Wednesday, April 27, 2011

கோவிந்த்ஜி.......... துளசி வந்துருக்கேன். (ராஜஸ்தான் பயணத்தொடர் 5)

ரெண்டாவது கேட்டில் நுழைஞ்சோம். வெய்யில் தாக்காமல் இருக்க நெடுகப் பந்தல் போட்டு தரைவிரிப்பும் போட்டுவச்சுருக்காங்க. நமக்கெல்லாம் ரெட்கார்பெட் வரவேற்புதான்! முதல் கேட்டில் நுழைஞ்சால் ஏதோ பார்க்குக்கு வந்துட்டோமுன்னு நினைப்பீங்க. வழி நெடுக பெஞ்சுகள் போட்டு உட்கார வசதி செஞ்சுவச்சுருக்காங்க. பாதை முடியுமிடம் பெரிய ஹால் வளைவு நெளிகளுடன் வாசல்கள் வச்ச மண்டபம். அரண்மனை மாதிரி இருக்கேன்னால்.... இது அரண்மனையின் ஒரு பகுதியேதான்!
மஹாராஜா ஜெய்சிங் அவர்கள்தான் மதுரா விருந்தாவனத்தில் கோவிந்த்ஜிக்குக் கோவில் எழுப்பினாராம். அவுரங்கஸேப் ஆண்ட காலத்தில் மதுராவில் இந்துக் கோவில்கள் இடிப்பு நடந்த சமயம் விருந்தாவனத்தில் இருந்த கண்ணனைக் காப்பாத்தி இங்கே கொண்டுவந்துட்டாங்க. மஹாராஜ இரண்டாவது ஜெய்சிங் இங்கே ஆமெர் கோட்டையில் ஒரு கோவில் கட்டிக் கிருஷ்ணரைப் பிரதிஷ்டை செஞ்சார்.

இந்த சிலை ஏறக்கொறைய அஞ்சாயிரம் வருசம் பழமையானதாம். இதுக்குக் கதை ஒன்னு இருக்கணுமே? இருக்கே!

ஸ்ரீ கிருஷ்ணரின் கொள்ளுப்பேரன் வஜ்ரநாபன் கிருஷ்ணரின் மறைவுக்குப்பின் அநேக வருசங்கள் கழிச்சுப் பிறந்தவர். குடும்பத்தில் உள்ள மூத்த பெரியவர்கள் முக்கியமாக அபிமன்யுவின் மனைவி உத்திரை, கிருஷ்ணன் இப்படி இருந்தார் அப்படி இருந்தார்ன்னு சொல்லி வர்ணிக்கும்போது நமக்குத் தாத்தாவைப் பார்க்கக் கொடுத்து வைக்கலையேன்னு இவருக்கு இருக்கும். ஒரு சமயம் கேள்விப்பட்ட அழகையெல்லாம் மனசில் வச்சுக்கிட்டு ஒரு சிலையை உண்டாக்குனார். அதைப் பாட்டியிடம் காமிச்சப்ப....பாதம் மட்டும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இருந்தாப்பலே இருக்குன்னாங்க. இன்னொரு சிலை வடிச்சார். அதைப் பார்த்த பாட்டி வயிற்றுப்பகுதி மட்டும் சரியா கிருஷ்ணனுக்கு இருந்தமாதிரியே இருக்குன்னாங்க. மூணாவதா ஒரு சிலை செஞ்சு காமிச்சவுடன், முகம் இப்பச் சரியா கிருஷ்ணர் மாதிரியே இருக்குன்னாங்களாம் அந்தப் பாட்டி. முதல் சிலைக்கு ' மதனமோகனா'ன்னு பெயரும் ரெண்டாம் சிலைக்கு 'கோபிநாத்' என்ற பெயரும் மூணாவது சிலைக்கு 'கோவிந்த்' என்ற பெயரும் வச்சு வழிபட்டுக்கிட்டு இருந்தாங்க.
அன்னியர்கள் படையெடுப்பால் சிலைகள் பாதுகாப்புக்காக அங்கே இங்கேன்னு போய் இப்போ மூணுமே ராஜஸ்தானில் இருக்கு. ரெண்டு சிலைகள் ஜெய்ப்பூரிலும் ஒரு சிலை கரோலி என்ற கிராமத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு. ஒரே நாளில் சூரிய உதயம் முதல் சூரியன் அஸ்தமிக்கறதுக்குள் இந்த மூன்று கோவில்களிலும் போய் ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசிச்சால் முழுசா அவரைக் கண்ட பலன் கிடைக்குமாம். ( இப்படித்தான் நம்ம தமிழ்நாட்டுலே திருமுல்லைவாயில், திருவொற்றியூர், மேலூர் (இதுவும் சென்னைக்குப் பக்கத்தில்தான் இருக்கு. சென்னை பொன்னேரி பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ளது) இந்த மூன்று கோவில்களிலும் ஒரே நாளில் கொடி இடை, வடிவுடை, திருவுடை அம்மன்களைத் தரிசிக்கணும்னு சொல்றாங்க. இந்த மூன்று அம்மன் சிலைகளும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவைகளாம்.

ஒரு நாள் மகாராஜா இரண்டாம் ஜெய்சிங் அவர்களின் கனவில் தோன்றி அரண்மனையில் இருக்கும் சந்திர மஹலில் இருக்க விருப்பமுன்னு ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதன் பேரில் மலைமேல் ஜெய்நிவாஸ் சூரஜ் மஹல் மாளிகையில் இருந்தவரை பிங்க் சிடி அரண்மனை மாளிகை ஜெய்நிவாஸ் தோட்டத்துக்குள்ளே இருக்கும் சந்திர மஹலுக்குக் கொண்டுவந்துட்டாங்க. அரண்மனையில் இருந்து பார்த்தால் கிருஷ்ணர் தெரிவாராம்.
சும்மாச் சொல்லக்கூடாது...இந்த சந்த்ர மஹல் பளிங்குத் தூண்களோடும். சுவர் விதானம் எல்லாம் அழகான பிங்க் நிறத்தில் வெள்ளை வண்ண வேலைப்பாடோடும் அட்டகாசமா இருக்கு!
சிக்கன் குர்த்தாவில் உள்ள வேலைப்பாடுகள் போல நேர்த்தியா இருக்கு பாருங்க.
நாம் கோவிலுக்குள் போன சமயம் வெளியே பெருக்கி வாரிச் சுத்தப்படுத்திக்கிட்டு இருந்தாங்க ஒரு பெண்மணி. காலையில் கிளம்புனது முதல் கவனிச்சுக்கிட்டே இருக்கேன் அங்கங்கே துப்புரவுத் தொழிலாளிகள் பெரிய துடைப்பம் ஒன்னை ரெண்டு கையாலும் பிடிச்சுக்கிட்டுப் பெருக்கறதை. கைக்கு அடங்காமல் இம்மாம் பெரிய துடைப்பமா? பேசாம ரெண்டு மூணு இங்கிருந்தே வாங்கிக்கிட்டுப் போலமான்னு (பார்ட் ஆஃப் த ஷாப்பிங்) தோணல்.. பேச்சுக் கொடுத்தப்பத் தெரிஞ்சது தென்னங்குச்சிக்களுக்கு இடையில் ஒரு கட்டைவச்சுக் கட்டி இருக்காங்களாம்! இது இங்கத்து ஸ்டைல்!!!! ஆமாம்....இப்படிக் கைக்கு அடங்காம இருந்தால் பெருக்கும்போது கை வலிக்காதோ?
மழைத்தண்ணி வெளியேற மாடு வாய் வச்சுருக்காங்க:-) எல்லா இடத்திலும் விளக்கேத்தி அசிங்கம் பண்ணாமல் இருக்க அங்கங்கே விளக்கு ஏற்றி வைக்க ஸ்டேண்ட்
திரைபோட்டு வச்சுருக்கும் சந்நிதிக்கு முன்னால் பக்தர்கள் பலர் இங்கும் அங்குமா உக்கார்ந்திருக்காங்க. சரியா எட்டுமணிக்குத்தான் தரிசனமாம். தினமும் ஏழு முறை தரிசனம். காலையில் நாலு மாலையில் மூணு காலையில்

5 முதல் 5.30,
8 முதல் 9.15,
9.45 முதல் 10.30,
11.15 முத்ல் 11.45

கோவிலைச் சாத்திட்டாங்கன்னா.....மாலையில்

5.30 முதல் 6
6.30 முதல் 7.45
8.45 முதல் 9.15
டைம் டைமுக்குத் திரையைத் திறந்து மூடிடறாங்க. இப்போ மணி ஏழு முப்பத்தியஞ்சுதான். கொஞ்சங்கொஞ்சமா மக்கள்ஸ் வந்துக்கிட்டு இருக்காங்க. அங்கங்கே உக்கார்ந்து திரை விலகுமான்னு ஒரு ஏக்கப் பார்வையுடன் சிலர் பஜன் பாடிக்கிட்டு இருக்காங்க. சந்நிதி ஒரு மேடைமேல் இருக்கு.


கோவிலோட வலைப்பக்கத்தில் ஆரத்தி எடுப்பதை வீடியோவாப் போட்டுருக்காங்க. அப்படியே கிருஷ்ணனையும் பார்த்துக்குங்க. நானும் இந்த ஆரத்தியை இப்படித்தான் இதைத்தேடும்போது பார்த்தேன்.
பக்கவாட்டில் இருக்கும் ஒரு வழியை எட்டிப்பார்த்தால் புழக்கடை தெரியுது. அந்த வாசலுக்குப்போனால் கண்ணுக்கெதிரா இருக்கும் மலையின் மேல் ஒரு கோட்டை! பெரிய முற்றத்தில் செயற்கை நீரூற்றுக்கான ஏற்பாடு. ஆனால் சொட்டுத்தண்ணி இல்லை. புறாக்கள் எக்கச்சக்கமா தரையே தெரியாத அளவுக்கு நிறைவா உக்காந்துருக்குக.
தூரத்தே மலைக்கோட்டை!
இந்தப்பக்க வாசலில் உள்ளே போனால்.... ரசோயி. பயந்துறாதீங்க மடப்பள்ளிதான்.! பெரிய பெரிய ட்ரேக்களில் என்னவோ இனிப்புகள் செஞ்சு வச்சுருக்காங்க. கிளிக்குனதும் இங்கே க்ளிக்கக்கூடாதுன்னாங்க. ஏன்? கெமெராவுக்கு கட்டணம் கட்டணுமாம். சரின்னுட்டு கவுண்ட்டருக்குப்போனால் அது சாத்திக் கிடக்கு. சும்மாச் சுத்திச்சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம். சந்நிதிக்கு நேரா சின்ன கம்பித்தடுப்புக்கு அப்பால் பெரிய தோட்டம், நெடுக செயற்கை நீரூற்றுக்கான ஏற்பாடுகள். அது முடிவடையும் இடத்தில் அரண்மனைக் கட்டிடம்.
கம்பித்தடுப்புக்கு அப்பால்
மயிலி

மயிலன்


தோட்டத்தில் மயில் நடமாட்டம் ஏராளம். பெண்கள் உலாத்திக்கிட்டு இருக்க, ஆண்கள் மட்டும் நீளமான தோகையை மூக்கால் நீவிவிட்டுக்கிட்டு 'கொஞ்சம் சீவிவிட்டால் என்ன'?ன்னு கேக்குதுங்க.
கம்பி கேட்டுக்குப் பக்கத்தில் ரெண்டு முயல் குட்டிகள் மஞ்சள் சட்டையில். சின்னது சிரிச்ச முகத்தோடும் பெருசு காலங்கார்த்தாலே இங்கே கூட்டிட்டு வந்த குடும்பத்தை நொந்துக்கும் முகத்தோடும்!

காக்கைன்னா கரைந்துண்ண வேணாமோ? அதென்ன தனியா கபளீகரம்.......


இன்னும் கால்மணி காத்திருக்கணும் திரை விலக. அவ்ளோ நேரம் இருக்கமுடியாது. போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சு ரெடியாகணுமுன்னு இவர் குதிக்கிறார். சரி போயிட்டு கைடு கூட வரலாமுன்னு கிளம்பிட்டோம். ஆட்டோகாரர் சொல்றார் இன்னொரு பழைய கோவில் இருக்கு. அங்கே கொண்டு போறேன்னு. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க விடாதுன்றதுபோல...... வேணாம். நேரமாயிருச்சு. ஹொட்டேலுக்குக் கொண்டு போங்கன்றார் கோபால். தன்னோட செல் நம்பரைக் கொடுத்து இங்கேதான் (பேப்பர் படிச்சுக்கிட்டு?) இருப்பேன். வேற இடங்கள் சுத்திப் பார்க்கணுமுன்னா கூப்புடுங்கன்னார் ஆட்டோக்காரர்.

ஹொட்டேல் டைனிங் ரூமில் சுமாரான கூட்டம். பஃபே ஸ்டைல் ப்ரேக்ஃபாஸ்ட். பரவாயில்லை. நல்லாவே இருந்துச்சு. இட்லி சாம்பார் வச்சுருந்தாங்க. சின்னச்சின்ன ஊத்தப்பங்களும். சவுத் இண்டியன் வகைக்கு!

தொடரும்................:-)

19 comments:

said...

//இது இங்கத்து ஸ்டைல்!!!! ஆமாம்....இப்படிக் கைக்கு அடங்காம இருந்தால் பெருக்கும்போது கை வலிக்காதோ?//

துடப்பம் மேட்டர் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வகைதான், சென்னையில் சாலை பணியாளர்கள் இரண்டு கையிலும் இரண்டு வச்சிப் பெருக்குவாங்க, சிங்கையில் நீளமான ஒட்டடைக் குச்சியில் சொருகி கைப்பிடிப் போலப் பயன்படுத்திப் பெருக்குவாங்க. இவை பெரும்பாலும் தென்னை குச்சி துடப்பமாகத்தான் இருக்கும், இப்ப ப்ளாஸ்டிக்கில் கூட கடைகளில் கிடைக்குது

said...

இவ்ளோதூரம் சுத்தியும் காலே வலிக்கலைங்க.. எங்களுக்கு :-))

said...

\\ரெண்டாம் சிலைக்கு 'கோபிநாத்' என்ற பெயரும் \\

ஆகா!!! இப்படி கூட ஒரு பெயர் காரணம் இருக்கா எனக்கு ! ;) ரைட்டு டீச்சர் ;)

said...

மயிலன் மயிலி, முயல்க்குட்டிகள் :))))

//தன்னோட செல் நம்பரைக் கொடுத்து இங்கேதான் (பேப்பர் படிச்சுக்கிட்டு?) இருப்பேன். //
ஹஹாஹா..

அந்த துடைப்பம் இலங்கைல என் அப்பாவோட கிராமத்தில இருக்குது டீச்சர்.. ஆனா அவ்ளோ பெருசா இல்லாம கைக்கு அடக்கமா இருக்கும்.. குனிஞ்சு பெருக்கிறது கொஞ்சம் கஷ்டம். ஆனா மண் தரை உள்ள வீட்டை பெருக்க இலகுவான கண்டுபிடிப்பு :)

அவங்களுக்கு பழிகிப் போன வேலை. நான் போற சமயமெல்லாம் ஆர்வக் கோளாறில பெருக்கி கைல கொப்பளம் வந்திடும் :))

said...

அந்த லிங்க் எனக்கு ஓப்பனாகலை :(

said...

வாங்க கோவியாரே.

இந்தத் தென்னங்குச்சித் துடைப்பம் வேணுமுன்னு முந்தியெல்லாம் ஃபிஜியில் இருந்து வரவழைப்போம். இப்ப என்னன்னா சீனர்கள் அருளால் நியூஸியிலேயே கிடைக்குது:-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆஹா.... கொடுத்துவச்சவுங்க நீங்க!
எனக்கு இந்தப் பதிவு எழுதும்போதுகூட கால் வலிக்குது:-)))))

said...

வாங்க கோபி.

சாக்ஷாத் கண்ணனே! திருவிளையாடல் புரியாமல் இருந்தால் சரி:-)))

எங்க வீட்டிலும் ரெண்டு கோபிநாத் இருக்காங்க.

said...

வாங்க சுசி.

தென்னந்துடைப்பம் பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யலாம் போல இருக்கேப்பா!!!!!

லிங்கு வேலை செய்யலையா???? எனக்கு வேலை செய்யுதே!

உங்களுக்காக இப்போ வேற ஒன்னு இணைச்சுருக்கேன் பாருங்க.

said...

மயிலன், மயிலி… :) நல்ல கற்பனை..

தெவிட்டாத தேனின்பம் உங்கள் பகிர்வுகளில். தொடரட்டும்.. நாங்களும் பின் தொடர்கிறோம் உங்களுடனேயே..

said...

துளசி,சாரல் சொல்வது நாற்காலியில் உட்கார்ந்து எல்லா இடங்களையும் பார்க்கிறோம். உங்களுக்குக் கோடி புண்ணியம்.
மயில்களும் கமெண்ட்களும் பஹுத் அச்சா.:)
கதையும் சூப்பர். மூணு கிருஷ்ணர்களா.!!
கடைசிப் படம் முயலும் மயிலுமா. இல்லை முயலுக்குத் தோகையா :)

said...

sari thulasiakka,
jaipur paathaachu.appuram enga poroam?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்கள் தொடர்ந்த ஆதரவுதான் நம்ம வண்டி இன்னும் ஓடிக்கிட்டு இருக்க ஒரு காரணம்.

நன்றிங்க.

said...

வாங்க வல்லி.

அதுவா??????? நம்மைப்பீடிச்சுக்கிட்டு இருப்பவரின் 'கார்':-)

said...

வாங்க தேனிக்காரி.

என்ன இவ்வளோ அவசரம்? காலில் கஞ்சி கொட்டிக்கிட்டீங்களா?

இப்போதான் ஜெய்ப்பூரையே சுத்த ஆரம்பிச்சுருக்கு. இதுக்கே இன்னும் ஏழெட்டு பதிவு கேரண்டீன்னும் சொல்லலாம்:-)))))))

said...

தரிசனம் கிடைச்சது டீச்சர்..

ரொம்ப நன்றி..

:))

said...

சந்த்ர மஹல், மயிலு கண்ணைக் கட்டுது.

said...

சுசி,

கண்ணன் ஒய்யாரமா நிக்கிறார் இல்லே:-))))

said...

வாங்க மாதேவி.

நல்ல ரசனையோடு கட்டப்பட்டிருக்கும் மாளிகைகள், தோட்டங்கள் எல்லாம் அழகோ அழகுதான்ப்பா!