காஷிராம் அவ்தார் ஜஸ்வால், தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டு வழிகாட்டிக்கிட்டே நம்மை ஹவா மஹல் வழியாவே சிட்டி பேலஸ் கூட்டிட்டுப்போனார். வண்டியை அரண்மனை கார் பார்க்கில் நிறுத்திட்டு ஒரு பெரிய வாசல் வழியா வெளியே தெருவுக்குப் போனோம். கோட்டை மதில்களுடன் அங்கே தனியா நின்னுக்கிட்டு இருக்கும் கட்டிடம்தான் ஜந்த்தர் மந்த்தர். உள்ளே போக கட்டணம் ஆளுக்கு இருவதுன்னு செலுத்திட்டு உள்ளே போனோம். வானசாஸ்த்திர நிலையம். மஹாராஜா ஸவாய் ஜெய் சிங் (இரண்டாமவர்) கணக்கானவர்ன்னு சொன்னேனே....அதேதான்.
உலகின் பாரம்பரியக் கட்டிடங்களில் இதைச் சேர்த்துருக்கு (World Heritage site)
ஜந்த்தர் மந்த்தர் நுழைவு வாயில்
கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் விளக்கம் சொன்னவரிடம் ஹிந்தியில் சொல்லுங்கன்னேன். நம்ம ப்ரதீபுக்கும் புரியணுமே. நம்ம மஹாராஜா ஸவாய் ஜெய்சிங் (இந்தப்பெயரில் இவர் இரண்டாவது மன்னர்) இந்தியாவில் அஞ்சு இடத்தில் இப்படி ஜந்த்தர் மந்த்தர் கட்டி வச்சுருக்கார். ஜெய்ப்பூர், தில்லி, மதுரா, வாரணாசி அண்ட் உஜ்ஜயினி. இவைகளில் இப்போ நாம் நின்னுக்கிட்டு இருக்கோமே இந்த ஜெய்ப்பூர் ஆப்ஸர்வேட்டரிதான் பெருசு. பொதுவா ஆப்ஸர்வேட்டரியில் நாம் பார்க்கும் சின்னச்சின்ன யந்திரங்கள், டெலஸ்கோப் இப்படி ஒன்னும் இங்கே இல்லை. எல்லாமே மார்பிளும் செங்கலும் வச்சுக் கட்டினவைகள்.. இயந்திரங்கள் எல்லாமே இப்படித்தான் செஞ்சு வச்சுருக்காங்க. இயற்கையான சூரியன் ஒளியையும் , இந்த ஒளி செங்கல்லால் கட்டி வச்சுருக்கும் பகுதிகள் மேல் விழும்போது அதன் மூலம் ஏற்படும் நிழல்களைக் கணக்கு வச்சு மணி பார்க்கறது மட்டுமில்லாம சூரியன் சஞ்சரிக்கும் பாதை, ராசி, நட்சத்திரம், இப்படி ஒரு பஞ்சாங்கமா செயல்படுது இது.
சமஸ்கிரதத்தில் ஜந்த்தர்னு சொன்னால் யந்த்ரா (இன்ஸ்ட்ருமெண்ட் ) என்றும் மந்த்தர் என்பதுக்கு சூத்திரம் (ஃபார்முலா) என்றும் பொருளாம்.
ராஜ் யந்திரா, க்ராந்தி யந்திரா, ராஷிவலயாச் யந்திரா, திஷா யந்திரா, இப்படி ஏகப்பட்டக் கருவிகள். எல்லாமே கல்வச்சுக் கட்டியவைகள்தான். இந்தக் கணக்கெல்லாம் சரியான்னு டபுள் செக் பண்ணிக்க ஜெய்ப்ரகாஷ் யந்திரான்னு இன்னும் ஒன்னு இங்கேயே இருக்கு.
விமானத்துலே இறக்கையில் பொருத்தி இருக்கும் எஞ்சின் போல அசப்பில் இந்தப் பக்கம் ஒன்னும் அதுக்கு எதிர்ப்பக்கம் ஒன்னும் இருக்கு. இது தக்ஷணாயணம், உத்தராயணம் காலங்களுக்கானதாம். நரிவல்யா யந்திரமுன்னு பெயர்.
ரெண்டா வெட்டுன C மாதிரி வளைஞ்ச பளிங்குகல்லில் மணி, நிமிஷம், விநாடி எல்லாம் இஞ்ச் டேப் மாதிரி கோடுகோடா பாகம் போட்டுப் பிரிச்சு வச்சுருக்கு. பக்கத்துலே நிற்கும் ஒரு 90 டிகிரி செங்கோணமுள்ள முக்கோண வடிவச் சுவற்றின் நிழல் அதுலே விழும் இடத்தை வச்சு அப்போதைய மணியைத் தெரிஞ்சுக்கலாம்.இந்த சுவத்துக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு உடைஞ்ச சி. சுருக்கமாச் சொன்னால் ஒரு C யை ரெண்டா வெட்டி பக்கத்துக்கொன்னா வச்சுருக்காங்க.
சின்ன டயல்
காலை ஆறுமுதல் பனிரெண்டு வரை இடதுபக்கமும் பகல் பனிரெண்டு முதல் மாலை ஆறுவரை வலப்பக்கமும் நிழல் விழுது. இது சின்ன சன் டயல். சாம்ராட் யந்திரமுன்னு பெயர். காஷிராம் விளக்கிக்கிட்டே இப்போ மணி எத்தனைன்னு கேக்கறார். கோடுகளைப் பார்த்து எண்ணிச் சொல்லணும். நான் இயல்பா கையைத் தூக்கி என் கைகடிகாரத்துலே பார்த்துட்டு ஒன்பதேகால்ன்னு சொன்னேன். இல்லையாம் அப்போ மணி எட்டு நாப்பத்தியாறு! எப்படி? எப்படி?
இண்டியன் ஸ்டேண்டர்ட் டைம் அலஹாபாத் பக்கத்துலே இருக்கும் மிர்ஸாபூர் என்னும் டவுனில் இருந்துதான் கணக்கெடுக்கப்படுது. ஆனால் ஒரு தீர்க்கரேகைக்கு 4 நிமிசம் என்ற கணக்கு ஒன்னு இருக்கே. அதைவச்சுத்தான் உலகநாடுகளில் நேரத்தைக் கணக்குப் பண்ணறாங்க. அலகாபாத், ஜெய்ப்பூர் இந்த ரெண்டு இடத்துக்கும் இடையிலே 7.25 தீர்க்கரேகைகள் வித்தியாசம் இருக்கு. ரெண்டும் ரெண்டு கோடியில் இருக்கும் ஊராச்சே. அதனால் 29 நிமிச வித்தியாசம் இருக்காம். உண்மையான ஜெய்ப்பூர் நேரத்தோடு 29 நிமிசம் சேர்த்தால் ஐ எஸ் டி. கிடைக்கும்.
இன்னொரு பக்கம் மார்பிளால் செஞ்ச பெரிய கிண்ணம் தரையிலே பதிச்சுவச்சமாதிரி. இது துருவ யந்திரம். இதன் கரையில் நாலுபாகமாப் பிரிச்சு 90 டிகிரிக் கணக்குலே வச்சுருக்காங்க. ஸீரோ டிகிரிக்கும் 180 டிகிரிக்கும் ஒரு கம்பி. 90க்கும் 270க்கும் ஒரு கம்பி. ரெண்டும் ஒன்னையொன்னு வெட்டும் இடத்தில் ஒரு தகடு. அந்தத் தகட்டின் நிழல் விழும் இடத்தில் அப்போதைய ராசி, நட்சத்திரம் எல்லாம் பார்த்துக்கொள்ளலாம். எந்த இடமுன்னு நமக்குக் காமிக்க அங்கே கட்டிவிட்டிருக்கும் கயிற்றின் ஒரு முனையில் உள்ள சின்னக்குச்சியால் அந்தத் தகட்டைத் தொட்டு அதன் ஆடும் நிழலில் நமக்கு என்ன ஏதுன்னு காமிக்கிறார் காஷிராம்.
சில கிண்ணங்களுக்கு உள்ளில் படிகள் வேற இருக்கு. கீழ்தளத்துலே இருக்கும் வாசல்வழியா அதுக்குள்ளே போகலாம். ஜோதிடர்களும் வானசாஸ்த்திரம் படிக்கும் மாணவர்களும், நிபுணர்களும் அதுவழியாப்போய் கோணங்கள் எல்லாம் அளந்து கற்றுக்கொள்வார்களாம். ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதகம் பார்த்துக் குறிக்க இதைத்தான் அப்போதெல்லாம் பயன் படுத்துவாங்களாம். இப்பவும் சிலர் இங்கே வந்து பார்த்து குறிப்பெடுத்துக்கிட்டு போறாங்களாம்
ப்ரவுன் நிறத்தில் படிகள். கீழ்தளத்தின் கதவைத் திறந்து இதில் ஏறிப்போய்ப் பார்க்கலாம்
அவர் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிக் கேட்டுக்கிட்டேவர்றார் நம்ம கோபால். ரொம்ப வருசத்துக்கு முன்னே தில்லியில் இருக்கும் ஜந்த்தர் மந்த்தர் போனப்பவும் எல்லாத்தையும் பார்த்தோம். அப்ப கைடு வச்சுக்கலை. அதனால் சரியா ஒன்னும் புரியலை. இப்ப? கைடு சொல்றார்...... ஆனாலும் ஒன்னும் சரியாப் புரியலை. ஆனால் இது காலம் காட்டும் கருவின்னு மட்டும் நல்லாப் புரியுது:-)
பெரிய டயல்
உலகின் மிகப்பெரிய சன் டயல்
இது மட்டுமில்லாம இன்னொரு இடத்தில் அதே 90 டிகிரி கோணத்தில் முக்கோண டிஸைனில் இன்னுமொரு பெரிய சுவர்(சன் டயல்) இருக்கு. இதுதான் உலகிலேயே பெரியதாம். அங்கேயும் உடைந்த சி அமைப்பு. நேரம் பார்த்துக்கலாம்.
தூரத்தில் ஹவாமஹல் பின்புறம்
காஷிராம்கூட கிளம்பும்போதே ஹவா மஹலை உள்ளே போய்ப் பார்க்கணுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அவரும்....அதுக்குள்ளே ஒன்னுமே இல்லை. வெளியே இருப்பது வெறும் ஃபஷாட்ன்னார். இப்போ நாம் நிற்கும் ஜந்த்தர்மந்த்தர் பெரிய சன் டயல் அருகில் இருந்து 'அங்கே பாருங்க. அதுதான் ஹவா மஹலின் பின் பக்கம். ஒன்னுமே இல்லை பார்த்தீங்களா? வெறும் சுவருன்னு சொன்னேன். சரியாப்போச்சுல்லே'ன்றார்.
12 ராசிகளுக்கான டயல்கள்
ஜந்த்தர்மந்த்தர் கட்டிடத்தின் உள்ளில் பனிரெண்டு ராசிக்கான தனித்தனிப்பகுதிகள் வேற வச்சுருக்காங்க. எல்லாத்துக்கும் ரெண்டுபக்கமும் சின்னச்சின்ன படிகள் வேற. இதுமட்டுமில்லாம வேற என்னென்னவோ கணக்குகள், யந்திரங்கள் இப்படி எல்லாமே சூரியனால் வரும் நிழலைவச்சே அமைஞ்சுருக்கு. கணித மேதைகளுக்கும் வான சாஸ்த்திரம் படிப்பவர்களுக்கும் இது இன்னும் சுவாரஸியமா இருக்கக்கூடும். நமக்கு? உலகிலேயே மிகப்பெரிய பழையகால அப்ஸர்வேட்டரியைப் பார்த்த திருப்தி:-)
இதுவும் ஒரு யந்த்ரா. இதன்மேல் குறுக்கும் நெடுக்கும் போட்ட கம்பிகளை பிடிச்சுத்தொங்கி அறுத்தெறியும் குரங்குகள் தொல்லையால் கம்பிகளைக் கழட்டி வச்சுருக்காங்க. அதான்.....எனக்கு இதில் நேரம் பார்க்க முடியலை!!!!
இதைக்கட்டி முடிக்க ஏழு வருசம் ஆகியிருக்கு 1728 லே ஆரம்பிச்சு 1734 இல் முடிச்சுருக்காங்க. மாடர்ன் கருவிகளோடு ஒப்பிட்டால் மணி காட்டுவதில் மஹா துல்லியம்!!!!! கூடிப்போனால் ஒரு விநாடி வித்தியாசம் வந்தால் அதிகமாம்.
பயங்கரக் கணக்கா இருக்கே!!!!!!!!!!!
மக்களைத் தன் கழுகுப் பார்வையால் அளக்கும் .....
கையில் கடிகாரம் கட்டாம இங்கே வந்து சரியான நேரம் சொல்லணுமுன்னு போட்டி வச்சா ஒருவேளை நான் ஜெயிக்கக்கூடும். கையில் கட்டலைன்னா என்ன? கைப்பையில் வச்சுருப்பம்ல :-)))))))))
தொடரும்..............:-)
Friday, April 29, 2011
எச்சூஸ்மீ....டைம் ப்ளீஸ் (ராஜஸ்தான் பயணத்தொடர் 6)
Posted by துளசி கோபால் at 4/29/2011 03:48:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
அருமையான பதிவு.
நிறைய நுட்பமான விஷயங்கள்.
எனது பையன்களுக்கு இந்த லின்க்கை அனுப்பியிருக்கிறேன்.
வாழ்த்துக்கள் அம்மா.
ஜெய்ப்பூர் ஜந்தர் மந்தர் கொஞ்சம் பரவாயில்லை...நல்ல பாதுகாப்பு கொடுத்து இருக்காங்க! தில்லியில இருக்கற ஜந்தர் மந்தர்-ல இருந்த நிறைய கருவிகள்ல அழுக்கு படிஞ்சு ஒண்ணும் பாக்க முடியறதில்லை. :(
வாங்க ரத்னவேல்.
வாசிக்க போரடிக்குமோன்னு கொஞ்சம் பயந்துக்கிட்டேதான் எழுதினேன்.
ஆனால்............ ஏதோ பயன் ஒருசிலருக்காவது கிடைக்குதுன்னா.... ரொம்ப திருப்திதான்.
நன்றிகள்.
வாங்க வெங்கட் நாகராஜ்.
ஹெரிடேஜ் சைட் என்பதால் கூடுதல் கவனம் எடுத்துப் பராமரிக்கிறாங்க போல.
ராஜாவும் உள்ளூர்லேதானே இருக்கார். அவர் திடீர்னு வந்துட்டால்..... என்ற பயமாலும் இருக்கலாம். எப்படியோ நல்லா இருந்தாச் சரி.
வெயில் காலத்துல நிழல் விழறதை வெச்சு நேரம் பார்க்கறாங்க.. சரிதான். ஆனா ஒரு சந்தேகம்.
மழைக்காலத்துல நேரம் பார்க்கணும்ன்னா என்ன செஞ்சுருப்பாங்க???..
மலைப்பா இருக்கு படங்கள் பார்க்க..
வாங்க அமைதிச்சாரல்.
இது என்ன கேள்வி? மழைக்காலத்தில் வீட்டுலே இருக்கும் கடிகாரத்தில் மணி பார்த்துக்கிட்டால் ஆகாதா;-)))))
ஒருவேளை மழைபெய்யும்போது அனாவசியமா மணி எல்லாம் எதுக்குன்னு முடங்கிக் கிடந்திருப்பாங்களோ?????
வாங்க சுசி.
மலைத்தேன் இதுவென ரசித்தேன்!!!!!!
ஜந்த்தர் மந்த்தர் ஆமா வியக்கத்தான் வைக்குது.
காலை ஆறுமுதல் பனிரெண்டு வரை இடதுபக்கமும் பகல் பனிரெண்டு முதல் மாலை ஆறுவரை வலப்பக்கமும் நிழல் விழுது.
So, Suriyan poitta idhulu onuthuyum parkka mudiyaathunu sollurengala.
//ஆனால் ஒரு தீர்க்கரேகைக்கு 4 நிமிசம் என்ற கணக்கு ஒன்னு இருக்கே.//
Ohh ippadi oru kanakku irukka. neenga solli thaan theriyum.
//உண்மையான ஜெய்ப்பூர் நேரத்தோடு 29 நிமிசம் சேர்த்தால் ஐ எஸ் டி. கிடைக்கும்//
Idhu aditional info.
//எந்த இடமுன்னு நமக்குக் காமிக்க அங்கே கட்டிவிட்டிருக்கும் கயிற்றின் ஒரு முனையில் உள்ள சின்னக்குச்சியால் அந்தத் தகட்டைத் தொட்டு அதன் ஆடும் நிழலில் நமக்கு என்ன ஏதுன்னு காமிக்கிறார் காஷிராம்.// Etho oru sound ketkuthu, "Adu da Raamaa, Adu da Raamaa" :(
Chumma en mana branthi.
//சில கிண்ணங்களுக்கு உள்ளில் படிகள் வேற இருக்கு. கீழ்தளத்துலே இருக்கும் வாசல்வழியா அதுக்குள்ளே போகலாம். ஜோதிடர்களும் வானசாஸ்த்திரம் படிக்கும் மாணவர்களும், நிபுணர்களும் அதுவழியாப்போய் கோணங்கள் எல்லாம் அளந்து கற்றுக்கொள்வார்களாம். ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதகம் பார்த்துக் குறிக்க இதைத்தான் அப்போதெல்லாம் பயன் படுத்துவாங்களாம்.ப்ரவுன் நிறத்தில் படிகள். கீழ்தளத்தின் கதவைத் திறந்து இதில் ஏறிப்போய்ப் பார்க்கலாம்// Padamum vilakkamum arumai.
//இதைக்கட்டி முடிக்க ஏழு வருசம் ஆகியிருக்கு 1728 லே ஆரம்பிச்சு 1734 இல் முடிச்சுருக்காங்க. மாடர்ன் கருவிகளோடு ஒப்பிட்டால் மணி காட்டுவதில் மஹா துல்லியம்!!!!! கூடிப்போனால் ஒரு விநாடி வித்தியாசம் வந்தால் அதிகமாம்.// Nalla kadigaaram. Aamaam Tulsima Nalla neram, ketta neram parpathu patri sollalingalema.
டீச்சர் எப்படியிருக்கீங்க?
வாங்க மாதேவி.
எல்லாம் மந்திரமில்லை மாயமில்லை. கணக்கு கணக்கு கணக்குத்தான்னு சொல்லுது:-)))
வாங்க நல்லவனுக்கு சத்தியமா நல்லவன்.
என்ன பேரு!!!!!!!!!!!!!!!
பொழுது சாய்ஞ்சா வீட்டுக்குத் திரும்பிடணும் என்ற காலம் அதெல்லாம்!
இந்த நாலு நிமிசக் கணக்கு தெரியாதா? பூமியை 360 டிகிரி உள்ளஉருண்டையா நினைச்சு , 24 மணி நேரத்தை நிமிசமாக்கி 360 ஆம் வாய்ப்பாடால் வகுத்துப் பாருங்க:-)))))
சரியா வரும்!!!!
நாம் நல்லது செஞ்சா அது நல்ல நேரம். நமக்கு யாராவது கெட்டது செஞ்சா அது கெட்ட நேரம். கூட்டிக் கழிச்சுப்பாருங்க..... சரியா வரும்:)
வாங்க ராஜநடராஜன்.
நல்லா இருக்கேன். நம்ம நல்ல டைம் ஒர்க்கவுட் ஆகுது:-)
ஆனா..... காலம்தான் சரி இல்லை.
ஐ மீன் காலநிலை....... கொளுத்துது இப்பவே:(
Post a Comment