Wednesday, May 11, 2016

மஹா பெரியவா என்னும்போதே... மரியாதையும் ஒரு நெருக்கமும் வந்துருது! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 32)


 மஹாபெரியவா நினைவுக்கான மணிமண்டபம். ஓரிக்கை (காஞ்சீபுரம்)


ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் தாண்டி கொஞ்சம் உள்ளே திரும்பிப்போனோம்.   கொஞ்ச தூரத்தில் கண்முன்னே தெரிஞ்சது  தஞ்சைப் பெரிய கோவில்!  அச்சுப்போல அதே அதே. ஆனால்  சைஸ்  சின்னது!
கருவறைக்கு முன்னே நீளமான கோவில்  மண்டபம். இந்த மண்டபத்துக்கு நேரா அந்தாண்டை  தனி மண்டபத்தில் 'தஞ்சை' நந்தி!  கருவறையில்  மூலவர் இந்தக்  கலிகாலத்தில் சிறந்த சிவனடியார், காஞ்சி காமகோடி பீடாதிபதி   ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள். இப்படியெல்லாம் நீட்டி முழக்காமல் 'மஹாபெரியவா' என்ற   ஒரு வார்த்தை நம்மை  இன்னும் அவர் அருகில் கொண்டு சேர்த்துருது!
அவர் பூலோக வாழ்க்கையைத் துறந்து ஆச்சு 22 வருசங்கள்!  அவர் நினைவு மண்டபத்தின் முன்னால்தான் இப்போ நிக்கறோம்.  இன்னும் முழுசா வேலை முடியலை.
நீண்ட மண்டபத்தின்  கோடியில் கருவறை திறந்துருக்கு.  உள்ளே.........   ருத்ராக்ஷ மண்டபத்தின் கீழே , எப்பவும் இவர் அமரும் குத்துக்கால் போட்ட நிலையில் சுமார் அஞ்சடிஉயரச் சிலை! வலது கை நெஞ்சில் வைத்தபடியும், இடதுகையில் தண்டம் ஏந்தியபடியுமா நம்மை நேருக்கு நேராப் பார்த்தபடி இருக்கார்!


பச்சைக் கல்லில் செய்யப்பட்ட சிலை(யாம்!)நாலு கைகள் செதுக்கி இருக்காங்களா என்ன? வலது கையில் ஒரு வெள்ளிக்கவசம் தெரியறதே! முன்னால் அவருடைய பாதுகைகள்! சந்தன மரத்தில் செஞ்சு,  தங்கக்கவசம் போட்டுருக்கு!
பக்தர்கள் கோச்சுக்கப்டாது......  எனக்கென்னவோ  மூலவரின் முகம் கொஞ்சம் வித்யாசமாத் தெரிஞ்சது.  ஒருவேளை  ரொம்ப வயோதிகம் அண்டாத  காலத்தில் இப்படி இருந்திருப்பார் போல.  எனக்குத் தெரிஞ்சு என் மனதில் இருக்கும் முகத்துக்கு இன்னும் வயது அதிகம். இன்னும் கொஞ்சூண்டு யோசிச்சதில் வெள்ளைத்தாடியும் மீசையும் மிஸ்ஸிங் என்பதால்  எனக்கு இப்படித் தோணி இருக்கலாம். அதானே கற்சிலையில் வெள்ளைத்தாடி எப்படி இருக்க முடியும்?

ஸேவிச்சுக்கிட்டோம். கல்கண்டு ப்ரஸாதம் கிடைச்சது.  மண்டபத்தில் வேதபாடசாலை பிள்ளைகள்  சிலருக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. ஒரே குரலில் பிள்ளைகள் சொல்றதும், அந்த அழகான உச்சரிப்பும் அருமையோ அருமை!
மண்டபத்தின் முகப்பிலும் பக்கவாட்டிலும் படிகளுக்கு ரெண்டு பக்கமும் நம்ம யானைகள், பலே ஜோர்! பக்கவாட்டுப் படிகளில் ஏறிப்போக ஒரு வீல்சேர் ஆக்ஸெஸ் வச்சுருக்காங்க.  முன்யோசனையுடன் செயல்படும் நிர்வாகத்துக்கு  மனம் நிறைந்த நன்றிகளைச் சொல்லத்தான் வேணும்.

நந்தி ஸாருக்கு இன்னும்  செதுக்கல் முடியலை. அநேகமா இன்னும் ஒரு மூணு வருசம் ஆகலாம் முழுக்கோவிலும் முழுசுமா  நம்ம கண்களுக்கு விருந்து பரிமாற!


கோபுரத்தின் உயரம் நூறு அடியாமே!  முழுக்க முழுக்கக் கற்களாலேயே கட்டிக்கிட்டு இருக்காங்க.  சில்ப சாஸ்த்திரத்தில் புருஷாகாரம் என்ற  வகையில் எந்த ஒரு உலோக சம்பந்தமும் இல்லாமல்  அடிமுதல் நுனிவரை கட்டப்பட்டுள்ள கோபுரமாம்!


சில வருசங்கள் கழிச்சு இன்னொருக்கா வந்து தரிசனம் செஞ்சுக்கணும்!  மூளையில் இன்னொரு முடிச்சு!   ( ஏகப்பட்ட முடிச்சுகள் இருப்பதே இப்படி சேர்ந்து போனவைகளால்தான் :-)

 காஞ்சி சங்கர மடத்தில்   மஹாபெரியவாளின் அதிஷ்டானம் சேவிக்கும் வாய்ப்பு , எதிர்பாராதவகையில் ஒரு முறை கிடைச்சது.

 முந்தி ஒரு முறை போனது . விருப்பம் இருந்தால் க்ளிக்கலாம்:-)

அவருடைய  ஜென்ம நக்ஷத்திரம் அனுஷம் என்று தெரிஞ்சதும் மனசின் மூலையில்  சின்னதா ஒரு மகிழ்ச்சி உருவாவதைத் தவிர்க்கமுடியலை.  நம்மவரின் நக்ஷத்திரமும் அனுஷம்தான் !


திரும்பி வந்து  உத்திரமேரூர் சாலையில் சேர்ந்துகிட்டுப் பாலாற்றை நோக்கிப்போனோம்.   நம் கண்ணீர் போலத் துளியூண்டு தண்ணீர் !

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் 
கண்டதோர் வைகை பொருநை நதி
என மேவிய ஆறுகள் பல ஓட
மேனி செழித்த தமிழ்நாடு.



மாகரல் என்னும் கிராமத்தைத் தாண்டிப் போறோம்.  விவசாயம் இன்னும் நடக்குது என்பதே மகிழ்ச்சி இப்போதைக்கு!

தொடரும்......... :-)



22 comments:

said...

நன்றி.

அருகில் இருந்து தரிசித்த மகிழ்ச்சி.

said...

ஹூம்! 3 வருடத்தில் அவ்வளவு பெரிய மாற்றம் இல்லாமல் இருக்கே! கட்டுமானம் மிகவும் மெதுவாக போகிறது போலும்.

said...

பெரியவா தர்சனம் செய்வதே பாக்கியம்.



சுப்பு தாத்தா.

said...

மகாபெரியவரைப் பற்றிய தங்களின் கருத்து சிந்திக்கத்தக்கதே.

said...

இன்னும் கட்டுமானம் நடந்துக்கிட்டிருக்கு போல.

பாலாறு.. பேரே பாருங்க.. எவ்வளவு அழகு. பால் + ஆறு. அவ்வளவு நுரைச்சிக்கிட்டு நீர் ஓடியிருக்கு ஒருகாலத்துல. ம்ம்ம்ம்.. பெருமூச்சுதான்.

மழ பேஞ்சா தண்ணீ ஓடும்.. மறுநாளே வண்டி ஓடும்னு வைரமுத்து எழுதிய வரிகளை நினைச்சுக்க வேண்டியதுதான் :(

said...

ஒரு கோவில் உருவாகும் புகைப்படங்கள் அருமை.

said...

அருமை.புகைபடங்கள். எனக்கும் ஒரு முரை பெரியவரை பார்க்கும் சந்தர்பம் கிடைத்தது.இன்று வரை அவர் என் மானசீக குரு.தினமும் வணங்குகிரேன்.நன்ரி.

said...

படங்களும் தகவல்களும் அருமை.
அடுத்த முறை கோவில் கட்டுமானம் பூர்த்தி ஆனதும் மீண்டும் வந்து பார்த்து ஒரு பதிவு தாருங்கள்.

said...

மஹா பெரியவர், உருவத்தை கறுப்பு வண்ணத்தில் பார்த்தால் உணர்ச்சிகள் தெரிவதில்லை. காஞ்சி மடத்திலும் இதைப் பார்த்தேன். மண்டபம் முடிய இத்தனை நாளா.,

பார்க்கலாம் எப்போது பூர்த்தியாகிறது.என்று. படங்களுக்கு மிக நன்றி துளசி.

said...

வாங்க நன்மனம்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க குமார்.

பல இடங்களிலும் பார்த்தேன்... கோவில்வேலைகளில் நத்தை ஊர்ந்துகொண்டு இருக்கிறது :-(

said...

வாங்க சுப்பு அத்திம்பேர்.

அந்தபாக்கியம் சிறிதளவு நமக்கும் கிடைத்தது!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

முன்னாட்களில் முனிவர்கள் எப்படி இருந்தார்கள் என்று 'இவரை மட்டும்' பார்த்தாலே உணர்ந்துகொள்ள முடியும்!

said...

வாங்க ஜிரா.

எப்போ கட்டுமானம் ஆரம்பிசாங்கன்னு தெரியலை. ஒரு பத்து வருசம் இருக்கும் போல!

ரெண்டு கரைகளும் புரள ஓடிய நதிகளை இனி எங்கே பார்க்கப்போகிறோமுன்னு நினைச்சாலே மனசுக்குள் வலி :-(

said...

வாங்க ஸ்ரீராம்.

ஒரு ராஜகோபுரம் உருவாகும் நிலையைக்கூட ஒரு சமயம் அருகே இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, சண்டிகரில். முழுசும் கட்டி முடிக்குமுன்னே நமக்கு இடமாற்றம் வந்துருச்சு . ஆனாலும் கும்பாபிஷேகம் நடந்த சிலநாட்களில் நம்ம கோபால் அங்கே வேற அலுவலாகப் போய் வந்தவர் படங்களை எடுத்துவந்தார். கூடவே முருகன் அருளும், அவன் கொடுத்தனுப்பிய சீர்வரிசைகளையும்தான்!

said...

வாங்க மீரா.

அவரை நேரில் தரிசித்த நீங்கள் கொடுத்து வைத்தவர்!

said...

வாங்க கோமதி அரசு.

உள்நாட்டுவாசிகள் போய்ப் பார்த்து வந்து சொன்னால் நல்லது. நீங்களே ஒருமுறை போய் வரலாம்.

எனக்கு வாய்க்குமான்னு தெரியலை. எல்லாம் 'அவன் செயல்' அல்லவா?

said...

வாங்க வல்லி.


சங்கரமடத்தில் ஒரு உருவச்சிலை ஜீவகளையோடு இருக்கேப்பா, கண்ணாடிச் சுவருக்குப்பின்னே!

வேலை ரொம்பவே மெதுவா நடக்குதுப்பா........ பர்ஃபெக்‌ஷனுக்கு நேரம் அதிகம்தான் எடுக்கும், இல்லே?

said...

புகைப்படங்கள் நன்று......

கண்ணீர் போல ஆறு - கொடுமை. காவிரி ஆறும் அப்படித்தான் இருக்கிறது.

said...

பாலாற்றைப் பார்க்க நம் கண்களில் வரும் கண்ணீர் தான் அங்கு இப்போது ஓடுகிறது போல.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆறில்லா ஊர் பாழ் என்பதை யாருமெ நினைவில் வச்சுக்கலை பாருங்க. இன்னும் ஆத்துக்குள்ளே ப்ளாட் போட்டு விக்க ஆரம்பிக்கலை :-(

said...

வாங்க ரஞ்ஜனி.

ஒவ்வொரு ஆறையும் கடக்கும்போது மனசுக்கு பாரமா ஆகிருதுப்பா :-(