Wednesday, August 07, 2019

மாங்கா சாப்பாடும் முருகன் கோவிலும் ( பயணத்தொடர், பகுதி 127)

இப்பெல்லாம் மாங்கா, கொத்தமல்லி, புளி,  பட்டை, மசாலான்னெல்லாம் பேர் வச்சுடறாங்க இண்டியன்  ரெஸ்ட்டாரண்டுகளுக்கு!  சாப்பிட  எங்கே போகலாமுன்னு வலைவீசிக்கிட்டு இருந்த 'நம்மவர்' கண்ணில் ஆப்ட்டது  மாங்கா மாங்கா. சரி அங்கேயே போகலாமுன்னு கிளம்பிட்டோம்.
இங்கே இந்த லேக்சைட் ஹொட்டேலில் கூட சாப்பிட்டு இருக்கலாம்தான். அதென்னவோ வேணாமுன்னு தோணுச்சு. Mango Mango போய்ச் சேர்ந்தோம்.  சாயந்திரம்  டீ குடிச்சோம் பாருங்க, அந்தப்பேட்டைதான் இது இருக்கறதும்.
ருமால் ரொட்டி, ரைஸ், மிக்ஸட் வெஜ் கறி,   ஷாஹி பனீர் சொன்னோம்.  நம்ம மஞ்சுவுக்கு இண்டியன் ரெஸ்ட்டாரண்ட் சாப்பாடு ரொம்பவே பிடிச்சுப்போச்சாம்!

இன்றைக்கு ரொம்ப சுத்தியாச்சுல்லே.... பொழுதோட படுக்கலாம். நாளைக்கு இங்கிருந்து கிளம்பறோம். ஊரைவிட்டுப்போகுமுன் இந்த ஊருக்குள்  நேத்து  வரும்போது கண்ணில் பட்ட ஹிந்துக்கோவிலுக்குப் போயிட்டுப் போகணும்.
நம்ம ஹொட்டேல் வாசலில் நிறைய சைக்கிள்கள்.  ஹொட்டேலில் தங்குபவர்கள் எடுத்துக்கிட்டுப்போய் ஊர் சுத்தி வரலாம்.  எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதுப்பா....  ப்ச்.....  விழுந்துருவேனோன்னு பயம்தான். நாலு சக்கர சைக்கிள் இருந்தால் ஓட்டலாம்  :-)

 காலை ஏழரைக்கெல்லாம் ரெடியாகி ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போயாச்சு. பஃபேதான். மண்சட்டிகளில் சமைச்சு வச்சுருக்காங்க. ஹாஹா....   வேற பாத்திரங்களில் சமைச்சுட்டு இப்படி டிஸ்ப்ளேன்னு நினைக்கிறேன்.
 தேங்காய்ப்பாலில் சமைச்ச  சோறு Kiribath என்று பெயராம். கேக் போல துண்டம் போட்டு வச்சுருந்தாங்க.  முதல்முறையா இங்கே சாப்பிட்டுப் பார்த்தேன். அருமை!  எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு.

நியூஸி வந்தபின் ஒருநாள் இந்த  இந்த  கிரிபாத் செஞ்சு பார்த்தேன்.  மகளுக்கும் ரொம்பவே பிடிச்சுப்போச்சு !   இனி அடிக்கடி செய்யும்  உணவுவகைகளில் இதையும் சேர்க்க வேண்டியதுதான் :-) கீழே படம் நம்மூட்டு கிரிபாத் !
என்ன கோவிலுன்னு தெரியாது. பெருசா ராஜகோபுரம் எல்லாம் இல்லை.  தூரக்கே தெரிஞ்ச விமானம் மட்டுமே... இதை ஹிந்துக்கோவில்னு காமிச்சது.
ஆனாலும் கண்ணில்பட்ட ஹிந்துக்கோவிலை விடக்கூடாதுன்னுதான் போனேன். நம்ம ஹொட்டேலில் இருந்து வெறும் ரெண்டரை கிமீ தூரம்தான். வளாக வாசலில் புள்ளையாரும் முருகனும் !  வளாகத்துக்குள் நுழைஞ்சதும் மரத்தடியில்  ஆதிசேஷன் !  ஓ....   பெருமாள் இருக்காரோ?



கொஞ்சம் தூரத்தில்  முகப்பு மண்டபத்தின் உச்சியில் முருகன் !  ஓ.... கார்த்திக்ஸ்வாமியோன்னால் கதிரேசனாம் !
வளாகத்தில் மூணு செல்லங்கள் நல்ல உறக்கத்தில்.....   அதில் ஒன்னு மட்டும் கண்ணைத் திறந்து பார்த்துட்டுத் திரும்பத் தூங்கிருச்சு.

1957 இல் அப்போ இருந்த பாரதப்ரதமர் ஜவஹர்லால் நேருவின் இலங்கை விஜயத்தில், அப்போ இலங்கையின் பிரதமரா இருந்த பண்டாரநாயிகெ  அவர்கள் கேட்டுக்கொண்டபடி  அடிக்கல் நாட்டிய கோவில் இது!
அரசு அப்போ இருபது ஏக்கர் நிலத்தைக் கோவிலுக்குக் கொடுத்துருக்கு!

நிறைய இடம் இருக்கேன்னு  முதலில் முருகனுக்கு ஒரு சந்நிதியை முன்மண்டபத்தோடு (சட்னு பார்க்கக் கேரளக்கோவில்கள் போல இருக்கு!) கட்டிட்டு, வளாகத்தில் அங்கங்கே  புள்ளையார், முருகன், கிருஷ்ணன், மஹாலக்ஷ்மி, சிவன், அம்பாள்,  தத்தாத்ரயா, நவக்ரஹங்கள்ன்னு சின்னச்சின்ன விமானங்களோடு தனித்தனிச் சந்நிதிகளாக் கட்டி விட்டுருக்காங்க.






நாம் போன சமயம் காலை என்றபடியால் எல்லாக் கடவுளர்களும் குளிச்சு முடிச்சுருந்தாங்க.  இன்னும் நைவேத்யம் சமர்ப்பியாமி ஆகலை போல....  திரை விழுந்தும் விழாமலும்  இருந்தது. சாப்பாடு வருதான்னு எட்டிப்பார்க்கிறாங்களோ ?    இருக்கும் ஒரு குருக்கள் என்ன செய்வார்? மூலவரைப் பார்ப்பாரா... இல்லை மற்றவர்களைக் கவனிப்பாரா?

நாம் கோவிலுக்குள்  நுழையும்போதே மூலவரை தரிசிக்க ஒரு குடும்பம் உள்ளே போனாங்க....
நாங்களும் முதலில் கோவிலை வலம் வந்துட்டு, அப்புறமா  மூலவர் சந்நிதிக்குப் போய் தரிசனம் செஞ்சுக்கிட்டோம்.  கோவிலை வலம் வரும்போது, செல்லம் ஒன்னு  தூங்குதேன்னு பார்த்தால், சட்னு எழுந்து எங்களுக்குக் கோவிலைச் சுத்திக்காமிக்கக் கூடவே வந்தது. கைடு (டாக்) வேலை :-)

இந்தப் பக்கம் அவ்வளவா மழை இல்லையா என்ன?  தரையெல்லாம் வறண்டு கிடக்கு. செம்மண் பூமியில் கொஞ்சம் பாடுபட்டாச் செழிப்பாச் செடிகள் வளராதோ?  ஒத்தை நந்தியார்வட்டை மரங்கள், வாழை மரம் , ஒரு தங்கரளி தவிர வேறொன்னும் சரியான வளர்ச்சியில் இல்லை....

இந்த இருபது ஏக்கர் நிலத்தில் ஒரு ஆறு ஏக்கரை ஆட்டையைப்போடக் கிளம்பி இருக்கு ஒரு கூட்டம்....  ஊர்மக்கள் எல்லோரும் கூடி கோவிலுக்கான நிலத்தைக் கொள்ளையடிக்க அனுமதிக்கமாட்டோமுன்னு சொல்லி விசேஷ பூஜை செஞ்சாங்களாம்.


எல்லா ஊர்களிலும் கோவில் நிலத்தைக் கொள்ளையடிக்கன்னே  ஒரு கூட்டம் இருக்கே....  ப்ச்.....
மக்கள் எல்லோரும் சேர்ந்து இதே ஒற்றுமையோடு பெருசாவே முருகனுக்குக் கோவில் கட்டுவாங்கன்னு நினைக்கிறேன்.எல்லாம் 'அவன்' செயல் இல்லையோ....

 வாங்க.... இன்னுமொரு பழையகாலக்கோவில் இருக்காம். அதையும்  கையோடு பார்த்துட்டு வந்துடலாம்.... சரித்திரத்தை விட மனசில்லை..... கேட்டோ !

தொடரும்......   :-)


8 comments:

said...

//Kiribath // பால் சாதம். I prefer for dinner, instead of மோர் சாதம்

said...

சிக்கீரம் பெரிய கோவில்கள் இந்த இடத்தில் அமைய அவன் வழிவிடட்டும் ....

அந்த கிரிபாத் செய்முறை ய ...ஒரு பதிவு போடலாமே மா

said...

இது முச்சந்தியிலுள்ள முருகன் கோவிலா? உள்ளே சென்றதில்லை. வெளியிலிருந்து பார்ததுண்டு ன.இப்பாதையால் அடிக்கடி பயணிப்பதுண்டு.

கிரிபத் (பால் பொங்கல்)நன்கு சுவையானது. கட்டசம்பல் (தனிமிளகாய் உப்பு,வெங்காயத்துடன்அரைத்ததூ)மிகவும் காரமாக இருக்கும்.
மாங்கோ,சிறீதேவி இரண்டுமே அடிக்கடி தரிப்பிடங்கள்.

said...

சின்னக் கோவிலாக இருந்தாலும் அழகாக இருக்கிறது.

கோவில் சொத்தைக் கொள்ளை அடிக்கும் கூட்டம் - எல்லா ஊரிலும் இப்படி... :(((

தொடர்கிறேன்.

said...

வாங்க விஸ்வநாத்,

நானே பால்சோறு ப்ரேமிதான். தொட்டுக்க ஒரு வாழைப்பழம் போதும். கோபாலுக்குப் பிடிக்காது. ஆள் ஊரில் இல்லைன்னா எனக்கு டின்னர் இதுதான் :-)

said...

வாங்க அனுப்ரேம்.


எல்லாத்துக்கும் 'அவன்' ஒரு திட்டம் வச்சுருப்பான்தானே!

கிரிபாத்.... ஒன்னும் பிரமாதமில்லையாக்கும். பச்சரிசியை அளவான தண்ணீரோடு ( 1 : 2) சோறு பொங்கிக்கணும். தண்ணீர் வடிக்க வேண்டியதில்லை. அடிப்பிடிக்காமல் மீடியம் தீயா எரியவிடுங்க. கடைசியில் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கிக் கூடவே நல்ல கெட்டியான தேங்காய்ப்பால் (அரிசி ஒரு கப் என்றால் தேங்காய்ப்பாலும் ஒரு கப்) சேர்த்து சிறுதீயில் அஞ்சாறு நிமிட் வச்சு அடிப்பிடிக்காமல் பார்த்துக்குங்க. அப்புறம் தட்டில் எடுத்துவச்சு டைமண்ட் ஷேப்பில் வில்லைகள் போட்டுக்கலாம். டைமண்ட்தான் ட்ரெடிஷனல் ஷேப்பாம்.

நான் ஒரு சோம்பேறி என்பதால் ஒரு கப் அரிசிக்கு ஒன்னே முக்கால் கப் தண்ணீர் சேர்த்து ப்ரெஷர் குக்கரில் நாலு விஸில் வச்சு, ப்ரெஷர் அடங்கினதும் திறந்து, இங்கே ரொம்பக் கெட்டியாகக் கிடைக்கும் தேங்காய்ப்பால் ( தாய்லாந்துலே இருந்து வருது) ஒரு கப், கொஞ்சம் உப்பும் சேர்த்து கலக்கி திரும்பக் குக்கரில் எடுத்து வச்சு ஒரு விஸில் வர்றவரை விட்டு வச்சேன். நேரமும் மிச்சம், வேலையும் மிச்சம்:-)

said...

வாங்க மாதேவி.


அடிக்கடிப் பயணப்படும் பாதைன்னா.... அடுத்த முறை உள்ளே போயிட்டுப் போங்கப்பா. சின்னக் கோவிலா இருந்தாலும் நல்லாவே இருக்கு!

கட்டச்சம்பல் எனக்கு வேணாம். காரம் ஆகாது.....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,


சிவன் சொத்து குலநாசம் என்பது சிவன்குடும்பக் கோவிலுக்கும் சேர்த்துதானே?


தொடர்வருகைக்கு நன்றி !