உள்ளூர் சமாச்சாரத்தை உங்களுக்கும் சொல்லட்டா!
வெள்ளையர் வந்திறங்கி, ஒருவழியா ஆரம்பக்குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து, செட்டில் ஆகி பயிர் பச்சை எல்லாம் வச்சு இங்கேயே வாழத்தொடங்கி இருபத்தி மூணு வருசம் கழிச்சு பிள்ளைகளின் மேற்படிப்புக்காக கேண்டர்பரி காலேஜ் என்னு பெயரில் ஒரு கட்டடம் கட்டினாங்க. எல்லாம் ப்ரிட்டிஷ் ஸ்டைல் தான்.
இங்கிலாந்தில் இருந்து வந்த வாத்தியார்கள்தான் படிப்புச் சொல்லிக்குடுத்தாங்க. 1933 இல் யுனிவர்ஸிடி ஆஃப் கேன்டர்பரின்னு பெயர் மாற்றம். 1961 வரைஇதே இடத்தில்தான் இருந்தாங்க. இதுக்குள்ளே மாணவர்கள் எண்ணிக்கை பெருகி இருந்து, இங்கே இடம் பத்தலை. புது இடம் வேணுமுன்னு தேடி ஐலம் என்ற பேட்டையில் கட்டடம் கட்ட ஆரம்பிச்சு, கொஞ்சம் கொஞ்சமா வகுப்புகளை ஐலத்தில் வந்து சேர்த்தாச்சு. இந்த வேலைகள் முடிஞ்சது 1974 இல்.
சும்மாக் கிடக்கும் பழைய கட்டிடங்களை என்ன செய்யலாமுன்னு யோசிச்சு Christchurch Arts Centre என்ற பெயரில் ஆர்ட்ஸ் & க்ராஃப்ட் வகைகளுக்கான இடமா ஆக்கிட்டாங்க.
சுற்றுலாப்பயணிகள் வந்து உள்ளூர் கலைகளை, கைவினைப் பொருட்களை ரசிச்சு, வாங்கும் இடமா ஆச்சு. இங்கே சதர்ன் பேலே தியேட்டர், சினிமா தியேட்டர் ஊர் மக்கள் நிகழ்ச்சிகளை நடத்திக்கும் க்ரேட் ஹால் இப்படி கோலாகலம்தான்.
இந்த க்ரேட் ஹால்தான் பழைய யுனிவர்ஸிட்டியில் விழா நடக்கும் இடம்! நாங்க இங்கே வந்தபிறகு (1988) இசை நிகழ்ச்சிகளுக்கு இங்கே வந்துருக்கோம். ஒரு சமயம் நம்ம எல் சங்கர் அவர்களின் வயலின் கச்சேரிக்கும் போய் வந்தது நினைவுக்கு வருது.
இதுக்குப் பக்கத்தில்தான் எங்கூர் பொட்டானிக்கல் கார்டன், உள்ளூர் ம்யூஸியம் எல்லாம் இருக்கு.
எங்கூர் நிலநடுக்கத்தில் ஊரில் பாதி அழிஞ்சு போச்சுன்னு சொன்னேனே, ஞாபகம் இருக்கோ? முதல் நடுக்கம் செப்டம்பர் 4 , 2010. அப்பவே இந்த கட்டிடங்களில் கொஞ்சம் இளகி இருந்துருக்கு. இந்தக் கட்டிடத்தில் உள்ள கும்மாச்சி கோபுரம், 22 டன் எடையுள்ளது. அதுவே ஒரு 50 மிமீ நகர்ந்துருச்சுன்னு, அதை மட்டும் பாதுகாப்பா இறக்கி வச்சுட்டாங்க.
இதுக்கிடையில் ஆறுமாசம் கழிச்சு (2011 ஃபிப்ரவரி 22) ஏற்பட்ட நிலநடுக்கத்தில்தான் நகரின் மையப்பகுதி ரொம்பவே ஆட்டம் கண்டு போச்சு. எங்க ஊரின் பெயருக்குக் காரணமான கதீட்ரல் இடிஞ்சு விழுந்ததோடு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பழைய கட்டிடங்கள் எல்லாம் இடிஞ்சும், விரிசல் விட்டும் பாழாகிருச்சு.
தரையில் உக்கார்ந்துருக்கும் கும்மாச்சி கோபுரத்தை, நாங்களும் தோட்டத்துக்குப் போகும்போதெல்லாம் பார்ப்போம். எப்ப இதை திருப்பி சரி செய்வாங்களோன்னும் நினைச்சுக்கிட்டு இருந்தோம்.
முதல்மூணு வருசம் இடிபாடுகளை எல்லாம் அகற்றி, நிலத்தை சரி செய்வதிலும், இடிஞ்சு போன வீடுகளை பழுது பார்ப்பது, மீண்டும் மக்கள் வசிக்கத்தக்க விதத்தில் சரியாக்கிக் கொடுப்பதுன்னு இருந்துச்சு எங்க எர்த் க்வேக் கமிஷனும், நகராட்சியும்.
அப்புறம் நகருக்குச் சொந்தமான இடங்களைப் பழுது பார்க்க ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு இடமா வேலை முடிஞ்சதும், மக்களே வந்து பாருங்க. சரி செஞ்சாச்சுன்னு கூப்புட்டுக் காமிக்கிறாங்க.
நாங்களும் 'வாங்க' ன்னு ஒரு சொல் சொன்னாப்போதும்........ உடனே ஓடிப்போய் பார்த்துட்டுத்தான் மறு வேலை :-)
கடந்த ரெண்டு மாசத்துக்கு முன்னாலெதான் ஆன்ஸாக் தினத்தன்று, எங்க ஊர் போர் நினைவுச்சின்னமான ப்ரிட்ஜ் ஆஃப் ரிமெம்பரென்ஸ் பழுது வேலைகள் முடிஞ்சு, திறக்கப்பட்டது. புத்தம் புதுசா பளிச்சுன்னு , பழைய தோற்றத்துடன், புதுப்பொலிவா இருக்கு இப்போ. சரித்திர முக்கியத்துவம் உள்ள இடங்களை ரொம்ப கவனமாத்தான் பழுது பார்க்கணும். அதுக்குன்னே நிபுணர்கள் இருக்காங்க. சும்மா சிமிண்டை வச்சு பூசிட்டுப் போயிடமுடியாது.
அதே போல் இந்த ஆர்ட் சென்டரில் இருக்கும் க்ரேட் ஹால் வேலை முடிஞ்சுருச்சு. 'வந்து பார்த்துட்டுப்போங்க' ன்னு இந்த வீக் எண்ட் அழைப்பு. இன்றைக்கும் நாளைக்கும் ஊர் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கிறாங்க. காலை 10 முதல் மாலை 4 வரை. இன்றைக்குக் கொஞ்சம் வெயில் இருக்கே. அதனால் இன்றைக்கே போகலாமுன்னு கிளம்பிப் போனோம்.
நல்ல கூட்டம்தான். எப்படி ஆரம்பிச்சு எல்லா வேலைகளையும் முடிச்சாங்கன்னு விளக்கும் படங்கள் தகவல்கள் இப்படி கிடைச்சது.
இது மட்டும்தான் முடிஞ்சுருக்கே தவிர மற்ற பகுதிகளில் இன்னும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. இந்த ரெண்டு நாளைக்குப்பிறகு ஊர்மக்களையும் அனுமதிக்க மாட்டாங்க. ரிப்பேர் நடக்கும்போது எதாவது தலையில் விழுந்து தொலைச்சால் உயிருக்கு ஆபத்து இல்லையோ! முழுசும் சரியானதும் தகவல் வரும். அப்போ போய்ப் பார்க்கலாம்.
இதுக்குள்ளே ஒரு அப்ஸர்வேட்டரி இருக்கு. முந்தியெல்லாம் குளிர்காலத்தில் வெள்ளிக்கிழமை இரவுகளில் நக்ஷத்திரம் பார்க்கப் போவோம். இப்போ அதெல்லாம் என்ன கதியில் இருக்கோ :-(
உள்ளூர் சமாச்சாரத்தை உங்களுக்கும் சொல்லலாமேன்னுதான் இந்தப் பதிவு.
Album is here :-)

இந்தக் கண்ணாடி ஜன்னலில் 4000 துண்டு கலர்கண்ணாடிகளால் ஆன சித்திரம்!
இதுக்குள்ளே ஒரு அப்ஸர்வேட்டரி இருக்கு. முந்தியெல்லாம் குளிர்காலத்தில் வெள்ளிக்கிழமை இரவுகளில் நக்ஷத்திரம் பார்க்கப் போவோம். இப்போ அதெல்லாம் என்ன கதியில் இருக்கோ :-(
உள்ளூர் சமாச்சாரத்தை உங்களுக்கும் சொல்லலாமேன்னுதான் இந்தப் பதிவு.
Album is here :-)
8 comments:
கும்மாச்சி கோபுரம் என்றால்....? கோவில் பதிவுகள் இல்லாதபோது உள்ளூர் பதிவு...!
வாங்க ஜிஎம்பி ஐயா.
கும்மாச்சி கோபுரம் Turret க்கு நான் வச்ச பெயர்தான் :-)
உள்ளுரில் நடக்கும் சமாச்சாரங்களைப் பதிவு செஞ்சு வச்சுக்கணும்தானே... அதுவும் ஊரில் பாதி அழிஞ்சு போய் மீண்டும் கட்டப்பட்டு வரும் நிலையில் ..... சரித்திரத்தில் இடம் பெறும் விஷயங்கள் ஆச்சே!
பயணப்பதிவுகள் நீண்டு போகும்போது இவைகளை எழுத விட்டுப்போகுது. நேரமின்மைதான் காரணம்.
உடனுக்குடன் எழுதலைன்னா... ஒரு சோம்பலும் வந்துருதே :-(
அதான் இடைக்கிடையே சில உள்ளூர் பதிவுகளும். கண்முன்னே ஊர் எழும்பி வர்றது ஒரு புது அனுபவம் இல்லையோ!
பகிர்வுக்கு நன்றி
http://ypvn.myartsonline.com/
அருமை. அரசின் பொறுப்புணர்ச்சியும் சிலிர்க்க வைக்கிறது. இங்கே என்றால் இடிந்து விழுந்ததை விற்று காசாக்கி இருப்பார்கள்....
super amma.... the speciality in ur writing is balancing and observance of beauty in both Indian temples and local :) #attendance ..
வாங்க ஜீவலிங்கம் யாழ்பாவாணன்.
வருகைக்கு நன்றி!
வாங்க வெங்கட் நாகராஜ்.
இதுவரை அரசு நல்லபடியாகவே செயல்படுது. இப்பதான் இந்தியர் அரசியலில் சேர்ந்துருக்காங்க. ஒரு பார்லிமென்ட் அங்கமும் இருக்கார். நாட்டின் மக்கள் தொகையிலும் இந்தியர்கள் அதிகமாக ஆகிக்கிட்டு இருக்காங்க.
போதாக்குறைக்குச் சீனர்கள் வருகையும் ஏராளம். இன்னும் பத்து வருடங்களில் நிலமை மாறலாம்...........
வாங்க நாஞ்சில் கண்ணன்.
இந்தியக்கோவில்கள்.... நாங்கள் விட்டு வந்த பொக்கிஷங்கள் என்றால் இங்கே உள்ளது இன்னும் அரசாலும் மக்களாலும் காப்பாற்றப்படும் பொக்கிஷங்கள் . ரெண்டும் வேண்டித்தானே இருக்கு!
Post a Comment