Thursday, April 09, 2009

தஞ்சைக்கு நோ, திருச்சிக்கு எஸ்...... (2009 பயணம் : பகுதி 9)

எட்டுமணிக்கே 'வீட்டைக் காலி செஞ்சுட்டு'க் கிளம்பிறலாமுன்னு திட்டம். பொழுது விடிஞ்சதும் குளிச்சுட்டு,மூட்டை முடிச்சுகளைக் கட்டிவச்சுட்டு, கடைசிச் சுத்தாக் கிராமத்தைச் சுத்துனேன். மான்கள், வெள்ளை வாத்துக்கள், (அன்னம்?) வான்கோழிகள், பசுமாடுகள், கன்னுக்குட்டிகள், நம்ம வெள்ளச்சு, மரங்கள், செடிகள், சிலைகள், இப்படி எல்லாருக்கும் 'போயிட்டு வரேன்' சொல்லியாச்சு. இந்தக் கோடிமுதல் அந்தக் கோடிவரை எல்லா வீட்டிலும் புகுந்து புறப்பட்டாச்சு(மனசுக்குள்ளில்தான்.சில வீடுகளில் 'மக்கள்' வசிக்கிறாங்களே) கலைக்கூடத்துக்குப் பக்கத்து வளாகத்துலே ஊஞ்சல் ஆடியாச்சு. மறுபடியும் எல்லாத்தையும் க்ளிக்கோ க்ளிக்குன்னு க்ளிக்கியாச்சு. பலா மரத்துலே பிஞ்சு விட்டுருக்கு!!!

தேங்காய் மட்டையைக் கொஞ்சம் உரிச்சுப் பார்த்தேன்

மொட்டை மாடியில் சூரியன் சூட்டுலே சுடுதண்ணி காய்ச்சும் ஏற்பாடு வேற!
வெராந்தாவில் இருந்த மூடுபல்லக்கைப் பார்த்த நாள் முதல், 'அதுலே நந்தினி போறதையும்,திரையை விலக்கி, குதிரையில் வரும் வந்தியத்தேவனைப் பார்ப்பதையும், மதுராந்தகத்தேவர் ஒளிஞ்சுக்கிட்டு போறதையும்' இன்னொருமுறை மனக்கண்ணிலே பார்த்தாச்சு.
(நம்மூட்டுத் திண்ணையில் கடைசியா ஒரு முறை)

காலை உணவை முடிச்சுக்கிட்டு வரவேற்பு வந்தப்ப அங்கே, வெளித்திண்ணையில் ஒரு தம்பதிகள் சிரிச்ச முகத்தோட, 'எல்லாம் வசதியா இருக்கா?'ன்னு கேட்டாங்க.

"அமோகமா இருக்கு. நீங்கதான் இதுக்கு உரிமையாளரா? எப்படி இப்படி ஒன்னு ஆரம்பிக்கணுமுன்னு எண்ணம் வந்துச்சு?"

"ஐயோ.... நாங்கள் உரிமையாளர்கள் இல்லை. ஆரம்பிச்சது இன்னொருத்தர். நாங்க இதைக் கொஞ்ச நாளா மேனேஜ் பண்ணறோம். அவ்ளோதான்.."

இங்கேயேவா தங்கி இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, அவுங்க ஜாகை கும்பகோணமாம். தினமும் வந்து போவாங்களாம்.

இதுக்குள்ளே நம்ம வண்டியும் வந்துருச்சு. சொல்லிட்டுக் கிளம்பினோம்.
என்னதான் மனதை மயக்கும் சூழல்ன்னு சொன்னாலும், நாலு நாளுக்கு மேலே தங்கினால் கொஞ்சம் போர் அடிச்சுரும். நம்ம வருங்காலச் சந்ததிகளுக்குப் பழைய கிராமம் எப்படி இருக்குமுன்னு காமிக்க இந்த நாலு நாளே போதும்.
அச்சச்சோ...... இப்படி வாழைப்பூ வீணாக்கிடக்கே..... வடை மட்டும் செஞ்சால்.......ஹூம்

இதை ஆரம்பிச்சது Steve Borgia என்றவர். 1896 வது வருசம் கட்டப்பட்ட பங்களாதான் இந்த ரெஸ்ட்டாரண்ட் இருக்கும் கட்டிடம். இதை எப்படியோ, எப்பவோ பார்த்து மனசுலே வச்சுக்கிட்டவரோட கனவுதான் இந்த ஆனந்தம். முதலில் ஸ்டெர்லிங் ரிஸார்ட்ஸ்ன்னு பெயர் இருந்துச்சு. இப்போ சில வருசங்களாப் பெயர்மாற்றம் செஞ்சுருக்காங்க. (இது மட்டும்தான் ஒருவேளை கை மாறி இருக்கோ என்னமோ? மத்த இடங்களில் ஸ்டெர்லிங் என்ற பெயரோடுதான் இயங்குது) டைம்ஷேர் பண்ணிக்கும் ஏற்பாடுகளோட அங்கத்தினர்களுக்காக ஆரம்பிச்சது. பழைய பொருட்கள் மீது தீராத மோகம். அங்கங்கே சேகரம் செஞ்சதையெல்லாம் காட்சியகமா இவருடைய ஹொட்டேல்களில் பார்வைக்கு வச்சுருக்கார். சிவன் சுவர்சிற்பம் இருக்கும் முற்றத்தில்தான் காலையில் யோகா வகுப்புக்கள் நடக்குதாம்.
கிட்டத்தட்டப் பதினைஞ்சு வருசமாயிருக்கு, இப்படி, இந்தக் கிராமத்தைக் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்த!
(வரும்வழியில் ஒரு இடத்தில் வம்புவேணாமுன்னு ஆளுக்குப் பப்பாதி)

நவ கிரகக்கோயில் வரிசையில் இன்னும் பாக்கி வச்சுருக்கும் சந்திரனுடையத் தலமானத் திங்களூருக்குப் போய்க்கிட்டு இருக்கோம். கும்பகோணப் பகுதியில் உலா முடிஞ்சது இப்போதைக்கு. திங்களூர், திருவையாறு வட்டத்தைச் சேர்ந்தது. கைலாசநாத ஸ்வாமி திருக்கோயில். இந்த ஏப்ரல் மாதம் 9 ஆம்தேதி லட்சார்ச்சனை நடக்குதாம். காசைக் கொடுத்துக் கடவுளின் அருளை வாங்கிக்குங்கோன்னு சொன்னாங்க சந்திரனுக்கு முன்பாக நின்னுக்கிட்டு இருந்த குருக்கள். நம்ம விலாசமும் வாங்கிக்கிட்டு, ரஸீதும் கொடுத்தாங்க.

அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான அப்பூதியடிகள் அவதரித்தத் தலம் இந்த ஊர். இவருக்கு 'அந்த சமயக் குரவர், நாலு பேர்' மேல் ரொம்ப மரியாதை. அதிலும் திருநாவுக்கரசர் மேல் இன்னும் கூடுதலான அன்பும் மரியாதையும். இத்தனைக்கும் இருவரும் சந்திச்சதே இல்லை.

அப்பூதியடிகள், சிவனடியார்களுக்கும், ஊர் மக்களுக்கும் தொண்டு செய்யும் வகையில் பலதர்மக் காரியங்கள் செஞ்சுக்கிட்டு இருக்கார். கோவிலில் திருப்பணி, தர்மச்சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல் இப்படி. இவை எல்லாத்துக்கும் திருநாவுக்கரசர் பெயரையே சூட்டி இருக்கார். ( கோயிலுக்கு, இத்துனூண்டு ட்யூப் லைட் போட்டுக் கொடுத்துட்டு அதில் தன் முழுப்பெயரையும் எழுதிவைக்கும் விளம்பரம் இல்லாத காலக்கட்டம்)

ஒருசமயம், திருநாவுக்கரசர், கைலாயநாதர் கோயிலுக்குத் தரிசனம் செய்ய முதல் முறையா இந்த ஊருக்கு வர்றார். வழியெல்லாம் அவர் பெயரில் நடக்கும் தர்மங்களைப் பார்த்து, நம்ம பெயரில் இவ்வளவும் நடத்தும் அந்த 'அப்பாவி' யாரா இருக்கும் என்ற யோசனையுடன், அங்கே இங்கே விசாரிச்சுக் கடைசியில் அப்பூதியடிகளைப் பார்த்தார். தான் 'யார்' என்று சொல்லாமலேயே,

"ஏம்ப்பா.... உன் கைக்காசைப் போட்டுச் செய்யும் தர்மங்களுக்கு, வேற யார் பெயரையோ வச்சு அனாவசியமா அவருக்குப் புகழ் சேர்த்துக்கிட்டு இருக்கியே...."

அப்பூதியடிகளுக்குக் கோவம் வந்துருச்சு. 'நெத்தி நிறையப் பட்டையைப் போட்டுக்கிட்டுச் சிவனடியார் வேசத்தில் வந்து நின்னுக்கிட்டு, திருநாவுக்கரசரையா, யாரோன்னு சொல்றீர்? அவருடைய பெருமைகளைக் கொஞ்சமும் அறியாத உம்மிடம் போய் என்ன பேச்சு வேண்டி இருக்கு? சரி. திருநாவுக்கரசரைப் பத்திச் சொல்றேன் கேட்டுக்கோ' ன்னு ஒரு பிரசங்கம் பண்ணிட்டு, 'ஆமாம். நீர் யார்? உம் பெயர் என்ன?'ன்னு கடைசியில் கேட்டுருக்கார். 'அந்தத் திருநாவுக்கரசன்' நாந்தான்னு இவர் சொல்ல........அப்படியே காலில் விழுந்து வணங்கினார். அதுக்குப்பிறகு வீட்டுக்குச் சாப்பிடக்கூட்டிப் போனாராம்.

விருந்தாளிக்காக, வீட்டுப் பின்தோட்டத்தில் வாழைஇலை பறிக்கப்போன மகனைப் பாம்பு கடிச்சுருச்சு. செத்துபோயிட்டார். சாவு நடந்த வீட்டில் சாப்பிடமாட்டாங்களேன்னு, இறந்த மகனை ஒளிச்சு வச்சுட்டு, திருநாவுக்கரசருக்கு விருந்து பரிமாறியிருக்காங்க அப்பூதியடிகளும் அவர் மனைவியும். ஆனாலும் அவுங்க மனசிலே இருந்த சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துருச்சு. விவரம் தெரிஞ்சதும் நாவுக்கரசர், இறந்த பையனோட பிணத்தைத் தூக்கிக்கிட்டுப்போய்க் கோவில் வாசலில் போட்டுட்டு, பத்துப் பாடல்கள் பாடினார். இறந்த பையன், தூங்கியெழுந்தாப்பல கண்ணை முழிச்சுட்டார். 'விடம் தீர்த்த திருப்பதிகமு'ன்னு இந்தப் பாடல்களுக்குப் பெயர்.

நாங்களும் சாமியைக் கும்பிட்டோம். இன்னிக்கு நம்ம பயணத்திட்டத்துலே ஒரு மாற்றம். முதலில் போட்டத் திட்டம், தஞ்சாவூர் போயிட்டு, அப்படியே . நம்ம ரஷ்ய மருத்துவர், 'தெரியலை' புகழ் ராமநாதனையும் எட்டிப்பார்த்துக்கலாமுன்னு..... ஆனால்.... ராம்ஸ்க்குத் தகவல் தெரிவிக்கலை. அப்புறம் சொல்லலாமுன்னு .... தள்ளிப்போட்டுக் கடைசியில் தொலைபேசி எண்ணை எழுதி வச்சுக்காமச் சொதப்பிட்டேன். தஞ்சாவூர்லே போய் லோலோன்னு அலைய வேணாம். ஏற்கெனவே பார்த்த ஊர்தானே.... பேசாம மதுரைக்குப் போயிரலாமுன்னு பேசிக்கிட்டோம். தஞ்சாவூர்லே இருந்து மதுரைக்குப் பஸ் பிடிச்சுக்கலாமுன்னு.....

அப்பத்தான் வினோத் சொல்றாரு..... 'திருச்சிக்குப் போயிட்டோமுன்னா அஞ்சு நிமிசத்துக்கு ஒரு வண்டி இருக்கு மதுரைக்கு'

அப்ப இவ்வளவுதூரம் வந்ததுக்குப் பக்கத்துலே (அஞ்சாறு கிலோமீட்டர் தூரம்) திருவையாறு பார்த்துக்கிட்டு, திருச்சிக்குப் போயிரலாமுன்னு தீர்மானிச்சுட்டு, மதுரையில் மறுநாள் நடக்கவிருக்கும் இண்டர்நேஷனல் பதிவர் மாநாட்டை, இன்னிக்கு மாலையே நடத்தும் எண்ணத்தில் மதுரை மக்களுக்குத் தகவல் அனுப்பினோம்.

மூலவர் பஞ்சநதீஸ்வரர். அம்பாள் தர்மசம்வர்தினி என்ற திரிபுரசுந்தரி. (நம்ம திருப்பு ஞாபகம் வருதா?) தமிழிலே சொன்னால், ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும். பாடல் பெற்றத் தலம். இறைவனின் திருக்கைலாயக் காட்சியை திருநாவுக்கரசர் இங்கேதான் கண்டாராம். அப்போப் பாடுனதுதான்....

'மாதர் பிறைகண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
போதோடு நீர்சுமந்தேத்திப் புகுவாரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமலையாறடைகின்றபோது
காதன் மடப்பிடியோடுங்களிறு வருவன கண்டேன்
கண்டேனவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்'
கோயில், ரொம்பவே பிரமாண்டமானது. 15 ஏக்கர் பரப்பளவு. அஞ்சு பிரகாரம். அழகான பெரிய திருக்குளம். பொன்னியின் செல்வன், வேங்கையின் மைந்தன் எல்லாம் வாசிச்சு, இந்தக் குளக்கரையில்தான் இளவரசியைச் சந்திக்கக் கதைநாயகன் வருவார் அது இதுன்னு கற்பனையையும் வாழ்க்கையையும் பிரிக்கத் தெரியாத ஒரு மயக்கத்துலே ...... இருந்தது, நினைவுக்கு வருது.
இந்த ஊருக்கு என் மனசில் ஒரு தனி இடம் இருக்கு. நானும் தமிழ்ப் படிக்கப்போறேன்னு ஒரு மூணுமாசம் குப்பை கொட்டுன இடம். (நல்லவேளை தமிழ் தப்பிச்சது) மேற்கு கோபுரவாசலில் நுழைஞ்சுக் கோயிலின் தெற்குவாசல் வந்துட்டாக் கடைவீதி. அங்கிருந்து திருமஞ்சனவீதி வழியாத் தினமும் படிக்கப் போய் வந்ததெல்லாம் ....கனாக்காலம்.
தெற்குக் கோபுரவாசலில்தான் ஆட்கொண்டார் சந்நிதி இருக்கு. கோயிலைவிடவும் இந்தக் குங்கிலியம் மணக்கும் ஆட்கொண்டாரைப் பார்க்கவும், கோபாலுக்கு இவரைக் காமிக்கவும் ஆவலா இருந்தேன். நாப்பது வருசத்தில் என்னென்னவோ மாற்றங்கள். எல்லா இடத்திலும் கம்பித் தடுப்பு, வரிசைக்குன்னே ஆகி இருக்கு. தெருப்பக்கம் இருக்கும் குங்கிலியக் குண்டத்துக்கும் கம்பிக்கூண்டு. முந்தியெல்லாம் குங்கிலத்தூளைக் கையில் வாங்கித் தூவுவோம். இப்போ நாகரீகம் வந்துருச்சே..... காகிதத்தில் மடிச்சுக் கொடுக்கும் குங்கிலியத்தூளைக் கொட்டிட்டு, அந்தக் காகிதத்தையும் அடுப்புலே போடும்விதமா... குண்டத்துலே போட்டுட்டுப்போறாங்க மக்கள். ஒரு காலத்தில் குங்கிலிய மணம் மட்டுமே இருந்த இடத்தில், தெருக்குப்பைகளை எரிக்கும்போது வரும் காகித வாசனையும், கருப்புப்புகையும்(-:

எரிச்சலோடு கார் நிற்கும் இடம் வரும்போது தெருவிலே இந்த வட்டங்களைக் காயவச்சுருந்தாங்க...... என்னன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப நம்ம வகுப்புலே இதைப்பற்றித் தெரிஞ்சவுங்க...கையைத் தூக்குங்க....

தொடரும்.....:-)

47 comments:

said...

எங்கள் ஊருக்கு போகாமல் வந்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

ராமராதன் ஹாஸ்பிட்டல்னு ஒரு பஸ் ஸ்டாப் இருக்கு அந்த டாக்டரா?

said...

டீச்சர் இப்பதான் லின்க் பாத்தேன் இது வேற ராமநாதன்.

said...

/இப்ப நம்ம வகுப்புலே இதைப்பற்றித் தெரிஞ்சவுங்க...கையைத் தூக்குங்க..../


தெரியல டீச்சர்..

நீங்கள் தங்கியிருந்த ஆனந்தம் இல்லத்தின் இணையத்தள முகவரி கிடைக்குமா.?

அன்புடன்
அரவிந்தன்

said...

முதல்ல மீ த பஸ்ட் போட்டுக்கறேன்> ரொம்ப நாள் ஆச்சு! வர வர இந்த திரட்டிகள் தொல்லை அதிகமாகிடுச்சு! அதுக்க எல்லாம் வந்து மீ த பஸ்ட் போடும் போல இருக்கு:-))

said...

வந்துட்டாருய்யா குடு குடுன்னு எப்படித்தான் வேர்க்குமோ????

said...

அட அது இசையை மூச்சுகாத்தா சுவாசிக்கும் ஊர் ரீச்சர். மங்கள இசையின் பக்க வாத்தியம் அதாவது பக்கா வாத்தியம் தவில் கருவியின் வலந்தலை தட்டு(பெரிய தட்டு) தொப்பி தட்டு (சின்ன தட்டு)க்கு உண்டாண தோல் சுத்தப்படும் வளைன்னு சொல்ல படும் பாகம். அது எதால செஞ்சதுன்னா மூங்கி சிம்புகள் + புளிய விதை கோந்து+ மெல்லிய கதர் வேஷ்டி கலவை! சரியா??

said...

வாங்க குடுகுடுப்பை.

கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே!!!!!

ஒரு பத்து கிலோமீட்டர்லே தஞ்சையைக் 'கோட்டை' வுட்டுட்டேன்(-:

said...

வாங்க அரவிந்தன்.

முகவரியைத் தனிமடலில் அனுப்பறேன்.

said...

வாங்க அபி அப்பா.

குடுகுடுப்பைக்காரங்க, நடுராத்திரி முழுசும் ஊரை வலம் வருவாங்க:-)


வட்டத்தின் விடை மிகச்சரி.

இன்னும் நாலுபேர் யோசிக்கட்டுமுன்னு பதிலை வெளியிடலை இப்போதைக்கு.


மார்க் நூத்துக்கு நூறு:-)))

said...

சபாஷ் ரீச்சர்! (எனக்கு சொல்லிகிட்டேன் சபாஷ்:-))

said...

குளக்கரையில் வந்தியத்தேவன் காத்துகிட்டிருக்க மாதிரி இருக்கு...இளவரசி(மகாராணி) எங்கே?

said...

அந்த வளையங்கள் பெரிய பாணைகள் வைக்கப்பயன்படும் ஸ்டாண்டா..?

said...

ரீச்சர்! நீங்க தங்கி இருந்த ஆனந்தம்ல இருந்து திங்களூர் போகும் வழியிலே உங்க ரிசார்ட்க்கு அரை கி மீ தூரத்திலே கொட்டையூர்ன்னு ஒரு ஊர். அங்க அரசு ஓவிய கல்லூரி இருக்கு. அதிலே சும்மா 10 நிமிஷம் ஒரு ரவுண்ட் விட்டிருக்கலாம். ஆஹா ஆஹா அந்த பழைய மாணவர்களின் பிராஜக்ட் ஒர்க் எல்லாம் அருங்காட்சியகமா வச்சிருக்காங்க. சிற்பம், ஓவியம், டெரகோட்டா எல்லாம். உங்க மேமிராவுக்கு செம தீனியா இருந்திருக்கும். தவிர திங்களூர் போகும் போது வலப்பக்கம் வாழை தோப்பும் இடப்பக்கம் தென்னந்தோப்பும் அது தவிர திங்களூர் வரும் முன்ன காவிரி ஆறும் அந்த சட்ரஸ் பிரியும் போது அது சுழித்து கொண்டு போடும் குத்தாட்டமும் என்ன ஒரு அழகு! காரை நிப்பாட்டி விட்டு அதிலே நான் கால் நனைக்காமல் போகவே மாட்டேன்!

Anonymous said...

டீச்சர், அந்த வட்டங்களைப்பாத்தா தலைல வைக்கற சும்மாடு மாதிரி இருக்கு. சூடு தாங்க பாத்திரம் வைக்கற மாதிரி கொஸ்டர் மாதிரியும் இருக்கு

Anonymous said...

திங்களூர் நான் போனது மே மாசம். அபி அப்பா சொன்னமாதிரி காவிரி இல்ல. வறண்டு போய் இருந்துது. ஆனா வாழை தோப்பு எல்லாம் இருந்துது

said...

வாங்க நான் நரேந்திரன்.

மகாராணிதான் இப்போ ஃபோட்டோகிராஃபர்-))))

said...

அரவிந்தன்,

கூட்டுக்குடும்பம்தான் இப்போ இல்லையே.... அப்புரம் ஏது பெரிய பானை?

said...

அபி அப்பா,
கொட்டையூரைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன்.
எப்படியும் இன்னொருக்கா அங்கே போகணும்தான். மாயூரம் பாக்கி இருக்கே.

மேலும் கூந்தலூர் பத்திக் கேட்டப்ப,அங்கே பக்கம்தான்னு வினோத் சொன்னார். இடம் வந்தாச் சொல்லுங்கன்னு சொல்லிவச்சேன். மறந்துட்டார் போல.

இப்போ. இந்த கிரகங்களால் ஓடவேண்டியதாப் போயிருச்சு:-)))

said...

வாங்க சின்ன அம்மிணி.

உங்களுக்கு மார்க்?

பூஜ்ஜியம்!

said...

//திங்களூர் வரும் முன்ன காவிரி ஆறும் அந்த சட்ரஸ் பிரியும் போது அது சுழித்து கொண்டு போடும் குத்தாட்டமும் என்ன ஒரு அழகு! காரை நிப்பாட்டி விட்டு அதிலே நான் கால் நனைக்காமல் போகவே மாட்டேன்!
//


கன்னா பின்னாவென வழிமொழிகிறேன்!

அண்ணே அந்த லொக்கேஷன் அதுக்கு போறதுக்கு முன்னால் வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் தொடரும் மரங்கள் வயல்வெளிகள்

ஆஹா!

ஆஹாஹா!

காவிரியின் செழுமை இங்கு காணமுடியும் (தண்ணிவரும்போது!)

said...

ஒரே பசுமை. கூந்தலூர் விட்டுப் போச்சா. அடடா.
நீங்க மருத்துவரையும் பார்க்கலையா. அந்த வட்டங்கள் என்னன்னு தெரியலையேப்பா.
திண்ணை ரொம்ப அழகா இருக்குபா.
திருவையாறு படங்கள் ரொம்பவே அழகா இருக்கு. கதை,தேவாரம்னு தூள் கிளப்பிட்டீங்க:)

said...

//துளசி கோபால் said...
அபி அப்பா,
கொட்டையூரைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன்.
எப்படியும் இன்னொருக்கா அங்கே போகணும்தான். மாயூரம் பாக்கி இருக்கே.

/

ரைட்டு

அல்லாரும் வெயிட்டீங்கல இருக்கோம்

வரவேற்பெல்லாம் சும்மா தடபுடலா நடக்குறதுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்யறதுக்கு நீங்க கண்டிப்பா முன்னாடியே டேட் கன்பார்ம் பண்ணிடுங்க டீச்சர்!


வரவேற்புக்குழு தலைவர்/செயலாளர்
சீமாச்சு அண்ணே

பொருளாளர்
அபி அப்பா

ஓடியாடி ஒர்க் பண்ணுற மாதிரி பாவ்லா காட்ட

அன்புடன் ஆயில்யன்

:)))))

said...

திண்ணை ரெஸ்ட் நல்லா இருக்கே.. ;)
மாயூரத்துக்கு நாங்க இருக்கற மே ஜூன் மாசமா ஒரு முறை வாங்க..

said...

டீச்சர், அந்த வட்டங்கள் எல்லாம் இளவட்டங்களா? மாவட்டங்களா? :D

காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன் பாட்ட கே.ஆர்.எஸ் பாடச் சொல்லிக் கேளுங்க. :-)

உருசுய மருத்துவர் தஞ்சைக்குப் போயாச்சா.... சூப்பர். அவருடைய எண்ணை எனக்கு மயிலார் வழியா அனுப்பி விடுங்க.

Anonymous said...

அந்த வளையகள் : தவிலுக்கு பக்கவாட்டில் தோலை இறுக்க உதவும் Clamps

said...

ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடமா!! ;)

உங்க வீட்டு திண்னை நல்லாயிருக்கு ;)

said...

ரீச்சர் படிச்சிட்டேன்..

கோயில், கோயிலா சுத்தி புண்ணியம் தேடும் அளவுக்கு யாருக்கு என்ன கெடுதல் பண்ணினீங்கன்னு தெரியல..

ஏதோ உங்க புண்ணியத்துல நிறைய கோவில் தல வரலாறையெல்லாம் படிச்சுக்குறோம்..

நல்லது ரீச்சர்.. நல்லது..

ஒரு சின்ன சந்தேகம்.. இந்தப் பதிவில் கொத்தனாரை காணவில்லையே.. என்னாச்சு அவருக்கு.. லீவுல இருக்காரா..?

said...

வாங்க யாரோ ஒருவன்.

உங்க விடை சரி. உடனே வெளியிடாமல் இருந்ததுக்கு மன்னிக்கணும். வகுப்பு மாணவர்கள் கொஞ்சம் யோசிக்கட்டுமேன்னு பார்த்தேன்.

said...

வாங்க ஆயில்யன்.

எப்படியோ பொறுப்பை மத்தவங்க தலையிலே சுமத்தியாச்சு!

தன்னிகர் தலைவனாகும் தகுதி வந்துருச்சு உங்களுக்கு:-))))

said...

வாங்க வல்லி.

சில கோயில்களில் சரித்திரங்கள் அப்படியே நம்மையும் உள்ளே இழுத்துருதேப்பா.

கூந்தலூருக்கு நேரம் வரலை(-:

said...

வாங்க கயலு.

சரியான அளவுள்ள திண்ணை. நாங்க மூணுபேர் எப்படிப் பங்கிட்டுக்கிட்டோம் பாருங்க!

மே ஜூன்? கொளுத்துமுல்லே(-:

said...

வாங்க ராகவன்.

ரெண்டு இளவட்டங்கள் வட்டங்களுக்குப் பொருள் சொல்லிட்டாங்க பாருங்க!!!!

மருத்துவர் ஐயா எண்ணைக் கண்டுபிடிச்சதும் மயிலை அனுப்பறேன்.

இருக்கு ஆனால்..... எங்கே வச்சேன்னு தெரியலையே....

said...

வாங்க கோபி.

இடப்பெயர்ச்சிதான்:-)))))


பெரிய திண்ணைவச்ச வீடும் இருக்கு.
ஆனா நம்மது அளவானது. அளவான குடும்பத்துக்கு ஏத்தது:-)

said...

வாங்க உண்மைத் தமிழன்.

ஏசு நாதர் எப்படிப் பாவிகளுக்காக உயிரைவிட்டாரோ அதே போல பதிவுலக அன்பர்களுக்குப் புண்ணியம் வரட்டுமேன்னு கோவில்கோவிலாப் போறேன்:-))))


கொத்ஸ், லீவில் இருக்கார்.

said...

///தேங்காய் மட்டையைக் கொஞ்சம் உரிச்சுப் பார்த்தேன்.///

வீர விளையாட்டு ?

said...

mukkaniyil moontaavathu kani enke

said...

mukkaniyil moontaavathu kani enke?

said...

திண்ணைப் படம் அழகு.

said...

டீச்சர்..அந்தப் பல்லக்கு சூப்பரா இருக்கு..ஏறிப்பார்க்க விடுறாங்களா? நீங்க ஏறிப்பார்த்தீங்களா?

said...

ரீச்சர்,

படங்கள், திருவையாறு கதை, பதிகம் அப்படின்னு கலக்கலோ, கலக்கல்...
அடுத்து எங்க ஊரா, சரி, சரி...நாளை வந்து பார்க்கறேன் :-)

said...

வாங்க தீப்பெட்டி.

அதெல்லாம் விளையாடாம வுட்டுருவோமா?

கிட்டிப்புள்ன்னு சொல்லும் (வீர)விளையாட்டுலே நான் ஒரு காலத்தில் 'கில்லி' :-)))

said...

வாங்க ஷ்ருதி.

மூணாவது மட்டும் போதுமா?
எனக்கு மூணும் வேணும்:-))))

said...

வாங்க மாதேவி.

திண்ணைகள் எப்போதுமே அழகுதான். ஆனால்.... நாம்தான் இழந்துட்டோம்(-:

said...

வாங்க ரிஷான்.

ஏற விடமாட்டாங்க ஆனா...தூக்க விடுவாங்கன்னு நினைக்கிறேன்:-))))

(யானையைப் பல்லக்குலே ஏத்தமாட்டாங்கதானே?:-)))))

பொட்டிக் கதவைத் திறந்தா சிகப்பு வெல்வெட் போட்டுவச்சுருக்கும் மெத்தை இருக்கை ஜோரா இருந்துச்சு.
முதுகைச் சாய்ச்சு உக்காந்துக்கும் விதமா முதுகுப்பக்கம் ஒரு அணைப்பலகைகூட இருக்கு.

said...

வாங்க மதுரையம்பதி.

உங்க ஊரில் ரெண்டே நாள். ரொம்ப எழுதறதா இல்லை!

said...

ஆமாங்க, ‘உழைக்கும்’ [தேங்காய் மட்டை உரிக்கும்] படமும் பார்த்தாயிற்று:)!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நாளைக்கு ஒருத்தர் நாக்குமேல் பல்லைப்போடுவாரா.... நான் உழைக்கலைன்னு:-))))