Monday, December 08, 2008

அக்கா ( பகுதி 8 )

டிசம்பர் லீவுக்கு நான் மறுபடி அக்கா வீட்டுக்குப்போனேன். அக்காவுக்கு உடம்பு சரியில்லை. உதவிக்கு என்னைவிட்டா வேற யார் இருக்கா? அக்காவுக்கு ஒரு கருச்சிதைவு நடந்து இருந்த சமயம். வீடு அப்படியே இருந்தாலும் புதுசா ஒரு அட்ராக்ஷன் என்னைக் கவர்ந்தது. ஹைய்யான்னு கூத்தாடுனேன். நம்ம வீட்டில் கிணறு வந்துருச்சு. அதை ஒட்டி ஒரு குளியல் அறை. ஆமாம்......ஒரு கதவு வச்சுருக்கக்கூடாது? முந்தி ஓலை முடைஞ்ச தட்டிவச்ச 'பாத்ரூம்' இருந்த இடத்தில் கொத்துக்கொத்தாக் காய்களோடு நாலைஞ்சு பப்பாளி மரங்கள். கிணறுக்குப் பக்கத்தில் துணி துவைக்கும் கல்.

வீட்டுக்குள்ளே தண்ணீர் பிடிச்சுவைக்கும் தவலைகள் எல்லாம் மூலையில் கவுத்திக்கிடக்கு. ரெண்டே குடம் மட்டும் முன்பக்கம் இருக்கும் சமையல் அடுப்பையொட்டி. பக்கத்து வீட்டு கணேஷ் சாருக்குக் கலியாணம் ஆகி இருந்துச்சு. அவுங்க மனைவி பாலா, நம்ம அக்காவுக்கு ரொம்ப தோஸ்த்தாப் போயிட்டாங்க. இங்கேயேதான் நாள் முச்சூடும் இருக்காங்க.
பாலா அக்கா நல்ல கலகலப்பானவங்க.. கணேஷ் சார் நல்லா கலரா இருப்பார். பாலா அக்கா நேரெதிரா இருப்பாங்க. முகத்துலே வேற நிறைய பரு இருக்கும். அதனால் என்னமோ ஒரு சோப் போட்டு முகத்தைக் கழுவிக்கிட்டே இருப்பாங்க. அவுங்க வீட்டுக் கிணத்தடியிலேயே அந்த சோப்பு டப்பா கிடக்கும். அவுங்க வீட்டுப் பக்கம் வேலி இன்னும் நல்லா அகலமாப் பிரிச்சுவிட்டுக் கிடக்கு. நடமாட்டம் கூடிப்போச்சுல்லே!

மதீனா அக்காவுக்கு இப்போ மூணாவது, வயித்துலே. முதல் பையனுக்கு இன்னும் சோறும் குழம்பும் நம்ம வீட்டுதுதான் வேணுமாம். வழக்கம்போல் மதியானத்துக்கு, வாத்தியார் வூட்டம்மா''ன்னு கூப்புட்டுக்கிட்டே வந்து கொஞ்சம் குழம்பு வாங்கிக்கிட்டுப் போறாங்க.

ரேணு நல்லாவே வளர்ந்துருக்கு. வயிறு சரியாப்போச்சு போல. கிண்டியில் பால் குடிக்கிறாள். 'பால் குடிச்சு முடிச்சதும் கிண்டியைப் பிடுங்கி வச்சுரு'ன்னு அக்கா சொன்னது முதலில் எனக்குப் புரியலை. குடிச்சு முடிச்சதும் தத்தக்கா பித்தக்கான்னு நடை போட்டுக்கிட்டே நேராக் கிணத்துக்குள்ளே வீசி எறிஞ்சது கிண்டியை!!! கையில் எது கிடைச்சாலும் இப்பெல்லாம் கிணத்துக்குத்தானாம். பேச்சு சரியா வரலை. அவளுக்குச் சொல்லவரும் ஒரே சொல் 'நானு'

ஆஹா.....

வசதியாப் போச்சு வீட்டுலே இருக்கறவங்களுக்கெல்லாம். யார் எதை உடைச்சாலும் அந்தப் பழி ரேணுவுக்கு! மாமா கத்தறார்,

"புது ஃப்ளாஸ்க், யார் உடைச்சா? "

"ரேணு ப்பா"

கோரஸ் ஒலிக்குது.

ரேணு.....யார் உடைச்சா?. சொல்லு"

"நானு"

ஐயோ....................பொரியல் தீஞ்சதுக்குப் பழியை ரேணு மேலே போடலாமான்னு எனக்கும் ஒரு யோசனை :-)))))

மெட்ராஸ்லே பெரிய டாக்டர்கிட்டே காட்டலாமான்னு கேட்டதுக்கு, 'என்னத்து அதெல்லாம்? தானே சரியாயிரும். நீகூடத்தான் திக்கு வாயா இருந்தே'ன்னு குண்டைத் தூக்கிப் போட்டுச்சு அக்கா. நானா? எப்போ?

ரெண்டு வயசுலேயே கொள்ளுகொள்ளூன்னு பேசிக்கிட்டு இருந்தேனாம். அப்புறம் திடீர்னு பேச்சு திக்க ஆரம்பிச்சதாம். பேச ஆரம்பிக்கும் முதல் சொல்தான் கஷ்டமாம். நான், பெ பெ பெ பெ பென்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே, 'ம் சொல்லு பெரியக்கா' நா நா நா நா........ நானு
இப்படியே எடுத்துக் கொடுப்பாங்களாம் சின்னக்காவும் அண்ணனும். முதல் சொல்லைச் சொல்ல நேரமெடுத்தாலும் ரெண்டாவது சொல்லில் இருந்து திக்காமப் பேசுவேனாம். ஆனா மொதச் சொல்லைச் சொல்லவிடாம செஞ்சா எப்படி? அக்காதான் 'அவ சொல்லட்டும். நீங்க போங்க இங்கெ இருந்து'ன்னு அவுங்களை விரட்டுமாம். தொண்டை நரம்புலே எதோ கோளாறுன்னு அம்மா மருந்து மாத்திரை கொடுத்தாங்களாம். அக்கா சொல்லச் சொல்ல 'ஆஆஆஆ' ன்னு கேட்டுக்கிட்டு இருந்தேன்.

தினம் தினம் காலையில் மொக்கன் என்ற ஆள் வந்து கிணத்துக்குள்ளே இறங்கி, தட்டு, கிண்டி, கரண்டி ன்னு ஏழெட்டு சாமானை வாரிக் கொண்டுவந்து கிணத்துலே தொங்கும் வாளியில் வைக்கறதும், நாங்க வாளியை வெளியே இழுத்துப் பாத்திரங்களையெல்லாம் தேய்ச்சு வைக்கிறதுமா இருக்கு. மொக்கனுக்குப் பலகாரச்செலவு நாலணா கொடுத்துறணும். நாங்கள் ரெகுலர் கஸ்டமர்கள்:-))))

இப்பெல்லாம் வீட்டுலே எதுவும் காணோமுன்னா தேடல்லாம் மாட்டொம். கிணத்துக்குள்ளே கிடக்கும். நாளைக்கு மொக்கன் வரட்டும்.

வீட்டுக்குள்ளே பழைய அடுப்பங்கரை இருட்டுமூலையில் ரெண்டு கயித்துக்கட்டிலைத் தடுப்பாட்டம் சரிச்சு நிக்கவச்சு ஒரு ரூம்! அதுக்குள்ளே என்னென்னவோ பாத்திரங்கள். ரேணுவின் கைக்கு எட்டாமல் இருக்கணுமுன்னு வச்ச தடுப்புகளாம். நம்மூட்டுது மாதிரி இல்லையேன்னு பார்த்தப்ப...... வாசலில் யாரோ அக்காவோட பேசற சத்தம் கேட்டு வெளியில் வந்தா..... அடுத்த தெருக்காரம்மா ஒரு சருவச்சட்டியையும் செப்புத் தோண்டியையும் வச்சுக்கிட்டு நிக்குது. தண்ணி எடுத்துட்டுப்போக வந்துருப்பாங்கன்னு நினைச்சா...........அக்கா இடுப்புலே இருந்து ஒரு சுருக்குப்பையை ( அட! இது எப்போலே இருந்து?) எடுத்து அஞ்சு ரூபாயைக் கொடுத்துச்சு. அந்தம்மா பாத்திரத்தை ஓரமா வச்சுட்டுப் போனாங்க.

"ஈரமா இருக்கா பார்"

"இல்லேக்கா"

"சொட்டைகிட்டை இருக்கா"

"இல்லியேக்கா"

" கொண்டுபோய் கட்டிலுக்கு அந்தப் பக்கம் மூலையில் வச்சுட்டுவா. பார்த்து, சரிஞ்சுபோகாமக் கவுத்து வை.அங்கெயே ஒரு உறி இருக்கு பாரு. அதுலே இருக்கும் பானையில் ஒரு சின்ன நோட்டு இருக்கும் கொண்டா"

அக்கா இப்போ வியாபாரம் பண்ணுதா என்ன? சித்தி, காசு கொடுத்துவச்சுருக்காங்களாம்.எல்லாம் அவுங்க ஏற்பாடுதானாம். அக்கம்பக்கத்து பொம்பளைங்க, ஆத்திர அவசரத்துக்கு எதாவது பாத்திரபண்டம் கொண்டுவந்து ஈடுவச்சுட்டுக் காசு வாங்கிட்டுபோறாங்களாம். அப்புறமா வந்து மூட்டுக்கிட்டுப் போயிருவாங்களாம்.

வட்டிக்கடையா வச்சுருக்கு? சரியான பிஸினெஸ் உமன் தான். வட்டின்னு ஒன்னும் பெருசா இல்லையாம். அஞ்சு ரூபாய்க்கு அம்பது காசாம். பாத்திரங்களை நாம ஆண்டுக்கலாம். முந்திமாதிரி இருந்தா அக்கா அதுலேகூட தண்ணீ ஊத்தி வச்சுக்கும். இப்பக் கிணறு வந்துட்டதாலே வேணுங்கறப்ப சேந்திக்கறதுதான்.

அக்கா திண்ணையைவிட்டு மெதுவா எழுந்துவந்து உள்ளே கூட்டிக்கிட்டுப் போச்சு. பொட்டியைத் திறந்து ஒரு பழைய பாரீஸ் மிட்டாய் டப்பாவை எடுத்து என் கையில் கொடுத்து, 'திறந்து பாரு'ன்னுச்சு. அம்மாடியோவ்.....
நகைங்க! இதுவரை நான் பார்க்காத டிஸைன். கறுப்புக் கயறுலே அங்கங்கே தங்கத்துலே மல்லி மொட்டு கோர்த்து வச்சுருக்கு. சிலதுலே காப்பவுன் காசு,
சிலது கறுப்பு பாசி மணிக்கிடையில் வட்டவட்ட பில்லையா இருக்கு. அந்த பில்லையில் நிலா, நட்சத்திரமுன்னு டிஸைன். பெரிய பெரிய கம்மலுங்க, பட்டை பட்டையா மாட்டலு இப்படி. ஒரு பதக்கம் வச்ச அட்டியல் கூட இருந்துச்சு. அடகுக்குவந்த நகைகளாம். எதாவது பிடிச்சிருந்தாப் போட்டுக்கோன்னு சொல்லுச்சு. சங்கிலியா ஒன்னும் இல்லை. மோதிரம் ரெண்டு மூணு இருக்கு. அளவு பெருசா இருக்கே.

அப்புறம் ஒரு நாள் அக்காவோட பனாரஸ் புடவையைக் கட்டிக்கிட்டு, அந்த அட்டியலைப் போட்டுக்கிட்டேன். மாமா வந்து பார்த்துட்டு, ஆச்சரியப்பட்டுப் போனார். புடவையைக் கழட்டி வைக்காம இங்கே அங்கேன்னு நொரைநாட்டியம் பண்ணிக்கிட்டு இருந்தேனா..... அடுப்புலே நீட்டிக்கிட்டுக் கிடந்த விறகுக் கட்டை முள்ளில் புடவை மாட்டிக்கிட்டு அடிப்பக்கம் கரையிலே கிழிஞ்சுருச்சு. அப்பெல்லாம் புடவைக்கு ஃபால்ஸ் வச்சுத் தைக்கும் வழக்கம் வரலையே(-:


தொடரும்................

47 comments:

said...

உள்ளேன் ரீச்சர்! :)

said...

அட்ரா சக்கை...கட் பண்ணா துளசி பெரிய பொண்ணா திரும்பி வந்திருக்கு.எதைப் பாத்தாலும் ஒரே ஆச்சரியம் தான்...இப்போ எப்பப் பாத்தாலும் ஒரு பாட்டு வேற வாயிலே ஹம்மிங்...ம்..மேலே போங்க..

said...

மி த பர்ஸ்ட்டு ?

said...

சுவராசியமா இருக்குங்க ஆசிரியை....

said...

//siva gnanamji(#18100882083107547329) said...
மி த பர்ஸ்ட்டு ?
//

பரவாயில்லை விடுங்க, அடுத்த தடவை முயற்சி செய்யுங்க... இஃகி!ஃகி!!

said...

என்னது. உங்களுக்கு பேச வரலையா, திக்குச்சா :)

said...

வாங்க கொத்ஸ்.

பதிஞ்சாச்சு.

said...

வாங்க சிஜி.

யூ த தேர்டு:-)

said...

வாங்க நரேன்.

திரைக்கதையைத் தயாரிச்சுறலாமா? :-))))

ஹம்மிங் க்கு எஸ்.ஏ. ராஜ்குமார் போட்டுக்கலாமா?

ஆஆஆஆ......ல்லல்ல்ல்லல்ல்ல்ல்லா

:-)))))))

said...

வாங்க நட்சத்திரமே.

இன்னிக்குத்தான் கடைசி ஜொலிப்போ அங்கே!

பரவாயில்லை. நாங்க உங்க வீட்டுக்கே வந்து படிப்போம் ஆமா:-)

நன்றி

said...

வாங்க சின்ன அம்மிணி.

அப்படியே வீட்டுருந்தா எவ்வளோ நல்லா இருக்குமுன்னு அப்புறம் பலருக்கும் ஒரு எண்ணம் வந்துருக்கும்:-)

said...

சூப்பர் அப்பு....அதே தான்...உங்க திருவேங்கடம் ஹரி ஆன கதைய படிச்சப்பவே சொல்லனும்னு நினைச்சேன்....விக்ரமன் டச் இருக்குன்னு... ஆனா SA ராஜ்குமார் வேணாம் ..இளையராஜா..ஒரு அன்னக்கிளியோ , செந்தூரப்பூவே- வோ போட்டுக்கலாம்

said...

//ஐயோ....................பொரியல் தீஞ்சதுக்குப் பழியை ரேணு மேலே போடலாமான்னு எனக்கும் ஒரு யோசனை :-)))))//

வந்திடுமே சூப்பராய் யோசனை:)))!

//திடீர்னு பேச்சு திக்க ஆரம்பிச்சதாம்.//

அட இதுக்கு வைத்தியம் இப்பதான் சொல்லிட்டு வரேன் பாகம் ஏழில்:)!

//நொரைநாட்டியம் பண்ணிக்கிட்டு இருந்தேனா.....//

நான் சின்னதிலேருந்தே ரொம்ப சுத்தபத்தம் பார்ப்பேனா, என் அம்மா என்னை எப்பவும் ‘சரியான நொரைநாட்டியம்” என்பார்கள்:)).

said...

படிச்சாச்சு, நல்லாருக்கு.

//என்னது. உங்களுக்கு பேச வரலையா, திக்குச்சா :)// அதானே!

//அப்படியே வீட்டுருந்தா எவ்வளோ நல்லா இருக்குமுன்னு// விட்டுடுவோமா, எழுதித் தாக்கிட மாட்டோமா‍:-))

//அப்புறம் ஒரு நாள் அக்காவோட பனாரஸ் புடவையைக் கட்டிக்கிட்டு// சேம் ப்ளட்டு. தெரிஞ்சவங்க எனக்கு அவங்க கூறைப் புடவை - பனாரஸ் - கொடுத்து, (ஏன் கொடுத்தாங்கன்னா அது ஒரு தனிக் கதை:-) நான் //அடிப்பக்கம் கரையிலே// கிழிச்சு திருப்பிக் கொடுத்தேன் (பத்தாப்பு படிச்சிட்டிருந்தேன்):-))

ம், அப்புறம்?

said...

என்னப்பா துளசி, இவ்வளவு சுருக்கமா சொன்னா எப்படி. ஒத்துக்க முடியாது.

திக்கு வாயாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ.

அந்தக் கறுப்பு நூல் நெக்லஸ் படம் போட்டு இருக்கலாம் ,அப்பவே காமிரா இருந்தா:)

நம்ம வீட்டில கிருஷ்ணா எல்லாத்தையும் குப்பைப்பையில போடறான்:)

அடுத்த அத்தியாயம் ஒரு ஆறு பக்கம் வரணும்.

அப்புறம் சினிமா மாதிரி சீன் மாத்தினா எங்க பிடிக்கறது.

ஒரு கோடு இங்க ஒரு கோடு அங்கன்னு கிழிச்சுக் காட்டணும் தயவுசெய்து.:)
ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு துளசி. சூப்பர்லாம் சொல்லக்கூட மனசில்ல. அதுக்கும் மேல.


இந்த பனாரஸ் புடவை இல்லாம நாம யாருமே வளரலையோ:)
எனக்கும் மாமி ஒருத்தர் புடவைதான் சமயத்தில கை கொடுத்தது.
அதிலயும் இன்க் கொட்டி த் திருப்பிக் கொடுத்தேன்:)

said...

1. ஐயோ....... பொரியல் தீஞ்சதுக்குப் பழியை ரேணு மேலே போடலாமான்னு எனக்கும் ஒரு யோசனை :-)))))

2. மொக்கனுக்குப் பலகாரச்செலவு நாலணா கொடுத்துறணும். நாங்கள் ரெகுலர் கஸ்டமர்கள்:-))))

3. முள்ளில் புடவை மாட்டிக்கிட்டு அடிப்பக்கம் கரையிலே கிழிஞ்சுருச்சு. அப்பெல்லாம் புடவைக்கு ஃபால்ஸ் வச்சுத் தைக்கும் வழக்கம் வரலையே(-:


இது ஒரு சாம்பிள்தான்.
அங்கங்கே நீங்கள் வைக்கும் கிண்டல், கேலி, ஏக்கம்னு, சுய விமர்சனம்னு சும்மா ஜெட் மாதிரி அலுப்பு தட்டாம கொண்டு போறீங்க...

ஆமாம், நீங்க டீச்சரா?

said...

வகுப்பில் புதுமாணவர்கள் எல்லாம் வர ஆரம்பிக்கும்போது் அடிக்கடி சந்தேகம் எழும்புது அவங்களுக்கு.. பக்கப்பட்டையில் உங்க சரித்திரத்துக்கெல்லாம் ஒரு லிங்க் போட்டு வைங்க துளசி.. :)

said...

என் மக கண்மை விளையாட்டு சாமனெல்லாம் கொண்டுபோய் தண்ணிக்கொடத்துல போட்டுருவா..

சோபா குஷனைத்தூக்கி அதுக்குள்ள வச்சுருவா..:)

said...

ஐயோ....................பொரியல் தீஞ்சதுக்குப் பழியை ரேணு மேலே போடலாமான்னு எனக்கும் ஒரு யோசனை :-)))))//

என்னா கிரிமினல் மைண்டு :-)))

said...

ஏன், அக்காவ முடிச்சிட்டீங்களா, தொடரும் போடவே இல்லையே.

நீகூடத்தான் திக்கு வாயா இருந்தே'ன்னு குண்டைத் தூக்கிப் போட்டுச்சு அக்கா. நானா? எப்போ?
அதானே எப்போ....,

அக்கா சொல்லச் சொல்ல 'ஆஆஆஆ' ன்னு கேட்டுக்கிட்டு இருந்தேன்.//
நாங்களுந்தான்.

இப்பெல்லாம் வீட்டுலே எதுவும் காணோமுன்னா தேடல்லாம் மாட்டொம். கிணத்துக்குள்ளே கிடக்கும். நாளைக்கு மொக்கன் வரட்டும்...
:))))


ஐயோ....................பொரியல் தீஞ்சதுக்குப் பழியை ரேணு மேலே போடலாமான்னு எனக்கும் ஒரு யோசனை :-)))))
ரேணு இதையெல்லாம் படிப்பாங்களா.

புடவையைக் கழட்டி வைக்காம இங்கே அங்கேன்னு நொரைநாட்டியம் பண்ணிக்கிட்டு இருந்தேனா.....
நொரைநாட்டியம் - கேள்விப்பட்டிருக்கேன், ஆனா இதுக்கு அர்த்தமென்ன, சொல்றீங்களா.

வழக்கம்போல சுவாரசியத்துக்கு குறைவில்லை, இதோட முடிச்சிடுவீங்களா.........

அந்த நடுவீடு மேட்டர், என் பதிவுல போட்டிருக்கேன், முடிஞ்சா படிங்க.
http://amirdhavarshini.blogspot.com/2008/12/blog-post_04.html

said...

ஊரு பாஷையை மறக்காம அப்படியே நினைவில் வச்சு இருக்கீங்க..:)
சருவச்சட்டி.. இன்னும் நினைப்பில் இருக்கே..:)
///ஐயோ....................பொரியல் தீஞ்சதுக்குப் பழியை ரேணு மேலே போடலாமான்னு எனக்கும் ஒரு யோசனை :-)))))///
ஓவரா இருக்கே.. பாவம் ரேணு..:))

said...

//ஏன், அக்காவ முடிச்சிட்டீங்களா, தொடரும் போடவே இல்லையே.//

அதானே?

said...

நரேன்,

நீங்கதான் ப்ரொடக்ஷ்ன் இன் சார்ஜ்.:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நொரைநாட்டியம், நோணாவட்டமுன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க இல்லே.

பாவம்ப்பா நம்ம ரேணு. எல்லாப் பழியும் அதுமேலேதான்(-:

'வைத்தியம்' பார்த்தேன்:-)

said...

வாங்க கெக்கேபிக்குணி.

அப்புறம்?

அடுத்த பாகத்தில்:-)

said...

வாங்க வல்லி.

வழக்கம்போல் மூணு பக்கம்.

நீட்டுனாலும் கஷ்டமாப்போயிருதேப்பா.

கெமெராவுக்கு ஸ்பெல்லிங் கூடத் தெரியாது. 'சம்பவம்' நடந்த பலவருசங்களுக்குப் பிறகுதான் யாஷிகா ஒன்னு வாங்குனோம்.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் கதைதான்.
இப்பக் கெமெரா இருக்கு. ஆனால் கறுப்புக் கயிறு நெக்லெஸ் இல்லை(-:

எட்டுமாசம் கழிச்சு அக்காவைப் பார்க்கறேன் (கோடி(ட்டு) காமிச்சாச்சு)

said...

வாங்க ரமேஷ் ராமசாமி.

டீச்சருன்னா பயமா?

இல்லைதானே?

நம்ம வகுப்பு ஜாலியாத்தான் இருக்கும்.

மாணவர்களும் இனிமையானவர்கள்தான்.

(அப்பாடா.... சந்தடி சாக்குலே பாராட்டுறமாதிரி ரெண்டு சொல் சொல்லிட்டா ,வகுப்புலே எல்லாம் அடங்கி இருப்பாங்க)

said...

வாங்க கயலு.

புது மாணவர்களை வரவேற்று, வகுப்பைச் சுத்திக் காட்டி விளக்க உங்களையெல்லாம்தான் நம்பி இருக்கேன்.

லீடரை வேற காணோம்....

குழந்தையா இருக்கும்போதே எல்லாரும் தண்ணின்னா ரொம்பப் பிடிக்குது இல்லே?:-)

said...

வாங்க அமித்துஅம்மா.

நொரைநாட்டியம் விளக்கம் நம்ம பழமைபேசியார்கிட்டேதான் கேக்கணும்.

தொடரும் போட மறந்துட்டேன்.

எழுதும்போது உணர்ச்சிவசப்படக்கூடாது,இல்லே?

நடுவீட்டை முடிச்சாச்சு. அவளா நீயி:-)))))

said...

வாங்க தமிழ் பிரியன்.

நினைவுலே வச்சுக்கணுமுன்னு முயற்சி எல்லாம் இல்லை. ஆனாலும் எழுதும்போது தானே பழைய சொற்கள், பெயர்கள் எல்லாம் வந்து விழுது!

ரேணு இப்ப இதை படிச்சா என்னைக் கொன்னுரும்:-)

said...

வாங்க நான் ஆதவன்,

தொடரும் இல்லையா?
இப்பப் போய்ப் பாருங்க:-))))

அப்போ? மறந்துட்டேன்.

க்ரிமினல் மைண்ட் எப்படி வேலை செய்யுதுன்னு பாருங்க:-))))))

said...

மலேசியாவில் ஒரு நாள் ([இறுதி]பாகம் 2)

"கோயில் படிக்கட்டு செங்குத்தா இருக்கா?

அடக் கடவுளே..... அடுத்தவருசம் போய்வரத் திட்டம் வச்சுருக்கேனே.

கால்மூட்டு வலி வேற இருக்கே....

பதிவு நல்லா இருந்துச்சு கிரி. எனக்கு வேண்டிய முக்கிய இன்ஃபர்மேஷன் கிடைச்சதே:-)"

ithu neegal koduta patthil

thulasi gapal Anna nan oru m'siavil piranthu varatha pen.. antha karutahi
"கோயில் படிக்கட்டு செங்குத்தா இருக்கா? etru kolkiren. anal kadavul enru vanthal ellam thusi tane? nam unmai pakkthi irunthal nerupukkulum kai vaikalam illayya? yen inga ipadi ninaika kudathu... "muruga nan un kovilkke varen anthe badiyil eri vanthu unnai tarisanam saikiran en muddu valliyai sariyakke" yenru nengal vedinal enna?

ethavathu tavara iruntaal manikkavum nanri

tisha

said...

அக்கா ரெண்டு கேள்வி...

கேள்வி#1
குழந்தைங்க அக்காவை அதாவது அவங்க அம்மாவை என்ன சொல்லி கூப்பிட்டாங்க? அம்மா - னா....இல்ல உங்களை பாத்து நீங்க கூப்பிடற மாதிரி அக்கா -னா?

கேள்வி#2
குழந்தைங்க உங்களை என்ன சொல்லி கூப்பிட்டாங்க? அக்கா, மாமா, மதினா அக்கா அப்புறம் பக்கத்துல இருக்கிற எல்லாரும் கூப்பிடற மாதிரி துளசி -ன்னே கூப்பிட்டங்களா இல்ல "சித்தீ" யா ? இல்ல அக்காவா? எங்க சித்தி எங்களுக்கு இன்னும் அக்கா தான்....

said...

துளசி அக்கா!

இப்பத்தான் 8 பகுதிகளையும் படித்து முடித்தேன். ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கு. என்னுடைய அக்காவைப் பற்றி எழுதவேண்டும் என்று எனக்கு ஆசை வந்துவிட்டது....

பாராட்டுக்கள் அக்கா...தொடர்ந்து எழுதுங்கள்.

தாரா.

said...

டீச்சர், இன்னிக்குப் பதிவு பார்த்துத்தான் சந்தோஷமா சிரிச்சேன்..

ஒண்ணு ரேணுக்குட்டியோட அட்டகாசங்களைப் பார்த்து... :)

அப்புறம் அக்காவும் சுயசம்பாத்தியம் ஆரம்பிச்சிருக்கிறதைப் பார்த்து... :)

said...

டீச்சர்..அப்புறம் போன கிழமை முழுக்க உங்க 'அக்கா' கதையே மனசுல ஓடிட்டிருந்துச்சு..

புது விகடன்ல' பாலாமணி அக்காவின் கதை'ன்னு ஒரு கதை வந்திருக்கு பாருங்க.பழங்காலக் கதையொண்ணு.அப்படியே உங்க அக்கா நினைவுக்கு வந்துட்டாங்க..
(நீங்க இன்னும் பார்க்கலைன்னா உங்க மெயிலுக்கு அனுப்புறேன்..மெயில் ஐடி கொடுங்க ..என்னோடது rishanshareef@gmail.com )

அப்புறம் 'காஞ்சிவரம்'னு ஒரு புதுப்படம் பார்த்தேன்.. பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா நடிச்சு வந்திருக்கு இந்த அட்டகாசமான படம்.பல விருதுகளையும் வாங்கிக் குமிச்சிடுச்சாம்..கதை 1948 ல நடக்குது.

அதுல ஸ்ரேயாவப் பார்த்த உடனே உங்க அக்காதான் நினைவுக்கு வந்தார்..என்ன மாதிரி ஒரு பொறுமைசாலி.. :)

நேரம் கிடைச்சா பாருங்க டீச்சர்..நல்ல படம்.. :)

said...

/*அதனால் என்னமோ ஒரு சோப் போட்டு முகத்தைக் கழுவிக்கிட்டே இருப்பாங்க. அவுங்க வீட்டுக் கிணத்தடியிலேயே அந்த சோப்பு டப்பா கிடக்கும்*/
எதாவது நிறம் மாறுச்சா?
எனக்கும் தேவை படுது

said...

/*
ஆத்திர அவசரத்துக்கு எதாவது பாத்திரபண்டம் கொண்டுவந்து ஈடுவச்சுட்டுக் காசு வாங்கிட்டுபோறாங்களாம்
*/
இப்பவும் பழக்கம் இருக்கா, வீட்டுல நிறைய பாத்திரம் இருக்கு

said...

வாங்க திசா.

நீங்க சொல்றதும் ஒரு நல்ல பாயிண்ட்.

கடவுள்கிட்டே பாரத்தை ஒப்படைச்சுட்டா அவரே பார்த்துக்குவார்.

இனி என்னை மலை ஏத்துவது முருகன் பொறுப்பு.

said...

நரேன்..

1. அக்காவை, அவுங்க குழந்தைகள் எல்லாம் அம்மா ன்னே கூப்புட்டாங்க.

2. எங்க வீட்டுலேயும் இப்படி நிறைய உண்டு. எங்க பாட்டியை ( அதாவது சின்னப் பாட்டியை) சித்தி. மாமா எல்லோரும் அக்கான்னே கூப்புடுவாங்க. நான் மட்டும் அம்மம்மா என்பேன். அக்கா புள்ளைங்க என்னை,' சித்தின்னு தெலுங்குலே கூப்பிடும்.:-)

said...

வாங்க தாரா.

நலமா? ரொம்ப நாளாச்சே உங்களைப் பார்த்து!

எட்டையும் ஒரே மூச்சாப் படிச்சீங்களா? போரடிக்கலை என்றதே ஆறுதல்:-)

எழுதுங்க உங்க அக்காவை. நாங்கள் தயார்.

said...

வாங்க ரிஷான்.

அப்பாடா.... சோகம் இல்லாமப் பார்த்துக்கிட்டேன்:-)

ஆமாம். உங்க அடுத்த பின்னூட்டம் வெளியிடலாமா? அதுலே உங்க மின்னஞ்சல் இருக்கே. அதனால்தான் கேக்கறேன்ப்பா.

said...

வாங்க நசரேயன்.

பாலாக்காவுக்கு எண்ணெய் மிகுந்த சருமம். அதனால்தான் கூடுதலா முகப்பரு வருதுன்னு, அதுக்காகவே ஸ்பெஷல் சோப் போட்டுக் கழுவுவாங்க. சந்திரிகா சோப்போ என்னவோ!

பாத்திரம் நிறைய இருக்கா? ரெண்டுபக்கமும் காது வச்ச கங்காளம் இருக்கா? அக்கா எதுக்கு? நான் வாங்கிக்கறேன்:-))))

அண்டாவைக் கொண்டுவந்து இங்கே ஃபயர்ப்ளேஸ் பக்கம் வச்சு அதுலே மரக்கட்டைகளைப் போட்டுவச்சுக்கலாமுன்னு ஒரே ஆசை. ஊஹூம்....நடக்கலை(-:

said...

//குடிச்சு முடிச்சதும் தத்தக்கா பித்தக்கான்னு நடை போட்டுக்கிட்டே நேராக் கிணத்துக்குள்ளே வீசி எறிஞ்சது கிண்டியை!\\

ஹா ஹா... லைன்னா மற்ற பதிவுகள் படிச்சு மனது கனமா இருந்தது.. இது படிச்சது குபீர் சிரிப்பு...

//அஞ்சு ரூபாய்க்கு அம்பது காசாம்.//

:-)

said...

வாங்க மங்கை.

இன்னிக்கு ஒரே மூச்சுலே எட்டையும் படிச்சுப் பின்னூட்டியதுக்கு எட்டு நன்றி.

நாளைக்கு 9 வரப்போகுது.

said...

\\நீகூடத்தான் திக்கு வாயா இருந்தே'ன்னு குண்டைத் தூக்கிப் போட்டுச்சு அக்கா. நானா? எப்போ?
\\

ஆகா..டீச்சர் நீங்களுமா...!!!;)))

சூப்பரு ;))

said...

வா வா வா வா வா வாங்க கோபி.

நெசமாத்தானாம்:-)