வழியில் பல இடங்களில் செங்கல் சூளைகள். களிமண்ணால், கல் அறுத்துக்கிட்டு இருக்காங்க. தரையில் வரிசையா ஒன்னுபோல அச்சடிச்சுக்கிடக்கு. இந்தத் தொழிலுக்கு இன்னும் ஆபத்து வரலை போல! சூளையில் அடுக்கி வச்சுத் தயாரா இருக்கு. பத்தவைக்கறதுதான் பாக்கி!
ஹைய்யோ..... என்ன இத்தனை பெரிய நதி....... கார் அணைக்கட்டின் மேலே பறக்குதா என்ன? கல்லணையாம். அகத்தியர் கமண்டலத்தோடு நிக்கிறார். யானைமேல் ராஜா உக்கார்ந்துருக்கார். நிகழ்காலத்தைப் பார்த்தால் நாலைஞ்சு பஸ்கள், பள்ளிக்கூடச் சிறுவர் சிறுமியரின் கூட்டம்.தண்ணீரில் அங்கங்கே கூட்டம் கூட்டமாய்ப் பறவைகள். செங்கால் நாரைகளோ?
கொஞ்சம் 'மிதப்பாய்'த்தான் உக்கார்ந்துருக்கு. கோட்டைச்சுவரின் மீது வரிசையாய் நின்னு காவல் காக்கும் பறவைகளின் அணிவகுப்பு இந்தப்பக்கம்.
லால்குடி என்ற பெயர்ப்பலகையைப் பார்த்த நினைவு. ஒரு பெரிய பாலத்தைக் கடக்கும்போது, 'அதோ..ஸ்ரீரங்கம் கோபுரம் தெரியுது;ன்னார் கோபால். எங்கே எங்கேன்னு பார்வையை அலையவிட்டேன். ஊஹூம்.... சரி எதுக்கும் இருக்கட்டுமுன்னு அவர் கைகாட்டுன திசைக்கு ஒரு கும்பிடு. ( கோபுரதரிசனம் கோடி புண்ணியமாம்!!) இந்தப் பக்கம் திரும்புனா தூரத்தில் மலைக்கோட்டை, கண் எதிரில்.
'சாப்பாட்டை முடிச்சுக்கலாம் முதலில்' சொல்லி வாய்மூடலை, சங்கீதா
வாசலில் நிக்கறோம். கோபால் சாப்பிடும் அளவைப் பார்த்துட்டு, அந்த பரிமாறுனவருக்கே பொறுக்கலை...... குழந்தையைக் கேக்கறதுபோல விரல்களைக் குவிச்சு... 'இன்னும் கொஞ்சமே கொஞ்சம், ஒரே ஒரு வாய் போடவா'ன்னு கெஞ்சறார். நான் வழக்கம்போல் வெறும் சோறு. விட்டுருந்தால் அவர் அழுதே இருப்பார் போல. ஸ்வீட்டாவது கொஞ்சம் சாப்புடும்மா. புதுசா ஜிலேபி இப்பத்தான் போட்டுக்கிட்டு இருக்காங்க. கொண்டுவரேன்னு ஓடுனார். உண்மைக்குமே இவ்வளவு அன்பான உபசரிப்பை நாங்க எதிர்பார்க்கவே இல்லை. வீட்டுலே கெஞ்சறா மாதிரி...ஆனாத் தலையில் ஒரு குட்டுதான் வைக்கலை...சாப்புடுற லட்சணமா இதுன்னு:-)))
மனசின் நெகிழ்வோடு பஸ் எத்தனை மணிக்குன்னு பார்த்துக்கலாமுன்னு பஸ் ஸ்டாண்டுக்குப் போனோம். விசாரிச்சுட்டு வர்றோமுன்னு கோபாலும் வினோதும் இறங்கிப்போனவுங்க, அடுத்த நிமிஷமே பரபரன்னு ஓடிவந்தாங்க.
'பஸ் ரெடியா இருக்கு. கிளம்பப்போறாங்க. ஏர்க்கண்டிஷந்தான். ஒரு நிமிஷம் வெயிட்பண்ணச் சொல்லிட்டுவந்தோமு'ன்னு ..அரக்கப் பரக்கப் பைகளை எடுத்துக்கிட்டு ஓடுறார் வினோத். நல்லவேளையா நமக்கு லக்கேஜ் அதிகம் இல்லை. ஆளுக்கு ஒரு கேபின் பேக் மட்டும். இப்பக் கூடுதலா சாமி இருக்கும் தோள்ப்பை. பயணங்களில் குறைவான சுமைதான் நல்லது.
பஸ் 'உருமிக்கிட்டு' நிக்குது. வினோதுக்கு அக்கவுண்ட் செட்டில் பண்ணதும் பையை வாங்கி உள்ளே வச்சதும் எல்லாம் இமைக்கும் நேரத்தில் நடந்துபோச்சு. கண்கலங்க நின்னுக்கிட்டுக் கையை ஆட்டறார் வினோத். போயிட்டுவர்றோமுன்னு சொல்லிக்கக்கூட நேரமில்லாமல் போச்சேன்னு வருத்தமா இருந்துச்சு. நல்ல பையன். நல்லா இருக்கணுமுன்னு மனசுக்குள்ளே வாழ்த்தினேன்.
பஸ்ஸில் படியேறி உள்ளே வந்ததும் வலப்பக்கம் இருக்கும் முதல் இருக்கைகள் நமக்கு. ஜன்னல் எல்லாம் திறந்தே கிடக்கே..எப்ப ஏஸி போடுவாங்கன்னு கேட்டால், பதில்வருது, 'இது ஏர்பஸ்' போகட்டும், ரெண்டரை மணி நேரப்பயணம்தானாமே! நல்லவேளையா என் பார்வைக்குத் தடையாய் முன்னால் ஒன்னுமே இல்லை. பஸ்ஸின் முகப்புக் கண்ணாடியில் துல்லியமாப் பாதைத் தெரியுது. ஜொலிக்கும் புத்தம்புது ரோடு.வழியெல்லாம் புதுசாச் சாலை நிர்மாண வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.சுமார் ஒன்னேக்கால் மணி நேரப் பயணத்துக்குப் பிறகுவழியில் ஒரு இடத்தில் (பழைய மண்சாலையா இருந்துச்சுப்பா) பத்து நிமிசத்துக்கு நிப்பாட்டுனாங்க. வெள்ளரிப்பிஞ்சுகள்..... நாக்கு அலையுது. புத்தரை நினைச்சுச் சும்மா இருந்தேன். சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கேன். இடதுபக்கம் ஒரு குன்றும் அதுலே இருந்து இப்போ விழப்போறேன்னு சொல்லிக்கிட்டுத் தொங்கும் உருண்டைப்பாறையும்......என்ன இடம்?
என் வலதுபுற இருக்கையில் இருந்தவர் தினத்தந்தியை விரிச்சுப் படிக்கிறார். மதுரையில் போலீஸ், வழக்கறிஞர்கள் மோதல். கலவரம் வெடித்தது. அரசு பஸ்களுக்குத் தீவைப்பு. போச்சுடா சாமி. இப்போ நாம் பயணிக்கும் வண்டியும் அரசுடமைதான். போற இடமோ அதே மதுரை.
எழுதி வச்சுருக்கும் உயிலைப் பத்தி மகளிடம் சொன்னோமா இல்லையா?
பாவம், கோகி.... அம்மா வந்துருவாள்ன்னு எதிர்பார்த்துக்கிட்டு இருப்பானே.......விதி முடியப்போகுது போல அதான் கிரகம் பார்க்க வந்தோமோ.......
விராலிமலை, துவரங்குறிச்சி, மேலூர்னு விரைவாக் கடந்து போறோம். மேலூர் என்ற பெயர்ப்பலகையைப் பார்த்ததும், முந்தி எப்படி இருந்துச்சுன்னு மனசு நினைக்கறதுக்குள்ளே........ ஊரைப் பின்னுக்குத் தள்ளியாச்சு. வலதுபக்கமா நீண்ட மலைப்பாறைக் குன்று. ஆனைமலையா இருக்குமோன்னு தினத்தந்தி சார்கிட்டே விசாரிச்சால்..... நான் சொன்னது சரின்னார். (கோபால் ஆழ்ந்த தியானத்தில்(??) இருந்தார். தூக்கத்துக்கு மறுபெயர்)திடீர்ன்னு முளைச்சது போல அத்துவானக்காட்டிலே அட்டகாசமா நிக்கும் மிகப்பெரிய கட்டிடவளாகத்தைக் கவனிச்சேன். அலங்கார தோரணவாயிலும், யானைச் சிற்பமுமா அமர்க்களமா இருக்கு. உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சு. ஆஹா.....'சம்பவம்' நடந்த இடமோ........?
சம்பவம் நடந்த சுவடுகள், மிச்சம்மீதி இருக்கான்னு கண்ணை ஓட்டுனேன். நிச்சலனம். என்னை வலைஉலகுக்குக் கொண்டுவந்து சேர்த்தவரின் வேலை இடம். ( நொந்துக்கிறவுங்க அங்கே அவரைப்பார்த்தால் சொல்லிருங்க)
மாட்டுத்தாவணி பஸ் நிறுத்தம். எல்லோரும் இறங்கிறணும். கடைசி நிறுத்தம் இது. ஆட்டோக்காரர்கள் சூழ்ந்துக்கிட்டு எங்கே போகணுமுன்னு பிடுங்கி எடுக்கறாங்க. 'அண்ணன் அஞ்சாநெஞ்சன் வீட்டுக்கு'ன்னு சொல்லலாமான்னு நாக்குத் துடிக்குது. கோபாலுக்குத் தன் மண்ணை மிதிச்சதும் ஒரு வேகம் வந்துருச்சுபோல. (அதானே வீரத்தைக் காமிச்சுக்க வேற யார் இருக்கா?) நான் போய் ப்ரீபெய்டு ஆட்டோ கொண்டாறேன். இவுங்க ரொம்பக் கேக்கறாங்கன்னு ஓடிட்டார். எழுபது ரூபாய்ன்னு திரும்ப ஆட்டோவோடு வந்தார். (முன்னாலே 'அதிகப்படியாக் கேட்டது' எண்பதுதான்!!)
தமுக்கம் மைதானத்தில் 'ஏதோ' பொதுக்கூட்டமோ? வரிசைகளில் வெள்ளை நிற ப்ளாஸ்டிக் நாற்காலிகளின் அணிவகுப்பு. தெருவின் குறுக்கே.' அண்ணன் வீட்டிற்கு வரும் தங்கை'க்கு அலங்காரவளைவு!!! பாராளுன்ற அங்கத்தினர் கவிதாயினி கனிமொழியின் மதுரை வருகை.
அய்ய்ய...... எனக்கில்லையா...? அடப்போப்பா...
ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இருக்கும் ராயல் கோர்ட். மேற்கு வெளிவீதி. பதிவர் சந்திப்புக்குன்னே அமைஞ்ச இடம். ஏற்கெனவே மதுரையில் நடந்த முதல் இண்டர்நேஷனல் ப்ளாக்கர் சந்திப்பு இங்கேதான். 'ராசி' காரணம் இந்த முறையும் தங்கல் இங்கே:-)
செல்பேசி அடிக்குது. அறை எண்ணைச் சொல்லிச் சரிதானான்னு கேக்கறார். ஆமாம். எங்கே இருக்கீங்கன்னு கேட்டால் கதவுக்கு அப்புறத்தில்!!! சந்திப்புக்குத் தீர்மானிச்சச் சரியான நேரம். என்ன இருந்தாலும் பேராசிரியராச்சே! போனமுறையை விட இன்னும் மூணு வருசம் குறைஞ்சுருக்கு வயசு.
கதவை ரொம்பவே நாசூக்காத் தட்டி இருக்கார். டிவி சத்தத்தில் எனக்குத்தான் கேக்கலை(-:
வாங்க தருமி. வணக்கம்.
அஞ்சு நிமிஷ இடைவெளியில் மூணு பதிவர்கள் மொத்தமாய் நுழைஞ்சாங்க. நண்பர் சீனா, செல்வி ஷங்கர், புதுவண்டு. களைகட்டிருச்சு !!
வாசகரும், பதிவர்களும் ( கோபால், தருமி & சீனா
உற்சாக மிகுதியில் என்னென்னவோ பேசுனோம். சிரிப்பும் பேச்சுமா நாலு மணிநேரம் போனதே தெரியலை. பேச்சுக்கு நடுவில் எல்லாருமாக் கிளம்பி, பின்பக்கத்தெருவுக்குப் போனோம். ஹொட்டேல் சுப்ரீமின் மொட்டைமாடி. இதமான காற்றுவீசும் சூழலில் வகைவகையாய் ஆளுக்கொரு தோசை . (தருமிக்கு அன்னாசி தோசைன்னு நினைவு) அதுக்கு முன்னே வேற என்னவோ கூட சாப்பிட்ட நினைவு. பேச்சு சுவாரசியத்தில் தட்டைக் கவனிக்கலை! மறுபடியும் அறைக்கேத் திரும்பிவந்து இன்னும் கொஞ்சம் உரையாடினோம்.(?)
"முந்தியெல்லாம் மதுரைக்கு வரும் பதிவுலக நண்பர்கள், என்னைச் சந்திக்கும் வழக்கம் இருந்துச்சு. இப்ப என்னன்னா.... வர்றவங்க எல்லாரையும் சீனாவே வரவேற்று அனுப்பிவிடறார்."
"அச்சச்சோ.... மண்டபத்துக்குள்ளேயே வரவிடாமல் வெளியேவே பிடிச்சு வளைச்சுப் போட்டுடறாரா? அநியாயமா இருக்கே!!"
நம்ம கோவியார் எழுதுனார் பாருங்க, தேங்காய்க் கீற்று போல நெத்தியில் நீறுன்னு அது ரொம்பச் சரி. நம்ம செல்வி மிகவும் அமைதியா, புன்முறுவலோடே இருந்தாங்க. லண்டனில் இருந்து பறந்துவந்த புதுவண்டுதான் எதிர்பாராத வரவு.
தொடரும்.....:-)
Sunday, April 12, 2009
காவிரியைக் கடந்து, வைகைக்கு....(2009 பயணம் : பகுதி 10)
Posted by
துளசி கோபால்
at
4/12/2009 01:42:00 PM
Labels: அனுபவம், கல்லணை, பதிவர் சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
//லால்குடி என்ற பெயர்ப்பலகையைப் பார்த்த நினைவு//
அந்த லால்குடிக்கு அருகில் உள்ள ஆங்கரை என்னும் கிராமத்தில் தான் நான் 1942ல் பிறந்தேன். பக்கத்தில்
உள்ள மாந்துரை எனும் கிராமத்தில் உள்ள கருப்பர் எங்க குல தெய்வம். எங்கள் குல தெய்வக்கோவிலை
இங்கே காணலாம்.
சுப்பு ரத்தினம்
http://menakasury.blogspot.com
வாங்க சுப்பு ரத்தினம்.
லால்குடின்னதும், வயலின்காரர் நினைவுக்கு வந்தார். இனிமேல்ப்பட்டு உங்களையும் நினைச்சுக்க வச்சுட்டீங்களே:-)))
சுட்டியைப் பார்த்தேன். மிகவும் நன்றி.
கோயில் கோபுரம் அழகு!!!
அன்பின் துளசி
அருமையான பதிவு - அழகான படங்கள் - பேருந்தில் செல்லும் போதே உயர்நீதி மனறக்கிளையினை படம் எடுத்த திறமை பாராட்டுக்கு உரியது. மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடித்த அழகான தென் மதுரைக்கு - நெற்களஞ்சியம் தஞ்சையில் இருந்து - மதுரைக்கு - காவிரிக்கரையில் இருந்து வற்றாத (??) வைகைக் கரைக்கு வந்தது மகிழ்வினைத் தந்தது.
கல்லணை கண்கொள்ளாக் காட்சி
லால்குடி ஸ்ரீரங்கம் மலைக்கோட்டை - அததனையையும் படமாக கருவியிலும், நெகிழ்வாக நெஞ்சிலும் பதிந்து வந்து பகிர்ந்தது துளசியின் தனித் திறமை.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பதற்கேற்ப - உபசரித்த சங்கீதாவின் பணியாளரை மனதார - மகிழ்வாக நினைவு கூர்ந்த விதம் - அடடா -
மதுரை - நுழையும் போதே கலவரம் எனப் பயந்த மனம் - ஒன்றும் இல்லை என மகிழ்ந்த மனம் - பதிவர் சந்திப்பின் போது நெகிழ்ந்த மனமானது.
மதுரை சந்திப்பினைப் பற்றிப் பதிவு போடும் உரிமை துளசியிடம் இருந்த காரணத்தால் - நாங்கள் பதிவு போட வில்லை.
மனம் மகிழ்ந்து - சந்திப்பினை அசை போட்டு - மலரும் நினைவுகளை மறுபடியும் நினைத்து -பேசி மகிழ்ந்து ........ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
டீச்சர், உயில்ல என்ன எழுதியிருக்கீங்கன்னு இப்பவே பொண்ணுகிட்ட சொல்லிடுங்க. (கோகிக்குத்தானே எல்லாம்):)
வைகைக் கரை சந்திப்புகள் சிலுசிலுவென வீசும் தென்றல் காற்றாய் இருக்கின்றன.
கோகியை எனக்கு எழுதி வைப்பதாய் சொன்னதை மறந்து விடாதீர்கள் மேடம்:)! [ஹிஹி, நிச்சயமா இது சின்ன அம்மணியின் கேள்வியைப் பார்த்து செய்யும் நினைவூட்டல் இல்லை:)!]
வாங்க சீனா.
//மனம் மகிழ்ந்து - சந்திப்பினை அசை போட்டு - மலரும் நினைவுகளை மறுபடியும் நினைத்து -பேசி மகிழ்ந்து ........ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//
ஆஹா..... இப்படி வரிக்கு வரி.....
'அசைபோடுவது' பற்றிச் சொல்ல உங்களைவிட்டால் வேற யார்? :-))))
வாங்க சின்ன அம்மிணி.
//(கோகிக்குத்தானே எல்லாம்):)//
இல்லையா பின்னே? ஏன் வீண் சந்தேகம்?:-)))))
வாங்க ராமலக்ஷ்மி.
வைகையில் தண்ணீர் ஒரு கோடாட்டம் இருக்கு.
வசந்தகாலக் காற்றுதான் சிலுசிலுக்குது.
கோகியை இப்பவே வேணுமுன்னாலும் அனுப்பி வைக்கிறேன்.
ஒரு அறையாவது முழுக்க முழுக்க ஏஸி செஞ்சுக்கணும்.
23 டிகிரிக்கே தாங்கமாட்டான்.
தாமிரபரணியில் வெள்ளமாம்:)
அதுக்கு முன் போய் வந்திட்டீங்க.
மதுரைக்குப் போனா எங்க தங்கணும்னு அறிஞ்சுகிட்டேன். தகவலுக்கு நன்னி:)
வினோத் பையன் நம்பரும் வாங்கிக்கறேன். பொண்ணு அந்தப் பக்கம் போனாலும் போவா. உபயோகமா இருக்கு. தகவல் களஞ்சியம் கோபால் துணைவி வாழ்க.
செஞ்சுதான் மேடம் இருக்கு. தாராளமா அனுப்புங்க:))!
\\எழுபது ரூபாய்ன்னு திரும்ப ஆட்டோவோடு வந்தார். (முன்னாலே 'அதிகப்படியாக் கேட்டது' எண்பதுதான்!!)
\\
சரித்திரத்தின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது விஷயம் டீச்சர்..;))
Naaraigal iruppathu thanniyil, athuthan mithakkuthu. Appuram annan Gopalum anja nenjanthane!.
டீச்சர்!ஒரு பதிவுக்குள் எத்தனை விசயம் சொல்றீங்க!எல்லாமே மனசுக்குள்ள அசை போட்டுட்டு படிக்க வேண்டும்.
கோபால் என்ன பதிவரா போட்டோ எடுக்கனும் வழியில் என்ன இருக்குன்னு பாத்து வச்சுக்கிட்டு இருக்க..அதான் தியானம்.. :))
சங்கீதால அத்தனை உபசரிப்பா.. .. பாருங்க என்ன இருந்தாலும் நம்ம ஊருன்னா நம்ம ஊருதான்..
ஹிஹி, சாப்பிடும் போது புத்தரை நினைக்க வேணாம். மனைவியோடு ஷாப்பிங்க் போகும் போது மட்டும் தான் அவரை நினைக்கனும்னு அவரே சொல்லி வெச்ச்ருக்காரு. :))
@ரா ல, நாங்க தான் ஊருக்கே ஏசி போட்டு வெச்ச்ருக்கோமே, அதை டீச்சருக்கு சொல்லுங்க. (என் ஷேர் எவ்வளவுன்னு தனி மெயிலில் சொல்லவும்) :))
cheers
ambi
ப்ளாக்கர் தகராறுன்னு தனி மடலில் நம்ம அம்பி அனுப்பிய பின்னூட்டம் இது.
புல்லரிச்சுப் போச்சுப்பா.... கடமை உணர்ச்சியை நினைச்சு:-))))
எந்த போஸ்டிங்ன்னு பார்க்காமல் இங்கே போட்டுருக்கேன்.
வாங்க வல்லி.
விவரம் தனி மடலில் அனுப்புறேன்.
வாழ்த்துக்கு நன்றி:-))))
ராமலக்ஷ்மி,
மெய்யாலும் அனுப்பிருவேன்,ஆமாம்.
பெர்ஷியன் ப்யூர் பெடிக்ரீ ப்ளாக் கேட்.
வெட் கிட்டே கேட்டு, ஏற்பாடு பக்காவா செஞ்சுருங்க.
வாங்க கோபி.
எப்படியும் நூறுதான் கொடுக்கப்போறார். கொடுக்கவும் கொடுத்தார். அப்புறம் என்ன ஏ..... மாத்தல்?
ஒருவேளை.... ஒரே ஊர்மக்கள் எல்லாம் இப்படித்தானோ?
நம்ம பொட்டியைச் சுமக்க முதல் ஆட்டோவுக்குக் கொடுத்து வைக்கலை:-)))
வாங்க ஐஆம் கூல்.
முதல் விஜயமா?
நல்வரவு.
'அஞ்சா நெஞ்சன்' இல்லைன்னா 35 வருசம் குப்பை கொட்டி இருக்கமுடியுமா அவர்?
துணிஞ்சகட்டை:-)
வாங்க ராஜநடராஜன்.
படிச்சுட்டுத் தூக்கிப்போட இது வெகுஜனப்பத்திரிக்கையா என்ன?
ஆழ்ந்து படிச்சு அசை போடணும். எல்லாம் சரித்திரமப்பா:-)
வாங்க கயலு.
சரியாச் சொன்னீங்க.
பதிவர் ஆன பிறகு கண்ணையும், காதையும், கவனத்தையும் கூர்மையா வச்சுருக்கணும் இல்லையா:-)
நிறைய நல்லவர்களைச் சந்திச்சேன்ப்பா.
வணக்கம் துளசி டீச்சர்,
இந்த வலை பூவுக்குள் நான் ஒரு புது வரவு, உங்களோட மற்றும் பலரின் பதிப்புகளை தவறாமல் படிப்பதுண்டு. இனி சுற்றி சுற்றி வருகிறேன் .
நன்றி
போடிநாயக்கனூர் (அதுதானே உங்க
புக்ககம்?) போனீங்களா?
அப்புறம் அஞ்ச நெஞ்சரை கடைசி வரை பார்க்கவே இல்லியா
// வல்லிசிம்ஹன் ..... தகவல் களஞ்சியம் கோபால் துணைவி வாழ்க //
வழிமொழிகின்றோம்
//புல்லரிச்சுப் போச்சுப்பா.... கடமை உணர்ச்சியை நினைச்சு:-))))//
'அம்பி உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையாஆஆ..’ன்னு புல்லரிச்சுப் போகாதீங்க மேடம்.
//எந்த போஸ்டிங்ன்னு பார்க்காமல் இங்கே போட்டுருக்கேன்.//
இந்த போஸ்டுக்கேதான்...
//@ரா ல, நாங்க தான் ஊருக்கே ஏசி போட்டு வெச்ச்ருக்கோமே, அதை டீச்சருக்கு சொல்லுங்க. (என் ஷேர் எவ்வளவுன்னு தனி மெயிலில் சொல்லவும்) :))//
பாருங்க பாருங்க எவ்வளவு விவரமா இருக்காருன்னு:)))! எனக்குக் கோகி மட்டுமே போதும்னுட்டிருக்கேன். இவர் என்னடானா சின்ன அம்மணி சொன்னாப்லே 'எல்லாம்' கோகிக்குத்தான்னு கணக்குப் பண்ணிக்கிட்டு பங்குக்கு வேற வாரார்:)!
அடடா, மதுரை விஜயமுமா?...
கோபால் சார் மதுரையா.. சூப்பர்....அடுத்த பகுதிகளுக்கு வெயிட்டிங்.
வாங்க 'அது ஒரு கனாக் காலம்.
நல்வரவு, நம்ம வகுப்புக்கு வந்ததுக்கு.
ஆமாம்...எதுக்கு இம்மாம் பெரிய புனைப் பெயர்?
சுருக்கிறலாமா, அ.ஒ.க?
(எங்க பூனையின் பெயரையே சுருக்கிக் கூப்புடுவோம். கோகி என்னும் கோபால கிருஷ்ணன்)
வாங்க சிஜி.
பின்னே? தப்ப முடியுமா? :-))))
வாங்க தீப்பெட்டி.
ஏன் பார்க்காம? அதான் ஊர்முழுக்க அவரும் அவரோட தங்ஸ்மா ஜொலிக்கிறாங்களே..... ராட்சஸ ஸைஸ் டிஜிடல் பேனர்களிலே!
பேனர்களா படம் எடுத்துத் தள்ளி இருக்கேன். அதுக்குன்னே ஒரு பதிவு போடணும். அடடா...என்ன மாதிரி சுலோகன்கள்!!!!
வாங்க நான் நரேந்திரன்.
வழி மொழிஞ்சதுக்கும் நன்றி:-)
வாங்க ராமலக்ஷ்மி.
என்னத்தை ஊரே ஏஸின்னு சொல்றீங்க? அங்கேயும் ஏப்ரல் மே யில் கொதிக்குதே(-:
வாங்க மதுரையம்பதி.
இந்த முறை மதுரையை ரொம்ப எழுதலை.
http://thulasidhalam.blogspot.com/2006/03/blog-post_24.html
http://thulasidhalam.blogspot.com/2006/03/blog-post_31.html
http://thulasidhalam.blogspot.com/2006/04/blog-post_03.html
இதையெல்லாம் ஒரு பார்வை பார்த்துருங்க எதுக்கும்:-))))
//மதுரை சந்திப்பினைப் பற்றிப் பதிவு போடும் உரிமை துளசியிடம் இருந்த காரணத்தால் - நாங்கள் பதிவு போட வில்லை.//
ஹி ,, ஹி .. ஆமா .. அதுனாலதான். இல்லேன்னா கிளப்பி இருந்திருப்போமே .. இல்ல, சீனா?
வாங்க தருமி.
அதெல்லாம் நம்பிட்டொம்லெ:-)))))
Post a Comment