Monday, August 07, 2023

வெள்ளைக்காரனுக்கு எப்படி சங்கும் சக்கரமும்? ஙே......

எல்லாத்துக்கும் ஆயுசுன்னு ஒன்னு இருக்கு.  இருவது வருஷமா உழைச்சுட்டு, சட்னு மண்டையைப்போடுமுன்னு யார் கண்டா ?   அரிசி வேற பாதி அரைபட்டதுடன் க்ரைண்டரில்  கிடக்கு..... 
ஓடு இண்டியன் ஸ்டோருக்கு......    முதல் கடையில் இப்படி ஒன்னு பார்த்துட்டு உட்னே கையோடு வாங்கிவந்தாச்.   கொஞ்சம்  ஊறவைக்காத அரிசியைப் போட்டு  நல்லா மைய அரைச்சு எடுத்தேன்.  இப்ப புது க்ரைண்டர் ரெடி !   பழசுலே இருந்ததை புதுசுக்கு மாத்தி அரிசி உளுந்தை ஒரு வழியா அரைச்சு எடுத்தாச்சு.  நல்லாத்தான் அரைக்குதுன்னாலும்.... பழைய பட்டர்ஃப்ளை மாதிரி   உருளைகளைச் சுலபமா எடுக்க வரலை.  நம்ம கை வேற ரிப்பேரா.... சொல்லவே வேணாம். 

முதல்லே புதுசுலே அரைச்ச அரிசி மாவு வீணாகலை !  முதல்முறையா  வீட்டு வாசலில்  மாக்கோலம் எல்லாம் போட்டு அமர்க்களப்படுத்தியாச்சு....  ஹாஹா...   பிசுக்கி........

பழசுக்கு ஒரு வரலாறு இருக்கு. அப்போ 'நம்மவர்' மட்டும்  ஊருக்குத் தனியாப்போயிருந்தார். உற்றார் உறவினரையெல்லாம்  ஷாப்பிங் கூட்டிப்போய்  ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்தவர்....  'எனக்காக' இதை வாங்கினாராம்.  கடையில் இருந்து வெளிவரும் நேரம்....  திடீர்னு  திரு கருணாநிதி  மறைவுன்னு செய்தி பரவ, கடையின் ஷட்டர்களையெல்லாம் திடுதிடுன்னு  மூட ஆரம்பிச்சதும், பட்டர்ஃப்ளையைத் தூக்கிக்கிட்டு வண்டி  பார்க் பண்ண இடத்துக்குக் கும்பலா ஓடினாங்களாம்.  ஆனால் அவருக்கு ஆயுசு கெட்டி.   அப்புறம் பதினைஞ்சு வருஷம் இருந்துருக்கார்.  2018 இல் நாம் ஒடிஷா பயணத்தில்  பூரியில் இருந்தப்ப நியூஸ் வந்தது. உண்மையா இருக்காதுன்னுதான் நினைச்சேன்.  ஆனால் உண்மை.

நமக்குப் புதன்கிழமைப் புள்ளையார் னு நினைவிருக்கோ ? இவருக்கு நான் வச்ச பெயர் செல்லப்பிள்ளையார்!  ( செல்லா என்ற நண்பரின்   ஐடியாதான் புள்ளையார் கோவில் கட்டலாம் என்ற  முயற்சியின் ஆரம்பம் ! ) வாழ்க்கையில் முதல்முறையா அருகம்புல் மாலை கட்டி எடுத்துக்கிட்டுப் போனோம். யோகா வகுப்பு முடிஞ்சதும்  அப்படியே கோவிலுக்குப்போய்   புள்ளையாருக்கு மாலை சாத்தியாச்சு.



இப்பதான்  மாலை கட்ட வந்துருச்சேன்னு ஒரு மூணு நாள் கழிச்சு இன்னொரு  புல்மாலை (ரொம்ப நீளமா) கட்டி எடுத்துக்கிட்டு வீட்டாண்டை இருக்கும் அன்பு விநாயகர் கோவிலுக்கும்  போனோம்.  மூர்த்தி உருவம் பெருசு !


அன்றைக்குத் தேய்பிறை சதுர்த்தி என்பதால் விசேஷ பூஜை ரெண்டு கோவில்களிலும்.  அதனால்  இங்கே தரிசனம் முடிச்சு, அங்கேயும் போனோம். நேபாளி பண்டிட்கள் இருவருமே வந்துருந்தாங்க.


நம்ம  வீட்டு  அமரந்த் கீரையை ( செவப்பு) பறிச்சப்போ , இதை வச்சு அமரந்த்பனீர்  செய்யலாமேன்னு தோணுச்சு. டிடிகே வேறெதுக்கு இருக்காம் ?  பாலக் பனீர் போலவே அதே செய்முறைதான்.  கடைசியில் க்ரீமுக்குப் பதிலாத் தேங்காய்ப்பால்.   சுவை நல்லாவே இருந்தாலும்,  பச்சை பார்த்த கண்களுக்கு செவப்பு அவ்வளவா நல்லா இல்லையாம் !  பின்னூட்டப்ரேமியின் வாயைப்பிடுங்குனதில் கிடைச்ச பின்னூட்டம் :-) போகட்டும்... எதையும் ஒருமுறை செஞ்சுபார்த்துக்கணுமுன்னு 'ஆசான்' சொல்லலையோ ! 


அவர் இருந்த காலத்தில்  நம்ம துளசிதளத்தைப் படிச்சுட்டு, அதற்கான பின்னூட்டத்தை நம்ம இரா.மு விடம்  மெயிலில் சொன்னாராம்.  அது ஏன் இரா.முவிடம் ?  அவர்தானே  நம்ம தளத்து சமாச்சாரத்தை ஆசானுக்கு அனுப்பியவர்.  நம்ம   நியூஸி புத்தகத்தின்  மதிப்புரையில்   இரா.மு இதை  குறிப்பிட்டுள்ளார் எனக்கூறிக்கொண்டு....... 

  http://www.eramurukan.in/?p=234

மகளுக்குக் குழந்தை பிறக்கப்போகுது என்றதும், மகள் பிறந்த சமயம், முதல் ட்ரெஸ்ஸா நானே தைச்சதைப் போடணுமுன்னு தோணுச்சு. ஆகி வந்தது இல்லையோ.... அம்மா சட்டையை மகன் போடப்டாதா என்ன?  காப்பாத்தி வச்சதை எடுத்து  மென்மையான சோப்பால் சுத்தம் செஞ்சு  பொட்டிபோட்டு தயாராக வச்சேன். குட்டிச்சட்டை !
Aotearoa New Zealand's ethnic communities are an incredibly diverse group, representing over 200 ethnicities and speaking over 170 languages ...    நம்மூரில் ஏகப்பட்ட வெளிநாட்டு மக்கள் இருக்காங்க.  அவரவர்  கலை கலாச்சாரத்தை விடமுடியுமோ ?  மல்ட்டிக் கல்ச்சுரல் சொஸைட்டி நம்மது.  மல்ட்டிக்கல்ச்சுரல் கவுன்சில் தலைவர் நம்ம நண்பர்தான்.  நாங்க இங்கே வர்றதுக்குக் கொஞ்சம் முன்னால்  வந்தவர்.  வட இந்தியர். நம்ம நீண்டகால நண்பர் இவர். 

நம்மூர் சிட்டிக்கவுன்ஸில் 2001 ஆம்  வருஷத்திலிருந்து , வருஷத்துக்கொரு முறை கல்ச்சர்கலோர்  Culture Galore  என்ற மல்ட்டிக்கல்ச்சுரல்  விழா ஒன்னு நடத்துது.  பகல் 12 முதல் 4 மணிவரை.   அன்றைக்கு திருவிழாதான். பலநாட்டு சமையல்கள், பலநாட்டு நடனங்கள்னு தூள் கிளப்புவாங்க.  நிதி சேகரிக்க நல்லநாள்!  நாங்களும்  செல்லப் புள்ளையார் கோவில் நிதிக்காக தோசைக்கடை போட்டோம். எல்லாம் வாலண்டியர்ஸ்தான்.  நாமும்  கொஞ்ச நேரம்  போய் சிரமதானம்  செஞ்சோம்.  அப்பப்ப  நடனமேடையில் ஒரு கண் வச்சுக்குவேன்.  தோழியின் பரதநாட்டியப்பள்ளி மாணவியர் நடனம் கட்டாயம் இருக்கும். 






கவுன்ஸில் கணக்குப்படி 7500 பேர் இந்த விழாவுக்கு வந்து போனாங்கன்னு சொல்றாங்க !  யம்மாடியோ .......

இத்தனை கலாட்டாக்களுக்கு  இடையிலும்  ஞாயிறு வந்தால்  நம்மூர் ரோட்டரி க்ளப் நடத்தும் சண்டே மார்கெட் போறதுக்கு ரெடியாகிருவேன்.  குளிரும் மழையும் இருக்கும் நாட்களைத் தவிர,   மற்ற ஞாயிறுகளில் போனால் நமக்கு ஒரு நடைப்பயிற்சி ஆச்சு இல்லே !  ஒன்னும் நல்லதாக் கண்ணில் படலைன்னாலும் பிரச்சனை இல்லை.  அஞ்சாயிரம்  ஸ்டெப்ஸ் ஆச்சு !



இப்படி ஒரு நாளில்  கண்ணில் பட்டது குட்டிக்கட்டில் ! வாங்கியாச்.  அதுக்கு மெத்தை இல்லை.  அளவெடுத்துப்போய் ஸ்பாஞ்ச் விற்கும் கடையில் வாங்கி வந்தோம்.  சுண்டைக்காய் காப்பணம், சுமைகூலி  முக்காப்பணம் கணக்குதான்.  நம்மவனுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு, பாருங்களேன் !!!   

அதே மார்கெட்டில் சங்குசக்கர Bபேக்கிங் ட்ரே ஆப்ட்டது.  ஸ்பெஷாலிட்டிக் கடை ஒன்னு  ஏதோ காரணத்தால்  மூடிட்டாங்க. யாவாரம்  ஆகாத பொருட்களை  யாரோ (மொத்த ஸ்டாக் ) மலிவாக வாங்கி மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்துட்டாங்க.  இப்படித்தான் அப்பப்போ  அருமையான பொருட்கள் எல்லாம் அடிவிலைக்குக் கிடைக்கும். 



இந்த ட்ரே செட்டில் ரெண்டு  தட்டுகள்.  வெள்ளைக்காரக் கடையில் சங்கு சக்ரம் எப்படின்னு புரியலை? பெருமாள் எனக்காக அனுப்பியிருக்கார் !  ஒரு தட்டில் மட்டும்  துளைகள் இருக்கு. எதுக்காம் ? ஙே.....  ஸ்டீம் போறதுக்கோ ? ரெண்டு தட்டுகளிலும்  நிரப்பி Bபேக் பண்ணால்  3D Shape வரும், இல்லே ? 

TTK  வில் மேங்கோ ஜெல்லி செஞ்சு ட்ரேயில் ஊத்தினேன். அகர் அகர் சமாச்சாரம்தான்.  நான் பொதுவா எல்லா இனிப்புகளிலும்  ஏலக்காய்த்தூள்  சேர்த்துருவேன். பழக்கப்பட்ட மணம் !      

9 comments:

said...

சங்கு சக்கர புட்டிங்க் சூப்பர்.கேக் கூட செய்யலாம்..இது ஒரு வேளை இப்படி டிசைன் செய்யும் மோல்ட்ன்னு தோணுது. தூண்கள், அது இதுன்னு செய்யற மோல்ட்...இப்படிச் செஞ்சு பேக் பண்ணுவாங்களே களிமண்ணு, செங்கல் சூளைன்னு ...அப்படி இருக்குமோ?

கீதா

said...

அருமை நன்றி

said...

தன் பக்தைக்காக பெருமாள் சங்கு,சக்கர மோல்ட் அனுப்பியிருக்கிறாரோ?

said...

விவரங்கள் சுவாரஸ்யம்.  குறிப்பாக கிரைண்டர், கலைஞர் புராணம்.  படங்கள் அழகு.  ரஜ்ஜுவின் போஸ் அழகு.

said...

வாங்க கீதா,

மகள், பள்ளிக்கூடப் படிப்பு முடிச்சு தோழிகளோடு தனிக்குடித்தனம் போனபிறகு கேக் செய்யறதை நிறுத்துயாச்சு. சாப்பிட ஆள் வேணாமோ ?
இது கேக் மோல்ட் தான்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க பானு,

ரொம்ப நாளா உங்களை இந்தப்பக்கம் காணோமே ! நலம்தானே ?

பெருமாள் இப்படி அனுப்பிப் பழி வாங்கறாரோ :-) இன்னும் குண்டாகக் கடவது !

said...

வாங்க ஸ்ரீராம்,

பதிவு போட்ட அன்று யதேச்சையா அவர் நினைவுநாளாகப்போச்சு !!!!

said...

அறுகம் புல் மாலை, சங்கு சக்கர மாங்கோ ஜெலி அனைத்தும் சூப்பர்.