Wednesday, June 29, 2016

வைகுந்த விண்ணகரம் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 53)

திருத்தெற்றியம்பலம் பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் இருந்து இப்போ அடுத்த கோவிலுக்குப் போறோம். திருநாங்கூர் திவ்யதேசக்கோவில்கள் எல்லாமே  அரை அரை  கிமீ தூரத்துலேயே இருக்கு என்பது ஆச்சரியம்தான்.  இந்த அரைக்கிலோ மீட்டர் போகும் வழியிலேயே இன்னொரு கோவில் இருக்கு!  பட்டர் ஸ்வாமிகள் இப்போ அங்கே இருக்கமாட்டார் என்பதால் வைகுந்தப் பெருமாளைத் தரிசனம் செஞ்சுக்கிட்டு வரணும். எல்லாம் நம்ம  குமார் சொல்றபடிதான், கேட்டோ!

இந்த குமார், நமக்கு ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வந்த ஏழெட்டுக் காகிதங்களை ஸ்டேப்பிள் போட்டு ஒரு புத்தகமாட்டம்(16 பக்கங்கள்) கொடுத்துருந்தார், நமது கைடாக ஆன அடுத்த நிமிசமே:-)  அதுலே என்னென்ன கோவில்கள், பட்டர் ஸ்வாமிகள் பெயர் அண்ட் செல்ஃபோன் நம்பர்,  திருநாங்கூர் உற்சவம் பற்றிய  சில தகவல்கள் எல்லாம் இருக்கு.  ரொம்ப நல்ல ஏற்பாடு. இப்படி , செய்யும் தொழிலில் கொஞ்சம் கவனம் எடுத்துச் செய்வது  பாராட்டப்பட வேண்டியதே!

 அவர் கொடுத்தத் தகவல்களை  வாசிச்சபோது தெரியவந்த விவரம்,  இந்த ஏற்பாடே நம்ம அண்ணன் கோவில்  மாதவபட்டர் செஞ்சு கொடுத்ததுன்னு தெரிஞ்சது.  ஸ்ரீ மாதவ பட்டர்ஸ்வாமிகளுக்கு  என் மனம் நிறைந்த பாராட்டுகள்!

450 மீட்டர்கள் பயணத்தில் வைகுந்த விண்ணகரம் வந்து சேர்ந்திருந்தோம்.

பளிச்ன்னு இருக்கு கோவில்.  இப்போ சமீபத்திலே  ஒரு 14 மாசங்களுக்கு  முன்னேதான் புனர் நிர்மாணம் ஆகி கும்பாபிஷேகம் நடந்துருக்கு.
மேலே படம்:  பழசு!  (சுட்டது)
அப்படி இருந்த கோவில் இப்போ இப்படி ஆகி இருக்கு.

வெளியே சுற்றுச்சுவர் எழுப்பி  முகப்பு வாசல் வச்சு   அருமை!
அறநிலையத்துறை செய்யவேண்டியதை, நம்ம முரளீதர ஸ்வாமிகள் செஞ்சுருக்கார்.  நம்மூரில்தான் கடமையைச் செய்யணுமுன்னாவே காத தூரம் ஓடும் அரசு அமைப்புகளாத்தானே இருக்கு. ப்ச்....


முகப்பு வாசலைக் கடந்தால் நேரா கோவில். நடுவிலே பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடிக்கான குட்டி சந்நிதின்னு ஒன்னும் இல்லை.
கோவில் கட்டிடத்துச் சுவரில் சின்ன மாடத்தில் பெரிய திருவடி இருக்கார்.

அங்கேயே என்னென்ன படியளக்குறாங்கன்னு  ஒரு போர்டு.   ஹூம்....   இதுவாவது  கிடைக்குதேன்னு  சந்தோஷப்படணுமோ?
அவரைக் கும்பிட்டதும், கோவிலுக்குள் போறோம். நாலு படிகள்தான்.  உள்ளே முன்மண்டபம்  போல ஒரு  ஹால். அதுக்கு அந்தாண்டை கருவறை.
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவியுடன்  பெருமாள் ஸ்ரீ வைகுண்டத்தில் எப்படி உக்கார்ந்துருப்பாரோ அதே  மேனிக்குக் காட்சி கொடுக்கறார்.


நாமெல்லாம் 'அங்கே'  போகும்வரை காத்திருக்காமல், இப்போதைக்கிப்போதே   அங்கத்து ஸீனைக் கண்டு களிக்கலாம்.

தீபாராதனை, தீர்த்தம், சடாரி, புஷ்பப்ரஸாதம் கிடைச்சது. கூடவே  ததியன்னமும்!

நல்ல ருசி!

மண்டபத்தில் சில வாகனங்கள். நம்மாளும் உண்டு:-)

கோவில்வாசல் முகப்பில்,  உள்ளே இருக்கும் காட்சிக்கான ட்ரெய்லர்:-)

இக்ஷ்வாகு குலத்தில் வந்த அரசர்  ஸ்வேதகேது, நீதி தவறாமல் நாட்டை ஆண்டு வர்றார். அவருக்கும் அவருடைய மனைவி தமயந்திக்கும், ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் பெருமாளை தரிசிக்கணுமுன்னு பேராவல். காட்டுக்குப்போய் தவம் செய்யறாங்க. சுற்றிலும்  தீ மூட்டி நடுவில் நின்னு, கடுமையான தவம். பூத  உடல் போயிருச்சு!

  வைகுண்டம் போய்ச் சேர்ந்தால் அங்கே பெருமாளைக் காணோம். நாரதர் இருக்கார்.  விவரம் கேட்டால்....   அரசத்தம்பதிகள்  தானதர்மங்கள் செய்யாததால் தரிசனம் கிடைக்கலை.  பிராயசித்தமாப் போய் காவிரிக்கரையில்  ஐராவதீஸ்வரரை வணங்கி தியானம் செய்யுங்கன்னு சொல்லிடறார்.

அதேபோல் தியானம் செய்யும்போது, உதங்கர் அங்கே வந்து அவரும் தியானத்தில் கலந்துக்கிட்டார். ஐராவதேஸ்வரரும், எனக்கும் பெருமாளைத் தரிசனம் செய்ய வேணுமுன்னு அவரும் தியானம் செய்ய உக்கார்ந்துட்டார்.

பல காலங்கள்கடந்து போயிருது. ஒருநாள் திடீர்னு  மஹாவிஷ்ணு,  வைகுண்டத்தில் இருக்கும் அதே போஸில்   இவுங்களுக்கு முன் காட்சி கொடுத்து ஆசிகள் வழங்கறார்.  அப்போ ஐராவதேஸ்வரர், இதே போல் இங்கே இருந்து  எல்லோருக்கும் காட்சி கொடுக்கணுமுன்னு வேண்டவும் அப்படியே ஆச்சு.  நமக்கும் காட்சி காணக்கிடைச்சது.

கோவில் நந்தவனத்தில்  தென்னைகளும் கூடவே சில கொய்யாமரங்களும்  சூப்பரான காய்களோடு!  வலம்வர பளிச்ன்னு  சிமெண்ட் பாதை.  கிணத்தடியும் பளிச்.
கோவில் காலை 7 முதல் 11, மாலை 4 முதல் 7 என்று போட்டுருந்தாலும் விசாரிச்சுக்கிட்டுப்போனால் நல்லது.  இல்லைன்னாலும் பிரச்சனை இல்லை.  இங்கே சுத்திச்சுத்தி நாலு வீதிகளில் எல்லா கோவில்களும் அடங்கிருது. ஒவ்வொன்னும் அரைக் கிலோமீட்டருக்கும் குறைவு. ஓடிப்போய் கூட பட்டர்ஸ்வாமிகள் எந்தக் கோவிலில் இருக்கார்னு  கண்டு பிடிச்சுடலாம். கண்ணாமூச்சி விளையாட்டுதான்:-)

சங்குமலி தண்டுமுதல் சக்கரமுனேந்தும் தாமரைக்கண் நெடியபிரான் தானமரும் கோயில்,

வங்கமலி கடலுலகில் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகர்மேல் வண்டறையும் பொழில்சூழ்,

மங்கையர்தம் தலைவன்மரு வலர்தமுடல் துணிய வாள்வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன,

சங்கமலி தமிழ்மாலை பத்திவைவல்லார்கள் தரணியொடு விசும்பாளும் தன்மைபெறு வாரே.

திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்களில் ஒன்று. வழக்கம்போல் பத்துப் பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார். லேசாத் தன்னைப்பற்றியும் ஒரு கோடி காமிச்சும் இருக்கார்! வாள்வீசும் பரகாலன்!!!


கோவில்கதைகள் வழக்கம்போல் சுவரில். அதை மக்கள் படிச்சு  உய்யவிடாமல்  கண்டாமுண்டான் சாமான்கள்  அதன்முன்னால் வழக்கம்போல்  :-(
அமிர்தம் குடிச்சுட்டோம் என்ற கர்வம் உதங்கருக்கு வந்துருச்சு.   அது வேண்டாததுன்னு  குரு வைதர் உபதேசம் செய்யறார். எப்பேர்ப்பட்டவர்களும் நிலையாமை என்பதை உணரவேணும். உலகைப் படைக்கும் ப்ரம்மனுக்கே ஆயுள் முடிஞ்சு புது ப்ரம்மன் வருவார்.  வைகுண்டத்துக்குப் போயாச்சுன்னு  ரொம்பவே மகிழ்ச்சியா இருந்துடக்கூடாது.  நம்ம புண்ணியங்களுக்குத் தக்கபடிதான்  அது ஷார்ட் ஸ்டேவா, இல்லை லாங் ஸ்டேவான்னு  சொல்லமுடியும். புண்ணியம் தீர்ந்துட்டால் மறுபடி பூமியில் பிறவி எடுத்தே ஆகணும் என்றெல்லாம் சொல்லி இருக்கார்.

நிலையாமைதான்!  அதுக்குத்தான்  தொடர்ந்து நல்ல காரியங்களை செஞ்சு  புண்ணியங்களைச் சேர்த்துக்கிட்டே இருக்கணும். மனுசப்பிறவிக்கு  இது சாத்தியமான்னு.....     யோசனைதான். எப்பேர்ப்பட்ட நல்ல  மனுசனுக்குள்ளும் ஒரு  கெட்டது  ஒளிஞ்சுக்கிட்டுத்தானே இருக்கு....   இல்லையோ....... ஒரு அஞ்சு % ?

வயசான பட்டர்  நம்மைப் பத்தி  விசாரிச்சுட்டுக் கோவிலைப் பூட்டிக்கிட்டுக் கிளம்பினார். சரின்னு நாமும் கிளம்பி அடுத்த கோவிலுக்குப் போகலாம் வாங்க.

தொடரும்.............  :-)
20 comments:

said...

பரவாயில்லை கோயிலுக்குள் நிறைய மரங்கள் உள்ளது ... வாழ்க பெருமாள் ... தொடர்கிறேன்...

said...

தொடர்கிறேன்;
நன்றி;

said...

கோயில்ல நிறைய மரங்களோட பச்சப் பசேல்னு இருக்கே.

தயிர்சாதம் பாக்கப் பிரமாதமா இருக்கு.

அமுதம் குடிச்சவங்களுக்குதான் கர்வம் வருது. இந்திரனைப் பாருங்க. குடிக்காதவனெல்லாம் அடக்கமா இருக்க.. குடிச்சவன் கூத்தாடுறது அமுதத்துக்கும் பொருந்தும் போல.

said...

படித்துத் தொடர்கிறோம். நாங்களும் தரிசனம் செய்ய உங்கள் இடுகை உபயோகமாயிருக்கும். (புனருத்தாரணம் செய்யும்போது, மாடமாக இருந்ததை உடைத்து இப்போது உள்ளதுபோல் செய்திருப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. வரலாற்றைப் பிரதிபலிக்கும் கட்டட அமைப்பை, (இது சோழர் கட்டிடக்கலை. அந்த மாடங்கள், மடைப்பள்ளியின் கூரையாக இருக்கும்) சிதைக்காது விட்டிருக்கவேண்டும்).

பிரசாதத்தையும் கண்டுகொண்டோம்.

said...

பழமையான கோவில்களைப் புனருத்தாரணம் செய்யும்போது முதல் பலி அவற்றின் பழமையும் கலை அம்சங்களும் இன்னும் எத்தனை கோவில்கள் இருக்கின்றன

said...

வாங்க ஸ்ரீராம்.

பழமரங்கள் இருப்பது ரொம்பவே மகிழ்ச்சிதான் எனக்கும்!

said...

வாங்க விஸ்வநாத்.

தொடர் வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

அதான்.... அழிவில்லைன்னதும் அங்கே ஆணவம் வந்துருது! இங்கே சீக்கிரம் அழிவுன்னு தெரிஞ்சும் ஆட்டம் அடங்கலை !!!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

எனக்கும் அந்தப் பழைய கோவில்தான் ரொம்பப்பிடிச்சிருந்தது.

அதேபோல் புதுப்பிக்க செலவு அதிகம் ஆகும் போல.... அதான் மாடர்னா அடிச்சு விட்டுருக்காங்க.

பழமையைப் போற்ற மக்கள் இன்னும் படிக்கலை என்பது வருத்தமே :-(

சாமியை மட்டும் அப்படியே விட்டு வச்சுருக்காங்க. பயம் இருக்குமோ!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நீங்க சொன்னது ரொம்பச் சரி. செலவைப் பார்த்து பயந்து இப்படிச் செஞ்சுட்டாங்க போல :-(

கோவில்கள், எண்ணிக்கையில் அடங்காதவையாக இருக்கின்றன!

said...

ஆஹா இங்கே ததியோன்னம் பிரசாதமும் கிடைச்சுடுச்சே.... செம டேஸ்ட்!

தொடர்கிறேன்.

said...

//எப்பேர்ப்பட்ட நல்ல மனுசனுக்குள்ளும் ஒரு கெட்டது ஒளிஞ்சுக்கிட்டுத்தானே இருக்கு.... இல்லையோ....... ஒரு அஞ்சு % ?//

நல்லது எது கெட்டது எது ?

இந்த வேக உலகில் இதை முடிவு செய்ய நேரமே பலருக்கு
கிடைப்பதில்லை போலும் !

சுப்பு தாத்தா.

said...

ஆஹா, கொய்யாக்காய் !

said...

போன பதிவுலே என்னை நெல்லை கண்ணா என்று சொல்லிடீங்களே

வாங்க நெல்லை கண்ணன்.!!!

ஏதோ இந்த பெருமாள் மேல ஒரு இனம் புரியாத ஈடுபாடும் பரபரப்பும் காரணம் தெரியவில்லை !!! இந்த கோவில் பத்தி இன்னும் எதிர் பார்த்தேன் அம்மா :)

மெயில் ஐடி இருந்ததால் காப்பி & பேஸ்ட் இது!

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

அடடா.... நாஞ்சிலை நெல்லை ஆக்குனதுக்கு மாப்பு ப்ளீஸ்.

ஆமாம்... நெல்லையும் நாஞ்சிலும் ஒரே ஏரியா இல்லையோ!!!!

இப்பப் போய்ப் பாருங்க. மாத்தியாச்.

கோவிலைப் பற்றி எனக்குக் கிடைத்த விவரங்களே இவ்வளவுதான். வேறென்ன சொல்ல? கண்ணும் மனமும் நிறைந்து வழிய ஆவலோடு 'அங்கத்து செட்டிங்ஸ்' அனுபவித்தேன்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

புளிப்பில்லாத தயிரின் சுவை உண்மையில் அருமைதான்!


தொடர்வருகைக்கு நன்றி.

said...

வாங்க சுப்பு அத்திம்பேர்.

உண்மை. நேரம் ஏது? போயே போச் :-(

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

எனக்குக் பழம்தான் பிடிக்கும் :-)

அணில்கள் பழுக்கவிடுமோ?

said...

பளிச்சென்று இருக்கு கோவில்...ததியோன்னம் சூப்பர்!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

பளிச்னு சுத்தமா இருக்கும் கோவில்கள் மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியைத் தருதுப்பா. அதுக்கேத்தமாதிரிதான் கிடைக்கும் பிரஸாதங்களும்!