Wednesday, August 14, 2019

மாமனைப்போல் மருமகன் ! (பயணத்தொடர், பகுதி 130)

முன்னேஸ்வரம் தாண்டி ஒரு இருபத்தைஞ்சு நிமிட் ஆகி இருக்கும்போது... சட்னு  என் பக்கம்  பத்துமலை முருகன் மாதிரி (!)  கண்ணுலே  தெரிஞ்சதும் ஸ்டாப் னு சொல்ல வாயைத் திறக்கும்போதே  ஒரு நூறு மீட்டர் போயிருந்தார் மஞ்சு.  பிறகு யு டர்ன் எடுத்து வந்து சேர்ந்த இடம் மாமன் போல விஸ்வரூபம் காமிக்கும் மருமகனின் கோவிலுக்கு!  மாதம்பை கலியுக வரதர்......

பத்துமலை இல்லைப்பா....  பத்துத்தலை முருகன்! நம்ம ராவணனுக்குப் போட்டியோ?     இல்லையே.....   எண்ணிப்பார்த்தால் பதினொரு தலைகள்!
தோரணவாயிலின் தலையில்  இப்படி நிக்கறார்! 
நெடுஞ்சாலையையொட்டியே கோவில்....  வாசலுக்குள் நுழைஞ்சால் வெளிமுற்றம்...  நடுவில் கோவிலுக்குள்ளே போகும்  ராஜகோபுரவாசல். சின்னதா அஞ்சடுக்குக் கோபுரத்தில் தங்கமாக மின்னிக்கிட்டு நிக்கறார் முருகன்.  கோபுரவாசல் கதவுலே 'ஓம்' ரொம்பவே அழகா அமைச்சுருக்காங்க.
என்ன ஒன்னு கோவில் மூடி இருக்கு... நாலரைக்குத்தான் திறப்பாங்களாம்.  இன்னும் ஒன்னேகால் மணி நேரம் காத்திருக்க  முடியாது...ப்ச்.....

கம்பிக்கதவு வழியாகக் கேமெராக் கண்ணை அனுப்பினேன். வாவ்....
சுத்திவர உள்ப்ரகாரத்துலே  நடுவில் கருவறை. வெட்டவெளின்னு வெளிச்சம் இருந்தாலும் மேற்கூரை (பாலிகார்பனேட் ஷீட்)போட்டுதான் இருக்காங்க.
கோவிலுக்கு வெளியே  முகப்பில் ஒரு பக்கம்  உமையாளும் ஈசனும்.... அடுத்த பக்கம் ஆஞ்சியும் புள்ளையாரும்!
ஈசன்  முகத்தில் என்னவோ குறையுதேன்னு  பார்த்தால்......

அன்பு வழியும் கண்களில்  கோபம் நிறைஞ்சுருக்கோ? ஒய் இந்த மிரட்டல் மை லார்ட் ? 
சாமி எல்லா பக்கமும் பார்க்கிறார்னு சொல்லும்படி  கூடுதல் தலைகள் அம்மாவுக்கும் புள்ளைக்கும் !
வெளிப்புற மதில் சுவர் முழுக்க  முருக லீலைகள் சுதைச்சிற்பங்களாகவும் சித்திரங்களாகவும்....



வளாகத்துலே  கோவில் பொருட்களுக்கான கடை மட்டும் திறந்துருக்கு!  ஒன்னு சொல்லணும்.....  பழக்கடைகள், கோவில் கடைகள் எல்லாம் அட்டகாசமா இருக்கு இந்தப் பக்கங்களில்.  அதுவும் கொஞ்ச நேரத்துக்கு முன்னே முன்னேஸ்வரம் கோவிலில் சூப்பர் !
நாம் கதிர்காமம் முருகன் கோவில்னு சொல்றோமே அதோட நகல்தான் இந்தக் கலியுகவரதன் முருகன் கோவிலாம்!

The temple is known as Punchi Kataragama temple, also called Replica of Kataragama temple, Kataragama being the Sri Lankan name of the Southindian deity Murugan.

வாவ்!  இந்தக் கணக்கில் கதிர்காமம் போகாத குறை தீர்ந்தது !
கோவில் எப்ப கட்டுனாங்கன்னு தெரியலை. ஆனால் வளாகத்தில் இருக்கும் சிலைகள் மற்ற முகப்பு அலங்காரங்கள் எல்லாம் செஞ்சது இப்போ  ஜனவரி 2012 ஆம் ஆண்டுதானாம்!  இப்போ ஏழாவது ஆண்டு. நல்லபடியாப் பராமரிச்சு வர்றாங்க. எல்லாமே அப்பழுக்கில்லாமல் ஜொலிக்குதே!

உள்ளூர் பிரமுகர் ஒருவர், கோவிலுக்கான நிலத்தைக் கொடுத்துருக்கார்னு  தகவல்.  இந்தப்பகுதியில் தெங்கு ஏராளமாம்.  பிரமுகருக்குக் கள்ளு  இறக்குதல் பரம்பரைத் தொழில்.

ச்சும்மா சொல்லக்கூடாது.....   ரொம்பவே அழகான கோவிலாகத்தான் கட்டி இருக்காங்க.
நமக்கு இன்னும் ஒருமணி நேரப் பயணம் இருக்கு இன்றைக்கு என்பதால் கிளம்பிட்டோம்.  இருட்டுமுன் போய்ச சேரணும்.


தொடரும்......... :-)

8 comments:

said...

மாதம்பை கலியுக வரதர்......

11 தலை முருகா...ஆஹா...

விநாயகரும் , ஹனுமானும் சூப்பரா இருக்காங்க ...

said...

//ஒய் இந்த மிரட்டல் மை லார்ட் ? //
பின்ன, கண்டுக்காத 100மீ தள்ளி போயிட்டிங்களே, அதனால இருக்குமோ ?

said...

வாங்க அனுப்ரேம்,

கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கோவில் ! பெரிய பெரிய சிலைகள் அருமைதான்!

said...

வாங்க விஸ்வநாத்,

அதெல்லாம் யூ டர்ன் அடிச்சோமா இல்லையா? பெர்மெனட் மிரட்டலா இருக்கே! :-)

said...

கோவில் சிற்பங்கள் அனைத்தும் அழகு. கோவில் திறந்திருந்தால் உள்ளே சென்று ரசித்திருக்கலாம்! எங்களுக்கும் இன்னும் சில படங்களும் தகவல்களும் கிடைத்திருக்கும்! :)

தொடர்கிறேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

அழகாத்தான் இருக்கு உள்ளேயும். கம்பிக்கதவில் கொஞ்சம் தெரிஞ்சது. பார்க்கலாம் இன்னொருமுறை வாய்க்குமா என்று !

said...

நாங்களும் இரண்டு தடவை சென்றுள்ளோம் உள்ளே கோயில் பூட்டிய நேரம்.:(

said...

வாங்க மாதேவி,

உள்ளேயும் ரொம்ப அழகாத்தான் இருக்கு! கெமெராக் கண்ணால் கொஞ்சம் பார்த்தேன். அடுத்த பயணத்தில் கிடைக்குமான்னு .... ஆசைதான் !