Wednesday, August 21, 2019

மால்குடி.........(பயணத்தொடர், பகுதி 133)

ஹொட்டேலுக்குப் போய்ச் சேர்ந்தப்ப  அங்கே புத்தர் இருந்தார். இப்பத்தானே ஒரு புத்தமத நாட்டை விட்டு வந்தோம் :-)  இப்ப மணி ஒன்னு பத்து.  செக்கின் ஃபார்மாலிட்டி எல்லாம் முடிச்சும் தேவுடு காக்க வச்சுட்டாங்க. செக்கின் டைம் ரெண்டு மணியாம்.  இன்னும் ரூம் ரெடியாகலையாம்.....    பிடுங்கி எடுத்தபின் ஒன்னு நாப்பதுக்கு அறைச்சாவி கிடைச்சது.
இனி பகல் சாப்பாடு எங்கேன்னு பார்க்கணும். இங்கே ஹொட்டேலில் சாப்பிடலாமான்னால்..... ஹில்ஸா ஃபெஸ்டிவல் நடக்குதாம். நமக்கு வேணாம்......  இதையெல்லாம்  நீர்வாழைக்காய்னு வெஜ்ஜா மாத்திட்டாங்க :-)
பக்கத்துலே வேறெதாவது இருக்கான்னு வலையில் தேடினால் மால்குடி ஆப்ட்டது.  இந்தப் பெயரே என்னை இழுத்துருச்சுன்னுதான் சொல்லணும்.  எங்கே இருக்குன்னு தேடினால்  கூகுள் மேப் சொல்லுது 400 மீட்டர் தூரமாம்.   சலோன்னு கிளம்பிட்டோம்.

பொதுவா, கல்கத்தான்னாலே அழுக்கும்புழுக்கும் என்றதுதான் என் எண்ணம். அதெல்லாம் அந்தக் காலம். இப்போ நல்லா இருக்குமுன்னு 'நம்மவர்' அடிச்சுச் சொல்லி இருந்தார். பூனாவில் இருந்த காலத்தில் இவர் ஹெட் ஆஃபீஸு சமாச்சாரத்துக்குக் கல்கத்தா போய் வருவார்.

அந்த நானூறு மீட்டர் நடக்கும்போதுதான் கொல்கத்தான்னு பெயர் மட்டும் மாறி இருக்கே தவிர அழுக்கெல்லாம் அப்படியேதான் இருக்குன்னு  தெரிஞ்சது.

நடைபாதையெல்லாம் கையேந்திபவன்கள்.  ஏகப்பட்ட கூட்டம்..... ஃபேஸ்புக் தோழி ஒருவர் கொல்கத்தா பயணம் பற்றியும், பத்தே ரூபாய்க்கெல்லாம்  கிடைக்கும் தீனிகள் பற்றியும் எழுதி இருந்தாங்க.  அது நினைவுக்கு வந்தது.
ஒருவழியா மால்குடி போய்ச் சேர்ந்தோம். வழியில் ஒரு சிவன் கோவில். சிவன் தேமேன்னு உக்கார்ந்திருந்தார்.  மால்குடியில் கூட்டம் இல்லை. இருக்கும் ஒருத்தர் அப்பதான் சாப்பிட்டு முடிக்கிறார்.
மால்குடியின் சுவரில் ரயில்வே ஸ்டேஷன்!  இன்னும் சிலதும் கூட !  எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு !


மால்குடி டேஸ், ஸ்வாமி அண்ட் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சட்னு மனசுக்குள் வந்து போனது உண்மை. எனக்கு ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா...   எனிட் ப்ளைடனின் (புத்தகங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்! )  ஃபேமஸ் ஃபைவும், ஆர் கே. நாராயணின் ஸ்வாமி அண்ட் ஃப்ரெண்டும்   ஜஸ்ட் ஒரு வருச  இடைவெளியில் வெளியாகி இருப்பதுதான்!  
ரெண்டு ஆசிரியர்களும் ஏறக்குறைய ஒரே காலக்கட்டத்தில் பிறந்துருக்காங்க.  நம்மூர்க்காரர் ஒரு ஒன்பது வயசு இளையவர். அம்புட்டுதான்.  க்ரேட் பீப்பிள் திங்க் அலைக் என்பது இப்படித்தான் போல !!!!   திரும்ப இவுங்களை இன்னொருக்கா வாசிக்கணும்..... 


நம்மவருக்கு  மினி சாப்பாடு, எனக்கு ஒரு ஆனியன் ஊத்தப்பம்.  சாப்பாட்டு நேரம் கடந்து போச்சு. இது போதும். ஆரம்பம் இனிமையா இருக்கட்டுமேன்னு ஒரு கேஸரி.

ஓனர் Purushotham  Pai  நல்லாவே தமிழ் பேசறார்.  அப்பா  ஒரு காலத்தில் ஆரம்பிச்சு வச்ச பிஸினஸ்ஸாம். ஒரு உள்ளூர் பொண்ணு வேலை செய்யறாங்க. 'சாப்பாடு'  என்றே மெனுவில் எழுதி வச்சுருக்காங்க. அதனால்  வங்காளிகளும் தமிழே பேசறாங்கன்னா பாருங்க :-) 

ஏக் மினி சாப்பாடு ஒளர் ஏக் ஆனியன் ஊத்தப்பம்  ப்ளீஸ்....

ஓனரோடு கொஞ்சம்  உள்ளூர் சமாச்சாரம் பேசுனதில்  கோவிலுக்குப் போகும்போது  கழுத்தில் தங்கச்சங்கிலி போடவே கூடாதுன்னுட்டார். பரவாயில்லை.  முன்னேஸ்வரம் புள்ளையார் கோவிலில் வாங்குன க்றிஸ்டல் மாலை இருக்கு :-) கெமெரா அனுமதி இல்லைன்னதும் மனசு ஒடைஞ்சு போச்சு.....  ஹொட்டேலுக்குத் திரும்பிப்போக கூகுள்காரன் சொன்னதைக் காட்டிலும் இன்னொரு குறுக்கு வழி காமிச்சார்.





வழியில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. கடை பார்த்ததும், நம்மவரின் செருப்புக்குப் பாலீஷ் போட்டு வாங்கிக்கிட்டோம். பத்தே ரூ!

அறைக்குப்போனதும்,  வலையில் பார்த்து உள்ளூர் ட்ராவல் வண்டி ஒன்னு புக் பண்ணினார் 'நம்மவர்'. நாலரைக்குன்னு சொல்லியிருக்காராம். சட்னு  கழுத்துச் செயினைக் கழட்டி ஹொட்டேல் அறையில் இருக்கும் ஸேஃப்டி லாக்கரில் வச்சேன்.  கூடவே என்னுடைய கைப் பையும். அதான் ஒன்னும் கொண்டு போகக்கூடாதாமே. கெமெரா இல்லாதது கை ஒடைஞ்சாப்போலதான்.  வேற வழி?

நம்மவர் மட்டும் அவர் செல்ஃபோனை எடுத்துக்கிட்டார்.  அங்கே அனுமதிக்க மாட்டாங்களாம்.  மால்குடிக்காரர் சொன்னார். ஆனாலும் ஒரு அவசர ஆத்திரத்துக்கு வேணுமே.... அங்கே எதாவது லாக்கர் கிடைக்குமான்னு பார்க்கலாம்.....

எனக்கும் காளிக்கும் ஒரு தொடர்பு இருக்கு!  ஆட ஆரம்பிச்சால் தெரியும் :-)  முந்தியெல்லாம் ஆட்டம் அதிகம். இப்போ நானாகவே கொஞ்சம் அடங்கிட்டேன்னு நினைக்கிறேன். ஆனால் 'நம்மவர்' ஒத்துக்க மாட்டார்.

காளிமா.....  இதோ கிளம்பிட்டேன் !

தொடரும்........ :-)


10 comments:

said...

இண்டெரெஸ்டிங். தொடர்கிறேன்.

நீங்க சாமியாரிணிதான். வழியில் பார்க்கும் கொல்கத்தா இனிப்பு வகைகளை படமெடுத்ததோடு சரி போலிருக்கே

said...

கோவிலுக்குள் காமிராவுக்கு அனுமதி இல்லை. :(

கொல்கத்தாவில் - புதிய கொல்கத்தா நிறைய மாற்றம்! ஆனாலும் வங்காளிகள் அங்கேயும் துப்பித் துப்பி பழைய கொல்கத்தா போல ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். பழைய கொல்கத்தாவை மாற்ற அந்த ஆண்டவனே வந்தாலும் முடியாது!

மால்குடி - பார்க்கவே சிறப்பாக இருக்கிறது. மனதுக்குள் “மால்குடி டேஸ்” ட்யூன் ஓடிக் கொண்டிருக்கிறது இப்போது!

தொடர்கிறேன்.

said...

அருமை நன்றி

said...

தியான நிலை புத்தரோடு அருமையான ஆரம்பம்.

said...

மால்குடியின் சுவர் காட்சிகள் எல்லாம் அட்டகாசம் ...

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

அப்படி சாமியாரிணின்னு நினைச்சுக்காதீங்க..... பொதுவா நடைபாதைக் கடைகளில் சாப்பிட எதுவும் வாங்குவதில்லை. அததுக்கு ஒரு இடம் இருக்குமே.....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

மக்கள் மாற்ற விட்டுருவாங்களா? பழைய தில்லியின் சில பகுதிகளும் இப்படித்தான்.... ப்ச்...

மால்குடி டேஸ் டிவி சீரியல் பார்த்ததில்லை. இப்ப யூ ட்யூபில் இருக்குன்னு தெரியுது. ஒருநாள் இதுக்கும் நேரம் ஒதுக்கணும். ஸ்வாமி அண்ட் ஃப்ரெண்ட்ஸ் புத்தகங்களையும் இங்கே நம்ம நியூஸி லைப்ரரியில்தான் எடுத்துப் படித்தேன். கிடங்கில் போட்டுவச்சுருந்தாங்க. கேட்லாகில் பார்த்துட்டுக் கேட்டவுடன், எடுத்து வந்து கொடுத்தாங்க.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

புத்தர் விடமாட்டேங்கறார்!

said...

வாங்க அனுப்ரேம்,

எனக்கும் ரொம்பவே பிடிச்சுப்போச்சுப்பா !