Friday, December 12, 2008

அக்கா ( பகுதி 10 )

"சிறு குனனுக்கு நேந்த விபத்து யது?" முக்கால் வாசி காலை விட்டுட்ட கோணல் மாணல் கையெழுத்து. சிரிச்சு, உருண்டு பொரண்டு.... சித்தியோட வகுப்புப் பரீட்சைத்தாள்களை நான் திருத்திக் கொடுத்தேன். பாட்டியும் டீச்சர்தான். ஆனா பரிட்சைப் பேப்பர் திருத்தும் வேலையெல்லாம் இருக்காது. அவுங்க ஒன்னாப்பு டீச்சர்:-) ஒரு மாசம் கழிச்சு வந்த பெரிய லீவுக்கு அக்கா வீட்டுக்குப் போகலை. பாட்டி வீட்டுலேயே இருந்து போரடிச்சுக்கிட்டுக் கிடந்தேன்


சித்தி மகன் என்னைவிட 3 வாரம் மூத்தவன். அவனுக்கு ஊர் சுத்துவதுதான் வேலை. தப்பித்தவறி வீட்டுலே இருந்தால் சைக்கிளைக் கழட்டி மாட்டுறதும் சின்னச் சின்ன நட்ஸ், ஸ்க்ரூ, தகடு அது இதுன்னு சேர்த்துவச்சுருக்கும் டப்பாவை எடுத்துவச்சுக் குடையறதுமா இருப்பான். ஜன்னல் வழியாக வரும் வெளிச்சக் கீத்துலே லென்ஸ் வச்சு சினிமாக் காட்டுவான். சிங்கிள் ஷாட்:-) சினிமாக் கொட்டகை ஆப்பரேட்டர் மகன், இவன் வகுப்பு. துண்டு துண்டா ஃப்லிம் ஒரு ஜாமெண்ட்ரி பாக்ஸ்லே வச்சுருக்கான். வீட்டுக்கு எதாவது வேணுமுன்னா கடைகண்ணிக்குப் போயிட்டு வருவான். ஒருநாள், சித்தி மகனோடு கடைக்குப் போனப்பக் கடைவீதியிலே எங்க பெரிய சித்தியைப் பார்த்தேன். அவுங்களை சின்னக்காக் கருமத்தன்னிக்குப் பார்த்ததுதான். அன்னிக்குச் சரியாப் பேசக்கூட முடியலை. அவுங்களையும் அந்தச் சித்தப்பாவையும் மற்ற உறவினர் கூட்டங்களுக்குப் பிடிக்காது. உள்ளுக்குள்ளேயே புகைஞ்சுக்கிட்டு இருக்கும் பகை. அவுங்களும் நல்ல விசேஷத்துக்கு வராட்டாலும், ஏதும் துக்க சமாச்சாரங்களுக்கு வந்துட்டு உடனே போயிருவாங்க.

என்னைப் பார்த்ததும் சித்தி வேகமா வந்து என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க. அந்த நிமிசம் எனக்கு மனசுக்குச் சந்தோஷமா இருந்துச்சு. 'வீட்டுக்கு வரக்கூடாதா? அவுங்களை மாதிரியே நீயும் இருக்கணுமா' ன்னாங்க. நான் ஒருநாள் வரேன்னேன். 'அண்ணன்கிட்டே சொல்றேன். நீங்க இங்கேயா இருக்கீங்க? எனக்குத் தெரியாதே'ன்னேன்.
ஏன் இவனுக்குத் தெரியுமேன்னு என்கூட வந்த சித்திப் பையனைப் பார்த்தாங்க. 'ஏம்ப்பா பெரியம்மா வீட்டுக்கு நீயாவது வரலாமுல்லே, இவளையும் கூட்டிக்கிட்டு ஒரு நாள் வா'ன்னாங்க.

வீட்டுக்கு வர்ற வழியில் , 'இவுங்க வேற ஊர்லே இருந்தாங்களே, எப்ப இங்கே வந்தாங்க' ன்னு கேட்டதுக்கு 'ரெண்டு மூணு வருசமா இங்கேதான் இருக்காங்க'ன்னான். 'அம்மாகிட்டே, பாட்டிகிட்டே எல்லாம் இவுங்களைப் பார்த்தோமுன்னு சொல்லிடாதே.. ஏன் போய்ப் பேசுனேன்னு திட்டுவாங்க'ன்னான்.

இதுலே என்ன ஒரு விசயமுன்னா..... இவுங்க இவனுக்குச் சொந்தப் பெரியம்மா மட்டுமே. எனக்கு? சித்தி ரெண்டுவகையில் சொந்தம். எங்க அம்மாவுக்கு தங்கச்சி, எங்க அப்பாவோட (சித்தப்பா பையன்) தம்பி பொண்டாட்டி.

நான் வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம வீட்டுக்கு வந்ததும், சித்தி சித்தப்பா இந்த ஊருலே இருக்காங்களாமே. எனக்கு ஏன் சொல்லலை? நான் ஒரு நாள் வரேன்னு சொல்லியிருக்கேன். போகணுமுன்னு சொன்னதுக்கு, 'உங்க அண்ணன் கிட்டே கேட்டுக்கிட்டுப் போ'ன்னு சொன்னாங்க எங்க சித்தி. குரலில் ஒரு நக்கல் இருந்துச்சோ......

அண்ணன் வேலையில் இருந்து வந்ததும், நான் இன்னமாதிரி இன்னமாதிரின்னு எல்லாத்தையும் ஒப்பிச்சேன். 'அதெல்லாம் போகவேணாம்'னு சொன்னார். எதுக்குன்னதுக்கு, 'சின்னப்பிள்ளை உனக்கு எதுக்கு ஊர்வம்பு. பேசாமச் சொன்னதைக் கேளு' ன்னார். நான் விடாம 'நை நை'ன்னு பாட்டிகிட்டேக் கேட்டுக்கிட்டே இருந்தேன். பிடுங்கி எடுக்கறேன்னு திட்டிட்டு, அப்புறமாச் சொன்னாங்க.

ரொம்ப சிம்பிளான ஒரு லாஜிக். எங்க அப்பாமேலே அம்மாவின் குடும்பத்தாருக்கு இருந்த கோவம். அது அவர் குடும்பத்து ஆட்கள் மேலே
பாய்ஞ்சிருக்கு. ஓஹோ..... அக்காவின் கல்யாணத்துக்கு இவுங்க யாருமே வராததுக்கு இதுவும் ஒரு காரணம்.

"உங்க அப்பாவால் உங்க அம்மாவுக்கு ஏகப்பட்ட கஷ்டம். அந்தக் குடும்பமே அப்படித்தான். அவுங்க சம்பந்தம் ஏதும் வேணாமுன்னுதான் பேச்சுவார்த்தைகூட வச்சுக்கறதில்லை. இப்பக்கூட உங்க அப்பா எங்கே இருக்காருன்னு அவுங்களுக்குத் தெரியும். ஆனாலும் சொல்ல மாட்டாங்க. அவ்வளோ அழுத்தம். உங்க அம்மா செத்தப்ப எப்படிக் கெஞ்சிக்கேட்டோம். சொன்னாங்களா ?"

எனக்கு லேசா நினைவு வந்துச்சு, அம்மா இறந்தப்பச் சித்திசித்தப்பாக் குடும்பம் பூரா சாவுக்கு வந்துருந்தாங்க. அப்ப இருந்தே இதே ஊர்லேதான் இருக்காங்க போல. எனக்குத்தான் தெரியாமப் போயிருச்சு. சின்னப்புள்ளேன்னு குடும்ப விசயங்களை யாரும் என் காதுலே படறமாதிரி பேசறதே இல்லை. அப்பாமேலே அண்ணனுக்குச் சரியான கோபம். அதை இவுங்க வேற நெய் ஊத்தி வளர்த்து வச்சுருக்காங்க.

இவுங்க போகக்கூடாதுன்னு சொன்னதுலே இருந்து எனக்கு அங்கே போகணுமுன்னு ஆசையா இருக்கு. ஒருநாள் ஞாயித்துக்கிழமைன்னு நினைக்கிறேன், அண்ணன் வீட்டுலே இருந்தார். அப்பப் பார்த்து சித்தப்பா பையன் (என்னைவிட நாலு வயசு பெரியவன்) பாட்டிவீட்டுக்கு வந்து, வெளியே கேட்டுக்குப் பக்கத்துலே இருந்த நந்தியாவட்டைச் செடிகிட்டே நின்னான். வெளி வெராண்டாத் திண்ணையில் இருந்த அண்ணன் 'எதுக்கு வந்தே?'ன்னார். நான் அதுக்குள்ளே வெளியே ஓடிப்போய் 'வீட்டுக்குள்ளார வா(ங்க)'ன்னேன். அவன் தயங்கித்தயங்கி, என்னைப் பார்க்க வந்ததாச் சொன்னான். 'பார்த்தாச்சுல்லே போ'ன்னு சொன்னார்.

'எங்கம்மா. தங்கச்சியைக் கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்க'ன்னதும் எனக்கு ஒரே குஷியா இருந்துச்சு. அண்ணன், 'அவ வரமாட்டா'ன்னார். எனக்கு எரிச்சலாப் போச்சு. நான் போகப் போறேன்னேன். அதுக்குள்ளே பாட்டியும் சித்தியும் வெளியிலே வந்து அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணுறாங்க. நான் பிடிவாதமாப் போகப் போறேன்னதுக்கு, 'போனால் அப்படியே போயிரணும். திரும்பி வரக்கூடாது'ன்னார். எனக்கும் வீம்பு கூடி, 'சரி. வரலை'ன்னுட்டு விடுவிடுன்னு அந்த அண்ணன்கூடப் போயிட்டேன்.

தொடரும்......................

51 comments:

said...

வீராங்கனையா ?

said...

//இவுங்க போகக்கூடாதுன்னு சொன்னதுலே இருந்து எனக்கு அங்கே போகணுமுன்னு ஆசையா இருக்கு//

:):):)

said...

சொன்னதை மட்டும் கேட்டுடக்கூடாதே!! நல்லா இருங்க!! :))

said...

ம் அப்புறம்..சீக்கிரம் அடுத்த பாகம்

said...

குடும்ப சண்டை எல்லா இடத்திலயும் இருக்கா?

சீக்கிரம் அடுத்த பாகம் ..

said...

வாங்க சிஜி.

இன்னிக்கு நீங்கதான் பஷ்ட்டூ:-))))

எங்க வீட்டு அகராதியில் இப்படி(-:

வீராங்கனை = அடங்காப்பிடாரி

said...

வாங்க ராப்.

ஆப்பிள் தின்னதுலே ஆரம்பிச்சது.

said...

வாங்க கொத்ஸ்.

மாணவர்கள் இதைத் தங்களுக்கு எடுத்துக்கக்கூடாது. வகுப்பில் டீச்சர் சொன்னதைக் கேக்கணும்,ஆமா:-)

said...

வாங்க நரேன்.

திங்கள் வரும்:-)

said...

வாங்க நசரேயன்.

சண்டை இல்லேன்னா..அது குடும்பமா? :-)

said...

அச்சச்சோ..ஒரு சூப்பரான கட்டத்துல சஸ்பென்ஸ் வச்சு முடிச்சிட்டீங்களே டீச்சர் :(

டீவி சீரியல் கூட 30 நிமிஷம் ஓடும்..
நீங்க 3 நிமிஷத்துலயே முடிச்சிட்டீங்களே டீச்சர் :(

சீக்கிரமா அடுத்த பாகத்தை உடனே போடுங்க டீச்சர்..

Anonymous said...

எல்லா வீட்டுலயும் இந்த மாதிரி சண்டை உண்டு போல இருக்கு. திரும்ப அண்ணன் வீட்டுக்குள்ள விட்டாரா, அடுத்த பகுதி படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

said...

வாங்க ரிஷான்.

அந்த 30 நிமிசத்துலே கமர்ஷியல்ஸ், முன்கதைச் சுருக்கம், டைட்டில் சாங் எல்லாம் போச்சுன்னா?

இந்த மூணு நிமிசத்துக் கதையை விஷுவலா எடுத்தா 30 எபிசோடு ஆக்கிப்புடுவோமில்ல:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

வீக்கெண்டை ஜாலியா முடிச்சுட்டு வாங்க.

வீட்டுக்குளே விட்டாங்களா இல்லையான்னு சொல்லிடலாம்:-)

said...

அக்கா கதை இந்த பகுதில இல்லை. நானும் கேள்வியெல்லாம் கேட்கலை.

ஆனா, இந்த பகுதி படிச்சிட்டு ரொம்ப மனசுக்கு வருத்தமா இருந்தது:-((((

அதுனால, அடுத்த பகுதி விரைவில போட்டுடுங்க:-)

said...

இது என்னசீரியலா ? சனி ஞாயிறு லீவ் விட.. அதெல்லாம் கிடையாது ..எங்க மனசோட விளையாடாதீங்க..

உங்களுக்கு தொடரும் போடற கலை வரலைன்னு அன்னைக்கு பொய் சொன்னீங்களே..

said...

வாங்க கெக்கேபிக்குணி.



கிளைக் கதைகளில் கொஞ்சம் உள்ளே போகவேண்டிய கட்டாயத்தால் அக்கா இல்லை என்பது நிஜம்.

said...

வாங்க கயலு.

தொடரும் போடும் கலை கை வந்துருச்சா?

அட! தேறிட்டேன் போல:-)

said...

ஆகா.. ஒரு புரட்சி நடந்து இருக்குதே...;) ஆனாலும் வெள்ளிக் கிழமை சீரியல் சஸ்பென்ஸ் வச்சுட்டீங்களே..:)

said...

டீச்சர்,

எனக்கும் ...

//இந்த பகுதி படிச்சிட்டு ரொம்ப மனசுக்கு வருத்தமா இருந்தது:-(((( //

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்ங்கறா மாதிரி, கரடு முரடான பாதைகள் கடந்து வந்ததால தான் கலகலப்பு கைகூடுதோ உங்களுக்கு :))

said...

இது வரைக்கும் தொக்கி நின்ன கேள்விக்கு 10 ம் பாகத்தில் பதில் கிடைச்சுட்டுது. பார்லிமெண்டடடில் இருந்து வெளிநடப்பு செய்த மாதிரி இருந்தது உங்க போக்கு.ஆனா இந்த சஸ்பென்ஸ் தான் தாங்க முடியலை!!!! வகுப்பறைனு இருந்தா விடுமுறையும் இருக்க தானே செய்யும்...இல்லையா டீச்சர் :):):):)

said...

சிந்து... உங்க கூட "கா"
லீவ் விடனுமா.. ம்.. நீங்க டீச்சரை காக்கா பிடிக்கிறீங்க...

said...

இந்த ஊர்ல வெள்ளி,சனி தான் லீவு..அதான் இவ்வளவு(கெட்ட) நல்ல எண்ணம்....

முத்துலெட்சுமி மேடம் உங்க ஈமெயில் அட்ரஸ் குடுங்க...திட்டறதுக்கு இல்லை))))))

said...

ஆஹா நல்ல இடத்துல சஸ்பென்ஸ் விட்டுட்டீங்களே...

said...

சிந்து உங்க மெயில் ஐடிய நீங்க என்னோட பதிவில் பின்னூட்டமா போடுங்களேன் ... மாடரேசன்லாம் இருக்கு.. :)

said...

ஹைய்யய்யோ நல்ல எடத்துல தொடரும் போட்டுட்டீங்களே.

said...

//இவுங்க போகக்கூடாதுன்னு சொன்னதுலே இருந்து எனக்கு அங்கே போகணுமுன்னு ஆசையா இருக்கு//

ஆக இந்த லிஸ்ட்ல நெறையாப் பேரு இருப்போம் போல.

said...

அக்கா அக்கக்கா இது எப்படிக்கா அசராம அடிங்கக்கா...வலையுலக ஆச்சி[மனோரமா] நீங்கதாங்கக்கா...தொடருங்கக்கா....

said...

பொதுவாய் உறவுகளுக்கும் சண்டை வருவது சகஜம். நீர் அடிச்சி நீர் விலகுமான்னு அடிச்சிகிறது, சமாதானமாய் போவது வழக்கம்.
ஆனா இந்த "'ஈகோ" மிக அதிசயமாய், விசித்திரமாய் இருக்கிறது. அக்கா, அண்ணனும் பேசாமலேயே இருந்ததை வீட்டு பெரியவங்க
கூப்பிட்டு பேசி சரிசெய்து இருக்கலாம். இப்ப நீங்க என்ன குண்டு தூக்கிப் போட போறீங்களோ :-) 11 எழுதி ஆச்சுன்னா, மெயில்ல அனுப்புங்க. சஸ்பென்ஸ் தாங்கலை.

said...

இந்த பகுதியில் அக்கா இல்லை!!!??

எல்லா வீட்டிலும் இதுபோல பல சண்டைகள் இருக்கும் போல...;)))

said...

வாங்க தமிழ் பிரியன்.

வெள்ளிக்கிழமை, வீக் எண்ட் மகிழ்ச்சியா இருந்துட்டு, திங்கக்கிழமை நம்ம சொந்தக் கதை, சோகக் கதையைச் சொல்லலாமேன்னு ஒரு நல்ல எண்ணம்தான்ப்பா;-)

said...

வாங்க சதங்கா.

100% மகிழ்ச்சி யாருக்காவது எப்பவுமே கிடைக்குதா என்ன?

said...

வாங்க சிந்து.

இன்னும் ரெண்டு நாள் லீவு கூடுதலாக் கிடைச்சால்...... எங்கெங்கே மனதை உருக்கும் சீன் வைக்கலாமுன்னு யோசிக்க நல்லா இருக்குமே. அதுக்குத்தான்ப்பா:-))))

said...

வாங்க கிருத்திகா.

சஸ்பென்ஸுக்கு இவ்வளவு ஆதரவு இருக்குன்னு தெரியாமப் போச்சே:-))))

said...

சிந்து & கயல்,
எனக்கும் மெயில் ஐடி அனுப்புங்க. மாடரேஷன் நானும் வச்சுருக்கேன்.

சிந்து, உங்க பின்னூட்டம் ஒன்னு தீபத்துக்குப் போட்டது வெளியிடலை.

என்ன சொல்றீங்க? வெளியிடவா இல்லை வேணாமா? :-)

said...

வாங்க அமித்து அம்மா.

எல்லாம் அவளால் வந்தது.

விலக்கப்பட்டக் கனியை ருசிச்ச நாள் முதல் இதேதான்:-))))

said...

வாங்க கண்மணி.

இப்போதைக்கு ஓய்வேன்னு தெரியலை. இன்னும் புலம்பல்ஸ் பாக்கி இருக்கு. அதுதான்.......

said...

வாங்க உஷா.

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே 'பொதுவா'ன்னு.

விதிவிலக்குகள் இருக்குமுல்லே.

உதாரணத்தைத் தண்ணியில் இருந்து விலக்கி, மரக்கிளைகளுக்கு வச்சுப் பாருங்க.

said...

வாங்க கோபி.

சண்டைகள் இல்லாத வீடும் இல்லை, உலகம் முழுசும் சமாதானமாவே எப்பவும் இருக்கும் நாடுகளும் இல்லை.

said...

எல்லாரையும் போல அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்.! கார்த்திகை நல்லபடி ஆச்சா??

said...

வாங்க ராதா.

ரெண்டு பொரி உருண்டையுடன் கார்த்திகை ஆச்சு:-)

said...

லீவ் விட்டாலும் கேள்வி நேரம் இன்னும் தொடருதே...ஒரு ஒத்தி வைப்பு தீர்மானம் போட வேண்டியது தானே

said...

நரேன்,

வகுப்புலே மாணவர்கள், விழிப்பா இருக்காங்கன்னு இந்த கேள்விநேரம் சொல்லுதேப்பா:-)

நம்மூர் பார்லிமெண்டுலே முக்கால்வாசிப்பேர் 'கொர்கொர்'ன்னு கேள்வி!

தப்பித்தவறிக் கேள்விகேக்கறதுக்கும் காசு கொடுக்கணுமாமே(-:

said...

நானும் விளக்கு வைச்சிட்டேன் டீச்சர்.போட்டோ கூட எடுத்திருக்கிறேன்(வேற கொஞ்சம் போடடோஸ் கூட இருக்கு).பிகாஸாவில் போட்டுட்டு உங்களுக்கு அனுப்பட்டுமா?

said...

என்ன கேள்வி இது சிந்து?

உடனே அனுப்புங்க.:-)

said...

என்னா வீம்பு????

said...

வாங்க நான் ஆதவன்.

இல்லையா பின்னே?

ரோசக்காரப் பரம்பரை:-)))))

said...

மனசுக்கு சரின்னு பட்டதை துணிவா சொல்றதும் செய்யறதுமா பாரதியின் புதுமைப்பெண்ணாக இருந்திருக்கீங்க. இருக்குறீங்க.

said...

துளசி கோபால் said...
வாங்க அமித்து அம்மா.

எல்லாம் அவளால் வந்தது.

விலக்கப்பட்டக் கனியை ருசிச்ச நாள் முதல் இதேதான்:-))))

உங்க கதையைப் படிக்கிற அதே இண்ட்ரஸ்ட் உங்களோட கமெண்ட்ஸ் படிக்கும்போதும் குடுக்கிறீங்க.
இங்க மட்டுமில்ல, நீங்க போற எல்லா இடத்துலயும்.
இப்படிக்கு துளசி தள ரசிகை.

said...

அமித்து அம்மா,

இப்படி உசுப்பி உசுப்பித்தான் உடம்பே ரணகளமாப் போயிருது.

சுவாரசிய பின்னூட்டம் கொடுக்கணுமேன்னு .....யோசிக்க வச்சுட்டீங்க.:-))))


இயல்பா வர்றது வரட்டுமே. எதுக்கு மெனக்கெடணும்?

said...

oops.......

வாங்க ராமலக்ஷ்மி.

கூட்டத்துலே உங்களைக் கோட்டை விட்டுட்டேன். சாரி கேட்டோ....

எங்க பாட்டிக்கு பாரதி தெரியாதுப்பா. அதனால் இதைத் 'திமிர்' ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க:-))))

இப்பத் துணிவெல்லாம் போன இடம் தெரியலை.

அவுங்களுக்குத் தெரிஞ்சது அவ்ளோதான் போயிட்டுப் போட்டுமுன்னு ...
பெரியமனுசத்தனம் வந்துருச்சு.

வயசாகிக்கிட்டுப் போகுதுல்லே:-))))