் கொடுத்துடறேன்'

இப்போ... அண்டைநாடுதான் காரணம். அதோடு போர் நடத்தப்போறோம்...

வேணாம். நிறுத்து.ஆணிவேரையே பிடுங்க முடியுமா உன்னாலே? பேசாம உள்நாட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்து. போருக்குச் செலவு செய்யும் தொகையைக் கொண்டு கூடுதல் பலம் செஞ்சுக்கோ. அதே 9/11க்கு பிறகு அதே அமெரிக்காவின் பாதுகாப்பு முறைகளைப் பார்க்கலையா?


மனித உசுருங்க மலிஞ்சு போன நாடு, பணம் பதவி அதிகாரம் இவற்றை மட்டுமே வாழ்க்கையின் உன்னத நோக்கங்களாக் கடைப்பிடிக்கும் அரசியல்வாதிகளைக் கொண்ட அதிர்ஷ்டம் கெட்ட நாடு....


அதெப்படிங்க...தேனை எடுத்தவன் கையை நக்காமல் விடுவானா? நக்கிக்கோ. ஆனால் கொஞ்சூண்டு நக்கிக்கோ. முழுசையும் நக்கிட்டு, வெறும் பாத்திரத்தைக் காமிச்சா எப்படி?

நாட்டு மக்கள் எல்லாம் செத்து நாடே சுடுகாடு ஆனபிறகு என்ன பண்ணப்போறே? எல்லாத்துலேயும் ஊழல் செஞ்சு அமுக்குனதைச் செலவு செய்யவாவது நாடு வேணாமா?

பெருச்சாளிகளை ஒன்னும் செய்ய முடியாதுன்னா.....

மதத்தின் பெயரால் அக்கிரமம் செய்யும் தீவிரவாதிகளும் எல்லாரையும் கொன்னுட்டு அப்புறம் மதத்தை எங்கே போய் பரப்புவாங்க?

நினைச்சுப் பார்க்கப்பார்க்க மனசுதான் சரியில்லாமப்போகுது(-:

ஆனா நம்பிக்கையே இல்லைன்னா நாம் வாழறதுக்கு ஒரு அர்த்தமே இல்லாமப் போயிருமே. இப்போதைய நம்பிக்கை இளைய சமுதாயம்தான்.
இவுங்க தன்னம்பிக்கையோடு, செயல்பட்டா ஊழல் இல்லாத ஒரு சமூகத்தை, நாட்டை உருவாக்க முடியும். ஊழல் தொலைஞ்சாவே பாதி பலம் வந்த மாதிரி. மீதி பலத்தைப் பாதுகாப்பு கொடுக்கும்.

புலம்ப ஒரு சான்ஸ் கொடுத்த அவந்திக்கு நன்றி.அவுங்களுக்கு இருக்கும் நாட்டுப்பற்று, போற்றிப் பாராட்டவேண்டியதொன்று.


தொடர்பதிவுக்கான அழைப்பு உங்கள் எல்லாருக்கும்தான். எழுதுங்க.

34 comments:

said...

ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு நீதி! பணம் இருந்தால், ஆள் பலம் இருந்தால் அவர்களுக்கு தனி கவனிப்பு. இல்லாதவன் என்றால் தவறே செய்யாவிட்டாலும் ஆப்பு..:(

said...

//தொடர்பதிவுக்கான அழைப்பு உங்கள் எல்லாருக்கும்தான். எழுதுங்க.//

எழுதிட்டேங்க, கையில கன்னோடு அந்த மூர்க்கர்கள் மும்பையைத் தாக்கிக் கொண்டிருந்த போதே...

http://tamilamudam.blogspot.com/2008/11/blog-post_26.html

அவர்களை நோக்கிய கேள்விக் கணைகளாய்.. எல்லோருக்கும் பிரார்த்தனைக்கான அழைப்பாய்...

//ஆனா நம்பிக்கையே இல்லைன்னா நாம் வாழறதுக்கு ஒரு அர்த்தமே இல்லாமப் போயிருமே. இப்போதைய நம்பிக்கை இளைய சமுதாயம்தான்.
இவுங்க தன்னம்பிக்கையோடு, செயல்பட்டா ஊழல் இல்லாத ஒரு சமூகத்தை, நாட்டை உருவாக்க முடியும். ஊழல் தொலைஞ்சாவே பாதி பலம் வந்த மாதிரி. மீதி பலத்தைப் பாதுகாப்பு கொடுக்கும்.//

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

said...

சாமானியன் புலம்பல்கள் செவிசாய்க்கப்படுவதில்லை என்பதுதான் வருத்தம் தருகிற உண்மையாகிடிச்சு டீச்சர்...:(


எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகளிலேயே ஒவ்வொரு சந்ததியும் கடந்துகிட்டிருக்குங்கிறதும் கண்கூடு...

said...

பேசக்கூடாது... இனிமேல், செயல் செயலில் தான் காண்பிக்கவேண்டும்.

said...

மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம், மலர் மீது துயில் கொள்ளட்டும்

வருகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே

காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்

விடியாத இரவொன்று வானில் இல்லை

- நன்றி வைரமுத்து அவர்கள்

said...

//என் கண்ணுக்குத் தீவிரவாதி தெரியறான். கொஞ்சம் துப்பாக்கியைத் தரயா? சுட்டுட்டுத் திருப்பிக் கொடுத்துடறேன்'//

:(((((

said...

துளசி,

எல்லோருமே ஒண்ணுக்குள்ள ஒண்ணாமே. அதைப் படிச்சீங்களா.

said...

///மதத்தின் பெயரால் அக்கிரமம் செய்யும் தீவிரவாதிகளும் எல்லாரையும் கொன்னுட்டு அப்புறம் மதத்தை எங்கே போய் பரப்புவாங்க?///

நல்ல கேள்வி!

//அவந்திக்குஅவுங்களுக்கு இருக்கும் நாட்டுப்பற்று,
போற்றிப் பாராட்டவேண்டியதொன்று.//

கண்டிப்பாய்!

said...

//ஊழல் தொலைஞ்சாவே பாதி பலம் வந்த மாதிரி. மீதி பலத்தைப் பாதுகாப்பு கொடுக்கும்.//

நம்ம நாட்டைப் பொறுத்தவரைப் பிரச்சினையின் அடித்தளம் இதுதான் டீச்சர்.இதனை சாகடிக்க முடிந்தால் மற்றவைகள் சாத்தியமே.

said...

வேணாம். நிறுத்து.ஆணிவேரையே பிடுங்க முடியுமா உன்னாலே? பேசாம உள்நாட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்து. போருக்குச் செலவு செய்யும் தொகையைக் கொண்டு கூடுதல் பலம் செஞ்சுக்கோ. அதே 9/11க்கு பிறகு அதே அமெரிக்காவின் பாதுகாப்பு முறைகளைப் பார்க்கலையா?//

இதுதான் என் கருத்தும்,ஈராக்கில் ஜனநாயகத்தை அமெரிக்கா கொண்டுவர முடியாது, அதற்கு அவர்கள தயார் நிலையில் இல்லை.
போராட்டமோ,புரட்சியோ,மாற்றமோ உள்ளிருந்து கிளம்பினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.பாகிஸ்தானை நாம் திருத்தமுடியாது, நம்மைப்பார்த்து அவர்களாக திருந்தினால்தான் உண்டு.

இந்நிலையில் நாம் நம் பாதுகாப்பை பலப்படுத்துவதை மட்டுமே யோசிக்கவெண்டும்.

said...

விடியும்....

said...

துள்சிங்க,

ரொம்ப அழுத்தமா சொல்லியிருக்கீங்க. எல்லாத்தையும் அமுக்கி, அமுக்கி வைச்சுட்டு நீங்க சொன்ன மாதிரி அத வைச்சிட்டு பந்தா பண்ணி அடுத்தவன் பொறாமை படுறமாதிரி வாழ சரியான நாடு நம்மோடதுதான், அத அனுபவிக்கவாவது கொஞ்சூண்டு திரும்ப அமுக்கிற பணத்தில செலவு பண்றதா வேண்டாமா... சரியான கேள்வி... மதம் சார்ந்தும் நீங்க சொன்னது ரொம்பச் சரி... கேப்பாங்களா...

நானும் ஒரு பதிவு போட்டுட்டேங்க... முடிஞ்சா பாருங்க. கிட்டத்தட்ட இதே மாதிரிதான் சவுண்டாகும்.

said...

அன்பின் துளசி,
உங்க கருத்தும், அத நீங்க சொன்ன விதமும் பிடிச்சு இருக்கு. பக்கத்து வீட்டுகாரங்ககிட்ட பேசற ஒரு நினைப்பு வந்தது.
நன்றிகள்.

said...

வாங்க தமிழ் பிரியன்,

சம நீதி இல்லாட்டா இப்படித்தான். சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பது நம்ம நாட்டில் இல்லை(-:

(ஏய்....நான் யாருன்னு தெரியுமாடா.... )

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கண் கலங்க வச்சக் கவிதைப்பா உங்களுது.

said...

வாங்க தமிழன் - கறுப்பி.


எப்பவாவது ஒரு நாள் நல்லது நடக்கத்தானே வேணும். அது எப்போ என்றதுதான் தெரியலை.

அதுவரை...... நாட்டுலே ஆட்கள் இருக்கணுமே

said...

வாங்க குமார்.

பேசிப்பேசித்தான்.............

எதிரில் இருப்பவர் காது கேளாதவர் என்ற உண்மை தெரியாமல்......

பேசிப்பேசித்தான்.....

said...

வாங்க நரேன்.

மதம் & சாதி ரெண்டையும் ஒழிச்சுக் கட்டினாத் தேவலை.

said...

வாங்க சென்ஷி.

சிக்கன நடவடிக்கை.

said...

வாங்க வல்லி.

அப்படியா?

எனக்கு ஒன்னும் தெரியலையேப்பா(-:

said...

வாங்க ஜீவன்.

உயிர்களுக்கு உத்தரவாதமில்லை.

said...

வாங்க ராஜ நடராஜன்.

புரையோடிப் போயிருக்கே எல்லா மட்டத்திலும்.

புத்து நோய்.

said...

வாங்க குடுகுடுப்பை.

திருத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

திருந்தணும். அம்புட்டுத்தான்.

தனக்கே புத்தி வந்துத் தானாய்த் திருந்தணும்.

said...

வாங்க கோபி.

எப்போ?

நீண்ட காத்திருப்பு. யுகங்களாகுமோ(-:

said...

வாங்க தெகா.

உங்க பதிவு பார்த்தேங்க.

நாம் புலம்பி என்ன ஆகப்போகுதுன்னு கூட சிலசமயம் ஆயாசமா இருக்கு.

said...

வாங்க பாலாஜி பாரி.

நலமா? ரொம்ப நாளா ஆளையே காணோம்!

உங்ககிட்டேயெல்லாம் சொல்லி மனசை ஆத்திக்கத்தானே இந்தப் பதிவே.

said...

வணக்கம் டீச்சர்!! மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள்(உள் நாடு,வெளி நாடு)மட்டும் பலி.டீவி சேனல்கள் மட்டும் மாத்தி மாத்தி கூப்பாடு போட்டுச்சே தவிர ...ஒரு அரசியல்வாதி கூட அந்த இடத்திலே இல்லை...கண்துடைப்புக்காக மருத்துவமனையில் ஒரு விசிட்..உள்நாட்டு சதியோ வெள்நாட்டு சதியோ..போனது மக்கள் உயிர்.என்ன தான் வழி இந்த நிலை மாற?

said...

வாங்க சிந்து.

என்ன இவ்வளோ லேட்டு வகுப்புக்கு வர?

அரசியல் வியாதிதான் சினிமாக்காரரோடு விஸிட் வந்தாரேப்பா!!

said...

கேட்டுக்கேட்டு ஒரு கட்டத்தில் அது என்னவோ 'நேற்று மழை பெய்தது' ன்னு சொல்றது போல ஒரு காதுக்குள்ளே புகுந்து மறு காது வழியா வெளியே போச்சு//

நல்லா சொன்னீங்க,
எவ்வளவு சொன்னாலும் செவிடன் காதுல ஊதின சங்குதான்.

ம்ஹும், நாம பொலம்பிப்போம்.
இங்கன யாராவது ஒரு அரசியல்வாதி இல்லாமலா, இல்ல வராமலா போயிடுவாரு, அவரு இதையெல்லாம் படிக்காமலா போயிடுவாரு,

'என் கண்ணுக்குத் தீவிரவாதி தெரியறான். கொஞ்சம் துப்பாக்கியைத் தரயா? சுட்டுட்டுத் திருப்பிக் கொடுத்துடறேன்'//
நல்லா காமெடி பண்றீங்க மேடம்.

இப்போதைய நம்பிக்கை இளைய சமுதாயம்தான்.
உங்கூரு டி.வியில சட்டக்கல்லூரி வெவகாரத்தை காட்டலயாக்கும்.

said...

வாங்க அமித்து அம்மா.

அது காமெடி இல்லீங்க(-: நெசமாவே ரெண்டு பேருக்கு ஒரு துப்பாக்கின்னு ஷேர் பண்ணிக்கிட்டாங்களாம்.


எங்கூர் டிவியில் இந்தியாச் செய்தியே வராது. இந்த நிகழ்வில் பிரிட்டிஷ்காரர்களும்,ஆஸ்தராலியர்களும் மாட்டிக்கிட்டதாலேதான் இதையே காமிச்சாங்க.

எங்க வீட்டில் சன்/மூன் தொலைக்காட்சி போட்டுக்கலை.

அதான் ரொம்ப சுத்தம்.

எதா இருந்தாலும் நம்மாட்கள் பதிவுலே எழுதுவாங்க. அதையே படிச்சுக்கரதுதான்.

said...

ஒரு வாரமா ஈது விடுமுறையை கொண்டாட ஷார்ஜா போயிருந்தோம் அதான் டீச்சர் லேட்டு(ஆப்சண்ட்).அக்கா பதிவை மட்டும் வி்டலை..ஆனா கமண்ட்ஸ் போடமுடியலை.

said...

சிந்து,

ஆறு நாள் லீவாமே. மஜாதான்.

அக்காவை 'விடலை' என்பது மகிழ்ச்சி:-)

said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்கம்மா!
கண்டிப்பா அத்தனை கேள்விகளும், ஆதங்கமும் நியாயமானதே!

எங்கெல்லாம் அநியாயம் நடக்கிறதோ,
அங்கு பேரநியாயமும் சேந்து நடப்பது நமது தலையெழுத்தாக இருப்பதை மாற்றவேண்டும்..
பார்ப்போம்..!

said...

வாங்க சுரேகா.

நலமா? ரொம்ப நாளா உங்களைக் காணோம்?

நல்லது வரட்டுமுன்னு காத்துருக்க வேண்டியதுதான். வேற வழி?