Tuesday, April 19, 2011

முத்தத்தில் மீசை பத்திரம்!

சண்டிகர் வாழ் தமிழ் மக்களுக்குச் சித்திரைத் திருநாள் வாழ்த்துகளைச்சொல்லி, 'தமிழ் காலனி இருக்கும் விவரமே இப்போ கொஞ்சம் முன்னால்தான் தெரிஞ்சது, இவ்வளவு தமிழர்களை இங்கே சந்திக்க முடிஞ்சதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி'ன்னேன். அப்புறம் பட்டிமன்றம் ஆரம்பிச்ச விதம், காரைக்குடிக் கம்பன் கழகம் அதை மேம்படுத்தியது, இதிகாசங்களைப்பற்றிய பட்டிமன்ற விவாதங்களை இலக்கிய பட்டிமன்றமா பொதுமக்கள் அனைவருக்கும் ரசிக்க எளிமையா நடைமுறைப்படுத்திய குன்றக்குடி அடிகளார், (எல்லாம் நம்ம பாப்பையா எடுத்துக் கொடுத்தவை) பற்றியெல்லாம் கொஞ்சம் சொல்லி, தொலைக்காட்சி ஊடகங்களால் இந்தப் பட்டிமன்றங்கள் பட்டிதொட்டியெல்லாம் பரவி இன்னும் கூடுதலான புகழ் பெற்றதையும், திண்டுக்கல் லியோனி அவர்களால் எளிய விவாதங்கள் சுவைபட நடந்து மக்கள் மனதை வெற்றி கொண்டதையும் , ஒரு நல்ல நாளு, பண்டிகை, விசேஷமுன்னா தொலைக்காட்சி சேனல்களில் பட்டி மன்றம் எப்படித் தட்டாம இடம் புடிச்சுருதுன்னும் சொல்லி, இதுவரை தொலைக் காட்சிகளில் மட்டுமே பார்த்ததை நேரிலே பார்த்து ரசிக்கும் வாய்ப்பு நமக்கு(ம்) வந்துருக்கு. திண்டுக்கல் காந்தி கிராமத்தைச் சேர்ந்த ராமன் அவர்களின் குழு, நிகழ்ச்சியை நடத்த வந்துருக்காங்க. இது சிரிப்புப் பட்டிமன்றமுன்னு அறிவிச்சுருப்பதால் எல்லோரும் சிரிக்கத் தயாரா இருங்க. வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப்போகுமாமுன்னு நம்ம வரவேற்பு உரையை ஒரு மாதிரி முடிச்சேன்.

அடுத்து கோபாலை உரையாற்றச் சொன்னதும்................ ஒரு 'திடுக்' சட்னு சமாளிச்சுக்கிட்டு மைக் பிடிச்சவர் சண்டிகர் நகரத் தமிழர்களுக்கு சித்திரை நாள் வாழ்த்துகளைச் சொல்லி............ 'அடுத்து நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் பட்டிமன்ற நிகழ்ச்சி வரப்போகுது. பட்டிமன்ற 'வரலாறை' என் 'துணைவி'யார் விளக்கமாச் சொல்லிட்டாங்க. அதுக்குமேலே சொல்ல என்ன இருக்கு? நிகழ்ச்சியை ரசிச்சு அனுபவியுங்க' ன்னு முடிச்சார் சமாளிப்புத் திலகம்!
சித்ரா அவர்கள் தமிழ்ச்சங்கத்தை வாழ்த்திப் பேசுனாங்க. சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் நல்லதுல்லேன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. ஆனால் சித்திரையில் பிறந்த பெண்குழந்தைகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்க்கும். நானும் சித்ரா பவுர்ணமியில் பிறந்தவள்தான்னு சொன்னதும் எனக்கு நம்ம வெட்டிப்பேச்சு சித்ராவின் நினைவு சட்னு வந்துச்சு. எந்த சம்பவமோ, பேச்சோ பார்த்தாலும் கேட்டாலும் அதோடு லேசுபாசா சம்பந்தமுள்ள நம்ம பதிவர்கள் நினைவு வந்து படுத்திருதுப்பா:-)))))

இதுவரை முன்வரிசையில் அமர்ந்து இருந்த பட்டிமன்றக் குழுவினர் வந்து மேடையைப் பிடிச்சாங்க. நடுவர் திண்டுக்கல் ராமன் 'பளிச்'ன்னு இருந்தார். இன்றையத் தலைப்பு திரைப்படப் பாடல்கள், தமிழ்ப்பண்பாடு, நாகரிகம், கலை ,கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கிறதா? இல்லை வெட்டிச் சாய்க்கிறதா?
கட்டி என்பதை விவாதிக்க இளஞ்சேரன் அவர்களும் வெட்டி என்பதற்கு இருதயராணி அவர்களும் வந்திருக்காங்க. இது பாட்டு மன்றம் என்பதால் கூடவே இசைக்குழுவும். தப்லாவுக்கு முத்தமிழ், உருமி மேளம் வஜ்ரவேல், கர்ணன் தவில் முருகன் நாதஸ்வரம், தியாகராஜன் புல்லாங்குழல், தேவசகாயம் கீ போர்டு. என்ன இவ்வளவு பெரிய குழுன்னு பார்க்கறீங்களா?

சண்டிகர் சித்திரைக் கலைவிழா நடத்தன்னே முப்பது பேர் கொண்ட ஒரு குழு மதுரையில் இருந்து வந்துருக்கே! கரகம், மயிலாட்டம், மாடாட்டம், சிலம்பம், காவடி ஆட்டம், உசரக்கட்டைமேல் நடந்து வந்து ஆடும் ஸ்டில்ட் வாக்கர்ஸ், கவிதை அரங்கம் இப்படி ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கப்போகுதுல்லெ!!!
கடவுள் வாழ்த்துப் பாடலாக 'கண்ணாத்தா....நாட்டரசன் கோட்டையிலே வாழும் கண்ணாத்தா'ன்னு கணீர்னு ராமன் அவர்கள் பாட கையில் தீச்சட்டி ஏந்தி வேப்பிலைக் கொத்தோடு ஆடிக்கிட்டே வந்தார் புண்ணியநாதன். 'ஆத்தா' அருள் வந்து கோவிலுக்கு ஒரு ஆபத்தும் நேராதுன்னு அருள் வாக்கு கிடைச்சது.
ஓம்சக்தி சித்தபீடம் சண்டிகர் தலைவர் ஐயா, கோவிலின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையைச் சொல்லி எல்லோரும் இணைந்து அரசிடம் கேக்கணும் என்றார்.
யாருக்கும் இடைஞ்சல் இல்லாத இடத்திலேதான் கோவில் இருக்கு. தமிழ்க்குடும்பங்கள் மட்டுமில்லாம அக்கம்பக்கம் இருக்கும் அனைத்து மக்களும் கோவிலுக்கு வந்து போறாங்க. இன்னிக்கு இந்தக் கோவிலை இடிக்கும்போது எதிர்ப்பு காமிக்காம இருந்தால் ஊரில் உள்ள மற்ற கோவில்களுக்கும் இது தொடரலாம். முளையிலேயே நம்ம எதிர்ப்பைக் காமிக்கணும். இதுக்கு முக்கிய வேண்டியது மக்கள் ஒற்றுமை. நாமெல்லாம் நம்ம ஒற்றுமையைக் காமிக்க மறுநாள் சண்டிகர் தமிழ்ச்சங்கத்துலே நடக்கப்போகும் சித்திரை விழாவுக்குச் சிகப்பு ஆடைகளோடு வாங்க'ன்னு நம்ம முருகன் கோவில் அண்ட் தமிழ்ச்சங்க செயலாளர் (ஆல் இன் ஆல்) ராஜசேகர் அறிவிச்சார்.நம்ம ஆல் இன் ஆல் ராஜசேகர். இவர் உதவி மட்டும் இல்லைன்னா...... ஒன்னுமே நடந்துருக்காது!


இளஞ்சேரன், (முன்னாள் வி. ஏ. ஓ. (உண்மைத்தமிழன் நினைவு வருதேப்பா )


திண்டுக்கல் ராமன் அவர்கள் நிறைய ஜோக்குகளைச் சொல்லி மக்களைச் சிரிக்க வச்சுக்கிட்டு இருந்தார். அதுலே ஒன்னு ரெண்டு இங்கே உங்களுக்கு.....

எனக்கென்னமோ சிரிப்பே வரலை. பெண்களைக் கொஞ்சம் கேலி செய்யறதாகவே நிறைய ஜோக்ஸ். இப்படித்தான் இருக்குபோல தமிழ்நாட்டுலே! ஒருவேளை எனக்கு மட்டும்தான் இப்படித் தோணுச்சோ?
செல்ஃபோனைக் கழுத்துலே மாட்டி இருக்கும் பெண்ணிடம் ,

"என்னம்மா தாலியைக் காணோம்? செல் ஃபோன் மாட்டி வச்சுருக்கே?"

"அந்தத் தாலியை வித்துத்தாங்க இந்த செல்ஃபோனே வாங்குனேன்"

அடுத்த வீட்டு அம்மாவுடன் வீட்டுலே டிவி சீரியல் பார்த்துக்கிட்டு இருக்காங்க மனைவி. கணவன் லேட்டா வீட்டுக்குள்ளே நுழையறார்.
சீரியலில் மூழ்கி இருந்த பக்கத்துவீட்டம்மா கேள்வியும் மனையாளின் பதிலும் இப்படி.

"கண்டகண்ட தெருநாய்களெல்லாம் வூட்டுக்குள் நுழையுது, பாரு"

" அது நம்மூட்டு நாய்தான். எங்கியோ சுத்திட்டு வந்துருக்கு"


தமிழ் நாட்டுலே கணவன் முன்னால் போக மனைவி பின்னால் நடக்கும் வழக்கம். ஆனால் மேல் நாட்டுலே எப்பவும் மனைவிதான் முன்னால் நடப்பாங்க. கணவன் பின்னால் போவார். ஏன் தெரியுமா?

அங்கெல்லாம் யார் வேணுமுன்னாலும் யாரை வேணுமான்னாலும் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுப்பாங்க. அதான் மனைவியைக் காப்பாத்தக் கணவன் பின்னாலேயே போறார்.

அட ராமா? தலையில் அடிச்சுக்க இன்னும் பத்துக் கைகள் இல்லையேன்னு எனக்கு இருந்துச்சு. அட! அப்ப ஏன் கோபால் இந்தியாவில் சாலைகளில் நடக்கும் என்னை முன்னாலே போ போன்ன்னு சொல்றார்? பதில் வந்துச்சு. கழுத்துச் சங்கிலியைப் பறிக்கும் திருடனிடமிருந்து காப்பாத்தவாம்!!!!

நடுவர் நிறையப் பாடல்களைப் பாடிக்கிட்டே இருந்தார். சொல்லி முடியுமா? சொல்லில் அடங்குமான்னு ஒரு முருகன் பாட்டு.. அதிலும் ஆண்குரலும் பெண்குரலுமா மாத்தி மாத்தி அவரே பாடுன டூயட்டுகள் நல்லாவே இருந்துச்சு. ராஜயோகமே பாரீர், ஆஹா நம் ஆசை நிறை வேறுமா?
இவரும் பழைய பாடல்களையே பாடிக்கிட்டு இருந்தார்.

தொலைக்காட்சிகளில் வரும் தனியார் நிகழ்ச்சிகளிலும் சரி, பொதிகையில் வரும் துள்ளாதமனமும் துள்ளும் நிகழ்ச்சிகளிலும் சரி எல்லோரும் பழைய பாடல்களையே பாடுவதைக் கவனிச்சீங்களா? மக்கள் இந்த மாதிரி இசையைத்தான் விரும்புறாங்கன்னுன்னு இப்போ இசையமைச்சு வர்ற பாட்டுக்களையெல்லாம் யாருமே பாடுவதில்லையே ஏன்? ஒருவேளை பழசானபிறகு பாடலாமுன்னு இருக்காங்களோ?
இசைக்கு மொழி இல்லைன்றது எவ்வளோ நிஜம் பாருங்க. கற்பூரநாயகியேக்கு வட இந்தியக் குழந்தைக்கால் தானாவே ஆடுது!

நேரம் வேற போய்க்கிட்டே இருக்கு , இன்னும் பாட்டுமன்றத்துலே 'எதிரிகளை' மோதவிடலை! இவுங்க இப்படிச் சொல்லப்போறாங்க.... அவுங்க அப்படிச் சொல்லப்போறாங்கன்னு நடுவரே விடாம மைக் புடிச்சுப் பாடிக்கிட்டே இருக்கார். எப்போ? எப்போ? மோடி மஸ்தான் கீரிக்கும் பாம்புக்கும் இதோ சண்டை ஆரம்பிக்கப்போகுது ஆரம்பிக்கப்போகுதுன்னு சொல்லிக்கிட்டே இருப்பார் பாருங்க........

இதுக்கிடையில் ஹலோ ஹலோன்னு இடைக்கிடையே மைக் டெஸ்டிங் வேற செஞ்சுக்கறார். பொன்னாடைகள் கொண்டுவந்து போர்த்திக்கிட்டு இருந்தார் சக்திவேல் என்ற இளைஞர். எட்டரை ஆனதும் ஒன்பதுக்குள்ளே நிகழ்ச்சியை முடிச்சுருங்க. ஓம்சக்தி யாகம் ஆரம்பிக்கணும்னு அவர் காதுலே ஓதுனாங்க நிர்வாகிகள். இதுக்கெல்லாம் அசைஞ்சு கொடுத்தால் ஆகுமான்னு இன்னும் பாட்டுகள் பாடிட்டு கடைசியில் அப்படியும் இப்படியுமா ரெண்டு தரப்புக்கும் பத்துப் பத்து நிமிசம் கொடுத்து அவுங்களும் பாடி முடிச்சாங்க. மணி ஒன்போதரை ஆச்சு. .இளஞ்சேரன் 'கத்தாழைக் கண்ணாலே' மிகவும் நல்ல கருத்துள்ள பாட்டுன்னு புகழ்ந்து பாடினார். இருதயராணியோ.... தீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுடான்னா மீசை பத்திக்கிட்டு எரிஞ்சுடாதான்னாங்க:-)
இருதயராணி (டீச்சர்)

இடையில் ரெண்டு மூணு முறை மைக் வேலை செய்யலை, மின்சப்ளை நின்னு போய் வந்துச்சு. பேசவர்றவங்களும் பாட வர்றவங்களும் மைக்கை டொக் டொக்குன்னு தட்டிப் பார்த்து ஹலோ சொல்றதுமா இருந்த கலாட்டாவில், 'போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கேன்னு முகம் மாறாமல் உக்கார்ந்துருந்தார் (தமிழ்த் தெரியாத) சவுண்டு சர்வீஸ்காரர்:)))


மீதி நாளை. ரெண்டில் அடங்காததை மூணில் அடக்கிடலாம். .


17 comments:

said...

மைக்கை டொக் டொக்குன்னு தட்டிப் பார்த்து ஹலோ சொல்றதுமா இருந்த கலாட்டாவில், 'போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கேன்னு முகம் மாறாமல்
உக்கார்ந்துருந்தார் (தமிழ்த் தெரியாத) சவுண்டு சர்வீஸ்காரர்:)))

ஹா ஹா ...


ரொம்ப கலக்கலான காமெண்டரி

said...

தமிழ் நாட்டுலே கணவன் முன்னால் போக மனைவி பின்னால் நடக்கும் வழக்கம். ஆனால் மேல் நாட்டுலே எப்பவும் மனைவிதான் முன்னால் நடப்பாங்க. கணவன் பின்னால் போவார். ஏன் தெரியுமா?

அங்கெல்லாம் யார் வேணுமுன்னாலும் யாரை வேணுமான்னாலும் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுப்பாங்க. அதான் மனைவியைக் காப்பாத்தக் கணவன் பின்னாலேயே போறார்.


..... Idiotic .
குண்டு சட்டிக்குள்ள இருந்துகிட்டு குதிரை மட்டும் ஓட்டல - அங்கே இப்படித்தான் இருக்கும் என்று நினைச்சுக்கிட்டு ஜோக்ஸ் வேற சொல்றாங்க..... Ouch!

said...

அந்த சௌண்ட் சர்வீஸ்காரர் தான் கொடுத்துவச்சவர் போலயே..

எவ்ளோ பெரிய பேச்சாளர்கள் பேசினாலும் இதே தலையில் அடிச்சிக்கிற லெவலில் தான் பேச்றாங்க.. :(

said...

சர்வீஸ்காரர்:)))

பதிவு சிரிக்க வைக்கிறது.

said...

//'போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கேன்னு முகம் மாறாமல் உக்கார்ந்துருந்தார் (தமிழ்த் தெரியாத) சவுண்டு சர்வீஸ்காரர்:)))//

ஹஹாஹா.. இதையேதான் இந்த ஊர் சவுண்ட் சர்வீஸ்காரங்க செய்வாங்க.. :))

said...

ஜோக்ஸை படிச்சுட்டு என்னடாயிது நகைச்சுவைக்கு வந்த சோதனைன்னு நினைச்சிட்டே,வந்தேன்.. சவுண்ட் சர்வீஸ்காரரை பார்த்ததும் சிரிச்சுட்டேன் :-))))))

said...

உங்கள் கருத்துக்கள். அருமை. நான் உங்களை பின் தொடர போகிறேன் இன்று முதல்.

said...

என்னது தீப்பிடிக்க^ பாட்டை டீச்சரம்மா பாடினாங்க .?:)))
பதிவே ஜோக் மயம்..) அனுபவித்து ரசித்தேன்.
கற்பூர நாயகி குழந்தை ரொம்ப இனிமை.
அடுத்த பதிவுக்குப் போறேன்-
எங்க வீட்ல எல்லாம் எஜமானர் munbe
vaa nuttu poyviduvaar.
Not this time though:)

said...

வாங்க பூங்குழலி.

இல்லையா பின்னே? எல்லோரும் அவதிஅவதின்னு ஓடும்போது அமைதி காத்தவர் அவர் மட்டும்தானே:-))))))

said...

வாங்க சித்ரா.

இதுமட்டுமா...... தமிழ்நாட்டு மக்களிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்துப் பாருங்க......... வெளிநாட்டில் இப்படி அப்படின்னு நமக்குச் சொல்லுவாங்க. கல்யாணம் செஞ்சுக்கிட்டு ரெண்டாம்நாளே டிவோர்ஸ் வாங்கிருவாங்கன்னு சொல்லும்போது நமக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டுரும்!!!!!

said...

வாங்க கயலு.

தவறான புரிதல்கள் ஏராளம்:(

said...

வாங்க மாதேவி.

சிரிப்பு அருமருந்து:-))))

said...

வாங்க சுசி.

மொழி தெரியாதது ஒரு விதத்தில் நலம்:-)))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஏமாத்திப்புட்டாங்கப்பா..... சிரிக்கலாமுன்னு போனேன். இப்படி ஒரு பஞ்சம் வந்துருச்சே:(

said...

வாங்க கொங்கு சாட்டை!

புதுவரவு!!!! நன்றி நன்றி.

குருதை வாகனத்துலே கள்ளழகர் சாட்டையோடு வர்றாமதிரி சாட்டையைக் கையில் எடுத்துட்டீங்க!

போட்டு விளாசவேண்டியதுதானே? எதுக்கு சோதனைப் பதிவோடு நிக்கறீங்க?

பின் தொடரும்போது அப்படியே கொஞ்சம் பின்னாலேயும் போய்ப் பாருங்க. வெறும் 1182 பதிவுகள் தான் இருக்கு. நிதானமா வாசிச்சுப் பாருங்க. எங்கே ஓடிறப்போகுது?

said...

வாங்க வல்லி.

//எங்க வீட்ல எல்லாம் எஜமானர் munbe
vaa nuttu poyviduvaar.
Not this time though:)//


இப்போ வெளிநாட்டுலே இருக்கீங்களே அதான் ............:-)))))

said...

ha ha!