நகரில் எது நடந்தாலும் என்ன ஏதுன்னு கண்டுக்காம, கேக்காம இருக்கமுடியுதா? மருந்தோ விருந்தோ மூணே நாள்தானாம். ஓடுனோம்.
. வசந்தம் வந்ததுக்கு அடையாளமா ரோசா மொட்டுவிட ஆரம்பிச்சது. விட்டுவைக்க முடியாமல் ரோசாத் திருவிழா கொண்டாடுனாங்க. முந்தி ஒருக்காச் சொன்னேன் பாருங்க Zakir Rose Garden இங்கே இருக்குன்னு. அதே இடம்தான். 40.25 ஏக்கர். 32500 ரோசாச்செடிகள். 825 வகைகள். அதென்னவோ தெரியலை இந்தப் பக்கங்களில் கோவிலோ, அரசியலோ, கல்யாணமோ கடைசி யாத்திரையோ இந்த துருக்கசாமந்தியை விட்டுடமாட்டாங்க. எல்லா அலங்காரமும் அதை வச்சுத்தான். நுழைவு வாசலில் சிகப்புக் கம்பளம் விரிச்சு நம்மைப்போல விஐபிகளுக்கு வரவேற்பு கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்!!
செயற்கை நீரூற்று பீய்ச்சியடிக்க, குளிர் விட்டுப்போகாத மக்கள் ஜெர்ஸியும் கார்டிகனுமா கம்பளி உடுப்போடு சுத்திப்பார்த்துக்கிட்டு இருக்காங்க.. இதுபோல கூட்டம் சேரும் இடமுன்னாவே 'Bபல்லே பல்லே'ன்னு ஆடாம இருக்கப் பசங்களால் முடியாது. கல்மேடை ஒன்னைப் பிடிச்சுக்கிட்டு அவுங்க ஆட்டம் ஒரு பக்கம். கண்காணிப்புக்குக் காவல் மாடம் அங்கங்கே உச்சாணிக்கொம்பில்.
வீட்டுவேலிகளில் படரவிட்டுருக்கும் செடிகளை இங்கே குடை ஷேப்பில் படரவிட்டுருக்காங்க. அதுவும் ஆரஞ்சுப்பூக்களாப் பூத்துத் தள்ளி இருக்கு.
கழைக்கூத்தாடி ஒருத்தர் தன் குழந்தைகளோடு ஆட்டம் காமிக்க வந்துருந்தார். விழாக் கமிட்டி ஏற்பாடு செஞ்சுருந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்னு. ஒரு பக்கம் சீக்கியர்களில் கல்ஸா குழுவைச் சேர்ந்தவர்களின் வீரவிளையாட்டு நடக்குது. கூட்டத்துக்குள் நீந்தும் திறமை இல்லாததால் ட்ரெய்னி கேமெராக்காரரை படம் எடுக்கச் சொல்லிட்டேன்:-)
இன்னொரு இடத்தில் பஞ்சாபி சினிமாவுக்கானப் படப்பிடிப்பு. கதாநாயகியும் குழந்தையும் ரெடியாகிக்கிட்டு இருக்க, இன்னொரு குழு பாரம்பரிய உடைகளில் ஒத்திகைபார்த்துக்கிட்டு இருந்தாங்க. ஒவ்வொரு குழுவுக்கும் அதுக்கேத்த ஒவ்வொரு கூட்டமுன்னு மக்கள் அலைமோதுறாங்க.
பக்காவா மேடை போட்டு நிகழ்ச்சிகள் வேற நடந்துக்கிட்டு இருக்கு. அங்கேயும் இருக்கைகள் எல்லாம் நிரம்பி வழியுது. நார்த் ஸோன் கல்ச்சுரல் செண்டரின் நிரந்தர நடனக் கலைஞர்கள் சண்டிகரிலேயே செட்டில் ஆகி இருக்காங்க போல! வழக்கமான கிராமீய நடனங்களை ஆடிக்கிட்டு இருக்காங்க. அஸ்ஸாம் தேயிலைக் கொழுந்து பறிக்கும் நடனம் மேடையில் நடந்துக்கிட்டு இருக்கு.
இன்னொரு பெரிய கூடாரத்துக்குள்ளே லேண்ட்ஸ்கேப் டிஸைன்கள் டிஸ்ப்ளே. வெவ்வேற கம்பெனிகள் அலங்கரிச்சு வச்சுருக்காங்க. சொல்லி வச்சமாதிரி சின்ன மார்பிள் ஜல்லிகளில் கலர்கள் போட்டு அதையே டிஸைனா நிரப்பி வச்சுருந்தது அழகா இருக்கு. ஆனா வீடுகளில் நிரந்தரமா இப்படிப் போட்டு வைக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
நியூஸியில் நம்ம வீட்டில் வெளிப்புறம் வீட்டின் ரெண்டு பக்கங்களிலும் பெப்பிள்ஸ் போட்டு வச்சுட்டா அழகா இருக்கும் புல்லும் வெட்ட வேணாமுன்னு நினைச்சு அப்படியே செஞ்சோம். ஆனா அதைப்போடுமுன் தரையை ரோலர் வச்சுக் கெட்டிப்படுத்தி மேலே களைகள் வராம இருக்க 'வீட்மேட்ஸ்' விரிச்சு அதுக்கு மேல் சிமெண்டும் மணலுமா ஒரு கலவை போட்டு மறுபடி ரோலர் வச்சு அமுக்கிட்டு அப்புறமா பெப்பிள்ஸ் குவியலைப்போட்டு நிரவி விட்டாங்க. பெப்பிள்ஸ் ஒரு பத்து செ.மீ உசரம்.
இப்படி இருந்தும் முதல் மூணு மாசம்தான் நம்ம 'பெப்பிள்ஸ் பீச்' அழகா இருந்துச்சு. அதுக்கப்புறம் மெள்ளமெள்ள களைகள் எல்லாத்தையும் துளைச்சுக்கிட்டு வெளி வந்துச்சு. உயிர்வாழும் துடிப்பு அதுகளுக்கும் இருக்கு. என்னஒரு வசதின்னா...... களை பிடுங்கிப்போட ரொம்ப மெனெக்கெட வேணாம். வேர்பிடிக்க மண் இல்லாததால் லேசா இழுத்தாவே வெளிவந்துரும். இங்கே அழகாக வச்சுருக்கும் கல் அலங்காரம் பெரிய அளவு தோட்டத்துக்கு லாயக்கு இல்லை. ஆனால்...........ம்ம்ம்ம்ம்ம்ம் ஐடியா கிடைச்சுருச்சு!
கொலு வைக்கும் சமயங்களில் வீட்டுக்குள்ளே கல் ரங்கோலி போடலாம். வாட்டர் ப்ரூஃப் பெயிண்ட் அடிச்சுக் கற்களைக் காயவச்சுட்டால் தாம்பாளத்தில் ரங்கோலி போட்டு தண்ணீர் நிரப்பி வச்சாலும் புதுமையா இருக்கும். இப்போதான் நம்ம கோகி இல்லையே......... என்னவா இருக்குமுன்னுத் தொட்டுப்பார்க்க:(
கொலுன்னதும் அங்கே ஒரு காக்டெஸ் கொலு கூட வச்சுருந்தாங்க.
ஒரு இடத்துலே பூக்களம் ஒன்னு 'எழுதி' வச்சுருந்தாங்க. கொம்பேனியிலே சேட்டன் ஜோலி செய்யறார்போல.
பரிசு வாங்கின ரோஜாப்பூக்கள், மலர் அலங்காரங்கள்ன்னு வரிசையாப் பார்த்துக்கிட்டே போறோம். நேத்துதானே திருவிழா ஆரம்பம். அப்போ இருந்த தரை அலங்கார ஓவியப்போட்டிக்காக 'வரைஞ்சு' வச்ச ஓவியங்கள் எல்லாம் இன்னிக்குக் காலையில் பெய்த மழையில் கலங்கிப்போய் இருந்துச்சு. எல்லாம் பாசுமதி அரிசி ! ராதா கிருஷ்ணா ஓவியத்துக்கு முதலிடம். இங்கேயும் ஒரு கதகளி ஓவியம் இருந்தது. என்டே சம்சயம் சரியாணுன்னு உரக்கப் பறயாம்.
ரோசாக்கு மட்டும் இத்தனை பெருமையான்னு மற்ற பூக்களுக்கு வயிறு எரியக்கூடாதேன்னு க்ளாடியோலஸ், க்ரிஸாந்தமம், லில்லி, டெய்ஸி, காரநேஷன், டாலியா, ஆஸ்டர், ஸாலிவியா, ஸ்டாக், பான்ஸி, பர்ட்ஸ் ஆஃப் பாரடைஸ் இப்படி வகைவகையானவைகளுக்கும் ஒன்னு ரெண்டு மூணுன்னு பரிசுகள் கொடுத்துருந்தாங்க.
இங்கே சண்டிகரில் இருக்கும் பூவகைகளைப் பார்த்தால் இவை எல்லாமே நியூஸியில் இருப்பவைகள்தான். கால நிலை முக்கியமா குளிர்காலம் அநேகமா ஒன்னுபோல இருப்பதால் இருக்கலாம். அதான் அங்கே வரும் பஞ்சாபிகள் கொஞ்சம்கூட ஹோம்சிக் இல்லாம வந்தவுடன் செட்டில் ஆகிடறாங்க போல. வந்து சில மாசங்களுக்குள்ளேயே குருத்துவாரா அமைச்சுக் கிரந்தம் வாசிப்பது, பூஜை, லங்கர் எல்லாம் ஆரம்பிச்சுடறாங்க. நாமும் இருக்கோம் இருபத்திநாலு வருசமா................ ஒரு கோவில் கட்டிக்கத் துப்பு இருக்கா? ஹூம்.............
காய்கறிகள் வச்சுக் கொஞ்சம் அலங்காரம். அதுலே காலிஃப்ளவர் உடம்பும் கருப்பு ஆலிவ் முகமும் உள்ள செம்மறி ஆடுகள் நியூஸியை நினைவுபடுத்துச்சு. மலர்ச்செடிகள் காட்சியிலே பள்ளிக்கூடங்களும் பங்கெடுத்துருந்தாங்க. டீச்சர்கள் ஒரு பக்கம் இருந்து கப்பா மாறிக்கிட்டுச் சாய் குடிக்கப் பிள்ளைகள் ஓடிஓடி வேலை செஞ்சுக்கிட்டு இருக்குதுங்க.
போன்ஸாய் பகுதியும் அட்டகாசமா இருக்கு. பொதுவா எனக்கு போன்ஸாய் கலையில் அவ்வளவா விருப்பமில்லை. இயற்கையாக் கையைக் காலை நீட்டி வளரவிடாமல் குறுக்கி வச்சு மரங்களைச் சித்திரவதை செய்யறோமோன்னு ஒரு நினைப்பு. இங்கே டிஸ்ப்ளேயில் ஏராளமான அரச, ஆலமரங்கள் இருக்கு. ஒரு வாழைமரம்கூட வச்சுருக்காங்க. குலை தள்ளுமான்னு தெரியலை! மூங்கில் காடுகளுக்கு ரெண்டாம் பரிசு. போன்ஸாய்லேயே மினியேச்சர் வகைன்னு ஒரு பகுதி. போதுண்டா சாமி...பாவம் அந்த மரங்கள்:(
இன்னொரு கூடாரத்தில் ஃபோட்டோகிராஃபி போட்டிக்கு வந்த படங்களும் வெற்றிபெற்றவைகளும். அங்கேயும் கூட்டம் அம்முது. 121 கோடியாமே! இருக்காதா பின்னே!
ஒரு ரோசாவும்........பின்னே என் ராசாவும்:-)
நாடெல்லாம் ராசா ராசான்னா......... சண்டிகரில் மட்டும் (இப்போதைக்கு) ரோசா ரோசா!!!
PIN குறிப்பு: பயணம் போகிறோம். பத்துநாளைக்குப் பதிவுகள் வராது. சலோ ஜெய்ப்பூர்!!!! அதுவரைப் பூக்களைப் பார்த்து ரசிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்க மக்கள்ஸ்.
ஒரு பொய்கூ
அரசியல்வியாதிகளின்
உடைகள் மட்டும்
வெள்ளை
Friday, April 01, 2011
ஆ...........ரோசா..........
Posted by துளசி கோபால் at 4/01/2011 04:44:00 PM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
ஆஹா ஜெய்ப்பூரா. நலமாப் போய் வாங்க.
இன்னும் பத்துப் பதிவுகள் வாசிக்க நான் ரெடி.
கோலங்க்கள், ராசா ரோசா எல்லாம் சூப்பர். அந்த நடனத்தை ஒரு படம் போடுங்கப்பா. பலே பலேன்னு நானும் சொல்லிக்கறேன்.
அந்தக் கழைக் கூத்தாடி படம் எளிமையா அருமையா இருக்கு.
தலைப்பை ஆ.ராசா ன்னு படிச்சுட்டு..........அட நீங்களுமா அரசியல்னு நினைச்சேன். இது ரோசா
:)
அழகான பகிர்வு. துருக்க சாமந்தி தான் இங்கே எல்லா இடங்களிலும் இருக்குது. ரோஜா… ரோஜா…………. என்று பாட தோன்றுகிறது. இந்த பதிவையும் முடிந்த போது படித்து பாருங்கள்.
http://kovai2delhi.blogspot.com/2011/03/blog-post_14.html
பதிவு அருமை !
உங்க ட்ரெயினி கேமரா மேன் பூவுக்கு பின்னால் நின்று போஸ் கொடுப்பவரா ?
:)
ரோஜா & ராஜா இரண்டும் அருமை. ஜெய்பூர் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .
வாங்க வல்லி.
//இன்னும் பத்துப் பதிவுகள் வாசிக்க நான் ரெடி.//
அதென்ன இப்படி குறைச்சு மதிப்பீடு!!!
ரெண்டரைநாள் பயணத்துக்கு 14 பதிவு போட்டுருக்கேன். அந்தக் கணக்கில் இது....... கூட்டிக்கழிச்சுப் பாருங்க:-))))
வாங்க கோவியாரே.
எனக்கு அரிசியல்தான் தெரியும்...ஆனாலும் விடாம ஒரு பொய்க்கூ எழுதிப்பார்த்தேன்:-)
ட்ரெய்னி கேமெராக்காரர்.....? உங்க ஊகம் சரி:-)
வாங்க கோவை2தில்லி.
ஒருவேளை இது வருசம் முழுசுமே பூப்பதால் இருக்குமோ? ஆரஞ்சே ஆரஞ்சுதான் எங்கே பார்த்தாலும்.
சுட்டிக்கு இதோ போறேன்:-)
வாங்க கொச்சு ரவி.
வருகைக்கு நன்றி.
வாங்க மலைக்கோட்டை மன்னன்.
//ரோஜா & ராஜா இரண்டும் அருமை. //
இல்லையா பின்னே:-)))))) நன்றிகள்.
பதிவுக்கு மேட்டர் கிடைக்காமையாப் போயிரும்?
எழுதிடலாம். பிரச்சனை இல்லை. படிக்க உங்களுக்குப் பொறுமை வேணும்:-))))
ரோசா, ராசா ராசாத்தியைக் காணவில்லையே.:)
படங்கள் நன்றாக இருக்கின்றன.
ரோசாவும் … பின்ன என் ராசாவும்! - ஆஹா ஆஹா! நல்ல படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி!
வாங்க மாதேவி.
ராசாத்திதான் கேமெராவுமன்:-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
நன்றி,
உங்க ஆல்பம் சூப்பரா இருக்கு. எனக்கு எங்க ஊரைப் பார்த்தமாதிரி ஒரு ஃபீலிங்ஸ்! ஹோம்சிக்!
ஒரு ரோசாவும்........பின்னே என் ராசாவும்:-)
இதுவே நல்லாத்தானே இருக்கு?
தலைப்பை ஆ.ராசா ன்னு படிச்சுட்டு..........அட நீங்களுமா அரசியல்னு நினைச்சேன். இது ரோசா
கண்ணன் இவங்க தான் உண்மையிலே அரசியல் பதிவுகள் எழுத லாயக்கு.
ஆனா எழுதமாட்டாங்க.
வாங்க ஜோதிஜி.
//ஆனா எழுதமாட்டாங்க.//
மனசுக்குள்ளே மறுகுவது போதாதா.....
நீங்க சொன்னதேதான். இங்கே அரசியல் வேறு தளத்தில் ஓடிக்கிட்டு இருக்கு.
நேர்மை கொஞ்சம்கூட இல்லாதவன்தான் இங்கே நின்னு ஜெயிக்க முடியும்.
ரோஜாக்களும் புகைப்படங்களும் அருமை. அந்த மிகப் பெரிய ரோஜா அட்டகாசமா பிரமாண்டமா இருக்குங்க.நான் கூட நிறைய தடவை யோசிசிருக்கேங்க. இங்க கல்யாணத்துக்குக் கூட இந்த ஆரஞ்சு கலர் சாம்ந்திப்பூவை உபயோகிக்கறாங்கன்னு.
புகைப்படங்கள் அருமை
//கொம்பேனியிலே சேட்டன் ஜோலி செய்யறார்போல//
:-))
//ஒரு ரோசாவும்........பின்னே என் ராசாவும்:-)
நாடெல்லாம் ராசா ராசான்னா......... சண்டிகரில் மட்டும் (இப்போதைக்கு) ரோசா ரோசா!!!//
ஆஆ கவித கவித
அற்புதம்!!!வேறென்ன சொல்ல...?
ரோசாவையும் ராசாவையும் வெச்சு பின்னீட்டீங்க போங்க!
அரசியல்வியாதிகளின் உடைகள் வெள்ளை அதுவும் எத்தனை பெரிய கரும்புள்ளி பட்டாலும் உதிர்ந்துவிடும் ஸ்டெய்ன் ப்ரூஃப் உடைகள்!!!!!
// அரசியல்வியாதிகளின்
உடைகள் மட்டும்
வெள்ளை //
ரோசாக்கள் நடுவிலே இந்த
ராசாக்கள் உள்ளம் கருமை.
அதில் குடி கொண்டிருப்பதோ
கொடுமை !!
மீ.பா.
//ஒரு ரோசாவும்........பின்னே என் ராசாவும்:-)//
ராணி எடுத்தபடம் அருமை.
எல்லா படங்களும் அருமை.
beautiful aakkam.
படங்கள் நிறைந்த அருமையான பதிவு.
மிக அற்புதமான படங்கள்,வெல்டன்
வாங்க ஜிஜி.
சாமந்திப்பூ எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்போல. விலையும் மலிவு. அதான் எங்கும் நிறைஞ்சுருக்குன்னு நினைக்கிறேன்.
வாங்க லோகன்.
நமக்கும் 'கவுஜ' எழுதவருமுன்னு கோடி காமிக்க வேணாமா:-))))))
வாங்க நானானி.
//அரசியல்வியாதிகளின் உடைகள் வெள்ளை அதுவும் எத்தனை பெரிய கரும்புள்ளி பட்டாலும் உதிர்ந்துவிடும் ஸ்டெய்ன் ப்ரூஃப் உடைகள்!!!!!//
ஹாஹா....சத்தியமான உண்மை!!!!
வாங்க மீனாட்சி அக்கா.
அ.வியாதிகளைப்பற்றிப் பேசினாலே கவிதை(கள்) ஊற்றெடுக்குதே!!!
வாங்க கோமதி அரசு.
ஆஹா...... பிடிச்சுருக்கு!!!
வாங்க வேதா.
முதல் வருகைக்கு நன்றி.
மீண்டும் வருக.
வாங்க ரத்னவேல்.
நன்றி.
நீங்க ஒரே பதிவுலே உச்சிக்குப் போயிட்டீங்க:-)))))
வாங்க கீதப்ப்ரியன்.
முதல் வருகைக்கு நன்றி.
அடிக்கடி வந்து போங்க.
Post a Comment