Monday, April 20, 2009

கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்............. (2009 பயணம் : பகுதி 13)

அடக்கடவுளே..... எங்க பக்கங்களில் ஆடுகளைக்கூட இப்படி அடைச்சுக் கொண்டுபோறதில்லையே....... ப்ச்.... என்ன அநியாயம்? இந்த நாட்டுலே மனுச உயிர்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை என்பது கண்முன்னால்....
திருப்பரங்குன்றத்தைக் கடந்து புது சாலைகள் உள்ள இடத்தில் போறோம். இடதுகைப்பக்கம் இருக்கும் ஒரு மண் ரோடில் திரும்பணுமாம். ஆனால் பாலத்துலே இருந்து இறங்கமுடியாதபடி வழியை அடைச்சுவச்சுருக்காங்க.
எல்லாக் குறுக்கு வழிகளும் தெரிஞ்சுவச்சுருக்கும் ஏகாம்பரம்...அதாங்க நம்ம காளிதாஸ், விறுவிறுன்னு பாலம் கடந்து நேராப்போய் அங்கெ இங்கேன்னு திரும்பி அந்த மண் ரோடுக்கு வந்துட்டார்.
ஆண்டாளம்மா ஊருக்குப்போய் நின்னோம். கம்பீரமா நிக்கும் கோபுரம் தூரக்க இருந்தே காட்சி கொடுக்குது. நம்ம தமிழக அரசு முத்திரையில் கூட இந்த கோபுரம்தான் இருக்குன்னதும் கோபாலுக்கு ஆச்சரியமாப் போச்சு. முதலில் ஆண்டாளைச் சேவிச்சுக்கலாமுன்னு மண்டபத்தில் நுழைஞ்சோம். வெளிமண்டம் முழுக்க ரெண்டு பக்கமும் அடைச்சுக் கோவில் கடைகள். போகட்டும், கோவிலுக்கும் வருமானம் ஆச்சு. உள்பிரகாரத்தில் சுற்றுச்சுவர் முழுக்கப் பெருமாளை விதவிதமா வரைஞ்சு தள்ளி இருக்காங்க.







தசாவதாரப் படங்கள். காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம், திரு அல்லிக்கேணி, ஸ்ரீ வைகுண்டம், உடுப்பி கிருஷ்ணர் இப்படி அருமையோ அருமை. படங்களின் தலைப்புறம் திருப்பாவையும், கால்புறம் படங்கள் வரையும் செலவுக்கு உபயம் செஞ்சவங்க பெயரும்(முழுவிலாசம் உட்பட. கல்லிடைக்குறிச்சி அப்பள வியாபாரி கூட இருக்கார்) படம் வரைஞ்சவர் பெயரும் ஒரு மூலையில் இருக்கு. போயிட்டுப்போகுது. நல்லவேளை...உபயம் ட்யூப் லைட்டா இல்லை :-) கோயிலுக்குக் கொடுக்கவும் மனசு வேணுமில்லையா? (அந்தக் காலத்துலேக் கோயிலையும் கட்டி அதுக்கு நிலபுலமும் அள்ளித்தந்து ஓசைப்படாம ஒதுங்கி நின்ன மன்னர்களையும், சிற்பங்களைச் செதுக்கிக் குவிச்ச சிற்பிகளையும் நினைச்சுக்கிட்டேன்.)



குருக்ஷேத்திரம், கீதை உபதேசம் சீன் அட்டகாசம் போங்க. ரெண்டுபக்கமும் படைகள் அணிவகுப்பு. கௌரவர்களின் அரவக்கொடி, பாண்டவர்களின் முரசுக்கொடி (டமாரக்கொடின்னு எழுதிவச்சுருக்கு) அர்ஜுனனின் தேர்க்கொடியில் ஹனுமான் இப்படி. ரத கஜ துரக பதாதிகள் எல்லாம் அருமையோ அருமை.
ஒரு இடத்தில் ராமனும் ஹனுமனுமா இருக்கும் இந்தப் படம் சிம்பிள் & ஸ்வீட்!!.

கோயில் உள்ளே நல்லாச் சுத்தமாத்தான் இருக்கு. சிற்பத்தூண்களில் எல்லாம் மனிதக்கைகள் உயரம் எட்டும்வரை உரசிப்போன அடையாளம். சொல்லமறந்துட்டேனே.... ஒரு கட்டணம் செலுத்திட்டால் நம்ம கேமெரா பயன்படுத்திக்கலாம், ரெண்டு கோவிகளிலேயும். மூலவரை மட்டும் எடுக்கக்கூடாது. இது ரொம்ப நியாயமா எனக்குப் பட்டுச்சு. பாருங்க, இவ்வளோ பெரிய கோவிலை நிர்வகிக்க வருமானம் வேணுமா, இல்லையா? (கோயில் சொத்துகளில் மட்டும் ஊழல் இல்லாமல் இருந்தால் அதுவே தாராளம் என்றது வேற விஷயம். நிலத்தையெல்லாம் அமுக்குனவன் திருப்பித்தரவா போறான்?)

பிரமாண்டமான உள்பிரகாரங்கள். கருவறையைச் சுத்தி இருக்கும் வெளிப்புறச் சுவர்களில் சிங்கக்குட்டிகள்(யாளி?) நம்ம கோகியை நினைவுபடுத்தும் வகையில். கோபுரசிற்பங்கள் எல்லாம் கண்ணைப்பறிக்குது.
ரங்கமன்னாரையும் நாச்சியாரையும், பெரியதிருவடியான கருடாழ்வாரையும் மனமும் கண்ணும் நிறைஞ்சு தரிசிக்கும்போது கோபாலின் கழுத்தில் துளசி மாலை வந்து விழுந்துச்சு. (வெளியே துளசி மாலை விற்கும் பெண் வற்புறுத்துனப்பவும் வேணாம்ன்னு மறுத்துட்டு வந்துருந்தேன். மாலையா எதுக்கு? அதுதான் 'நான்' இருக்கேனே)

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள், தன் அழகு பார்த்தக் கண்ணாடிக்கிணறு அங்கே இருக்கு. எட்டிப்பார்த்தேன் ஒன்னும் தெரியலை( அழகா இருந்தால்தான் தெரியுமோ என்னவோ?)
ஆளுக்கு ஒரு ரூபாய் டிக்கெட் எடுத்துக்கிட்டுக் கண்ணாடி அறைக்குள்ளே போனோம். அட! வழி தெரியாமல் வசந்த மாளிகை 'சினிமா செட்' க்குளே நுழைஞ்சுட்டேனோ? நடுவில் ஒரு பீடத்தில் ஆண்டாள் படம் இருக்கு. ஒரு சிலையை வச்சுருக்கக்கூடாதோ? என்னமாத் தெரியும்!!!!


ரதி & மன்மதன் சிலைகள் கொள்ளை அழகு. குங்குமம், எண்ணெய் எல்லாம் கொட்டுப் பாழாக்கி வச்சுருக்கு நம்ம சனம்.
என்னதான் அரக்கி வதமுன்னாலும் இப்படியா? வன்முறையா இருக்கே(-:

வெளியே வரும்போது கடைகளில் பால்கோவாப் பொட்டலங்களின் வரிசை. ரிஸ்க் எடுக்கப்போறீயான்னு கோபால் கேட்டதும் நடுங்கிட்டேன். அப்புறம் எப்பவாவது இங்கேவரும்போது வாங்குனால் ஆச்சு.
அடுத்த வளாகத்துக்குள் நுழைஞ்சால் இடதுபுறம் ஆண்டாள் அவதரித்த துளசி வனம். ஒரு கும்பிடு போட்டுட்டு, வடபத்ரசாயியைத் தேடிப்போனோம். இடது பக்கம் சக்கரத்தாழ்வாருக்கு அழகான மண்டபமும் சந்நிதியும். நேர் எதிர்ப்புறம் வானுயரக் கம்பீரமாய் எழுந்து நிற்கும் ராஜகோபுரம்.
அருமையாத் தகவல் பலகை

சில படிகள் ஏறி மேலே போனால்..... ஹைய்யோ...விதானம் முழுசும் என்னமாதிரி நுணுக்கமான மரச்சிற்பங்களின் வேலைப்பாடுடன் மண்டபம். இதன் பெயர் 'கோபால' விலாஸ(மா)ம்.. அட!!.
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட ஸ்ரீவேணுகோபாலன்


சயனகோலத்தில் மூலவர். பெருமாள் கோயில்களில் எப்போதும் மூலவர் அழகே அழகு. நின்று, இருந்து கிடந்துன்னு விதவிதமாய் காட்சியளிப்பார். இதுமட்டுமில்லாமல் நகையும் நட்டும் பட்டுமாய் அலங்காரப்பிரியன், கண்ணையும் கருத்தையும் கவர்ந்துக்கறார்தான். தரிசனம் முடிச்சு வெளிவரும்போது நல்லாவே இருட்டிருச்சு. இந்தக் கோயிலும் நூற்றுஎட்டில் ஒன்னுதான். இன்னும் நல்லாப் பார்க்க நேரமில்லாமல் போச்சே...... அப்பாவும் பொண்ணுமாய் ரெண்டு ஆழ்வார்கள் அவதரித்த இடம். நம்ம ஒரிஜனல் திட்டத்தில் இந்தக் கோயில் எல்லாம் இல்லை. இப்போப் போகும் வழியில் தானாய் அமைஞ்சுபோச்சு.

இதுக்குள்ளே நாம் இரவு போய்ச் சேரும் இடத்தில் இருந்து நம்ம செல்லுக்கு அழைப்பு.

"அறை உமக்காக வெயிட்டிங். வந்துருவீங்கதானே?"

"அதெல்லாம் வந்துருவோம். ஸ்ரீவில்லிபுத்தூர் தாண்டியாச்சு. இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்"

கவிதாயினியும் பதிவருமான 'காற்றுவெளி'யின் ஊரைக் கடந்து போறோம். ராஜபாளையம். அவுங்களை செல்லில் கூப்பிட்டு, உங்க ஊரைப் பார்த்தாச்சுன்னு சொன்னேன். 'நான் அங்கே இருந்துருந்தா..... உங்களை வீட்டுக்குக் கூட்டிப்போயிருப்பேன்'னு சென்னையில் இருந்து சொல்றாங்க:-)))

சங்கரன்கோயில் வழியா வந்தாலுமே எங்கேயும் நிறுத்தலை. தாமிரபரணி ஓடும் நெல்லைச்சீமைக்குள்ளே நுழைஞ்சாச்சு. ஹொட்டேல் ஆர்யாவைத் தேடிப்போனோம். வரவேற்பில் உலகநாதன் காத்துக்கிட்டு இருக்கார் கையில் ஒரு பூங்கொத்துடன்.
ஹைய்யோ...... என் வாழ்க்கையில் கிடைச்ச முதல் பொக்கே!!! அருமையான இடத்தை எங்களுக்காக ஏற்பாடு செஞ்சு, வரவேற்புக்கும் காரணமானவங்க யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்.

நம்ம இனிய தோழி Ninewest நானானி தாங்க. நெல்லைபூராவும் இவுங்க ஆட்சிதான்போல!!



விசாலமான பெரிய அறை. ட்ராயிங், டைனிங், படுக்கை இடம்ன்னு பரவி இருக்கு. ஆனா...கீழ்தளத்துலேயே வரவேற்புக்கு எதிரில் இருக்கு. படுக்கை அறை ஜன்னலை ஒட்டி, ட்ரைவ் வே இருப்பதால் வண்டிகள் போகும் வரும் சத்தம். பெரிய குடும்பமா இருந்தால் பரவாயில்லை. ரெண்டே பேர் நாம். அதிகம் சத்தம் வராத அறை இருந்தாத் தேவலையேன்னு விசாரிச்சால் இதுதான் அங்கே பெஸ்ட் ரூமாம்.

உலகநாதனும் நானானி அவர்கள் ஏற்பாடுதான். குடும்ப நண்பராம். மறுநாள் காலை ஏழரைக்கு வந்துருவேன்.. தயாரா இருங்கன்னு சொல்லிட்டுப்போனார்.

அங்கே இருக்கும் ரெஸ்ட்டாரண்டுக்குப் போய் சாப்பாடு ஆச்சு. பேப்பர் தோசை.

மறுபடி ரிஸெப்ஷனில் விசாரிச்சப்ப.... மூணாவது மாடியில் அறை இருக்கு. சின்னது. பிடிச்சா மாத்திக்குங்கன்னார். போய்ப் பார்த்தோம். ஹால்வேயில் கடைசி அறை. கன்வெர்ட்டர் எல்லாம் வச்சு வசதியா இருக்கு. விஸ்தாரமா இல்லை. ஆனால் நமக்குப் போதும். மாத்திக்கிட்டு வந்துட்டோம்.

தொடரும்.............:-)

46 comments:

said...

சிலைகளும், படங்களும்...., உங்க கமென்டுகளும் அருமை:-) இன்னும் ஸ்ரீவில்லிபுத்தூர், திர்னவேலி எல்லாம் போனதில்லை. இங்க இருந்தே சேவிக்கிறேன்:-)

//வெளியே வரும்போது கடைகளில் பால்கோவாப் பொட்டலங்களின் வரிசை. ரிஸ்க் எடுக்கப்போறீயான்னு கோபால் கேட்டதும் நடுங்கிட்டேன்// என்ற கோபால் சாரை ரதி‍-சிலை படத்தில் ஓரங்கட்டியது நுண்ணரசியலா?

said...

படங்கள் அனைத்தும் கலக்கல் ;)

said...

//
அடக்கடவுளே..... எங்க பக்கங்களில் ஆடுகளைக்கூட இப்படி அடைச்சுக் கொண்டுபோறதில்லையே....... ப்ச்.... என்ன அநியாயம்? இந்த நாட்டுலே மனுச உயிர்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை என்பது கண்முன்னால்....
//

இதை விட கொடுமையெல்லாம் இருக்குங்க டீச்சர்...மெட்ராஸ்ல எலக்ட்ரிக் ட்ரெயின்ல பீக் அவர்ல பார்க்கணுமே.....அத்தனை பேரு தற்கொலை முயற்சில ஒரே டைம்ல எறங்கறது ஒலகத்திலேயே இந்தியாவில தான் நடக்கும். :0(

said...

பெருமாள் ஆதிசேஷனோட இருக்க அந்த முதல் படம் ரொம்ப மோசமா இருக்கு...இப்படி கேவலமா ஒரு ஓவியம் வரைஞ்சி வச்சிருக்கறதுக்கு பேசாம இருக்கலாம்...

அதுவில்லாம இப்பல்லாம் கோவில்ல எல்லா சுவர்கள்லயும் ஓவியம்கிற பேர்ல பெயின்டை கொட்டி நாசம் பண்ணிகிட்டு இருக்காங்க....

said...

//
அந்தக் காலத்துலேக் கோயிலையும் கட்டி அதுக்கு நிலபுலமும் அள்ளித்தந்து ஓசைப்படாம ஒதுங்கி நின்ன மன்னர்களையும், சிற்பங்களைச் செதுக்கிக் குவிச்ச சிற்பிகளையும் நினைச்சுக்கிட்டேன்.)
//

அது அந்த காலம்... கோயில் மாட்டுக்கு புண்ணாக்கு குடுத்தாலே அதுக்கு மேடை போட்டு பொதுக்கூட்டம் நடத்தி போஸ்டர் அடிக்கிறது இந்தக் காலம்...

said...

//
நிலத்தையெல்லாம் அமுக்குனவன் திருப்பித்தரவா போறான்?
//
அதை வச்சு ரொம்ப நாள் வாழமுடியாது

said...

//
நம்ம தமிழக அரசு முத்திரையில் கூட இந்த கோபுரம்தான் இருக்குன்னதும் கோபாலுக்கு ஆச்சரியமாப் போச்சு.
//

உண்மை தான் அப்போதைய முதல்வர்(??) (பேர் மறந்து போச்சு) ராஜா’னு (ராஜூஸ்) முடியும். (ஒட்டுமொத்த கேள்வி ஞானம் தான் )

அவருக்கு சொந்த ஊர் ராஜபாளையம்/வில்லிபுத்தூர் பக்கம். அவர் தான் இந்த முத்திரையை பரிந்துரை செய்ததாக கேள்வி :)


படங்கள் எல்லாம் அருமை..

விளக்கமும் நக்கல் கமெண்டும்(வசந்த மாளிகை, துளசி மாலை ..) சூப்பரு :)

said...

அன்பின் துளசி - அருமையான பதிவு - கண்ணும் காதும் கையும் சுரூசுறுப்பாக இயங்குகின்றன. நன்று.

கோபாலுக்குத் துளசி மாலை ... ஆகா

நானானிக்கு நன்றி அருமையான ஏற்பாடுகளுக்கு

said...

present teacher..

nangalum thiruchendhur pona podhu(pona dec) Hotel Arya vukku dhan poi nalla sapadai veluthu kattinom.adhu endha alavukku pribalamaaa...

said...

thulasi maalai pathi neenga solli erundhadhu romba super..hehehe

said...

படங்களுடம் விவரங்களும் அருமை. குறிப்பாக அந்தச் சித்திரங்கள்.. பேசுகின்றன.

விருந்தோம்பலில் நானானியை மிஞ்சிட இனியொருவர் பிறந்துதான் வர வேண்டும். வீட்டுக்குச் சென்றால்தான் என்றில்லை சொந்த ஊருக்குச் செல்பவரையும் சென்னையிலிருந்தபடியே சிறப்பாக விருந்தோம்பியிருக்காங்க பாருங்க. அங்கதான் நிற்கிறாங்க எங்க நானானி:)!

said...

எங்க ஊரைப் பத்தி எதோ சொன்னீங்களாமே? அதான் ஒரு அவசர விசிட்! :)

said...

ஓ விவரமெல்லாம் அருமையா இருக்கு..
கோபால் சார் கேக்கதானே செய்தார் ..நடுங்கிட்டேன்னு சொல்லி என்னவோ அவரு உங்க திட்டினா மாதிரி ஆக்கிட்டீங்களே?

said...

வாங்க கெக்கே பிக்குணி.

சந்தர்ப்பம் கிடைச்சால் இந்தப் பக்கம் போய்வாங்க. அருமையான சமாச்சாரங்கள் கொட்டிக் கிடக்கு.உள்ளூர்லே இருக்கும் பலதையும் பார்க்காம, நாம்தான் அயலூரில் கிடக்கோம்(-:

அவருக்குத் தெரிஞ்ச ஒரே ரதி 'அந்தக் காலத்துத் துளசி'யாய்த்தான் இருக்கணும்(என்ன ஒரு நம்பிக்கை பாருங்க)

said...

வாங்க கோபி.

இன்னும் நல்லா எடுத்துருக்கலாம். கெமெரா சரியில்லைப்பா!!!

said...

வாங்க அதுசரி.
//மெட்ராஸ்ல எலக்ட்ரிக் ட்ரெயின்ல பீக் அவர்ல பார்க்கணுமே.....அத்தனை பேரு தற்கொலை முயற்சில ஒரே டைம்ல எறங்கறது ஒலகத்திலேயே இந்தியாவில தான் நடக்கும். :0(//

எல்லாத்துக்கு மூலகாரணம் கூட்டம்தானே? மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாதவரை 'தற்கொலைகள்' மேலும்மேலும் நடக்கத்தான் செய்யும்(-:

said...

என்னங்க அதுசரி,

கல்லைமட்டும் கண்டால் கடவுள் கிடையாது...மாதிரிதான்.

கோவில் ஓவியங்களை கொஞ்சம் 'மூடபக்தி'யோடு பார்த்தால் போதுமே.

பெயிண்டிங் சமாச்சாரத்தைக் கலைக்கண்ணோடு பார்க்கணுமுன்னா அதுக்கு வேற கேலரிகள் இருக்குல்லையா?

கலிகாலமாச்சே. கோவில்களுக்குன்னு கொடுக்கும் மனசு இருப்பதே அபூர்வமாப் போச்சு.

said...

வாங்க ஆளவந்தான்.

நீங்க சொல்றவர் 'குமாரசாமி ராஜா' வாக இருக்கலாம்.

நீங்க சொன்ன இந்த விவரம் எனக்கும் புதுசுதான்.
நன்றி.

said...

வாங்க சீனா.

துளசிமாலை, கோபால் கழுத்தில் ஆரம்பிச்சு இப்பத் தலையில் உக்கார்ந்துருக்கு முப்பத்தியஞ்சு வருசமா :-)))))

நானானிக்கு என் ஸ்பெஷல் நன்றியை இங்கேயும் சொல்லிக்கறேன்.

said...

வாங்க தாமரை.

ஆர்யா அருமையாத்தான் இருந்துச்சுங்க.
பலவருசமா நடக்குதாம் இந்த நிறுவனம்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

இத்தனைக்கும் நான் நானானியைச் சந்திக்கவே இல்லைப்பா. நாங்க சென்னை வந்தப்ப அவுங்க நெல்லைக்குப் போயிட்டாங்க(-:

அவுங்க ஆணையைத் திறம்பட நடத்தும் அன்புக் குடும்பம் அங்கே இருக்கே!!!

said...

வாங்க கொத்ஸ்.

உங்க ஊருக்குள் இப்போதான் காலடி எடுத்துவச்சுருக்கு. இன்னும் சில பதிவுகள் வந்தே ஆகணும். நீங்களும்தான்:-)

இன்னுமா லீவு முடியலை?

said...

வாங்க கயலு.

எனக்கு கோபால்கிட்டே ரொம்ப பயம்.

(அப்டின்னு சும்மாச் சொல்லிப் பார்த்தேன்:-))))))

said...

பால்கோவா வாங்கலியா:)ஆனால் முன்ன மாதிரி இருக்கோ இல்லையோ!!கலப்படம் வந்தாச்சே.
பெரியாழ்வார் திருமாளிகை கூட இருந்ததாக நினைவு. அங்ஏ மாப்பிள்ளைப் பெருமாள் வருஷத்துக்கு ஒரு தடவை பொண்டாட்டியோட வருவதும் வழக்கம்.:)
கோவில் பூராவும், வேணு கோபாலும், ஜிகேயுமா பர்த்துட்டீங்க.
பூ அலங்காரமும் அழகா இருந்திருக்கும். ம்ம்ம்.
நானானி பொகே வெகு அழகு!!

said...

// நல்லவேளை...உபயம் ட்யூப் லைட்டா இல்லை :-) கோயிலுக்குக் கொடுக்கவும் மனசு வேணுமில்லையா? (அந்தக் காலத்துலேக் கோயிலையும் கட்டி அதுக்கு நிலபுலமும் அள்ளித்தந்து ஓசைப்படாம ஒதுங்கி நின்ன மன்னர்களையும், சிற்பங்களைச் செதுக்கிக் குவிச்ச சிற்பிகளையும் நினைச்சுக்கிட்டேன் //

நிதி மிகுந்தவர் நிலபுலம் தாரீர்,
நிதி குறைந்தவர் ட்யூப் லைட் தாரீர்,
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்,

என்று பாரதி பாடியதாக எடுத்துக்கொள்ளவேண்டியது தான்.

சுப்பு ரத்தினம்.

said...

எங்க ஊருக்கு போயிருந்தீங்களா?

அங்க வைத்தீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை பெருமாள் கோவில் அப்புறம் செண்பக தோப்பு,அய்யனார் பால்ஸ் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கும். ஆண்டாள் கோவில் தேர் ரொம்ப பிரபலம் அத காமிராவில எடுக்கலையா?

அடுத்த தடவை போனா கட்டாயம் பாருங்க.

said...

சிலைகளும் சித்திரங்களும் அற்புதம்...

said...

//
ஆளவந்தான்..
நிலத்தையெல்லாம் அமுக்குனவன் திருப்பித்தரவா போறான்?
//
அதை வச்சு ரொம்ப நாள் வாழமுடியாது//

ரொம்ப அப்பாவியா இருக்கீங்க ஆளவந்தான்?

said...

வாங்க வல்லி.

இந்த ஜிகேதாங்க எங்கே எதைப்பார்த்தாலும் கண்முன்னால் வந்து நிக்கிறான்.

காணும் பொருள் யாவும் அவன் தோற்றம்......

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

சக்திக்கு ஏற்றது தந்தால் போதும் என்பதுதான். ஆனால் மனசு இருக்கணுமே!!!

said...

வாங்க தீப்பெட்டி.

தேரடிக்குப் போகாமல் நேரக் கோவில் வளாகத்துக்குள்ளே வண்டியை நிறுத்திட்டார்.

கோவிலுக்குள்ளே போனவள் ரொம்ப இருட்டும்வரை அங்கேயே நின்னுட்டேன்.

அடுத்தமுறை ரெவ்வெண்டு நாள் ஒரு ஊருக்குன்னு ஒதுக்கணும்.

said...

வாங்க நான் நரேந்திரன்.

நம்ம ஆளவந்தான்.....
இந்தக் காலத்திலும் இப்படி ஒரு அப்பாவி!!!!

படங்கள் இன்னும் நல்லா எடுத்துருக்கலாம்.....

said...

//
நான் நரேந்திரன்... said...

//
ஆளவந்தான்..
நிலத்தையெல்லாம் அமுக்குனவன் திருப்பித்தரவா போறான்?
//
அதை வச்சு ரொம்ப நாள் வாழமுடியாது//

ரொம்ப அப்பாவியா இருக்கீங்க ஆளவந்தான்?
//

நல்லா வாழ்ற மாதிரி வெளியில தெரியலாம்.. எனது கிராமத்தில் அப்படி சாமி காசை சாப்டவனெல்லாம் மண்ணை கவ்விகிட்டு தான் இருக்கானுவ.. ஆனாலும் அந்த வெட்டி ஜம்பம் அப்டியெ தான் இருக்கு.


//
ரொம்ப அப்பாவியா இருக்கீங்க ஆளவந்தான்?
//
என்ன பண்றதுங்க இப்போ மக்கள் தாங்கள் பண்ற “அயோக்கியதனத்துக்கு” ஸ்மார்ட்னஸ் பேர் வச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க, அதனோட பலன் தான் இந்த வால்ஸ்ட்ரீட்ல கிடைச்ச அடி. இன்னும் திருந்திற மாதிரி இல்ல.. ஊரை அடிச்சு உலையில போடுறதும் ரொம்ப நாளைக்கு இருக்காது.

எல்லா தொழிலுமே லாப நோக்கத்தில் தான் ஆரம்பிக்கிறாங்க, யாரும் நட்டமடையனும் ஆரம்பிக்கிறது இல்லை.அதுல ஒரு நியாய தர்மம் இருக்கனும் தானே. தொழில் தர்மத்தையும் லாபத்தையும் எப்படி பேலன்ஸ் பண்றாங்கங்றது தான் முக்கியமான விச்யம்.

லாபத்தை மட்டுமே எண்ணி பண்ற தொழில் கண்ணை வித்து சிற்பம் வாங்குற கதை தான்.

அட விட்டா நான் ரொம்ப பொலம்ப ஆரம்பிச்சுடுவேன்....

அப்போ நான் வரட்டா :)

சுருக்கமா.. SHORTCUT MAY CUT SHORT OUR LIFE.

said...

படமும் அதர்கேற்ற இனிய உங்கள் வர்ணனையும் நல்லா இருக்கு .....

said...

பயணக் குரிப்புகளோட தகவல்களும் பலமா இருக்கே.. ஹ்ம்ம். ப்ரமாதம்.. :)

said...

நன்றே சொன்னீர், ஆளவந்தான்.

said...

வாங்க ஞானசேகரன்.

உங்க பதிவுக்கு ரெண்டுபேர் வந்து திருத்திக்கிட்டு இருக்காங்க போல.

போகட்டும் இப்போ என் முறை.

அதர்கேற்ற = அதற்கேற்ற

said...

வாங்க சஞ்ஜெய் காந்தி.

பட்டாம்பூச்சியைப் பிடிச்சா விடமாட்டீரா? :-))))))


டீச்சருக்கு இப்ப(டி) ஒரு வேலை(யும்) இருக்கு.

குரிப்புகளோட = குறிப்புகளோட

said...

படங்களும் உங்கள் கருத்துகளும் அருமை
விதானம்ல உள்ள சிற்பங்கள் எல்லாம் கோவில் தேர்ல இருந்ததுன்னு கேள்விபட்டேன்

said...

வாங்க அருண்மொழி.

இது எனக்குப் புதுச் செய்தி.

ஆனால் அப்படி இருக்க வாய்ப்பு உண்டு. அந்த அமைப்பு அப்படி.

நல்ல ஐடியா தோணி இருக்கு யாருக்கோ. எப்பேர்ப்பட்ட சிற்பவேலைகள்!!!!

said...

அன்பு துள்சி! நான் இங்கிருந்து ஓர் அம்பைத்தான் எய்தினேன். எய்தவள் இங்கிருக்க மற்றதெல்லாம் அம்பு செய்தவைகளே! ஆம்! என் மருமகன்தான். நியூசியில் வண்ண வண்ண மலர்களிடையே வலம் வரும் துள்சிக்கு முதல் பொக்கே எங்களோடது என்றறியும் போது சந்தோஷமாயிருக்கு! உங்கள் நவதிருப்பதி தல தரிசனம் நல்லபடி முடிந்தது அறிந்தும் மகிழ்ச்சி!!!

said...

பதிவை ம்துவாகப் பார்த்து சொல்கிறேன். சேரியா?

said...

வாங்க நானானி.

சின்ன திருத்தம்.

//துள்சிக்கு முதல் பொக்கே //

துளசியின் வாழ்க்கையில் முதல் பொக்கே!!!!!

மருமான் ஏற்பாடு சூப்பர். அவரைத்தான் சந்திக்க முடியாமல் போச்சு(-:

மற்ற தரிசனங்கள் எல்லாம் அமோகமாக் கிடைச்சது.

said...

//துள்சியின் வாழ்கையில் முதல் பொக்கே!//
அது அப்படியா? அப்ப இன்னும் சூப்பர்தான்.
சேரி...அடுத்த வருகை எப்ப?

said...

ஆமாம் நானானி.

முதல் பொக்கே ரொம்பவே லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா சூப்பரா அமைஞ்சது.

இங்கே நியூஸியில்கூட இப்படிப் பார்க்கலை.

நம்ம சின்ன அம்மிணி இங்கே வந்தப்ப அன்பளிப்பாக் கொடுத்த பூக்கொத்துக்களையும் இங்கே குறிப்பிட்டுக்கறேன். அது வேற அமைப்பில் இருந்துச்சு.

said...

I have read Blog. Fantastic description.
Please visit Srivilliputtur again.
You are Welcome.