கணக்குப்போட்டுப் பார்த்ததில் பத்து மணி நேரம் ஆகும்போல தெரியுது. 528 கிலோ மீட்டர்கள் பயணம். காலையில் கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பினால் இருட்டுமுன் போய்ச் சேரலாம். கோபால் கீழே போய் வீட்டு ஓனரிடம் ஒரு வாரம் இருக்கமாட்டோம். எதாவது கூரியர் வந்தால் வாங்கி வையுங்கன்னு சொல்லிட்டு வந்தார். . கதவைப்பூட்டிட்டுத் திரும்பினால் நம்ம 'பிக்ஸி' ஓசைப்படாம இவர் பின்னாலேயே மாடிக்கு வந்துருக்கான். நமக்கு சகுனம் ஓக்கே!
சரியா ஏழேகாலுக்குக் கிளம்பியாச்சு!
மூணே மணி நேரத்துலே சோனிப்பெட் வந்துருந்தோம். அம்பாரி வச்ச யானை நமக்காகக் காத்திருக்கும் ஹவேலியில் ஒரு ஐஸ்க்ரீம் ப்ரேக். பானிப்பெட் வழியாப் போகலாமுன்னு போட்டுருந்த திட்டம் கடைசி நிமிசத்தில் மாற்றம். சாலை அவ்வளவா சரி இல்லையாம். தில்லி தாண்டிப்போவதே மேலாம்.
தில்லின்னு வச்சால் 'ப்ரோப்பர் தில்லி' இல்லை கேட்டோ! அந்த கூர்காவ் வழியாப்போய் தில்லி புதுவிமான நிலையம் கடந்து (இதுக்கே ரெண்டரை மணி நேரம் !) ஜெய்ப்பூர் சாலை பிடிச்சோம். தேசிய நெடுஞ்சாலை எட்டு.
கூர்காவ் எல்லையைத் தாண்டி வெளியே வரும்வரைதான் கஷ்டம். அதுக்குப்பிறகு 213 கிலோமீட்டர்தான். பகல் ஒருமணிக்குப்பிறகு சாலையின் ரெண்டு பக்கத்திலும் கண்ணு நட்டு வச்சோம். சாப்பிடத்தோதா ஒரு இடம் கிடைக்குதான்னு பார்க்கிறோமாம். பெரோர் (Behror) என்னுமிடத்தில் சாகர் ரத்னா வரப்போகுதுன்னு மூணு கிலோமீட்டர் முன்னேயே போர்டு வச்சுருக்காங்க.
பரவாயில்லாம இருக்கு., . அரைமணி நேரம் அங்கே. என்ன ஏதுன்னு பார்த்து விளம்ப பணியாளர் யாருமே தயாரா இல்லை. ரெண்டு மணிக்கு உலககோப்பை க்ரிக்கெட் ஃபைனல் நடக்கப்போகுதே. எல்லார் கண்ணும் டிவியில்! கடவுளாப் பார்த்து கரண்டை நிறுத்தினார். ஓடிவந்து ஆர்டர் எடுத்துக்கிட்டுப் போனாங்க. கேஸரி, மசால் தோசை, ஊத்தப்பம், அண்ட் காஃபி. எல்லாமே ரொம்ப சுமார். ஆனால்..... ரெஸ்ட் ரூம் வசதி நல்லாவே இருக்கு.
கொட்புத்லி என்ற ஊரைக் கடந்தோம். இந்தப்பெயர் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. கட் புத்லின்னு சொல்வோம் பாருங்க. கயிற்றால் ஆட்டுவிக்கும் பொம்மை! ரெண்டு மணி நேரப் பயணத்தில் ஜெய்ப்பூர் ஆமெர் ரோட் வந்து சேர்ந்தோம். ஏற்கெனவே வலையில் பார்த்துப் பதிவு செஞ்ச ஹொட்டேலில் செக் இன் செஞ்சோம். 20 சதம் கழிவு மட்டுமில்லாம இரண்டு அறைகள் உள்ள நல்ல ஸ்யூட் ஒன்னும் கொடுத்தாங்க. லாபம்:-))))))
ஹோட்டெல் முற்றத்தில் ரோஜா இதழ்களால் ஒரு குளம்:-)
புறாக்கள் ஏகப்பட்டவை. அதுகள் பால்கனிக் கைப்பிடியில் உக்கார்ந்து அழுக்கு பண்ணிடுதுன்னு மெலிசான கம்பிகள் பிடிப்பிச்சு வச்சுருக்காங்க. நோ ஒர்ரீஸ்ன்னு அதுகள் பால்கனிக்குள்ளே வந்து குடித்தனம் செய்யுதுகள்.
வந்து சேர்ந்த விவரத்தை பூங்கொத்து அருணாவுக்குத் தெரிவிச்சேன். செல்லெடுத்தவங்களுக்கு துளசின்னதும் புரியலை. துளசிதளத்தின் சரித்திரக்குறிப்புச் சொல்லவேண்டியதாப் போச்சு! மறுநாள் சந்திப்புக்கு ஒரு நேரம் ஒதுக்கச்சொல்லிக் கேட்டால்.......... நாள் முழுசும் உங்களுக்காகத்தான். எப்ப வேணுமுன்னாலும் வாங்கன்னுட்டாங்க:-)
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊரா இருப்பதால் எல்லாத்தையும் விளக்கிச் சொல்ல ஒரு கைடு ஏற்பாடு செஞ்சுதரமுடியுமான்னு ஹோட்டேல் வரவேற்பில் கேட்ட ரெண்டு நிமிசத்துலே ஏஜண்டு ஒருத்தர் வந்து நம்மைப் பார்த்துப்பேசி மறுநாள் காலை 9 மணிக்கு ஆள் ரெடியா இருப்பார்னு சொன்னார்!.
ப்ரெஷப் செஞ்சுக்கிட்டு நம்ம ஹொட்டேலில் இருந்து இடதுபக்கம் போனோம். ஹொட்டேலுக்கு எதிரில் ஏதோ பழைய காலத்துக் கட்டிடம் மண்டபம் மண்டபமா இருக்கு. என்னன்னு கவனிக்கணும். கொஞ்ச தூரத்தில் ஒரு 500 மீட்டர் இருக்கலாம் குளுகுளு ஏரியில் நிக்குது ஜல்மஹல்.
ஜல்மஹல்
தண்ணிக்குள்ளே காவல் மாடம்?
கிட்டத்தட்ட 'நாஹர்கட்' மலை அடிவாரத்துலே இருக்கும் மன்சாகர் ஏரியில் 18 ஆம் நூற்றாண்டின் கட்டக் கடைசியில் 1799 இல் கட்டி முடிச்சுருக்காங்க. தண்ணிக்கடியில் நாலு தளமும் வெளியே தலை நீட்டிக்கிட்டு ரெண்டு தளமுமா இருக்கு. ஏழாவதா மொட்டை மாடி. ஒரு காலத்துலே வாத்து வேட்டைக்கு இதைப் பயன்படுத்திக்கிட்டு இருந்தாங்களாம். கொஞ்சநாள் 'பிரதம மந்திரியின் ( ராஜா சமஸ்தானத்து மந்திரி. முடியாட்சி) வீடாவும் இருந்துருக்கு. இப்போ யாரும் அங்கே வசிக்கலை. (அதனால்) நிறையப் பறவைகளும் மீன்களுமா இருக்கு.
மீன்களுக்கு உணவு போட்டுப் புண்ணீயம் தேடிக்கலாமாம். கோதுமை மாவைப் பிசைஞ்சு வித்துக்கிட்டு இருக்காங்க. சின்னப் பசங்க சிலர் அதை வாங்கித் துளித்துளியாக் கிள்ளிப்போட்டுக்கிட்டு இருந்தாங்க. ஒரு பெரிய ஆள் கிள்ளிப்போடப் பொறுமை இல்லாம எலுமிச்சம்பழம் சைஸில் ரெண்டு உருண்டையாக் கிள்ளி தண்ணீரில் வீசி எறிஞ்சார். புண்ணியம் பேங்கில் அவருக்கு மைனஸ் ஆகி இருக்கணும்!
சின்னதா பார்க் மாதிரி வச்சுருக்காங்க. கிலுபிலு கிலுபிலு''ன்னு கூச்சலிடும் சிட்டுக்குருவிகள் ஏகப்பட்டவை. அருகிப்போச்சுன்னு சொல்றாங்களே ஒரு படம் எடுத்துப் போடலாமுன்னா....ரெடி சொன்னதும் ஒரு இடத்தில் நின்னுட்டாலும்.............
இதையடுத்துக் கொஞ்ச தூரத்துலே இதே ஆமெர் ரோடு வழியே போனால்.... (ஆம்பெர் (Amber)என்னும் பெயர்தான் ஆமெர்ன்னு ஆகி இருக்கு. சாலையின் வலப்பக்கம் ஏரியும் மறுபக்கம் சுற்றுலா மக்களுக்காகக் காத்திருக்கும் ஒட்டகங்களுமா அகலமான சாலை) கனக் விருந்தாவன் என்னும் இடம். நம்ம மதுரா விருந்தாவனத்தில் பார்த்தோம் பாருங்க அதேவகை (காட்டு)துளசிச் செடிகள் குத்துகுத்தா நிக்குது. துளசி இருந்தால் அங்கே கட்டாயம் இருக்க வேண்டியவர், மாதவ் என்ற பெயரில் ராதையுடன் கோவில் கொண்டிருக்கிறார்.
படியேறினால் ராதாமாதவ் கோவில்
இவர் இங்கே வந்து 340 வருசம் ஆச்சு. 1170 களில் மதுரா விருந்தாவனத்தில் இருந்தவர்தான். நம்ம ஜெயதேவர் (கீதகோவிந்தம் பாடியவர்) வச்சுப் பூஜிச்சுக்கிட்டு இருந்த ஒரிஜனல் சிலை இது. மொகலாயமன்னர் ஒளரங்கஸேப்பின் படைவீரர்கள் மதுரா விருந்தாவனத்தைத் துவம்சம் செஞ்சப்ப எப்படியோ இவரைக் காப்பாத்தி ஜெய்ப்பூருக்குக் கொண்டுவந்துட்டாங்க. அதுக்குப்பிறகு கோவில் கட்டி இவரை இங்கேயே ஸ்தாபிச்சாச்சு. அதான் இங்கேயும் துளசி வனம் உண்டாக்கிட்டாங்க. இது சாதாரணத் துளசி இல்லை....பொன் துளசி. கனக் விருந்தாவன்!
பொன் 'துளசி 'வனம்!
சந்நிதிக்கு எதிரில் ஒரு மண்டபம்
ஒரு முப்பது படி ஏறிப்போகும் உயரக் கட்டிடத்தில் கோவில் இருக்கு. கீழ்தளத்தில் பெரிய ஹால்கள் கட்டி அதை கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு வாடகைக்குத் தர்றாங்க. ஒரு ஹாலில் ராஜஸ்தான் கைத்தறி, பட்டுத்துணிகள், வெள்ளி நகைநட்டுகள், நவரத்தினங்கள் விற்கும் கண்காட்சி தாற்காலிகமா இடம் பிடிச்சுருக்கு.
நாலு மூலையிலும் மாடம்!
முன்மண்டபத்திலுருந்து பார்த்தால்....கருவறை
நல்ல விஸ்தாரமான மாடி. நடுவில் மூலவர் இருக்கும் கட்டிடத்தில் சந்நிதி (இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை) வெளியே முற்றத்தின் நாலு மூலைகளிலும் அழகிய மாடங்கள். சந்நிதிக்கு நேரா ஒரு மண்டபம். அதுலே இருந்து இறங்கும் படிக்கட்டுகள். அதுவழியாப் போனால் பெரிய தோட்டமும் மாளிகையுமா இருக்கு. ராதாத் தோட்டமுன்னு சொன்னாலும் இதுக்கு கோலிமார் தோட்டமுன்னும் ஒரு பெயர் இருக்காம். ஆஹா.... ஷாலிமார் கார்டன்ஸ்க்கு எதிர்ப்பாட்டா இது கோலிமார் கார்டன்ஸா:-))))))
கோலிமார் தோட்டம்
சந்நிதிக்குப் பின்பக்கம் இருக்கும் வெளிப்பிரகாரத்தில் மடப்பள்ளி. க்ருஷ்ணனுக்கு மூணுவேளை விருந்து (போக்) சமைக்கும் கோவிந்த் முப்பது வருசமா இங்கே சேவை செய்யறாராம். எட்டுமணிக்கு வந்துருங்க. பிரசாதம் கிடைக்கும் என்றார். தனி மனுஷனாவே சமைச்சுக்கிட்டு இருக்காராம்.
கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் மலையில் கோட்டைச்சுவர்கள் நெடூகப்போகுது. சீனப்பெருஞ்சுவர் நினைவுக்கு வந்ததென்னவோ நிஜம். மாடியில் இருந்து சுத்துமுத்தும் பார்த்தால் ஒரு பக்கம் ஏரி, ஒரு பக்கம் மலை, தோட்டம், வளைவு நெளிவோடுள்ள கட்டிடங்கள், ஜல்மஹல் இப்படி கண்ணுக்கு விருந்துதான்.
இந்த ராதா மாதவ் கோவிந்ததேவ் ஜி கோவிலை பிர்லா குடும்பம் 1987 இல் பழுதுபார்த்து செப்பனிட்டு இருக்காங்க. பிர்லான்னதும் இங்கே(யும்) ஒரு பிர்லா மந்திர் இருக்கே அதுக்குப் போயிட்டு வந்துடலாமுன்னு கிளம்பி பிங்க் சிடிக்குள்ளே போகும் கோட்டை வாசல் வழியா நுழைஞ்சு போனப்ப ஒரு உண்மையைக் கண்டுபிடிச்சேன். நம்ம தலை இங்கே ஒரு பள்ளிக்கூடம் நடத்தறார்!!!!!
தொடரும்..................:-)))))
Friday, April 15, 2011
கோலிமார்!!!! (ராஜஸ்தான் பயணத்தொடர் 2)
Posted by துளசி கோபால் at 4/15/2011 06:40:00 PM
Labels: அனுபவம் Rajasthan
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
பயணக்குறிப்புக்கள் அருமை.
நல்ல பயணக்குறிப்புகள். என்னுடைய நினைவலைகளை மீட்டியது உங்கள் பகிர்வு. நன்றி.
உங்களுக்கு இந்த விமர்சனம் புடிக்குமா புடிக்காதான்னு தெரியல. இருந்தாலும் மனசுல தோன்றியது.
ஒவ்வொரு ராஜா கட்டின கோட்டை கொத்தளங்கள் ஒவ்வொன்றையும் பாருங்க. உள்ளே நுழைந்தது முதல் வெளியே வரும் வரைக்கும் எத்தனை செலவு, கலைநுட்பங்கள், வித்யாசங்கள், பலரின் உழைப்பு.
பெரும்பாலும் அப்போதும் கூட ஒரு வாய் கஞ்சிக்கு கஷ்டப்பட்டவங்க தான்அதிகம் என்று போகிற போக்கிய பல வரலாற்றுக் குறிப்ப்புகள் சொல்கின்றது. இந்து முஸ்லீம் என்று தொடங்கி நாயக்கர் என்று எல்லா மன்னர்களுமே இப்படித்தான் இருந்த இருக்கிறார்கள்.
அதுவும் நீங்க சொல்ற பகுதியில் நான் ஆச்சிரியப்பட்டது. ஆனால் ஒரு பயபுள்ளைங்க கூட அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தியதா தெரியலைங்கோ. ஏன்?
நான் ரொம்ப ஆச்சரியப்படுவது ராஜஸ்தான் பெண்கள். அவர்களின் வீரம் இத்யாதி இத்யாதி.
மறுபடியும் சொல்றேன். வெறும் குறிப்போடு போய்க்கிட்டு இருக்காம கொஞ்சம் வேறு சில சுவராஸ்யங்களை சேருங்களேன்.
படத்தைப் பார்த்ததும் இதெங்கே சீனப் பெரும் சுவர் போல் வருகிறது என நானும் நினைத்தேன்.
கோட்டை மதில் இவ்வளவு நீளமாக இருக்கிறதே!
அருமையான படங்கள் நிறைந்த பதிவு.
நல்ல விபரங்கள்.
வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு படமும் கொள்ளை அழகு! விவரங்களும் அருமை.
அருமையான குறிப்புகள்..
படங்களும் கட்டுரையும் மனதை கொள்ளை கொள்ளுகின்றன. ஓசியில் ராஜஸ்தான் சுற்றிப்,பார்த்த நிறைவு. நன்றி மேடம்
வாங்க புதுகைத் தென்றல்.
நன்றிப்பா.
வாங்க வெங்கட் நாகராஜ்.
அதென்னங்க நீங்க எந்த இடமுன்னாலும்...என்னை முந்திக்கிட்டு அங்கெல்லாம் போய்வந்துட்டீங்க...........!!!!!
சரியா எழுதறேனான்னு க்ராஸ் செக் செஞ்சுக்கணும் உங்ககிட்டே:-)
//அதென்னங்க நீங்க எந்த இடமுன்னாலும்...என்னை முந்திக்கிட்டு அங்கெல்லாம் போய்வந்துட்டீங்க...........!!!!!//
அட நீங்க வேற, நீங்க போற/போன எல்லா இடமும் நான் போனதில்லை!! இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் ஜெய்ப்பூரில் இரண்டு நாட்கள் தங்கி அமேர் ஃபோர்ட், ஜல்மஹல், ஹவா மஹல், அரண்மணை, மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள வேறு சில இடங்களுக்குச் சென்று வந்தேன்.... இன்னும் நிறைய இருக்கிறது பார்க்க! பார்க்கணும்....
வாங்க ஜோதிஜி.
ராஜா காலம் மட்டுமா...... இப்பவும்தான் ஆளப்படும் ஏழைகள் கோடிகோடியா ஒரு பக்கம் குமிஞ்சு கிடக்க 'ஆட்சி'செய்யும் ஜனநாயக மன்னர்கள் கோடிகளின் சுகபோகத்தில் திளைக்கலையா?
அதுவரைக்கும் மக்கள் இங்கே கோட்டைகளை விட்டு வச்சுருக்காங்க பாருங்க. பாராட்டப்படவேண்டிய விஷயம் இல்லையா? இன்னிக்கு அதை வச்சு ஏகப்பட்டபேர் பிழைப்பு நடத்தறாங்களே!
மக்களோடு கலந்து பேசி விவரம் சேகரிக்கணுமுன்னா இப்படி ஒரு நாள் டூர் உதவாது. அதை வச்சு மக்களைப் புரிஞ்சுக்கவும் முடியாது.
வட நாட்டு அரசியல் வ்யாதிகள், தமிழக மேடையில் ஏறுனதும் 'வனக்கம்' சொல்லும்போது அவுங்கெல்லாம் தமிழ் மொழியை ஆராய்ஞ்சு படிச்சவங்களா நாம் நினைப்போமா?
வாங்க மாதேவி.
அதே அதே அதேதான்ப்பா!!!!!
வாங்க ரத்னவேல்.
தொடரும் ஆதரவுக்கு நன்றி.
வாங்க சித்ரா.
நன்றிப்பா.
ரெண்டு நாளா உங்க நினைப்புத்தான். ஆனால் நேத்து நிலா வெளியே முகம் காட்டாமல் சதி செஞ்சுருச்சேப்பா!!!!!
வாங்க அமைதிச்சாரல்.
வருகைக்கு நன்றிப்பா.
வாங்க சிவகுமாரன்.
இப்பத்தானுங்களே தொடர் ஆரம்பிச்சு இருக்கு. கூடவே வாங்க. இன்னும் நல்லா 'சுத்தி' பார்க்கலாம்:-)
வெங்கட் நாகராஜ்,
நானும் இன்னும் பல இடங்களை விட்டுவச்சுட்டுத்தான் வந்தேன். பார்க்கலாம் ஒரு குளிர்காலத்துலே போக முடியுமான்னு.
காலம் கெட்ட நேரத்துலே போயிட்டு சூட்டில் தவிச்சுப்போயிட்டோம்:(
கோலி மார் ந்னு தனியாப்படிச்சு பயந்து போயிட்டேன்..
ரொம்ப அழகான இடங்கள் ..
ரொம்ப அழகான படங்கள்..
பொன் துளசி , ரிப்போர்ட்டர் துளசி ( உங்களை இப்படி போஸ்களீல் எடுக்கும் போட்டோகிராபருக்கும் பாராட்டுகள்)
வட நாட்டு அரசியல் வ்யாதிகள், தமிழக மேடையில் ஏறுனதும் 'வனக்கம்' சொல்லும்போது அவுங்கெல்லாம் தமிழ் மொழியை ஆராய்ஞ்சு படிச்சவங்களா நாம் நினைப்போமா?
காதுல கிர்ன்னு சத்தம் கேட்குது?
I thought it wasd china wall¦
very beautiful pictures.
வாங்க கயலு.
இன்னிக்குக் காலையில்தான் ஃபோட்டோகிராஃபர் ட்ரெய்னீக்கு கடுமையான எச்சரிக்கைக் கொடுத்து மைனஸ் மார்க் போட்டுருக்கேன். நீங்க என்னடான்னா.......
ஜோதிஜி,
காது பத்திரம்:-))))
வாங்க வல்லி.
அசப்புலே அதே அதே! என்ன...அங்கே நடக்கத்தோதா வழி இருக்கு. இங்கே ரொம்பச் சின்னப்படிகள்.
ஒருவேளை அங்கேயும் மேலே போகப்போக வழி குறுகி இருக்கலாம் இல்லே?
லிங்க் தொடர்ந்து வந்தேன். உங்கள் ரசனையே அலாதி.....!
வாங்க ஜிஎம்பி ஐயா.
ரசனை இல்லைன்னா அப்புறம் வாழ்க்கையில் என்ன இருக்கு?
Post a Comment