Tuesday, April 28, 2009

நவமுன்னு ஆரம்பிச்சது தசத் திருப்பதிகளா ஆயிருச்சே.....(2009 பயணம் : பகுதி 17)

நவமுன்னு நான் நினைச்சதை இப்படித் தசமாக 'அவன்' முடிச்சுவைப்பான்னு நான் கண்டேனா என்ன? மணிவேற நாலாகப்போகுது. இன்னும் நாலு இடம் போகணும். திருப்புளியங்குடி அடுத்த இடம். ஸ்ரீ பூமி பாலகர் என்ற காயாசினவேந்தன். ரொம்பவே ஹாயாப் படுத்திருக்கார். நாபியிலிருந்து தாமரைத் தண்டு கிளம்பிப் பூத்துருக்கு. அதுலே ப்ரம்மா 'ஜம்'னு உக்கார்ந்துருக்கார். அருமையான தரிசனம். உள்பிரகாரம் சுத்தி வரும்போது அங்கே இருந்த ஒரு சாளரம் வழியாப் பார்க்கணுமாம். பார்த்தேன். ஹைய்யோ...... பெருமாளின் பாதங்கள். 'சிக்'கெனப் பிடிக்கணும் போல இருந்துச்சு. புதன் ஸ்தலம்.
வழியில் கண்டப் பச்சைவயலில் வெள்ளைப்பறவைகள்

எவ்வளவு அருமையாக இருக்கு பாருங்களேன், இந்த வழியில் பார்த்த வீடு


கிளம்பித் தொலைவிலி மங்கலம் வந்தோம். ரெட்டைத் திருப்பதிகளாம்.. ஊர்ன்னு ஒன்னும் இல்லை இங்கே. முதலில் இருப்பது ராகுவுக்குத்தான். அங்கே இருந்து ஒரு ஒரு கிலோ மீட்டர் போனால் கேதுவுக்கான கோவில். திரும்ப இதே பாதையில் தானே வரணும். முதலில் கேதுவுக்கே போனோம். இங்கு வரும்பாதை கோயிலோடு முடிஞ்சு போகுது. தேவர் பிரான் என்ற ஸ்ரீநிவாசன், நின்றே அருள்பாலிக்கிறார். கோவில் என்னமோ ரொம்பச் சின்னதுதான். முன் மண்டபத்தைத் தாண்டினால் சாமியைப் பார்த்துறலாம். . சுத்திவர விளை நிலங்கள்தான். ஆடுமாடு வந்து சல்லியம் செய்யாமல் இருக்க நல்லதா ஒரு கேட் போட்டு வச்சுருக்காங்க. ஆறரை வரை சந்நிதி திறப்புன்னு சுவரில் இருக்கு. ஆனால் அஞ்சரைக்கே நடை சாத்திடுறாங்க. நேரம் மாத்துனதை எழுத விட்டுப்போச்சோ என்னவோ!
இன்னிக்குக் காலையில், முதல் கோவில் பார்த்ததிலே இருந்து ஒரு பஸ் நிறைய பெங்களூருவில் இருந்து வந்திருக்கும் பயணிகள் நம்ம கூடவே அங்கங்கே தொடர்ந்துக்கிட்டு இருந்தாங்க. பொதுவா ஒருத்தரை ரெண்டு இடத்துலே பார்த்துட்டோமுன்னாவே, தெரிஞ்சவுங்கன்னு ஒரு சிநேகபாவம் வந்துருதுல்லே. அவுங்க பஸ் இங்கே நின்னுக்கிட்டு இருந்துச்சு. 'என்ன திடீர்னு மத்தியானம் உங்களைக் காணோமு'ன்னு ஒருத்தர் விசாரிச்சார். திருச்செந்தூர் போயிட்டோமுன்னு சொன்னோம். 'அடடா..... மிஸ் செஞ்சுட்டோமே'ன்னு அவருக்கு வருத்தம். அவுங்க டூர் ப்ரோக்ராமில் இல்லை போல (-:
இதுவும் போகும் வழியில் பார்த்த கோயில்தான். கேட் அடைச்சுருந்துச்சு.

ராகு ஸ்தலத்துக்கு வந்தோம். வெளியே மரத்தடி மேடையில் சின்ன அளவில் நாகர்களா இருக்காங்க. கூடவே சில சனி வாகனங்களும். கோணல் மாணலா சிலர் இழுத்து வச்சுருந்த நாகர்களைச் சரி பண்ணிவச்சேன். அப்போ ரெண்டு பைரவர்களும் வந்து நின்னாங்க. (இதெல்லாம் மதியம் திருச்செந்தூர் போகுமுன் வந்தமே, அப்ப)

அரவிந்த லோசனர். செந்தாமரைக் கண்ணன். அடடா..... பேரே எப்படிப் பிடுங்கித் தின்னுது பாருங்க. கோலமோ ஒரே 'இருப்பு'! தாயாரோ கருத்தடங்கண்ணி நாச்சியார். அழகான சின்னக் கோவில். தாமிரபரணியின் வாய்க்கால் ஒன்னு கோயிலுக்குப் பின்னம்பக்கம் ஓடுது.
இன்றைக்கான கடைசியாக் குளந்தையைப் பார்க்கிறதுதான் பாக்கி. பெருங்குளம் என்ற சிற்றூர். 'திருக்குளந்தை'க்கு வந்து சேர்ந்தோம். இன்னும் நடை திறக்கலை. வெளிப்புறம் விஸ்தாரமா இருந்த மண்டபத்தில் நம்ம 'பஸ் நண்பர்கள் 'கூடி இருந்தாங்க. நாமும் ஜோதியில் கலந்தோம். நெருக்கமாத் தொடுத்த மல்லிகைச் சரம் கொண்டுவந்து வித்தாங்க ஒரு பூக்காரம்மா. எட்டு ரூபாய் ஒரு முழம். இந்தியப் பயணத்தில் மட்டும்தானே பூச் சூட்டிக்க முடியும்? சான்ஸ் கிடைச்சால் விடலாமா? பெங்களூரு மக்களுக்கு இது ரொம்ப விலை அதிகமுன்னு ஒரு தோணல்.

நடுவில் இருந்த குட்டி மண்டபம் 'கஜ' பீடமாக இருந்துச்சு. அதுலே ஏறி உட்காந்து மணிக்கதவம் திறக்கக் காத்திருந்தோம். திருப்பதி பெருமாளைப்போலவே, ஸ்ரீநிவாசன் மூலவர். நின்ற திருக்கோலம். மார்பில் பச்சை மாமணி புரள சேவை சாதிக்கிறார். தாயார், சாக்ஷாத் நம்ம அலர்மேல் மங்கையேதான். உற்சவர்தான் இங்கே மாயக்கூத்தபிரான். ரொம்பவே அழகான விக்கிரகம்.

இங்கே அதிகாலை'' விஸ்வரூப தரிசனம் ஏழரைக்குத்தான். திருப்பதியில் என்னடான்னாப் பெருமாளைத் தூங்கவிடறதே இல்லை. நடுராத்திரிக்கே ரெண்டரைக்கு எழுப்பி விட்டுடறாங்க. நிம்மதியா ஒரு நாள் அவராலே இருக்கமுடியுதா? பாவம்.
பெருமாள் கோவில் பிரகாரங்களைச் சுற்றிவரும்போது கூண்டுக்குள் ஆழ்வார்களையும் பார்த்து சேவிச்சுக்குவோமில்லையா. இன்னிக்குக் காலையில் சுத்தும்போது பேச்சுவாக்கில் கோபாலுக்கு ஆழ்வார்களைப்பற்றிச் சொல்லி பனிரெண்டு பேர் இருப்பாங்கன்னேன். சொல்லிட்டு நானே எண்ணிப் பார்க்கிறேன், திக்குன்னு ஆகிருச்சு. பதினோரு பேர்தான் இருக்காங்க. எதையெடுத்தாலும் 'எண்ணிப் பார்க்கும் குணம்' இருக்கேன்னு இவர் சிரிக்கிறார். யார் இதுலே மிஸ்ஸிங்ன்னு கவனமாப் பார்த்தால்...... அது நம்ம ஆண்டாள்!

அதுக்கப்புறம் ஒவ்வொரு கோயிலிலும் கவனமா எண்ணிக்கிட்டே வந்தேன். எல்லாம் அந்த பதினொருவர். ஆழ்வார்களில் நம்ம ஆண்டாள் மட்டும்தான் பொண்ணு. என்னதான் ஆழ்வாரா இருந்தாலும் ஆண்கள் மத்தியில் தனியொருவளாய் நிற்க, 'அந்தக் காலத்து'ப் பொண்ணுக்குக் கொஞ்சம் கூச்சமாய் இருக்காதோ? அதான் தனிச் சந்நிதியில் ஆண்டாளம்மா இருக்காங்கன்னு சொல்லிவச்சேன். (சிவன்கோவிலில் இருக்கும் அறுபத்து மூவரில் பெண்கள் மூவர் இருப்பதால் அங்கே கூட்டத்தோடு கூட்டமா இருக்காங்க. த்ரீ ஈஸ் அ கம்பெனி. மேலும் தப்புத்தண்டா ஏதும் நடந்தாத் தட்டிக்கேக்க அந்த 'நாலு பேர்' இருப்பதால் மத்த எல்லாரும் இன்னும் பயபக்தியுடன் இருந்துருப்பாங்களே!)
'ராசி' கழுதை:-) ( போன பதிவுக்குப் போட்டுருக்கணும்)

இதுக்கு எதுக்கு அந்தக் காலம்...நான் படித்த(!) காலத்தில் எந்த ஊர்ப் பள்ளிக்கூடமுன்னாலும் (எல்லாம் போர்டு ஸ்கூல்தான்)
'கேர்ள்ஸ் டெஸ்க்' தனியா இருக்கும். அதுவும் 'ஏ' செக்ஷனில் மட்டுமே கேர்ள்ஸ். 'பி' செக்ஷன்னு சொன்னாலே பெரிய பையனுங்களாவும் படிப்பின் தரத்தில் கொஞ்சம் தாழ்ந்தும்தான் இருப்பாங்க. ஆறாவது ஏழாவதுக்குப் பிறகு பாய்ஸோடச் 'சும்மா'ப் பேசறதெல்லாம் நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது.


பாவம் கோபால், நான் என்ன சொன்னாலும் (குறிப்பா இந்த கோவில் விஷயங்களில்) அப்படியே(வம்பு வேணாமுன்னு) நம்பிருவார்:-)))))

திரும்பித் திருநெல்வேலிக்கு வந்துக்கிட்டு இருக்கோம். பாலம் கடக்கும்போது, 'சுலோச்சன முதலியார் பாலமு'ன்னு முந்தி எப்பவோ கதைகளில் படிச்சது நினைவுக்கு வந்துச்சு. "அது எங்கே இருக்கு'ன்னு கேட்டதும், முதலில் கொஞ்சம் திகைச்ச உலகநாதன், 'இந்தப் பாலம்தாங்க, அது. இப்பப் பெயர் மாறிப்போச்சு. பழைய ஆளுங்களுக்குத்தான் தெரியும் இந்தப் பெயர்'ன்னு சொன்னார். பாலம் கடந்து ஊருக்குள்ளெ வரும்போது 'திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா'ன்னு ஒரு நியான் லைட் ஸைனோட ஒரு கடை. அட! இதை எப்படி மறந்தேன்?

உலகநாதன் சொல்றார் இது போலின்னு!!!! அசல் கடை நெல்லையப்பர் கோவில் பக்கத்துலே. இப்பவே போய் வாங்கிறலாம்னு அசலுக்குக் கொண்டு போனார். என்ன தைரியமா இப்படி போலிப்பெயர் வச்சு அதே ஊருலே வியாபாரம் செய்யறாங்களோ? அருவாள் பயமே இல்லையா? திருநெல்வேலின்னதும் ஆளாளுக்கு முதுகுக்குப் பின்னால் அருவாளோடு அலையுவாங்களோன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். ஊஹூம்..... எல்லாம் இந்தப் படங்கள் படுத்தும் பாடு. அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்க இதுவரை நான் பார்த்த எல்லோரும்.
அசலும் ...மற்றதும் . வலப்பக்கத்தில் தெரிவது அல்வா இல்லை:-)))
இதைப் பத்தி நம்ம உலகநாதன்கிட்டே விசாரிச்சால் சிரிக்கிறார். சில குறிப்பிட்ட இனத்துலேதான் இன்னும் கொஞ்சம் இப்படி இருக்கு. அதுவும் சில கிராமப்புறங்களில். இப்போ அவனவனுக்கு வேலை வெட்டின்னு பொழப்பைப் பார்க்கறதுக்கே நேரம் சரியாப்போகுதுன்னார். கல்வியறிவு கூடக்கூட மக்கள் முன்னேற்றப் பாதையில் போறாங்கதானே?

தரமான கல்வி நிறுவனங்கள் எக்கச்சக்கமா இருக்கும் தேசம் அது. இங்கே நியூசியில் என் டாக்குட்டர் தோழி ஒருத்தர் அங்கேதான் படிச்சாங்க. நம்ம கோபால்கூட பாளையங்கோட்டையில்தான் பியூசி படிச்சாராம்.

தொடரும்.......:-)

33 comments:

said...

நான் படிச்சிட்டேன்.....

said...

வாங்க சிஜி.

உடல்நிலை எப்படி இருக்கு? நலம்தானே?

( மருத்துவ மனையில் இருந்தீங்கன்னு நம்ம டோண்டு பதிவில் படிச்சேன்)

said...

கூடவே படிச்சிக்கிட்டு வரேன் டீச்சர் ;)

said...

வாங்க கோபி.

கூட வர்றீங்க என்ற தைரியத்தில்தான் இப்படி பயணம் போறேன்:-)

said...

இருட்டுக்கடை - திருநெல்வேலியா?
மதுரை என்று நினைத்திருந்தேன்.

said...

வாங்க குமார்.

அடடா..... அவுங்க அருவாள் வச்சுக்கலைன்னு சொன்னதும்......

தைரியமா 'மதுரை'ன்னுட்டீங்க:-))))))

said...

அருவாளை மக்கள் எப்பவோ கீழே போட்டுட்டாங்க, இந்த சினிமாக்காரங்கதான் அதை எடுத்து வச்சிக்கிட்டு அடம் பிடிக்கிறாங்க. நெல்லையப்பரை பாத்துட்டு அப்பிடியே ஆரெம்கேவி எல்லாம் போயிட்டு வந்து சொல்லுங்க.

said...

இப்படி எங்க ஊருப் பேரைக் கெடுத்து வச்சிருக்காங்களே:(

கேக்கறவங்கள் எல்லாமே அருவா பத்தி விசாரிக்கறாங்க.

படமெல்லாமே நல்ல பசுமை தெரியுதே. தை மாசம்ங்கறதனாலியோ.
சிஜி சார் பதிவர் கூட்டத்துக்கு வந்ததா எங்கயோ படிச்சேனே.

காக்கா,கழுதை,பைரவர் ஒண்ணும் விட்டுவைக்கலை போல.:)மல்லிப்பூ வச்சு ஒரு போட்டோ போடக்கூடாதோ:)
குமார், நீங்க சொல்றது நாகப்பட்டினம் அல்வா. மதுரை கோவில் பக்கத்தில இருக்கற கடை;)

said...

aakaa கோபால் பியூசி படிச்சாரா - நன்று நன்று - பொறியியல் பட்டதாரி - பாளையங்க்கோட்டைல கல்லூரிக்கு அழைத்துச் சென்றாரா ..

said...

ராசிக்கழுதை கெட்டதெல்லாத்தையும் உதைக்க தயாரா இருக்கு போலயே.. :)

said...

அல்வா கடையை மட்டும் காட்டிட்டு அல்வாவை விட்டுட்டிங்களே டீச்சர்!!!

மிச்ச பகுதிகளையும் படிச்சிட்டு வர்றேன் டீச்சர்.

said...

//உலகநாதன் சொல்றார் இது போலின்னு!!!! அசல் கடை நெல்லையப்பர் கோவில் பக்கத்துலே//

ஆகா! போலி வேஷம் போட்டு அல்வா கொடுப்பாய்ங்க..தெரியும்!
இது என்ன அல்வா கொடுக்குறதலேயே போலியா? ஐயகோ! :))

//பாவம் கோபால், நான் என்ன சொன்னாலும் (குறிப்பா இந்த கோவில் விஷயங்களில்) அப்படியே(வம்பு வேணாமுன்னு) நம்பிருவார்:-)))))//

கோபால் சார்...இனி அடியேனுக்கு ஒரு மின்னஞ்சல் தட்டி வுடுங்க! :))

said...

//திருப்புளியங்குடி அடுத்த இடம். ஸ்ரீ பூமி பாலகர் என்ற காயாசினவேந்தன்//

அது காய் சின வேந்தன் டீச்சர்!
அடியாரை அல்லல் படுத்துவாரை கோபம் காயும் பெருமாள்! :)
ஆனா நாங்க காய்ச்சின வேந்தன் என்னத்த காய்ச்சினாரு-ன்னு பெருமாளையே கலாய்ப்போம்! :)

//கிளம்பித் தொலைவிலி மங்கலம் வந்தோம்.//

அது துலைவில்லி மங்கலம் டீச்சர்! ஒரு "ல்"-லை விட்டுட்டீங்களே :)
இப்போ தலைவலி மங்கலம்-ன்னும் கலாய்க்கப் போறோம்! :))
துலை = தராசு, வில்லி = வில்!

//கோணல் மாணலா சிலர் இழுத்து வச்சுருந்த நாகர்களைச் சரி பண்ணிவச்சேன்.//

டீச்சர் இஸ் தி பெஸ்ட்! :)

//அரவிந்த லோசனர். செந்தாமரைக் கண்ணன். அடடா..... பேரே எப்படிப் பிடுங்கித் தின்னுது பாருங்க. தாயாரோ கருத்தடங்கண்ணி நாச்சியார்//

சபாஷ்! சரியான போட்டி! செந்தாமரைக் கண்ணன் - கருந் தடங்கண்ணி!

said...

//நெருக்கமாத் தொடுத்த மல்லிகைச் சரம் கொண்டுவந்து வித்தாங்க ஒரு பூக்காரம்மா. எட்டு ரூபாய் ஒரு முழம். இந்தியப் பயணத்தில் மட்டும்தானே பூச் சூட்டிக்க முடியும்? சான்ஸ் கிடைச்சால் விடலாமா?//

புகைப்படம் எங்கே?
புகைப்படம் எங்கே?
புகைப்படம் எங்கே?
:)

said...

//'திருக்குளந்தை'க்கு வந்து சேர்ந்தோம்....திருப்பதி பெருமாளைப்போலவே, ஸ்ரீநிவாசன் மூலவர். நின்ற திருக்கோலம். மார்பில் பச்சை மாமணி புரள சேவை சாதிக்கிறார். தாயார், சாக்ஷாத் நம்ம அலர்மேல் மங்கையேதான். உற்சவர்தான் இங்கே மாயக்கூத்தபிரான். ரொம்பவே அழகான விக்கிரகம்//

ஆமாம் டீச்சர்!
முயலகன் கீழிருக்க எப்படி நடராஜப் பெருமான் ஆடுகிறாரோ..
அதே போல அசமாசரன் கீழிருக்க மாயக் கூத்தன் ஆடுகிறார்!

திருமலை போலவே ஆனந்த நிலைய விமானம் தான்! கொள்ளை அழகு!

//திருப்பதியில் என்னடான்னாப் பெருமாளைத் தூங்கவிடறதே இல்லை. நடுராத்திரிக்கே ரெண்டரைக்கு எழுப்பி விட்டுடறாங்க. நிம்மதியா ஒரு நாள் அவராலே இருக்கமுடியுதா?//

உழைப்புக்கேத்த ஊதியம்! :)
ஓவர் டைம்-ன்னா சும்மாவா? :)

said...

//கோபாலுக்கு ஆழ்வார்களைப்பற்றிச் சொல்லி பனிரெண்டு பேர் இருப்பாங்கன்னேன். சொல்லிட்டு நானே எண்ணிப் பார்க்கிறேன், திக்குன்னு ஆகிருச்சு. பதினோரு பேர்தான் இருக்காங்க//

ஹிஹி! வர வர ஆன்மீகக் குறும்பு அதிகமாயிருச்சி உங்களுக்கு! கேஆரெஸ் பதிவையெல்லாம் படிக்காதீங்க-ன்னு சொன்னாக் கேட்டாத் தானே? :))

//என்னதான் ஆழ்வாரா இருந்தாலும் ஆண்கள் மத்தியில் தனியொருவளாய் நிற்க, 'அந்தக் காலத்து'ப் பொண்ணுக்குக் கொஞ்சம் கூச்சமாய் இருக்காதோ?//

ஹிஹி! உண்மை அப்படியே ரிவர்சில்!
ஆண்டாளுக்குப் பக்கத்தில் நிற்க மற்ற பதினோரு பேரும் தான் ரொம்பவே கூச்சப்படறாங்களாம்! சிலர் பயப்படவே பயப்படறாங்களாம்! ஏன்னா என் தோழி ரொம்பவே அசால்ட்டா ஆடுவா! :))

அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள் தன் செயலை
விஞ்சி நிற்கும் தன்மையளாய்..ன்னு பாட்டு!
விஞ்சி நிற்கிறாளாம் நீங்க சொன்ன படி! :)

//அதுவும் 'ஏ' செக்ஷனில் மட்டுமே கேர்ள்ஸ்.//

நானும் 6th-12th வரை A செகஷன் தான் டீச்சர்! A செகஷன் தான் பெஸ்ட் செகஷன்! :)

said...

வாங்க ஐம்கூல்.

ஆரெம்கேவியை வெளியே சாலையில் கடந்துபோகும்போது பார்த்ததுதான். உள்ளே போய்ப் பார்க்கணுமுன்னு தோணலை!

நெல்லையப்பரைக் கண்டுகிட்டேன். அது நாளையப்பதிவு:-)

said...

வாங்க வல்லி.

நம்மூர்லே இல்லாதது இந்த 'டாங்கி'தான்ப்பா:-) (என்னைக் கணக்குலே எடுத்துக்கப்பிடாது)

மல்லிப்பூ படமா? அச்சச்சோ.... அதுலே அழகா இருக்கும் பூவோட அவதாரமான முகமும் இருக்கேப்பா:-))))

said...

வாங்க சீனா.

ஒரே ஒருவருசம்தான் பாளையங்கோட்டையில். அப்புறம் கோவை.

கல்லூரியைப் போகும்போது பார்த்தோம்.

எங்கள் காலில் (கொதிக்கும்)கஞ்சி:-)

said...

வாங்க கயலு.

அதிசய மிருகம் என்ற டைட்டில் கொடுக்கவா? :-)

said...

வாங்க சிந்து.
என்ன ஆளையே காணோம்?

இதுவரை 17 மட்டும்தான் வந்துருக்கு. டேக் யுவர் ஓன் டைம்.

said...

வாங்க கே ஆர் எஸ்.

நீங்க வந்தால்தான் பதிவுக்குக் 'களை' கட்டுது:-)

எத்தனைநாளைக்குத்தான் 'காய்ச்சுவார்'? அதான் காயா சினரா ஆக்கிப்புட்டேன்:-)

காய்ச்சின காய்ச்சின காய்ச்சின காய்ச்சின காய்ச்சின (இப்பச் சரியா?)

தொலைவில்லிகளுக்கு மோட்சம் கிடைச்ச இடமுன்னு தலப்புராணம் சொல்லிச்சே. ஆனா வில்லியில் 'ல்'லைத் தொலைச்சுட்டேனே!!!!!

துலாம் வில்லின்னு இருக்கணும் இல்லை? மருவல்.....ஆகிருச்சு.

புகைப்படத்தில் 'மல்லிமட்டுமே' அழகு.

பார்க்கச் சின்னப்பையனாவும் நல்லாப் படிக்கிறவனாவும் இருந்துருப்பீங்க அதான் 'ஏ' செக்ஷன்:-))))

அததுக்கு ஒரு 'செட்' தகுதி இருக்குல்லே:-)))))


கோபால் பயணத்தில் முழுகிட்டார்.

said...

கண்ணாமூச்சி வெளயாடுற உங்கள கஜமண்டபத்தில் கண்டுபிடிச்சாச்சு. கதவுக்கு மேல்புறம் இருக்குற யானைகள் ரெண்டும் ரொம்பவே கம்பீரமாஇருக்கு.

said...

//துக்கப்புறம் ஒவ்வொரு கோயிலிலும் கவனமா எண்ணிக்கிட்டே வந்தேன். எல்லாம் அந்த பதினொருவர். ஆழ்வார்களில் நம்ம ஆண்டாள் மட்டும்தான் பொண்ணு. என்னதான் ஆழ்வாரா இருந்தாலும் ஆண்கள் மத்தியில் தனியொருவளாய் நிற்க, 'அந்தக் காலத்து'ப் பொண்ணுக்குக் கொஞ்சம் கூச்சமாய் இருக்காதோ? அதான் தனிச் சந்நிதியில் ஆண்டாளம்மா இருக்காங்கன்னு சொல்லிவச்சேன்.//

நல்லா சொன்னீங்க போங்க, ஆண்டாளம்மா, தனி சன்னதியில பெருமாளுக்கு இடப்பக்கம் இருக்கறதால மற்ற ஆழ்வார்களோட இல்லையா?
என்னாலும் பெருமாளோட பட்டமகிஷி ஆயிட்டாங்கள்ளவா.

உங்க பதிவுகள் எல்லாத்தையும் படிச்சிட்டேன் டீச்சரம்மா.

said...

டீச்சர் கோபால் சாருக்கு அல்வா கொடுத்தீங்களா இல்லையானு சொல்லலயே...

said...

உள்ளேனம்மா.. :-)

said...

//காய்ச்சின காய்ச்சின காய்ச்சின காய்ச்சின காய்ச்சின (இப்பச் சரியா?)//

ஆகா!
டீச்சரையே இப்படி இம்போஸ்சிஷன் எழுத வச்ச அந்த நாட்டி பாய் யாரு? ஹூ இஸ் தட் வொயிட் ஷீப்? :)

இம்போஸ்சிஷனுக்குத் தமிழ்-ல்ல என்னான்னு யோசிச்சிங்! யாராச்சும் சொல்லுங்கப்பா!

said...

ஐம்கூல்.

ஆஹா.....நீங்களாவது கண்டுபிடிச்சீங்களேன்னு மகிழ்ச்சி.

யாரும் கவனிக்கலையேன்னு இருந்தேன்!

மண்டபத்துலே குடிதண்ணீர் வசதி இருப்பதைக் கவனிச்சீங்களா?

தாகச்சாந்தி பெரிய சேவை:-)

said...

வாங்க கைலாஷி.

கல்கருடனைப் பார்த்ததும் உங்க நினைவு வந்துச்சு.

பதிவுகள் எப்படி வருது? விவரங்கள் எல்லாம் ஓரளவாவது சரிதானே?

said...

வாங்க தீப்பெட்டி.

அதெல்லாம் கொடுக்காம விட்டுருவொமா? ஒரு ஸ்பூன் அளவு.

அவருக்கு இனிப்பு அவ்வளவாப் பிடிக்காது:-)

said...

வாங்க மதுரையம்பதி.

வந்ததுக்கு ரெண்டுவரி போட்டுருக்கலாமுல்லே:-)

said...

கே ஆர் எஸ்.

எல்லாம் குருவுக்கு மிஞ்சின சிஷ்யனுங்கப்பா:-))))

அந்த தொலைவிலிக்குக்கூட இப்ப என்ன தோணுச்சுன்னா.....
'கடவுளுக்கும் நமக்கும் இனி தொலைவு இல்லை'ன்னு குறிப்பா உணர்த்துதோ என்னமோன்னு.

said...

தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் நாங்களும் கூட வருவது போல உள்ளது உங்களது பதிவினை நீங்கள் தொகுத்த அழகு. அருமை! அருமை!
மிக்க நன்றி. வாழ்த்துக்கள் துளசி அம்மா.