Friday, August 23, 2019

எங்கெங்கு காணினும் காளியடா......(பயணத்தொடர், பகுதி 134)

காளிகாட் போய்ச் சேரும்போது மணி நாலு அம்பது.  ராடிஸ்ஸனில் இருந்து மூணு கிமீக்கும் குறைவுதான். ஆனால் மழை சல்யம். பயங்கர ட்ராஃபிக் வேற.  இப்படி இந்த வழியாப்போனாக் கோவில்னு சொன்னார் ட்ரைவர். கோபிந்த்ன்னு பெயர்.
பூஜைப்பொருட்கள், சங்கு வளையல், பித்தளைச்சாமான்கள் பூஜா ஐட்டம்ஸ், பூச்சரங்கள்னு  கடைகள் ஏராளம்.

கைரிக்‌ஷாக்கள் சவாரிக்குக் காத்து நிக்குதுகள்.  நம்ம பக்கங்களில் இதை ஒழிச்சாச்சு.  வேடிக்கை பார்த்துக்கிட்டே போறோம்.  நமக்கிடதுபக்கம் ஒரு பெரிய கட்டடம்.  உச்சியில்  மாடக்கோபுரம் போல ஒன்னு.  அங்கேதான் காளி இருக்காள்.

எந்தவழியில் போறதுன்னு திகைச்சு நின்னப்ப... ஒரு  ஆள் இந்தப்பக்கம் உள்ளே போகணுமுன்னு கை காட்டினார்.
கலகலன்னு கடைகளா இருக்கு ஒரு பக்கம். நாங்க உள்ளே போனதும் கடைசியில் வலப்பக்கம் திரும்பினால் ஒரு  முற்றம்.  அதுக்கு அந்தாண்டை இன்னும் கடைகள்.
நமக்குத் தெரிஞ்ச பெங்காலிச் சொற்கள் ரெண்டே ரெண்டுதான். ஆஷூம், பஷூம்.  நல்லவேளையா  கடைக்காரர்கள் ஹிந்தி பேசறாங்க. கட்டடத்தின் பக்கவாட்டில் நிக்கறோம்.
எதிரில் இருந்த கடையில்  செருப்பை விடும் இடம் இருக்கான்னு விசாரிச்சால், இங்கேயே விட்டுட்டுப் போங்க. சாமிக்கு ப்ரஸாதம் வாங்கிக்கலையான்னு   அங்கிருந்த இனிப்புகளைக் காட்டிக் கேட்டார்.  நூறு ரூபாய் தானாம்.  வேணாமுன்னு தோணுச்சு.  கோவிலுக்குள்ளே போக வழி எதுன்னா... இடதுபக்கம்  கட்டடப் பக்கவாட்டுலே  கை காமிச்சார்.  அஞ்சாறு படிகள் பக்கவாட்டுலே சுவத்தையொட்டியே கட்டி  வச்சுருக்காங்க.


அதுலே ஏறிப்போய்,  வாசலைத் தாண்டினால் நமக்கிடதுபக்கம் சின்னதா ஒரு கூட்டம் ஏழெட்டுப்பேர். என்னன்னு எட்டிப் பார்த்தால்  காளி சந்நிதி இது ! திக் னு ஆகிப்போச்சு எனக்கு. பயங்கரக் கூட்டம் இருக்கும். பெரிய வரிசையில் நின்னு போகணும், கழுத்தில் நகை போட்டுக்கிட்டுப் போகவேணாம் என்றெல்லாம்  மால்குடி ஓனர் புருஷோத்தம் Pபாய் (Pai)  பகல் சாப்பாட்டுச் சமயம் சொல்லி இருந்தாரே....  (அப்பதான் தெரிஞ்சது ' காளிக்குத் தாலி ஆகாது' ன்னு....    ஹிஹி....   )  

சந்நிதி வாசலுக்கு அந்தாண்டை கீழே ஒரு அஞ்சாறடி பள்ளத்தில் பெரிய சைஸ் காளி.  பெரிய கல்தான். அதுலே கண், வாய், நாக்கு எல்லாம்  செஞ்சு பொருத்தி இருக்காங்க. தங்க நாக்கு வாயில் இருந்து நீளமாத் தொங்குது!
சுட்டபடம்:  கூகுளாண்டவருக்கு நன்றி.

அங்கிருந்த பட்டர்/ அர்ச்சகர் 'கீழே இறங்கிவந்து சாமியைக் கும்பிடு, ஐநூறு ரூபாய்தான்'னு சொன்னார்.  அவர் அப்படிச் சொல்லாமல் இருந்தால் கீழே இறங்கிப்போயிருப்பேனோ என்னவோ....  'ஸிர்ஃப் பாஞ்ச் ஹஸார், நீச்சே ஆவ் ஆவ்' ன்னதும்  இப்பவே நல்லாத் தெரியும் காளியை என்னத்துக்குக் கீழே இறங்கிப்போய்ப் பார்க்கணுமுன்னு தோணிப் போச்சு.

சக்திபீடக் கோவில் !  சதியின் உயிரற்ற உடலைத் தூக்கிக்கிட்டு, சிவன், ருத்ர தாண்டவம்  ஆடும்போது, பார்க்கச் சகிக்காமல் விஷ்ணு தன் சக்ராயுதத்தால் உடலை வெட்டியதும்  தேவியின் வலது பாத விரல்கள் விழுந்த இடமாம்!    புராணக் கதை அநேகமா எல்லோருக்கும் தெரிஞ்சுதான் இருக்கும். தெரியாதவங்க.... இங்கே நம்ம துளசிதளத்தில் எட்டிப் பார்த்துக்குங்க....

குடும்பச்சண்டையில் மனைவி தீக்குளிப்பு


மாமனார் வீட்டுக்கு வந்து.......  ஆடித் தீர்த்துட்டார்

ரொம்ப வருஷங்களுக்கு முன்னே  பாகீரதி ஆற்றில் (கோவிலையொட்டி ஓடிய ஆறு ) ஏதோ மின்னலாய் வெளிச்சம் தெரிஞ்சதும் தண்ணீருக்குள் தேடி எடுத்தவர் கையில்,  கால்விரல்கள் போல்  கல் கிடைச்சதாம். அதை வச்சு அவர் பூஜை செஞ்சுக்கிட்டு இருந்தார்.  காலப்போக்கில் இந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்டி இருக்காங்க. இப்போ இருக்கும் பெரிய கற்சிலை(!) ஸ்வயம்பு ன்னு சொல்றாங்க.
அதெல்லாம் ப்ராச்சீன்தான். குப்தர்கள் ஆட்சி காலத்துலே அவுங்க நாணயத்துலே காளி மாதா  சின்னம் இருந்ததாகவும் சொல்றாங்க. பதினைஞ்சாம் நூற்றாண்டு இலக்கியத்தில் கூட  இந்தக் காளியைக் குறிப்பிட்டு இருக்காங்களாம்.

இப்ப நாம் பார்க்கும் இந்தக் கோவில் இருநூறு வருஷங்களுக்கு முற்பட்டதுன்னு சரித்திரக்குறிப்பொன்னு சொல்லுது. ஜெஸ்ஸூர் அரசர் ப்ரதாப் ஆதித்யாவின்  உறவினர் ராஜா பஸந்த ராய் அவர்கள்  கட்டுனதாகச் சொல்றாங்க.  (இப்ப அந்த  ஜெஸ்ஸூர் பங்ளாதேஷில் இருக்கு! )

ஒரு காலத்தில் ஹூப்ளி நதியே கோவிலையொட்டித்தான் ஓடிக்கிட்டு இருந்ததாம். எப்போ தடம் மாறுச்சுன்னு தெரியலை. இப்பவும் சின்னதா ஒரு வாய்க்கால் போல் ஒன்னு இருக்கு கோவிலாண்டை. இதுக்கு ஆதிகங்கான்னு பெயர்.

காளி தரிசனம் முடிஞ்சதும்  மேற்கொண்டு உள்ளே போகலாமுன்னு பார்த்தால்  முன்பக்கம் வாசல் போல இருக்கு அங்கே கொஞ்சம் கூட்டமா மக்கள் நிக்கறாங்க. அதுதான் சாமி தரிசனம் ஆச்சே... அங்கே  எதுக்கு 'நம்மவர்' வந்த வழியிலேயே கீழே இறங்குனதும் நானும் பின்தொடர்ந்து போயிட்டேன்.

படி இறங்கினால் ஒரு கல்யாணக்கூட்டம். பொண்ணும் மாப்பிள்ளையுமா நிக்கறாங்க. அவுங்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லிட்டு நம்மவர் பாக்கெட்டில் அதுவரை வச்சுருந்த செல்ஃபோனால் க்ளிக்கினேன்.
கல்யாண ஜோடி அபிஜித் ராய் & நந்தினி தாஸ் ,  எல்லா  வளமும் பெற்று நல்லா இருக்கட்டும் ! 
ஆமாம்....   அதுவரை கெமெரா, செல்ஃபோன் செக்கிங் ஒன்னும் இல்லை. எலக்ட்ரானிக் கேட் கூட இல்லையே.... ஒரு வேளை அந்த முன்பக்க வாசலில் இதெல்லாம் இருந்துருக்குமோ என்னவோ......  பாருங்க...  இந்த இடும்பி தனிவழியில் போய் நிமிஷமாக் காளியைப் பார்த்துட்டாள்....

நாஞ்சொல்லலை.... காளிக்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்குன்னு :-) அதான் அவளுக்கு என்னைக் காக்க வைக்கும் எண்ணம் இல்லை !!!

அடுத்தாப்லே ஒரு ராதாக்ருஷ்ணா சந்நிதி . சட்னு பார்த்தால் வீடு போல இருக்கே!
காலணிகளை விட்ட கடையில் போய்  கடைக்காரருக்கு நன்றி சொல்லிக் காலில் போட்டுக்கிட்டு, அவருக்கு நூறு ரூபாய் கொடுத்ததும், உடனே அந்த இனிப்பைப் பொட்டலம் கட்ட ஆரம்பிச்சார்.  அதெல்லாம் வேணாமுன்னு  சொன்னதும் முகம் கொஞ்சம் வாடிப்போச்சு. நீங்களே சாமிக்குப் பிரஸாதமா அனுப்பிருங்கோன்னு சொல்லிட்டு  எதிரே போகும் வழியில் கடைகளை வேடிக்கை பார்த்தபடி வெளியே போறோம்.

ச்சும்மாச் சொல்லக்கூடாது....  அழகான காளிமுகங்கள் !  முறத்தில் வச்சுருக்கறது கொள்ளை அழகு. ஆனால் ஒன்னும் வாங்கிக்கலை. பூக்கடைகளிலும் 'காளி ' என்பதால் செம்பருத்திப்பூச்சரங்கள்தான் அதிகம்.

கோவில் ஆஃபீஸும்  கோவில் நேரத்தகவல் பலகையும் இருக்கு.

பக்கத்துலே ஒரு சந்நிதியில் காளி !   எங்கெங்கு காணினும் காளியடா....
அப்படியே அடுத்த வாசலுக்கு வந்தால்  அங்கேயும் கடைகளோ கடைகள்தான்.  ஒரு கடைக்காரர், செல்லங்களுக்கு பிஸ்கெட் போட்டுக்கிட்டு இருந்தார். நல்லா இருக்கட்டும்!  காளியின் அருள் கிடைக்கட்டும்!

அக்கம்பக்கம் என்ன இருக்குன்னு கண்ணை ஓட்டினா.....  மதர் தெரஸா ஹோம்  அங்கெதான் இருக்கு, கோவில்வளாகத்தையொட்டியே.....  ஓ....

ஒரு வண்டி நிறைய பக்தர்கள் காளியை தரிசனம் செய்ய  மத்யப்ரதேஷில் இருந்து வந்துருக்காங்க.  ஒரு வேன் தான். அதையே டபுள் டெக்கரா மாத்தி வச்சுருக்காங்க. இப்படியே உக்கார்ந்து எவ்ளோ நேரம் போவாங்களாம்?  உண்மையான பக்தி இதுதான்.  உடல்சிரமம் இருந்தாலும்  தேடி வர்றாங்க பாருங்க....   நான் ஒருத்தி.... நோகாமல் நோம்பு கும்பிட்டுக்கிட்டு இருக்கேன்.....

பக்தி என்ற விஷயம், கடவுள் நம்பிக்கை என்றதெல்லாம் ரொம்பப் பெருசு !!


கொஞ்சநேரம் அவுங்களோடு பேசிக்கிட்டு இருந்ததில்  அவுங்களுக்கு ரொம்பவே சந்தோஷம். தரிசனம் முடிச்சுட்டாங்களாம். இதோ கிளம்பறாங்க. அங்கங்கே நிறுத்தி, சமைச்சுச் சாப்பிட்டுக் கோவில்களில் தரிசனம் பண்ணிக்கிட்டு,   ஊர் போய்ச் சேர பத்துப்பதினைஞ்சுநாள் ஆகிருமாம்!
வந்ததுக்கு எதாவது நினைவுக்கு வாங்கிக்கலாமுன்னா.....  இந்த கனம் ஒரு பிரச்சனையா இருக்கு.  காளிமுகம் ஆசை. ஆனால் வாங்கலை. சின்னதா ஒரு குங்குமச்சிமிழ் வாங்கினேன்.  காளி முகம் வாங்கலையேன்னு  குறைப்பட்டுக்கிட்டே இருந்தப்ப, அதான் நான் தினமும் பார்க்கிறேனேன்னார் 'நம்மவர்'

இன்னும் 'உக்ரம்' காமிக்கலை.... தப்பிச்சீங்க ............  

(  ராஜ்  பீரியடில் பிரிட்டனுக்குப்போன காளி  நியூஸிக்கு எப்படியோ வந்து இப்ப நம்மாண்டை இருக்காள் என்பது உண்மை !  பதினெட்டாம் நூற்றாண்டு சமாச்சாரம்!  )
இந்த காளிகாட் பகுதியை வச்சுத்தான் ஊருக்கே காளிகட்டா.... கல்கத்தான்னு பெயர் வந்துருக்குன்னு ஒரு தகவல். அதை இப்போ கொல்கத்தா ஆக்கியாச்.
நாமும் ரொம்ப இருட்டுமுன் ஹொட்டேலுக்குப் போய்ச் சேரணும்.
மீதி கொல்கத்தாவை நாளைக்குச் சுத்தினால் ஆச்சு.
இதே வண்டியை மறுநாளைக்கும் கொண்டு வரச் சொல்லியாச்.



தொடரும்........ :-)



12 comments:

said...

எங்கும் காளி மயம்.

said...

நாங்கள் சென்றபோது நல்ல கூட்டம்....

// ஐநூறு ரூபாய்தான்'னு சொன்னார். அவர் அப்படிச் சொல்லாமல் இருந்தால் கீழே இறங்கிப்போயிருப்பேனோ என்னவோ.... 'ஸிர்ஃப் பாஞ்ச் ஹஸார், நீச்சே ஆவ் ஆவ்' //

ஐநூறு - ஐயாயிரம்! ஏன் குழப்பம் - தமிழ்-ஹிந்தியில்! :)

பயணம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

உண்மை உண்மை :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.....


அடராமா.... பத்தாம் வாய்ப்பாடு சுலபமா இருக்கே!

பாருங்க.....

கவனிப்புக்கு நன்றி. பாஞ்ச் சௌ இப்படி ஆகிருச்சு. விட்டு வைக்கிறேன். அப்பதான் உங்க பின்னூட்டம் என்ன சொல்லுதுன்னு நம்ம மக்களுக்குப் புரியும் :-)

said...

நூறு ஆயிரம் மேட்டரைச் சொல்ல வந்தேன். ஏற்கனவே சொல்லிட்டாங்க.

பேரு மாத்துனதுதான் மாத்துனாங்க. ஒரேடியா காளிகட்டா அப்படின்னு மாத்தி இருக்கக் கூடாதோ..

said...

காளி முகம் உள்ள கை வினை பொருட்கள் எல்லாம் பளிச் பளிச் ...


போன வாரம் LUCKNOW போனோம் ...அங்கும் இப்படி ஒரே ரிக்சா மயம் ..பசங்க ரொம்ப ஆச்சிரியமா பார்த்துட்டே வந்தாங்க...

said...

வாங்க கொத்ஸ்,

எப்படி இருக்கீங்க? வகுப்புத்தலைவரைப் பார்த்தே ரொம்பநாள் ஆச்சே.....

காளிகட்டா ரொம்பப் பொருத்தம்தான். ஆனா கொல்கட்டா ஆகிட்டாங்களே....

said...

வாங்க அனுபிரேம்,

லக்நோ இமாம் பரா போனீங்களா ? ஹாதி தீர்காவை விட்டுடக்கூடாது :-)

said...

லக்நோ இமாம் பரா போனீங்களா ? ஹாதி தீர்காவை விட்டுடக்கூடாது :-)...


நாங்க போனது பையனின் archery competition க்கு மா அங்கு இருந்த la martene ங்கற ரொம்ப பெரிய கல்லூரியில் நடைபெற்றது ...நாலு நாளும் அங்க முடிஞ்சு கடைசி அரை நாளில் இமாம் பரா வும் , அம்பேத்கர் பார்க் மட்டும் பார்த்துட்டு வந்தாச்சு ...

said...

காளி தரிசனம். ரிக்சா வரிசை காண நன்றாக இருக்கிறது.

said...

வாங்க மாதேவி,

வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றிப்பா !

said...

அனுப்ரேம்,

நாங்களும் லக்நோ பார்க்கணுமுன்னு போகலை. நைமிசாரண்யம் போகணுமுன்னா இதுதான் வழி என்பதால் போனோம். அப்படியும் இமாம்பராவைக் கோட்டை விட்டுருப்போம். அண்ணன்தான் லக்நோவில் இருக்கும்போது கட்டாயம் போய்ப் பார்த்துட்டு வான்னு சொன்னார்.