நம்ம ஃப்ளைட் காலையில் 8.25 க்கு. குறைஞ்சபட்சம் 6.15 க்கு அங்கே இருக்கணுமாம். அஞ்சே முக்காலுக்கு மஞ்சுவை வரச் சொல்லி இருந்தோம். நாங்க அஞ்சரைக்கெல்லாம் ரெடி.
செக்கவுட் பண்ணிக்கக் கீழே போயாச்சு. மஞ்சுதான் கொஞ்சம் லேட் பண்ணிட்டார். அப்படியும் ஆறேகாலுக்கு ஏர்ப்போர்ட்டுக்குப் போயாச்சு. ஏர்ப்போர்ட் ஒரு பதிமூணு கிமீதான். அதுவும் காலை நேரம் பாருங்க.... அவ்வளவா ட்ராஃபிக் இல்லையாம். மஞ்சுவுக்குக் கணக்கை செட்டில் பண்ணிட்டுக் கூடவே கொஞ்சம் அன்பளிப்பையும் (பிள்ளைகளுக்கு எதாவது வாங்கித் தர்றதுக்காக) கொடுத்து 'பைபை' சொல்லிட்டு உள்ளே போனோம். மஞ்சு நல்ல மனிதர். இந்த ஒரு வாரமும் நம்மோடு கூடவே இருந்து நாம் சொன்ன இடங்களுக்கெல்லாம் கூட்டிப்போய், நல்லபடியா பத்திரமாக் கொண்டுவந்து சேர்த்துட்டார் ! நல்லா இருக்கட்டும்! இவரை ஏற்பாடு செஞ்சு கொடுத்த நம்ம புதுகைத்தென்றலின் ரங்க்ஸுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி !!!
அந்த நேரத்திலும் நல்ல கூட்டம்தான் அங்கே! செக்கின் பண்ணிட்டு லௌஞ்சுக்குப்போய் ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு. நேத்து லேக்சைட் ஹொட்டேல் அநுராதபுரத்தில் முதல்முறையா சாப்பிட்ட Kiribath பிடிச்சுப்போச்சுன்னு சொன்னேன் பாருங்க. அது இங்கேயும் வச்சுருந்தாங்க. (செய்யறதும் அவ்ளோ கஷ்டமில்லை. வீட்டுலே ஒருநாள் செய்யணும். செஞ்சுட்டேன் ! )
கீழே படம் : நம்ம வீட்டில் கிரிபாத்.
அப்புறமும் ஒரு மணி நேரம் இருக்கேன்னு கொஞ்சம் விண்டோ ஷாப்பிங் செய்யலாமுன்னு போனால்.... எக்கச்சக்கமா யானைகளும் புத்தர்களும் அரச இலை, மரங்களுமா...... நேத்து அந்தப் பொடியன் கடையில் பார்த்த யானை இருந்தது. 'நம்மவரும்' கையில், பையில் இருக்கும் சில்லறைக் காசுகளையெல்லாம் எடுத்துக் கொடுத்தார். இந்த கனத்தை எதுக்குத் தூக்கிட்டுப் போகணும், இல்லே?
எண்ணிப் பார்த்தால் மூணு ரூபாய் குறையுது. சரி போகட்டும் வேணாமுன்னேன். விஸா கார்டு எல்லாம் வெளியே எடுக்கும் ஐடியா இல்லையாக்கும். அதெல்லாம் ஆபத்துக்கு மட்டும்.....
கடைக்காரர் கைப்பிடிக் காசை வாங்கி எண்ணிப் பார்த்துட்டு யானையைத் தூக்கிக் கொடுத்தார். மூணு குறைகிறதேன்னால்.... பரவாயில்லையாம். டிஸ்கவுண்ட் போட்டுட்டாறாம்! யானை கைக்கு வந்துருச்சு ! அதான் கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது என்பது !
எட்டுமணிக்கு உள்ளே போய் உக்கார்ந்தோம். தமிழ் தினசரி இருந்தது. தினகரன். எல்லாம் சரி. தமிழ் எல்லா இடங்களிலும் இருக்கு. ஆனால் பிழைகள் மலிஞ்சு கிடக்கே....
தமிழ், தமிழ் ன்னு சொல்லிக்கிட்டே சரிவரத் தமிழ்த் தெரியாத ஒரு தலைமுறை உருவாகிக்கிட்டு இருக்கோன்னு..... மனசுலே ஒரு சங்கடம் வந்தது உண்மை. இதுலே நம்ம தமிழ்நாட்டுலேயும் ஊடகத்துறையிலும், அரசியல் கட்சிகள் வளர்த்துவரும் 'தமிழேண்டா, தமிலனா இருந்தா.....' தலைமுறையும் இதே கணக்கில்தான் வருது....
அரசாங்க வேலையில் இருப்பவர்கள்தான் சரியாகத் தமிழ் எழுதுவதில்லை. அவர்கள்தான் நாட்டின் எல்லா இடங்களிலும் அரசு வைக்கும் தகவல் பலகைகள், தெருப்பெயர்கள் எல்லாம் எழுதுகிறார்கள் என்று இலங்கை நண்பர் ஒருவர் சொன்னார். அத்தனை அரசு ஊழியர்களில் தமிழர்கள் கொஞ்சமாவது இருக்க மாட்டார்களா என்ன?
மஞ்சுவும் சொன்னார், பள்ளிக்கூடங்களில் தமிழும் சிங்களமும், இங்லிஷும் கட்டாயம். அவர் பிள்ளைகள் தமிழும் படிக்கிறார்கள். கொஞ்சம் பேசவும் ஆரம்பித்துள்ளார்கள் என்று.
நாடும் நல்ல வளமான நாடுதான். பச்சைப்பசேல்னு இருக்கு. உள்நாட்டுப் போரால்தான் இவ்வளவு கஷ்டமும். கடைசியில் ஆயிரக்கணக்கானவர்கள் நாடுவிட்டுப் புலம் பெயர்ந்து எங்கெங்கோ வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. அங்கெல்லாம் என்னதான் வளமாக இருந்தாலும் சொந்தநாடு என்ற அபிமானம் இல்லாமல் போகுமா?
சொந்த நாடு நல்லபடியாக ஆனாலும், திரும்பிப்போக இயலுமா என்றெல்லாம் ஏகப்பட்ட கருத்துக்களும் யோசனைகளும் இருக்குதானே? கொஞ்சம் வயது போனவர்களுக்கு அந்த ஆசை இருந்தாலும், வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் தாய்நாடு அந்நியதேசம் இல்லையா?
என்னென்னவோ நடந்து போச்சு இல்லே? ப்ச்.....
சுமார் மூணுமணி நேர ப்ளைட்டில் வந்த ப்ரேக்ஃபாஸ்டிலும் அதே கிரிபாத்! ஆனால் வயித்தில் இடம் இல்லை.ஒரு டீயைக் குடிச்சுட்டுக் குட்டித்தூக்கம் போட்டேன்.
சுபாஷ்சந்த்ரபோஸ் ஏர்ப்போர்ட்டில் இறங்கும்போது மணி பதினொன்னு நாப்பது. ரன்வேக்கு அந்தாண்டையெல்லாம் எக்கச்சக்கமா ஸோலார் பேனல்ஸ் பொருத்தி இருக்காங்க. ரொம்ப நல்லது !
கொல்கத்தாவில் கால் குத்தியாச்..... ப்ரீபெய்ட் டாக்ஸி ஒன்னு ஏற்பாடு செஞ்சுக்கிட்டு 24 கிமீ தூரத்தில் ராடிஸ்ஸன் (பாலிகஞ்ச்) போய்ச் சேர்ந்தோம்.
வண்டியும் லேசில் கிடைக்கலை. காத்துநிக்க வேண்டியதாப் போயிருச்சு. ஒரே மழை. ஆனாலும் வழியெங்கும் மாநிலத்துக்குள் வருபவர்களை சிரிச்சமுகத்துடன் வரவேற்றுக்கிட்டே இருந்தாங்க தீதி !
வெள்ளைக்காரனுக்கு நம்மைவிட ஹோம்ஸிக் அதிகம் போல.... ஈஸ்ட் இண்டியா கம்பெனி ஆரம்பிச்சதும் அவுங்க தாய்நாட்டு நினைவுக்கு இப்படி ஒன்னு கட்டிட்டான், இல்லே!
தொடரும்............ :-)

7 comments:
சிங்களம் முடிய, வங்காளம் தொடங்க …… எது எப்படியோ எல்லாம் மங்களம்.
வாங்க விஸ்வநாத் !
ஆஹா..... மங்களம் தங்குக !!!! உடனடியாகப் பாடும் எண்ணம் இல்லை :-)
சிங்களத்திலிருந்து வங்காளத்திற்கு!
கொல்கத்தா - வடகிழக்கு மாநிலப் பயணத்தின் போது கடைசியாக வந்தது கொல்கத்தாவிற்கு - அங்கே இரண்டு நாட்கள் - பின்னர் தில்லி!
தீதி - எங்கெங்கும் தீதி!
தொடர்கிறேன்.
வாங்க வெங்கட் நாகராஜ்,
நாலைஞ்சு நாட்கள் ஒதுக்கினால் கொஞ்சம் நல்லாவே சுற்றிப் பார்க்கலாம். எங்கே..... விடாத மழையும், நசநசப்பும் கூடவே அழுக்கும் புழுக்கும்தான்.... ப்ச்.....
தீதி.............. ஆஹா....
ரன்வே காட்சி ..அருமை மா
வாங்க அனுப்ரேம்,
ஆமாம்ப்பா !
வாங்க அனுப்ரேம்,
ஆமாம்ப்பா !
Post a Comment