ஒவ்வொரு குழுவிற்கும், ஒவ்வொரு பிரிவுக்கும் எல்லாப் பழக்க வழக்கங்களும் கொஞ்சம் வெவ்வேற விதமாத்தான் இருக்குல்லே ? முடிஞ்சவரை எல்லோரையும் அனுசரிச்சுப்போவது என்ற கொள்கைதான் நமக்கு. இந்தப் புதுவருஷக் கொண்டாட்டங்களில் கூடப் பாருங்க...... வெள்ளையர்களுக்குப் புதுவருஷமான ஜனவரி முதல்தேதியைக்கூட நாமும் கொண்டாடறோம்தானே !
நம்ம சநாதனதர்ம பரிபாலன சபாவில் புதுவருஷத்தன்னிக்கு ஒரு ஹவன் (ஹோமம்) பண்ணுவதே வழக்கம். இன்னிக்கு மட்டுமில்லை.... ஆன்னா.... ஊன்ன்னா ஹவன்தான். முந்தியெல்லாம் உள்ளூர் பள்ளிக்கூட & சிட்டிக்கவுன்ஸில் ஹால்களைத்தான் விழாவுக்கு வாடகைக்கு எடுப்போம். அங்கெல்லாம் ஹாலுக்குள் ஹோமம் பண்ண அனுமதி இல்லை. அதனால் வெளியே தோட்டத்தில் ஹோமகுண்டம் வச்சுச் சுத்திவரப் பாய்விரிச்சு உக்கார்ந்துப்போம். குளிர்காலங்களில் குண்டத்தைச் சுத்தி நின்னாலும் வெடவெடன்னு நடுக்கம்தான் !
இப்போ ஒரு அஞ்சு வருஷமா, நமக்குன்னு சொந்தமா ஒரு ஹாலை வாங்கிட்டதால் எல்லாம் நம்ம இஷ்டமே ! கதவுகளையெல்லாம் திறந்து வச்சுட்டு , காலம் எதுவா இருந்தாலும் ஹோமம் பன்ணுவது மட்டும் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. இந்த ஹாலை, ஆன்மிக சமாச்சாரங்களுக்கு மட்டும், மற்றவர்களுக்கும் விட்டுத் தருவது உண்டு. ஆர்ய சமாஜின் காயத்ரி ஹோமம் இங்கேதான் நடத்துவாங்க.
இப்போ கோடைக்காலம் ( டிசம்பர்முதல் ஃபெப்ரவரி வரை )என்பதால் ஹாலுக்கு வெளியில் ட்ரைவ் வேயில் ஹவன் நடத்திக்குவோம். இங்கேதான் நம்ம்ன ஆஞ்சிக்கு ஒரு சந்நிதி கட்டிவிட்டுருக்கோம். டு இன் ஒன் என்ற கணக்கில் ஆஞ்சிக்கும் ஹவன் ஆச்சு !
காலையில் நம்மூட்டுலே புதுவருஷத்துக் கொண்ட்டாட்டத்தை லட்டோடு கொண்டாடிட்டு, சநாதன ஹாலுக்குக் கிளம்பிப் போனோம். நம்ம ஆஞ்சிக்கு ஒரு கண்ணாடித்தடுப்பு போட்டுருக்கு. சனம், குங்குமத்தை எடுத்து முகமெல்லாம் பூசி வச்சுருதுன்னு இந்த ஏற்பாடு. தடுப்பு முழங்கால் வரைதான். பாத சேவைக்கு மட்டும் சமர்ப்பிக்கக் குங்குமம் சந்தனம் எல்லாம் வச்சுருக்கோம்.
ஹவன் குண்டம் எல்லாம் ரெடியா எடுத்துவச்சதும் ஆஞ்சிக்குப் பூஜையை முடிச்சுட்டு, ஹவன் ஆரம்பிச்சது. நம்ம பண்டிட் Rup Prakash ji எல்லோரையும் இணைச்சு நடத்தினார். எல்லோரும் பங்கெடுக்கும் வகையில்தான் எப்போதும்! எனக்குத்தான் முழங்கால் பிரச்சனையால் கீழே உக்கார முடியாது என்பதால் நம்மவர் பங்கெடுத்துப்பார். அதில் பாதி புண்ணியம் எனக்கு வந்துரும் :-) சாஸ்திரப்படி கணவனுக்குக் கிடைக்கும் புண்ணியத்தில் சரிபாதி மனைவிக்குக் கிடைக்கும். மனைவி செய்யும் காரியங்களில் கிடைக்கும் புண்ணியம் மனைவிக்கு மட்டுமே ! ஆஹா ஆஹா.... சஹதர்மிணி !
சாயங்காலம் நம்ம புள்ளையார் கோவிலுக்கும் போய்க் கொண்டாடியாச்சு ! சம்மர் சீஸன் என்பதால் இரவு ஒன்பதரை, பத்துவரை வெளிச்சம் இருக்கும். சூர்யாஸ்தமனம் எட்டுமணிக்கப்புறம்தான். பத்துவரை ட்வைலைட் ! நம்மவன், தெருவேடிக்கையில் இருக்கான்.
மகளும் மருமகனும் Hobbiton Movie Set by Peter Jackson பார்க்க வடக்குத்தீவுக்குப் போயிருப்பதால், அவுங்க பூனைகளுக்குக் காலையில் போய் ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்துட்டு வருவோம். சாயந்திரம் டின்னர் கொடுத்துட்டு, அவுங்க இடத்தைச் சுத்தப்படுத்த ஒருவர் வருவாங்க. இதெல்லாம் சின்னச் சின்ன சம்பாத்தியம் அவுங்களுக்கு. பொதுவா பள்ளிக்கூடப்பசங்க, பாக்கெட் மணிக்காக சின்ன வேலைகள் செஞ்சு கொடுப்பாங்க. நாயை வாக் கொண்டு போறது, தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் ஊத்தறதுன்னு அக்கம்பக்கத்துக்கு குழந்தைகள் வருவதுண்டு. இப்பெல்லாம் Stranger Danger னு இருக்கு. தெரிஞ்சவங்களா இருந்தாலுமே ரிஸ்க் எடுக்க முடியாது.... குழந்தைகள் பாதுகாப்பும் முக்கியம் இப்படிக் காரணங்களால் இதையெல்லாம் நிறுத்தியாச்சு. தெரியாத குழந்தைகள் வந்தால் நமக்குமே பயம்தான். இப்பத்துப் புள்ளைகளுக்குக் கற்பனா வளம் அதிகம். வம்புலே மாட்டி விட்டுருச்சுன்னா...... அதனால் பெரியவங்களே ஹௌஸ் ஸிட்டிங், Pபெட் ஸிட்டிங்னு ஆரம்பிச்சுருக்காங்க.
இந்த Hobbiton Movie Set Tour ரொம்பப் பிரபலமாயிருச்சு. செட் போட்டோம் சினிமா எடுத்தோமுன்னு இல்லாம இதையே ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷனா மாத்திட்டாங்க பாருங்க. ! அதிலும் இதுலேயே வகைவகையா, அங்கேயே தங்கறது, டூர் வித் லஞ்சு, டூர் வித் டின்னர், நடந்தே சுத்திப்பார்க்கறதுன்னு.... வெளிநாட்டு சினிமாப்ப்ரேமிகள் கண்களுக்கு விருந்துதான் ! எங்க நாட்டுக்கும் நல்ல வருமானம்.
இதையெல்லாம் பார்க்கும்போது, நம்மூரில் இல்லாத அற்புதங்களா ? சுற்றுலாத்துறை நல்ல வசதிகள் செய்து கொடுத்தால் பணத்தை அள்ளலாமேன்னு தோணறதைத் தடுக்க முடியலை. ப்ச்.... (அதுக்காக ஹரித்ரா நதியில் மிதக்கும் உணவகம் அமைப்பதெல்லாம் டூ மச் இல்லையோ ? )
நம்ம யோகா குடும்பத்தோடுப் புது வருஷத்துக்கான பிக்னிக் போனோம் . இப்பத்தானே க்றிஸ்மஸ் தினத்துலே போய் வந்தீங்கன்னா..... அது போன வருசத்துக் கணக்கு :-) இது இந்த வருசத்துக்கானது. சுமார் 22 கிமீ தூரத்தில் இருக்கும் ஸ்பென்ஸர்வில் பார்க். கடலையொட்டி இருக்குமிடம். குப்பைகள் இல்லாத பார்க் என்பது விசேஷம். " உன் குப்பையை நீயே எடுத்துக்கிட்டுப் போ "
இந்தியர்களின் தேசிய விளையாட்டாக (! ) மாறி இருப்பதை இங்கும் கொஞ்சம் விளையாடினாங்க நம்ம குடும்பத்து மக்கள். பானிபூரி ஸ்பெஷல் ஐட்டம். அப்புறம் பாட்லக் லஞ்ச் ! பாட்டில்லேக் வாக், ஸர்ஃப் பீச், Adrenalin Forest னு ஒரு சுத்து.
மனுசனுக்கு, பயத்துலே அடிவயிறு கலங்கிக் குடல் வாயிலே வந்துரும் நிலையில் கத்தினால் ஒரு ஆசுவாஸம் கிடைக்கும்போல ! இல்லாமயா பஞ்ஜி ஜம்ப் கண்டுபிடிச்சுருப்பான் ? இதைத் தொடங்கினதே இங்கே நியூஸியில்தானாக்கும்! வனவாட்டுத் தீவுத் திருவிழா சமாச்சாரத்தைக் கொஞ்சம் ஸ்டைலா, நவீன உபகரணங்களோடும் பாதுகாப்பு மிகுந்த சமாச்சாரமாகவும் மாத்திட்டாங்க. இங்கே அதுலே குதிக்கணுமுன்னா ரொம்ப ஃபிட்டான பாடியா இருக்கணும். நாங்கெல்லாம் குதிக்கும் இடத்தில் போய் நின்னு வேடிக்கை பார்த்து வந்ததோடு சரி.
இங்கே இந்த Adrenalin Forest இல் காசையும் கட்டிட்டுக் கயித்துமேலே நடக்கணுமாம். அட்வெஞ்சர் ஆசாமிகளுக்கானது !
பறவைகள் தெரியுதான்னு ஒரு படிகளில் ஏறிப்பார்த்தோம். ஊஹூம்..... ஆனால் ஒரு இடத்தில் நடந்து வரும்போது பன்றிகள் தெரியுதுன்னு நண்பர் சொன்னதும் பாய்ஞ்சு போனவள், புதையல் எடுக்கும்படி ஆச்சு. அப்போ என்னன்னு கத்தினேன்னு நம்மவர் சொன்னார்........... "ஐயோ... என் செல்ஃபோன்...."
Blue striped shirt போட்டுருப்பவர் ராகவன். நம்ம சென்னை அயனாவரத்துக்காரர். நம்ம பிக்னிக்குகளில் இவர்தான் டீ ஸ்பெஷலிஸ்ட். சிலசமயம் ஹாஸ்பிடல் ட்யூட்டி வந்துட்டால், அன்றைய பிக்னிக்கில் நோ டீ.....ப்ச்....
காலையில் இங்கே வந்தப்ப ஒரு இடத்தில் ரைட் எடுக்காம விட்டுட்டுக் கொஞ்ச தூரம் போனபிறகுதான் , கோட்டைவிட்ட சமாச்சாரம் தெரிஞ்சு வண்டியைத் திருப்பினப்பதான் சட்னு ஒரு விண்ட்மில் கண்ணுலே பட்டது. என்ன ஏதுன்னு சுதாரிக்குமுன் ரொம்ப தூரம் போயிட்டார் நம்மவர்.
அதனால் மறக்காம, பிக்னிக் முடிஞ்சு வீடு திரும்பும் வழியில் அங்கே போய் எட்டிப் பார்த்தோம். நெதர்லேண்ட் சொஸைட்டி கல்ச்சுரல் சென்ட்டராம் ! நம்ம நெதர்லேண்ட் பயணத்தில் விட்டுப்போன சமாச்சாரம், நியூஸியில் கிடைச்சதுன்னா பாருங்களேன் !
8 comments:
நியூஸிலாந்துக்கு போனாலும் சனாதன தர்மத்தை இன்னும் விடலியா.
இவளவு ஊரை சுத்திப்பார்க்கிறதுக்கு நியூஸிலாந்தில் வேலை பார்த்து கிடைக்கும் சம்பளம் போதுமா . நியூஸிலாந்தில் சம்பளம் குறைவாச்சே
நியூஸிலாந்துக்கு போனாலும் சனாதன தர்மத்தை இன்னும் விடலியா.
இவளவு ஊரை சுத்திப்பார்க்கிறதுக்கு நியூஸிலாந்தில் வேலை பார்த்து கிடைக்கும் சம்பளம் போதுமா . நியூஸிலாந்தில் சம்பளம் குறைவாச்சே
வாங்க உண்மைவிளம்பி,
நீங்க சொல்வது உண்மைதான். அதிலும் வரிகள் பாதிக்குப்பாதி!
பயண ஆசையால் வாயைக்கட்டி, வயித்தைக்கட்டித்தான் சமாளிக்கறோம். ப்ச்......
கொண்டாட்டங்க்ள் நிகழ்வுகள் அனைத்தும் செம. ரசித்து வாசித்தேண். நெதர்லான்ட் வின்ட் மில் கு ரொம்ப புகழ்பெற்றது இல்லையா?
ரஜ்ஜு, மத்த பூனைக்க்குட்டிஸ் எல்லாம் செம க்யூட்!!!!!
நல்ல அவுட்டிங்க்!
கீதா
வாங்க கீதா.
நம்ம நெதர்லேண்ட் பயணத்தில் அங்கே விட்டதை நியூஸியில் பிடிச்சேன்னு சொல்லிக்கலாம் 🤣
புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் சிறப்பு. படங்கள் வழமைபோல ரசித்தேன்.
கொண்டாட்டங்களும் பிக்னிக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் படங்களே சொல்கின்றன.
வாங்க மாதேவி,
இதெல்லாம்தான் நமக்கு டானிக் ! ஊக்க மருந்து !
Post a Comment