காய்கறி வாங்கப்போன கடையில் இந்தத் தங்கத்தைப் பார்த்தேன். புதுசா வந்துருக்கு. எதையும் ஒருக்கா என்ற கணக்கில் ரெண்டே ரெண்டு வாங்கியாந்தேன்.
தங்க பீட்ரூட். Gold Beetroot. லேசா மஞ்சளா இருந்துட்டால் போதும், வெள்ளைக்காரன் தங்கமுன்னுருவான். இவுங்களுக்குத் தெரிஞ்ச தங்கமெல்லாம் ஒன்பது கேரட்தானே! கிவி பழம் இருக்குல்லே அது உள்ளே பச்சைதான். அதிலும் இப்ப ஒரு புது வகை வந்தாச்சு . கோல்டன் கிவி. உள்ளே அதே ஒன்பது கேரட்:-) தங்கம்......... மஞ்சளா இருந்தா அது தங்கம்....
நம்ம கூமரா இருக்கே அதுலே கூட கோல்டன் கூமரா உண்டு.
கூமரா = சக்கரைவள்ளிக் கிழங்கு.
இந்த தங்க பீட்ரூட்டில் மேல்தோல் நம்ம கேரட் போல லேசா ஒரு ஆரஞ்சு நிறம்.
வாங்குன இரண்டில் ஒன்னை எடுத்து முதல்லே கொண்டையை நறுக்கி எடுத்து வச்சேன். நட்டுவச்சுப் பார்க்கணும்.
உள்ளே அதே ஒன்பது கேரட்! ஆரஞ்சுத் தோலைச் சீவினதும் முழுசும் மஞ்சப்பந்து. பொதுவா சிவந்த பீட்ரூட் நறுக்கும்போது நம்ம கை, ச்சொப்பிங் போர்ட் எல்லாம் சிகப்புச் சாயம் தீற்றிக்குமே அப்படி இல்லாம மஞ்சள் கையிலே ஒட்டவே இல்லை.
சிகப்புப் பீட்ரூட் அவ்வளவும் ரத்தம். உடம்புக்கு ரத்த விருத்தின்னு சொல்லிப் புள்ளைகளைச் சாப்பிடவைக்கும் உத்தியெல்லாம் இனிமே எடுபடாது போல :-)
கேரட் துருவியில் சின்னக்கண்ணில் துருவி எடுத்தேன். கொஞ்சம் கணிசமா நிறையவே வந்துச்சு. துருவும்போது சிகப்பு போல் அவ்வளவு கடினமா இல்லாம கொஞ்சம் மிருதுவாத்தான் இருக்கு.
அதை ஒரு ரெண்டு நிமிட் மைக்ரோவேவில் ஃபுல்பவரில் (1100) வச்சு எடுத்தேன். துளித் தண்ணியும் சேர்க்கலை.
அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வச்சுக் கொஞ்சம் எண்ணெய் ஊத்தி கடுகு , சீரகம், உளுத்தம் பருப்பு கருவேப்பிலை தாளிச்சு ரெண்டரை காய்ஞ்ச மிளகாயை ஒடிச்சுப் போட்டு வறுத்து, முக்கால் டீஸ்பூன் உப்பும் சேர்த்துட்டு, துருவி வெந்த தங்கத்தையும் போட்டு நாலுநிமிசம் வதக்கிட்டு அதன் தலையில் கொஞ்சம் துருவின தேங்காய் போட்டுக் கலக்கி இன்னும் ஒரு மினிட் அடுப்பிலேயே வச்சுருந்து ரெண்டு கிளறு கிளறி எடுத்து வச்சதும் தங்கப்பொரியல் ரெடி!
சிகப்புக்கும் மஞ்சளுக்கும் ருசியில் ஒன்னும் அவ்வளவா வித்தியாசம் இல்லை. டெக்ச்சர்தான் சிகப்பைவிட மிருது.
அதிகம் சிரமம் இல்லாமல் செஞ்ச இந்தப்பொரியல் நம் ஈசிபீஸி இண்டியன் குக்கிங் புத்தகத்துக்கான ரெஸிபிகளில் ஒன்னு!

16 comments:
இதைத்தின்னா தங்கம் போல தகதகக்கலாம்ன்னு சொல்லி புள்ளைங்களைத் தின்ன வெச்சுரலாம்.
அக்கா... அந்த கோல்டன் கீவீல ஒரு விஷயம் இருக்கு. பச்சை கீவி சிலருக்கு அலர்ஜிக் ரியாக்ஷனைக் கொடுக்கும். எனக்கு உதட்டைச் சுற்றிலும் அரிப்பு எடுத்து வீங்கிவைக்கும். க்றிஸ்ஸுக்கு வேறு விதமான ரியாக்ஷன். கோல்டன்.. அப்படி தொந்தரவு தரவில்லை. சுவை என்று பார்த்தால் பச்சைதான் சுவை.
நட்டுவைக்கலாம் என்று தேடுகிறோம். கோல்டன் கீவி கன்றுகள் இன்றுவரை கண்ணில் படவில்லை. ;(
நல்லதொரு தகவல்
அருமையான மஞ்சள் பீட்'ரூட்டின் துருவலைப் பார்த்தபோது, அடுத்து அதில் ஜீனி போட்டு அல்வா கிண்டியிருப்பீர்கள் என்று பார்த்தால், பொரியல் ஆக்கிவிட்டீர்கள். அவனில் வைப்பதால் துருவியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இல்லாட்டா சதுரத் துண்டுகளாக வெட்டியிருந்தால் போதுமே. புது ரெகுலர் பீட்'ரூட்டில் சிவப்புத் தண்ணீர் பெருக்கெடுத்தோடும். கையையும் சாயமேற்படுத்திவிடும். அந்தக் குறை தங்க நிற பீட்'ரூட்டில் இல்லை போலிருக்கிறது. இதுதான் சாதகமாகத் தெரிகிறது.
கோல்டன் கிவி, பச்சை கிவிபோன்று அவ்வளவு சுவை இல்லை. பச்சையில் ஒரு புளிப்புடன் கூடிய அனுபவம் கிட்டும். அதிலும், அதன் விதைகளைக் கடிக்கும்போது கொஞ்சம் சுரீர் என்று அருமையாக இருக்கும்.
//லேசா மஞ்சளா இருந்துட்டால் போதும், வெள்ளைக்காரன் தங்கமுன்னுருவான்//
ஆமாங்க்கா ..கோல்டன் linseed அன்னிக்கு வாங்கி வந்தேன் சும்மா கொஞ்சம் மஞ்சள் பிரவுன் கலந்து கோதுமை நிறம் ,அதுக்கே golden linseed நு பேர் வச்சிட்டாங்க .. ரெண்டு ஆளி விதையும் ஒரே சுவைதான்
கொண்டையை நட்டுட்டீன்களா :) வளரும் அடுத்த சீசனுக்கு விதை வரும் பயன்படுத்திக்கலாம் ..
ஷ்shhh ..தங்கத்தை சாப்பிடிருக்கீங்க யாராச்சும் கடத்திட போறாங்க :)
சிவப்பு கலர் பீட்ரூட் ரொம்ப டார்ச்சர் கொடுக்கும் எனக்கு சாப்பிட்டாலும் மற்றும் சமைக்கும்போதும் .
இங்கே வந்திருச்சான்னு தெரில ..நானும் தங்கத்தை தேடிப்பார்க்கிறேன் :)
உடல் நலத்திற்குப் பயன்தரும் நிலையில் இவையனைத்தும் தங்கமே.
தங்க பீட்ரூட் இங்கே வருமான்னு தெரியலை.... பார்க்கவே அழகா இருக்கு டீச்சர்...இன்னிக்கு இங்கே பீட்ரூட் பொரியல் தான்... ஆனா சிவப்பு....
அப்படியே தகதகன்னு மின்னுதே!
வாங்க சாந்தி.
ஆஹா இது ஐடியா! ஃபேர் அண்ட் லவ்லி மாதிரிதானே :-)))))
வாங்க இமா.
பழமரக் கன்றுகள் விற்கும் நர்ஸரியில் தேடினால் கிடைக்கலாம். நம்ம வீட்டுலே அவகாடோ நட்டு வச்சால் செடிகள் ஈஸியா வருது. எல்லாம் குளிர் வந்தவுடன் மண்டையைப் போட்டுருதுதேப்பா :-(
வாங்க செந்தழல் சேதுபதி.
முதல் வருகையோ!
நன்றிகள்.
வாங்க நெல்லைத் தமிழன்.
மஞ்சள் பீட்ரூட்டை இனி குருமாவில் கூட சேர்க்கலாம். சிகப்படிக்காமல் இருக்கும் !
இன்னொன்னு பாக்கி இருக்கே... அது சதுரத்துண்டுகள் பொரியலுக்குக் காத்திருக்கு :-)
பச்சைக் கிவிதான் ருசி. கோல்டனில் பச்சைக்கு இருப்பது போல் fur கிடையாது.
வாங்க ஏஞ்சலீன்.
கொண்டையை நட்டாச் :-)
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
உண்மைதான் நீங்க சொல்வது. நன்றி!
வாங்க ரோஷ்ணியம்மா.
சிகப்பும் ருசிதான். ஆனால் சமைக்க சோம்பல் எனக்கு .
வாங்க வெங்கட் நாகராஜ்.
தங்கம், தங்கமா மின்னுவதில் என்ன ஆச்சரியம்:-)
வருகைக்கு நன்றி.
Post a Comment