Friday, May 20, 2016

கலைஞருக்குப் பாராட்டு விழா! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 36)

தேன்குடிச்ச நரிகளை யாராவது பார்த்துருக்கீங்களா?  பார்க்கலைன்னா அன்றைக்கு நம்ம முகங்களை  மிஸ் பண்ணியிருக்கீங்க!  பத்தே நிமிசத்துலே ரெடியாகி வாங்கிவந்த 'பிச்சி'யை தலையில்  வச்சுக்கிட்டுக் கிளம்பி அடுத்த பத்தே  நிமிசத்துலே  விழா நடக்கும் ஹாலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
தெரிஞ்ச இடம்தானே....  விடுவிடுன்னு  மாடிக்குப்போய்  முதல் வரிசையில் மேடைக்கு நேர் எதிரில்  இடம் பிடிச்சு உக்கார்ந்தாச்சு.  அல்மோஸ்ட் மாடி காலியாத்தான் இருந்தது. முக்கிய புள்ளிகள் எல்லாம் தரைத்தளத்தில்! அதிமுக்கியபுள்ளிகள் எல்லாம் அங்கேயும் முதல் வரிசைகளில்!

காலை ஒன்பதரை மணிக்கு  நம்ம சேஷம்பட்டி சிவலிங்கம் &பார்ட்டியின் மங்கள இசையோடு தொடங்கி முழுநாளும்  விழா நடந்துக்கிட்டு இருக்கு. இடையில் பனிரெண்டரையிலிருந்து மாலை நாலுவரை லஞ்சு & ரெஸ்ட். நாலுக்குப்பின் மீண்டும் விழா தொடர்கிறது.

பரதநாட்டியம், சங்கீதக் கச்சேரின்னு ஜமாய்க்கிறாங்க.
நாம் போனநேரம் கலைஞரை கௌரவிச்சு முக்கியமானவர்கள் மேடை நிறைச்சு உக்கார்ந்து இருக்காங்க. நடுவில் விழாநாயகர்!  இவரைத்தவிர தெரிஞ்சமுகம் வேறுண்டான்னு  தேடினதில் கண்ணில் பட்டவங்க ராஜீவ் மேனோனும்  நம்ம அருணா சாயிராமும்.   அருணாவின் ப்ளௌஸின் ஸ்லீவில் ' சாய்' னு  ஜரிகையில் நெசவு!  ஸ்பெஷல் ஆர்டரில் நெய்து வாங்குன புடவை!  பேஷ் பேஷ்!
பொதுவா விழாக்களில் எல்லாம் சொன்ன நேரத்துக்கா நடக்குது?  இங்கேயும் ரன்னிங் லேட். அதுவும் வெறும் 80 மினிட் தான் :-)   ஓ.... எம்பதுக்கெம்பது!  என்ன ஒரு பொருத்தம் பார்த்தீங்களா?  விழாநாயகருக்கு வயசு எண்பது ஆனதுக்கானக் கொண்டாட்டம்தான் இது.

 நாமும் எதோ கொடுத்து வச்சுருக்கோம் போல!  முழுசுமாக் கேக்கவும் பார்க்கவும் கிடைச்சது!

பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் என்று மத்திய அரசு  விருது வழங்கி கௌரவிச்சுருக்கு இவரை.  மற்றபடி தமிழக அரசும், மற்ற  கலை நிறுவனங்களும்  வழங்கிய விருதுகளை எண்ண ஆரம்பிச்சால் ரெண்டு கை விரல்களுக்கும் சரியா இருக்கும். இது போக இன்னும் ஏராளமானவைகளையும் உள்நாடு வெளிநாடுகளில் வழங்கி இருக்காங்க.

 தபால் இலாகா, இவரை  கௌரவிக்கும் வகையில் தபால்தலை வெளியிட்டு இருக்கு. தனக்கு வாங்கிவர முடியுமான்னு தோழி கேட்டாங்க.  எங்கே?  அதெல்லாம் வெளியிட்டவுடனே வித்துப்போயிருதுல்லே!

எண்பது வயசுக்குரிய தளர்ச்சியேதும் இல்லாமல் சின்னப் பையனாட்டம் ஒல்லியா,  துள்ளலோடு இருக்கார்  நம்ம டாக்டர் ஸ்ரீ உமையாள்புரம் கே. சிவராமன் !  பக்கத்துலே அவருடைய மனைவி.  ஒரு பெரிய மேதையின் மனைவி என்ற அலட்டல் இல்லாமல்  எளிமையா  இருக்காங்க.  விழாவுக்கு சீஃப் கெஸ்ட்   இன்னொரு பத்மவிபூஷன் அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்கள்.
மேடையில் இருந்த எல்லோருமே ஒவ்வொருவரா பேசி முடிச்சதும்  அவருக்கொரு நினைவு பரிசுப்பொருள் மேடைக்கு வந்தது.   பொதியின் அளவைப் பார்த்தால் உள்ளே 'மேகி'  யோன்னு நினைச்சேன்:-)
எல்லோரும் ஆவலோடு பார்த்துக்கிட்டு இருந்தோம்! ஸ்வானுபூதி என்று ஒரு பெரிய படம்!


அடுத்து இந்த நிகழ்ச்சிக்காக ஸ்பான்ஸார் செய்த சிலருக்குப் பொன்னாடைகள் போர்த்தினார்.  பெரியவங்களை இப்படித்தான் பணிவாக வணங்கணும், இல்லை!  வணங்குபவர் நிகழ்ச்சித் தொகுப்பாளர்.
மேடையின் ஒரு ஓரத்தில்  மூணு மிருதங்கம் வச்சுருந்தாங்க. ஒன்னு கண்ணாடி, ஒன்னு ஃபைபர் க்ளாஸ், மற்றது மரம்.  உமையாள்புரம் அவர்களே  ஆராய்ச்சிக்காகப் பலவிதமா மிருதங்கங்களைத் தயாரிச்சு பரிசோதனை செஞ்சுருக்கார்.
அடுத்து வரும் ஒரு இசை நிகழ்ச்சிக்காக  திரையைப் போட்டுட்டு மேடையை ஒழுங்குபடுத்துன சமயம்....  கீழே இருந்த கூட்டத்தில் ரொம்பவே தெரிஞ்ச முகத்தைப் பார்த்துட்டேன். எப்பவும் போல சிரிப்பும் ஜொலிப்புமா நம்ம சுதா ரகுநாதன்.  ரொம்பதூரத்தில் இருந்து க்ளிக்குனதில் சரியா படம் வரலை :-(

பக்கத்து இருக்கையில் வந்து உக்கார்ந்தவுங்க கையில் நிகழ்ச்சிக்கான முறையான அழைப்பிதழ் இருந்தது!  வாங்கிப் பார்த்து, க்ளிக்கிட்டுத் திருப்பிக் கொடுத்தேன்:-)Jwaalaa  A voyage in the Ocean of  Melody & Rhythm

Ustad Maa Zila Khan -  Vocal
Shri   Fabrizio  Cassol -   Saxophone
Shri  Mattanur Sankaran Kutty  - Chenda
Shri  Stephen Devassy  - Keyboard and Keytar
Shri  Attukal Balasubramanian -  Electric Violin
இப்படி ஒரு குழுவினர். இவர்களுடன் விழா நாயகனும்  ம்ருதங்கம் வாசிக்கப்போறார்! எல்லாமே பெரிய செட் தான்!   Ustad Maa Zila Khan  ஒரு ஸூஃபி ஸிங்கர்!


நிகழ்ச்சி ஆரம்பமாச்சு.   வாய்ப்பாட்டோடு தொடங்கி  ஸாக்ஸ், வயலின்ன்னு போய்க்கிட்டு இருக்கும்போது  தெரிஞ்ச  இன்னொருவர் மேடைக்கு வந்தார்! நம்ம ட்ரம்ஸ் சிவமணி !  அவருடைய கையில் சில இசைக்கருவிகள்.  அட்டகாசமான வாசிப்பு. இப்போதான் முதல்முறையா  சிவமணியின் வாசிப்பை நேரில் கேட்கறேன்! கூடவே செண்டை வாத்தியமும் சேர்ந்து  அட்டகாசம்!
நிகழ்ச்சியைப் பார்க்கத்தான் வந்தேன்னு அவர் சொன்னார். வந்தவரை  நம்ம உமையாள்புரம் மேடை ஏத்திட்டாராம்!  அவருக்குப் பொன்னாடை போர்த்த இவரும், இவருக்குப் பொன்னாடை போர்த்த அவருமா....   யார் முதலில் என்று சின்னச் சண்டை மேடையில்:-)பெரியவருக்குப் பொன்னாடை போர்த்திய சிவமணி, சாஷ்டாங்கமா காலில் விழுந்து நமஸ்கரித்தார்.


நிகழ்ச்சியின் கடைசிக்கு வந்துருந்தோம். அப்பப்பச் சின்னச்சின்னதா  அஞ்சு  நிமிட், நாலு நிமிட்னு வீடியோ எடுத்தாலும் கடைசிப் பகுதியை ஏறக்குறைய முழுசாவே எடுத்தேன். 14.32 நிமிஷம் வந்தது.நிகழ்ச்சி முடியும்போது   கிட்டத்தட்டப் பத்து மணி!  இந்த வருச இந்தியக் குடியரசு நாள்  ரொம்ப மனநிறைவோடு  இருந்தது உண்மை.

அறைக்கு வந்து சேர்ந்து, சேர்ந்து  ரூம் சர்வீஸில் தோசைகளைத் தின்னு முடிச்சோம்.

நாளைக்குக் கதை நாளைக்கு!

தொடரும்.............:-)


17 comments:

said...

இந்த வாட்டி சென்னையில் இருந்தும் உங்களை பாக்க முடியாம போயிருச்சு. சீக்கிரம் சந்திக்கலாம்

said...

அடேங்கப்பா.. உமையாள்புரம் சிவராமனுக்குப் பாராட்டுவிழா. அன்றைய மாலை இசைமாலைன்னு சொல்லுங்க.

உமையாள்புரம் சிவராமன் சினிமாவிலும் வாசிச்சிருக்காரு. மிருதங்கச் சக்கரவர்த்தி படத்துல எம்.எஸ்.வி இசையில் சிவாஜிக்கு வாசிச்சது இவர்தான்.

சில மாதங்களுக்கு முன்னாடி சிக்கில் குருசரணோட திருப்புகழ் கச்சேரிக்குப் போகக் கிடைத்தது. அதுல இவர்தான் தாளம். அருமையான வாசிப்பு.

said...

மிக அருமையான வருணனையாக, அழகான படங்களுடன் அருமையான பதிவு. நன்றி.

said...

இப்படியா தலைப்பு வைப்பது . தேர்தல் முடிந்த நேரத்தில் என்னவோ என்று நினைத்தேன் இசை விழாவை ரசித்தீர்கள் என்று தெரிகிறது

said...

அருமையான கலைஞருக்குக் கிடைத்த மனம் நிறை விழா.
அதை நீங்கள் சரியான நேரத்தில் பார்த்துக் களித்ததே விசேஷம்.
படங்கள் எல்லாம் அற்புதம்.

said...

ரசித்தேன்.

said...

சிறப்பானதோர் நிகழ்வில் பங்குபெற்று எங்களுக்கும் அந்நிகழ்ச்சியின் ஒரு காணொளியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி டீச்சர்.

said...

உங்கள் தலைப்பு கவர்ச்சி ஆனால் தெரியும் எங்கள் துளசி சேச்சி தலைப்பு இப்படித்தான் பரபரப்பாக வைப்பார்கள் என்று ஹஹஹஹ்ஹ...

பல நாட்களாக வலைப்பக்கம் வரவில்லை. இப்போதுதான் வருகை...

வந்தது செம ட்ரீட்...உமையாள்புரம்!!!

பகிர்வுக்கு மிக்க நன்றி

said...

வாங்க புதுகைத் தென்றல்.

அடுத்தமுறை வந்துக்கிட்டே இருக்கு :-)

said...

வாங்க ஜிரா.

இப்படித்தான் எதிர்பாராம சில நாட்கள் அருமையா அமைஞ்சுருது!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

தமிழ்நாட்டு அரசியலில் அ.வியாதிகள் சில நல்ல சொற்களைப் பிடிச்சு வச்சுக்கிட்டு மத்தவங்களைப் பயன்படுத்தவிடாமல் செஞ்சுக்கிட்டாங்க.

இன்னொரு எடுத்துக்காட்டு அம்மா.

நம்முடைய அம்மாவை இனிமேல் சொல்லும்போது பெத்த அம்மான்னு குறிப்பிடணும் போல!

said...

வாங்க வல்லி.

எப்படியோ கொஞ்சூண்டு அதிர்ஷ்டம் இன்னும் நமக்கு ஒட்டிக்கிட்டு இருக்கு போல:-)

கிளம்பறதுக்கு அரைமணி முன்பு கூட இதைப் பற்றிய விவரம் தெரியாமல் இருந்தேனேப்பா!!!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

'நான் பெற்ற இன்பம்' வகையில் இது இருக்கே :-)

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க துளசிதரன்.

ரசனைக்கு நன்றி.

எனக்கும் இந்த முறை பின்னூட்டங்களுக்குப் பதில் எழுத ரொம்பவே தாமதமாப் போயிருச்சு :-(

வலையில் ஒரு வசதி..... எப்ப நேரம் கிடைக்குமோ, அப்ப வரலாம் என்பதுதானே :-)

said...

அருமை :)