Monday, April 25, 2011

லேண்ட் மார்க் ஆஃப் ஜெய்ப்பூர் (ராஜஸ்தான் பயணத்தொடர் 4)

கிழக்கு வெளுக்கும்போதே சட்னு எழுந்து தயாரானேன். 'எதுக்கு இவ்வளோ சீக்கிரம் எழுப்பறே? இன்னிக்கு நிறைய சுத்த வேண்டி இருக்கும் நல்லா ரெஸ்ட் எடுத்துக்க'ன்னார் கோபால்.

'கடைகள் எல்லாம் திறந்துட்டாங்கன்னா..... ட்ராஃபிக், கூட்டம் வந்துரும். இப்ப ஹவா மஹல் போய் பார்த்துட்டு க்ளிக்கிட்டு வரலா'முன்னேன்.
காலை ப்ரேக் ஃபாஸ்ட் இங்கே ஹோட்டேலில் தர்றாங்க. எட்டுமணிக்குள்ளே திரும்பிவந்து ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டோமுன்னா ஆச்சு. ஒன்பது மணிக்கு ஒரு கைடு வர்றார். ப்ரதீப் மெதுவா தயாராகட்டும். நாம் ஒரு ஆட்டோ பிடிச்சுக்கலாமுன்னு முடிவாச்சு.

ஏழுமணி. கீழே வந்தோம். சாலை வெறிச்சுன்னு இருக்கு. டூரிஸ்ட் பஸ்கள் நாலைஞ்சு மட்டும் சின்ன உறுமலோடு நிக்குதுங்க. நிம்மதியா உக்கார்ந்து தினசரியில் மூழ்கி இருந்த ஆட்டோக்காரரிடம் 'கொஞ்சம் சுத்திட்டு வரணும் ஹவா மஹலாண்டே'ன்னோம். 150ன்னார். போகட்டும் அஞ்சு டாலர்னு பேரம் பேசலை.

வழிநெடுகத் துப்புரவுத் தொழிலாளர்கள் தெருக்களைக்கூட்டி மலைபோல் குப்பைகளைக் குவிச்சுக்கிட்டு இருக்காங்க. ஒவ்வொரு தொழிலாளிக்குப் பின்னும் நாலு நாய் என்ற கணக்கில் ஒரு கூட்டம் பின்னாலேயே போகுது. பத்திருபதடிக்கு ஒன்னுன்னு பெரிய பெரிய கேன்களில் பால் வச்சுக்கிட்டு முடிச்சுமுடிச்சாச் சின்னக்கூட்டம்.


இந்த நகரம்தான் அகில இந்தியாவிலேயே திட்டமிட்டுக் கட்டப்பட்ட முதல் நகரம் என்ற பெருமைக்கு உரியது. சும்மாச் சொல்லக்கூடாது..... நல்ல அகலமான சாலைகள். ரத கஜ துரக பதாதிகள் கஷ்டமில்லாமக் காலை வீசிப்போட்டு நடக்கணுமேன்னு..... ராசா ரொம்ப யோசிச்சுக் கட்டுனது. நேத்து ராத்திரி இதுவழியாப் போனப்ப இருட்டுலே அகலம் ஒன்னும் சரியாத் தெரியலை. ப்ளாட்ஃபாரம் முழுசும் கடைகள் நீட்டிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் ஜேஜேன்னு இருந்துச்சே!

கலர்ஃபுல் உடைகளில் பெண்கள் கூட்டம் ஒன்னு பூஜைப்பொருட்களோடு ஏதோ கோவிலுக்குப் போய்க்கிட்டு இருக்காங்க. பிங்க் நிறக் கட்டிடங்களின் வரிசை ரெண்டு பக்கமும். ஸவாய் மான்சிங் டவுன் ஹால் கட்டிடம் கம்பீரமா நீண்டு நிக்க அதுக்குப் பக்கத்துலே ஹவாமஹல். டூரிஸ்ட் பஸ்களில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் வந்து இறங்கி மஹலைப் படம் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. நம்ம ஐடியா அவுங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?

போக்குவரத்து இல்லாத சாலையின் எதிர்ப்பக்கம் போய் லாங் ஷாட்டில் படம் எடுக்கும் கூட்டத்தில், நாமும் ஜோதியில் கலந்தோம். வெள்ளைக்காரப்பயணிகள் சாலையின் குறுக்கும் நெடுக்குமா இஷ்டத்துக்கு நடந்து ( அவுங்க ஊரில் இப்படி நடக்கமுடியாது பாருங்க. அந்த ஆசையைத் தீர்த்துக்கிட்டாங்க போல! ) மஹலை அணுஅணுவாப் படம் எடுத்துத் தள்ளிக்கிட்டு இருந்தாங்க. நாம் மாத்திரம் கம்மியா என்ன? பார்ட் பார்ட்டா நானும் எடுப்பேன், தைச்சும் போடுவேன்ல:-)))

தைச்சது

கூட்டம் எதையாச்சும் கையோடு வாங்கிப்போகாதா என்ற நப்பாசையில் இங்கே மட்டும் ஒரு சில கடைகள் திறந்து வச்சுக்கிட்டு இருக்காங்க. கலர்கலரா அலங்கரிச்சச் சின்னக்குடைகள் ஜெய்ப்பூர் ஸ்பெஷல்!

லேண்ட் மார்க்

சூரியன் உதயமாகி கதிர்கள் மஹலை நோக்கிப் பாயுது! 'பளிச்சுன்னு எப்படி ஜொலிக்குது பாருங்க'ன்னு வியப்புதான். கிழக்கு பார்த்த மாளிகையின் முன்னாலே ச்சும்மாத் தூக்கி நிக்கவச்ச அலங்காரச் சுவர்தானாம்.( fa·cade) அஸ்திவாரமே இல்லையாம். பின்னாலே சாதாரணக் கட்டிடம்தான். அரண்மனைப்பெண்டிர் முகம் காட்டக்கூடாது என்ற நியமம் இருந்த காலக்கட்டம். இப்படிக் கடைத்தெருவின் நட்ட நடுவில் இருக்கும் இடத்துலே தெருவழியா கொண்டாட்டம், ஊர்வலம், எல்லாம் போகாமலா இருக்கும்? டும்மா சத்தம் கேட்டால் என்ன நடக்குதுன்னு எட்டிப் பார்க்கும் ஆர்வம் எல்லோருக்கும் பொதுதானே? அதான் யார் கண்ணுக்கும் படாமல் வெளியே நடப்பதைப் பார்க்கன்னு இப்படி ஒரு சுவர் எழுப்பி வச்சுருக்கார் ராசா. இந்த ஜன்னல்கள் ஓட்டை வழியாக் காத்து வீசுவதைப் பார்த்து இதை ஹவா (இந்தியில் காற்று என்று பொருள்) மஹலுன்னு குறிப்பிட்டு அதே பெயர் நிலைச்சு நிக்குது இப்பவும்.

facade

மஹலைத் தொட்டடுத்து குறுக்கா ஒரு சாலை போகுது. ஒவ்வொரு நாற்சந்தியிலும் வட்டமான தொட்டி அமைப்பில் செயற்கை நீரூற்று, சிலைகள் இப்படி வச்சுருக்காங்க.. நாற்சந்தியின் எதிர்மூலையில் ஒரு கோவில். ஸ்ரீலக்ஷ்மிநாராயணன். நேத்தே பார்த்து வச்சுக்கிட்டதுதான்.

மும்முரமா தினசரியில் மூழ்கி இருந்த ஆட்டோக்காரரைத் தொந்திரவு செய்யாமல் நாங்களே நாற்சந்தியின் குறுக்கே கடந்தோம். ஒரு குதிரைவண்டி ஸ்டேண்ட். பக்கத்துலே புல்லுகட்டு விற்கும் சைக்கிள் ரிக்ஷாவண்டி. புல்லுகட்டு முழுசும் சிட்டுக்குருவிகள்!!!! ஓடி ஆடி, பாடி, பறந்து...கண்ணுக்கு விருந்து!
சுமார் இருவது படிகள் ஏறி கோவிலுக்குள் நுழைஞ்சோம். மேல் படிக்கட்டில் நின்னு பார்த்தால் நேர் குறுக்கா இருக்கும் ஹவா மஹலுக்கு வந்த டூரிஸ்ட் பஸ்கள் ஏராளமாக் கண்ணில் படுது.

திரும்பவும் ஏழெட்டுப் படியேறி சந்நிதிக்கு போனால் நாம் த்வாரகையில் பார்த்த அதே ரூபத்தில் கருப்புப் பளிங்குக் கண்ணன். சந்நிதியில் பட்டர் தீர்த்தம் கொடுத்தார். படம் எடுக்கலாமான்னு அனுமதி கேட்டால்....' தாராளமா எடுத்துக்கோ. மூலவரை நல்லா எடுத்துக்கோ'ன்னார். இது எனக்கு ரொம்பப் பிடிச்சது. நம்ம பக்கங்களில் பல கோவில்களிலும் படம் எடுக்கக்கூடாதுன்னு தடா இருக்குல்லே? படம் எடுத்தால் மூலவரின் சாந்நித்யம் போயிருமாம்! எல்லாம் வல்ல இறைவன் ஃபோட்டோ எடுத்தால் பவர் குறைஞ்சுருவானா? நம்ம சிங்கை சீனுவைக்கூட படம் எடுத்துக்க எந்த ஒரு தடையும் இல்லை. கோவிலின் புனிதம் என்ன அங்கே கெட்டா போச்சு? வளம் கொழிக்கலையோ!!!!
மூலவர் லக்ஷ்மிநாராயணர்

புள்ளையார்
மூலவர் சந்நிதி

கருவறைக்கு வெளியே ரெண்டு பக்க சுவரிலும் சின்ன மாடத்தில் ஒரு பக்கம் புள்ளையாரும் இன்னொரு பக்கம் பார்வதி பரமசிவன் ரிஷபவாகனத்தில் இருப்பதுபோலும் சிலைகள். இன்னொரு சுவரில் ஆஞ்சநேயர் செந்தூரக்குழைவில். முன்மண்டபத்தில் இரண்டு பக்தைகள் உட்கார்ந்து ஸ்லோகம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. மேலே விதானத்தின் கிண்ணக்கூரையில் அழகான வண்ணங்களால் ஆன டிஸைன்.
விதானம்

ரிஷபவாகனத்தில் பார்வதி பரமேஸ்வரன்

மூலவருக்கு எதிராக கண்ணனைக் கண்ணோடு கண் நோக்கும் விதமா நல்ல உசரமான தனிச் சந்நிதியில் பெரிய திருவடி... தரிசனம் முடிச்சுக்கிட்டு வெளிவந்து யஹா(ங்) ஸே வஹா(ங்)ன்னு ஹவா மஹலைக் க்ளிக்கோ கிளிக்குன்னு கிளிக்கிட்டு ஆட்டோவுக்குத் திரும்பிவந்தோம்.

கோவில் படியில் இருந்து

ஆட்டோக்காரர் பேப்பர் வாசிப்பதை இன்னும் முடிக்கலை! நாட்டு நடப்பு என்னன்னா.... ஒன்னும் இல்லையாம்!!!! அதையா இன்னும் மாய்ஞ்சு மாய்ஞ்சு வாசிக்கிறார்?????

'எதிரிலே கோவில் ஒன்னு இருக்கே அங்கே கொண்டு போகவா'ன்றார். அடராமா..... தினசரியில் நட்ட கண்ணை இப்போதான் எடுக்கறாரா? போய்ப் பார்த்தாச்சுன்னோம். இங்கே கோவிந்த்ஜி கோயில் இருக்குன்னார். ஆஹா..... ச்சலோஜின்னேன்.

கிளம்பி வந்தவழியாவே போய் இடதுபுறம் உள்ள சந்து(தெருவில்) நுழைஞ்சு லெஃப்ட் ரைட்டுன்னு போய் ஒரு குருத்வாரா முன்னாலே நிறுத்திட்டு அதோ அதுக்குள்ளே நுழைஞ்சு போங்கன்னு இடதுபக்கம் கை காட்டினார். வண்டிகள் நுழைய முடியாதபடி குறுக்குத் தடுப்பு போட்டு வச்சுருக்காங்க.

வெளிவாசலிலே ஸ்ரீ கோபேஷ்வர் மஹாதேவ் (சிவன்) கோவில் ஒன்னும் சூலம் கையில் பிடிச்ச மா(த்)தா கோவில் ஒன்னும் இருக்கு. நாம் விருந்தாவனத்தில் பார்த்தது போல ரெட்டை வாசல் இருக்கும் பெரிய மதில் சுவரோடு டிகானா மந்திர் ஸ்ரீ கோவிந்த்தேவ்ஜி கோவில்! ஒன்னு ஸ்ரீ ஸ்ரீ நித்யானந்த் மஹாப்ரபு வாசல். இன்னொன்னு ஸ்ரீ ஸ்ரீ கோராசந்த மஹாப்பிரபு வாசல்.

தொடரும்................:-)

21 comments:

said...

கூரையும் குடைகளும் கண்ணாடி வழியே மஹாலும் அழகு.

//சாலையின் எதிர்ப்பக்கம் போய் லாங் ஷாட்டில் படம் எடுக்கும் கூட்டத்தில், //

பெங்களூர் விதான் செளதா முன்னால் எப்போதும் காணக் கிடைக்கும் காட்சி. இப்போது அதற்கு வழியில்லாமல் சாலைக்கு நடுவே மெட்ரோ:(! இந்தப் பக்கம் செளதா அந்தப் பக்கம் நீதிமன்ற வளாகம்னு தெரிகிற அழகே போச்சு.

புல்லுக்கட்டு சிட்டுக்குருவிகள்... ஆஹா:)!

said...

//நாட்டு நடப்பு என்னன்னா.... ஒன்னும் இல்லையாம்!!!! அதையா இன்னும் மாய்ஞ்சு மாய்ஞ்சு வாசிக்கிறார்?????//

:)))!

said...

கையப் பிடிச்சு கூட்டிகிட்டு போனதுபோல இருக்கு... நன்றி மேடம்... ;-))

said...

??>>>ஆட்டோக்காரர் பேப்பர் வாசிப்பதை இன்னும் முடிக்கலை! நாட்டு நடப்பு என்னன்னா.... ஒன்னும் இல்லையாம்!!!! அதையா இன்னும் மாய்ஞ்சு மாய்ஞ்சு வாசிக்கிறார்?????

எல்லாம் பழக்க தோஷம் தான்.. ஆனா அது தோஷம் இல்லை..

said...

தைச்சதும் நல்லா இருக்கு..

உங்க ஐடியா தான். க்ரேட் (உ)மன் திங்க் அலைக் :))

said...

சின்னக் கலர்குடைகள் எனது சிறுவயதுக் காலத்தை நினைக்க வைத்துவிட்டது.:)

லக்ஷ்மிநாராயணர் அழகாக காட்சிதருகிறார்.

said...

புகைப்படங்களும் விவரங்களும் அழகு... துணி வைத்து அவர்கள் செய்யும் பொம்மைகள், குடைகள் என ஒவ்வொன்றும் அழகு... தொடரட்டும் பயணம்....

said...

ஜெய்ப்பூர் பயணம் ரொம்ப அருமையா போயிட்டிருக்குங்க. நாங்களும் வருகிறோம்.

said...

படங்களெல்லாம் ரொம்ப அழகு. தைச்சதும் நல்லா இருக்கு:-)

said...

அழகான் படங்கள் டீச்சர்.

said...

Aval vikadan la article a??? :D kalakkal teacher!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பிலுபிலுன்னு புல்லுக்கட்டுலே ஆட்டம் காமிச்சச் சிட்டுக்குருவிகளை மறக்கவே முடியாதுப்பா. என்ன ஒரு உற்சாகம்!!!!!

விதான் சௌதா முன்னால் மெட்ரோ வந்துருச்சா? அடடா...... கோர்ட் பக்கம் நின்னு அழகை அனுபவிச்சு வருசம் பல ஆயிருச்சு.

said...

வாங்க ஆர் வி எஸ்.

'ட்ராவலாக் ஃபார் ஆர்ம்சேர் ட்ராவலர்ஸ்'
வகையில் இருக்கா?????

வருகைக்கு நன்றி

said...

வாங்க செந்தில்குமார்.

இந்த 'தோஷம்' பொதுவா எல்லா ஆம்பளைகளுக்கும் இருக்கு ! இண்டுஇடுக்கு விடாம அப்படி என்னதான் வாசிக்கிறீங்களோ:-)))))

said...

வாங்க கயலு.

தைய்யல்காரியா இருந்துக்கிட்டுத் தைக்காம இருக்கமுடியுதா:-)))))

said...

வாங்க மாதேவி.

அட! சின்னக்குடைகள் கொசுவத்தி ஏத்திருச்சா? சீக்கிரம் அதைப்பற்றி ஒரு பதிவு போடுங்கப்பா.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அப்பா கூட ஜாலியா ஊர் சுத்திக்கிட்டு இருப்பீங்கன்னு நினைச்சேன்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க கோவை2தில்லி.

நீங்க (எல்லோரும்)கூடவே வர்றதுதான் எனக்கு பலம்!

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆதரவுக்கு நன்றிப்பா.

said...

வாங்க சுசி.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க பொற்கொடி.

எல்லாம்'அவள்' செயல்:-)))))