Friday, June 03, 2016

எழுத வந்ததினால் ஆய பயன் என் கொள் ...? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 42)

பெரிய குடும்பி ஆனதுதான் :-)

லோடஸ் வந்து சேர்ந்த அடுத்த சில நிமிசங்களில் நம்ம ஸ்ரீநிவாச ஆச்சாரியிடமிருந்து  ஃபோன்.  என்னவாம்?  வளையல் தயாரா இருக்காம். வந்து வாங்கிக்கச்  சொல்றார்! அட! அதுக்குள்ளேயா?

ஒரு குட்டித்தூக்கம் போட்டுட்டுப் போகலாமுன்னு  எண்ணம். அப்படியே ரெண்டு நாளா  மெயில் பார்க்கலை, தோழிகளோடு பேசலைன்னு  சில.  நெட் இல்லாம இருக்க இப்பெல்லாம்  கஷ்டமாப் போச்சு. இதெல்லாம் நல்லதுக்கா இல்லை கெட்டதுக்கான்னு  தெரியலை. காலம் போற போக்கு...... இதுக்கு நடுவிலே  நேத்தும் இன்றைக்குமா எடுத்த படங்களை  இன்னொரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவில் சேமிச்சு வைக்கணும்,  கெமெரா பேட்டரிகளை சார்ஜ் செய்யணும் இப்படி  இன்னும் சில.....

ஒரு  அஞ்சு மணிக்குக் கிளம்பி  மங்கேஷ் தெருவுக்குப் போனோம்.  வளையல்கள் பளபளன்னு ஜொலிக்குது.  பழைய டிஸைன்தான்! எதிரில் இருக்கும் சூர்யா டெக்கில் வளையல்களை  தரம் பார்த்துட்டு வந்தாங்க. ஓகே!  இந்தாண்டை ஒரு நாலு கடை தள்ளி இருக்கும்  இன்னொரு இடத்தில் ஹால் மார்க் ஸ்டாம்ப் போட்டு வாங்கிக்கலாமுன்னு  பாபுவை அங்கே அனுப்பினார் நம்ம ஆசாரி.

ஒரு  சின்ன ப்ளாஸ்டிக் டப்பாவில் 'சேதாரம்' ஆன தங்கம் இருந்தது.  நைஸா அரைச்சு வஸ்த்ரகாயம் செஞ்ச மாவு போல ஒரே தூள்.......  அதை  உருக்கி  மற்ற நகை செய்யும்போது  சேர்த்துக்கலாமுன்னு சொன்னார்.  சரின்னுட்டோம். இப்பத் தோணுது, எவ்ளோ எடை இருந்துச்சுன்னு பார்த்திருக்கலாமோன்னு...  ப்ச்...

மெஷீன் கட்டிங் என்பதால்  ஒரே நாளில் வேலை நடந்து முடிஞ்சுருக்கு!  மற்றவைகளை ஒவ்வொன்னா  டிஸைன் முடிக்க முடிக்க  வாட்ஸ் அப்பில் அனுப்பறேன்னு நம்ம நம்பரை  அவர் செல்லில் போட்டுக்கிட்டார் பாபு.

கிளம்பி  இப்போ பாண்டிபஸார் வந்துருந்தோம்.  சூடா ஒரு காஃபி சரவணபவனில்.  சென்னைக்கு வந்தால்  தினமும்  மாலைக் கடமை ஒன்னு எனக்கிருக்கு. பூ வாங்கிக்கணும். அதுவும் பிச்சியைக் கண்டால் நானும் பிச்சிதான்!  ஒவ்வொரு பயணத்திலும்  எதாவது ஒரு பூக்காரம்மாவுக்கு ரெகுலர்கஸ்டமராக ஆகிருவேன்.  இந்தப் பயணத்தில்  ரத்னா ஸ்டோருக்கு முன்னால்  நடைபாதைக் கடை!

அறைக்குத் திரும்பும்போதே...  இன்னும் சந்திக்கவேண்டிய உறவினர்கள்,  நண்பர்கள் பட்டியலை மனசுக்குள் எடுத்துப் பார்த்தப்ப,  தம்பியைப் போய்ப் பார்த்தால் என்னன்னு தோணுச்சு.  முதலில் அவருக்கு நேரம் இருக்கணுமே!
செல்போனில் சேதி அனுப்பினதும்  வரச் சொல்லிட்டார். ஏழு மணி நம்ம நேரம்! பத்து நிமிஷம் இருக்கும்போது கிளம்பலாம்னார் நம்மவர். இது இந்தியான்னு ஞாபகம் வச்சுக்குங்கன்னேன்.

வீட்டு வாசலில் (!)  வண்டியை நிறுத்தியாச்சு. அங்கென்னவோ   தெருவில் வேற எதோ விசேஷமோ இல்லை அரசியல்வியாதி வீட்டு விழாவான்னு  தெரியலை. கூட்டமுன்னா அப்படி ஒரு கூட்டம்.  ஏற்கெனவே வந்த வீடுன்னாலும் இப்ப வீடு எங்கேன்னு குழப்பமாப் போயிருச்சு.

திரும்ப  அவருக்கே ஃபோன் பண்ணி விலாசம் கேட்டால்....   அவர் 'அட!  அங்கேயா போயிட்டீங்க? இப்ப இங்கே இருக்கேன்' னு இன்னொரு விலாசம் சொல்றார்.வீட்டை மறந்த அக்கா....  ரொம்ப நல்ல அக்கா :-)

சரியான இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.  இவருக்கு நான் சேச்சி ஆனதே தனிக் கதை:-)   மரத்தடி காலத்தில் ஒருநாள் ஹாதீம்தாய் என்ற சினிமாவை நான்  சிலாகிச்சு எழுதப்போய்,  அதில் ஆர்வமா பங்கெடுத்துக்கிட்டு விசாரிச்சவர் இவர். அப்புறம் தனிமடலில் தொடர்பு. ரெண்டு பேருக்கும் பிடிச்ச நடிகை ஸ்ரீவித்யா.  அப்படியே  பேச்சு நீடிச்சுப் போய்க்கிட்டு இருந்த  ஒரு விநாடி நான்  அக்கா ஆனேன்:-)
என் எழுத்துகளை நம்ம சுஜாதாவரை கொண்டு போய் சேர்த்தவர் இவர்! இதை எப்பவும் நினைவில் நன்றியுடன்  வச்சுருக்கேன்!

பதிவர்கள் எல்லோரும் ஒரு குடும்பம், நட்பு என்றதையும் தாண்டி  உறவினர் என்ற நிலைக்கு வந்துருக்கோமுன்னு நான் நினைப்பதும் சொல்வதும் சரிதானே? அங்கிருந்துதான் இப்போ எல்லோரும் தனிக்குடித்தனமா அவரவர் வலைப்பக்கம், ஃபேஸ்புக் என்று  வந்துட்டாலும் கூட அந்த ஆரம்பகால நட்பும் தொடர்பும் இன்னமும்  மாறாமல் தான் இருக்கு!
அன்பான வரவேற்பு. நேத்து  பேசிக்கிட்டு இருந்ததை இப்போ தொடர்வது போல  இடைப்பட்ட காலம் காணாமப் போயிருந்துச்சு எங்கள் பேச்சில். வேலையில் இருந்து  ஓய்வு. 'அதான் பார்க்கலையா ஃபேஸ்புக்கில்  நிறைய எழுதிக்கிட்டு இருக்கேனே'ன்னார்.

இதுவரை வெளிவந்த புத்தகங்களின் எண்ணிக்கை என்பது கூட  கணக்கில் வச்சுக்க முடியலை என்னால்.  போனவாரம் கூட மூணு புத்தகங்களின் வெளியீட்டு விழா நடந்ததே!  ஏகப்பட்ட விருதுகள்!

தொடர்கள் அடுக்கடுக்காக வந்துக்கிட்டே இருக்கு! ஒரே சமயத்தில் வெவ்வேற தொடர்கள்!  எப்படி இந்த செப்பிடு வித்தைன்னு இன்னும் புரியலை எனக்கு!  எழுத்தாளர்  பெயரைச் சொன்னேனோ?   இரா மு  என்று  அன்பாக எல்லோரும் குறிப்பிடும்  இரா முருகன் தான்  இவர்!



கோபாலும், இரா முவும் க்ரிக்கெட் பேச்சுகளில்  மூழ்கி இருந்தாங்க.அஷ்வின் முருகன் இப்போ க்ரிக்கெட்டில் பிரபலம்!   ஐபிஎல் விளையாட்டு!  அவருடைய மனைவியுடன் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தேன்.  மெள்ள ஒரே ஒரு கேள்வி கேட்டேன்....

"உங்க மாமனாரின் புத்தகங்களை  வாசிப்பது உண்டா?"

'இல்லை ஆன்ட்டி'ன்னு சொல்லிச் சிரிச்சாங்க! எளிய சொற்களில் இருப்பதை   வாசிக்க முடியுமாம். 'அப்படியா? இந்தாங்க அக்கா. படிச்சுட்டு மாமனாரிடம் கொடுத்துருங்க'ன்னேன்:-)

மாம்பழ ஜூஸ்  கிடைச்சது!

கதைகள் பிரஸவிக்கும்  அறையைக் கொண்டுபோய்க் காமிச்சார். உண்மையான லேபர் வார்ட்!!!
எனக்கு ரெட்டைக் குழந்தைகள் அன்பளிப்பு வேற!   அரசூர்வம்சம் & விஸ்வரூபம். அச்சுதம் கேசவம்  கைக்கு வரலைன்னார்.  எனக்குப் புத்தக விழாவில் கிடைச்சுருச்சுன்னேன்.
வெளியே எங்கேனும் போய் சாப்பிடலாமான்னு கேட்டதுக்கு ,  க்ராண்ட் ஸ்வீட்ஸ் ரெஸ்டாரண்ட்க்குப் போகலாமான்னார்.  கூட்டமும்  சத்தமும்  அதிகமா இருக்கும். எங்கியாவது  அமைதியான இடத்துக்குப் போகலாமேன்னு  நம்ம லோடஸில் இருக்கும்  க்ரீன்வேஸ்க்கே  வந்துட்டோம்.  மகள் வரலை. அம்மா வீட்டுக்கு,  பெத்த அம்மா வீட்டுக்குப் போகணுமாம்.

சிம்பிளான சாப்பாடு, நிறைய பேச்சுன்னு  மாலைப்பொழுது  இனிதாகப் போச்சு.
 கோபாலேட்டனும் துளசி சேச்சியும் இந்நு ஒரு வல்லிய எழுத்துகாரரைக் கண்டு!

 சொல்ல விட்டுப்போச்சே....  நம்ம நியூஸிலாந்து  புத்தகத்துக்கு  மதிப்புரை எழுதி, புத்தகத்துக்குப் பெருமை சேர்த்தவர் இவரே!  வாசிக்க , க்ளிக் ப்ளீஸ்.


தொடரும்...... :-)


12 comments:

said...

அருமை. அன்பும் நட்பும் என்றும் நிலைக்கட்டும்.
வாழ்த்துகள் துளசி.

said...

தொடரட்டும் பதிவர் சந்திப்பு..... திருச்சிக்கு எப்ப வறீங்க? :)

said...

அருமையான பதிவு ... அருமையான பயணம் .. ஒரு வழியா மூன்று மாத பதிவுகளை படிச்சு முடிச்சாச்சு .. Now I am also "ON TRACK ". :)

said...

சேதாரத் தங்கத்தைக் கையிலேயே கொடுத்துட்டாங்களே. நல்ல ஆசாரி போல இருக்கு. நல்லபடி வாழ்க.

பூக்கள் விற்பதைத் தொழிலாச் செஞ்சாலும் பொழைக்க வாய்ப்பிருக்கு இந்தியாவுல.

இரா.முருகனோடு சந்திப்பா. நல்ல இலக்கியச் சந்திப்பாகவும் இருந்திருக்கும்.

said...

வாங்க வல்லி.

என்ன தவம் செய்தோம்ப்பா.......... அன்பு கொட்டிக் கிடக்கே ....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இன்னும் பத்து நாள் கழிச்சுதானே திருச்சிக்கே வர்றோம்! அதுக்குள்ளே இடையில் எத்தனை பதிவுகளோ! பெருமாளுக்கே வெளிச்சம்:-)

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்!

ஆஹா.... அர்ரியர்ஸ் க்ளியர் பண்ணியாச்சா! போனஸ் மார்க் 50 :-)

said...

வாங்க ஜிரா.

நியாயமா எதோ ஒரு தொழில் செஞ்சா பிரச்சனை இல்லாமல் வாழ்க்கை நடந்துருது இல்லே!

தங்கத்தூள் வேற ஒரு நகைக்குப் பயன்பட்டது! நம்ம ஆசாரி நல்லவராத்தான் இருக்கார் எனக்குத் தெரிஞ்சவரை. அப்படியே இருக்கணும்!

இலக்கிய சந்திப்பா? ஊஹூம்... அதை விட்டுட்டு மற்றதெல்லாம்தான் பேசினோம்:-)

said...

அருமை துளசி . சுஜாதா.. யே யப்பா அவ்ளோ பெரிய ஆளா நீங்க. முருகன் சார் கூட.. ஜெலஸ் ஆயிட்டு துள்சி :)

said...

அம்மா வணக்கம். நானும் அதே மங்கேஷ் தெருவுலதான் வேலை பார்க்கிறேன். நீங்க வந்து போன பின்பு தான் எனக்கு உங்கள் பதிவு மூலமா தெரியவருது. வாழ்த்துக்கள். நீங்க அருமைய எழுதிரிங்க. நீங்க எங்கு சென்றாலும் படத்தோட பதிவும் அருமைய இருக்கு. வாழ்த்துக்கள். நன்றி. கருணாகரன், சென்னை

said...

வாங்க தேனே!

என்ன ஜெலஸா? அதுவும் உங்களுக்கா !!!!! ஹைய்யோ!!! நம்பணுமா :-)

said...

வாங்க கருணாகரன்.

வணக்கம். நலமா? போனமுறை கூட உங்க பின்னூட்டம் மங்கேஷ் தெரு விஜயத்துக்கு வந்ததே!

உண்மையைச் சொன்னால் அங்கே வந்தப்பெல்லாம் இங்கே துளசிதளம் வாசகர் ஒருத்தர் இருக்கார்னு நம்ம கோபாலிடம் சொல்லிக்கிட்டு இருந்தேன்.

எல்லாப் பயணத்திலும் குறைஞ்சது ஒருமுறையாவது மங்கேஷ் தெரு வரவேண்டிதான் இருக்கு:-)

துளசிதளம் பதிவுகளை ரசிப்பதற்கு என் நன்றிகள்.