Monday, July 24, 2023

தைப்பூசத் திருநாளிலே.........

அதென்னமோ... இந்த வருஷம்... 'முக்கியமான தினங்கள்' எல்லாம்  வீக் எண்ட்களில் வருது !  ரொம்ப நல்லதாப்போச்சு நமக்கு !  வீட்டில் சின்னதா ஒரு பூஜையை முடிச்சுக்கிட்டுக்  கோவிலுக்குப் போறோம்.  காலை ஒன்பதரைக்கு வரச் சொல்லியிருந்தாங்க.  வெலிங்டனில் இருந்து  நம்ம பத்மன் ஐயர், சிறப்புப்பூஜை நடத்திக்கொடுக்க வந்துருக்கார்.

கோவில் வந்த பிறகு நடக்கும்  முதல் தைப்பூசத் திருவிழா!  பரபரன்னு ஆளுக்கு ஒரு வேலையாச் செய்ய ஆரம்பிச்சோம்.  அபிஷேகத்துக்கு எல்லாம்  தயார்.   புதுசா கோவிலுக்கு ஒரு வேல் வந்துருக்கு !   'பூஜை முடியும்வரை கப்சுப்' னு இருங்கன்னு மனைவியருக்குச் சொல்லிக்கிட்டு இருந்தான் முருகன் :-)


காவடிகள்  அலங்காரம் முடிஞ்சு , கிளம்பப்போறாங்க. பாற்குடங்கள் ஒருபக்கம்!
தம்பியின் விசேஷநாளைப் பார்த்து ரசிக்கும் பாவனையில் நம்ம புள்ளையார் !

ஸ்வாமி ஊர்வலத்துக்காக ஒரு அமைப்பை' சத்சங்கம் நடத்தின  காலத்துலேயே '  உருவாக்கிக் கொடுத்தார்  நண்பர் ஸாக் பெர்காஸ்.  இவருடைய தயாரிப்புதான் அபிஷேகம் செய்யும்  அமைப்பும்.   பூஜைக்கான தேங்காயை உடைக்கும் ஸ்பெஷலிஸ்ட்டும் கூட இவரே! 


முருகனும், மனைவியரும்  புத்தாடை உடுத்தி அலங்காரம் முடிச்சு ஊர்வலத்துக்கு, இதோ கிளம்பப்போறாங்க.  பாற்குடங்கள் சுமப்பவர்களும், காவடி எடுப்பவர்களும்  உடன் வர, ஊர்வலம் கிளம்பிருச்சு. 







(அப்பவே சின்னச் சின்ன வீடியோ க்ளிப்புகள் எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுருந்தேன்.  அவைகளின் சுட்டி கீழே!  அப்போ பார்க்காதவர்கள், விரும்பினால் இப்போது பார்க்கலாம். )

https://www.facebook.com/1309695969/videos/752758139804571/

https://www.facebook.com/1309695969/videos/1156636114965470/

https://www.facebook.com/1309695969/videos/704773684631006/

https://www.facebook.com/1309695969/videos/3461362884143529/

ஊர்வலத்துக்கு அனுப்பிட்டு ஒரு அஞ்சு நிமிட் ஓய்வு நம்ம பண்டிட் பத்மன் ஐயருக்கு :-)அவரும் காலையில் முதல் ஃப்ளைட்டுலே வந்தவர் இல்லையோ !
நம்மவரும் ரைஸ்குக்கருக்குக் கொஞ்சம் சேவை செய்தார். 
ஊர்வலம் முடிச்சுக் கோவில் திரும்பிய முருகனை வரவேற்று,  மகளிர் குழு கும்மியடிச்சுக் கொண்டாடினோம். 
சுமந்துவந்த பாற்குடங்களைத் திறந்து வெற்றிவேலுக்கு  அபிஷேகம் ஆரம்பிச்சது.  ஒரே அமர்க்களம்தான் போங்க. !  கலைநிகழ்ச்சிகளாக நடனம், பாட்டுன்னு   அட்டகாசம் !




நம்ம ஃபிஜி இண்டியன் நட்புகளுக்கு விவரம் சொல்லி இருந்ததால் அவுங்களும் வந்து கலந்துக்கிட்டாங்க.  
இன்னொரு விசேஷம் இருக்குன்னு சொன்னேனில்லையா.....    அவதார தினம் !  திடீர்னு அதை  ஓர் அறிவிப்பில் மக்களுக்குத் தெரிவிச்சாங்க.  பண்டிட் ஆசி வழங்கினார்.  பார்ட்டி இல்லையான்னார்.... இதோ முருகன் கொடுக்கறான்னு சொன்னேன் :-)

மஹாப்ரஸாதம் இன்றைக்குக் கோவில் ஏற்பாடு. 






கர்ம யோகினிகள், கர்மயோகிகள் எல்லோரும் சேர்ந்து விழாவை ரொம்பவே அருமையா நடத்திக்கொடுத்துட்டாங்க !  
எல்லோருக்கும் அவன் ஆசிகள் கிடைக்கட்டும்!




4 comments:

said...

படங்கள் யாவும் சிறப்பு. ரஜ்ஜு டயர்ட் போலிருக்கு!

said...

தைப்பூச திருநாளும் வீட்டுக் கொண்டாட்டமும் நன்றாக நடந்துள்ளன படங்களே சொல்கின்றன.

said...

வாங்க மாதேவி,

கோவில் கொண்ட்டாத்துக்குக் கேட்கணுமா !!!!!

said...

வாங்க ஸ்ரீராம்,

ரசித்தமைக்கு நன்றி !

ரஜ்ஜு இப்பெல்லாம் கொஞ்சம் சோர்வாகத்தான் இருக்கான். வயது கூடிக்கிட்டுப்போகுதே.... முதுமை...கொடுமை.