Wednesday, April 13, 2011

Gகில்லி ச்சூடு:-)))))

ராவு இல்லை பகல் இல்லைன்னு எப்பப் பார்த்தாலும் குடுகுடுப்பைக்காரர் கையில் இருக்கும் உடுக்கை(?) சத்தம். கண்டநேரத்துலே வருவாங்களா என்ன? ஒருவேளை சிவன் தாண்டவமாடிக்கிட்டே இருக்காரோன்னு ஒரு ஸம்சயம். இமயமலைக்குச் சமீபத்துலே(!!!) இருக்கோமேன்னு..........இருக்கும் இருக்கும். நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே............ பாட்டு இருக்கே! திருவிழாக்கடைகளில் ஒரு சின்ன உடுக்கு வாங்கிக்கணும். எல்லாம் எசப்பாட்டுப் பாடத்தான்.........பாவம் எம்மாந்நேரம் அதுவே தனியா உடுக்கிக்கிட்டு இருக்கும்? என்ன பறவைன்னு தெரியலையே:( நம்ம தெக்கிக்காட்டானைக் கேக்கணும்.

புறாக்களின் குரலாக இருக்கும் என்றார் கோபால்.

க்கும்..........குர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............ன்னு சொல்லிக்கிட்டே வந்து பால்கனி ட்யூப் லைட் மேல் வந்து பதில் சொல்லிட்டுப்போச்சு ஒரு புறா. இந்த ஊரில் ஏகப்பட்ட புறாக்கள். கழுத்தில் பச்சை வச்சது, சாம்பல் கலர், கருப்புன்னு பலவிதங்களில் இருக்கு.
(இவன் குயிலன்)

இப்ப வசந்தம் வந்தாச்சுன்னு குயில்கள் கூவி அழைக்கத்தான் காலை கண் முழிப்பே நடக்குது. க்கூஊஊஊன்னு அப்படியே அந்த ஊ..........வை இழுத்துப் பாடும்போது காதுக்கு இனிமையாத்தான் இருக்கு. காலையோடு கடமை முடிஞ்சதுன்னு இல்லாம இருட்டும் வரையும் குயிலுச்சத்தம் கேக்குதய்யா.....குயிலுச்சத்தம் கேக்குதய்யான்னு நம்மை(யும்) பாட வச்சுருதே!
(இவள் குயிலி


வீட்டை அடுத்து இருக்கும் பார்க்கில் ஒரு மரம் கிளிமரம். அதுவும் மாலை ஒரு ஆறரைக்கு அங்கே போனால்............நீண்ட வாலுடன் கூட்டம் கூட்டமா வந்து அடையுதுங்க. அச்சில் வார்த்து எடுத்ததுபோல ஒரே அளவு எல்லாமே!
குண்டுக்குருவி இருக்கா? இருக்கே! சாம்பல் பூத்த நிறத்தில் மஞ்சள் மூக்குடன் ஊதுன உடம்புடன் ஒரு கூட்டம். இதுக்குப்பெயர்? பேப்ளர். (babbler)அப்புறம் மஞ்சள் மூக்கும் பிரவுண் நிற உடம்புமா மைனாக்கள். இத்தனை வகைகள் இருந்தும் சிட்டுக்குருவிகளைக் காணாத்தான் இல்லை:(

பொதுவா பறவைகள் எல்லாமே கூடடையும் முன்பு ஏதோ கட்டாயமான உடற்பயிற்சி போல சிலது இங்கேயும் அங்கேயுமாவும் சில இனங்கள் வட்டமான ரன்னிங் ட்ராக்லே 5000 மீட்டர் ஓடுறதைப்போல் வட்டவட்டமாயும் ஓடி ஓடிக் களைச்சு, ஒரு கணக்கைத் தீர்க்குதுங்க. விடை வந்ததும் சட்ன்னு ஒன்னுபோலவே மரத்து இலைகளுக்குள் பாய்ச்சல். டீச்சர் வந்ததும் பேச்சரவம் குறைஞ்சு ஒரு கிசுகிசுப்பு வருமே அதைப்போல ஒரு ரெண்டு நிமிசத்துக்கு கீக்கீ குர்குர் எல்லாம் ...........சைலேன்ஸ்............ டக்ன்னு ஸ்விட்ச் அமர்த்தினது போல் .......மூச் பேச் இல்லை.

நகரப் பறவைகள் சரணாலயம் என்ற பெயரில் இன்னொரு பார்க் இந்தக் கிளிமரத்துக்கு அப்பால் ஒரு அம்பது மீட்டர் தூரத்துலே இருக்கு. அரசாங்கமுன்னு சொன்னவுடன் எல்லாமே பாழடைஞ்சுடும் என்ற நியதி வழுவாமல் காப்பாற்றப்படும் இடம். பயந்துபோன பச்சைக் கிளிக்கூட்டம் ஒரே மரத்தை வீடாக்கின காரணம் புரிஞ்சுபோச்சு. ஆனாலும் ஒரு எட்டு இங்கே போய்வருவேன். யானையார் தன் தோழன் டைனோவுடன் புள்ளைகளுக்கு ஆட்டத்தோழனா இருக்கார். இது போன மாசத்து அடிஷன்.

பறவைகளுக்கு முதுமை வருமான்னு கோபாலுக்கு ஒரு சந்தேகம்! வராம என்ன? ஆனா நம்மைப்போல நரைச்சு பல்லெல்லாம் போய் கண்ணுத்தெரியாம தடவி, கூன் போட்டு நடந்துன்னு பளிச்சுன்னு முதுமை கண்ணுக்குத் தெரியாது.

அப்ப என்ன செய்யுங்க? ச்சும்மாத்தான் இருந்த இடத்துலேயே கிடக்கும். பறந்துபோய் உணவு தேடவும் தெம்பு இருக்காதே. புண்ணியம் செஞ்சதுகளுக்கு யாராவது சாப்பாடு வைப்பாங்க. அதுவும் அந்த வீட்டுப் பக்கத்துலே இருக்கும் மரத்தில் வசிச்சால். தொலைதூரம் பறக்க இறக்கையில் பலம் வேணாமா?

நம்ம ஹவுஸ் ஓனர் புழக்கடையில் ஒரு சின்ன ஸ்டூல் அமைப்பில் தினமும் சப்பாத்தி, ச்சோலே எல்லாம் போட்டு வைக்கிறார். குடிக்கத் தண்ணீரும் நாலைஞ்சு மண்சட்டியில் நிரப்பி வைக்கிறார். புண்ணியம் சேர்க்கும் வழிகளில் இது வருது.

ஒன்னும் கிடைக்கலைன்னா.?

அப்படியே பட்டினி இருந்து செத்துப்போகும்.

மிருகங்களும் இப்படித்தானா? ஆமாம். வீட்டு மிருகங்கள் கொஞ்சம் கொடுத்துவச்சதுகள். காட்டு மிருகங்கள்............ முதுமையில் நகர முடியாமல் வயிறு காய்ஞ்சு சாவறதுதான்.

ஜைன மதத்தில் சில முதியவர்கள் அப்படியே சாப்பிடாமல் இருந்து செத்துருவாங்களாம். இதுக்கு உறவினர்கூட சம்மதிக்கறாங்கன்னு பேப்பரில் போட்டுருந்தான். ப்ச்......பசி எடுக்காம இருக்குமா? குடலு துடிக்காது?

நினைச்சாவே பயங்கரமா இருக்கு. அதுவும் வயசான காலத்தில் சாப்பாடு செல்றதே ரொம்பக் குறைவுதான். அதுலே பட்டினி வேற கிடக்கணுமா?


கோச்சுக்கிட்டுச் சாப்பிடாமல் வீம்பு பிடிப்பேனே தவிர விரதமுன்னு ஒரு நாள் இருந்துட்டாலும்................ நவீன விரதமா அப்பப்பக் காப்பித் தண்ணி ஊத்திக்கிறதுதான். எங்க பெரியபாட்டிகூட வயித்தைக் காயப்போடமாட்டாங்க. விரதமுன்னா ஒரு பொழுது சாப்பாடு. அது சம்பிரதாயமான சாப்பாடு. மற்ற பொழுதில் குறிப்பா ராத்திரியில் வெறும்வயத்தோடு படுக்கக்கூடாதுன்னு சமாதானம் சொல்லிக்கிட்டு அரிசி உப்புமா, இட்லி இப்படி ஒன்னு. ஆ...அதென்ன வக்கபொத்து? (.தெலுகு)ஒக்க பொத்து. அரிசியை அப்படியே ஆக்கித் தின்னாமல் பின்னப்படுத்தித் தின்னலாமாம். அரிசிச்சோறை மட்டும் அப்படியேவா முழுங்கறோம்? பல்லில் அரைச்சுப் பின்னப்படுத்தாலையான்னு எதிர்வாதம் செய்வேன், இந்த அடங்காப் பிடாரி. அப்ப அப்படி வாதம் செஞ்சாலும் இப்போ அதெல்லாம் மனசுக்குள்ளே வந்து கவனமா மூணுநேரமும்

வாசக்கதவுக்கு மேலே இருக்கும் கம்பியில் காலைநேரத்தில் மட்டும் மிஸ்டர் அனத்தல் வந்து உக்கார்ந்து கொஞ்ச நேரம் அனத்திக்கிட்டு இருப்பார். பெண்புறா சாயலில் லேசான ப்ரவுன் நிறம். மெல்லிசா நீண்ட மூக்கு. நுனியில் கொஞ்சம் வளைவு.
புழக்கடைத் தோட்டத்தில் அணில்கூட்டங்கள் எக்கச்சக்கம். இங்கே தோட்டங்களிலும் வீடுகளிலும் இதுக நடமாட்டம் கொஞ்சம் கூடுதல்தான். கொஞ்சநேரம் இருந்து கவனிச்சால்...... என்ன விளையாட்டு! என்ன ஓட்டம்!! ரொம்பநாள் இதன் பெயர் ஹிந்தியில் என்னன்னு தெரியாமல் இருந்துச்சு. ஒருநாள் வீட்டுவேலையில் உதவி செய்யும் நம்ம சரோஜிடம் கேட்டேன்.
யே? யே த்தோ கில்லி ஹை!!

14 comments:

said...

குயிலன் குயிலி :)
படமெல்லாம் சூப்பரா இருக்கு .

எங்க ப்ளாக் ல இப்ப வயசான நாய் ஒன்று அடைக்கலம் வந்திருக்கு. நகர முடியல..இங்க இருக்கிறவங்க வைப்பது தான் சாப்பாடு.

said...

நல்ல பகிர்வு. புகைப்படங்களும் விவரிப்பும் அருமை.

கில்லி - அது கில்லி இல்லை - கிலேரி [Gilhari]!!

said...

டைட்டில் வித்தியாசமா வைக்க கத்துக்கிட்டீங்க.. ம் ம்

said...

அருமையான படங்கள் நிறைந்த பதிவு. உங்களது நகைச்சுவையான வர்ணனைகள். படித்தவுடன் மனசு சந்தோசமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் அம்மா.

said...

அணில் செம க்யூட்..

said...

வீட்டுல வெச்சு வளர்த்தாத்தானா!!.. இப்படி வந்து போறதுகளும் செல்லங்கள்தானே :-)

said...

வாங்க கயலு.

ஐயோ பாவம் அந்த நாய். அடைக்கலம் கொடுத்ததுக்கு நன்றிப்பா.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அந்த gil-lehriதான் பேச்சுவழக்குலே கில்லி ஆகிருச்சு போல!!!

தில்லி வாழ்க்காரர்கள் நமக்குத் தேவை. நன்றிங்க.

said...

வாங்க செந்தில் குமார்.

டைட்டில் ஒன்னுதான் இத்தனை வருசமா துளசிதளத்தை இழுத்துப்பிடிச்சுக் காப்பாற்றி வருதுங்க:-))))

said...

வாங்க ரத்னவேல்.

எல்லோரும் இன்புற்று இருக்க வேணும் என்பதுதான் நமது கொள்கை!

(இதை வச்சு அடுத்த தேர்தலுக்குள் புதுக்கட்சி ஆரம்பிக்கலாமா?)

said...

வாங்க சுசி.

'ரெடி'ன்னதும் ஜோரா நின்னு போஸ் கொடுத்துச்சு:-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

சந்தேகம் ஏன்? இதுகளும் செல்லங்களேதான்.

நம்ம பக்கத்து வீட்டில் 11 நாய் இருந்துச்சு. முதல் ஆறுமாசம் அவுங்க மாடிக்கு வந்து நம்ம வீட்டை எட்டிப்பார்த்து எல்லோருமாச் சேர்ந்து குலைப்பாங்க பாருங்க. இடி விழுந்த ஓசை:-)

இன்னும் கொஞ்சம் பழகறதுக்குள்ளே எல்லோரும் 'காவ்' போயிட்டாங்க ஒருத்தனை விட்டுட்டு. இப்பெல்லாம் தனிக்குலை:-)

said...

கில்லி செம!

said...

செல்லங்கள் அழகாக இருக்கிறார்கள்.

சித்திரை வருட வாழ்த்துகள்.