தை மாசம் வந்துட்டால் பொங்கல் சமயத்தில் நம்மூரில் புத்தகக் கண்காட்சி ஆரம்பிச்சுருதுல்லே.... இங்கிருந்து போகமுடியலையேன்னு பொருமிக்கிட்டே இருந்தேனா.... கவலைப்படாதே...... உங்க ஊரிலும் நடத்திப்புடலாமுன்னு .... பெருமாள் கண்ணைக்காமிச்சாரோ ?
நம்ம நியூஸி தமிழ்ப் புத்தக மன்றம் (AOTEAROA TAMIL)ஒரு புத்தகவிழாவை ஏற்பாடு செஞ்சுருந்தாங்க. பருப்பில்லாத கல்யாணமா ? ஹிஹி.....
அன்று பகல், நம்ம நெருங்கிய தோழியின் அப்பா மறைந்த முப்பத்தியோராம்நாள் என்றபடியால் நடந்த சிறப்பு வழிபாடாக நடந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம். நம்மாட்கள் பலரை அங்கே சந்திச்சதால் புத்தகவிழாவை பற்றிச் சொல்லி, எல்லோருக்கும் ஒரு பொது அழைப்பு வைத்தேன்.
புத்தக விழா மதியம் மூணு மணிக்கு. சிங்கப்பூர் புரவலர் ஒருவர், தன் சொந்த செலவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டத் தமிழ்ப் புத்தகங்களை அனுப்பி வைத்திருந்தார். இதில் ஐநூறு புத்தகங்கள், குழந்தைகளுக்கானவை !
ஒரு சேர ஆயிரத்தை இங்கே பார்த்தவுடன் கண்கள் விரிந்தது உண்மை. மாலைச் சிற்றுண்டியாக ஒரு இந்திய உணவகத்திலிருந்து சமோஸா, நூடில்ஸ், கேரட் ஹல்வா வந்திருந்தது. மூளைக்கும் வயித்துக்கும் நிறைவு !
ஒரு சேர ஆயிரத்தை இங்கே பார்த்தவுடன் கண்கள் விரிந்தது உண்மை. மாலைச் சிற்றுண்டியாக ஒரு இந்திய உணவகத்திலிருந்து சமோஸா, நூடில்ஸ், கேரட் ஹல்வா வந்திருந்தது. மூளைக்கும் வயித்துக்கும் நிறைவு !
தோழி வீட்டு விழாவில் சாப்பிட்டதால் இங்கே நமக்கு எதுவும் வேண்டியிருக்கலை. ஒரு டீ மட்டும் போதும் !
தமிழ்மன்றத்தின் வலைப்பதிவு பக்கங்களில், நம்ம மவொரி கதைகளின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுக்கொண்டிருந்தாங்க. நல்ல வரவேற்பு என்று பலரும் பாராட்டியதாக மன்றத்தலைவரும், அமைப்பாளரும் சொன்னாங்க. மனசுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இன்னும் பல கதைகள் நம்மிடம் மொழிபெயர்ப்புக்காகக் காத்திருக்கு என்றாலும், சரியான நேரம் அமையலை..... ப்ச்... ஒரு நாள் இந்த வேலையை மீண்டும் ஆரம்பிக்கத்தான் வேணும்.
குழந்தைகளின் புத்தகங்களில் சில தலைப்புகள் 'அட' போடவைச்சது உண்மை! நம்ம எஸ் ரா புத்தகத்தைப் பார்த்தும் வியப்பு !!!! எலியின் பாஸ்வேர்டு ! (நம்ம ரஜ்ஜுவுக்கும் ஒரு பாஸ்வேர்டு தரவேண்டிய நேரம் வந்தாச்)
இந்தப் புத்தகத் திருவிழாவுக்கும் நம்மூரில் நடக்கும் திருவிழாவுக்கும் ஒரே ஒரு வித்யாசம் என்னன்னா... நாம் இங்கே காசு செலவழிச்சு வாங்கிக்க வேணாம். இரவல் வாங்கிப் படிச்சுட்டுத் திருப்பிக் கொடுத்துடலாம் ! நூலகம் ! விடமுடியுமோ ? ஆளுக்கு ஒரு மூணு !
அன்றைக்கு மாலையே நம்ம ஃபிஜி நண்பரின் மகனுக்குப் பொறந்தநாள் விழா. ஹவன் நடத்திப் பூஜை ஆரம்பிச்சது. பையனுக்கு வயசு பதினேழுதான். ஆனால் நெடு நெடுன்னு உயரமாக வளர்ந்துருக்கான். உள்ளுர் பாஸ்கெட்பால் குழுவின் முக்கிய புள்ளி. நேஷனல் டீமில் இடம் கிடைக்கணுமுன்னு வாழ்த்திட்டு வந்தேன்.
நம்ம ரஜ்ஜுவுக்குப் புகழ் சேர்ந்துக்கிட்டு இருப்பதால் அவனுடைய பாதுகாவலுக்கு ஒரு கருப்புப்பூனை (படை) வேலைக்கு அமர்த்தியாச்சு. அவனுக்கும் நாமம் போட்டுட்டுத்தான் மறுவேலை பார்த்தேன் :-)
லில்லிக் கண்காட்சியில் வாங்கிவந்த செடிகள் எல்லாம் பூக்கத் தொடங்கியாச்சு. நம்ம தோட்டமே வண்ணமயமா இருக்குன்னு எனக்குத் தோணுது !
நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலில், நித்யானந்தா பொறந்தநாள்னு அழைப்பு அனுப்பினாங்க. அபிஷேகம் ஆரத்தி, மஹாப்ரஸாதம்னு ஒரு குறைவும் இல்லாமல் நடந்தது. அங்கேயும் புத்தக விற்பனைன்னு வச்சுருந்தாங்க. விலைன்னு ஒன்னும் வைக்கலை... கோவிலுக்கு ஏதாவது காசைக் கொடுத்துட்டுப் புத்தகம் எடுத்துக்கலாம்.
ஜனவரி & ஃபெப்ரவரி மாதங்களில் , என்னமோ இனி ஒருக்கிலும் இந்த மாதங்கள் வரவே வராதுன்றதைப்போல வருஷாந்திர விழாக்கள் எல்லாமே வரிசைகட்டி வந்துரும். கோடையை விட்டால் பின்னே எப்போ ?
8 comments:
சுவாரஸ்யம். புத்தகங்களை வாங்கி படித்துவிட்டு திருப்பித் தந்து விடலாம் என்பது இன்னும் சுவாரஸ்யம். ஆனால் நம்மூர் (எங்கூர்!) புத்தகக் கண்காட்சி மிக பிரம்மாண்டமாய் இருக்குமே...
வாங்க ஸ்ரீராம்,
ஆஹா.... சென்னை மக்கள் தொகையில் கிட்டத்தட்ட இருபத்தினாலில் ஒரு பங்கு இங்கே எங்க ஊரில். அதில் எத்தனைத் தமிழ்க்குடும்பங்கள் இருக்கும் ? தமிழ்நாட்டில் இருந்து வந்துமே தமிழ் படிக்க ஆர்வம் இருப்பவர் எத்தனை பேர் ? கூட்டிக்கழிச்சுப் பாருங்க..... இதுவே எங்களுக்குக் பெருங்கடல் இல்லையோ !!!!
எனக்கு மட்டும் நாமம்
ரஜ்ஜுவின் நெத்தியில் காணும்,
குழப்பத்தில் கருப்புப் பூனை, பாவம்;
ரொம்ப சுவாரசியமான விஷயம் புத்தககங்களை வாசித்துவிட்டுத்திருமப்க்கொடுத்துடலாம்ன்றது. ரொம்பப் பிடிச்சது. புத்தகக் கண்காட்சி ரசித்தேன். ரஜ்ஜுவுக்குக் கறுப்பு பூனைப்படை! ஹாஹாஹாஹாஹா ரொம்ப ரசித்தேன்! ஹையோ இப்படி நாமம் போட்டிட்டீங்களே!!!! ஹிஹிஹிஹி
கீதா
புத்தக கண்காட்சி சிறப்பு.
குழந்தைகள் புத்தகங்கள் அருமையாக இருக்கிறது.
வாங்க விஸ்வநாத்,
ஆடாமல் அசையாமல் இருந்தால்தான் 'நாமம்' !!!!
வாங்க கீதா,
நம்ம வீட்டுக்குள்ளே யார் வந்து தங்கினாலும் நமம்தான் :-)
மூணு மாசம், புத்தகங்களை வச்சுக்கலாம் என்பதும் சிறப்புதான் !!!!
வாங்க மாதேவி,
குழந்தைகள் புத்தகங்களின் தலைப்பே சுவாரஸியம்தான் !!!
Post a Comment