அனைவருக்கும் வணக்கம்.
நம்ம வீட்டில் பண்டிகைகள்/ விழாக்களையெல்லாம் எப்படி சம்ப்ரதாயமாகக் கொண்டாடறேனோ இல்லையோ.... அதுக்குண்டான ஸிம்பிள் கண்காட்சியை மட்டும் மனசுக்குத் தோணியபடி வச்சுடறது ஒரு வழக்கமாகவே ஆகிப்போச்சு.
பொங்கல் வைக்கிறது வழக்கம்போல் நம்ம கிராமத்துக் களத்துமேட்டுலே தான் ! பண்ணையாரும் எஜமானியம்மாவும், வில்வண்டியில் வந்து இறங்கியிருக்காங்க.


பண்ணையாளும் அவர் மனைவியுமா வீட்டைச் சுத்தப்படுத்தி, வாசக் கோலமெல்லாம் போட்டு வச்சுருக்காங்க.
அய்யனார் கோவிலில் இந்த வருஷம் ஒரு துளசிமாடம் !

அடுப்பும் பத்தவச்சுப் பாலும் பொங்கிக்கிட்டு இருக்கு !
வீட்டுக்கு ரெண்டு கரும்பை எடுத்துவச்சுட்டு, கரும்புக் கட்டுகளை சந்தைக்கு எடுத்துப்போறாங்க, பூனைய்யாவும் பூனைம்மாவும். கைக்குழந்தை அம்மா மடியில்! திரும்பி வரும்போது இருட்டிப்போச்சுன்னா............ மறக்காம லாந்தர் எடுத்துக்கிட்டு போகணும்....சரியா ?
வாங்க நண்பர்களே..... கொஞ்ச நேரத்தில் பொங்கல் பொங்கி முடிச்சதும், அய்யனாருக்குப் படைச்சுட்டு, உங்களுக்கெல்லாம் இலைபோட்டு பந்தி விளம்பணும் !
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் எங்கள் அன்பான, இனிய வாழ்த்துகளும், ஆசிகளும் !
எல்லோரும் நல்லா இருங்க மக்கா !
PIN குறிப்பு: behind the scene below !!!!!



















0 comments:
Post a Comment