Monday, July 31, 2023

கடவுளர்களுடன் ஒரு ஃபோட்டோ !

நம்மூர்லே ஒரு மாரியம்மன் கோவில்  வந்தாச்சுன்னு  சொல்லியிருந்தேனே... அந்தக் கோவில் சம்பந்தமான நிதி சேகரிக்க , ஃபிஜியில் புகழ்பெற்ற  பஜனைப் பாடல்கள் பாடும் ஒரு பாடகரின் நிகழ்ச்சிக்கு நம்ம  தென்னிந்திய சன்மார்க ஐக்கிய சங்கம்  ஏற்பாடு செஞ்சுருந்தது.   கீர்த்தன் கிங் ஆஃப்  ஃபிஜி,  பாடகர், கௌஷல் மணி  நியூஸி வந்துருக்கார். நாமும் போயிரமாட்டமா என்ன ?  

இங்கே நியூஸி சம்மர்காலத்துலேதான்  சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருவாங்க.  குளிர்காலத்திலும்  பயணிகள்  வருவாங்க என்றாலும், அவுங்கெல்லாம் நம்ம சதர்ன் ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு வர்றவங்கதான் ! வடகோளத்துலே வெய்யில் காலம் வந்துட்டால்....     பனி தென்கோளத்துக்கு வந்துருதுல்லே !  அது கிளம்பிவர லேட்டானாக்கூட எங்களுக்குப் பிரச்சனை இல்லை.   மெஷீன் வச்சு மலைகளில்  பனியை  உண்டாக்கிருவொம்லெ !   நாட்டுக்கு வர்ற வருமானத்தை விடமுடியுமோ ?      



கௌஷல் மணியுடன்  கொஞ்சநேரம் பேசினோம். ஓரளவு நல்லாவே தமிழ் பேசறார். அவர் சின்ன வயசில் நம்ம சங்கம் ஸ்கூலில் தமிழ்ப் படிச்சவர்தானாம். முதல் பாட்டு, தமிழில் பாடுங்களேன்னு கேட்டுக்கிட்டேன்.  பாடினார். வரவேற்பு நிகழ்ச்சியாக நம்ம பொண்ணு மிஷலின் நடனம் ! 

https://www.facebook.com/1309695969/videos/5722264931232340/
 பஜன் நிகழ்ச்சியின்  இடைக்கிடையில்  நம்ம தெருக்கூத்துக்  குழுவினர், சின்னப்பசங்களுக்குப் பயிற்சி கொடுத்துக்கிட்டு  இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டோம்.  ரொம்ப மகிழ்ச்சி. சின்ன வயசுலே இருந்து கலைகளைச் சொல்லிக்கொடுப்பதுதான் நல்லது.  அதான் 'அஞ்சுலே வளையாதது அறுபதில் வளையுமா'ன்னு சொல்லி வச்சுருக்காங்களே!  

https://www.facebook.com/1309695969/videos/1007952487229201/

மேலே இந்த வீடியோ க்ளிப் பாருங்க. ஆடறவர், வெள்ளைக்காரப் பொடியர் !  தோழன் கூடவே வந்து இவரும் வேஷம் கட்டிட்டார் !

பார்வதியின் அம்சமான மகா காளி இங்கே !

https://www.facebook.com/1309695969/videos/661472772542962/

பாட்டு, நடனம் இவைகளைப் பாரம்பரிய  நாட்டுப்புறக் கலைகளா இதுவரை(144 வருஷங்களாக) பாதுகாத்து வளர்த்துவரும்  சங்கத்தைப் பாராட்டத்தான் வேணும் !

நிகழ்ச்சிக்கு நடுவில் சிறுதீனிகளும் விற்பனைக்கு உண்டு.  எப்படியும் கோவிலுக்குக் காசு சேர்க்கும் நிகழ்ச்சியானதால்..... வாய்க்கும் வேலை கொடுத்தோம் !

மறுநாள்தான் நம்ம வீட்டு விசேஷம்.  மகளுக்கு வளைக்காப்பு.  சாஸ்திரம். சம்ப்ரதாயம் எல்லாம் அவ்வளாகத் தெரியாததாலும்.....  இன்னும் கோவிட் முழுசாகத் தொலையாததாலும்.....  க்ருஷ்ணார்ப்பணம்னு பெருமாள் மேலே பாரத்தைப் போட்டுட்டு,  ரொம்பச் சின்ன அளவில் நடத்தினோம்.  மகளின் பெற்றோரும் மருமகனின் பெற்றோரும் ஆசி வழங்கினர்!
சம்பந்திகளுக்கு நம்ம இந்திய வழிமுறைகள் ஒன்னும் தெரியாத்தால்.... நான் சொல்வதுதான் 'வேத வாக்கு' :-)





கடந்த  இந்தியப்பயணத்தில்  காசியில் இருந்து வளைகள் வாங்கிவந்தோம்.
 
மாப்பிள்ளையின்  விருப்பப்படி 'தஹிபுச்கா' செஞ்சாச்!   
நிகழ்ச்சி முடியும்வரை அமைதி காத்த ரஜ்ஜு,  சம்பந்திகள் போனபிறகு வந்து பன்னீர் தெளிச்சுக்கிட்டான் !
பொண்ணு வீட்டுக்காரர்கள், அடக்கி வாசிக்கணுமுன்னு  அவனுக்கும் தெரிஞ்சுருக்கு பாருங்க :-)


8 comments:

said...

அருமை அருமை

said...

I am à silent reader of your blog for many years more than a decade, you always take me the places along with you through your travelling blog, after reading some of your, I usually pray to God give you a good health and some times grand children, I both of would be lovely and dotted grand parents

said...

நல்ல நிகழ்வு...இப்பதான் லேட்டா போடறீங்களாக்கா....குழந்தை பிறந்த செய்தி போட்ட நினைவு இருக்கே..

ரஜ்ஜு - ஹாஹாஹா ரசித்தேன்

கீதா

said...

இனிய பகிர்வு . வாழ்த்துக்கள்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

நன்றி !

said...

வாங்க எல் !

முதல் வருகைக்கு நன்றி !

உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிகவுன் நன்றி !

said...

வாங்க கீதா,

ரஜ்ஜு சித்தியான மகிழ்ச்சியில் பதிவை முன்னாடியே போட்டுட்டேன். ஆர்வக்கோளாறு ஹிஹிஹிஹி

said...

வாங்க மாதேவி,

நன்றிப்பா !