காலையில் எழுந்ததும் முதல் வேலையா அடுத்த மொட்டைமாடியில் நடமாட்டம் இருக்கான்னு பார்த்தேன்:-) ஊஹூம்... அவரவருக்கு அவரவர் டைமிங் ஒன்னு இருக்குல்லையா? குளிச்சு முடிச்சு தயாரானபோது வெங்காயம் உரிக்கும் வேலைமட்டும் ஒருபக்கம் ஆரம்பிச்சுருக்காங்க.
அறை ஜன்னலைத் திறக்க வேணாமுன்னு அன்போடு ஒரு எச்சரிக்கை:-)
ப்ரேக்ஃபாஸ்ட் நமக்கு வழக்கமான இட்லி வடைதான். பழங்கள் நறுக்கி வச்சுருக்காங்கன்னாலும் பப்பாளியும், தர்பூசணியும்தான் பெரும்பாலும் எல்லா இடங்களிலும்.
சாப்பாட்டைவிட அங்கேமாட்டி இருந்த மாடர்ன் ஓவியங்கள் பிடிச்சுருந்துச்சு. கிராமக்கலைகளான வில்லுப்பாட்டு, கரகாட்டம், கும்மியாட்டம், கூடவே ஒரு பாட்டுக்கச்சேரின்னு அழகாத்தான் இருக்கு.
இன்னொருநாள் தங்குவதா ஒரு எண்ணம் இருந்துச்சுதானே... ஷோளிங்கர் ப்ளான் இருந்தப்ப. அது கேன்ஸல் ஆனதால் பரவாயில்லைன்னு ஒரு நாள் இங்கே இருக்கலாமா இல்லை சென்னைக்குப் போயிடலாமான்னு கேட்டார் நம்மவர். இருந்து என்ன பண்ணப்போறோம். சென்னைக்குப் போயிடலாமுன்னதும், வரவேற்பைக் கூப்பிட்டு செக்கவுட் பண்ணறதாச் சொல்லிட்டு மூட்டை முடிச்சுகளைக் கட்டினோம்.
இந்த ஜிஆர்டியே ஒரு ட்ராவல் & டூர் சர்வீஸ் நடத்தறாங்களாம். அதுலே டோல் சார்ஜ், பார்க்கிங் சார்ஜ் எல்லாமே சேர்த்து இவ்ளோன்னு போட்டுருக்காங்க. எனக்கென்னமோ ரொம்ப சல்லீஸா இருக்குன்னு ஒரு தோணல்!
ஸ்வாச்பாரத்துக்கு ஒப்புக்கொண்ட மக்கள்ஸ் தங்களுடைய கையெழுத்தால் அலங்கரிச்சு இருந்தாங்க. ஆனால் இது கட்டடத்துக்குள்ளேயா, இல்லை தெருக்களிலான்னு தெரியலையே..
கிளம்பி நேரா வரதராஜரைப் பார்த்துட்டுப் போகலாமுன்னு நம்மவர் சொல்ல, வழக்கமா பார்க்கும் வரதனை இந்தமுறை விட்டுடலாம். அங்கே முக்கியத்துவம் எல்லாம் சிப்க்கோலிக்குதானேன்னேன்:-) வரதன் ரெண்டாப் பக்ஷமால்ல இருக்கான்! சொன்னவள், அதுக்கு பதிலான்னு கைகேயி மாதிரி ஒரு வரம் கேட்டேன். "இன்னொருக்கா நம்ம பாண்டவதூதனைப் பார்த்துட்டுப் போகணும். மனசை விட்டு அகலமாட்டேங்கறான்"
எனக்கும்தான்னு சொல்லாமல் சொன்னார்.
கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தாச். இன்னொரு முறை கண்ணும் மனசும் நிறைய தரிசனம் ஆச்சு. நேத்துப் பொங்குன மாதிரி இன்றைக்கு இல்லை. அதான் ஏற்கெனவே பார்த்தாச்சேன்னு எதிர்பார்ப்பு ஒன்னும் இல்லாமல் நாலு வார்த்தை அவனோடு பேச(வும்) முடிஞ்சது. இன்றைக்கு வேறொரு பட்டர் ஸ்வாமிகள் இருந்தார். ஒரு இருவது நிமிஷம்போல கோவிலிலேயே இருந்துட்டுக் கிளம்பும்போதுதான், சென்னைக்குப்போற வழியில் இன்னும் ரெண்டு மூணு ஸ்பெஷல்ஸ் கவர் செஞ்சுக்கலாமேன்னு ஐடியா!
உள்ளூர் கடைகள் திறக்கும் நேரம்தான். ஒரு சுத்து சுத்தி வந்தப்ப காந்தி ரோடில் இன்னொரு 'சா' கண்ணில் பட்டார். இவர் ஏ ஜி பாபு சா . கடை திறந்து வாசல் பெருக்கிக்கிட்டு இருக்காங்க. ஒரு மூணே மூணு புடவை வாங்கிக்கணும். அவை எனக்கு இல்லை என்பதால் சட்னு ஷாப்பிங் முடிஞ்சுருச்சு:-)
காலையில் வேலைக்கு வந்துருக்கும் மகளிருக்கு காஃபி சப்ளை நடக்குது. ஒரு மணி நேரம் கழிச்சு ரெண்டு மூணு பேராப்போய் டிஃபன் சாப்பிட்டு வருவாங்களாம். ஏகப்பட்ட பெண்கள் வேலை செய்யறாங்க இங்கே காஞ்சிபுரம் புடவைக் கடைகளில் மட்டும். ஓரளவு சம்பளமும் பரவாயில்லையாம். எனக்கு இப்படி பெண்கள் வீட்டுக்கு வெளியிலும் உழைச்சு நாலு காசு சம்பாரிப்பது ரொம்பவே பிடிச்சமானதுதான். குறைஞ்சபட்சம் வீட்டுச் சூழலில் இருந்து வெளியே வந்து நாலு பேரைப் பார்த்து எத்தனையோ நல்ல விஷயங்களைக் கத்துக்கலாம். வாழ்க்கை முழுசும் நடப்பதெல்லாம் அனுபவக்கல்விதானே!
நம்மவருக்குப் புடவைக்காரராய் நடிக்க ஒரு சான்ஸும் கொடுத்தேன். புடவைக்கடை வைக்கணும் என்ற ஆசை ஓரளவுக்கு நிறைவேறியது :-) ஆனால் வியாபாரத்துக்கு இவர் லாயக்கே இல்லை:-) சரசரன்னு புடவையைப் பிரிச்சுக் காட்டினோமா, உடனே அழகா மடிச்சு வச்சோமான்னு இருக்க வேணாமோ?
அங்கேருந்து கிளம்பி ஒரு இருபது நிமிசப் பயணத்தில் கண்ணில் பட்ட ஒரு போர்டைப் பார்த்ததும் , இங்கே போகணுமுன்னு நினைச்சிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. ஓரிக்கை! காஞ்சியில் இருந்து வெறும் நாலே கிமீ தூரம்தான்!
நம்ம காஞ்சி மகாபெரியவா அவர்களின் நினைவு மண்டபம் இங்கே தானே இருக்கு! விசாரிச்சோம். திரௌபதி அம்மன் கோவில்வழியில் போகணுமாம்.
இந்த ஊர் இப்போ நம்ம மகாபெரியவா அவர்களால் ரொம்பவே பிரபலம் அடைஞ்சுக்கிட்டு இருக்குன்னாலும், ஊரின் பெயருக்கு இன்னொரு கதை இருக்கு. காஞ்சியிலேயே சொன்னவண்ணம் செய்த பெருமாள் இருக்கார். பக்தர்கள் சொன்னதைக் கேட்டு அப்படியே நடந்துப்பாராம். அப்படியா? நான் சொன்னதைக் கேக்கலையேன்னு புலம்பப்டாது. பெருமாளே பேச்சைக் கேக்கறான்னா... பக்தர் எப்படி இருந்துருக்கணும்! எனெக்கெல்லாம் கிட்டப்போய் நின்னு சேவிக்கக்கூட அருகதை கிடையாது :-(
திரு வெஃப்கா என்ற ஊர், நம்ம காஞ்சீபுரம் வரதராஜர் கோவிலில் இருந்து ஒரு கிமீ தூரத்தில் ! சொன்னவண்ணம் செய்த பெருமாள்! நம்ம திருமழிசை ஆழ்வாருக்கு ஒரு சிஷ்யப்பிள்ளை இருந்தார். பெயர், கணி கண்ணன். ஆசானும் சீடருமா காஞ்சியில் இருந்து பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அப்ப இவுங்க சேவையில் பங்கெடுத்து உதவி செய்த ஒரு மூதாட்டியை, கனிக்கண்ணன் தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி பேரழகுள்ள இள மங்கையா மாத்திடுவார்.
விவரம் தெரியாத அவ்வூர் மன்னன் பேரழகியைக் கல்யாணம் பண்ணிக்குவார். கொஞ்ச நாள் கழிச்சு பேச்சு வாக்கிலே மனைவி இந்த அதிசயத்தை மன்னரிடம் சொல்லப்போக, அவரும் திருமழிசையைப் பார்த்து என்னையும் இளைஞனா மாத்தியே ஆகணுமுன்னு கேட்டுக்கறார். முடியாத காரியம்னு திருமழிசை மறுக்க,அப்படீன்னா இந்நாட்டை விட்டு வெளியேறுன்னு கடுமையா ஆணை போட்டார்.
குரு கிளம்புனதும் சிஷ்யனும் கூடவே கிளம்பறார். இவுங்க போயிட்டா நமக்கு யாரு ஸேவை செய்யப்போறாருன்னு பெருமாள் முழிக்க,
'இதா பாரு... கணிக்கண்ணன் (என்னோடு) கிளம்பிட்டான். நீ என்னத்துக்கு இன்னும் இங்கே படுக்கைப் போட்டபடி கிடக்கே? உன் பாம்புப் பாயைச் சுருட்டிக்கிட்டுக் கிளம்பு'ன்னு சொன்னதும் மறு பேச்சுப்பேசாம பாயைச் சுருட்டிக்கிட்டுக் கிளம்பிட்டான் எம் பெருமாள். பெருமாள் கிளம்புனதும் கூடவே மஹாலக்ஷ்மியும் கிளம்பிட்டாள். மச்சான் போறதைப் பார்த்துக்கிட்டுச் சும்மா நிக்க முடியுமா? சிவன் & ஃபேமிலியும் மூட்டையைக் கட்டிருச்சு. மற்ற தேவர்கள் எல்லாம் படை போல் கூடவே கிளம்பிட்டாங்க.
எல்லாம் கிளம்பி வரிசையாப் போறாங்க. ஸ்ரீதேவி போனதும் நாட்டின் செல்வம், அழகு எல்லாம் சட்னு மறைஞ்சுருது. தரித்திர தேவதையான அக்கா மூதேவி இடம்பிடிக்க வர்றாள். எல்லாத்தையும் பார்த்த மன்னனுக்கு திகிர்னு கிலி பிடிச்சுக்குது. ஐயோ வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இல்லாமல் நானே அழிவைத் தேடிக்கிட்டேனேன்னு ஓடிப்போய் திருமழிசை காலில் விழுந்து என்னை மன்னிச்சுடுங்கோ.அறியாமையால் இப்படி அசட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்னு அழறார்.
போயிட்டுப்போறது போன்னு மன்னிச்சுட்டு, சிஷ்யப்பிள்ளையைப்பார்த்து 'வா, நாம் இந்த ஊருலேயே இருக்கலா'முன்னு சொல்லித் திரும்பி வர்றார். கூடவே போன பெருமாளும்,பாயும், பட்டாளமும் கூடவே திரும்பி வர்றாங்க.
கக்கத்துலே சுருட்டிவச்ச பாயுடன் பெருமாள் இப்ப என்ன செய்யணும்னு தெரியாம திருதிருன்னு முழிக்கிறார். சுருட்டச் சொன்னவர் விரிக்கச் சொல்லலையே? இப்படியே நிக்கணுமான்னு யோசனை. படுக்கையோ கனமான கனம். தோள்பட்டையே அறுந்து விழுந்துருமோன்ற பயம் நம்ம பெருமாளுக்கு! சாதாரண சேஷனே பயங்கர கனம் தெரியுமோ? இதுலே ஆதிசேஷனான்னா இருக்கான். ஆழ்வார் பார்த்தார். அடடா....
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ நிற்க வேண்டாம்
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தான் நீயும்
உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்
ஓக்கேன்னுட்டு பாயை விரிச்சுட்டு அப்பாடான்னு கிடந்தான். அவசரமாப் பாயைப் போட்டதில் இடப்பக்கம் இருக்க வேண்டிய தலையணையும் அரவக்குடையும் வலது பக்கம் வந்துருச்சு. அப்படியே ஓடிப்போய் படுக்கையில் விழுந்தவன் இன்னிக்கும் அப்படியே கிடக்கிறான்.
மேற்படி சம்பவத்தில் ஊரைவிட்டு வந்த ஊர்வலக்குழு போறவழியில் இருட்டிப்போச்சேன்னு ஒருநாள் ராத்தங்குன இடம் இது ஓர் இருக்கை. .
அநேகமா இங்கே தங்கலாமுன்னு நின்ன இடமாத்தான் இது இருக்கணும். அதுக்குள்ளே மன்னன் ஓடோடி வந்துருக்கணும். இல்லைன்னா இங்கே கிடந்த கோலத்தில் ஒரு கோவில் வந்துருக்காதோ? நாலு கிமீ நடக்கறதுக்குள்ளே பெருமாள் கனம் தாங்காமத் திணறி இருப்பான், பாவம். திரும்ப இன்னுமொரு நாலு கிமீ நடந்து போய்.... ப்ச்.... நெஜமாவே பாவம்ப்பா நம்ம பெருமாள்!
சொன்ன பேச்சைக் கேட்டவனின் கோவிலைப் பார்க்கலாம் இங்கே:-)
த்ரௌபதி அம்மன் கோவில் தாண்டி கொஞ்சம் உள்ளே திரும்பிப்போனோம். கொஞ்ச தூரத்தில் கண்முன்னே தெரிஞ்சது தஞ்சைப் பெரிய கோவில்! அச்சுப்போல அதே அதே. ஆனால் சைஸ் சின்னது!
தொடரும்.......:-)

18 comments:
தஞ்சைக்கோயில்? காத்திருக்கேன்.
தொடர்கிறேன்... கீழே இருந்து இரண்டாவது படத்தில் (கோபால் சார் உட்கார்ந்திருக்கும் படத்துக்கு மேலே) அந்த டார்க் பிங்க் (மரூன்) புடவை ரொம்ப நன்றாக இருக்கிறது. இதெல்லாம் என்ன விலை இப்போது? மற்றவர்களுக்கு வாங்கும் புடவையை உடனே செலெக்ட் செய்துவிட்டேன் என்று சொல்லும்போது, பெண் எப்போதும் பெண்தான் என்பதை உறுதிப்படுத்திவிட்டீர்கள். நல்லவேளை. உங்களுக்கு செலெக்ட் பண்ண ஆரம்பித்திருந்தால், மற்ற கோவில் செல்ல எப்படி நேரம் கிடைக்கும்? திருமழிசையின் கதை எத்தனை முறை படித்தாலும் நன்றாக இருக்கும்.
வாங்க கீதா.
காத்திருப்பதும் ஒரு இனிமைதான்:-)
புதன் காலை வரை......... ப்ளீஸ்.
வாங்க நெல்லைத்தமிழன்.
அந்தப் புடவை மூவாயிரம்தான்.
மற்றவர்களுக்குத்தான் அரை மணி நேரம். வயசு, சென்னை காலநிலை, ஏற்கெனவே அந்தக் கலர் அவுங்ககிட்டே இருக்கான்னு சின்ன யோசனை வேற.
எனக்குன்னா பிரச்சனையே இல்லை. அஞ்சே நிமிசத்துலே செலக்ஷன் முடிஞ்சுரும். எடு பச்சை! இந்த பார்டர் ஏற்கெனவே இருக்கா? அம்புட்டுதான்:-)
உங்களுக்குத்தான் எத்தனை கதைகள் தெரிகிறது அம்புட்டும் நினைவில் இருக்கிறதா பேர்கள் ஊர் உட்பட. புடவைக்காரராக கோபால் எத்தனை புடவைகள் விற்றார்
தூதன் விட்டானா. விஷமக்காரனாச்சே.
கோபால் உட்கார்ந்தா எல்லாருக்கும் இலவசமாகப் புடவையைக் கொடுத்துவிடுவார்.
ஓரிக்கை ரொம்ப நாள் லிஸ்டில்.
உங்க வழியாப் பார்த்துவிடுகிறேன். நன்றி துளசி மா.
புடவைக்கடல்.. அசத்தல். புது விற்பனையாளர் எவ்ளோ டிஸ்கவுண்ட் கொடுத்தார்? :-)
ஓரிக்கை பதிவுக்காக வெயிட்டிங்.
புடவை கடைக்காரர்.... :)))
பயணத்தில் நானும் தொடர்கிறேன்.
கணிக்கண்ணன் தான் கூனை நிமிர்த்தினார். திருமழிசை ஆழ்வாரல்ல.
காஞ்சிபுரத்துல பட்டுச்சேலை எடுக்கனும்னே நிறையப் பேர் போவாங்க. எந்தக் கடைல வாங்குவாங்க.. விலையெப்படி இருக்குமோ.. நல்ல தரமா இருக்குமோன்னு நிறைய யோசிப்பேன்.
ஆணோ பெண்ணோ... வீட்டிலும் வெளியிலும் போய்ப் பழகிக்கனும். அப்பத்தான் நல்லது. நாலு நல்லது கெட்டது புரியும்.
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கதை அருமை.
அந்த ஓவியங்கள் உண்மையிலேயே ரொம்ப அழகு. பளிச்சுன்னு கவருது.
தொடர்ந்து வருகிரென்.உஙகள் உதவியால் அஹொபிலம் நல்ல தரிசனம்.படங்கள் அழகு.சில்க்காட்டன் சென்னையெல கிடைக்காதா? பயணத்தில் நிரய தகவல்கள்.இரண்டு நாள் முன்பு svbe channal ல் வேளுக்குடி க்ரிஷ்னன் ஒரிருக்கை பெருமாள் பற்றி கூறினார். இப்பொ இங்கே.பல வருடத்து க்கு ஒரு முறை சென்னை வருபவர்கட்கு நல்ல வழி காட்டுதல்.நன்றி.
வாங்க ஜிஎம்பி ஐயா.
நிறைய கதை கேட்டு வளர்ந்தவள்தான். எங்க அம்மம்மா சாமி கதைகள் சொல்வதில் தேர்ந்தவர்! அதுதான் நானும் ஒரு கதைசொல்லியாக இருக்கேன் போல!
கோபால் புடவை விற்றதா? ஐய்ய............ இவர் வித்துட்டாலும்:-)
வாங்க வல்லி.
எங்கே.... எதிரில் நின்னுக்கிட்டு இருக்கேன்... ஒரு புடவை வேணுமான்னு கூடக் கேக்கலையேப்பா:-)
வாங்க சாந்தி.
அவருக்கே டிஸ்கவுண்ட் இல்லைன்னுட்டாங்க அங்கே :-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
வளையல் கடைக்காரர்தான் டேஞ்சர்! புடவைக் கடைக்காரருக்கு அந்த பிரச்சனை இல்லைன்னு ஒருவேளை தெரிஞ்சுருக்குமோ? :-)
வாங்க ஆனந்த்.
ரொம்பச்சரி. நாந்தான் கவனமில்லாமல் ஆழ்வார்னு எழுதிட்டேன் :-(
வருகைக்கும் தவறைச் சுட்டியமைக்கும் நன்றி.
வாங்க ஜிரா.
காஞ்சியில் எங்கே பார்த்தாலும் புடவைக் கடைகள்தான். இதுலே அவுங்கவுங்களுக்கு ராசியான புடவைக் கடைகள் வேற இருக்கே. கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு மொத்தமாப் புடவை வாங்குறதா இருந்தால் காஞ்சிதான் சரி. பழைய கடைகளில் நல்ல டிஸ்கவுண்டு கிடைக்கும். இப்போ... புதுசாவும் பிரமாண்டமாவும் இருக்கும் கடைகளில் தள்ளுபடி கொடுப்பது இல்லை .
பொதுவா எனக்கு எடுக்கணுமுன்னா விநாயகா ஸில்க்ஸ் போயிருவேன். எனக்கு ஆகிவந்த கடை. யானை.....
வாங்க மீரா.
சென்னையில் இல்லாத புடவைக் கடைகளா? ஆனாலும் காஞ்சிபுரத்துலே போய் எடுத்து வந்தேன்னு சொன்னா........ அது(வும்) ஒரு கெத்துதானே:-)
ஸில்க் காட்டன் புடவைகள் எல்லா இடங்களிலும் கிடைக்குது. பட்டுக்கு ஈடான விலையிலும் உண்டு. ஸல்வார் மெட்டீரியல்ஸ்தான் கொஞ்சம் கஷ்டம். விலையும் அதிகம்தான். அந்தக் காசுக்கு ஒரு புடவையே வாங்கிடலாம்.
Post a Comment