உண்மையிலேயே இன்றைக்கு எல்லாம் ஒரு நிதானத்தில்தான்! எட்டரைக்கு எழுந்து, குளிச்சு முடிச்சு ரெடியாகி ஒன்பதே காலுக்கு ப்ரேக்ஃபாஸ்டுக்காக மார்கெட் போனோம். அவ்வளவாக் கூட்டம் இல்லை. உக்கார இடம் தேடி அலையவேண்டாம்.
வேண்டியதை எடுத்துக்கிட்டு வந்தோம். அதிசயமாக் கஞ்சி கூட இருந்தது. இது என்னோடக் கடைசிக் கஞ்சி !
காஃபியா டீயா ஜூஸான்னு கேட்டு, கொண்டுவர்றவர், இன்றைக்கு கிடார் வாசிச்சுக்கிட்டு ஒவ்வொரு மேஜைக்கும் போய் வர்றார். நம்மைக் குஷிப்படுத்தறாராம்!
நிதானமாச் சாப்பிட்டு முடிச்சு, ஃப்ளாஸ்கில் வெந்நீர் எடுத்துக்கிட்டு அறைக்குப் போனோம். மருந்து மாத்திரை முழுங்கணுமே! ஆச்சு ! சின்னதா ஒரு பாட்டிலில் ரெண்டு நாளைக்கு வேண்டிய மருந்துகளைத் தனியாக வச்சுக்குவேன். அது இப்போ முடிஞ்சது. ராத்ரிக்கு ரீஃபில் செஞ்சுக்கணும். டிவியில் track/ Navigation course போட்டு வச்சுருக்கு. அப்பப்ப அதில் ஒரு கண்.
கப்பலில் அன்றைக்கான நிகழ்ச்சிகள் என்னென்னன்னு அசரீரி அறிவிப்புகள் வேற! இன்னும் கொஞ்ச நேரத்தில் கலைப்பொருட்கள் ஏலம் இருக்காம். ஒன்னும் வாங்கப்போறதில்லைதான். வேடிக்கை பார்க்கலாமுன்னு போனோம். கடைவீதி ஒரே கலகல ! எல்லாக் கடைகளிலும் (நகைக்கடையைத் தவிர ) 50 சதமானம் வரை கழிவு !
மெயின் கூடத்துலே இருந்த பேய் பிசாசுகளையெல்லாம் விரட்டிட்டாங்க. இடம் படுசுத்தமாஇருக்கு !
ப்ரின்சஸ் தியேட்டரில், சமையல் நிபுணர்களின் ஷோ ! என்னமோ பார்த்துவச்சுக்கிட்டு வீட்டுக்குப் போனவுடனே சமைச்சுப்பார்க்கிற மாதிரி ஒரே கூட்டம். இருக்கட்டும். நான் வேணுமுன்னா லாங்பீன்ஸ் சமைக்கச் சொல்லித் தரவா?
அதே மாடியில் இந்தாண்டை கஸீனோ.
மெயின் கூடத்தில் meet your crew in this cruise ship.
போரடிக்குதேன்னு டீக்கடைக்குப் போனோம். கேக் ஷாப்லே மனிதர்களுக்கான வகைவகையான கேக்ஸ். பேய்க்கேக்ஸ் எதுவுமே காணோம். நேத்து மிட்நைட் பார்ட்டி பலமா இருந்திருக்கணும் !

ஃப்ளாஸ்க்லே டீ போட்டு எடுத்துக்கிட்டு அறைக்குப் போனதும், சிங்கையில் வாங்கின A2B கைமுறுக்கோடு டீ ! என்னமோ நாக்கு செத்துதான் போயிருக்கு, இந்தப் பயணத்தில். ப்ச்....
ரொம்ப தூரத்துலே இருக்கும் கப்பலைக் கிட்டக்கக் கொண்டுவந்தேன்.
எப்பவாவது ஒன்னு கண்ணுலே ஆப்டுது. பால்கனியில் உக்காரமுடியாமல் சூடு தஹிக்க ஆரம்பிச்சது. ஐஸ்க்ரீம் இருந்தால் தேவலை...... நோ ப்ராப்லம்....
மணி ரெண்டரைஆகப்போகுதேன்னு லஞ்சுக்குப் போனோம்.
தூரத்துலே இப்படி ஒன்னு. ஒருவேளை எண்ணெய் எடுக்கறாங்களா என்ன ?
வெளியே டெக் லே போய்ப் பார்க்கலாமுன்னு போனால்....வழியில் ..... ஐயோ இது..... வெற்றிகரமான நாலாம் நாள்...............
சாயங்காலம் வேற டீக்கடை. நல்ல இதமான காத்து வருதுன்னு அங்கேயே கொஞ்சநேரம்... உக்கார்ந்தாச். நமக்கிணையா அதே வேகத்தில் பக்கத்துலே ஒன்னு.... விதவிதமா இருக்குல்லே ? இது எதுக்கோ ?
நாளைக்குக் காலையில் அஞ்சு மணிக்கு சிங்கை !
இப்பெல்லாம் எல்லா ஹொட்டேல்களிலும் செக்கின் டைம் பகல் மூணுன்னு வச்சுருக்காங்க. காலையில் வந்து சேரும் பயணிகளுக்குக் கஷ்டம்தான். மூணுவரை தேவுடு காக்கணும். ஒரு காலத்தில் ஏர்லி செக்கின் எல்லாம் இருந்தது உண்மை. இப்போ காலம் மாறிப்போச்சே...
அதிகாலை அஞ்சுக்குப் போயிருவோம். ரோடுலே நிக்க வேணாமுன்னு நம்மவர், இன்றே சிங்கப்பூர் ஹொட்டேல் அறை புக் பண்ணிட்டுத்தான் வந்தார். நான் வேணாமுன்னுதான் சொன்னேன். லக்கேஜை மட்டும் கொடுத்துட்டுக் கடைகண்ணி, கோவில்னு போனால் ஆச்சுன்னு..... கேட்டுட்டாலும்...........
சாயங்காலம் ஆறுமணிக்கு, நம் அறையைக் கவனிக்கும் பொறுப்பில் இருப்பவர் வந்து படுக்கைகளைச் சரிசெஞ்சார். கப்பல் போகும் திசை மாறியிருப்பதால், சூர்யஸ்தமனம் பார்க்க வேறெங்கும் போகவேணாம். நம்ம பால்கனியே போதும். அதனால் நாங்க அறையிலேயேதான் இருந்தோம்.
கப்பலின் குறிப்பின்படி, நாம் நபர் ஒருவருக்கு இருபது டாலர் வீதம் ஊழியருக்கு டிப்ஸ் தரணும். அதையும் கொடுத்துட்டுக் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தோம். வியட்நாம்காரர் இவர். அவரோடு ஒரு க்ளிக்கும் ஆச்சு. ராத்ரி ஒன்பது மணிக்குள்ளே நம்முடைய செக்கின் பெட்டியை அறைவாசக் கதவுக்கு வெளியில் வச்சுருங்கன்னு சொல்லி அதுக்குண்டான Tag கொடுத்துட்டுப் போனார்.
அஸ்தமனம் ஆகும்வரை கொஞ்சநேரம் யோகா செஞ்சு, தினசரிக் கடமையை ஆத்தியாச்.
அப்புறம் பெட்டியை அடுக்க உக்கார்ந்தார். நம்மவருக்கு ரொம்பப்பிடிச்ச விஷயம் இது ! இந்தக் கப்பலில் வார்ட்ரோபுக்கு த் தனியாக் கொஞ்சம் இடம் இருந்ததால்..... துணிகள் எல்லாம் அஞ்சுநாளா ஹேங்கரிலேயே காத்தாட இருந்தது. எல்லாத்தையும் எடுத்து ஒழுங்கா மடிச்சு, பெட்டிக்குள் போகவேண்டியவைகளையும் சேர்த்து அடுக்கி முடிச்சாச். ஒரு பெட்டிதானே.... கையோடு கொண்டுபோகலாமேன்னார்.
"எதுக்குத் தேவையில்லாம? கொஞ்சம் ஃப்ரீயாத்தான் வாங்களேன்"
மறுநாளுக்குத் தேவையான துணிமணிகளை வெளியே எடுத்து வச்சுட்டு, என் கேபின் பேகையும் அடுக்கிவச்சேன். அப்பதான் ஞாபகம் வருது.... என்னோட மெடாலியன் என்ன ஆச்சு ? அறைமுழுக்கத் தேடிப் பார்த்தும் கண்ணில் படவே இல்லை. நேத்து பினாங்கு சுத்திட்டுக் கப்பலுக்கு வந்தவுடன் கழட்டி எங்கே வைச்சேன் ? செலக்டிவ் அம்னீஷியா.............
முதலில் நம்ம அறையின் உதவியாளருக்கு ஃபோன் செஞ்சு , விவரம் சொல்லி, அறை சுத்தம் செய்யும்போது கண்ணில் பட்டதான்னு கேட்டால்.... அறையில் இருக்குன்னார். ஏதோ சிஸ்டம் இருக்கு போல.... அறை எண் சொன்னதும் அவுங்க செல்லில் பார்த்துச் சொல்றாங்க.
ஹெல்ப் டெஸ்க்குக்கு ஃபோன் செஞ்சு கேட்டால்..... அறையிலேதான் இருக்குன்றாங்க. அறையில் எங்கே ? ஙே.........கப்பலுக்குள்ளேயே சுத்தறதுக்கு நம்மவரோடது போதாதா ? எதுக்குப் பட்டியை போட்டுக்கிட்டு அலையணுமுன்னு கழட்டி............ கழட்டி ? எங்கே வச்சேன்னு.... தெரியலையே....
அறைக் கதவுக்கு வெளியே வைக்கவேண்டிய பெட்டியைத் திரும்பத்திறந்து மெடாலியனைத் தேடிட்டுத் திரும்ப எல்லாத்தையும் அடுக்கி வச்சுப் பூட்டினார் நம்மவர்.
எதுக்கும் கஸ்டமர் கேர் போய் கேட்கலாம். கீழே விழுந்து, யாராவது எடுத்து கொடுத்துருப்பாங்களோ ? கஸீனோ தாண்டிப்போகும்போது, அங்கிருந்த உதவியாளர் கவலை படிஞ்ச நம் முகக்களையைப் பார்த்து விசாரிச்சார். அவரும் அறை எண் சொன்னதும் செல்லில் பார்த்துட்டு அறையிலேதான் இருக்குன்னார். என்னடா இது , வம்பாப்போச்சே......... கஸ்டமர் ஹெல்ப் டெஸ்கில் ஆள் யாரும் இல்லை.
அறைக்குத் திரும்பிப்போய், திரும்ப ஃபோனில் விசாரிச்சால்..... நாளைக்கு Disembarkation தானே... நோ ப்ராப்லம்னு பதில். இந்த கலாட்டாவுலேயே டின்னருக்குப் போக நேரம் ஆகிருச்சு. கிளம்பு மார்கெட்டுக்கு...........
டின்னர் முடிச்சுட்டு டிஸ்ஸர்ட் என்ன இருக்குன்னு பார்த்துட்டு வந்தேன். ச்சீஸ் கேக் ஆப்ட்டது.
நீச்சல் குளத்தாண்டை போய் ஓப்பன் தியேட்டரில் கொஞ்சநேரம் படம் பார்த்தோம். நீச்சல்குளத்துக்கு வலைபோட்டு வைக்கறாங்க.
அறைக்குத் திரும்பி, மருந்து மாத்திரை இருக்கும் என் ஹேண்ட்பேகை லாக்கரில் இருந்து எடுத்தேன். பை கனமா இருக்கேன்னு எப்பவும் எடுத்துக்கிட்டுப் போறதே இல்லை. முக்கியமான சமாச்சாரங்கள் அதில் இருப்பதால் லாக்கரில் வைக்கறது வழக்கம். மாத்திரைகளை எடுக்கப் பையைத் திறந்தால்............... ட்டடா.............. மெட்டாலியன் உக்கார்ந்துருக்கு !
அவுங்க எல்லோரும் சொன்னது ரொம்பச் சரி !
"அறையில்தான் இருக்கு "
தொடரும்............... :-)



































































0 comments:
Post a Comment