அம்மா எப்பவாவது போகும்போதே இந்தக் கூத்துன்னா, தினம் தினம் வெளியே போகாமல் இருப்பது எவ்ளோ நல்லது பாருங்க! தில்லக்கேணி மீசைக்காரனைப் பார்த்துட்டு வரலாமுன்னு காலையில் கிளம்பிப் போய்க்கிட்டு இருக்கோம். அதென்னவோ இந்தப் பக்கம் போ அந்தப் பக்கம் போன்னு நம்மை சுத்திச் சுத்தி விரட்டி இப்போ சிடிசெண்டருக்குப் பக்கம் போய்க்கிட்டு இருக்கோம்.
வழியெல்லாம் உலகில் எத்தனை வித வாழ்த்துகளும், பட்டப்பெயர்களும் இருக்கோ அத்தனை பேனர்கள்! எல்லாத்தையும் இவுங்களே எடுத்துக்கிட்டா, வேற கட்சிகள் என்ன பண்ணுமாம்? இதுக்குன்னு தனியா ஒரு பிரிவை ஏற்படுத்தி, புதிய சொற்களை அகராதியில் உண்டாக்கணும் போல! செம்மொழியில் கிடைக்காமலா போயிரும்?
சிடி சென்டரைப் பார்த்தவுடன், மகளுக்கு வாங்க வேண்டிய லிஸ்ட்டில் இருப்பதில் எதாவது கிடைக்குமோன்னு அங்கே போனோம். கடைகளைப் பத்துமணிக்குத் தான் திறப்பாங்களாம். அப்புறம் பார்த்துக்கலாமுன்னு நேரா பார்த்தசாரதிதான்.
முதலில் முன்மண்டபத்தில் சீதையைத் தேடினேன். விஷமிகள், செய்கையைப் பார்னு ஆஞ்சி அழுதது :-( நம்ம சனம் ஏன் இப்படிக் கேவலமா நடந்துக்குதுன்னு எரிச்சல்தான்.
உள்ளே ஒரு கல்யாணம். மணமக்களை வாழ்த்திட்டுக் கொஞ்சம் க்ளிக்ஸ்.
இன்றைக்குக் கூட்டம் அவ்வளவா இல்லை... தர்ம தரிசன வரிசை காலி! உண்மையா இதன் வழியாப் போறதுதான் எனக்குப் பிடிக்கும். நம்ம ராமரையும், ரங்கனையும் சேவித்தபடியே முட்டைக் கண்ணனை தரிசிக்கப் போகலாம். நம்முடைய நேரப் பிரச்சனையால் சீக்ர தரிசனம் போனால்.... நேரா மூலவர்தான் :-(
இப்பெல்லாம் பளீர் விளக்கு போட்டுருப்பதால் தரிசனம் ரொம்ப இனிமையா இருக்கு. கொஞ்சநேரம் நின்னு ரசிச்சு, மன உருகி, நாலு வார்த்தை பேசிக்கவும் முடிஞ்சது. மனைவி, புள்ளை, பேரன்னு குடும்பத்தோடு இருப்பதால் அவரும் மகிழ்ச்சியாத்தான் இருக்கார். கையில் சக்கரம்கூடக் கிடையாது!
மூலவர் தரிசனத்துக்குப் பிறகு, வழக்கம்போல் தாயார், கஜேந்த்ர வரதர், யோகநரசிம்ஹர் னு போய் கும்பிட்டதும், நேரா நரசிம்ஹருக்கு எதிரில் இருக்கும் முற்றத்தில் கொடிமரத்தையும், பெரிய திருவடியையும் நமஸ்கரிச்சுட்டு, விடுவிடுன்னு கோபுர வாசலுக்கு வெளியில் நாலடி எடுத்து வச்சு நம்ம பாரதியின் வீட்டையும் நின்ன இடத்தில் இருந்தே பார்த்து ஒரு கும்பிடும் போட்டுட்டுத் திரும்ப கோவிலுக்குள் வந்து நம்ம ஆண்டாளம்மாவுக்குத் தூமணி பாடிட்டுக் கடைசியாப் போய் நின்னது பிரஸாதக் கடையில்தான்:-) இன்றைக்கு ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு அதிரசமும், லட்டும் வாங்கினேன். மூணு பேருக்கு மூணு என்ற கணக்கு :-)
திரும்பி பீச் ரோடில் வர்றோம். அப்ப நம்மவர் சொல்றார், அவருடைய நண்பர்(!) வீட்டுக்கு ஒரு நடை போயிட்டு வரலாமான்னு... 'அய்க்கோட்டே... எனிக்கு ஒரு விரோதமும் இல்லையாக்கும்'னு ராதாகிருஷ்ணன் சாலையில் திரும்பினோம்.
தொழிலதிபர். மகனும் க்ரிக்கெட்டில் ஸ்ரீலங்கா டீமில் (நம்ம ஐபிஎல் போல எதோ ஒன்னு) விளையாடறார். மகள் சட்டக் கல்லூரி மாணவி. கலையோடு சம்பந்தப்பட்ட ஒரு இடத்தில் இருக்காங்க. நம்ம நாட்டியப் பேரொளி பத்மினியின் 'வீடாக இருந்த இடத்தில்' இப்போ இவுங்க. இவரை எனக்கும் தெரியுமென்றாலும், வீட்டுக்குப் போவதும், குடும்பத்தினரைச் சந்திப்பதும் இதுதான் முதல்முறை.
ஒருத்தரைப் பார்க்கப் போகும்போது ஒன்னும் வாங்கிக்கலையேன்னு தோணுச்சு. கையில் பெருமாள் பிரஸாதம்தான் இருக்கே! அதுக்கு மிஞ்சியா வேறொன்னு?
ஒரு அரைமணி நேரம் போதுமுன்னு நினைச்சது, பகல் சாப்பாடு வரை நீண்டு போயிருச்சு.
அங்கிருந்து கிளம்பி இன்னொரு பிரபல எழுத்தாளருடன் சந்திப்பு. நம்ம ஏகாம்பரி வீடுதான்!
செல்லில் சேதி அனுப்பியவுடன், முதலில் இனியை உள்ளே கொண்டுபோய் விட்டுட்டு, அறைக் கதவைச் சாத்தி வச்சாங்க. ' பூ 'மட்டும் வாங்கன்னார், வாலை ஆட்டியபடி:-)
போனபயணத்தில் விட்ட பேச்சை, சரியா அதே பாய்ண்ட்டில் இருந்து தொடர்ந்தோம். அப்பதான் ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தாங்க. ஏகாம்பரியின் தாய் எழுதியது. முதலில் இப்படி கையால் கடிதம் எழுதும் பழக்கமே மறைஞ்சுபோன காலக் கட்டத்தில் இருக்கும் நமக்கு, இப்படி எழுதுன கடிதத்தைப் பார்ப்பதே ஒரு புண்ணியம்! அதுவும் வாசகர் கடிதம் என்றால்.......... கேக்கவா வேணும்!
கடிதத்தின் தேதியைப் பாருங்கன்னாங்க ஏகாம்பரி. 13- 9-2015 8.35 P.M
ஆஹா.... இன்றைக்கு என்ன தேதி? 29 - 1- 2016.
இவுங்களோட முதல் கடிதம் நம்ம ஜெயமோகனுக்கு! ரெண்டாவது அதிர்ஷ்டசாலி இந்தத் துள்சி!
இப்படி ஒரு பொக்கிஷம் கிடைச்சதும், மனம் அப்படியே நெகிழ்ந்து போயிருச்சு என்பது சத்தியமான உண்மை!
இப்பெல்லாம்தான் நாம் வலையில் எதை வாசிச்சாலும், (அதுவும் தெரிஞ்சவங்க எழுத்துன்னால்தான்!) மனசில் படுவதை உடனே ஒரு சில சொற்களில் பின்னூட்டமா போட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கோம். நேரம் எடுத்து விவரமா, விதரணையா எழுத 'நேரம் எங்கே இருக்கு'ன்னு இருந்துடறோமில்லையா? (இவுங்க வலை வாசிப்பாளர் இல்லை என்பது கூடுதல் தகவல்!)
இவுங்களுடைய இன்னொரு பொழுதுபோக்கு... கைப்பைகள் தயாரிப்பது. முழுக்க முழுக்க ஹேண்ட்மேட். விற்பனைக்கா? ஊஹூம்.... நட்புகள் சுற்றங்கள் விருந்தினர் என்று எல்லோருக்கும் கொடுக்கும் அன்பு மனம்!
ஒரு நாலைஞ்சு கைப்பைகளைக் கொண்டு வந்து காமிச்சு எது பிடிக்குமோ அதை எடுத்துக்கச் சொன்னாங்க. கரும்பு தின்னக் கூலியா? மகளுக்கும் ஒன்னு எடுத்துக்குங்கன்னதும் ரெட்டை மகிழ்ச்சி! கிடைத்த பொக்கிஷத்தை எனக்கான கைப்பையில் வச்சேன் :-)
அப்புறம் மாடித்தோட்டத்துக்குப் போனோம். அங்கேயும் நான் இருக்கேனே :-) போனமுறை பார்த்தபோது தலைக்கு மேலே வலை இல்லை. இப்போ பச்சை வலை அட்டகாசமா இருக்கு! ரியல் மாடித்தோட்ட லுக் வந்துருச்சு :-) வீட்டுத்தோட்டம் என்பது மனசுக்கு எவ்ளோ மகிழ்ச்சின்னு அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரியும்!
ஒரு பச்சை மிளகாய், ஒரு இணுக்குக் கருவேப்பிலை, ஒரு தக்காளின்னு சமையலுக்குத் தேவைப்படும் சமயம் டக்னு பறிச்சுக்கிட்டு வரும்போது ஒரு திருப்தி வரத்தான் செய்யுது எனக்கும்! என்ன ஒன்னு.... என் தோட்டத்தில் 'நான்' இல்லை ! குளிர் கொன்னு போட்டுருது :-(
தோட்டம் போட இடம் இல்லைன்னாக் கூட ரெண்டு மூணு தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம். கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்! பால்கனி இல்லைன்னாலும், அடுக்களை ஜன்னல் கட்டையில் வச்சால் ஆச்சு! ஒன்னும் சரியா இல்லையா? நோ ஒர்ரீஸ்... ஒரு பாட்டில் தண்ணியிலே ஒரு 'டெவில்ஸ் ஐவி'யைப் போட்டு வையுங்க! இதுதான் நம்மூர் மணி ப்ளான்ட் :-)
ஏகாம்பரி கையால் அருமையான காஃபி குடிச்சு, இன்னும் கொஞ்சம் பேச்சுன்னு இப்போதைக்கு முடிச்சதும் கிளம்பி அறைக்கு வந்து சேர்ந்தோம். கொஞ்ச நேர ஓய்வு.
பொழுதன்னிக்கும் திறந்து மூடறதாலோ என்னவோ என் கைப்பையின் ஸிப் மண்டையைப் போட்டுருச்சு. போகட்டும் வேற வாங்கிக்கலாமுன்னு நம்மவர் தாராளமனசோடு சொல்றார். நானோ கருமி! போனமுறை சென்னையில் வாங்குனதுதான் இது. இப்பதான் ரெண்டாவது முறையாப் பயன்படுத்தறேன். எதுக்கும் இந்த ஸிப்பை ரிப்பேர் செஞ்சுக்கமுடியுமான்னு பார்க்கலாமேன்னு பாண்டிபஸார் கிளம்பிப் போனோம்.
சென்னை கார்ப்பரேஷன் கட்டி விட்டுருக்கும் வணிக வளாகத்தில் (நம்ம நாயுடு ஹாலுக்கு நேர் எதிரே இருக்கும் மார்க்கெட் கட்டடத்தில் ) செஞ்சுதருவாங்கன்னு ஒரு கடையில் கிடைச்ச தகவலின் படிப் போனால் மாடியில் ரெண்டுமூணு பெட்டி, பை ரிப்பேர் கடைகள் இருந்துச்சு. பத்தே நிமிசம்! வேலை முடிஞ்சது. முப்பதே ரூபாய்! பெரியவருக்கு நன்றி சொன்னேன். கவனத்தில் வச்சுக்கவேண்டிய இடம் !
இதுவரை இந்த வளாகத்துக்குள் வந்ததே இல்லை..... மற்ற கடைகளில் ஒரு சுத்து. சில கடைகள் நல்லாவே இருக்கு! பசங்க அலங்காரத்துக்கு நீள் கூந்தல் ஆப்ட்டது! நம்ம ஜன்னுக்கு ஜடை போட்டுப் பார்க்கணும், ஒருநாள் :-)
ஆறடிக்கூந்தல் அத்தனையும் கடைச்சரக்கு:-)
பூக்கடைகளைத் தாண்டி வரும் சமயம், நகைக் கடையில் ஜொலிக்கும் க்ரீடங்களும், ஹாரங்களுமா ஒரு சின்ன பர்ச்சேஸ். இவ்வளவு தூரம் வந்துட்டு, வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் எதாவது ஒன்னு வாங்கிப்போகணுமா இல்லையா?
அப்படியே குழந்தைகளுக்கான ரெடிமேட் உடை கடையில் நம்ம ஜன்னுவுக்கு ஒரு பாவாடை சட்டை. நம்ம க்ருஷ்ணாவுக்குத்தான் எப்பவுமே கிடைக்காது. குழந்தைக்கு நான் தைச்சுப் போட்டுருவேன்.
சாமி விளக்கு (மின்சாரத்தில் இயங்குவது) தேடி ரத்னாவுக்குப் போனால் டிஃபன் கேரியர் வேணுமான்னார் நம்மவர் :-) இவ்வளவு சமைக்க என்னால் ஆகாது. ஆள் அவுட்! முதல்முறையா வாயைத் திறந்து வேணாமுன்னு சொன்னேன்:-)
அப்புறம் இன்னொரு கடையில் கிடைச்சது. அதிராம்பட்டினமாம் ஊரு! என்னை நினைவில் வச்சுக்குங்கம்மான்னார். அப்படியே நினைக்கவும் செஞ்சேன், அடுத்த சில நாட்களில்!
எதிர்சாரியில் இருக்கும் கீதா கஃபேக்குள் நுழைஞ்சு ராச்சாப்பாடு முடிஞ்சது! எனக்கொரு தோசை. இவருக்கொரு ஊத்தப்பம். ரொம்பப் பழைய வியாபாரம். இதுவரை அஞ்சு முதலாளிகள் இருந்துருக்காங்க! அஞ்சு தலைமுறைகளோ?
கல்லாவில் இருக்கும் பெரியவரை எனக்கு 2002 வில் இருந்து பார்க்கிறேன். அப்போ ஸில்வர்பார்க் அபார்ட்மெண்டில் ஜாகை. காலையில் முதல் வேலையா வெங்கடநாராயணா ரோடில், சாக்ஷாத் நாராயணனைக் கும்பிட்ட கையோடு காஃபி குடிக்க இங்கே வர்ற பழக்கம் வச்சுருந்தேன். புது டிகாஷனும் புதுப்பாலுமா சூப்பரா இருக்கும்!
சரி. ஒருநாளைப்போல ஒருநாள் இருக்கா? இன்றைய தினம் முடிஞ்சது. நாளைக்குப் பார்க்கலாம்!
தொடரும்....... :-)
வழியெல்லாம் உலகில் எத்தனை வித வாழ்த்துகளும், பட்டப்பெயர்களும் இருக்கோ அத்தனை பேனர்கள்! எல்லாத்தையும் இவுங்களே எடுத்துக்கிட்டா, வேற கட்சிகள் என்ன பண்ணுமாம்? இதுக்குன்னு தனியா ஒரு பிரிவை ஏற்படுத்தி, புதிய சொற்களை அகராதியில் உண்டாக்கணும் போல! செம்மொழியில் கிடைக்காமலா போயிரும்?
சிடி சென்டரைப் பார்த்தவுடன், மகளுக்கு வாங்க வேண்டிய லிஸ்ட்டில் இருப்பதில் எதாவது கிடைக்குமோன்னு அங்கே போனோம். கடைகளைப் பத்துமணிக்குத் தான் திறப்பாங்களாம். அப்புறம் பார்த்துக்கலாமுன்னு நேரா பார்த்தசாரதிதான்.
முதலில் முன்மண்டபத்தில் சீதையைத் தேடினேன். விஷமிகள், செய்கையைப் பார்னு ஆஞ்சி அழுதது :-( நம்ம சனம் ஏன் இப்படிக் கேவலமா நடந்துக்குதுன்னு எரிச்சல்தான்.
தாயாரும் பெருமாளும் உக்கார்ந்திருக்கும் வாகனம் என்னவா இருக்கும்?
இன்றைக்குக் கூட்டம் அவ்வளவா இல்லை... தர்ம தரிசன வரிசை காலி! உண்மையா இதன் வழியாப் போறதுதான் எனக்குப் பிடிக்கும். நம்ம ராமரையும், ரங்கனையும் சேவித்தபடியே முட்டைக் கண்ணனை தரிசிக்கப் போகலாம். நம்முடைய நேரப் பிரச்சனையால் சீக்ர தரிசனம் போனால்.... நேரா மூலவர்தான் :-(
இப்பெல்லாம் பளீர் விளக்கு போட்டுருப்பதால் தரிசனம் ரொம்ப இனிமையா இருக்கு. கொஞ்சநேரம் நின்னு ரசிச்சு, மன உருகி, நாலு வார்த்தை பேசிக்கவும் முடிஞ்சது. மனைவி, புள்ளை, பேரன்னு குடும்பத்தோடு இருப்பதால் அவரும் மகிழ்ச்சியாத்தான் இருக்கார். கையில் சக்கரம்கூடக் கிடையாது!
மூலவர் தரிசனத்துக்குப் பிறகு, வழக்கம்போல் தாயார், கஜேந்த்ர வரதர், யோகநரசிம்ஹர் னு போய் கும்பிட்டதும், நேரா நரசிம்ஹருக்கு எதிரில் இருக்கும் முற்றத்தில் கொடிமரத்தையும், பெரிய திருவடியையும் நமஸ்கரிச்சுட்டு, விடுவிடுன்னு கோபுர வாசலுக்கு வெளியில் நாலடி எடுத்து வச்சு நம்ம பாரதியின் வீட்டையும் நின்ன இடத்தில் இருந்தே பார்த்து ஒரு கும்பிடும் போட்டுட்டுத் திரும்ப கோவிலுக்குள் வந்து நம்ம ஆண்டாளம்மாவுக்குத் தூமணி பாடிட்டுக் கடைசியாப் போய் நின்னது பிரஸாதக் கடையில்தான்:-) இன்றைக்கு ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு அதிரசமும், லட்டும் வாங்கினேன். மூணு பேருக்கு மூணு என்ற கணக்கு :-)
திரும்பி பீச் ரோடில் வர்றோம். அப்ப நம்மவர் சொல்றார், அவருடைய நண்பர்(!) வீட்டுக்கு ஒரு நடை போயிட்டு வரலாமான்னு... 'அய்க்கோட்டே... எனிக்கு ஒரு விரோதமும் இல்லையாக்கும்'னு ராதாகிருஷ்ணன் சாலையில் திரும்பினோம்.
தொழிலதிபர். மகனும் க்ரிக்கெட்டில் ஸ்ரீலங்கா டீமில் (நம்ம ஐபிஎல் போல எதோ ஒன்னு) விளையாடறார். மகள் சட்டக் கல்லூரி மாணவி. கலையோடு சம்பந்தப்பட்ட ஒரு இடத்தில் இருக்காங்க. நம்ம நாட்டியப் பேரொளி பத்மினியின் 'வீடாக இருந்த இடத்தில்' இப்போ இவுங்க. இவரை எனக்கும் தெரியுமென்றாலும், வீட்டுக்குப் போவதும், குடும்பத்தினரைச் சந்திப்பதும் இதுதான் முதல்முறை.
ஒருத்தரைப் பார்க்கப் போகும்போது ஒன்னும் வாங்கிக்கலையேன்னு தோணுச்சு. கையில் பெருமாள் பிரஸாதம்தான் இருக்கே! அதுக்கு மிஞ்சியா வேறொன்னு?
ஒரு அரைமணி நேரம் போதுமுன்னு நினைச்சது, பகல் சாப்பாடு வரை நீண்டு போயிருச்சு.
அங்கிருந்து கிளம்பி இன்னொரு பிரபல எழுத்தாளருடன் சந்திப்பு. நம்ம ஏகாம்பரி வீடுதான்!
செல்லில் சேதி அனுப்பியவுடன், முதலில் இனியை உள்ளே கொண்டுபோய் விட்டுட்டு, அறைக் கதவைச் சாத்தி வச்சாங்க. ' பூ 'மட்டும் வாங்கன்னார், வாலை ஆட்டியபடி:-)
போனபயணத்தில் விட்ட பேச்சை, சரியா அதே பாய்ண்ட்டில் இருந்து தொடர்ந்தோம். அப்பதான் ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தாங்க. ஏகாம்பரியின் தாய் எழுதியது. முதலில் இப்படி கையால் கடிதம் எழுதும் பழக்கமே மறைஞ்சுபோன காலக் கட்டத்தில் இருக்கும் நமக்கு, இப்படி எழுதுன கடிதத்தைப் பார்ப்பதே ஒரு புண்ணியம்! அதுவும் வாசகர் கடிதம் என்றால்.......... கேக்கவா வேணும்!
கடிதத்தின் தேதியைப் பாருங்கன்னாங்க ஏகாம்பரி. 13- 9-2015 8.35 P.M
ஆஹா.... இன்றைக்கு என்ன தேதி? 29 - 1- 2016.
இவுங்களோட முதல் கடிதம் நம்ம ஜெயமோகனுக்கு! ரெண்டாவது அதிர்ஷ்டசாலி இந்தத் துள்சி!
இப்படி ஒரு பொக்கிஷம் கிடைச்சதும், மனம் அப்படியே நெகிழ்ந்து போயிருச்சு என்பது சத்தியமான உண்மை!
இப்பெல்லாம்தான் நாம் வலையில் எதை வாசிச்சாலும், (அதுவும் தெரிஞ்சவங்க எழுத்துன்னால்தான்!) மனசில் படுவதை உடனே ஒரு சில சொற்களில் பின்னூட்டமா போட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கோம். நேரம் எடுத்து விவரமா, விதரணையா எழுத 'நேரம் எங்கே இருக்கு'ன்னு இருந்துடறோமில்லையா? (இவுங்க வலை வாசிப்பாளர் இல்லை என்பது கூடுதல் தகவல்!)
ஒரு நாலைஞ்சு கைப்பைகளைக் கொண்டு வந்து காமிச்சு எது பிடிக்குமோ அதை எடுத்துக்கச் சொன்னாங்க. கரும்பு தின்னக் கூலியா? மகளுக்கும் ஒன்னு எடுத்துக்குங்கன்னதும் ரெட்டை மகிழ்ச்சி! கிடைத்த பொக்கிஷத்தை எனக்கான கைப்பையில் வச்சேன் :-)
அப்புறம் மாடித்தோட்டத்துக்குப் போனோம். அங்கேயும் நான் இருக்கேனே :-) போனமுறை பார்த்தபோது தலைக்கு மேலே வலை இல்லை. இப்போ பச்சை வலை அட்டகாசமா இருக்கு! ரியல் மாடித்தோட்ட லுக் வந்துருச்சு :-) வீட்டுத்தோட்டம் என்பது மனசுக்கு எவ்ளோ மகிழ்ச்சின்னு அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரியும்!
ஒரு பச்சை மிளகாய், ஒரு இணுக்குக் கருவேப்பிலை, ஒரு தக்காளின்னு சமையலுக்குத் தேவைப்படும் சமயம் டக்னு பறிச்சுக்கிட்டு வரும்போது ஒரு திருப்தி வரத்தான் செய்யுது எனக்கும்! என்ன ஒன்னு.... என் தோட்டத்தில் 'நான்' இல்லை ! குளிர் கொன்னு போட்டுருது :-(
தோட்டம் போட இடம் இல்லைன்னாக் கூட ரெண்டு மூணு தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம். கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்! பால்கனி இல்லைன்னாலும், அடுக்களை ஜன்னல் கட்டையில் வச்சால் ஆச்சு! ஒன்னும் சரியா இல்லையா? நோ ஒர்ரீஸ்... ஒரு பாட்டில் தண்ணியிலே ஒரு 'டெவில்ஸ் ஐவி'யைப் போட்டு வையுங்க! இதுதான் நம்மூர் மணி ப்ளான்ட் :-)
ஏகாம்பரி கையால் அருமையான காஃபி குடிச்சு, இன்னும் கொஞ்சம் பேச்சுன்னு இப்போதைக்கு முடிச்சதும் கிளம்பி அறைக்கு வந்து சேர்ந்தோம். கொஞ்ச நேர ஓய்வு.
பொழுதன்னிக்கும் திறந்து மூடறதாலோ என்னவோ என் கைப்பையின் ஸிப் மண்டையைப் போட்டுருச்சு. போகட்டும் வேற வாங்கிக்கலாமுன்னு நம்மவர் தாராளமனசோடு சொல்றார். நானோ கருமி! போனமுறை சென்னையில் வாங்குனதுதான் இது. இப்பதான் ரெண்டாவது முறையாப் பயன்படுத்தறேன். எதுக்கும் இந்த ஸிப்பை ரிப்பேர் செஞ்சுக்கமுடியுமான்னு பார்க்கலாமேன்னு பாண்டிபஸார் கிளம்பிப் போனோம்.
சென்னை கார்ப்பரேஷன் கட்டி விட்டுருக்கும் வணிக வளாகத்தில் (நம்ம நாயுடு ஹாலுக்கு நேர் எதிரே இருக்கும் மார்க்கெட் கட்டடத்தில் ) செஞ்சுதருவாங்கன்னு ஒரு கடையில் கிடைச்ச தகவலின் படிப் போனால் மாடியில் ரெண்டுமூணு பெட்டி, பை ரிப்பேர் கடைகள் இருந்துச்சு. பத்தே நிமிசம்! வேலை முடிஞ்சது. முப்பதே ரூபாய்! பெரியவருக்கு நன்றி சொன்னேன். கவனத்தில் வச்சுக்கவேண்டிய இடம் !
இதுவரை இந்த வளாகத்துக்குள் வந்ததே இல்லை..... மற்ற கடைகளில் ஒரு சுத்து. சில கடைகள் நல்லாவே இருக்கு! பசங்க அலங்காரத்துக்கு நீள் கூந்தல் ஆப்ட்டது! நம்ம ஜன்னுக்கு ஜடை போட்டுப் பார்க்கணும், ஒருநாள் :-)
ஆறடிக்கூந்தல் அத்தனையும் கடைச்சரக்கு:-)
பூக்கடைகளைத் தாண்டி வரும் சமயம், நகைக் கடையில் ஜொலிக்கும் க்ரீடங்களும், ஹாரங்களுமா ஒரு சின்ன பர்ச்சேஸ். இவ்வளவு தூரம் வந்துட்டு, வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் எதாவது ஒன்னு வாங்கிப்போகணுமா இல்லையா?
அப்புறம் இன்னொரு கடையில் கிடைச்சது. அதிராம்பட்டினமாம் ஊரு! என்னை நினைவில் வச்சுக்குங்கம்மான்னார். அப்படியே நினைக்கவும் செஞ்சேன், அடுத்த சில நாட்களில்!
கல்லாவில் இருக்கும் பெரியவரை எனக்கு 2002 வில் இருந்து பார்க்கிறேன். அப்போ ஸில்வர்பார்க் அபார்ட்மெண்டில் ஜாகை. காலையில் முதல் வேலையா வெங்கடநாராயணா ரோடில், சாக்ஷாத் நாராயணனைக் கும்பிட்ட கையோடு காஃபி குடிக்க இங்கே வர்ற பழக்கம் வச்சுருந்தேன். புது டிகாஷனும் புதுப்பாலுமா சூப்பரா இருக்கும்!
சரி. ஒருநாளைப்போல ஒருநாள் இருக்கா? இன்றைய தினம் முடிஞ்சது. நாளைக்குப் பார்க்கலாம்!
தொடரும்....... :-)
18 comments:
பார்த்தசாரதி கோவிலும் ,பிரசாதமும் ...அருமை
வாசகி கடிதம்....பொக்கிஷம்
டிபன் கேரியர் ....ஆஹா ..!
அதிரசமும் லட்டும் எடுத்துக் கொண்டு உங்களை பின் தொடருகிறேன் டீச்சர்...
பார்த்தசாரதி நீங்கள் அடிக்கடி பார்த்த சாரதி. அன்று குருச்சேத்திரத்தில் வெற்றிச் சங்கம் ஆர்த்த சாரதி.
போன மாசம் போய்ப் பாத்துட்டு வந்தேன். நல்லா பக்கத்துல நின்னு பாக்க முடிஞ்சது.
கல்யாணம் பண்ணி வைக்கிற பூசாரி டெரர்ரா இருக்காரு.
எழுத்தாளர் ஏகாம்பரி வீட்டுக்கு நானும் போயிருக்கேன். நல்ல லெமன் டீ குடிக்கக் கிடைச்சது. பூவோட வரவேற்பும் கொஞ்சல்களும். மாடித்தோட்டம் அருமையா இருக்கு. வெயில் கொறைஞ்ச பிறகு தோட்டம் போடனும்.
பாண்டி பஜாருக்கு அத்தனை வாட்டி போயிருக்கேன். அந்த வணிக வளாகத்துக்குப் போனதில்ல. ஒருநாள் போய்ப் பாத்துறனும்.
எவ்ளோ பெரிய டிபன் கேரியர். இது ஓட்டல்காரங்க வாங்குறாங்க. அவுட்டோர் கேட்டரிங் பண்றப்போ இது அவங்களுக்கு வசதியா இருக்கு. ஆனா இத்தன அடுக்குலயும் சாப்பாட்டை வெச்சப்புறம் ஒரு ஆள் தூக்க முடியாது. அவ்வளவு கனக்குமே.
கீதாகபே நான் சின்ன வயசுல இருந்து அதே எடத்துல இருக்கு. அதுக்குன்னு ஒரு கூட்டம் வந்துக்கிட்டுதான் இருக்கு. எட்டு வருடங்களுக்கு முன்னாடி அங்க பாதாம்பால் குடிச்சேன். இன்னும் அந்தத் தித்திப்பும் சுவையும் மனசுல இருக்கு.
பலதெரியாத மனிதர்கள் பற்றிய செய்தி சில புகைப்படங்களுக்கு விவரமே இல்லையோ வாழ்த்துகள்
அடே ! அதே டிபன் பாக்ஸ் தான். அதே சைஸ் தான்.
கோபால் பாருங்க..கரெக்டா எடுக்காராறு.
அடுத்த தடவை நீங்க வரும்போது,
சாக்லட் எல்லாம் வேண்டாம்.
இந்த டிபன் பாக்ஸ் லே ஓவ்வோன்னு லேயும் சக்கர பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, தயிர் சாதம்
தொட்டுக்க வடை எல்லாம் எடுத்துண்டு
வந்தீங்கன்ன நம்ம எல்லோரும் சேர்ந்து
நம்ம வீட்டிலேயே லஞ்ச் சாப்பிடலாம்.
அப்படின்னு நான் சொல்லல்லே.
இந்த அக்கா வீட்டுக் காரர் சொல்றாரு.
மீனாச்சி பாட்டி.
1. அங்கு அதிரசம் ஓகே. லட்டு சரியில்லை. மைசூர்பாக் நன்றாக இருக்கும் (இப்போல்லாம் மைசூர்பாகு என்று சொல்லி எண்ணெய்/நெய் போட்டு மாவாக் கொடுத்துற்றாங்க. பழைய விதத்தில் செய்யும் மைசூர்பாக்கை டிரெடிஷனல் என்று கேட்டு வாங்க வேண்டியிருக்கு). புளியோதரையும் பரவாயில்லை. இருந்தாலும் பிரசாதம் (என்று நினைக்கிறேன்) என்ற பேரில் ஒரு சென்டிமென்ட் அட்டாச்'மென்ட் இருக்கத்தான் செய்கிறது.
2. ஜனவரி 2016ன் கதை. எலெக்ஷன் காலம் அல்லவா. வேட்பாளராக ஆக வேண்டாமா? அல்லது அம்மாவின் கவனத்திலாவது வர வேண்டாமா? அதனால்தான் பட்டங்களும் பதாகைகளும் கொஞ்சம் தூக்கலாக இருந்திருக்கும். இப்போ பதவிக்கு வந்துவிட்டதனால, இன்னும் கொஞ்ச காலம் (ஆறு மாதம்? அல்லது தீர்ப்பு வந்தபிறகு?) பதாகைக்கு எல்லாம் வழியில்லை. அம்மாவே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். கும்பிடு கோவிந்தசாமிகளுக்கும் அதுவரை வேலையில்லை என்று சொல்லியாச்சு.
3. பெரிய டிபன் கேரியர்கள், சினிமா படப்பிடிப்பு/தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்புகளுக்கு உபயோகமானது. இப்போ இதைக் கொண்டுபோய், சரவணபவன்'களில், சாப்பாடு பார்சல் பண்ணித் தாங்க என்று சொன்னால், எத்தனை நூறு சாப்பாடு என்று கேட்டாலும் கேட்டுவிடுவார்கள்.
4. இது'நாள்வரை, சுப்புத் தாத்தா அவர்கள் வீட்டில் மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரு 5-8 பேர் இருப்பார்கள் என்று நினைத்தேன். விருந்தினர்கள் மூன்று பேர் சேர்ந்து மொத்தம் 10 பேரே ஜாஸ்தி. அவங்க வீட்டிலிருந்து வந்த ரிக்கொஸ்டைப் பார்த்தால் (கலந்த சாதங்கள் வடை ...), அவர்கள் வீட்டுக்குக் கீழ்த்தளத்தில் நர்சரியே வைத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.
டிஃபன் கேரியர்.... செமயா இருக்கே....
கடிதம் மிக அருமை.
பயண அனுபவங்கள் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
வரும் கொலுவில் ஜன்னு பாவடையில் ஜொலிப்பாள்.
எங்க அம்மா ருக்குமணி எப்படி இருக்காங்க ?? அவங்க நல்லா இருந்தா பர்த்துவும் நல்லவே இருப்பார் .. குடும்பமும் தரிசனம் கிடைக்குமா ??#டவுட் நான் போன போது மனைவி மகன் தரிசனம் தான் ஆச்சு
வாங்க அனுராதா ப்ரேம்.
வருகைக்கும் பாய்ண்ட் பாய்ண்ட்டா சொன்ன கருத்துக்கும் நன்றிகள்!
வாங்க ரோஷ்ணியம்மா.
தொடர்ந்து வருவது மகிழ்ச்சி. என் நன்றிகள்!
வாங்க ஜிரா.
சொன்னது அத்தனையும் ரொம்பச் சரி. எட்டு வருசத்துக்கு முன்னேயும் அந்தப் பெரியவர்தான் கல்லாவில் இருந்திருப்பார் என்பது உறுதி!
டிஃபன்கேரியர் தூக்கவே நாலு ஆள் வேணும்:-)
நம்ம பார்த்தசாரதி........ பெரிய உருவம். பளீர் விளக்கு. மேலும் ரொம்பக்கிட்டே பார்க்கும் அமைப்பு இப்படி எல்லாமே நல்லா இருக்கு! அர்ச்சனை டிக்கெட் வாங்கினால் இன்னும் கொஞ்சநேரம் நின்னும் தரிசிக்கலாம். இதொன்னும் திருப்பதியில் இல்லை என்பதுதான் என் மனக்குமுறல் :-(
வாங்க ஜிஎம்பி ஐயா.
வாழ்க்கைப் பயணத்தில்தான் எத்தனை விதவிதமான மக்களை சந்திக்கிறோம் பாருங்க! கூடியவரை படங்களுக்கு விவரம் கொடுப்பது உண்டு. ஆனாலும்.... சில நேரம் விட்டுப்போயிருது போல....
வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க சுப்பு அத்திம்பேர்.
அஞ்சு ஐட்டம்தான் சொல்லி இருக்கீங்க. அது ஆறு அடுக்கில்லையோ! அடப்ரதமன் கொண்டு வந்தால் தேவலையா அந்த ஆறாம் அடுக்கில்?
வாங்க நெல்லைத் தமிழன்.
அதிரஸம் ஒருமுறை சுடச்சுடக் கிடைத்தது. அருமையான ருசிதான். இந்தமுறை எதையும் வாயில் போட்டுக்கலை. புளியோதரை எப்பவும் நல்லா இருக்குன்னு அண்ணன் வாங்கிக்குவார். நான் கண்ணால் தின்பதோடு சரி.
தீர்ப்பு வரும்வரை அடக்கி வாசிக்கும் எண்ணமா இருக்குமோ? அரசியல் வியாதிகள்..... ப்ச்
சாப்பாடு வாங்கிட்டால் யார் அதைத் தூக்குவது? அதான் வாங்கலை :-)
சுப்பு அத்திம்பேர், அங்கே பதிவர் மாநாடு நடத்தும் திட்டத்தில் இருக்கார் :-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
டிஃபன் கேரியர்.....ஹாஹா :-)
வாங்க கோமதி அரசு.
ஜன்னு ஒரு புதுப்புடவையைக்கூட இன்னும் கட்டிக்காமல் எடுத்து வச்சுருக்காள்:-) இந்த நவராத்திரிக்கு புடவையா, பாவாடையான்னு சீட்டுக்குலுக்கிப் போடணும் போல!
வாங்க நாஞ்சில் கண்ணன்.
குடும்பம் அங்கே பின்னால் சுவத்தையொட்டி நிக்கும். பிரச்சனை என்னன்னா...... ஆஜானுபாகுவா நிக்கும் பார்த்தசாரதியைப் பார்த்த கண்கள் அங்கேயே நின்னு போயிடுதே என்பதுதான். கண்ணை அங்கிருந்து எடுக்கமுடியமாட்டேங்குதே!
Post a Comment