இன்றைக்கு ரொம்பவே நடந்தாச்சுல்லே........... கால் வலி பின்னுது. கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின் டீக்கடைக்குப் போயிட்டு வந்துறலாமுன்னு 'மேலே' போனால்.... பேய்க்குப் பிடிக்குமேன்னு அங்கங்கே ரத்தக்கேக்குகள் !
குக்கீஸ் இருக்கும் பகுதிக்குபோய் சாக்லேட், வால்நட் குக்கீஸும், ஒரு ரத்தக் கேக்குமாய் முழுங்கிட்டு , ஒரு டீயும் குடிச்சுட்டு அறைக்கு வந்து கால்வலித் தைலம் தேய்ச்சுக்கிட்டு பால்கனியில் கொஞ்ச நேரம் உக்கார்ந்திருந்தேன். நடந்த களைப்பில் கண் அப்படியே இழுக்குது. ஒரு அரைமணி நேரம் தூங்கலாமுன்னு கிடந்தவள்.........பத்தே நிமிட்டில் திடுக்னு தூக்கம் விட்டு எழுந்துட்டேன். கை தானாக செல்லை எடுக்குது.
வலைக்கு எப்படி அடிமைப்பட்டோமுன்னு நினைச்சா பகீர்னு இருக்கு. வலையில் சிக்கினால் மீட்சி இல்லை.... ப்ச்.
ஏதாவது போர்ட்டுலே நிக்கும் சமயம், கஸீனோவும் கடைவீதியும் மட்டுமே மூடி இருக்கே தவிர மற்ற நிகழ்ச்சிகள் அதுபாட்டுக்கு நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. க்விஸ், பாட்டு, பியானோ கச்சேரிகள், ஸ்பா, மஸாஜ்னு ...... பத்துவயசைக் குறைச்சுக் காமிப்பது எப்படின்னுகூட இருக்கு. வண்டி மேக்கப் சமாச்சாரங்களை நம்ம தலையில் கட்டிவிட்டுருவாங்க..... போதும் போன்னுட்டு பால்கனி வேடிக்கையில் இருந்தேன்.
அஞ்சரைக்குள்ளே வெளியே போன மக்கள் திரும்பி வந்துறணும். ஆறுமணிக்குக் கப்பல் கிளம்பியாச்சு.
இன்றைக்கு ஹாலோவீன் கொண்டாட்டம். அதுக்கான தயாரிப்புகள் நாம் கப்பலுக்கு வந்த ரெண்டாம்நாளே தொடங்கியிருந்தது.... மெயின் கூடத்தில் என்னன்னு பார்க்கப்போனோம். எங்கே பார்த்தாலும் பூசனிக்காய்கள். எல்லாம் பல்லைக் காமிச்சுக்கிட்டுச் சிரிச்ச முகத்தோடு.... ஹாஹா....
நகைக்கடையில் வைரக்கல் செமினார். அதுக்கொரு பெரிய கூட்டம் ! அநேகமா எல்லா க்ரூயிஸ் கப்பல்களிலும் இதே செட்டப்தான். முதல்முறை இருந்த ஆர்வம், இப்போ வடிஞ்சுதான் போச்சு. ஆரோக்கியமா இருந்திருந்தால் எஞ்சாய் பண்ணியிருப்பேனோ என்னவோ.... ஆனால் வாழ்நாளில் ஒரு முறையாவது இப்படி க்ரூயிஸ் பயணத்தை அனுபவிக்கணும். சான்ஸ் கிடைச்சால் விட்டுறாதீங்க.... நம்ம ஆசான் 'சுஜாதா' கூடச் சொல்லி இருந்தாருல்லெ... 'எதையும் ஒருமுறை அனுபவிக்கணும்'னு.... அஷ்டே !
வொர்ல்ட் ஃப்ரெஷ் மார்கெட் (நம்ம கப்பலின் மெயின் டைனிங் ஹால்தான் ) உள்ளே போனால் ஏகப்பட்ட அலங்காரங்கள், கேக் வடிவில்! இந்த விழா உண்மையில் அமெரிக்க சமாச்சாரம். ஆனால் மற்ற நாடுகள் எல்லாம் ஏன் இதைக் கட்டிக்கிட்டு அழுதுன்னு தெரியலை. ஸ்ட்ரேஞ்சர் டேஞ்சர்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டே.... புள்ளைங்களை முட்டாய்க்காக வீடுவீடா அனுப்பறது டேஞ்சர்னு உணரலையோ என்னவோ.....

கப்பலிலும் ஹாலோவின் பார்ட்டி ! வயசு அனுசரிச்சு , ரெண்டு மூணு இருக்கு. சின்னப்பசங்களுக்கு இப்போ என்பதால் குட்டிப்பசங்க வேஷமும் கோஷமும் போட்டுக்கிட்டு ஒரு பெரிய வரிசையாப் போறாங்க. பெரியவங்களுக்கு ராத்ரி பதினொன்னரைக்காம்.
எங்கே பார்த்தாலும் நம்மை பயமுறுத்த(!) ஹாலோவீன் கேக் அலங்காரம் இருந்தாலும் நான் பார்த்து பயந்தது ஒரே ஒரு ஸ்டாலில்தான் ! ராத்ரி டின்னருக்குப் போன இடத்தில்.... நடுங்கிப்போயிட்டேன். ட்ரிக் ஆர் ட்ரீட் .ஒரு சின்ன மாறுதல் கூட இல்லாம மூணுநாளா இதே இதே..... என்னங்கடா இது? அக்ரமம், அநியாயம்னு கொடி பிடிச்சு கோஷம் போட்டு ஊர்வலம் போகணும் போல !
இது சிங்கப்பூர் & மலேசியா பயணம்தானே ? சந்திர மண்டலமா என்ன ? இந்திய சமையல் செய்ய ஒரு ஆளுமா கிடைக்கலை? இல்லே உலகத்துலே இந்த ஒரு காயைத்தவிர மற்ற வகைகள் எல்லாம் காணாமப்போச்சா ? அட ராமா.............. ப்ச்.
பாஸ்தா ஸாலட்னு ஒன்னை முழுங்கிட்டு, நீச்சல் குளப்பகுதியில் 'மூவி அண்டர் த ஸ்கை' ன்னு காமிக்கும் ஓப்பன் ஏர் தியேட்டருக்குப் போனோம். ஏதோ சினிமா ஒன்னு போய்க்கிட்டு இருக்கு. அங்கே இருக்கும் ஸ்டாலில் பாப்கார்னும், ஐஸ் க்ரீமுமா வாங்கிக்கிட்டு (தியேட்டர்ன்னா இதெல்லாமும் இருக்கணுமுல்லெ ? ) வந்து சாய்ஞ்சால், அந்தப் படம் முடிஞ்சு வேறொன்னு....
ஹாலோவீன் ஸ்பெஷலாம்! அதையும் கொஞ்சநேரம் பார்த்துட்டுக் கிளம்பி அறைக்கு போனோம். போற வழியில் எல்லாம் பார்ட்டிக்காக......வேஷம் போட்ட பயணிகள் !
நியூஸ் லெட்டர் வந்துருந்தது. நாளைக்கு முழுநாளும் கடலில், கப்பலில்தான் இருப்போமாம் ..... வேற நிறுத்தம் ஒன்னுமே இல்லை! ஓ.... அப்ப சரி. நல்லாத் தூங்கி, லேட்டா எழுந்தால் ஆச்சு, இல்லெ ! குட் நைட்!
தொடரும்............ :-)




























0 comments:
Post a Comment