நீர்க்கொழும்பு ஹெரிடன்ஸ் ஹொட்டேலுக்குப் போய்ச் சேர்ந்தப்ப மணி சரியா நாலரை. நியூ கொழும்புதான் நீர்க்கொழும்பு ஆச்சோ என்னவோ? தெரிஞ்சவுங்க சொல்லுங்க. வெள்ளைக்காரன் Negombo என்று சொல்கிறான் :-)
நாம் நாளைக்கு இலங்கையை விட்டுக் கிளம்பறோம். அதுதான் ஏர்ப்போர்ட்டுக்குப் பக்கம் என்று இந்த ஹொட்டேலில் புக் பண்ணினார் 'நம்மவர்'. இந்த வாரம் நல்ல சுத்து சுத்தியாச்சு என்பதால் கொஞ்சம் நல்லாவே ஓய்வு எடுத்துக்கிட்டு, நாளை இன்னொரு நாட்டுக்குப் போய்ச் சுத்த, உடம்பை ரீசார்ஜ் பண்ணிக்கணுமாம்.
உள்ளூர் என்பதால் மஞ்சுவை வீட்டுக்கு அனுப்பிட்டோம். பாவம்...பிள்ளைகளைப் போய்ப் பார்த்துட்டு நாளைக் காலை வந்தால் போதும்தானே!
செக்கின் ஆனதும் ரெண்டாம்மாடி அறைக்குப்போய், பால்கனி கதவைத் திறந்தால்..... கூப்பிடுதூரத்தில் கடல்! ப்ரைவேட் பீச்! நிறையத் தெங்குகளும், புல்வெளியுமா அட்டகாசமா இருக்கு வளாகம்.
சரி. பீச்சாங்கரை வரை போய் வந்துட்டு அப்புறம் ஓய்வெடுக்கலாம். குடிக்க எதாவது டீ வேணுமா? வேண்டாம். இப்போதான் கீழே வெல்கம் ட்ரிங் மாம்பழ ஜூஸ் குடிச்சோம் !
உண்மையில் இந்த ஹொட்டேலின் பின்பக்கம்தான் அழகு! தெருப்பார்த்த பார்வை ரொம்பவே சுமார்.... (கீழே படம்)
பின்பக்க வழியா இறங்கிப்போனால்..... நீச்சல் குளமும், வெயில்காயறதுக்குத் தோதான சாதனங்களும், குடைகளுமா விஸ்தாரமாத்தான் இருக்கு. 'தாகசாந்தி'க்கான ஏற்பாடுகளுக்கும் குறைவில்லை.
கடலில் கால் நனைக்க 'நம்மவருக்கு' எப்பவும் பிடிக்கும்.
அப்படியே சின்னதா ஒரு வாக். கொஞ்சதூரத்துலே பப்ளிக் பீச் ஆக்ஸெஸ் இருக்கு. பள்ளிக்கூடப்பிள்ளைகளும், காலேஜ் படிக்கும் பெரிய பசங்களுமா கூட்டம் நெரியுது. பப்ளிக் பீச் என்றதும் தீனிக்கடைகள் வந்துருமே.... இங்கேயும்....
கடல்வாழ் உயிரினங்கள் கண்ணாடிப்பெட்டிக்குள்ளில்.... வடைகளில் ஒட்டிப்பிடிச்சிருக்கும் செம்மீன்கள் இத்யாதி.
மரக்கறி என்றதும் ஒரு மூலையில் இருக்கும் வடைகளை சூடாக்கித்தரவான்னு கேட்டார் விற்பனைப் பையன். எல்லாத்துக்கும் ஒரே கடாய், அதே எண்ணெய்.
ஆளைவிடு சாமி.....
கடற்கரை சுத்தமாத்தான் இருக்கு. மெரினா அளவு மோசமில்லை....
அறைக்குத் திரும்பிட்டோம். ஓய்வு. ஏழேமுக்கால் ஆனதும் ராச்சாப்பாடு இங்கேயேவா இல்லை வெளியேவான்னு யோசிச்சதில் வெளியே போனால் அக்கம்பக்கம் பார்த்துட்டு வரலாமேன்னு கிளம்பிட்டோம்.
எதிர்வாடைக்குப் போனால் பின்னம்பக்கத்தெருவில் ஒரே டூரிஸ்ட் கூட்டம். ஒரு கடைக்குள் நுழைஞ்சால் ரெண்டு பொடியன்கள். பெரியவனுக்கு ஒரு எட்டு வயசு இருக்கும். என்ன பேச்சுன்றீங்க? தமிழ்தான். அப்பாவும், மாமாவும் வீட்டுக்குப் போயிருக்காங்களாம். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் இவர்தான் வியாபாரம் பார்த்துக்குவாராம்! சின்னவர்.... இவருக்கு உதவியாளர்!
நாமும் தமிழ் என்பதால் நல்ல 'விலை குறைச்சு
த் தருவாராம். என்ன எடுக்கட்டும் என்றதும், நான் உங்களோடு ஒரு படம் எடுத்துக்கணும் என்றேன் :-)
அக்கம்பக்கம் சாப்பிடும் இடங்கள் எல்லாம் கொள்ளை விலையாம். ரெண்டு தெரு தள்ளிப்போனால் தமிழ்க்கடையில் விலை மலிவாம். சரின்னு கேட்டுக்கிட்டேன் :-)
ஒரு யானை ஒன்னு நல்லாவே இருந்துச்சு. நம்பர் பஸுல். ஆனால் எதுவும் வாங்கிக்க வேணாமுன்னு தீர்மானிச்சதால் வாங்கிக்கலை.
ஒரு இத்தாலியன் ரெஸ்ட்டாரண்டில் பீட்ஸாவும், ஐஸ்க்ரீமுமா நம்ம சாப்பாடு ஆச்சு. அந்த லேம்ப்ரெட்டா ஸ்கூட்டர் ஞாபகம் இருக்கோ?
அப்படி இப்படின்னு மணி ஒன்பதேகால் ஆகிப்போச்சு. அறைக்குத் திரும்பிட்டோம்.
அவ்ளோதான். தூங்கலாம். நாளைக்கு இட்ஸ் கோயிங் டுபீ அ லாங் டே....
தொடரும்....... :-)
நாம் நாளைக்கு இலங்கையை விட்டுக் கிளம்பறோம். அதுதான் ஏர்ப்போர்ட்டுக்குப் பக்கம் என்று இந்த ஹொட்டேலில் புக் பண்ணினார் 'நம்மவர்'. இந்த வாரம் நல்ல சுத்து சுத்தியாச்சு என்பதால் கொஞ்சம் நல்லாவே ஓய்வு எடுத்துக்கிட்டு, நாளை இன்னொரு நாட்டுக்குப் போய்ச் சுத்த, உடம்பை ரீசார்ஜ் பண்ணிக்கணுமாம்.
உள்ளூர் என்பதால் மஞ்சுவை வீட்டுக்கு அனுப்பிட்டோம். பாவம்...பிள்ளைகளைப் போய்ப் பார்த்துட்டு நாளைக் காலை வந்தால் போதும்தானே!
செக்கின் ஆனதும் ரெண்டாம்மாடி அறைக்குப்போய், பால்கனி கதவைத் திறந்தால்..... கூப்பிடுதூரத்தில் கடல்! ப்ரைவேட் பீச்! நிறையத் தெங்குகளும், புல்வெளியுமா அட்டகாசமா இருக்கு வளாகம்.
சரி. பீச்சாங்கரை வரை போய் வந்துட்டு அப்புறம் ஓய்வெடுக்கலாம். குடிக்க எதாவது டீ வேணுமா? வேண்டாம். இப்போதான் கீழே வெல்கம் ட்ரிங் மாம்பழ ஜூஸ் குடிச்சோம் !
உண்மையில் இந்த ஹொட்டேலின் பின்பக்கம்தான் அழகு! தெருப்பார்த்த பார்வை ரொம்பவே சுமார்.... (கீழே படம்)
பின்பக்க வழியா இறங்கிப்போனால்..... நீச்சல் குளமும், வெயில்காயறதுக்குத் தோதான சாதனங்களும், குடைகளுமா விஸ்தாரமாத்தான் இருக்கு. 'தாகசாந்தி'க்கான ஏற்பாடுகளுக்கும் குறைவில்லை.
கடலில் கால் நனைக்க 'நம்மவருக்கு' எப்பவும் பிடிக்கும்.
அப்படியே சின்னதா ஒரு வாக். கொஞ்சதூரத்துலே பப்ளிக் பீச் ஆக்ஸெஸ் இருக்கு. பள்ளிக்கூடப்பிள்ளைகளும், காலேஜ் படிக்கும் பெரிய பசங்களுமா கூட்டம் நெரியுது. பப்ளிக் பீச் என்றதும் தீனிக்கடைகள் வந்துருமே.... இங்கேயும்....
மரக்கறி என்றதும் ஒரு மூலையில் இருக்கும் வடைகளை சூடாக்கித்தரவான்னு கேட்டார் விற்பனைப் பையன். எல்லாத்துக்கும் ஒரே கடாய், அதே எண்ணெய்.
ஆளைவிடு சாமி.....
கடற்கரை சுத்தமாத்தான் இருக்கு. மெரினா அளவு மோசமில்லை....
எதிர்வாடைக்குப் போனால் பின்னம்பக்கத்தெருவில் ஒரே டூரிஸ்ட் கூட்டம். ஒரு கடைக்குள் நுழைஞ்சால் ரெண்டு பொடியன்கள். பெரியவனுக்கு ஒரு எட்டு வயசு இருக்கும். என்ன பேச்சுன்றீங்க? தமிழ்தான். அப்பாவும், மாமாவும் வீட்டுக்குப் போயிருக்காங்களாம். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் இவர்தான் வியாபாரம் பார்த்துக்குவாராம்! சின்னவர்.... இவருக்கு உதவியாளர்!
நாமும் தமிழ் என்பதால் நல்ல 'விலை குறைச்சு
த் தருவாராம். என்ன எடுக்கட்டும் என்றதும், நான் உங்களோடு ஒரு படம் எடுத்துக்கணும் என்றேன் :-)
அக்கம்பக்கம் சாப்பிடும் இடங்கள் எல்லாம் கொள்ளை விலையாம். ரெண்டு தெரு தள்ளிப்போனால் தமிழ்க்கடையில் விலை மலிவாம். சரின்னு கேட்டுக்கிட்டேன் :-)
ஒரு யானை ஒன்னு நல்லாவே இருந்துச்சு. நம்பர் பஸுல். ஆனால் எதுவும் வாங்கிக்க வேணாமுன்னு தீர்மானிச்சதால் வாங்கிக்கலை.
ஒரு இத்தாலியன் ரெஸ்ட்டாரண்டில் பீட்ஸாவும், ஐஸ்க்ரீமுமா நம்ம சாப்பாடு ஆச்சு. அந்த லேம்ப்ரெட்டா ஸ்கூட்டர் ஞாபகம் இருக்கோ?
அப்படி இப்படின்னு மணி ஒன்பதேகால் ஆகிப்போச்சு. அறைக்குத் திரும்பிட்டோம்.
அவ்ளோதான். தூங்கலாம். நாளைக்கு இட்ஸ் கோயிங் டுபீ அ லாங் டே....
தொடரும்....... :-)
8 comments:
அருமை சிறப்பு
(பழைய 3 பதிவுகள் இன்னும் படிக்கலை, இதோ இப்போ …)
ஓய்வான பதிவு...நல்லா இருந்துச்சு ..
வாங்க விஸ்வநாத்,
வலைப்பதிவின் வசதிகளில் ஒன்னு.... எப்பத் தோணுதோ அப்போ படிக்கலாம் :-)
வாங்க அனுப்ரேம்,
அதானே எப்பப் பார்த்தாலும் ஓடணுமான்னு கொஞ்சம் ஓய்வு ! அதுவும் வேண்டித்தானே இருக்கு, இல்லையோ!!!
கடற்கரை ஓரமா ஒரு நடை .... இந்த மாதிரி நீர்நிலைகள் அருகே நடப்பதில் ஒரு வித சுகம் இருக்கத்தான் செய்கிறது.
சென்ற வாரத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ்/பாஸ்பா நதிக்கரையில் நீண்ட தூரம் நடந்தேன்...
மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
வாங்க வெங்கட் நாகராஜ்,
உண்மைதான். இடம் சுத்தமாக இருந்தால் நடையும் உற்சாகமாக அமைஞ்சுருது பாருங்க.....
சிறீலங்காவுக்கு டா..டா... மீண்டும் வாருங்கள் மிகுதி இடங்களைக் கண்டு மகிழலாம்.
வாங்க மாதேவி,
இன்னொரு பயணம் வரத்தான் வேணும். யாழ் பகுதிகளை இன்னும் பார்க்கவில்லையே....
Post a Comment