Sunday, December 14, 2008

அக்கா ( பகுதி 11 )

ஆரத்தி மட்டும்தான் எடுக்கலை. மத்தபடி அங்கே போனதும்.... எனக்கு பயங்கர வரவேற்பு. சித்தப்பா போய்ப் பலகாரமெல்லாம் வாங்கிட்டு வந்தார். சித்தி பொண்ணு, (என்னைவிட நாலு வயசு சின்னவ) கைக்கு நெயில் பாலீஷெல்லாம் போட்டு விட்டாள். வாழ்க்கையில் முதல்முறையாக் கை நகம் சிவப்பாப் பவழமாட்டம் மின்னுது சித்தி, பக்கத்துலே வந்து உக்காந்துக்கிட்டு என் கையைப் புடிச்சுக்கிட்டுக் கொஞ்சம் அழுதாங்க. எங்க ரெண்டு பேருக்கும் தலை பின்னிவிட்டுப் பூவெல்லாம் வச்சுவிட்டாங்க. மல்லிப்பூ வாசம் அப்படியே ஆளைத் தூக்குது. எனக்குக் கொஞ்சம் கூடவே பூவு. அப்புறம் நல்லா ஆக்கிப் போட்டாங்க. ராத்திரி ஆட்டத்துக்குச் சினிமாவுக்கு நாங்கெல்லாம் போனோம். போன வருசம் பெரிய லீவுக்குக்கூட அக்கா வீட்டுக்குப் போகாம இங்கேதானே போரடிச்சுக் கிடந்தோம். அப்ப இவுங்களையெல்லாம் பார்க்காமப் போயிட்டோமேன்னு இருந்துச்சு.

மறுநாள் ரொம்ப லேட்டா எந்திரிக்கறேன். சித்தி பெட் காஃபி இல்லை..... பெட் டீ கொண்டுவந்து தந்தாங்க. எங்க பாட்டி வீட்டு நடைமுறை, இங்கே அப்படியேத் தலைகீழாக் கிடக்கு. எங்க பாட்டிக்குத் தூக்கம் வராதுன்னு சொன்னேன்லெ, பொழுது எப்படா விடியுமுன்னுட்டுக் காத்திருந்தாப்போல ரேடியோவில் 'மங்கள வாத்தியம் டும்டும் டுடுடும்'னு சத்தமா வச்சு எல்லாரையும் தூங்கவிடாம எழுப்பிருவாங்க. பல்லு தேய்ச்சு, முகம் கழுவுனாத்தான் சமையக்கட்டுக்கே போக முடியும். எல்லாரும் வேலைக்குப் போறதாலே சமையல் அது இதுன்னு வேலை பரபரன்னு நடக்கும். இதுலே பாட்டியோட பூஜை புனஸ்காரங்கள் வேற. ஒத்தை நந்தியாவெட்டையும் அரளியுமாத் தோட்டத்துலே பூத்துக் குலுங்கும். அதைப் பறிச்சுத் தர்றது என் வேலை. பாட்டி சாமிக்குப் பூத்தொடுப்பாங்க. அதையேதான் எனக்கும் தலைக்கு வச்சுக்கத் தருவாங்க. கனமா இழுக்கும். ஆனாலும் நாந்தான் பூ பிசாசு ஆச்சே. எதுவானாலும் தலை இத்து விழறமாதிரி வச்சுக்குவேன். பாட்டியும் சித்தியும் கைம்பெண் என்றதால் பூச்சூடிக்க மாட்டாங்க. அங்கே பொதுவா வீட்டுலே பூ வாங்கறதே இல்லை.


ஒம்போது ஒம்போதே காலுக்குள்ளே எல்லாம் கிளம்பிப் போயிருவாங்க. அண்ணன் காலை ஏழரைக்கே போயிருவார். பள்ளிக்கூட லீவு நாளானாலும் இதே மாதிரிதான் அவதிஅவதின்னு இருக்கும் வீடு. சினிமா அது இதுன்னு மூச்சு விடக்கூடாது. ஊரெல்லாம், குறிப்பா மத்த டீச்சருங்க ரொம்ப நல்ல படமுன்னு சர்ட்டிஃபிகேட் கொடுத்த படமுன்னா, அதுக்கே ரொம்ப யோசனை செஞ்சு கூட்டிப் போவாங்க. ஆறுமணி ஆட்டம்தான் போவோம். சினிமாவுலேகூடச் சிரிப்புப் பகுதி வந்தாச் சத்தமாச் சிரிக்கக்கூடாது. இப்படி ஏகப்பட்டக் கட்டுப்பாடு.

திடீர்னு கிடைச்ச இந்த சுதந்திரம் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ரெண்டு நாள் நல்லா ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன். சித்திச் சித்தப்பாகிட்டே..... 'அப்பா இருக்கற இடம் தெரிஞ்சுக்கிட்டுச் சொல்லமாட்டேங்கறீங்களாமே. அதுதான் அங்கே எல்லாருக்கும் கோவம்'னேன். எங்க சித்தி உடனே புள்ளைங்க தலைமேலே கைவச்சுச் சத்தியம் செஞ்சாங்க அவுங்களுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு. அழுதாங்க. "சொந்த அக்கா சாவுலே, தெரிஞ்சுருந்தா சொல்லி இருக்கமாட்டொமா?"

வீட்டுலே அன்பு நிறைஞ்சுருக்கே தவிர, பொருளாதாரம் அவ்வளவா சரியில்லாமக் கிடக்குன்னு புரிஞ்சது. ஆனா..புள்ளைகளுக்கு எந்தக் குறையும் இல்லாம கேக்கறதெல்லாம் வாங்கிக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. எனக்குக்கூட ஒரு புதுப் பாவாடைச் சட்டை மறுநாளே எடுத்துத் தைச்சாங்க. அதான் ஒன்னும் மாத்துத்துணி எடுத்துக்காம வந்தேனே.

மூணாம்நாள், அந்தச் சித்திப் பையன், என்னைக் கூட்டுட்டுப்போக வந்தான். அவனையும் அன்பா வீட்டுக்குள்ளே கூப்புட்டுப் பலகாரமெல்லாம் கொடுத்துத் திங்கச் சொல்லுச்சு சித்தி. நானு அவன்கூடக் கிளம்பி இங்கே வந்தேன். நல்லவேளையாப் பள்ளிக்கூடம் திறக்கும் நாள் நெருங்கிருச்சு. தினமும் இவுங்ககிட்டே திட்டு வாங்கி வெறுத்துப் போயிருந்தேன். அடங்காப்பிடாரி. சொன்ன பேச்சு கேக்காத களுதை, திமிர் ஏறிக்கிடக்கு, தாயில்லாப் புள்ளைன்னுச் செல்லம் கொடுத்தது தப்பாப் போச்சு, அது இதுன்னு. அண்ணனும் என்கிட்டேக் கொஞ்சம் கோபமா இருந்தார். அண்ணனுக்கும் எனக்கும் நடுவிலே ஒரு கசப்பு மெதுவா ஊறி வந்துக்கிட்டு இருந்துச்சு.

ஹாஸ்டலுக்குப் போனதும் நினைச்சுப் பார்த்தப்பத்தான் இந்த ரெண்டுவருச ஹாஸ்டல் வாழ்க்கை, என்னைக் கொஞ்சம் நல்லாவே மாத்தியிருக்குன்னு புரிஞ்சது. எனக்குச் சுதந்திரம் வேணுமுன்னு தோணிக்கிட்டு இருந்துச்சு. ஆனா...எது உண்மையான சுதந்திரமுன்னு புரியும் பக்குவம் அப்ப வரலை.

'டெர்ம் லீவு ' வரும்போது வீட்டுக்குப் போகாமலிருக்க வழி இருக்குன்னு அப்போதான் கண்டுபிடிச்சேன். எங்க பள்ளிக்கூடத்துலே வெளிநாட்டு மாணவிகள், பெற்றோர் துபாய் அபுதாபின்னு போய் வேலையில் இருக்கும் குடும்பத்து மாணவிகள் இப்படிப் பலருக்கு 10 நாள் விடுமுறைக்குப் போய்வரமுடியாதுன்னு அவுங்க விடுதியிலேயே இருந்துருவாங்க. ஆனா லீவு எப்ப வருமுன்னு அவுங்க எல்லாரும் காத்துக்கிட்டு இருப்பாங்க. ஒரே ஜாலிதானாம். தினம் பீச், சினிமா, ஷாப்பிங் இப்படிச் சுத்தலாமாம். இப்பப் பார்க்கும் வார்டன் வேற, லீவில் பார்க்கும் வார்டன் வேறன்னாங்க. அட! வெவ்வேற ஆளா? இல்லையாம். ஒரே வார்டந்தான். கண்டிப்பு அதிகம். ஆனா லீவு சமயத்துலே மட்டும் ஆளே சுபாவம் மாறி இருப்பாங்களாம். ஆஹா.....எங்க வார்டன் மலேசியாக்காரங்க. அவுங்க தம்பி மகள்களும் இங்கே படிச்சுக்கிட்டு இருக்காங்க. ......

அந்தப் பத்து நாட்களும் சொர்க்கம்தான். தினம் பூ வச்சுக்கறது என்ன..... நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வெளியே போய் வர்றது, ஹோட்டலில் மசால் தோசை, பூரி, நல்ல காஃபின்னு முழுங்கறதென்ன...... ஜாலியோ ஜாலி.

பாட்டு நல்லாப் பாடுவேன் என்றதால் 'சர்ச் கொயர்'லே சேர்த்துருந்தாங்க. இப்ப நான் விடுதியிலேயே இருக்கறதால் கொயர் டீச்சருக்கு பயங்கர சந்தோஷம். குட் ஃப்ரைடே, ஈஸ்டர் சர்வீஸ்ன்னு முடங்காமல் பள்ளிக்கூடத்து சார்பில் பாடமுடியுதேன்னு. டீச்சர் பியானோ வாசிக்க நான் ஸோலோவாப் பாடுவேன். கிறிஸ்மஸ் லீவுக்கும் வீட்டுக்குப் போகலை. நடுராத்திரியில் சர்ச்சுக்குப் போறது, பாடறது, இஷ்டம்போல கேக், ஸ்வீட்ஸ் அது இதுன்னு தாளிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா இவ்வளோ தின்னும்கூட உடம்பு ஒல்லிக்குச்சியாத்தான் கிடந்துச்சு.

எங்க பாட்டிதான் வீட்டுலே உக்காரவச்சுச் சங்கீதம் சொல்லிக்கொடுப்பாங்க. அப்ப நான் சரியாப் பாடலைன்னா.... கைங் கொய்ங்ன்னு சர்ச்சுல்லே பாடிக் குரலே கெட்டுப்போச்சுன்னு புலம்புவாங்க.

என் கஷ்டகாலம், இந்த வருசத்தோடுப் பள்ளிக்கூட வாழ்க்கை முடியுது. லீவு விட்டவுடன் ரெண்டே நாள் பாட்டி வீட்டில். அப்புறம் என்னை அக்கா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இங்கேயே இருந்தால் சித்தப்பா வீட்டுக்குப் போவேன் என்ற வெறுப்போ என்னவோ!


தொடரும்......................

46 comments:

said...

//ஹோட்டலில் மசால் தோசை, பூரி, நல்ல காஃபின்னு முழுங்கறதென்ன...... //

வயிறு காயுது!

said...

தொடர்ச்சிக்கு காத்திருப்பு...இஃகி!ஃகி!!

said...

மறுநாள் ரொம்ப லேட்டா எந்திரிக்கறேன். சித்தி பெட் காஃபி இல்லை..... பெட் டீ கொண்டுவந்து தந்தாங்க//

பல் விளக்காம குடிச்சாதானே பெட் காபி/டீ. எங்கள் வீட்டில் பெரிய குழப்பமாக உள்ளது டீச்சர்.

said...

எக்ஸ்பிரஸ் வேகம்....கதை அக்காவைப் பத்திங்கறதால எங்கயும் நிக்காம நாள், வாரம் மாதங்களைத் தாண்டி அக்கா வீட்டுக்கு போய்டுச்சோ...விட்டுப் போனதை எல்லாம் மறக்காம உங்க கதையில சேத்திடுங்க

said...

உள்ளேன் ரீச்சர்!!

Anonymous said...

//அண்ணனுக்கும் எனக்கும் நடுவிலே ஒரு கசப்பு மெதுவா ஊறி வந்துக்கிட்டு இருந்துச்சு.//

அண்ணனோட இந்த மாதிரி பிடிவாதம் தான் சின்னக்கா கூட பேசக்கூடாதுங்கறதுக்கு காரணம் போல இருக்கு. எங்கம்மா கூட அவங்க சின்ன அண்ணா கூட கடைசி வரைக்கும் பேசலை தெரியுமா. எனக்கு ரெண்டு மாமா இருந்ததே பாட்டி (அம்மாவோட அம்மா செத்தப்பதான் தெரியும்) வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போல இருக்கு.

said...

உள்ளேன் டீச்சர்!

said...

//எக்ஸ்பிரஸ் வேகம்..../// நரேன் சொல்றது போல "அப்புறம்" கதைகளை மறக்காமல் அப்புறம் போட்டுடுங்க.

திரும்பி சேம் ப்ளட்:-) //அண்ணனோட இந்த மாதிரி பிடிவாதம் // எங்கம்மாவுக்கும் இதேமாதிரி பிடிவாதம் இருந்தது. நானும், என்னைச் சிறு வயதில் விலக்கியவர்கள் வீடுகளுக்கு இப்ப போவதில்ல; அவங்க மாதிரி சொல்/செயல்களால அவமானப் படுத்தத் தெரியாது. ஆனை, பூனை, காலம்.....:-)

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்கு.

said...

/*பாட்டு நல்லாப் பாடுவேன்*/ பாட்டு க்ளாஸ் எப்போ?

said...

வாங்க பழமைபேசி.

அந்தக் காலக்கட்டத்துலே, 'மசால்தோசை'ன்னு சொன்னாலே ஏதோ விருந்து ரேஞ்சுக்குத்தான்:-)

தொடர்ச்சி நாளைமறுநாள்!

said...

வாங்க குடுகுடுப்பை.

பெட் காஃபி குழப்பம் நிறைய வீடுகளில் இருக்கு.

நீங்க சொல்றது கோபால் ஸ்டைல்.

பல் விளக்கிட்டு, நானே காபி போட்டுக் குடிப்பது எனக்கு பெட் காஃபி. பெட் விட்டு எழுந்து போடும் காஃபி(-:

said...

வாங்க நரேன்.

இந்த வேகம் எடுக்கலைன்னா.... வருசக்கணக்காக் கிளைக் கதைகளில் கிடப்பேன்.

இருக்கவே இருக்கு 'அப்புறம் கதைகள் ஆயிரத்துநூறு' :-)

said...

வாங்க கொத்ஸ் & சிஜி.

பதிஞ்சாச்சு. போய்க் கடைசி பெஞ்சில் உக்காருங்க.

said...

வாங்க சின்ன அம்மிணி.

ரோசக்காரங்களா இருந்தா இப்படித்தான் ஆகுது(-:

said...

வாங்க கெக்கேபிக்குணி.

'மதியாதார் தலைவாசல் மிதியாமை கோடி பெறும்'
எழுதுனதுக்கும் காரணம் இருந்துருக்காது?

பேசித் தீத்துக்கலாமுன்னு அப்ப யாரும் நினைக்கலை போல!

said...

வாங்க தங்ஸ்.

பாட்டு வகுப்புக்குப் பதிலா நாட்டியவகுப்பு வச்சுக்கலாம்.
என் கையில் கோல் இருக்கும்:-)

அதாங்க தட்டுக்கழி.

said...

மனுஷன் மனசு இருக்கே, அது ஒரு விசித்தீரம். என்னால யாருடனும் முகம் முறித்துக் கொண்டு சண்டை போட இயலாது. செய்கைகள், பேச்சுகள் மனசுக்கு வேதனை இருக்கும், அதிகம் மனசுல வெச்சிக்க மாட்டேன். அதுவே மறந்து போயிடும்.நேரில் பார்த்தால் நானே முதலில் பேசிவிடுவேன். ஆனால் ஒரு விலகல் இருக்கும். சொந்தக்காரர்கள் என்றால் "குற்றம்
பார்க்கில் சுற்றம் இல்லை" இதுக்கு காரணம் எங்கம்மாதான். இப்படி சொன்னாங்க என்றால், விடு அவங்க நிலைமைல இருந்து யோசி. வயிற்றெரிச்சல், பொறாமை இதுக்கு ஒண்ணும் செய்ய முடியாது என்பார். இப்ப இதையே எம் புள்ளைங்களுக்கு
சொல்லிக்கிட்டு இருக்கேன். பல உறவுகளுக்குள்ளான சண்டைகளுக்கு காரணம், கூட இருந்து எரியும் நெருப்பில் நெய் வார்ப்பவர்கள் மற்ற சொந்தங்கள் :-)

said...

//எங்க சித்தி உடனே புள்ளைங்க தலைமேலே கைவச்சுச் சத்தியம் செஞ்சாங்க அவுங்களுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு. அழுதாங்க.//

இப்படித்தாங்க, பல குடும்பங்களில் சின்ன அம்மிணி சொன்ன மாதிரி என்ன ஏதுன்னு பேசித் தீத்துக்காமல் புகைச்சல் புகைச்சலாவே கடைசி வரை இருந்து விடுகிறது. உஷாவின் அம்மா அவங்களுக்கு சொன்னதைத்தான் எங்கம்மா எங்களுக்கு இன்றும் சொல்றாங்க, “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை”.

//சினிமாவுலேகூடச் சிரிப்புப் பகுதி வந்தாச் சத்தமாச் சிரிக்கக்கூடாது.//

ஆமா, இதை எனக்கான பதில் ஒன்றில் முன்னமே சொல்லியிருக்கீங்கதானே:)?

said...

எது சுதந்திரம்ன்னா ... அந்த வயசில் நாம என்ன நினைக்கிறோமோ அதை செய்யாதேன்னு சொன்னா செய்யனும் அதான் சுதந்திரம்ன்னு நம்ம முடிவு..
ம் எப்படியோ பெரிய ப்ரச்சனை வரலை..அப்பாடா...

said...

//உஷா said... "குற்றம்
பார்க்கில் சுற்றம் இல்லை" இதுக்கு காரணம் எங்கம்மாதான். //

//ராமலக்ஷ்மி said.. உஷாவின் அம்மா அவங்களுக்கு சொன்னதைத்தான் எங்கம்மா எங்களுக்கு இன்றும் சொல்றாங்க, “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை”. //

பல உறவுகள் இன்றைக்கும் தொடர, நிலைக்க காரணம் அம்மாக்கள் மட்டுமே

said...

பயந்துகிட்டே வந்தேன்... நல்லவேளை டீச்சர் திரும்பவும் வீட்டுக்கு வ்ர முடிந்தது... :)

இது போன்ற மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்கால் நிறைய வீடுகளில் பிரச்சினைகள் பூதகரமாவதைப் பார்க்க முடிகின்றது.

said...

இந்த மாதிரி கோபம் சண்டை எல்லார் வீட்டிலும் இருக்கும் போல....எங்க வீட்டிலையும் ஒரு சித்தி இருக்கு(அம்மாவோட தங்கை)..போன ஜென்மத்தில் பிடாரியா இருந்திருக்குமோனு இப்பவும் எங்களுக்கு சந்தேகம் தான்!!!!!!!.

ஆஹா மசால் தோசை என்ன பூரி என்ன? இப்ப அந்த மாதிரி டேஸ்ட் இருக்கா டீச்சர்?

said...

சே ஜஸ்ட் மிஸ் ஒரு நல்ல பாடகிய மிஸ் பண்ணிடுச்சு தமிழ் சினிமா :-(

நல்ல சாப்பிட்டும் நொறுக்கு தீனி தின்னும் ஒல்லியா இருந்தீங்களா? ஆச்சர்யம் தான்

said...

super:):):)

said...

வாங்க உஷா.

இப்போ இருக்கும் தலைமுறைகளுக்கு, உலகம் பற்றிய விரிந்த பார்வை இருக்கு. தொலைக்காட்சி, இணையம் இப்படி எக்ஸ்போஷர் கிடைக்குது பாருங்க. அதனால்கூட விரோத மனப்பான்மை குறைஞ்சு இருக்கலாம். அப்போ அந்தக் காலக்கட்டத்தில் ..... தீமூட்டிக் குளிர்காயும் எண்ணம் நிறைய இருந்துருக்கு.

உங்க அம்மா சொன்னதை, உங்க பிள்ளைகளுக்குச் சொல்லி வைச்சுருக்கறது நல்ல ஐடியா.

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைதான்:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பேசித் தீத்துக்கலாம். ஆனால் இதையெல்லாம் தலையெடுத்துச் செய்ய குடும்பத்துலே ஒரு பெரிய தலையும் வேணுமேப்பா.

said...

வாங்க கயலு.

சுதந்திரம் எது, எதுவரை என்பது இப்போக்கூட சிலசமயம் புரியறது இல்லைப்பா.

ஆனா ஒன்னு, எந்த சுதந்திரம் இருந்தாலும் இல்லாட்டாலும் பொருளாதாரச் சுதந்திரம் ஒரு பொண்ணுக்குக் கட்டாயம் இருக்கணும்.

said...

நரேன்,

//பல உறவுகள் இன்றைக்கும் தொடர, நிலைக்க காரணம் அம்மாக்கள் மட்டுமே//

ரொம்பச் சரி.

ஆனா எங்களுக்குத்தான் அம்மா இல்லையே(-:

said...

வாங்க தமிழ் பிரியன்.

ஒருவேளை என்னக் கூப்புட ஆள் வராம இருந்தால் நான் என்ன செஞ்சுருப்பேன்?

நினைச்சுப் பார்க்கவே முடியலை!!!!!

said...

வாங்க சிந்து.

அப்போ இருந்த டேஸ்ட் இப்போ இல்லைன்னுதான் தோணுது. அதுவும் வீட்டில் நாமே செஞ்சு சாப்புடவேண்டியதா இருந்தா...இன்னும் மோசம்:-))))

said...

வாங்க நான் ஆதவன்.

என் கல்யாண சமயத்துலே நான் 37.5 கிலோதான். நாய் வயிறுன்னு திட்டுவாங்க. வெளுத்துக் கட்டுவேன்.

இப்போ....... பயந்து பயந்து கொஞ்சமாத் தின்னாலும்..... உடம்பு பலூன்:-)

said...

வாங்க ராப்.

நன்றி.

ஆமாம் பொறந்தநாள் கொண்டாடி முடிச்சாச்சா? என்ன பரிசு கிடைச்சது?

said...

சித்தப்பா போய்ப் பலகாரமெல்லாம் வாங்கிட்டு வந்தார்.
அங்கேயும் போய் ஆரம்பிச்சிட்டாங்களா

ஆனாலும் நாந்தான் பூ பிசாசு ஆச்சே. //
ஹி ஹி

ஹாஸ்டலுக்குப் போனதும் நினைச்சுப் பார்த்தப்பத்தான் இந்த ரெண்டுவருச ஹாஸ்டல் வாழ்க்கை, என்னைக் கொஞ்சம் நல்லாவே மாத்தியிருக்குன்னு புரிஞ்சது. எனக்குச் சுதந்திரம் வேணுமுன்னு தோணிக்கிட்டு இருந்துச்சு. ஆனா...எது உண்மையான சுதந்திரமுன்னு புரியும் பக்குவம் அப்ப வரலை
ம், அப்புறம்.

அந்தப் பத்து நாட்களும் சொர்க்கம்தான். தினம் பூ வச்சுக்கறது என்ன..... நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வெளியே போய் வர்றது, ஹோட்டலில் மசால் தோசை, பூரி, நல்ல காஃபின்னு முழுங்கறதென்ன...... ஜாலியோ ஜாலி.
மறுபடியுமா.......

இஷ்டம்போல கேக், ஸ்வீட்ஸ் அது இதுன்னு தாளிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா இவ்வளோ தின்னும்கூட உடம்பு ஒல்லிக்குச்சியாத்தான் கிடந்துச்சு.
இங்கயுமா,
அதானே பார்த்தேன், உடம்பை தேத்துனீங்களோ.


பாட்டு நல்லாப் பாடுவேன் என்றதால் 'சர்ச் கொயர்'லே சேர்த்துருந்தாங்க//
மேடம் நீங்க எல்லா ஏரியாலயும் எக்ஸ்பர்ட்டா இருக்குறீங்களே.
பொறாமையா இருக்கு மேடம்

அப்புறம் அக்கா 12 எப்ப வரும்.

said...

குடுகுடுப்பை said...
மறுநாள் ரொம்ப லேட்டா எந்திரிக்கறேன். சித்தி பெட் காஃபி இல்லை..... பெட் டீ கொண்டுவந்து தந்தாங்க//

பல் விளக்காம குடிச்சாதானே பெட் காபி/டீ. எங்கள் வீட்டில் பெரிய குழப்பமாக உள்ளது டீச்சர்.

யாருக்கு, தங்கமணிக்கா.

said...

ம்ம்...மீண்டும் அக்கா பகுதிக்கு பதிவு வருது.

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)

said...

வாங்க அமித்து அம்மா.

எல்லா ஏரியாவிலேயும்..... ச்சும்மா ஒரு பாவ்லாதான்:-))))

"ஏய்....நான் யாருன்னு தெரியுமா?....."

நாளைக்குப் பனிரெண்டு:-)))

said...

வாங்க கோபி.

மெதுவாத்தான் அக்கா பகுதிக்கு வரமுடியுது. இல்லேன்னா..... துண்டு துண்டா.....

2 வருசங்களுப் பிறகு,

அஞ்சு வருசம் கழிச்சு

இப்படிக் கார்டு போட்டுக்கிட்டுப் போயிருக்கலாமோ?

said...

நீங்க எழுதறது பழைய பாலு மகேந்திரா படம் பார்க்கிற மாதிரி அழகா இருக்கு...

(எழுதறதுக்கு காப்பிரைட் வச்சிருக்கீங்களா? யாருனா சுட்டு அழகா ஒரு குடும்ப படம் எடுத்துறப் போறாங்க!)

said...

//
குடுகுடுப்பை said...
மறுநாள் ரொம்ப லேட்டா எந்திரிக்கறேன். சித்தி பெட் காஃபி இல்லை..... பெட் டீ கொண்டுவந்து தந்தாங்க//

பல் விளக்காம குடிச்சாதானே பெட் காபி/டீ. எங்கள் வீட்டில் பெரிய குழப்பமாக உள்ளது டீச்சர்.

//

பல்லு வெளக்குறவங்களுத்தான் சாமி பெட் காஃபி, பெட் டீ எல்லாம். பல்லு வெளக்காதவங்களுக்கு எப்ப குடிச்சாலும் எங்க குடிச்சாலும் அது பெட் காஃபி தான் :0))

said...

வாங்க அதுசரி.

அப்ப லொகேஷன் ஊட்டிதானா?

ஃபாரின் டூயட் ஒன்னும் இல்லையா? (-:

said...

ஹாய் துளசி அக்கா, வணக்கம். என் பேர் விஜி. நான் உங்களுடையா எல்லா பதிவுகளையும் இன்று காலையில் 9 மணியிலிருது படித்து இப்ப தான் முடிந்து பதிவும் போடுகிறேன், ரொம்ப அருமையாக இருக்கு உங்க ஒவொரு படங்களும் விளக்கங்களும். நான் உங்களுடையா ரசிகையாகிட்டேன். நிங்க இப்ப எங்க இருக்கிங்க? கொஞ்சம் சொல்லுங்க. நன்றி நான் உங்ககூட நட்புறவை ஏற்படுத்திக்க விரும்புகிறேன்.

நன்றி

said...

வாங்க விஜி.
புது ரசிகையின் புது வரவு?

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

நீங்க உங்க விவரம், இ மெயில் ஐடி எல்லாம் இங்கே நம்ம பதிவுலே பின்னூட்டமாப் போடுங்க. மாடரேஷன் இருக்கு. அதனால் வெளியிடப்படாது:-))))

ஐடி கிடைச்சதும் தொடர்பு கொள்வேன்.

said...

இப்போ இருக்கும் தலைமுறைகளுக்கு, உலகம் பற்றிய விரிந்த பார்வை இருக்கு. தொலைக்காட்சி, இணையம் இப்படி எக்ஸ்போஷர் கிடைக்குது பாருங்க. அதனால்கூட விரோத மனப்பான்மை குறைஞ்சு இருக்கலாம். அப்போ அந்தக் காலக்கட்டத்தில் ..... தீமூட்டிக் குளிர்காயும் எண்ணம் நிறைய இருந்துருக்கு.// இந்தத் தீ மூட்டல்னால தானே பல விரிசல் விழுந்து போகுது.

மூட்டினவங்களும் இல்லை. மூட்டினதனால கத்தினவங்களும் இல்லை. அந்தக் குரோதம் மட்டும் எங்கயோ சுத்திக் கிட்டு இருக்கும்.

முடிஞ்ச வரை சமாதானமாப் போக முய்டற்சிக்கலாம். இல்லைன்னா சண்டையில்லாம ஒதுங்க வேண்டியதுதான்.


துளசி இத்தனை நினைவுகளை எங்கதான் கொண்டு வரீங்களோ. அருணா கிட்டக் கூடச் சொன்னேன்.

நேத்து நடந்தது இன்னிக்கு மறக்குது. குட்டி ஸ்லிப்ல எழுதி வச்சுக்கறேன்னுட்டு:P)

said...

வாங்க வல்லி.

அவுனு அவுனு...சண்டை ஒத்து நைனா...சாமாதானங்காப் போதே நல்லது:-))))

எனக்கும் நேத்து என்ன குழம்பு வச்சேன்னு நினைவு இல்லை.( ஃப்ரிட்ஜைத் திறந்தாத்தான் தெரியும்)

ஆனா...பழசெல்லாம் தானாவே முங்கியதெல்லாம் பொங்கி.

இது சாபமா இல்லை வரமா?

said...

//ஆனா இவ்வளோ தின்னும்கூட உடம்பு ஒல்லிக்குச்சியாத்தான் கிடந்துச்சு.//

ஏன்னா, சமைச்சுத்தர அப்போ கோபால் அண்ணா இருக்கல்ல..சரியா டீச்சர்? :P

said...

வாங்க ரிஷான்.

ஆஹா...... உங்க கோபால் அண்ணா சமைச்சுட்டாலும்........

அந்த நாளும் வந்துடாதோன்னு இருக்கு. பயமில்லாம வெட்டி எத்தனை நாளாச்சு. ஹூம்(-: