சக்கரைப்பொங்கல், போளி, வாழைப்பூ வடை முதலில், அப்புறம் புளியோதரை, சேப்பங்கிழங்கு ரோஸ்ட், பருப்புக்கீரை மசியல், தயிர்சாதம்னு சாப்பாடு அட்டகாசம். முதல்லே சாப்பிடு. அப்புறம் பேசலாமுன்னு கண்டிப்பாச் சொல்லிட்டாங்க தாம்பரம் அத்தை. இவுங்கதான் எங்க குடும்பத்தில் இப்போது மூத்தவர். எங்காத்து வேளுக்குடின்னு பெயர் வச்சுருக்கேன்.
எல்லாக் கோவில் சமாச்சாரம், கதைகள் எல்லாம் நாக்கு நுனியில்!
மாமியார் மெச்சிய மருமகள்தான் சமையல் எல்லாம். சாமி சமாச்சாரங்களிலும் மாமியாரின் வாரிசுதான் ! நல்ல ட்ரெய்னிங்னு சொல்லலாம் :-) ஆனால் ட்ரெய்னீக்கு ஸப்ஜெக்ட்டில் பிடிப்பும் இருந்தாத்தான் பயிற்றுவிக்கவும் முடியும், இல்லே!
இன்றைக்கு இங்கே வர்ற ஐடியாவே முதலில் நமக்கு இல்லை. நாம்தான் ஏற்கெனவே போட்ட திட்டப்படி ஷோளிங்கர் போயிருக்கணுமே! அங்கே போறதைக் கேன்ஸல் செஞ்சதால் இன்றைக்கு சென்னைக்குப் போகும் வழியில் இங்கே! வடை கூப்பிட்டது மனசுக்குத் தெரிஞ்சு போச்சு!
அது எப்படி நம்ம ஃபேவரிட் சாப்பாடு, அதுவும் மஸால்வடை இன்னிக்குன்னு பார்த்து செஞ்சுருக்காங்க? பெண்களூரில் இருக்கும் மகன் விஜயம். அதுக்கான தடபுடல் விருந்து. காலையில் கிளம்பி அண்ணாசாலைப் பக்கம் ஷாப்பிங் போனவங்க, அப்படியே இன்னொரு உறவினர் வீட்டுக்குப் போயிட்டதால் பகல் சாப்பாட்டுக்கு வரலை. 'தானே தானே பர் லிக்கா ஹை கானேவாலா கா நாம்!' ரொம்பச்சரி.
இன்றைக்கு நாம் காலையில் காஞ்சியில் வாங்குனதில் ரெண்டு புடவைகள் அத்தைக்கும், மருமகளுக்கும்தான். புடவை பிடிச்சுருக்குன்னு சொன்னதும், மருமகளிடம் அந்த கலர் இல்லைன்னதும் நிம்மதி ஆச்சு.
வீட்டு விஷயங்கள், நாட்டு நிலவரங்கள், அஹோபிலம் போய்வந்த கதை, வெள்ளம் வந்தப்ப நடந்த சமாச்சாரங்கள் எல்லாம் பேசி முடிச்சப்ப மணி மூணரை. மேற்குத் தாம்பரத்தில் வெள்ளம்னு கேட்டதும் பதறிப்போய் ஃபோன் செஞ்சு பேசுனப்ப, இவுங்க தெருவில் வெள்ளம் இல்லைன்னு சொல்லி இருந்தாங்க. மாடி வீடு என்பதால் பிரச்சனையும் ஒன்னும் இல்லை(யாம்)
அங்கிருந்து கிளம்பி அண்ணன் வீட்டுக்குப் போனால்.... அங்கே அண்ணியின் அண்ணி இருந்தாங்க:-) உங்களுடைய சாப்பாட்டை நாங்க சாப்ட்டாச்சுன்னேன்! பெங்களூர் பக்கம் எல்லாம் வர்றதில்லையான்னாங்க. போன பயணத்துலே வந்தோம். ஒரே ஒருநாள்தான் தங்குனதால் நேரமில்லாமப் போச்சுன்னு (அசட்டுத்தனமா) ஒரு பதிலைச் சொன்னேன்.
கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு, மாலைக்கான டிஃபன் காஃபியையும் உள்ளே தள்ளிட்டு, வீட்டு வேலைக்கு உதவிசெய்யும் ஆயாவைத் தேடினா, காணோம். ( அவுங்களை அப்படித்தான் பத்துவருசமாக் கூப்புட்டுக்கிட்டு இருக்கோம். அவுங்களுக்குன்னு ஒரு பெயர் இருக்குமுல்லே! எப்படி கேட்டுத் தெரிஞ்சுக்கத் தவறிட்டேன் :-( அடுத்தமுறை பெயரைக் கேக்கணும். மூளையில் முடிச்சு )
அவுங்களுக்கு ஒரு சிறு அன்பளிப்பாக் காஞ்சீபுரத்தில் காலையில் வாங்கிய புடவையை அண்ணியிடம் கொடுத்துட்டுக் கிளம்பி லோட்டஸ் வந்து சேர்ந்தோம். சொந்தவீட்டுக்கு வந்தாப்போல ஒரு நிம்மதி கிடைச்சது.
மறுநாள் ஜனவரி 26. இந்தியக் குடியரசு நாள் என்பதால் விடுமுறைதினம். இன்னைக்கு நண்பர்களைச் சந்திக்கணுமுன்னு கிளம்பினோம். லீவுநாள் என்பதால் வீட்டில் இருப்பாங்க என்ற எண்ணம். ஆனாலும் ஒவ்வொரு இடத்துக்கும் போகுமுன் வீட்டில் இருக்காங்களா, இல்லையா, சௌகரியப்படுமான்னு கேட்டுக்கிட்டுப்போறதுதான். எல்லோருமே நமக்காக நேரம் ஒதுக்கினாங்க என்பது கூடுதல் மகிழ்ச்சி!
காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் கொஞ்சம் நல்லாவே சாப்பிட்டேன். நல்லநாளு பாருங்க:-) வரவேற்பில் கொடி வச்சுருந்தாங்க.. என்னதான் வேற்றுநாட்டுக் குடடிகளா மாறிட்டாலும் பிறந்த நாட்டுக் கொடியைப் பார்த்தால் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுத்தான் போறோம். இப்ப ஓ சி ஐ வேற இருப்பதால் நாங்களும் உங்களில் ஒருவர்தான்! சட்டையில் கொடியைக் குத்திக்கப் பின் கிடைக்கலை:-( அடுத்த முறை கொஞ்சம் குண்டூசிகளை வாங்கி வைங்கன்னு ஒரு 'பின்'னூட்டம் கொடுத்தேன்.
போறவழியில் யாரோ காங்ரெஸ் பிரமுகர் வர்றாராம். கொடியை வச்சே ஏமாந்து போக வைக்கிறாங்களோ? நான் என்னவோ குடியரசுக் கொண்டாட்டமுன்னு முதலில் நினைச்சுட்டேன்.
முதலில் போனது நம்ம மரத்தடிகாலத் தோழி நிர்மலா டீச்சர் வீட்டுக்குத்தான். அவுங்க கணவரும், நம்ம கோபாலும் சொந்தக்காரங்க. ரெண்டுபேரும் கோவையில் ஒரே காலேஜ்லே படிச்ச பந்தம்! ஆனா வருசம்தான் வெவ்வேற ....
அவுங்கவீட்டு பால்கனியில் ஒரு ஒண்டிக்குடித்தனம் இப்போ ரெண்டு வருசமா இருக்கு. அவுங்களுக்கும் ஒரு ஹலோ சொல்லியாச். அவுங்க ப்ரைவஸியைக் கெடுக்கவேணாமேன்னு பால்கனியை அதிகம் திறக்கறதில்லை தோழி.
ஸெல்ஃபீ ட்ரெய்னிங். டீச்சர் சொல்லித்தந்தாலும் ட்ரெய்னீ சுத்த மோசம்.
கண்ணாடி வழியே பார்க்கும்போது எதிரில் போகும் மெட்ரோ ஓசைப்படாமல் நகர்ந்து போறது பார்க்கவே அழகு! இன்னும் அதில் பயணிக்கலை. ஒருநாள் போகணும். தோழி வீட்டில் ட்ரிப்பிள் க்ளேஸிங் போட்டுருக்காங்கன்னு நம்மவர் சொன்னார். அதான் வீட்டுக்குள் சத்தமே வர்றதில்லை!
இன்னொரு நாலுபேர் புதுவரவு! ஹைய்யோ..... என்ன ஒரு திருத்தமான முகம்! சொல்லமுடியாத அழகு! என் கண்ணே பட்டுருக்குமோ! தோழி வீட்டு உள் அலங்காரம் அட்டகாசம்! எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்குன்னு தனியா சொல்லவேண்டியதே இல்லையாக்கும்:-)
அருமையான டீ போட்டு, நொறுக்ஸும் விளம்பினாங்க. வேணாமுன்னு சொல்லலான்னா.... பிடிச்ச சமாச்சாரமான்னா இருக்கு!
நேரம் போறது தெரியாமல் அரட்டை அடிச்சு, அவுங்க சமையல் நேரத்தையும் கெடுத்துட்டுக் கிளம்பும்போது மணி பனிரெண்டரை.
அங்கிருந்து நேராப் போனது மீனாக்ஷிஅக்கா வீட்டுக்கு.
தொடரும்..........:-)

19 comments:
பால்கனி ஒண்டுக்குடித்தனக்காரங்க நல்லவங்களா இருக்காங்களே. இருக்குமிடத்தைச் சுத்தமா வெச்சிருக்கறதிலிருந்தே தெரியுது :-). எங்க வீட்டுக்குடித்தனக்காரங்க செடியெல்லாம் பிச்சுப்போட்டு வைப்பாங்க.
//ட்ரெய்னீக்கு ஸப்ஜெக்ட்டில் பிடிப்பும் இருந்தாத்தான் பயிற்றுவிக்கவும் முடியும், இல்லே!//
அட்சர லட்சம்!
உங்க தாம்பரம் அத்தையை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சுன்னு அவங்க கிட்ட சொல்லுங்க.
இந்தப் பகுதியின் தலைப்பே அட்டகாசமாக இருக்கு, துளசி.
உறவையும் நட்பையும் பேணும் முறை அருமை.
ஆஹா.... ஒவ்வொரு பயணத்திலும் நமக்குப் பிடித்தவர்களைச் சந்திப்பதில் இருக்கும் மகிழ்ச்சி தனிதான் இல்லையா.....
தொடர்கிறேன்.
அருமை. நிர்மலா வீட்டுக் குடித்தனக்காரர்கள் நிஜமாவே சுத்தம். மகன் வீட்டில்
பால்கனி முழுவதும் எச்சமிட்டு வைத்திருப்பார்கள்.
தாம்பரம் அத்தைக்கு நமஸ்காரங்கள். மருமகளுக்கும் மகனுக்கும் விசாரிப்புகள். ஷ்யாமளா ஹை.
எல்லா உறவுகளும் நலமாக இருக்கட்டும்.
//நாலுபேர் புதுவரவு! ஹைய்யோ..... என்ன ஒரு திருத்தமான முகம்! சொல்லமுடியாத அழகு! என் கண்ணே பட்டுருக்குமோ! //ஆஹா !!
என்ன ஒரு அழகு !
அந்த வீடே இராம பிரான் சாந்நித்யம் .
ஒரு நிமிஷம் ஒரு ஸ்லோகம் சொல்லி சேவிச்சுக்கறேன்.
ராமாய ராம பத்ராய ராம சந்திராய வேதசே
ரகுநாதாய நாதாய சீதாயா பதயே நமஹ.
சுப்பு தாத்தா.
மீனாக்ஷி பாட்டி.
"உறவையும் நட்பையும் பேணி வளர்த்தல், உடலுக்கும் மனதுக்கும் நல்லது...
ரொம்ப சரி....அனுபவிக்கும் வார்த்தைகள் ....
இனி தொடர் வருகை இருக்கும் ...
மாமியார் மருமகள் ஒற்றுமை ஓங்குக. வாங்கிக் கொடுத்த சேலைகள் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது சிறப்பு.
மெனு சூப்பர் மெனுவா இருக்கே. படிச்சதும் பசி வந்துருச்சு.
வாங்க சாந்தி.
அவுங்க போர்ஷன் கூட செடிகள் வச்சுருக்கும் பலகைக்குக் கீழே சட்னு கண்ணுக்குப் படாமல்தான் இருக்கு! என்ன ஒரு அறிவுமா!!!
வாங்க ரஞ்ஜனி.
கட்டாயம் அத்தைக்கு சொல்லிடறேன். ரொம்பவே நல்லமனசுக்காரங்க அவுங்க!
பிடிச்சுருக்குன்னு சொன்னது எனக்குப் பிடிச்சுருக்கு! நன்றீஸ்.
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வெங்கட் நாகராஜ்.
உண்மைதான். அதுக்காகவே கூடியவரை நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கிறோம் நாம்!
வாங்க வல்லி.
ஏன் உறவுக்கணக்கில் நீங்களும் உண்டு கேட்டோ!!!
பறவைகளிலும் சுத்தம் பேணும் இனம் உண்டுப்பா!
ஒருமுறை கீழே இருக்கும் குப்பையை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடும் யானையைப் பார்த்தேன். இங்கே ஃபேஸ்புக்கில்தான் யாரோ போட்டுருந்தாங்க.
வாங்க சுப்பு அத்திம்பேர்!
அந்த ஹாலின் அழகு இன்னும் கூடி இருப்பதாகத்தான் எனக்கும் பட்டது. அடடா.... என்ன ஒரு அழகு!
வாங்க அனுராதா ப்ரேம்.
விடுமுறை நல்லபடி இருந்ததா?
வாங்க ஜிரா.
மாமியார் மருமகளா ? எங்கே? அம்மாவும் பொண்ணுமாத்தான் இருக்காங்க! பெருமாள் நல்லபடி அனுகிரஹிக்கவேணும்!
எனக்கும் வயிறு பெருசா இல்லையேன்னு அன்னிக்குக் கவலையாத்தான் போச்சு:-) சூப்பர் மெனு!
//உறவையும் நட்பையும் பேணி வளர்த்தல், உடலுக்கும் மனதுக்கும் நல்லது...//
சரியாய் சொன்னீர்கள் மேடம்!
//உறவையும் நட்பையும் பேணி வளர்த்தல், உடலுக்கும் மனதுக்கும் நல்லது...// அருமை அருமை இதற்கே உங்களுக்கு எல்லா ஓட்டையும் போட்டு ஜெயிக்க வைச்சுரலாம் போல...
தாம்பரம் அத்தையை முன்னரேயே பார்த்த நினைவு....போன விசிட்? சரிதானா?
விக்ரகங்கள் கொள்ளை அழகு...
Post a Comment