Wednesday, July 30, 2025

தியாகப் பெருஞ்சுவர் .....(2025 இந்தியப்பயணம் பகுதி 52 )

பாண்டிச்சேரியில் எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம் ஒன்னு இருக்குன்னா..... அது அந்த Bபீச் ரோடு போக்குவரத்தை சாயங்காலம் ஆறு முதல்  விடிகாலை ஆறு வரை நிறுத்தி வைக்கறதுதான் !   எந்த வண்டி எப்போ வந்து இடிச்சுத்தள்ளுமோன்ற  பயம் இல்லாமக் குழந்தைகுட்டிகளுடன் நடக்கப் போகலாம். விவரம் புரியாத புள்ளைகள் சாலைக்குக் குறுக்கே ஓடினாலும் (அப்படி ஓடவிடாமல்  பெற்றோர்கள் பழக்கணும் என்பதும் இருக்கு ) ஆபத்து இல்லை.   
ஆனால்..... கல்லுபீச்.... நம்ம மெரினாவைப்போல் பரந்து நீண்ட மணற்பரப்பெல்லாம்  இல்லை.  என்ன ஒன்னு.... நாம் அதை சமாதிகளால் அலங்கரிச்சுப் புதைகாடா ஆக்கிப் பெருமைப்பட்டுக்கறோம்.  சமாதிகள் போக பாக்கி இருக்குமிடம்.....  தீனிக்கடைளும், சின்னப்பசங்களைக் கவர்ந்திழுக்கும்  சில்லறை விளையாட்டுப்பொருட்களும்,  இதனால் குவியும் குப்பைகளுமாய்........  ப்ச்.......   

இங்கே பாண்டியில் Bபீச் Bபீச்சாவே இருக்குன்றதும் கவனிக்கவேண்டியது. இவ்ளோ நீண்ட  அழகான Bபீச் மட்டும்.....  வேறொரு நாட்டுக்கு (! ) அமைஞ்சுருந்தால்....  சுற்றுலா வருமானம் பிச்சுக்கிட்டுப்போகும் !  அண்டைநாட்டுக்கு இந்த Bபீச்சுக்காகவே போய்வருவோம்.   அங்கே காலநிலைவேற  அட்டகாசமா இருக்குமே!  இத்தனைக்கும் அந்த  Bபீச்சுக்கு மணல்  வேறெங்கோ இருந்து வருது !!!!  ஹூம்.....
விஜியை வரச் சொல்லிட்டு நாங்க ஒரு ஏழு மணிபோலக் கிளம்பினோம். பார்க்கிங் தேடிக் கொஞ்சம் அலைய வேண்டியதாப் போச்சு. எங்களை  நேரு சிலையாண்டை இறக்கி விட்டுட்டுப்போன விஜி, ஒரு பத்து நிமிஷத்தில் நம்மோடு  வந்து சேர்ந்துக்கிட்டார்.  முதலில்  இந்தாண்டை இருக்கும்    Handicraft Emporium  போனோம்.  பெண்கள் நடந்ததும்  கைவினைப்பொருட்கள் வியாபாரம்..... ரொம்ப வருஷத்துக்கு முன்னே இதை ஆரம்பிச்சக் காலக்கட்டத்தில் போகும் வாய்ப்பு கிடைச்சது. இப்போ... மகளுக்கு ஏதாவது  அலங்கார நகைநட்டு கிடைக்குதான்னு....
முகப்பிலேயே நின்னு வாங்க வாங்கன்னு கூப்பிடுது அழகான டெர்ரகோட்டாக் குதிரை ! ஹைய்யோ !  கொஞ்சநேரம் சுத்திட்டுச் சில பொருட்களை வாங்கியாச்சு.  நல்ல தோல்பொருட்கள் இருக்கும் கடையில்  ஆண்களுக்கான பெல்ட், பர்ஸுன்னு நம்மவர்  தனக்கும், மருமகனுக்கும், விஜிக்குமா வாங்கினார். விஜியும் நம்ம பிள்ளைதான், இல்லையா !

காந்தி சிலைப்பக்கம்   நடந்து போய், கொஞ்ச நேரம்  உக்கார்ந்து கடற்காற்றை அனுபவிச்சேன்.  அவ்வளவாக் காத்துகூட இல்லை இன்றைக்கு....  போறவர்ற சனத்தைப் பார்க்கறது நல்ல பொழுதுபோக்கு !
இன்னும் கொஞ்சம் நடக்கலாம்னு(சாலையின் குறுக்கே ! ) போறோம்.  பழைய  கலங்கரைவிளக்கம். இந்தப்பக்கம்  காந்தி நேரு திடலாம்.  ஒரு பக்கம் முழுதும்  தீனிக்கடைகள்.  சின்னச் சின்ன டென்ட் அமைப்பில்  வரிசையாக் கடைகள்.  அங்கங்கே உக்கார்ந்து சாப்பிடும்  வசதிகள். நடுவில் ஓடும் பாதை. நல்ல சுத்தமான இடம்தான். 
இந்தப் பக்கம் கண்ணையோட்டினால்.....  தகதகன்னு  சிங்கங்கள் ! ஆஹா.... இங்கே எப்படின்னு பார்த்தால்.....
நம்ம  முக்கால் நூற்றாண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்துக்குன்னு  புதுசா  அமைச்சுருக்காங்க. தியாகப்பெருஞ்சுவர் !   Tribute Wall !   Azadi Ka Amrit Mahotsav 2022 வருஷம் !  
அந்த வருஷம் நம்ம இந்தியப்பயணம் இருந்ததுதான்..... ஆனால்  வட இந்தியப் பயணம் ( தீபாவளியன்னைக்கு அசல் கங்கா ஸ்நானம் ! ) முடிச்சுட்டுத் தமிழ்நாடு வந்த சில நாட்களில் நம்மவருக்கு உடல்நலமில்லாமல்  ஆஸ்பத்ரி வாசம் ஆகிப்போனதால்.... தெற்கு நோக்கிய பயணம்தான் இல்லாமல் போச்சே..... ப்ச்.... 

நல்ல வெளிச்சத்தில் பார்த்து அனுபவிக்கவேண்டிய இடம்.....   தெரிஞ்சுருந்தால்..... விட்டுருக்கமாட்டேன்......  நாட்டுக்காகத் தங்கள் உயிரையே தியாகம் செய்த 'உண்மைத் தியாகிகள்' நினைவுக்கான இடம் இல்லையோ !!!!  எத்தனையெத்தனை உயிர்கள் !  சுதந்திரம்  கிடைச்சதோடு போச்சா ? இன்னும்கூடத்தானே  எல்லையிலும்,  அதைக் கடந்து வந்தும் நாசம் விளைவிக்கும்  தீயசக்திகளால்,    உயிரிழப்புகள் நடந்துக்கிட்டே இருக்கு ! ப்ச்....  

(எனக்கு வார் மெமோரியல் பார்த்தால் துக்கம் நெஞ்சை அடைச்சுக்கிட்டுக் கண்ணு பொங்கிரும்..... பெருமாளே.... பெருமாளே...) 
                                கிடைச்சவரை பார்த்துச் சில க்ளிக்ஸும் ஆச்சு.....  
அந்தாண்டை கார் நிறுத்திய இடத்துக்குப் போகும்வழியில் பாரதிப் பூங்கா. மூடியிருக்கு.  அடுத்த பயணத்தில் கட்டாயம் வந்து போகணும்.....  மூளையில் முடிச்சு.

மணி எட்டரை ஆகப்போகுதே.... டின்னரை முடிச்சுக்கலாம் என்ற நம்மவராண்டை, இன்றைக்கு பீட்ஸா ன்னு சொன்னேன்.  முந்தியப்பயணங்களில் ஒரு பேக்கரி ரெஸ்ட்டாரண்டில் அருமையா ஒன்னு கிடைச்சது.  அதைத்தேடி இப்போ அலைய முடியுமான்னு வலையில் பார்த்தால்..... ஒரு சில இடம் காண்பிச்சதுதான். 

இருட்டிவேற போச்சு. தெருக்களின் ஓரங்களில்   திறந்தவெளிச் சாக்கடைகள்.  தெருவிளக்கும் பளிச்ன்னு இல்லை.  கொஞ்ச நேரம் சுத்திட்டு, ஒன்னும் சரியில்லைன்னு அக்கார்டுக்கே போயிட்டோம்.  விஜி வெளியில் சாப்பிட்டுக்கறதாச் சொன்னதால் அதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டு அறைக்குப் போனோம்.  ரூம் சர்வீஸில்தான்  ஏதாவது வாங்கிக்கணும்....

தொடரும்.......... :-)

3 comments:

said...

படங்கள் சிறப்பு.

said...

வாங்க ஸ்ரீராம்,

நன்றி !

said...

குதிரை, தகதகக்கும் சிங்கங்கள், கடற்காற்று என பொழுது போக்க நல்ல இடமாக இருக்கிறது.