Monday, May 30, 2016

பொறந்தநாள் பொறக்கும் நேரத்தில்... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 40)

எட்டரைக்கு  விழா தொடக்கம்னு  சொன்னதால் ஒரு அஞ்சு நிமிசம் இருக்கும்போது கிளம்பி பொடி நடையில் போறோம். நாங்க போய்ச் சேரும்போதே  பாபா வந்து அவருடைய இடத்தில் உக்கார்ந்துருக்கார்.  மக்கள்ஸ் போய் அவரைக் கும்பிட்டுக்கறாங்க.  ஒவ்வொருத்தரிடமும்   ரெண்டு வார்த்தைகள் பேசிட்டு  தட்டில் வச்சுருக்கும் இனிப்பை எடுத்துக் கொடுத்துக்கிட்டு இருக்கார்.
'காட்சிக்கு எளியன்' என்பது எவ்ளோ உண்மை பாருங்க. சுத்திவர அடியா(ள்)ர்களை  வச்சு அரண் அமைச்சுக்கிட்டு இல்லாம  இப்படி  இருப்பது எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு.  இவருக்கு  ஒரே ஒரு கொள்கைதான். இவருடைய அருள்வாக்கும் இது ஒன்னுதான்.  அனைவரையும் நேசி! அனைத்தும் அன்பே! ரொம்ப ஸிம்பிள்!  Love all  Love is all. அம்புட்டுதான்!

எனக்குப் பொதுவா இந்த சாமியார்கள் என்றாலே ஒரு அலர்ஜி.  குடும்பத்தில்  ஒரு குறிப்பிட்ட சாமியாரின் பக்தர்களா  இருந்தவர்கள்  பவிஷைக் கண்கொண்டு பார்த்ததால் .......  இவுங்க சங்காத்தமே வேணாமுன்னு  ஆகிபோச்சு. 

மேலும் சில குறிப்பிட்ட  கதைகளையும் கேட்டுருக்கேன்.  ப்ச்.... வேணாம்....  இப்போ நல்ல நாளில் அதையெல்லாம் நினைப்பானேன்....

நாங்களும் போய்  வணக்கம் சொன்னோம். 'அக்கா'வைக் கையில் கொடுத்து  'எப்படி இருக்கீங்க பாபா?' ன்னு  கேட்டேன்.  சிரிச்ச முகத்தோடு  'நல்லா இருக்கேன்மா. எப்ப வந்தீங்க'ன்னார்?

ஊரில் இருந்து வந்து பத்து நாளாச்சு. இங்கே  சாயங்காலம் நாலு மணிக்குத்தான் வந்தோம்னேன்.  எங்களுக்கு ஆளுக்கு ஒரு லட்டு எடுத்துக் கொடுத்த கையோடு,  'இருந்து எல்லா நிகழ்ச்சிகளையும் பாருங்க. போயிடாதீங்க'ன்னார். 'இங்கேதான் தங்கி இருக்கோம் பாபா'ன்னு பேசிக்கிட்டு இருக்கும்போதே  கெமெராவை என் கையில் இருந்து வாங்கி எதிரில் உக்கார்ந்து இருந்த பக்தரிடம் கொடுத்து  க்ளிக்கச் சொன்னார் நம்மவர். ஆச்சு !

நாங்க போய்  அந்தாண்டை  பிரகாரத் திண்ணைக்குப் பக்கம் படிக்கட்டுகளில் உக்கார்ந்தோம்.  இந்தத்  திண்ணைதான் இங்கே எப்போதும்  கச்சேரி அரங்கம்:-) மேடையில்  சிருசேரி சிஸ்டர்ஸ் பாடிக்கிட்டு இருக்காங்க.
 அவரவர் விருப்பம்போல் எங்கே வேணுமுன்னாலும் உக்கார்ந்துக்கலாம். நாட்டாமைகளுக்கு வேலையே இல்லை. அதுக்கான அவசியமும் இல்லை.  பாபா முன்னால் நடப்பவர்களுக்கு  கொஞ்சம் இடம் விட்டு  தரையில்  உக்காரும் பக்தர்கள்தான்  அதிகம்.  எதிரில் நீளமா இருக்கும் படிகளிலும்  உக்காரலாம். யாகமண்டபத்தில், திண்ணை யில் இப்படி ......

பூரணப்ரம்மம் சந்நிதியில் பொறந்தநாள் கேக் வச்சு சரி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க சிலர். அஞ்சடுக்கு ஒன்னும் மூணடுக்கு ரெண்டுமா அட்டகாசமா இருக்கு!

நடனம், பாட்டுன்னு  பார்த்துக்கிட்டு இருக்கோம்.  சின்ன தொன்னையில் வெண்பொங்கல், நறுக்கிய பழங்கள், திராக்ஷை,  மிட்டாய்னு  நொறுக்குத்தீனிகள் வந்துக்கிட்டே இருக்கு.  கொஞ்ச நேரத்தில்  தின்னு முடிச்சக் காலி தொன்னைகள், சாக்லேட் பேப்பர்கள்னு குப்பைகளைச் சேகரிக்கவும் வந்துக்கிட்டே இருக்காங்க, பிள்ளைகள்.  இடம் பளிச்ன்னு  இருக்கும் காரணம் இப்போப் புரிஞ்சு இருக்குமே!
சிலபிள்ளைகள்  தன்னுடைய பங்காக  எதாவது  செய்யணும் பாபாவுக்குன்னு  அப்பவும்   வாழ்த்து அட்டைகள் வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க. நான் ஏற்கெனவே வரைஞ்சது இங்கே இருக்குன்னு  கூட்டிப்போய் காமிச்சார் ஒரு மாணவர்:-)





நம்ம ஜானகி மேடமும் வந்து  சத்சங்கத்தில் கலந்துக்கிட்டாங்க!  அநேகமா  வர்றவங்க எல்லோரும்  வந்துட்டாங்க போல ! நம்ம பாபாவும் கண்ணை மூடிக்கிட்டு அசையாமல்  உட்கார்ந்திருந்தார். நிஷ்டை? மேடையில் இப்போ பாடும் பாட்டு அஷ்டபதியில் இருந்து! ஒருவேளை  பாட்டின் பொருளறிஞ்சு  லயிச்சுட்டாரோ என்னமோ? திடீர்னு எழுந்த பாபா  அஷ்டபதிக்கு ஆட ஆரம்பிச்சார்.  நான் கேள்விப்பட்டுருக்கேனே தவிர  இதை இதுவரை பார்த்ததில்லை.

சட்னு  வீடியோ க்ளிப்பா பதிவு செய்ய ஆரம்பிச்சேன்.  கூட்டத்தில் இருந்த சனத்தில் பாதிப்பேர் செல்ஃபோனில் ரெகார்ட் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. நாந்தான் பிரமிப்பில்  முதலிரண்டு நிமிசத்தை விட்டுருக்கேன் :-)

மணி பத்து. கொஞ்சம் பெரிய பிள்ளைகள் வந்து ஒரு நடனம் ஆடுனாங்க. அதுக்கப்புறம் ஒரு  பரதநாட்டியம். சுதா ரகுநாதன் குரலில்  'அசைந்தாடும் மயிலொன்று .....' அழகான அபிநயம்!


கொஞ்சம்  பாட்டு, பாபாவின் பேச்சு என்று நேரம் ஓடிருச்சு.  இப்போ மேடையில் நாதஸ்வர கோஷ்டியின் வாசிப்பு!



வெண்ணிற ஆடைகளில் குட்டிதேவதைகள்  அணிவகுத்து வந்தாங்க. பாரதிராஜா படம் ஞாபகத்துக்கு வந்து தொலைச்சது :-)  நள்ளிரவு நெருங்கும் நேரம். இத்தனைக் களேபரத்திலும்  சில பசங்க பிரகாரத் திண்ணையில் தூங்கிக்கிட்டு இருந்தாங்க :-)
பூரணபிரம்மத்திற்கு  பூஜை ஆரம்பிச்சு தீபாரதனை காட்டி, ஹேப்பி பர்த்டே பாட்டு முடிஞ்சு ,  பாபா தன் பொறந்தநாள் கேக்கை   கட் பண்ணி , அவருக்குப் பெரிய மாலை போட்டு  ஒரே கொண்டாட்டம்!


கடைசி நிகழ்ச்சிக்கு  வந்திருந்தோம்.வரிசையில் போய்  பூரணப்ரம்மத்திற்கு  நமஸ்காரம் செஞ்சுட்டு  பொறந்தநாள்  இனிப்புகளை ஒரு கை பார்க்க வேண்டியதுதான் பாக்கி.  தானாகவே வரிசை ஒரு ஒழுங்குமுறையில் நகர்ந்துக்கிட்டு இருக்கு!
இன்றைக்கு பூரணபிரம்மம் பட்டை போட்டுருந்தார்.  அந்தந்த நாளின் விசேஷத்துக்குத் தகுந்தபடி, இவரே  நாராயணன்,  சிவன், கிருஷ்ணன்,  ராமன்,  ஆண்டாள், அம்மன் என்று மாறி மாறி நமக்குக் காட்சி கொடுப்பதுதான் இங்கே வழக்கம்!
கேக், ஐஸ்க்ரீம், சிப்ஸ், சாக்லெட், இப்படி....  கூடவே ஒரு டிஷ்யூ வச்சது எனக்கு ரொம்பப் பிடிச்சுருந்தது!
ஒரு முட்டலோ மோதலோ கத்தலோ, விரட்டலோ  இல்லாம  எல்லாமே ஒரு ஒழுங்கில்.....   அருமை!  ரிலாக்ஸா உக்கார்ந்து இருந்த இடத்தில் இருந்தே  க்ளிக்கிக்கிட்டு  இருந்தேன்:-)
வெளியூர், வெளிநாடு,  உள்ளூர்னு எல்லாமே அன்பால் வந்த கூட்டம். சின்னக்குழந்தைகளும், வயதில் முதிர்ந்தவர்களுமா  ஒரு கூட்டுக்குடும்ப  எஃபெக்ட் இருந்துச்சுன்னு  எனக்கொரு தோணல்!  எதோ ஒருவிதத்தில்  அவுங்களுக்கு  எதோ நல்லது நடந்துருக்கலாம். ஒரு நம்பிக்கையான சொல் கிடைத்துருக்கலாம். நம்பினால்தான் தெய்வம். நம்பிக்கைதான் வாழ்க்கை!

'கவலையை விடு!  களிப்புடன் இரு'  என்றதோடு,  முகம் கோணாமல் எல்லோரையும் ஒரே மாதிரி நேசிக்கவும் பழகவும்  முடிஞ்ச அந்த மனசு ...  எனக்குப் பிரமிப்பைத் தருது!

என்னைப் பொறுத்தவரை   எனக்கொரு நல்ல நண்பர் கிடைச்சுருக்கார்!
அறைக்குத் திரும்பும்போது  மணி ஒன்னே கால்!  இப்படி பின்நிலாக் காலத்தில் அரை இருளில்  காலாற நடந்து எத்தனையோ வருசங்களாச்சு !  மனத்திருப்தியுடன்  தூங்கினோம்.

நாளைக்குக் காலையில் சீக்கிரம் எழுந்துக்கலாமா?   பாக்கிக் கொண்டாட்டங்கள்  இன்னும் இருக்கே!

தொடரும்...........  :-)

PINகுறிப்பு:  இன்றைய நிகழ்வின்  ரெண்டு வீடியோ க்ளிப்ஸ் போட்டுருக்கேன்.  ஆர்வம் இருப்பவர்களுக்காக :-)


10 comments:

said...

The song does not sound Asthapathi to me. I hear the words Pandurange - which I dont think in Astapathi

said...

இவரைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். தொலைக்காட்சியில் இன்னொரு சாமியாருடன் விவாதத்தில் கலந்து கொண்டார். அதை வைத்து ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சியொன்றும் வைத்தார்கள்.

இவருடைய பழைய நடனங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அப்போது நன்றாக ஆடுவார். இப்போது வயதாகிவிட்டது போல.

எல்லாரும் வாழ வேண்டும். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். யாதும் வில்லேஜே யாவரும் ரிலேட்டிவ்சே என்று கணியன் ஃப்ளவர்ஹில்லார் சொன்னதும் அதுதான்.

said...

சிவசங்கர பாபாவை பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்து இருக்கிறோம் எங்களைப் பற்றி அன்புடன் விசாரித்தார் எங்கிருந்து வருகிறோம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார் என் மனைவியின் ஒன்று விட்ட தம்பி இவரது ஆத்ம சிஷ்யன் நான் பார்த்த இடமல்ல போலிருக்கிறதே இடம் மாற்றி விட்டார்கள் போல் உள்ளது. எங்களை அவரது சிஷ்யைகள் நன்றாகவே விசாரித்துக் கவனித்துக் கொண்டார்கள் என் மனைவியிடம் பாபாவின் படம் ஒன்றும் உள்ளது அப்போதெல்லாம் தானே கடவுள் போன்ற பாவனை இருந்தது .

said...

தொடர்கிறேன்.

said...

நானும் போய் இருக்கிறேன் பாபா இடத்திற்கு உறவினர் ஒருவர் அங்கு இருக்கிறார்.
படங்கள், காணொளிகள் எல்லாம் அருமை.

அன்பாய் இருப்போம் அனைவரிடமும்.

said...

வாங்க Strada Roseville.

அடடா... அப்படியா! தகவலுக்கு நன்றி.

எனக்கு அஷ்டபதி அவ்வளவாத் தெரியாது. அன்றைக்கு அக்கம்பக்கம் இருந்த பக்தர்தான் சொன்னார் அஷ்டபதி கேட்டால் பாபா ஆட ஆரம்பிச்சுருவார்னு.

said...

வாங்க ஜிரா.

சிவன் ஆடறார், கண்ணன் ஆடறார் அதைப்போல நானும் தெய்வீக இசையைக் கேட்டால் என்னை அறியாமல் ஆடறேன். இல்லைன்னா நான் என்ன ஸில்க் ஸ்மிதாவா கவர்ச்சி நடனம் ஆடன்னு அவர் சொன்னதைக் கேட்டு நாங்கள் சிரிச்சோம் என்றாலும் அதுவும் உண்மைதான் இல்லையா!

இசை நம்மை ஆட வச்சுருது ! மனத்தடை இருப்பதால்தான் நமக்கு சட்னு ஆட முடியலைன்னு நினைச்சேன். வட இந்தியர்கள் பாருங்க... ஆணும் பெண்ணுமா என்ன ஆட்டம் !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

பல ஆண்டுகள் என்றால் அது நீலாங்கரை ஆசிரமமா இருக்கணும். அங்கே விஷமிகள் தீ வச்சுட்டாங்க. அதுக்குப் பிறகுதான் இப்போ இருக்கும் ஆசிரமம் கேளம்பாக்கத்தில் கட்டப்பட்டது!

சிஷ்யர்களின் கவனிப்பு நிஜமாவே ஒன்னாந்தரம் தான்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வருகைக்கு நன்றி.

said...

வாங்க கோமதி அரசு.


ரொம்ப சிம்பிளான கருத்துதான். அன்பே சிவம் என்பதைப் போல்!