"கோட்டைக்குள்ளே போகணும் கோட்டைக்குள்ளே போகணுமுன்னு என்னதான் வெறியோ தெரியலை!"
"ஊர் ஊராப் போய் கோட்டை பார்க்கணுமா?"
"அதுக்கு நான் என்ன செய்ய? அங்கங்கே கோட்டைதானே இருக்கு! சுற்றுலாப் பயணிகளுக்குச் சுவாரஸியமான விஷயங்கள் பட்டியலில் அங்கங்கே எல்லா ஊர்களிலும் கோட்டையும் அரண்மனையுமாத்தான் கிடக்கு."
"ஏன் கிடக்காது? இந்த மாநிலம்தான் ஏகப்பட்ட ராஜாக்களால் வெவ்வேறு பகுதிகளில் ஆளப்பட்டதே!"
"யார் யார்? நீதான் 'சரித்திரி'யாச்சே. சொல்லேன்."
"ரொம்பத்தெரியாது....ஆனால் சுமாராத் தெரியும். ராஜ்புத், ஜாட், மார்வார், மேவார், இஸ்லாமியர்கள் எல்லாம் ஆண்ட இடம். இப்பவும் அந்த ராஜவம்சம் இருக்கு. ஒவ்வொருத்தர்கிட்டே இருந்தும் காப்பாத்திக்க அவரவர் கட்டிக்கிட்ட கோட்டைகளும் மாடமாளிகைகளும் இப்போ ... என் கால் வலிக்க வலிக்க என்னை காவு வாங்கப் பார்க்குதுன்றதுதான் நிஜம்."
"ஆனா..... நல்லா அனுபவிச்சு இருக்காங்க இந்த ராஜாக்கள். அரண்மனைகள் எல்லாம் ஒவ்வொன்னும் ஒரு அழகு இல்லே?"
"ஆளும் அம்பும் வேலை செய்யத் தயாரா நின்னா அழகா மட்டுமா இருக்கும்? ஆனா...சும்மாச் சொல்லக்கூடாது.... என்ன ஒரு கலை அழகும் நயமும் கலர்ஃபுல்லாவும் இருக்குல்லே? தண்ணி மட்டும் இருந்துட்டா...... இதுதான் டாப்லே இருக்கும். தனித்தனி ராஜாங்கத்தையெல்லாம் சேர்த்து இந்த மாநிலத்தை 1956லேதான் உருவாக்குனாங்க தெரியுமா? "
"ஆமாம்.... தமிழ்நாட்டுலே சோழ பாண்டியர்கள் ஆண்டபோது கட்டிய கோட்டை கொத்தளங்கள், அரண்மனைகள் எல்லாம் எங்கே போச்சு? யாரு கட்டுனா என்ன ஏதுன்னு விவரம் எல்லாம் அமுங்கிப்போயிருச்சே:("
"மக்கள்ஸ் கல்லுகல்லாப் பிரிச்சு எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்களோ என்னவோ:( சேரநாட்டு அரண்மனை ஒன்னுதான் இப்போ இருக்கு. நம்மாட்களுக்குச் சரித்திரத்தின் முக்கியத்துவம் தெரியலை. அதான் இப்போதைய அரசுலே பெயர் பொ(ரி)றித்தல் நடக்குதே.'"
"இதைவச்சு நிறையப்பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகி இருக்கு. அது ஒரு நல்ல விஷயம்தான். இன்னும்கூட சில ஊர்களுக்குப் போயிருக்கலாம்."
"ஒருநாளைக்கு ஒரு ஊருன்னு நீங்க போட்ட திட்டம் ரொம்பவே மோசம். அவதிஅவதின்னு ஓடவேண்டியதாப் போச்சு. குறைஞ்சபட்சம் ரெவ்வெண்டு நாள் ஒரு ஊருக்குன்னு இருந்தால்தான் கொஞ்சம் நிதானமா எல்லாத்தையும் பார்க்கலாம்."
"இதுலே உனக்கு வேற உடம்பு சரியில்லாமப் போச்சே:( "
"அடிக்கிற வெய்யிலில் சமாளிக்க முடியலை. நாக்கெல்லாம் வறண்டு போகுது. இதுலே இன்னும் வெய்யில்ஆரம்பிக்கலைன்னு வேற சொல்றாங்க அங்கத்து மக்கள்ஸ்!!! இந்த அழகுலே தவ்வா ரொட்டியும் வெஜிடபிள் கறியுமா வறக் வறக்ன்னு தின்னு ........... எல்லாத்துலேயும் ஏகப்பட்ட மசாலா வேற. எனக்கு ஆகறதில்லை. வெறுஞ்சோறும் வேகவச்ச பருப்பும் கிடைச்சுருந்தா இன்னும் நாலைஞ்சுநாள் சமாளிச்சுருப்பேன். பயணம் செய்ய தேர்ந்தெடுத்த காலமும் சரி இல்லை. பேசாம டிசம்பரில் வந்துருந்தால்......... "
தெரியும். உனக்காகத்தான் ஒரு நாள் பயணத்தை ஒதுக்கிட்டு வந்துட்டோம்.
நமக்கே இப்படின்னா...... விலங்குகள் என்ன கஷ்டப்படும்? ஊர் ஊரா நாய்கள் இருக்கும் நிலமையைப் பார்த்தால்.......ஐயோன்னு இருக்கு. ஒரு நல்ல சீஸனில் வந்து இந்த நாய்களைப்பற்றி ஒரு டாக்குமெண்ட்ரிகூட எடுக்கலாம். டைட்டில் ரெடி. நாய்ஸ் ஆஃப் இண்டியா.
"யம்மா....நீ செஞ்சாலும் செய்வே........ இப்ப என்னத்துக்கு உன்னுடைய வழக்கமான பயணக்கதை எழுதாம.....இப்படி?"
"இது வெறும் ட்ரெய்லர்தான். சன் டிவி பார்த்து ஜெய்ப்பூர், ஆம்பெர்,புஷ்கர், உதய்பூர், ஜோத்பூர், பிகானெர் சமாச்சாரங்கள் துளசிதளத்தில் முதல்முறையாக வரப்போகுதுன்னு சொல்லத்தான்............. நாலைஞ்சு கோட்டைகளைப் போட்டு விளம்பரம் செய்யத்தான் வேணும்:-) "
"நடத்து நடத்து.........இத்தனை கலாட்டாக்களுக்கிடையில் ஜெய்ப்பூரில் பதிவர் சந்திப்பு ஒன்னு நடத்திட்டே!!!"
"அதெப்படிங்க விடமுடியும்? இந்தத் தமிழ்மணம் நம்மையெல்லாம் ஒரு குடும்பமால்லே சேர்த்து வச்சுருக்கு! பாலைவனத்தில் பசுஞ்சோலைபோல, அன்புடன் அருணா வீட்டில் ஒரு பதிவர் சந்திப்பு! அவுங்க வலைப்பக்கத்தில் படங்களோடு பதிவு போட்டுட்டாங்க."
"அட! எப்போ? நான் பார்க்கலையே? "
"ஆமாம்...பார்த்துட்டாலும்..............உங்க படம்கூடப் போட்டுருக்காங்க!"
"பேச்சு சுவாரசியத்துலே பாட்டியாலா வந்துட்டோமா? இங்கே ஒரு அரண்மனை இருக்கு............அதையும் பார்த்............"
" ஆங்......கொஞ்சநாளைக்குச் சும்மா இருங்க. கோட்டை கொத்தளமுன்னு ஆரம்பிச்சாக் கொலை விழும் ஆமா!!!!!!!!!!!! "
Monday, April 11, 2011
கோட்டைன்னு இனிமே சொல்லுங்க...... கொலை விழும் ஆமா! (ராஜஸ்தான் பயணத்தொடர் 1)
Posted by துளசி கோபால் at 4/11/2011 04:12:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
அன்பின் துளசி - நான் தான் மீ த ஃப்ர்ஸ்டா - பரவால்லையே = சூப்பர் இடுகை - முன்னுரை - அறிமுகம் - அருமை - மெயின் பிக்சருக்கு வெயிட்டீங்க் - அருணா - பதிவர் சந்திப்பு - பதிவு பாத்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
aamaa - கோபால் அகராதியிலே இருந்து "கோட்டை" ன்ற சொல்லையே எடுத்துட்டாராமே - கொலை விழுமா - இது கோபால் சொல்ல வேண்டியது - நீங்க சொல்றீங்க - ம்ம்ம்ம்ம்ம் - காலம் கலி காலம்
வாங்க சீனா.
அதென்ன கோபாலுக்கே எப்பவும் சப்போர்ட்? கொஞ்சம் நியாயமா இருக்கக்கூடாதா?
கொலையை ஆம்பளைதான் செய்யணுமா? :-)))))))
ட்ரைய்லர் கலக்குதுபோங்க..
அதும் அந்த பொம்மைகளின் ஊர்வலம் ..ஹை என்ன கதைன்னு தெரியலயே?..:)
me the waiting
ம்ம்ம் கலக்குங்க!
/கோட்டைன்னு இனிமே சொல்லுங்க...... கொலை விழும் ஆமா!"/
ஆஹா கோட்டை பற்றி அருமையா கட்டுரையா வரும்னு பார்த்தா டைட்டில் மிரட்டுதே!!!
ஆஹா.. மெரட்டறீங்களே :-))))
கோட்டைன்னு...
நாங்க சொல்லலாமா:))?
எதுக்கு வம்பு? கொத்தளத்து படமெல்லாம் சூப்பர்.
சம்பாஷணையும் அருமை.
படங்களும் நடையும் சுவையாக இருந்தது. சரித்திர ஞான ஞானசூனியான எனக்கு எது எது எனப் புரியவில்லை.
வழக்கம் போல் படங்கள் நிறைந்த நல்ல பதிவு.
நகைச்சுவையுடன் செய்திகள்.
வாழ்த்துக்கள் அம்மா.
\\இது வெறும் ட்ரெய்லர்தான்\\
ம்ம்ம்...கலக்குறிங்க டீச்சர்...மெயின் படத்துக்கு வெயிட்டிங் ;)
ட்ரைலர்-ஏ இந்த கலக்கல்னா – மெயின் பிக்சர் சூப்பரா இருக்கும்! புகைப்படங்களும் பகிர்வும் அருமை. மெயின் பிக்சர்க்கு வெயிட்டிங்!!
வாங்க கயலு.
அது அங்கத்து திருவிழா. அட்டகாசமா இருந்துச்சு.
கதை பதிவில் வரும்!
வாங்க புதுகைத் தென்றல்.
ஆஹா...... விரைவில் வருகிறது!!!!!
வாங்க அன்புடன் அருணா.
நடக்கவச்சுக் காலை ஒடிச்சுட்டீங்களேப்பா உங்க ஊரில்:-)))))
கட்டுரைகள் வரப்போகுதுன்னு எச்சரிக்கிறேன்:-)))))
வாங்க அமைதிச்சாரல்.
மிரட்டலைன்னா உங்க அண்ணன் வழிக்கு வரமாட்டார்:-))))))
வாங்க ராமலக்ஷ்மி.
'டேஷ்' ன்னும் சொல்லலாம்:-)
வாங்க டொக்டர் ஐயா.
எட்டுநாள் பயணத்தில் அதது வரும்போது அததைச் சொல்லிருவேன்:-)
வாங்க ரத்னவேல்.
நன்றி நன்றி
வாங்க கோபி.
எல்லாம் சரித்திரமப்பா....சரித்திரம்.
கொஞ்சம் பொறுங்க.
வாங்க வெங்கட் நாகராஜ்.
வாரக் கணக்கா ட்ரெய்லர் ஓட்டி......அப்புறம்தானே மெயின் பிக்சர் வரும், இல்லே?
ட்ரைலெரே இந்தப் போடு போடுதே! அட்டகாசம் துளசி.!
பார்த்ததையே பார்த்தா அலுத்துதான் போகும்.
சொல்லி இருந்தால் நான் சாதமும் பருப்பும் அனுப்பி இருப்பேனேப்பா:)
சீக்கிரமே கோ....கொத்தளங்கள் தொடரட்டும்:0)
உலகம் சுற்றும் வாலிபி'யா இருப்பீங்க போலிருக்குதே...
சாரை என் கோபிக்கனும் ?
எழுத்துல மட்டும் வெயிட்டோட உடம்புல குறைச்சுட்டா,ஒரு நாளைக்கு ரெண்டு கோட்டை பாக்க முடியாது?
அப்புறம் நாங்களும் வெயிட்டான பதிவுகளா பலது படிப்போமே..
வாங்க வல்லி.
நீங்க அனுப்புவீங்கதான்.............ஆனா அந்த சூட்டுக்கு வந்து சேரும்போது 'நீடில் கான்' ஆயிருக்கும்:(
வாங்க அறிவன்.
நடையா நடந்து இப்போ 100 கிராம் இளைச்சுட்டேன்!!!
சார் தான் சூத்திரதாரி:-)
காலை உடைக்கவைக்கும் கோட்டைஎன நாங்கள் பெயர் வைத்துக்கொள்வோம்.
ஜெயப்பூர் வாழ்த்துகள்.
டீச்சர்,
முன்னுரைக்கே மூச்சு முட்டுது. மெயின் படம் பாக்க ஆசையாக உள்ளோம்.
Post a Comment