Tuesday, April 14, 2009

மைஸூர் பாயஸம்

மக்கள்ஸ்,

'விழாக்காலம்' என்றால் இனிப்பு இல்லாமல் இருக்குமா?

மைஸூர்பாகு தெரியும், மைஸூர் போண்டா தெரியும், ஏன் மைஸூர் ரசம் கூடத் தெரியும் ஆனால் இது என்ன மைஸுர் பாயஸம்?

இது நம்ம எழுத்தாளர் ஏகாம்பரி வழங்கிய சமையல் குறிப்பு. நான்பெற்ற இன்பம் வகையில்......

செய்ய எடுத்துக்கொண்ட நேரம் ஏழே நிமிடங்கள்.(செஞ்சதே ஒரு கப்தான். யாராவது செய்முறைன்னு சொன்னால் உடனே நம்பிச் செயலில் இறங்கிறக்கூடாது என்பது இந்த 35 வருச அனுபவம். அதான் கொஞ்சமாச் செஞ்சு பார்க்கணுங்கறது)

தேவையான பொருட்கள்
(எல்லாம் அந்த ஒரு கப் பாயஸத்துக்குத்தான்)

முந்திரிப்பருப்பு: 6 (முழுசுமுழுசா இருக்கணும்)

உலர்ந்த திராட்சை: அரைத் தேக்கரண்டி( எண்ணித்தான் போடணுமுன்னா ஒரு 15 இருக்கட்டும்)

குங்குமப்பூ: அரைச்சிட்டிகை (இதுவும் ஒரு பத்து இழை)

சக்கரை: 5 டீஸ்பூன்

பால்: ஒரு கப்

கடலை மாவு: 2 டீஸ்பூன்(கும்மாச்சியா இருக்கட்டும்)

நெய்: மூணு டீஸ்பூன்

தண்ணீர் : 2 டீஸ்பூன்

செய்முறை:

அடுப்புப் பத்தவச்சு அதை'ஸிம்'மில் வச்சுக்குங்க. ஒரு பாத்திரம் அதுமேல் வச்சு நெய்யை ஊத்தி, நெய் காய்ஞ்சதும் முந்திரியைப் பொன்னிறமாக வறுத்துக்குங்க. அரைப்பொன்னிறமானதும் இதுலேயே திராட்சையும் சேர்த்துப் பொரிச்சு எடுத்துவச்சுக்கலாம்.

அதே பாத்திரத்தில் கடலைமாவைப்போட்டு கைவிடாமல், அடிப்பிடிக்காமல் வறுக்கணும். நல்லா இளம் ப்ரவுண் நிறமாகி நல்ல வாசனையா வந்ததும் சக்கரையையும், ரெண்டு டீஸ்பூன் தண்ணீரையும் சேர்த்துக் கிளறிக்கிட்டே இருங்க. நல்லா கூழ்போல வரும்.

மைக்ரோவேவில் ஒரு கப் பாலைக் கொதிக்கவச்சு, அந்தக் கூழில் சேர்த்துட்டு, குங்குமப்பூ சேர்த்து இளக்கி, எடுத்துவச்ச வறுத்த முந்திரி திராட்சையால் அலங்கரிக்கவும்.

நன்றி: எழுத்தாளர் ஏகாம்பரி


அனைவருக்கும் சித்திரைப்புத்தாண்டு, கேரளப் புத்தாண்டு விஷூ ஆகிய விழாக்களுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

48 comments:

said...

புத்தாண்டு நல்வாழ்த்து(க்)கள்.

said...

"""மக்கள்ஸ்,***

என்ன டீச்சர் தமிழ் அகராதியில் புது வார்த்தைகள் எல்லாம் சேர்க்குறீங்க.

பல மொழிகள் தெரிந்தால் இப்படி ஏதாவது வம்பு செய்யவரும்னுதான் தமிழோட நிறுத்திக்கொண்டேன் (திராவிட மொழிகளில்) :-)))

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

யுஹாதி வாழ்ந்த்துக்கள்!

விஷு வாழ்த்துக்கள்!

உங்க பாயசம் பார்க்க நல்லா இருக்கு! சுவை எப்படியோ! :-))))

said...

//முந்திரிப்பருப்பு: 6 (முழுசுமுழுசா இருக்கணும்)
//

படத்துல எண்ணிப் பார்த்தேன் 5 தான் இருக்கு. ஒண்ணு டேஸ்ட் பார்த்தாச்சா ?

சொல்குற்றம், பொருள் குற்றம் எல்லாம் கண்டுபிடிக்கலை என்றால் பதிவைப் படிச்சோம், படத்தைப் பார்த்தோம் என்று எப்படிச் சொல்வது ?

said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ரீச்சர்.

said...

வாங்க நான் நரேந்திரன்.

நன்றி. உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க வருண்.

பாயசத்துக்கு இமாலய வெற்றி:-))))

சுவை அருமைன்னு வீட்டுக்கு வந்த தோழி சொல்லிட்டாங்க. (முக்கால் கப்பை அங்கே தள்ளியாச்சு)

உகாதி வந்து போயிருச்சுப்பா!!!

said...

வாங்க கோவியாரே.

அலங்காரத்துலே ஆறு சரியா வரலைன்னு ஒன்னை மூழ்கடிச்சுட்டேன்:-)

said...

வாங்க மதுரையம்பதி.

நன்றி. உங்களுக்கும் இனிய நல்வாழ்த்து(க்)கள்.

said...

தனிமடலில் பகிர்ந்து கொண்டவைகளை பொதுவில் போட்டதற்கு என் கண்டனங்கள்.

said...

துல்ஸ்! நம்மை போல நோகாமல் நோம்பு கும்பிடுபவர்களுக்கு இந்த ரெசிபி போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா :-)

said...

வாழ்த்துக்கள்.. :) எங்கமக்கள்ஸ் எந்த பாயாஸம்ன்னாலும் விரும்பமாட்டாங்க... பொங்கல் தான் இங்க..

said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

நானும் ஜாக்கிரதையா முதல்ல ஒரு கப்பே செய்து பார்க்கிறேன்:)!

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர்.

பாவம்..இன்னொரு கப் செஞ்சு கோபால் அண்ணாவுக்கும் கொடுத்திருக்கலாம் ல?

said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர்;-)

said...

விரோதி வருட புத்தாண்டு வாழ்த்துகள் ரீச்சர் அக்கா!!
தம்பி/தங்கைகளுக்கு விஷு கைநீட்டம் உண்டோ ?

said...

தயாரிப்பு பொருட்கள் 4 பேருக்கு மாதிரி தெரியறதே!எனக்கெல்லாம் பாயசத்துல ஒரு முந்திரிப் பருப்பு அதுவும் பாதியா,இரண்டு திராட்சை,ரெண்டு மூணு ஜவ்வரிசிதான் கப்புல மாட்டுது.

said...

அட, எங்க வீட்டிலே இதை மாப்பிள்ளைப் பாயாசம்னு சொல்லுவோம். திடீர்னு மாப்பிள்ளை வந்துட்டா, இந்தக் கடலைமாவுப் பாயசம் தான் வைக்க முடியும். அவசரத்துக்கு மட்டுமில்லை, நிறைய நெய் ஊத்தியும் மாவை வறுக்கணுமே! :)))))))))))) நல்ல பாயாசம், இப்போ பண்ணறதில்லை, இந்தப் பாயாசத்தை! போர் அடிக்குதுனு சொல்லிட்டார் ம.பா. அதான்!

said...

புத்தாண்டு வாழ்த்துகள் டீச்சர்!

காலையிலே உங்க பதிவை பார்த்திருந்தா மைசூர் பாயசத்தை ஒரு கை பார்த்திருக்கலாம்..இன்னைக்கு பாலடையாக்கும் டீச்சர்.

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள். ரொம்ப சுலபமான ரெசிப்பியா இருக்கு. உங்களுக்கும் எழுத்தாளர் ஏகாம்பரிக்கும் நன்றி

said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

said...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துகளை ஏற்கவும்!
வாழ்த்துகளுக்கு நன்றி!

said...

ஏலக்காய் போடவேண்டாம ஓண்ணு இரண்டு ?

மீனாட்சி பாட்டி

said...

இனிய புத்தாண்டு - விஷூ - நல்வாழ்த்துகள்

said...

வாங்க உஷா.

எல்லாம் நான் பெற்ற இன்பம்தான். சட் புட்டுன்னு வேலையை முடிச்சுட்டா....பதிவு எழுத நேரம் கிடைக்குமுல்லே:-)))

நோகாம நோம்புன்னதும்தான் இப்படி இன்னொரு ஐடியாவும் தோணுச்சு.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா துண்டு ஒன்னை, சூடான பாலில் போட்டுக் கலக்கினா...இந்தப் பாயசம் ரெடி:-)

said...

வாங்க கயலு.

நம்ம வீட்டுலேயும் பாயஸம் பண்ணிட்டா...... அம்மா குடி அய்யா குடிதான்.

ஆனா எதுக்கெடுத்தாலும் எப்படிப்பாப் பொங்கறது?

(நம்ம இலங்கைத்தமிழர்)தோழிகள் சொல்வாங்க, எந்தப் பண்டிகைன்னாலும் அப்படியே பொங்கிருவாங்களாம்!!!!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

தைரியமாச் செஞ்சுருங்கப்பா. நான் கேரண்டி:-))))

said...

வாங்க ரிஷான்.

ஆபத்தை உணர்ந்த கோபால் வெளிநாட்டுக்கு எஸ்கேப்பு:-)))

said...

வாங்க கோபி.

நன்றி

said...

வாங்க மணியன்.

கைநீட்டம் இல்லேன்னா என்ன விஷூ?

சட்னு சட்டைப்பையில் கைவிட்டுப் பாருங்க....

ம்ம்ம் அதேதான்:-))))

said...

வாங்க ராஜநடராஜன்.

ஒரு கப்பில் ஸ்பூன் போட்டுட்டா.... நிறையப்பேருக்குக் கொடுக்கலாம்:-)

அந்தக் காலத்துலே, வத்தலகுண்டு புள்ளையார் கோவிலில் தினம் ஒரு அச்சுவெல்லம்தான் பிரஸாதம். அதை நுணுக்கியே அம்பது புள்ளைகளுக்குக் கையில் தீற்றிடுவார் அர்ச்சகர். நாங்களும் உள்ளங்கையை நக்கிக்கிட்டே ஓடிருவோம்:-)

said...

வாங்க கீதா.

மாப்பிள்ளை பாயஸமா?

இதுக்கு மைஸூர் பாயஸம்னு பெயர் சூட்டுனது நாந்தான். எனக்கு எதுக்கெடுத்தாலும் பேர் வச்சே ஆகணும்:-)

நெய் ரொம்பச் சேர்க்கலைப்பா.
இருக்கறது போதாதுன்னு.... இன்னும் கொழுப்பா?

said...

வாங்க சிந்து.

பாலடையை ஓணத்துக்கு ரிசர்வ் செஞ்சுருக்கேன்:-)))

அடைகூட இப்ப... ரெடிமேட் வத்தலாக் கிடைக்குதுல்லே:-)))

said...

வாங்க சின்ன அம்மிணி.

'நோகாமல் நோம்பு கும்பிடலாம்':-))))

said...

வாங்க ராதாகிருஷ்ணன்.
நன்றி.

உங்களைத் தான் தொடர்பு கொள்ள விட்டுப்போச்சு இந்த சென்னைப் பயணத்தில்.

கோவி தொலைபேசி எண் கொடுத்துருந்தார். வாகான நேரம் வாய்க்கலை.

said...

வாங்க கிரி.

உங்களுக்கும் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க சிஜி.

பெரியவங்க நீங்க.
வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க மீனாட்சி அக்கா.

மைஸுர் பாகுக்கு ஏலக்காய் போடரதில்லையேன்னு விட்டுட்டேன்.
எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ன்னு இதையும் சேர்த்துக்கிட்டால் ஆச்சு அடுத்த முறை.

தட்டக்கூட வேணாம். சிட்டிகை போட்டால் போதும்:-)

said...

வாங்க சீனா.

உங்களுக்கும் அன்பான வாழ்த்து(க்)கள்.

said...

நான் இந்த வாரம் முயற்சி பண்றேன். நான் கூட இன்றைய கிச்சடி பதிவுல முதல் முறையா சமையல் குறிப்பு எழுதி இருக்கேன். படிச்சுட்டு முயற்சி பண்ணி பாருங்க !!

said...

***உகாதி வந்து போயிருச்சுப்பா!!!

4/14/2009 2:48 PM***

அப்படியா? உகாதி சீக்கிரம் வந்து போயிடுச்சா!!

எல்லாம் இதே நேரத்தில்தானே வரும்னு நெனைச்சு வாழ்த்திட்டேன்.

தெலுகு உங்க தாய்மொழியாச்சே. அதான் எதுக்கு வம்புனு கொஞ்சம் "கவனமான கவனக்குறைவு!" :-)))

வாழ்த்துக்கள் தானே? பத்திரமா அடுத்த உகாதிக்கு வச்சுக்கோங்க, டீச்சர்! :-)))

said...

வருண்,

உகாதி 'சந்திரக் கேலண்டர்' படி, வரும்.

இது மார்ச் 27க்கு வந்து போச்சு.

தமிழ்ப் புத்தாண்டு சூரியக் கேலண்டர்.

said...

ம்ம்ம்ம்ம். பாயசம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
தொட்டுக்க அப்பளமா:)
துளசி நான் செய்ய்ணும்னு நினைச்சு விட்டுட்டேன்.
இன்னோரு நாள்:)
செய்முறை இன்னா அழகாச் சொல்லிக் கொடுக்கறாங்கப்பா. டீச்சர்னு பேர் உங்களுக்கு ரொம்பப் பொருத்தம்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள் துளசி.ஜிகே நலத்தோடு இருக்க என் வாழ்த்துகள் அவனுக்கும் சேர்த்துதான்.

said...

வாங்க வல்லி.

நானும் 'கண்ணால்' தின்பதோடு சரி பலநேரங்களில்.

ஜிகே, நன்றின்னு மியாவ்றான்ப்பா:-)

said...

சாரி லேட் ஆயிடுச்சு
ஆனாலும்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள். நலமோடு வாழ்க.

மைசூர்ப் பாயாசம் இதானா... இத மைசூர்ல கூடச் சாப்டதில்லையே.......

ஆனா டீச்சர் வலைப்பூல கெடைக்குது. அதான் சிறப்பு. பாயசப் பெண்மணி டீச்சர் வாழ்க.

said...

வாங்க தீப்பெட்டி.

நமக்கு வருசம்பூராவும் நல்ல நாள்தானே?

வாழ்த்துகளை எப்ப வேணுமுன்னாலும் சொல்லலாம். பிரச்சனை இல்லை.

said...

வாங்க ராகவன்.

பாயஸத்தின் செய்முறை காப்புரிமை ஏகாம்பரிக்குத்தான்:-))))

நான் ச்சும்மா...... டைப்பிஸ்ட்.