அனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
விளக்கு அலங்காரங்களையெல்லாம் நண்பர்களின் பதிவுகளில் பார்த்தாச்சு.
நைவேத்தியத்துக்கு மீனாட்சியின் குரலில் 'தமிழ் நீ -தமிழ் நீ' யும் இதோ இங்கே இருக்கும் பொரி உருண்டையும்.
இந்தப் பொரி போதுமா..... இன்னும் கொஞ்சம் வேணுமா?
Thursday, December 11, 2008
கார்த்திகை தீபம்
Posted by துளசி கோபால் at 12/11/2008 06:33:00 PM
Labels: அனுபவம்.
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
ஹை நீங்க பண்ணினதா, நல்லாருக்கே
கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
ம், பொரி உருண்டையை பார்க்க மட்டும்தான் கொடுத்து வெச்சுருக்கு.
நல்லா வந்துருக்கு போல.
எப்படி செஞ்சீங்க ரெசிப்பி கொடுங்களேன்.
வாங்க சின்ன அம்மிணி.
எதுக்கு வேண்டாத விசாரம்?
ஆமாம்.
நானே
என்
கையாலே
எடுத்துத்
தட்டில்
அடுக்கிப்
படம்
புடிச்சேன்:-)
வாங்க அமித்து அம்மா.
பார்க்கவே மஜாவா இருக்குல்லே!!!!
ரெஸிபி ரொம்ப ஈஸிதான்.
ஒரு ரிட்டர்ன் டிக்கெட் நியூஸி - சிங்கை- டெல்லி.
கன்னாட் ப்ளேஸ் ச்சலோ.
சரவண பவன் கே பாஸ் ருக்கோ.
வாங்கிக்கிட்டு டெல்லி-சிங்கை -நியூஸி
அம்புட்டுத்தான்:-)
இது அவல் பொறி உருண்டையா ?
\\இந்தப் பொரி போதுமா..... இன்னும் கொஞ்சம் வேணுமா?\\
எல்லாமே எனக்கு தானே டீச்சர்...அப்படின்னா போதும்
இனிய வாழ்த்துக்கள் ;)
ஹை நீங்க அடுக்கியதா நல்லாருக்கே?
:))))))))))))))
டீச்சர்!!!
கார்த்திகை தீபங்கள் வரிசையாய் அடுக்கி ஒளிரும் புகைப்படம் அடுத்து போடணும் ஆமாம் இதான் இன்னிக்கு உங்களுக்கு ஹோம் ஒர்க்! :))
//அனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள்//
உங்களுக்கும் :-)
//இந்தப் பொரி போதுமா..... இன்னும் கொஞ்சம் வேணுமா?//
ஏங்க! மேடம் இப்படி வயித்தெரிச்சலை கிளப்புறீங்க :-(((
நல்லா சாப்பிடுங்க ம்ஹீம்
ரெஸிபி ரொம்ப ஈஸிதான்.
ஒரு ரிட்டர்ன் டிக்கெட் நியூஸி - சிங்கை- டெல்லி.
கன்னாட் ப்ளேஸ் ச்சலோ.
சரவண பவன் கே பாஸ் ருக்கோ.
வாங்கிக்கிட்டு டெல்லி-சிங்கை -நியூஸி
அம்புட்டுத்தான்//
:-)))))))))))))
ரெசிப்பி நல்லா இருக்கு. இங்கே சரவணபவனும் இல்லை, அடையார் ஆனந்த பவனும் இல்லை.
:(
கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
இனிய வாழ்த்துக்கள்.
பார்க்க நல்லாயிருக்கு ரீச்சர்....ஆனா இது அவல்/நெல் பொரி மாதிரி தெரியல...நம்ம பொரிகடலை கடையில் இருக்கும் சாதா-பொரி மாதிரியில்ல இருக்கு?...
சுக்கு, தேங்காய் எல்லாம் போட்டிருக்கா? :-)
ம்ஹும், யானைப் பசிக்கு சோள பொரியா?
கார்த்திகைன்னா அப்பம் அதிரசம் எல்லாம் செய்வாங்களே, கோபால் சார் இன்னுமா கத்துக்கல? :))
கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
:))
இந்த அவல் எல்லாம் செய்ய மாட்டிங்களா ?
//இந்தப் பொரி போதுமா..... இன்னும் கொஞ்சம் வேணுமா?//
வாட் எ சில்லி கொஸ்டின்?! சாய்ஸில் விடப்படுகிறது!
கார்த்திகை வாழ்த்துக்கள்
நன்றி ஞாபகப்படுத்தியமைக்கு.
வாங்கிய அகல் ஹரிணிய வெச்சு தீபம் ஏத்த சொல்லனும்.
அப்புறம் பொரி உருண்டைய பாத்தோன தாத்தா அடிக்கடி சொல்ற வசனம் ஞாபகம் வருது
உருப்புடாதவன் கோவில்ல உருண்டை சோறு சாப்புடுவான்,
போக்கனங்கெட்டவன் கோவில்ல பொறி உருண்டை வாங்கி சாப்பிடுவான் என சோம்பேறிகளை சாடுவார்(என்னை இல்லை)
பொரி உருண்டை பிடிக்க வெல்லப் பாகு வச்சாச்சு. தேங்காய் இல்லாம பொ.உ. வா? ஹிஹி, அதான் கடைக்குக் கிளம்பிட்டிருக்கேன்... ஊர்ல அவல் பொரி, நெல் பொரி இரண்டும் கிடைக்கும். இங்க அவ்வளவு இல்ல (முட்டைப் பொரி என்னும் அரிசிப் பொரி?யும், அவல் பொரியும் தான்).
அமிர்தவர்ஷினி அம்மா, பொ.உ. = வெல்லப்பாகு + பொரி + சுக்குப்பொடி + ஏலப்பொடி (+தேவையானால் தேங்காய் சில்லுகள்; நோட்: சில்லு இன் ப்ளூரல், அப்புறம் வேற யாராவது வம்புக்கு வந்துடப் போறாங்க). கைச்சூடு பொறுக்கணும்; நெய் பயன்படுத்தலாம், கூகிளிட்டுப் பாருங்க.
தீபம் இன்னிக்குத் தான் எங்க வீட்டுலயும். அண்ணாமலைக்கு அரோகரா!
வாங்க கோவி.
அவல்பொரிக்கு எங்கே போவேன்?
இது ஆடு நரி:-)
வாங்க கோபி.
தயக்கமே வேணாம். அள்ளிக்கோங்க:-)
வாங்க ஆயில்யன்.
விளக்கையெல்லாம் எடுத்து வச்சுட்டா .... நீங்க வந்து 'ஆயில்' போட்டுருவீங்கதானே?
அடுக்குனதை பாராட்டுன்னதுக்கு நன்றி:-)
இந்த வாரம் அசைன்மெண்ட் கிறிஸ்மஸ் ட்ரீ டெகரேஷன்:-)
வாங்க கிரி.
நல்லா எல்லாம் சாப்புட முடியாது.
விருந்து. அதனால் அளவோடுதான்:-)
வாங்க புதுகைத் தென்றல்.
பேசாம வீட்டுலே செஞ்சுருங்க. அப்படியே செஞ்சதுலே கொஞ்சம் இங்கேயும் பார்ஸேல்...:-))))
வாங்க ராமலக்ஷ்மி.
உங்களுக்கும் வாழ்த்து(க்)கள்.
வாங்க அம்பி.
கோபாலுக்கென்ன உங்களை மாதிரி சின்ன வயசா, ஓடியாடி எல்லா வேலையும் கத்துக்க?
அந்தக் காலத்துலே நன் ரொம்ப்ன லூசா விட்டுட்டேன்.
உங்க தங்கு மாதிரி கெட்டிக்காரத்தனம் இல்லாமல் போச்சு(-:
எல்லாப் பலகாரமும் மீனாட்சியம்மா புத்தகம் பார்த்து (மனசுக்குள்) செஞ்சு சாப்புட்டாச்சு.
oops.... ரொம்ப ன்னு படிச்சுக்குங்க அம்பி.
வாங்க ஜீவன்..
அவல் செய்யறதில்லைப்பா. இண்டியன் கடைகளில் வாங்கிக்கறதுதான். Beaten Rice
வாங்க கொத்ஸ்.
லீடர் பேசற பேச்சா இது?
வகுப்பே உருப்பட்டமாதிரிதான்....
வாங்க குடுகுடுப்பை.
நல்லவேளை...பொரி உருண்டையைக் கோவிலில் வாங்கலை!
வாங்க மதுரையம்பதி.
சுக்கு மட்டும் போட்டுருக்கு.
புண்ணியத்துக் கொடுத்த பழம்புடவையை, முழம்போட்டுப் பார்த்தாளாமுன்னு....
இது கிடைச்சதுக்கே பூர்வ ஜென்ம பலன்னு மகிழ்ந்துக்கிட்டு இருக்கேன்.
வாங்க கெக்கேபிக்குணி.
சில்லெல்லாம் வேணாம். சம்மர்ன்னு பேரே தவிர 'சில்'ன்னுதான் இருக்கு.
பொரியைப் பார்த்தால் நீங்கள் ந்ன்றாகப் பொரி தெரிக்ற மாதிரி பொரி பொரின்னு பொரிந்து தள்ளுவீர்கள் என்று நினக்கிறேன் .சரியா?
தட்டில் அடுக்கிய பொரி உருண்டையை விழுங்கிய கேமரா சூப்பர்...ஒரு பொரி உடைந்திருக்கிறது அதற்குள் உலகமே தெரிகிறதே....அவ்வளவு க்ளாரிடி
வாங்க கோமா.
மேக்ரோ மேக்ரோன்னு கொஞ்சம் விட்டால் பொரிஉலகில் புகுந்துறமாட்டேனா?
Post a Comment