Thursday, April 02, 2009

சுத்திச் சுத்தி வந்தோம்ங்க......(2009 பயணம்: பகுதி 6)

நவநாகரிமா அட்டகாசமா இருந்த உணவு விடுதி ( பெயரைக் கவனிக்க மறந்துட்டேன். ரெஸ்ட் ரூம் சூப்பர்) இங்கே வெறும் வட இந்திய உணவு மட்டுமே இருக்காம். அடடா..... நம்ம வினோதுக்குத் தென்னிந்திய சாப்பாடுதான் வேணுமாம். முந்தி இங்கே கிடைச்சதேன்னு 'பேரர்'கிட்டேக் கேட்டார். அப்போ எஸ். இப்போ நோ. உக்கார்ந்தவங்க எந்திருச்சுட்டோம். கோபால்தான் நமக்குத் தண்ணீர் எல்லாம் கொண்டுவந்து வச்சுட்டாங்களேன்னுட்டு ஒரு அம்பதைத் தட்டுலே வச்சுட்டு வந்துட்டார்.

ஆறே கிலோ மீட்டர்தான். பேசாம நம்ம ரிஸார்ட்டுலேயே போய்ச் சாப்புட்டுக்கலாம். வெயிலாவும் இருக்கு. கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு மாலை நாலுக்குக் கிளம்பி மிச்சம் இருக்கும் கோயில்களைப் பார்த்தால் ஆச்சு. நம்ம பக்கம் ஊர்சுத்திப் பார்க்கறதுன்னா திரும்பத் திரும்பக் கோயில்களுக்குப் போறதுதான். தெருத்தெருவாச் சுத்திப் பார்க்க வேற ஒன்னும் இல்லைதானே? சுற்றுலான்னாலே அது ஆன்மீகப்பயணம்!
நம்ம 'ஆனந்தத்தில்' அருமையான தென்னிந்தியச் சாப்பாடு 'அவுங்களுக்கு'க் கிடைச்சது. 'வீட்டுக்குப்போய்' கோபால் கட்டையைக் கிடத்திட்டார். நாளைக்கு இங்கே இருந்து கிளம்பறோமே........'பிரிவுத் துயரில்' நான் மட்டும் கொஞ்சம் சுத்திக்கிட்டு இருந்தேன். துளசி மாடமும், கிணறும், யானைமாடுமா அருமையோ அருமை. டெர்ரகோட்டாக் காளைக்கேத்த மாதிரிக் குட்டியான ஒரு வில்வண்டி




கிராமத்தில் ஒரு அறையில் பட்டு நெசவு. திருபுவனம் பட்டுப்புடவையாம். விலையும் காஞ்சியைவிடக் கொள்ளை மலிவு. கனம் இல்லாத புடவைகள். இப்போது தறியில் உள்ள புடவை 2800 ரூபாய் என்று நெசவாளர் சொன்னார். மகன், கும்பகோணத்தில் புடவைக் கடையில் வேலையாம். இங்கே நெய்த புடவைகளை அவர்மூலம் விற்க முடிகிறதாம். ஒரு புடவை நெய்ய மூன்று வாரம் ஆகுது. வயசாச்சு. முந்திமாதிரி வேகம் இல்லைன்னு வருத்தப்பட்டார். கிராமத்தில் தங்க வர்றவங்களுக்காக, இந்தத் தறியோடுள்ள இடத்தை இவருக்குப் பயன்படுத்திக்கக் கொடுத்துருக்கு நிர்வாகம்.

இன்னொரு இடம் மண் பானைகள் செய்யும் கலைக்கூடமா இருக்கு. பார்த்தாலே தெரியுது நாளாகி இருக்கும் பயன்படுத்தின்னு(-: கிராமத்துக்குன்னு ஒரு நாய் கூட இருக்குங்க. நாந்தான் அதுக்கு வெள்ளச்சு பெயர் வச்சேன். பெயர் இல்லேன்னா எனக்குத் தாங்காது. எல்லார்கிட்டேயும் பேரைக்கேட்டே ஆகணும் எனக்கு:-) நம்ம வெள்ளச்சுக்குவுக்கும் இங்கே இருக்கும் கூஸ் வாத்து(அவளும் வெள்ளச்சிதான்)ஆகாது போல. அவனைத் துரத்துக்கிட்டே கழுத்தை ஆட்டிக்கிட்டுக் கொத்தப்போறாள் இவ. அவனோ.... ஜகா வாங்குனா அது தன்மானத்துலே விழுந்த அடின்னு எங்கியோ பார்வையை ஓடவிட்டுக்கிட்டு அசையாமல் நிக்கிறான். உள்ளுக்குள்ளே ஒரு அலர்ட்னஸ் இருக்குன்னு கண்ணு சொல்லுது:-))))
கோபாலும் ஒரு குட்டித்தூக்கம் போட்டுட்டு, என்னைத் தேடிக்கிட்டு வந்துட்டார். ரெண்டுபேருமா இன்னொரு சுத்து சுத்திட்டுக் கிளம்பிடோம்.முதலில் திருவலஞ்சுழி. கோயில்
நுழைவாசலுக்கு முன்னே ரெண்டு பக்கமும் அழகான சந்நிதிகள். வலப்பக்கத்துப் புள்ளையாருக்கு முன்னால் அழகான ஒரு குளம். தாமரைகளோடு பளிச்சுன்னு இருக்கு.
திருவலஞ்சுழி, வெள்ளைப்பிள்ளையார். ஸ்வேத விநாயகர். கடல்நுரை (பாற்கடலைக் கடைஞ்சப்ப வந்த நுரை)யால் செஞ்சாங்களாம்,தேவர்கள்.
விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகனை வழிபடாமல் பாற்கடலைக் கடைஞ்சுக்கிட்டு இருந்துருக்கு தேவ அசுரகூட்டம். அமிர்தம் வரும் அடையாளமே இல்லையாம். போதாக்குறைக்கு ஆலகால விஷம் வேற வந்துருக்கு. (அதைத்தான் விழுங்கிவச்சார் சிவன். பார்வதி தேவி பயந்துபோய் அவர் தொண்டையை,'கப்'னு பிடிச்சதால் அவர் நீலகண்டர் ஆனாருன்னு போகுது கதை.) அப்போதான், 'அச்சச்சோ... புள்ளையார் சுழி போடலை'ன்னு தோணியிருக்கு. பாற்கடலில் நின்னுக்கிட்டுப் புள்ளையார் பிடிக்க மண்ணுக்கு எங்கே போறதுன்னு, கடையும்போது நுரைச்சுக்கிட்டு வந்ததையே எடுத்துப் பிள்ளையார் பிடிச்சு வச்சுட்டாங்களாம். அவர் தான் இவர்!!!
ஒரு அடி உயரம் இருக்கலாம். ஒரு மாடத்துக்குள்ளே இருந்தார். நுரை கரைஞ்சுருமுன்னு அபிஷேகம் எல்லாம் கிடையாதாம்.பிள்ளையாருக்கு வலது பக்கம் தும்பிக்கை சுழிச்சு இருக்கான்னு கவனிக்க மறந்துட்டேன். ஆனால் இங்கே காவிரி வலதுபக்கமாத் திரும்பிக் கோயிலைச் சுத்திக்கிட்டுப் போகுதுன்னு இந்த ஊருக்கு வலஞ்சுழின்னு பெயர் வந்துருக்காம். அழகான கோயில். உள்ளே நுழைஞ்சுக் கடைசியில் போய் வலப்பக்கம் திரும்பினா இன்னொரு பெரிய கோயில் இருக்கு. வலஞ்சுழிநாதர், சிவலிங்க வடிவில். பிரமாண்டமான கோயில். சிற்பம் செதுக்கியக் கல்தூண்களும் மண்டபங்களுமா..... ஹைய்யோ!!!வெளியே இருந்து பார்த்தால் உள்ளே இப்படி ஒரு பிரமாண்டம் ஒளிஞ்சுருக்குன்னே தெரியாது!!!! குருக்களாக இருந்த இளைஞர் போட்டுருந்த வைரக் கடுக்கண் (கொட்டைப்பாக்கு சைஸ்) என் கண்ணைப் பறிச்சது என்னவோ நிஜம்.

துர்க்கையைப் பார்க்கப் பட்டீஸ்வரம் போனோம். எலுமிச்சம்பழ மாலைகள் போட்டு அலங்கரிச்சு இருந்தாங்க. பிரசாதமா ரெண்டு எலுமிச்சம்பழம் கிடைச்சது. கோயில் வாசலுக்கு வெளியே இருக்கும் கடைகளில் இந்த எலுமிச்சம்பழம் மாலைகள் முக்கிய விற்பனை. பாவம் துர்க்கா.... கனமான கனமாச்சே, இந்த மாலைகள்னு இருந்துச்சு எனக்கு. சந்நிதித் தெரு வெளியே வந்து சாலையில் சேருமிடத்தில் பெரியார் சிலை.
கடவுள் நம்பிக்கைக்கு எதிராப் பிரச்சாரம் செய்யறோமுன்னு நம்பிக்கிட்டு இப்படி ஒரு தண்டனையை அவருக்குக் கொடுக்கலாமா? நாமாவது அங்கே கோயிலைத் தேடிப் போனால்தான் கோபுரதரிசனம். சாமியே இல்லைன்னு சொன்னவர்.... பாவம், ஒவ்வொருநொடியும் கோவிலையும் கோபுரத்தையும் தரிசிக்கும்படி நிக்கவைக்கப்பட்டுருக்கார். அச்சச்சோ.........

மகாமகக் குளத்துக்குப் படை எடுத்தோம். சுற்றிவர கம்பி வேலி போட்டு அங்கங்கே மட்டும் வாசலாட்டம் திறந்து வச்சுருக்காங்க. ஒரு லட்சம் பேர் கூடினாங்க, ரெண்டு லட்சம் பேர் குளிச்சாங்கன்னு ( கூட்ட நெரிசலில் நிறையப்பேர் 'மேலே' போனாங்கவும் சேர்த்தி) இதைப் பற்றிய சேதிகளும், மனுசத்தலைகளா நெரியும் படங்களைப் பார்த்ததும் மெய்தான் போல. பிரமாண்டமான குளம். ரெண்டு லட்சம் பேர் ஈஸியா நிக்கமுடியும்! குளக்கதை அநேகமா எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும். திருப்பாற்கடலைக் கடைஞ்சு அமுதம் எடுத்துப் பறிமாறி, தின்னு முடிச்சபிறகு அமுதம் இருந்தக் குடத்தைக் கடாசுனப்போ, அதுலே இருந்து தெரிச்சு விழுந்த அமிர்த்தத்தின் ஒருசில துளிகள் இங்கே வந்து விழுந்துச்சுன்னு ஐதீகம்.

இதுலே ஒன்னு கவனிக்கணும். இந்தப் பக்கத்துக் கோயில்களுக்கும் இந்தத் திருப்பாற்கடல் கடைஞ்ச சமாச்சாரத்துக்கும் எதாவது ஒரு தொடர்பு இருக்கு. கோயில் தல வரலாறு எல்லாமே அந்தச் சம்பவத்தைத் தொட்டுக்கிட்டே, சம்பந்தத்தோடு இருக்குங்க. நெசமாவே நடந்ததா இல்லை கற்பனைக் கதை கட்டிவிட்டாங்களான்னு எதேதோ எண்ணங்கள் ஆத்திகக்குழுக்களுக்கும் நாத்திகக்குழுக்களுக்கும் கருத்து வேற்றுமை இருந்தாலும்..... கடவுள் என்ற ஒன்றே நம்புனாத்தான்.

தெய்வம் என்றால் அது தெய்வம்
சிலை என்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை

அந்தக்காலத்துக் ஆத்திக & நாத்திக அன்பர்களை விடுங்க. சமகாலத்துக் கவிஞர், கவி அரசர் எவ்வளோ எளிமையாச் சொல்லிவச்சுருக்காரு பாருங்க.

இந்த குளத்துக்கு இன்னொரு 'கதை'யும் உண்டு, பிரளயம் வருதுன்னு தெரிஞ்சதும், பிரம்மன் ஒரு கும்பத்துலே அமிர்தமும், வேதமும், வித்துக்களும் வச்சு அதை பிரளய வெள்ளத்துலே மிதக்க விட்டுட்டாராம்.
அது கடைசியா வந்து நின்ன இடம் இந்தக் கும்பகோணம்தான்(பெயர்க்காரணம் வந்துருச்சு) சிவபெருமான், தன் அம்பாலே கும்பத்தை உடைச்சுட்டார். இதுலே இருந்து வெளியே விழுந்த அமிர்தம்தான் மகாமகக்குளத்துலே கலந்துருச்சு. ( நோவாஸ் ஆர்க் நினைவுக்கு வந்து தொலைக்குதே)
குளக்கரையைச் சுற்றி நாலு பக்கமும் பதினாறு சந்நிதிகள் கட்டிவச்சுருக்காங்க. அதிலெல்லாம் சிவலிங்கம் பிரதிஷ்டை ஆகி இருக்கு. இவைகள் எல்லாம் பதினாறாம் நூற்றாண்டில் தஞ்சையை நாயக்க மன்னர்கள் ஆண்டகாலத்தில் கட்டியதாம். நல்ல பராமரிப்பு. எல்லாம் பளிச்ன்னு இருக்கு. (எப்படியும் பனிரெண்டு வருசத்துக்கு ஒரு முறையாவது கும்பமேளா விழா வரும் சமயத்துலே சீரமைச்சு இருப்பாங்கதானே?)

புராணக் கதைகளைக் கதைகள்ன்னே வச்சுக்கிட்டாலும் எப்படி ஒன்னுக்கொன்னு கோர்வையா எழுதிவச்சுருக்காங்கன்னு நினைச்சாலே அதிசயமாத்தான் இருக்கு. இப்போ இருப்பதுபோல் போக்குவரத்துக்கான சாலைகள், செய்தித் தொடர்புக்கான சாதனங்கள் ஒன்னுமே இல்லாத காலக்கட்டத்தில் எப்படி.....இப்படி? ரூம் போட்டா யோசிச்சு இருப்பாங்க?இதுலே இந்த அதிசயத்துலே ராமாயணமும் மகாபாரதமும் அடக்கம். பலமுறை இதைப் பற்றியே நான் யோசிச்சுக்கிட்டு இருக்கும் பழக்கமும் உண்டு.

கோபால் & வினோத்
குளக்கரையின் படிக்கட்டுகளில் அங்கங்கே பலர். சிலர் ஒற்றையாளாக வந்து உக்கார்ந்து ஏதோ சிந்தனையில் மூழ்கி இருந்தாங்க. அவரவர் கவலை அவரவருக்கு. நாங்க நின்ன பகுதியில் குளத்துக்கு நேர் எதிரே ஒரு பழையகால அரண்மனைக் கட்டிடம் தீப்பிடிச்சு எரிஞ்சுக் கருப்பா நிக்குது. ஜன்னல்கள் எல்லாம் கொள்ளை அழகு. உப்பரிகை மாடங்களா இருக்கு. பழைய மாதிரியே இதைப் புதுப்பிச்சாங்கன்னா...... அட்டகாசமா இருக்கும். சரித்திரச் சம்பந்தமுள்ளதோட அருமை, நம்ம மக்களுக்கு எப்பத்தான் தெரியப்போதோ?
தலைவலிக்குதேன்னு இதுக்குப் பக்கத்தில் இருந்த 'ராமா கபே'க்குப் போய் ஒரு காஃபி குடிச்சோம். வினோத், காஃபி குடிக்கும் பழக்கம் இல்லையாம். அவருக்கு ஒரு பால். காஃபி ரொம்ப சுமார் ரகம். சுக்குக் காபி 10 ரூபாய்ன்னு விலைப்பட்டியல் போர்டில் இருந்துச்சு. பேசாம அந்தச் சுக்குக் காபியைக் குடிச்சுருக்கலாம். காப்பிக்கொட்டை விலை மலிஞ்சுபோச்சா? காஃபி விலை வெறும் ஏழு ரூபாய்தான்!

தொடரும்...:-)

33 comments:

said...

ரீச்சர் உங்க இந்த கும்பகோணம் பதிவை படிக்க படிக்க ஆனந்த ழுகையா வருது! அந்த தீ பிடிச்ச மாதிரி இருக்கும் கட்டிடத்தில் தான் நானும் புதுக்கோட்டஒ சாயிமாதாபிருந்தா தேஎவி அம்மையார் ( திலகவதியார் திரூவருள் ஆதீன முதல் பென் பீடாதிபதி) பின்ன என் அப்பாவும். அப்ப ஜெயலலிதா குளிச்ச போது ஆல் இண்டியா ரேடியோவுக்கு அந்த அம்மா நேரடி வர்ணனை
அப்ப அந்த மாடி கைப்பிடி பிசுகிட்டு விழுந்துச்சு. அதிலே ஏற்பட்ட தள்ளு முள்ளு தான்
பின்ன பார்த்தா என் காலுக்கு கீழே ஒரே பிணம் என்னத்த சொல்ல????

said...

//மகன், கும்பகோணத்தில் புடவைக் கடையில் வேலையாம். இங்கே நெய்த புடவைகளை அவர்மூலம் விற்க முடிகிறதாம். ஒரு புடவை நெய்ய மூன்று வாரம் ஆகுது. வயசாச்சு. முந்திமாதிரி வேகம் இல்லைன்னு வருத்தப்பட்டார்//

நீங்க விவரித்த விதம் நல்லா இருக்கு

//சாமியே இல்லைன்னு சொன்னவர்.... பாவம், ஒவ்வொருநொடியும் கோவிலையும் கோபுரத்தையும் தரிசிக்கும்படி நிக்கவைக்கப்பட்டுருக்கார். அச்சச்சோ.........//

ஹி ஹி ஹி

//பிரமாண்டமான குளம். ரெண்டு லட்சம் பேர் ஈஸியா நிக்கமுடியும்//

இது வரை பார்த்தது இல்லை ..நீங்கள் கூறியதை கேட்ட பிறகு பார்க்க வேண்டும் போல் உள்ளது

said...

//கடவுள் நம்பிக்கைக்கு எதிராப் பிரச்சாரம் செய்யறோமுன்னு நம்பிக்கிட்டு இப்படி ஒரு தண்டனையை அவருக்குக் கொடுக்கலாமா? நாமாவது அங்கே கோயிலைத் தேடிப் போனால்தான் கோபுரதரிசனம். சாமியே இல்லைன்னு சொன்னவர்.... பாவம், ஒவ்வொருநொடியும் கோவிலையும் கோபுரத்தையும் தரிசிக்கும்படி நிக்கவைக்கப்பட்டுருக்கார்.
அச்சச்சோ.........
//

:-)))))

said...

ம்ம்ம்..யப்பா..!!!!

said...

சுறுசுறுப்பின் மறு பெயர் துளசி - சுற்றிச் சுற்றி வந்து அத்தனையும் கண்டு - மகிழ்ந்து - குறிப்பெதுவும் எடுக்காமலேயே - தாயகம் ( ??) திரும்பிய உடனே பதிவு - ஒன்று விடாமல் - நினைவில் இருந்து தரவிறக்கம்.

நல்வாழ்த்துகள்

said...

ரீச்சர்..

கும்பகோணம் பக்கம் இன்னமும் போனதில்லை.. இனிமேதான் போகப் போறேன்..

எல்லாம் உங்க பதிவைப் படிச்சிட்டு வர்ற வேகம்தான்..!

இப்படியெல்லாம் தூண்டிவிடுற மாதிரி எழுதக் கூடாது.. இந்தியால தேசிய பாதுகாப்புச் சட்டத்துல உள்ள தூக்கிப் போட்ருவாங்க..

said...

enna teacher firday class aa thursday prepone pannitengaa..nalla vaelai naan vandhu aetti parthaen illati,innikku classum illa miss agi erukkum.

romba romba arumai..teacher..thalavaralaaru pathi kaettu kitae erukalaam pola.

said...

துளசி போட்டொவெல்லாம் நல்லா இருக்கு. அதுவும் வெல்லச்சியும் வெள்ளச்சுவும் படு ஸ்வீட்.
குறும்பு அந்த சிலை வர்ணனை.அச்சச்சோ அழகு:)

கையோட ஒரு பெர்கோலேட்டரும், பொடியும் வாங்கிட்டுப் போங்க இனிமே. நல்ல காப்பியாவது குடிக்கலாம். சுத்தலோ சுத்தல். இதில சாப்பாடும் நேர இல்ல.
ஞாபகமா எழுதறீங்களே. அதுக்கே வணக்கம் சொல்லணும்..

said...

வாங்க அபி அப்பா.

அடக்கடவுளே..... துன்பியல் சம்பவத்தைத் தூண்டிவிட்டுட்டேனா (-:

அதென்ன எல்லாரும் குளிச்சாங்க குளிச்சாங்கன்னே சொல்றீங்க?

புண்ணியத்தலக் குளத்தில் வெறும் முங்கி எழுந்திருப்பதுதானே நடக்குது.

said...

வாங்க கிரி.

எத்தனையோ நாடுகளில் பயணம் செஞ்சாச்சு. ஆனா இன்னும் நம்ம நாட்டை முழுசாப் பார்க்கலையேப்பா.

இனிமேல் இப்படி இல்லாம நாம் ஊருக்குப் போய்வரும்போது அக்கம் பக்கம், ஒன்னு ரெண்டுன்னு பார்த்துட்டு வரணும்

said...

வாங்க 'டொன்' லீ.

சிரிப்பாத்தான் கிடக்குல்லே:-)

said...

வாங்க கோபி.

எனி உ.கு?

said...

வாங்க சீனா.

இப்ப யானைக்கு(ம்) வயசாகிக்கிட்டு வருது. ஞாபகசக்திக் கொஞ்சம் குறைவுதான்(-:

முந்தாநாள் என்ன குழம்புன்னு நினைவில்லை பாருங்களேன்:-)

said...

வாங்க உண்மைத் தமிழன்.

பிடிச்சு உள்ளே போட்டால் , கும்மோணத்துச் சிறையிலே போடச்சொல்றேன்.

நீங்க பார்க்க வரும்போது ஊரையும் ஒரு சுத்துச் சுத்திக்கலாம்:-)

said...

வாங்க தாமரை.

டீச்சருன்னா மறுநாள் எடுக்கும் பாடத்துக்குய் 'நோட்ஸ் ஆஃப் லெஸ்ஸன்' எழுதிவச்சுருக்கணும். அதுதான் முறை.

அதேதான் பதிவுலக வகுப்பிலும். வெளியிடும் முதல் நாள் எல்லாத்தையும் 'ட்ராஃட் லே போட்டு வைப்பேன். அதான் வெள்ளிக்கிழமைப் பதிவு வியாழன் தேதி காட்டுது.

said...

வாங்க வல்லி.

சரியாப்போச்சு. இனி ஊர் ஊர்லே சமைக்கணுமா?

கிடைப்பது போதுமுன்னு இருக்கேன்ப்பா. இல்லேன்னா.......

பூனை வளர்த்த சாமியார் கதை ஆயிரும்:-)

said...

குளிச்சாங்க அதனால் குளிச்சாங்கன்னு தான் சொல்லனும்.. ஏன்னா அவங்க முங்கி எந்திரிக்கல..தனியா இடம் செய்து அங்க குடம் கொண்டுபோய் ஊத்தி அபிஷேகம் போல குளிச்சாங்கன்னு தான் கேள்விப்பட்டேன்..

said...

ஆமா அந்த வான்கோழிக்கு என்ன பேர் வச்சீங்க டீச்சர்

said...

வாங்கப்பா கயலு.

சோப், ஷாம்பூ எல்லாம் போட்டுக் குளிக்கறதுதான் குளியலுன்னு தப்பா நினைச்சுட்டேன்.

குடம்குடமாத் தண்ணீர் ஊத்துனாலும் குளியல்தானா?

அப்ப சாமிக்கு தினம் குளியலுன்னு சொல்லுங்க!!!!!

said...

வாங்க தீப்பெட்டி.

என்னப்பா பேரு இது? போகட்டும்.

வகுப்புலே புதுசா இருக்கீங்களே? ஓசைப்படாமல் வந்துருக்கீங்க போல!!!

நலமா?


வான்கோழி, அசையாம உக்காந்த இடத்துலே இருந்தே கழுத்தை ஆட்டிக்கிட்டு இருந்துச்சு. (மரியாதை கெட்டது)

பேர் யோசிக்கறதுக்கே நேரமில்லாமப்போச்சு.

வேணுமுன்னா இப்பப் பேர் வச்சால் ஆச்சு. நீங்கதான் ஒரு பேர் சொல்லுங்க.

said...

கிணறும் மயிலும்! பார்க்கவே வித்தியாசமா இருக்கு.

குளியலுக்கு பதிலா ஜலக்ரீடை வெச்சுக்கலாமா டீச்சர்?

said...

//
காப்பிக்கொட்டை விலை மலிஞ்சுபோச்சா? காஃபி விலை வெறும் ஏழு ரூபாய்தான்!
//
இப்படி ஊருக்கு வரவங்க எல்லாம் உசுப்பேத்திவிட்டுதான் ஹோட்டலுல வெலையெல்லாம் அதிகமாக்கிடறாங்கப்பா

said...

//
அதிலே ஏற்பட்ட தள்ளு முள்ளு தான்
பின்ன பார்த்தா என் காலுக்கு கீழே ஒரே பிணம் என்னத்த சொல்ல????
//
@ அபி அப்பா
கும்பகோணத்துக்கு இழப்பின் வலியை உணர்த்திய ரெண்டு சம்பவங்கள், மகாமக விபத்து, பள்ளி தீ விபத்து..
இவ்வளவு நடந்தும் அடுத்த மகாமகத்துகும் லட்சக்கணக்குலதானுங்க ஜனங்க வந்தாங்க.

@ துளசி டீச்சர்
பெரியார் மட்டுமில்லை நிறையா பெரியமனுஷங்க சொன்னதெல்லாம் நம்மாளுங்க தப்பாத்தான் புரிஞ்சுகிட்டிருக்காங்க

said...

பிரம்மன் மேலெ டீச்சருக்கு என்ன கோபம்?
பிரம்மன் கோவில் பற்றி எதுவுமே எழுதவில்லை..
பிரம்மனுக்கு குடந்தையிலும் வடக்கே ஒரு ஊரிலும்(கஜுராஹோ?)மட்டுமே கோவில் உள்ள்து
படைத்தவன் மீது ஏன் இத்தனை பாராமுகம்?

said...

// தண்ணீர் எல்லாம் கொண்டுவந்து வச்சுட்டாங்களேன்னுட்டு ஒரு அம்பதைத் தட்டுலே வச்சுட்டு வந்துட்டார். //

கோபாலை நம்பி ஓட்டல் தொடங்கலாம் போல இருக்கே. :-) அப்படித் தொடங்குனா... அடிக்கடி வந்துட்டுப் போகனும். பெரியவங்க ஆசீர்வாதம் எப்பவும் வேணும். :D

அந்ததாலி போட்டோ அருமை. அதாங்க சாப்பாட்டுத் தட்டு.

சுடுமண் சிற்பங்கள் அழகோ அழகு

உண்மையிலே அமிர்த குடமா இருந்தா இப்ப ஏங்க வத்திப்போச்சு? கதை உண்மையாயிருந்தா கொடத்துல இருந்தது அமிர்தமில்லை. கொடத்துல இருந்தது அமிர்தமாயிருந்தா கதை உண்மையில்லை. ஒரு கூட்டம் உக்காந்து கதைய உருவாக்கி நாலஞ்சு கோயில்களைக் கட்டியிருக்கலாம். ஒரு குடும்பத்துல இருந்து ஒவ்வொரு கடையா தொடங்குறாப்புல.

said...

வாங்க சிந்து.

ஜலக்ரீடை?

ஊஹூம்...ஏற்கெனவே இந்தத் தலைப்பில் நம்ம பதிவு ஒன்னு போட்டாச்சு.

said...

வாங்க வாழவந்தான்.

இங்கே மட்டும்தான் ஏழு. மத்த இடத்துலே இன்னும் கூடித்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன்.

எப்ப நாம் பெரியவங்க சொன்னதைச் சரியாப் புரிஞ்சுக்கிட்டு இருந்துருக்கோம்.
(-:

said...

வாங்க சிஜி.

படைச்சவன் மேல் கோபம் வராமல் என்ன செய்யும்?

பிரம்மாவுக்கு ராஜஸ்த்தானில் புஷ்கர் என்ற ஊரில் கோயில் இருக்குன்னு நினைவு.

கும்மோணத்துலே பிரம்மன் கோயில் இருப்பது இதுவரை தெரியாது. எனிவே தகவலுக்கு நன்றி.

அடுத்தமுறைன்னு ஒன்னு இருக்குதானே?

said...

வாங்க ராகவன்.

அமிர்தக்குடம் ஏன் வத்திப்போச்சா?

அதுக்கும் கதை செஞ்சுருவோம். கலிகாலத்துலே மக்கள் அக்கிரமம் கூடுனதால் வத்திப்போச்சு:-)

ஓட்டல் ஆரம்பிச்சதும் மறக்காம தாக்கல் அனுப்புங்க:-)

said...

அந்த நகராத மாட்டுவண்டி நல்லாருக்கு.

மண்குதிரையை நம்பி...ன்னு சொல்லுவாங்க, இங்கே மண்மாட்டை நம்பி சவாரி போக முடியுமா?

said...

வாங்க நானானி.

மண்ணை நம்பியே வாழ முடியாதுன்னு இப்போ இருக்கேப்பா. இதுலே என்னன்னு மண் 'காளை'களை நம்புவது?

said...

//நாளைக்கு இங்கே இருந்து கிளம்பறோமே........'பிரிவுத் துயரில்' நான் மட்டும் கொஞ்சம் சுத்திக்கிட்டு இருந்தேன்.//

புரிகிறது.

//துளசி மாடமும், கிணறும், யானைமாடுமா அருமையோ அருமை. டெர்ரகோட்டாக் காளைக்கேத்த மாதிரிக் குட்டியான ஒரு வில்வண்டி//

கிணற்றின் மேல் அந்த மயில்கள்...என எல்லாமே ரம்மியம்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நீங்களா இருந்தாக் கவிதையாவே எழுதித்தள்ளிருவீங்க. அத்தனை அழகு கொட்டிக்கிடக்குது அங்கே!!!