Tuesday, April 07, 2009

என்ன திரிசமன், பாருங்களேன்........... (2009 பயணம் : பகுதி 8)

கச்சேரி எல்லாம் நம்ம வீட்டுக்குப் பக்கத்துலே இருக்கும் அருங்காட்சியகத்தில்தானாம். சிலசமயம், இங்கே தங்கி இருப்பவர்களுக்குப் பொழுதுபோக்காக கலை/இசை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்யுது 'ஆனந்தம்' நிர்வாகம்.


காட்சியகத்தின் ஒரு பகுதியில் மயில், குதிரைகள் எல்லாம் இருந்துச்சு. பேசாம அதுலே நுழைஞ்சு ஒரு ஆட்டம் போட்டுருக்கலாம்தான்.....

ராஜாத்தி காத்திருந்தாள். ரோஜா போலே பூத்திருந்தாள்
ராஜாவும் வந்து சேர்ந்தான். ராகத்தோடே பாடிவந்தான்.....
வீட்டுக்குப்போய் 'சாமிகளை (பயணம் முழுசும் கூடவே வர்றதா அவுங்களுக்கு நேர்த்திக்கடனாம்) வச்சுட்டு'க் கச்சேரிக்குப் போனோம். அரங்கத்தில் மூணு பேர். மிருதங்கம், கடம் & வாய்ப்பாட்டு. எலெக்ட்ரானிக் ஸ்ருதிப்பெட்டி 'ஹம்'மிக்கொண்டுருந்துச்சு. ஒரு ஓரமா தம்பதியர் கூடமாட உதவி.

ஆஹா.... நமக்கே நமக்கான ஸ்பெஷல். 'சிங்காசனத்தில் அமர்ந்து.......' கேட்கத் தயாரானோம். 'ம்ம்... நடக்கட்டும்' என்று மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேன் ஆரம்பத் தடுமாற்றத்துக்குப்பிறகு குரல் சரியாயிருச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு மூணு வெள்ளைக்காரர்கள் தயக்கத்தோடு உள்ளே வந்தாங்க. அதுலே இருந்த ஒரு பதின்மவயதுப் பையர் நடுவில் எழுந்து வெளியே போயிட்டுத் திரும்பி வந்தப்ப அவர் கையில் ஒரு டேப் ரிக்கார்டர். மிருதங்கம் வாசிச்சவர் கிட்டே பாட்டை பதிவு செஞ்சுக்கலாமான்னு கேட்டுக்கிட்டு பொண்ணு முன்னால் ரிக்கார்டரை வைத்தார். மரியாதை தெரிஞ்சவர். நாங்க ஏற்கெனவே வீடியோ எடுத்துக்கிட்டு இருந்தோம். ஒரு மணி நேரத்தில் மங்களம் பாடியாச்சு.
'ப்ரிட்டிஷ்' பையர், சங்கீதம் படிக்கிறாராம். இந்திய இசை கேட்டதும், அவருக்குப் பிடிச்சுப் போச்சாம். நம்ம கர்னாடக சங்கீதத்தை முதல்முறையாக் கேக்கறாராம். எத்தனை பீட், எப்படிக் கணக்குன்னு எல்லாம் கேட்டுக்கிட்டு இருந்தார்.
பாடகி ஒரு சின்னப் பொண்ணு (பெயர் ஸ்வேதா) ப்ளஸ் ஒன்னு படிக்கிறாங்க. கடம் வாசிச்ச பையர் முதல் வருசம் எஞ்சினீயரிங். மிருதங்கம் வாசிச்சவர்தான் இவுங்களுக்குக் குரு. நாச்சியார்கோவில் ரகு. இவரும் உமையாள்புரம் சிவராமனும் ஒன்னாத்தான் கத்துக்கிட்டாங்களாம். ரகுவோட குடும்பச் சூழல் காரணமாக வீட்டைவிட்டு நகரமுடியாத நிலை. வயதான அத்தை, பெரியம்மா, அம்மா எல்லோரையும் பார்த்துக்கொள்ள வேண்டி இருந்தாராம். குடும்பத்தின் ஒரே ஆண். வேற வழி? இப்போவும் அவருடன் பேசுனதில், முன்னேற முடியலையேன்ற மனசோட அங்கலாய்ப்பு வெளிப்பட்டது.


'நாச்சியார் கோவிலா? இப்போதான் அந்தக் கோயிலுக்குப்போயிட்டு வந்தோம். சந்தோஷமா இருந்தது, அங்கே அம்மாவுக்குத்தான் அதிகாரமு'ன்னு சொன்னதும், எங்க பெருமாளைப்போல ஒரு 'ஹென்பெக்டு ஹஸ்பெண்டை'ப் பார்த்திருக்க முடியாதுன்னு சொல்லிச் சிரிச்சார். நான் கோபாலை ஏறிட்டுப் பார்த்தேன். (என்ன இருந்தாலும் மதுரைக்காரர் ஆச்சே)
கடைசி நிமிஷத்தில் தகவல் வந்ததாம். சரியாத் தயார்ப்படுத்திக் கொள்ள நேரம் கிடைக்கலைன்னு அந்தத் தம்பதியர் (ஸ்வேதாவின் பெற்றோர்) சொன்னாங்க. சின்னப் பொண்ணுதானே. இன்னும் பாடப்பாட எல்லாம் சரியாயிரும், அருமையான குரல்னு பாராட்டுனோம்.
சாப்பிட ரெஸ்ட்டாரண்டுக்குப் போனோம். இன்னிக்கு வெளியில் உள்ள அமைப்பில் உக்கார்ந்து ரசிக்கலாமுன்னு சொன்னதும், குமார் சாப்பாட்டை அங்கே கொண்டுவந்து பரிமாறினார். கொசுதான் பிடுங்கி எடுத்துருச்சு.

மூணுநாளா வலைப்பக்கமே போகலை. இ-மெயிலாவது செக் பண்ணிக்கலாமுன்னு வரவேற்புக்கு போனா அங்கே கார்த்திக். நம்ம லேப்டாப்க்கு ஃபோன்லைன் கொடுங்க. பத்து இருபது நிமிஷம் போதுமுன்னு சொன்னதுக்கு, அதுக்கான வசதி இல்லை. இங்கே ஆஃபீஸ்லே இருக்கும் கணினியைப் பயன்படுத்திக்குங்கன்னு சொன்னார். நான் மெயில் பார்த்துட்டுக் கோபாலுக்குக் கொடுத்துட்டேன். மரக்கிளைகளின் தண்டுகளையே ஜன்னல் கம்பியா வச்சுருக்கும் ஜன்னல் வழியாக கொசுப்படை ஒன்னு உள்ளே வந்து சுத்திக்கிட்டு இருந்துச்சு. ( நெட் ஒன்னு அடிச்சு இருக்கக்கூடாதா? நிம்மதியா நெட்டே பார்க்க முடியலையேப்பா...)

கொஞ்சநேரம் கார்த்திக்கோட பேச்சுக் கொடுத்தேன். 70 அறை(வீடு)கள் இருக்காம்.

"எல்லாம் ஃபுல் ஆகிட்டதாலேதான் உங்களுக்கு இன்னும் நல்ல வீடு கொடுக்கமுடியலை. வழக்கமா அமெரிக்காவில் இருந்து வரும் சுவாமிஜி வந்துருந்தார். இன்னிக்குத்தான் கிளம்பிப்போனார்"

யார் அவர்? என்ன பெயர்?

அவர் ரொம்பப் பெரிய ஸ்வாமிஜிங்க. ஒருத்தரைப் பார்த்ததும், இவுங்க எந்த லைன்லே போனா முன்னுக்கு வருவாங்கன்னு சொல்லிருவார். அவருக்கு நம்மளைப் பிடிச்சுப்போச்சுன்னா அமெரிக்காவுலே இருந்து வரும்போது வீடியோ கேமெரா, அது இதுன்னு ரொம்பக் காஸ்ட்லி கிஃப்டெல்லாம் வாங்கியாருவார்.எப்ப வந்தாலும் அம்பது அறுபது பேரைக் கூட்டிக்கிட்டு வருவார். நிறைய நாடுகளில் ஆசிரமம் எல்லாம் வச்சுருக்கார். யோகா பத்தியெல்லாம் புஸ்த்தகம் எழுதி இருக்கார்.

(ரொம்ப இண்ட்டரஸ்டிங் நியூஸா இருக்கே. நம்ம சாமியாருங்க அட்டகாசம் வெளிநாடுகளிலும் கூடியிருக்கே)

"அவர் பெயர் என்னன்னு சொன்னீங்க?"

"சுவாமிஜியோட பெயர் ஸ்ரீசிவா"

"ஆமாம். உங்களைப் பார்த்துட்டு, எந்த லைன்லே போனால் நல்ல வேலைன்னு சொன்னார்? ரிஸப்ஷனிஸ்ட்டாவா? "

"ஹிஹி.... ஒன்னும் சொல்லலைங்க. அவரைப்பார்க்க, அப்பாய்ண்ட்மெண்ட் கிடைக்கறதே ரொம்பக் கஷ்டங்க."

வரவேற்பில் இருந்த புக் ஷெல்ஃபில் யோகா, ஆயுர்வேதப் புத்தகங்களும் இந்தியாவின் கலை,சிற்பங்கள் பற்றிய சிலதும் இருந்தன. தமிழில் 'அர்த்தமுள்ள இந்து மதம்' இருந்துச்சு.

இதுக்குள்ளே கோபால் வந்து பேச்சில் கலந்துக்கிட்டார். கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும்போது அறிவிப்பு ஏன் வைக்கலைன்னதுக்கு, மத்தியானம் எல்லா அறைகளுக்கும் ஃபோனில் விவரம் சொன்னாங்களாம். சரியாப்போச்சு. இந்த மாதிரிச் சுற்றுலாத் தலங்களுக்கு வர்றவங்க பகல் நேரத்துலே ரூம்லேயேவா ( உக்காந்து யோசிச்சுக்கிட்டா?) இருப்பாங்க!!!

எப்படின்னாலும் ரெஸ்ட்டாரண்டுக்குப் போகாம இருக்கமாட்டாங்கதானே? அங்கே படி ஏறும் இடத்தில் ஒரு கரும்பலகையில் எழுதிப்போட்டால் ஆச்சு.
கண்ணுலே படாதா என்ன? (இன்னிக்குக் கச்சேரிக்கு அஞ்சுபேர் போனோம். ஒருவேளை யாருமே போகலைன்னா..... ஆளில்லாத கடையில் தனியா டீ ஆத்திக்கிட்டுன்னு என்னமோ சொல்வாங்களே அப்படியா?)

போகட்டும். இருவது நிமிஷம் 'நெட்'க்கு எவ்வளோ காசுன்னா, 'பொதுவா 100 ரூபாய் வாங்குவோம். உங்களுக்கு அதிகம் சொல்ல விரும்பலை அம்பது கொடுத்தாப் போதும்'

(அதானே.... டாக்ஸி அனுப்புனதுலேயே ஆட்டையைப் போட்டாச்சே)

"ஒயர்லெஸ் கனெக்ஷன் போட்டுருங்க... அவுங்கவுங்க தங்களோட லேப்டாப்லே பயன்படுத்திக்குவாங்க. அப்போ இன்னும் மலிவாத்தான் செலவு. இந்த ஒரே கணினியில் எத்தனைபேருன்னு வந்து பார்க்கமுடியும்?
என்னதான் கிராம வாழ்க்கை அனுபவிக்கணுமுன்னாலும், வந்து தங்கறவங்களுக்குத் தொழில்சம்பந்தமுள்ள விஷயங்களில் கவனம் இருந்துக்கிட்டுத்தானே இருக்கணும்"

கார்த்திக் பரிதாபமா முழிக்க, நம்ம கோபால், மேனேஜ்மெண்ட் கிளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தார்!

ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல விட்டுப்போச்சு பாருங்க. டைனிங் ஹாலுக்கு வெளிப்புறத்துலே பெரிய திறந்தவெளி முற்றம் இருக்கு பாருங்க, அங்கே, வராந்தாவுலே ஒரு படம் மாட்டி இருக்கு. என்னவோ எழுதி இருக்கே என்னன்னு படிக்கலாமுன்ன்னு பார்த்தா.......
அடப்பாவிகளா.... இப்படி எல்லாமா யோசிச்சீங்க? நம்ம ஊர்ப் பாடத்திட்டங்களின்படி, ஞாபகசக்தி அதிகம் இருக்கறவங்களுக்குத்தான் படிப்பில் முதலிடம். நல்லா உருப்போடத் தெரியணும். நெட்ரு. முந்தி ஒரு காலத்துலே, நாங்க இந்தியாவுக்கு முதல்முறையா விடுமுறையில் போயிருக்கோம். அண்ணன் மகள், பரிட்சைக்குப் படிச்சுக்கிட்டு இருக்காள். நோட்டுப் புத்தகத்தை நம்மிடம் கொடுத்துட்டு, 'நான் ஒப்பிக்கிறேன். சரியா இருக்கா பாருங்க'ன்னு சொல்வாள். ஒப்பிக்கும்போது நடுவிலே எங்கியாவது தடங்கல், மறந்து போயிட்ட சொல் எதாவதுன்னா...... திருப்பிச் சொல்லும்போது முதலில் இருந்து ஆரம்பிப்பாள்.

ஒரே மூச்சுலே வந்தாத்தான் உண்டு. எதுக்கு இப்படி 'வேர்டு பை வேர்டு பை ஹார்ட்' செய்யறேன்னு கேட்டால் பதில் வருது பாருங்க, 'உங்களுக்குத் தெரியாது எங்க டீச்சரைப் பத்தி. அவுங்க எழுதிப்போடறதை அப்படியே எழுதணும். ஒரு சொல் விட்டுட்டாலும் மார்க்கைக் குறைச்சுருவாங்க.'

பாடத்தைப் புரிஞ்சுக்கிட்டு நம்ம சொந்த நடையில் எழுதுனா?

ஃபெயில் பண்ணிருவாங்களாம்.(-: (கிழிஞ்சது போ)

( அவ இப்ப அமெரிக்காவுலே குப்பை கொட்டிக்கிட்டு இருக்காள் என்றது வேற விஷயம்)

நம்ம பாடத்திட்டத்தின் மீது எனக்கு எப்போதும் கொஞ்சம் வெறுப்புதான். படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லைன்னு புலம்புவேன். ஏன் இப்படி இருக்குன்னு கவலைப்படுவேன். அதுக்கு விடை இங்கே,இப்படிக் கிடைச்சது!

தொடரும்....:-)

35 comments:

said...

மி தி பர்ஸ்ட்டு ?

said...

நெக்ஸ்ட்

said...

3rd...

said...

ரீச்சர்,

லீவில் இருந்தாலும் பள்ளிக்கு வரேன்!!

ஆஜர்!

said...

//'சிங்காசனத்தில் அமர்ந்து.......' 'ம்ம்... நடக்கட்டும்'//

தோரணை சூப்பர்:)!

said...

ம்ம். மெக்காலே வழி என்னிக்கு மாறுமோ.
சிம்மாசனமும் ஜோர். உட்கார்ந்திருப்பவங்களும் ஜோர்.:)

ஆனந்தம் நல்ல இடமாயிருக்கேன்னு பார்த்தேன். நெட் இல்லைன்னா கஷ்டம்தான்:)
கொசு வேண்டாம்பா நமக்கு. கடி தாங்காது.

said...

சிங்காசனம் சூப்பர்!!!.

டீச்சரோட வர்ணனையில் ”ஆனந்தத்தை” பார்க்க ஆவல் அதிகமாயிட்டே போகுது.

said...

வாங்க சிஜி, நான் நரேந்திரன் & ஞானசேகரன்.

வருகை மட்டும் போதுமா? பாடம் படிக்கும் எண்ணம் இல்லையா?

(உறக்கம் வராக் கண்களுக்கான பதிவா இது?)

said...

வாங்க கொத்ஸ்..
உங்க கடமை உணர்ச்சி..... புல் அரிக்குது!!!!

said...

வாங்க வல்லி.

மாறுமுன்னு தோணலை(-:

கொசு மருந்து தடவுனால் தப்பிக்கலாம்.

(கொசுக்களுக்கல்ல)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நன்றிப்பா.

இன்னும் 'உழைக்கும்' படங்களும் உண்டு:-))))

said...

வாங்க சிந்து.

அறைகளுக்குள்ளே 'இவைகள்' இல்லை என்பது ஆறுதல்:-)

கொசுமருந்து எடுத்துக்கிட்டுப்போனால்தான் உண்மையான ஆனந்தம்.

said...

திரிசமன்?

பால்ஸ் 'தமிழ் மின் அகராதி' ல் பார்த்த பொழுது...

முறையற்ற, தகாத செயல் a misdeed (such as misappropriation) 2. குறும்புத்தனம் mischievousness, prank.

என்று அர்த்தம் போட்டிருந்தார்கள்..

//
ஆஹா.... நமக்கே நமக்கான ஸ்பெஷல். 'சிங்காசனத்தில் அமர்ந்து.......' கேட்கத் தயாரானோம். 'ம்ம்... நடக்கட்டும்' என்று மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேன்
//
ஒரு வேளை இது தான் திரிசமனோ?

.. குறும்புத்தனம் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

இந்தப் பதிவில் எது 'திரிசமன்' னு புரியலையே?

said...

மகாராணிக்கு வந்தனம்..:)
மெக்காலே இதுக்குத்தான் செய்திருப்பாருன்னு கேள்விப்பட்டிருக்கேன் ..இப்படி ஒரு நோட்டீஸ் போர்டே இருக்கா அங்க.. :(
பாம்பைக்கண்டா கூட பயப்படவேண்டாம் ஆனா கொசுவைக்கண்டா பயப்படத்தான் வேணும்..

said...

படம் சூப்பர் ;-))

பாடத்தை பற்றி சரியாக சொல்லியிருக்காரு...ஆனா என்னாத்த செய்ய முடியும்..அதை படிச்சிட்டு தானே இங்க வந்து குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேனு நினைக்கும் போது ஆச்சிரியமாக இருக்கு. ;)

said...

1. என்ன நாச்சியார் கோவில் வரைக்கும் கூட வந்தீங்களா !
பக்கத்துலே திருச்சேரை ஒரு சிறிய கிராமம்.
அங்கே பள்ளி கொண்டிருப்பார் சார நாத பெருமாள்.
நாளெல்லாம் பாத்துக்கொண்டிருக்கலாம்.
அது தான் நான் பிறந்து வளர்ந்த ஊரு.

2. லாப் டாப் கனெக்ஷன் கட்டணம் என்ன அத்தனை கொடுத்திருக்கீங்க ?
ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 20 தானே !
அடுத்த தரம் இந்தியாவுக்கு வரும்போது ஏர் டெல் கிட்டே ஒரு
டேடா கார்டு வாங்கிபோடுங்க.

(ஆனா ஏர் டெல்கிட்டே மாட்டிகிட்டா என்ன சிரமம்னு கேட்காதீங்க )
நீங்க வேண்டாம்னு சொன்னப்பறமும் பில் வந்துகினே இருக்கும்.

3.நம்ம பாட முறை அந்த காலத்திலே நொட்ரு பண்ரதுதான். அது உண்மைதான்.
அதுனாலே தான் யாரு நன்னா நொட்ரு பண்ணி ஒப்பிக்கிறானோ அவனுக்குத்தான்
ஐ க்யூ ஜாஸ்தின்னு கணக்கு போட்டுகிட்டு இருந்தோம். இன்னிக்கும் ஐ.க்யூ 140 ஆளு
ஐ க்யூ 40 கிட்டே அடிமாடு மாதிரி வேலை செஞ்சுகினு இருக்காங்க..

4. அதெல்லாம் இருக்கட்டும். அந்த பொய்க்கால் குதிரை ஃபோட்டோ என்னா அழகு !
அதிலே மயங்கிப்போய் எங்க வீட்டு அய்யா அதே பாட்டைப் படிச்சுகினே இருக்காரு.

மீனாட்சி பாட்டி.
ஸ்டாம்ஃபோர்டு, யூ.எஸ்.ஏ.

said...

டீச்சர் உங்க தோஸ்தை பற்றி ஒரு சூப்பர் கவிதை பாருங்கள் ;-)

http://premkumarpec.blogspot.com/2009/04/blog-post_09.html

said...

அது என்ன டீச்சர், திரிசமன்? அப்படினா?

///மரக்கிளைகளின் தண்டுகளையே ஜன்னல் கம்பியா வச்சுருக்கும் ஜன்னல் வழியாக கொசுப்படை ஒன்னு உள்ளே வந்து சுத்திக்கிட்டு இருந்துச்சு. ( நெட் ஒன்னு அடிச்சு இருக்கக்கூடாதா? நிம்மதியா நெட்டே பார்க்க முடியலையேப்பா...)///

அதெப்படினா கணினியில் நெட் இருக்கு.விண்டோஸ்-உம் இருக்கு. அதாவது நெட், ஜன்னல்லதான் இருக்கு. அப்புறம் எப்படி கொசுப்படை?...
எதாவது புரியுது, எனக்கும் சுத்தமா புரியல.

said...

பாடத்தைப் புரிஞ்சுக்கிட்டு நம்ம சொந்த நடையில் எழுதுனா?

ஃபெயில் பண்ணிருவாங்களாம்.(-: (கிழிஞ்சது போ)


அந்த நடை டீச்சேருக்கு விளங்களைனா என்ன பண்ணறது நு டீச்சர் கவலை டீச்செருக்கு... :P

said...

வாங்க மெனக்கெட்டு.

பொருள் சொன்னதுக்கு நன்றி.

இன்னொருத்தர் 'திரிசமனுக்கு' அர்த்தம் கேட்டுருக்கார்!

சிங்காசனத்துக்கு ரெண்டாவதும், வெள்ளைக்காரர் செஞ்சதுக்கும் முதலாவதுமான பொருள் கொள்ளலாம்.

said...

வாங்க கயலு.

உங்க மாவட்டக் கொசுக்களுக்குப் பலம் கூடுதலப்பா:-))))

said...

வாங்க கோபி.

ஆச்சரியம், உங்களுக்கு மட்டுமா? :-)))))

said...

வாங்க மீனாட்சி அக்கா.

சாரநாதரை விட்டுட்டேனே.....

இந்த 107 லே (இப்போதைக்கு பூவுலகில் இருக்கும்போது) முடிஞ்சவரை போய்வரணுமுன்னு சமீபத்துலே மனசுலே தோணிக்கிட்டே இருக்கு. எண்ணிப்பார்த்தால் ஒரு இருவது முப்பது தேறுமோ என்னவோ....

சந்தர்ப்பம் வாய்க்கும்போது...இனி பயன்படுத்திக்கணும்.

ஏர்டெல்கிட்டே டேடா கார்டு வாங்க நமக்கு ரேஷன் கார்டு வேணுமா?

பாடத்திட்டத்தைப் பற்றி மூக்கால் அழறதைத்தவிர வேறொன்னும் இப்போதைக்குச் செய்யமுடியாது.....

பொய்க்கால் குதிரை அட்டகாசமா இருந்துச்சு. அந்தப் பாவாடையைக்கூடக் கட்டிப் பார்த்தேன் 'ஜில்ஜில் ரமாமணி' மாதிரி:-))))

said...

கோபி,

யானையைப் பார்த்தேன். நன்றி.

said...

வாங்க தீப்பெட்டி.

நண்பர் மெனக்கெட்டு, பொருள் சொல்லிட்டார் பின்னூட்டத்தில்.
அதைப் பார்த்துக்குங்க.

நான் சொன்னது உண்மைக்கொசு!

கணினிக்கொசு இல்லை:-)))

said...

வாங்க ராஜ் குமார்.

ஆஹா.....
இப்படியும் இருக்கலாம்:-))))

said...

வலைக்குள்ள உக்காந்து கொசுத்தொல்லையில்லாம வலை மேயனும்னு விரும்பீருக்கீங்க. அது அங்க நடக்கலை.

ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ சுவாமிஜிகளுக்கு எதுக்கு இந்த மாதிரி ஓட்டலு? எங்கையாச்சும் மடத்துல தங்க வேண்டியதுதான? மடச்சாம்பிராணியா இருக்காம இப்பிடித் தேர்ந்தெடுத்த இடச் சாமியார்களா இருக்காங்களே! போலிச் சாமியார்கள் ஆட்டம் சாஸ்தியாயிருச்சு.

said...

வாங்க ராகவன்.

இவருக்கு ஒரே ஸ்ரீ!!!!

நல்ல ஓட்டல் இல்லேன்னா எப்படி? வெளிநாட்டு அன்பர்களும் வராங்கல்லே?

தாங்கமுடியலைப்பா...கொசுத்தொல்லை:-)

said...

அந்த லார்ட்மெக்லே சொன்னதை இப்போது தான் முதல் தடவையாக பார்க்கிறீர்களா?
படிக்கும் போது கொஞ்சம் பெருமையாக இல்லை?

said...

சிம்மாசனத்தில் அரசி துளசி - நன்று நன்று

நல்ல பதிவு - பாட்டுக்கச்சேரி - மடிக்கணினி - இணையத் தொடர்பு - ம்ம்ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துக்ள் துளசி

said...

வாங்க குமார்.

பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு....

பெருமையாத்தான் இருந்தது.

அந்த நாளும் வந்திடாதோன்னு இருக்கேன். இப்ப அரசாங்கம் இலவசங்களைக் கொடுத்து நாட்டையே பிச்சைக்கார நாடா ஆக்கி வச்சுருச்சே(-:

மெக்கலே சொன்னதை லேசுபாசாக் கேட்டுருந்தாலும் 'சட்டம் போட்டு'வச்சதை இப்பத்தான் முதல்முறையாப் பார்த்தேன்.

said...

வாங்க சீனா.

புல்லட் பாய்ண்ட்ஸ் எடுக்கணுமுன்னா உங்ககிட்டேதான் கேக்கணும்.

நன்றி.

said...

ஆஹா.... நமக்கே நமக்கான ஸ்பெஷல். 'சிங்காசனத்தில் அமர்ந்து.......' கேட்கத் தயாரானோம்.


சிம்மாச்னத்தில் அமர்ந்துகொண்டு
சிரித்திடும் பதிவர் துளசிகோபால்..
சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

நம்மை வச்சுக் காமெடி ஏதும் பண்ணலைதானே?????:-)))))

பாராட்டுகளுக்கு நன்றி.

said...

நல்வாழ்த்துக்ள்
பாகிஸ்தானுக்கு ரூ3,500 கோடி நிதியுதவி அதிரடியாக ரத்து அமெரிக்காவில் சட்டம் நிறைவேறியது