Monday, April 18, 2011

நாங்களும் கொண்டாடுவொம்ல...............

தமிழ்நாடு முழுசும் குறிப்பா மதுரையிலே சித்திரை(த்திரு)விழா கோலாகலமா நடக்கும்போது மருதைக்காரர்களைக் கண்டு லேசா புகை வரும் சமயம், இங்கே சண்டிகரிலும் முதல்முறையா சித்திரை விழா கொண்டாடப்போறோமுன்னு கோவிலிலே பேனர் பார்த்ததும் அட்ரா சக்கை. எல்லாம் நாம் இங்கே வந்த நேரம்னு குஷி ஆகிப்போச்சுங்க.

வாராந்திரப் பத்திரிகைகளின் விற்பனையைக் கூட்ட நாம் தென்னிந்தியக் கடைக்குப்போனால்.... அங்கே நம்ம ஆல் இன் ஆல் ராஜசேகருடன் (எதிர்பாராத) சந்திப்பு. அவர் மகள்தான் என்னை தூரத்துலே இருந்து பார்த்துட்டு நியூஸிலாந்த் ஆண்ட்டி அந்தக் கடையில் இருக்காங்கன்னு சொல்ல..... அதானே யானையை யாராவது ஒளிச்சு நிறுத்த முடியுமா? :)))

நாளைக்கு விழா இருக்குன்னார். 'பார்த்தேன். வர்றோமு'ன்னு சொன்னேன். பட்டி மன்றம் நடக்கப்போகுது. நீங்கதான் பட்டிமன்ற மக்களுக்கு வரவேற்பும் வாழ்த்துரையும் சொல்லணுமுன்னார். அதெல்லாம் நல்லாப் பேசுவாங்கன்னு கோபால் ஜால்ரா அடிக்க சரின்னு முடிவாச்சு.
அப்பதான் சொல்றார் 'மறுநாள் தமிழ்காலனியில் நிகழ்ச்சிகள். அதுக்கடுத்த நாள் ஞாயிறுதான் தமிழ் மன்றத்தில்'! அடராமா..... எங்கே இருக்கு இந்த தமிழ்க்காலனி இந்த சண்டிகரில்? எண் தெரியலைன்னா அதோ கதி இல்லையோ!!!!

"முப்பத்தி எட்டு டி செக்டரில் இருக்கும் கோவிலுக்கு வந்துருங்க"

அட! அங்கேயும் நம்ம கோவில் இருக்கா? இங்கே வந்து ஒரு வருசம் ஆகப்போகும் நிலையில் இப்பத்தான் 'உண்மை' வெளியே வருது!!!!

மறுநாள் சனிக்கிழமை வந்தே வந்துருச்சு. இன்னும் பட்டிமன்ற வரவேற்புக்கு தயாரிப்பு ஒன்னும் நடக்கலை. இது என்னடா நமக்கு வந்த நிலமைன்னு மண்டைக்குடைச்சலோடு நேத்து வாங்கியாந்த குங்குமத்தைத் திறந்தால்...... கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்துச்சு நம்ம சாலமன் பாப்பையா அவர்கள் எழுத்தில். பட்டிமன்றம் எப்போ எப்படி ஆரம்பிச்சது, எப்படி வளர்ந்ததுன்னு தொடர் பகுதியில் எழுதி இருக்கார்! ( இங்கே சிலவாரங்கள் தாமதமாகத்தான் பத்திரிகைகள் வருது) சாமி...காப்பாத்திட்டேன்னு அதை ஒருமுறை வாசிச்சு மனசில் வச்சுக்கிட்டேன். நம்ம பாப்பையா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

நம்ம கார்த்திகேயஸ்வாமி கோவிலுக்குப்போய் கடவுளர்கள் அனைவரையும் சேவிச்சுக்கிட்டு (வழக்கமான சனிக்கிழமை விஸிட் இது) புது சேதி எதாவது இருக்கான்னு ஆராய்ஞ்சால் மஞ்சள் அழைப்பிதழ் ஒன்னு கண்ணில் பட்டது. ஓம் சக்தி அம்மனின் அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகப் பத்திரிகை.

முத்துமாரியம்மன் கோவிலில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி பக்தர்கள் அனைவரும் சேர்ந்து ஓம்சக்திக்குப் புதுசா ஒரு தனிச்சந்நிதி கட்டி இருக்காங்க.!

ஆறரைக்கு நிகழ்ச்சி ஆரம்பம். நாம் முப்பத்தி எட்டு டி யில் தேடித்தேடி அலைஞ்சு மத்ராஸி மந்திர் கிதர் ஹைன்னு கண்ணில் பட்டவர்களையெல்லாம் கேட்டுத் தெளிஞ்சு அங்கே கால் வச்சப்ப ஆறேகால். வரவேற்பு கமிட்டியா அங்கே நின்னவங்க நம்மை ஆர்வமா வரவேற்று கோவிலைச் சுத்திக் காமிக்க ஒருத்தரை நம்மோடு அனுப்பி வச்சாங்க.
அருமையா மேடை அமைப்பு, பச்சைத் தரை விரிப்பில் வரிசையா இருக்கைகள் எல்லாம் அமர்க்களம். கடைசிநேர மைக் டெஸ்ட்டிங் நடந்துக்கிட்டு இருக்கு. மூணுமாசக்குழந்தையில் இருந்து பதிமூணு வயசுப்பிள்ளைகள் வரை ஓட்டம் ஆட்டமுன்னு கலகலப்பா இருக்கு!
கோவில்
முத்துமாரியம்மன் கருவறை

கோவிலுக்குள் நுழைஞ்சோம். குட்டியா ஒரு ஹால். அதில் ஒரு பக்கம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் கொண்டுருக்காள். நேரெதிரா இருக்கும் பிரமாண்டமான அரசு, அதன் சுவட்டில் மனுஷ்ய ரூப சிவன் தவம் செய்ய, இந்தப்பக்கம் சிவலிங்க, ஒன்னு இருக்கு. முத்து மாரிக்கு வலது பக்கம் குட்டியா ஒரு தனி அறை. மேடையில் சிகப்புத் துணியால் மூடி இருக்கும் விக்ரகம். மறுநாள் காலை கும்பாபிஷேகம் ஆனதும் திரைவிலக்கி நமக்கு தரிசனம் தரப்போகிறாள்.
கோவிலுக்கு வயசு 25. 1986 இன் கட்டி இருக்காங்க. இதுக்குமுன்னே சத்தாரா என்னுமிடத்தில் இருந்த தமிழ்க்குடும்பங்களை அரசாங்கமே இங்கே இடம் பெயர்த்தது 1981 இல். நூறு குடும்பங்கள் இந்த 38 டி செக்டரின் இந்தப் பகுதியில். தமிழ் காலனின்னு பெயரும் வச்சாச்சு. குடியிருப்புகளுக்குப் பக்கத்தில் இருந்த காலி இடத்தில் அஞ்சு வருசம் கழிச்சுச் சின்னதா உண்டாக்கின கோவில் இந்த ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில். இப்போ இத்தனை வருசம் கழிச்சு இது விதிமுறைகளை மீறி அரசாங்க அனுமதி இல்லாமக் கட்டுனது. இதை இடிக்கப்போறோமுன்னு பேச்சு வந்து இந்த மாதம் ஏப்ரல் 11 (சரியா போனவாரம்) இடிக்கும் தேதி முடிவாகிருச்சு. இது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். ஒன்னும் செய்ய முடியாதுன்னு அதிகாரிகள் சொல்லிட்டாங்க.

இருபத்தியஞ்சு வருசமாக் கோவிலாப் புழங்குனதை விட்டுட முடியுமான்னு நம்ம மக்களுக்குப் பயங்கர டென்ஷன். உள்ளூர் பாராளுமன்ற அங்கத்தினரும் யூனியன் கேபினட் மினிஸ்டருமான பவன் குமார் பன்ஸால்கிட்டே முறையிட்டு இப்போ இடித்தல் தள்ளிப் போடப்பட்டிருக்கு. ஆனாலும் எப்போ என்ன ஆகுமோன்ற பதைபதைப்புதான். இதுக்கிடையில்தான் ஓம் பராசக்தி சந்நிதி ஒன்னு புதுசாக் கட்டுனது.
திரு.பொன்னம்பலம்


கோவிலை நமக்குச் சுத்திக் காட்டிய உளுந்தூர் பேட்டைப் பொன்னம்பலம் அவர்கள் மேற்படித் தகவல்கள் எல்லாம் சொன்னார். இங்கே இருக்கும் நூறு குடும்பங்களில் 95 சதவீதம் உளுந்தூர்ப்பேட்டைக்காரர்கள்தானாம்!!!!பள்ளிக்கூடம் இருக்கா? அங்கே தமிழ் சொல்லித்தர்றாங்களான்னு கேட்டதுக்கு இருக்காம். அஞ்சாப்புவரை தமிழும் ஹிந்தியுமா சொல்லித்தர்றாங்க. அதுக்குப்பிறகு பிள்ளைங்க ஹிந்திப் பள்ளிக்கூடத்துக்குத்தான் போக வேண்டி இருக்குனார்.

தமிழ்நாட்டின் டிவி சேனல் எல்லாம் பார்க்கறீங்களான்னா.... இல்லையா பின்னே? அதெல்லாம் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கோமுன்னு சொன்னார். அப்போ அங்கே வந்த சிறுமிகளைப் பார்த்து ஒரு சின்னப் புன்முறுவல் வீசி பெயர் என்ன? தமிழ் தெரியுமா ன்னு கேட்டேன். அடுத்த நொடியில் நான் ஒரு பலாப்பழமானேன். சிறுமிகளும் சிறுவர்களுமா மொய்ச்சுக்கிட்டாங்க.


லக்ஷ்மி, நித்யா மணிஷா, பூஜா, பாவனா, ஸ்நேகா ஷீதல், சிம்ரன், ரியா, சுமன், ஈஷா அன்னு ஆகாஷ், விஜய், மணிகண்டன், ராகினி, முஸ்கான், சிராக், வர்ஷா, சஞ்சனா, பவன், விஷாகான்னு என் பெயரை எழுதிக்குங்க என் பெயரை எழுதிக்குங்கன்னு பிள்ளைகள் ஆசையாப் பெயரைச் சொல்லிக்கிட்டே போக எல்லை கடந்த ஆர்வம் பொங்கி பக்கத்துவீட்டுப் பசங்க பெயெரெல்லாம் வந்து விழுது!!!!!
காந்தீயவாதி கருப்பையா

ஒரு வழியா ஏழுமணிக்கு எல்லாம் ரெடியாகி மேடையில் கருப்பையா என்றவர் வரப்போகும் நிகழ்ச்சிகளை அறிவிச்சுக்கிட்டு இருந்தவர், திருமதி துளசி கோபாலை வரவேற்புரை அளிக்க மேடைக்கு அழைச்சார். 'கிளம்பு கிளம்பு'ன்னு நம்மை நல்லா மாட்டிவிட்ட கோபால், அடுத்து திரு கோபால் அவர்களை தலைமை தாங்க மேடைக்கு அழைச்சதும் பேய்முழியோடு மேடையில் வந்தமர்ந்தார்:-) சித்ரா என்ற பெண்மணியையும் மேடைக்கு வரச்சொன்னார்கள். இன்றைய கலைநிகழ்ச்சிகளுக்கான கலைஞர்களை ஏற்பாடு செய்து மதுரையில் இருந்து அழைச்சு வந்தவங்க இவுங்களும் திரு. கருப்பையாவும்தான். இந்த ரெண்டு பேரும்தான் கன்யாகுமரியில் தொடங்கி இந்தியா முழுசும் சைக்கிளில் பயணம்போய் வந்த காந்தீயவாதிகள்.

லட்சிய சிதம்பரம் என்றவர் காந்தியடிகளைப்பற்றிப் பாடி வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் கோஷங்களோடு முடிச்சார்.
சைக்கிள் பயணச் சித்ரா


பதிவின் நீளம் கருதி பாக்கி நாளைக்கு:-)


28 comments:

said...

வரவேற்புரையை ரெக்கார்ட் செஞ்சு போட்டிருக்கலாம்.

said...

அன்னிக்கு என்ன மெனுன்னு ஒரு போட்டோ போட்டிருக்கலாமே டீச்சர்! :))

said...

hmm ok ;)

said...

//வரவேற்புரையை ரெக்கார்ட் செஞ்சு போட்டிருக்கலாம்.//

அதானே... ரெக்கார்ட் செய்யலைன்னாலும் மனசுல ரெக்கார்ட் பண்ணத அப்படியே எழுத்தில வடிச்சுடுங்க! சரியா:)

said...

:) சரிகொண்டாட்டம் ..
பலாப்பழ துளசி அழகா இருக்கீங்க குட்டீஸ் நடுவில்..

said...

இந்த ரெண்டு பேரும்தான் கன்யாகுமரியில் தொடங்கி இந்தியா முழுசும் சைக்கிளில் பயணம்போய் வந்த காந்தீயவாதிகள்.//

இப்படியானவர்களும் இருக்கிறார்களே.. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..

நல்ல பதிவு

said...

வரவேற்புரையில் என்ன பேசினீங்கன்னு நாளைக்கு வருமா..

said...

இந்த ரெண்டு பேரும்தான் கன்யாகுமரியில் தொடங்கி இந்தியா முழுசும் சைக்கிளில் பயணம்போய் வந்த காந்தீயவாதிகள்.

லட்சிய சிதம்பரம் என்றவர் காந்தியடிகளைப்பற்றிப் பாடி வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் கோஷங்களோடு முடிச்சார்.


...wow! good role models!

said...

Thulasi, you look so happy and the kids too!
before your next post Shall comment in Thamizh.

said...

//அடுத்த நொடியில் நான் ஒரு பலாப்பழமானேன். சிறுமிகளும் சிறுவர்களுமா மொய்ச்சுக்கிட்டாங்க.//

சந்தோஷம் படங்கள்ல தெரியுது டீச்சர்.

said...

//அடுத்த நொடியில் நான் ஒரு பலாப்பழமானேன். சிறுமிகளும் சிறுவர்களுமா மொய்ச்சுக்கிட்டாங்க//

பலாச் சுளையின் இனிமையைத் தரும் பகிர்வு:)!

said...

நல்ல பதிவு. நிறைய விபரங்கள்.
உங்களுக்கு எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பு.
வாழ்த்துக்கள் அம்மா.

said...

//அடுத்த நொடியில் நான் ஒரு பலாப்பழமானேன். சிறுமிகளும் சிறுவர்களுமா மொய்ச்சுக்கிட்டாங்க//

:-)

தங்களுக்கு நல்ல ரசனை, இப்படி கூட புது கவித எழுத முடியுமா ?

said...

வாங்க புதுகைத்தென்றல்.

இவருக்கு இருந்த அதிர்ச்சியில் கெமெராவை அங்கே யார்கிட்டேயாவது கொடுத்து ஒரு கிளிக் செய்யச் சொல்லலாமுன்னு தோணலை பாருங்க:-))))

கோவில் தரப்பில் வீடியோ எடுத்துருக்காங்க. முடிஞ்சால் ஒரு காப்பி வாங்கி, இங்கே க்ளிப்பிங்ஸ் போடமுடியுமான்னு பார்க்கிறேன்.

said...

வாங்க ஷங்கர்.

மெனுவைக் கவனிக்கத் தவறிப்போச்சே:(

said...

வாங்க சமுத்ரா.

வருகைக்கு நன்றி!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

குறிப்பு ஒன்னும் எழுதி வச்சுக்கலை. நினைவு இருந்ததை அடுத்த பதிவில் போட்டுருக்கேன்:-)

said...

வாங்க கயலு.

பிஞ்சுகளுக்கு நடுவிலே 'பழம்'!!!!

இதானே சொல்ல வந்தீங்க:-))))))))

said...

வாங்க சாந்தி.

நிறையப்பேர் இப்படி ஓசைப்படாம என்னென்னவோ சாதனைகள் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. நமக்குத்தான் அவுங்களைக் கண்டுபிடிக்கக் கஷ்டமா இருக்கு.

எல்லாம் நிறைகுடங்கள்!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

தெரிஞ்சுக்க இவ்வளோ ஆர்வமா?

உங்க அண்ணன் பேச்சை(யும்) போட்டாச்சு:-)

said...

வாங்க சித்ரா.

காந்தி கிராமத்து மக்கள்ன்னு நினைக்கிறேன். அவுங்களோடு தனியா உரையாட நேரம் கிடைக்கலை:(

said...

வாங்க வல்லி.

குழந்தைகளுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சிப்பா. அதில் ஷீதல் என்ற குட்டிப்பொண், என் கைகளைப் பிடிச்சுக்கிட்டு விடவே இல்லை!!!

said...

வாங்க சுசி.

சந்தோஷம் மட்டும் சட்னு பல்கிப்பெருகிரும் உணர்ச்சி இல்லே?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வேற்றுமுகமுன்னு நினைக்காத கள்ளமில்லாத உள்ளங்களுடன் கலந்தாலே மகிழ்ச்சிதானேப்பா!!!!

said...

வாங்க ரத்னவேல்.

'என்ன தவம் செய்தனை'ன்னு பாடத்தோணுச்சு!!!

said...

வாங்க லோகன்.

ரசனைக்கு என்ன பஞ்சம்?

ரோசாப் பதிவுலே எழுதுன (??) புதுக்கவிதை(!!)யை யாரும் கண்டுக்கலைன்னு இருந்த வருத்தம் இந்த (எழுதாத) புதுக்கவிதையில் போயிருச்சு:-))))

said...

சித்திரைத் திருவிழா பூத்து மகிழ்கிறது.

said...

வாங்க மாதேவி.

கொண்டாட்டத்துலே கலந்துக்கிட்டதுக்கு நன்றிப்பா.