Wednesday, August 02, 2023

நாளும் கிழமையும் நமக்காக நிக்குதா ?

இன்னும் ரெண்டு வாரத்துலே சம்மர் போயிருமுன்னு  நினைக்கும்போதே....   மனசுக்கு பேஜாராப் போயிருச்சு.  குளிர்கால உடுப்புகளையெல்லாம் எடுத்துப் பார்த்து ட்ரை க்ளீன் செஞ்சுக்க வேண்டியதையெல்லாம்  தனியா எடுத்து வைக்கணும்.  நினைக்கும்போதே தலைசுத்தல்தான்.  அப்பப்பப் பூத்துநிற்கும் செடிகளைப் பார்த்து மனசில் புத்துணர்ச்சியை வரவழைச்சுக்கணும். 
பத்துநாளைக்குமுன் விதைச்சுருந்த அருகம்புல்  முளைச்சு வந்துருக்கு !   புள்ளையாருக்கு யோகம்தான் ! 



மூணே வாரத்துலே ஓரளவு நல்லாவே வளர்ந்துருச்சே !
இந்த வருஷம்.... மாசி  முதல் வாரத்துலேயே மஹாசிவராத்ரி வந்துருச்சு. இப்ப நமக்குக் கோவில்  இருப்பதால் எதையும் வீக் எண்டுக்கு நேர்ந்து விடாமல் விசேஷ தினத்துலேயே  கொண்டாட ஆரம்பிச்சுட்டோமே ! இதுலே அன்றைக்கு சனிக்கிழமையாப் போயிருச்சுன்னு  சாயங்காலம் நம்ம ஹரே க்ருஷ்ணாவில்  ஆரத்தி தரிசனம் பண்ணிக்கிட்டு, அங்கிருந்தே நேரா நம்ம புள்ளையார் கோவிலுக்குப் போயிட்டோம்.





அங்கே அபிஷேகம், அலங்காரம்னு  மக்கள் ஜேஜேன்னு  கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. நம்ம  நேபாளி பண்டிட்  ஒருத்தர்  பூஜையை நடத்திக்கிட்டு இருக்கார். இவர் வழக்கமா  வர்றவரில்லை.   அவர் மந்திரம் சொல்லச் சொல்ல  நம்மூர்க்காரர் பாலா,  சேவை செய்யறார்.    ஃபிஜியில் இருந்து வில்வ தளங்கள்   ஃபிஜி இந்தியன் கடைகளுக்கு   வந்துருப்பது நல்லதாப் போச்சு !   குழந்தைப் பசங்களுக்காகக் குட்டிக்குட்டிக் குடங்களில் பால் நிறைச்சு வச்சோம். பார்க்கவே அழகா இருந்ததால் , நாங்க எல்லோருமே குட்டிக்குட அபிஷேகம்தான் :-)  நிறைய  வட இந்தியர்கள் வந்துருந்தாங்க.  நம்ம ஃபிஜி மக்களும் வந்து கலந்துக்கிட்டாங்க.


கலை நிகழ்ச்சிகளுக்கும் குறைவில்லை. நம்ம மிஷல் இருக்கக் கவலை ஏன் ?

இங்கே பூஜைகள் முடிஞ்சதும் அவசரமாக் கிளம்பி அன்பு விநாயகர் தரிசனத்துக்குப் போனோம்.  அங்கே பூஜைகள் முடிஞ்சுருந்தது.  ஆனால் நல்ல  தரிசனம் கிடைச்சது. 

நம்ம வீட்டிலும் சிவன் சந்நிதி இருப்பதால்..... இங்கேயும்  சின்ன அளவில் கொண்டாடியாச்சு. நம்மது ஜ்யோதிர்லிங்கம் ஆக்கும் !!!  (ஹா..... )

ஃபிஜி பஞ்சாங்கத்தின்படி, இந்தியாவில்  வரும் பண்டிகை நாட்களுக்கு அடுத்த நாள்தான் (ஒருநாள் தள்ளி)பண்டிகை நாளாக அமையும் என்பதால்  (டேட் லைனில் இருப்பதன் காரணம் போல )மறுநாள் நம்ம சநாதன் ஹாலில் மஹாசிவராத்ரி விழா நடந்தது.  ஹனுமன் சாலீஸா போலவே  சிவன் சாலீஸா  இருக்குன்றது அப்போதான் எனக்குத் தெரிஞ்சது !




ஹவன் நடத்திப் பூஜை ஆச்சு!      இங்கே வழக்கம்போல் நம்ம ஃபிஜி பண்டிட் ரூப் ப்ரகாஷ் ஜி நடத்திக் கொடுத்தார் !

நம்ம வீட்டைத்தேடி வந்து கொண்டிருக்கும் புலியையும், கருப்பனையும் பார்த்தாலே ரஜ்ஜுவுக்குப் பிடிக்கறதில்லை.  அதுக்காக வீட்டுக் கதவாண்டை வந்து காத்திருப்பவர்களை  விரட்ட முடியுமா ?  வரி இருக்கேன்னு நாந்தான் புலின்னு கூப்பிடறேன்.

நம்மூர் புத்தர் கோவிலுக்குள் இருக்கும் ஹாலில் எப்பவும் ஏதாவது கண்காட்சி நடந்துக்கிட்டே இருக்கும். நம்ம பேட்டை என்பதால் நாமும் விடமாட்டோம். குறைஞ்சபக்ஷம் மூணு மாசமாவது ஒவ்வொன்னும் காட்சிக்கு வைப்பாங்க. இந்த முறை இண்டிகோ சாயம் பூசி வரைந்த ஓவியங்கள் வச்சுருந்தாங்க.  ஏற்கெனவே ஃபேஸ்புக்கில் சுடச்சுடப் போட்டுருந்தேன். அங்கே பார்க்கலைன்னா இங்கே இந்த்ச் சுட்டியில் பார்க்கலாம். நல்ல சுவாரஸியமானவைதான் !

https://www.facebook.com/gopal.tulsi/posts/pfbid033SQJRbGnQjHRfjAF34QNGxNVem26Fs3UEjACEZbvNHF4goGt6NzZbug9p5hi4i8Jl

நம்மவருக்கு இன்னும் தலைசுற்றல் படுத்திக்கிட்டுத்தான் இருக்கு என்பதால் இங்கே பேலன்ஸ் க்ளினிக் தேடிப்போனோம்.  நம்ம காதுகளுக்குள்ளே க்றிஸ்டல்ஸ் இருக்கும் விஷயமே அப்பதான் எனக்குத் தெரிஞ்சது.   பேலன்ஸ் க்ளினிக்   பிஸியோதெரப்பிஸ்ட் Ryan எல்லாம் விளக்கிச் சொன்னார். இந்த க்றிஸ்டல்கள் சிலபலகாரணங்களால்  காதுக்குழலுக்குள்  இடம் மாறிப் போவதால் இப்படித் தலைசுற்றல் வருமாம்.  சொல்லச் சொல்ல ஙே ன்னு கேட்டுக்கிட்டு இருந்தேன் ! டபக்னு ஒரு காதை வேற எடுத்துக் காமிச்சார் !!!!


VEDA      Vestibular  Disorders Affect  Balance Hearing & Vision. Community of Support என்பதால் இதில் சேர்ந்துக்கலாமாம். இவுங்களோட  வலைப்பக்கத்தில் எல்லா விவரமும் இருக்கு. தேவைப்பட்டால்  உதவும் என்று இங்கே கொடுக்கறேன். vestibular.org

நம்மவரைப் படுக்க வச்சுத்  தலையை ரெண்டு கைகளாலும் பிடிச்சு இப்படியும் அப்படியும் திருப்பி என்னவோ  செஞ்சதும்,  எழுந்து உக்கார்ந்த  நம்மவர், தலை சுத்தல் இப்ப இல்லைன்னார் ! இன்னும் சில பயிற்சிகள் சொல்லிக்கொடுத்துட்டு, பத்து நாள் கழிச்சு வரச் சொன்னார்.  அந்தப் பத்து நாட்களில்  தலைசுற்றல் காணாமப் போயிருந்தது ! ரெண்டாவது விஸிட் போனபோது, இன்னும் சில வகைகளில் தலையைப் பிடிச்சுத் திருப்பினார்.  இன்னும் சில பயிற்சிகளும் சொல்லிக்கொடுத்தார்.   மொத்தம் ரெண்டே  விஸிட்தான்.  


சென்னையில் 'சம்பவம்' நடந்தப்பவே நண்பர் ஒருவர், வெர்ட்டிகோ பிரச்சனைக்கு ஒரு  இடம் போகச் சொல்லியிருந்தார். ஜஸ்ட் ஒருநாள் போனால் போதும் என்றார்தான்.  அப்போ நம்மவர் இருந்த நிலையில் நாங்கள் போகலை.  போயிருக்கலாமோன்னு இப்போ தோணுது. ப்ச்....  என்னமோ போங்க...... எது எது எங்கே சரியாகணுமுன்னு ஒரு கணக்கும் நேரமும் இருக்கும்போல.....   

இப்போ இந்தப் பதிவு எழுதும் நாள்,  அஞ்சு மாசமாகத் தலைகாட்டாமல் இருந்த தலைசுற்றல்  திரும்ப வந்துருக்கு. இப்பதான் பேலன்ஸ் க்ளினிக் போய் வந்தோம்.  தலைத்திருப்பலுடன்   கூடவே  மூணு நாட்கள் ஒரு பயிற்சி செய்யச் சொல்லிக் கொடுத்தாங்க.    

வயசானாலே தொல்லைகள்  ஒன்னு மாத்தி ஒன்னுன்னுதான் வாழ்க்கையில் வந்துக்கிட்டு இருக்கு !  ப்ச்.......



10 comments:

said...

வயசானாலே தொல்லைகள் ஒன்னு மாத்தி ஒன்னுன்னுதான் வாழ்க்கையில் வந்துக்கிட்டு இருக்கு ! ப்ச்.......

மிகச்சரி
Jayakumar​

said...

அறுகம் புல் நன்றாக வளர்ந்திருக்கிறது.
சிவராத்திரி விழாவும் அருமை.

அனைவரும் நலமுடன் இருக்க வேண்டுவோம்.

said...

அருகம்புல் வளர்ச்சி கொண்டாட்டமும் குட்டிக்குடமும் சுவாரஸ்யம். தலைசுற்றல் வைத்தியம்... எப்படி எல்லாம் கண்டு பிடிச்சு வைக்கறாங்க...!

said...

டீச்சர் உங்க காது ப்ரச்சனை சரியாயிடுச்சா ?

said...

அருகம் புல் சூப்பரா கொத்தா வந்திருக்கே...நல்லாருக்கு

கீதா

said...

வாங்க ஜயக்குமார்,


All Part of aging but aging is really scary though :-(

said...

வாங்க மாதேவி,

வேண்டுதலுக்கு நன்றிப்பா !

said...

வாங்க ஸ்ரீராம்,

மெடிகல் ( இண்டஸ்ட்ரீ) ஏகத்துக்கும் வளர்ந்து போய்க்கிட்டு இருக்கு. ச்சும்மா ( GP) டாக்டர்னு இல்லாமல் உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்புப் படிப்பு ! கைவிரல் களுக்குக்கூட ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொருமாதிரி படிப்பு வந்தாலும் ஆச்சரியமில்லை !

said...

வாங்க விஸ்வநாத்,

எங்கே ? அரைக்கிணறு தாண்டியதுதான். அடைப்பு போயிருச்சு. ஆனால் காது மந்தம். ஹியரிங் எய்ட் வாங்கியாச். இப்போ அதன்கூட மாரடிச்சுக்கிட்டு இருக்கேன். செல்ஃபோனில் கன்ட்ரோல் செஞ்சுக்கும் வகை.

கண்ணுக்குக் கண்ணாடி போடறதைப்போல் இல்லாமல், காதுக்கு மெஷீன் வைக்கறது கொஞ்சம் கான்ஷியஸ்ஸாக இருக்குல்லே !

said...

வாங்க கீதா,

அடியற்ற மரம் போல் விழுந்ததுலே உள்காயம் நிறைய ...... ப்ச்...

நம்மூரில் ஒரே ஒரு வீட்டில்தான் அருகம்புல் என்ற பெருமை வேற நமக்கு ... ஹாஹா...