கொஞ்ச நாளைக்கு முன்னாலே கோர்ட்டுக்குப் போகும்படியா ஆகிடுச்சு! எனக்குக் கையும்
ஓடலே காலும் ஓடலே!
'அடப்பாவமே'ன்னு நீங்க பரிதாபப்படறது எனக்குப் புரியுதுதான்!
இன்ன தேதிக்கு நீங்க கோர்ட்டுக்கு வரணும். உங்களை ஜூரியாப் போட்டிருக்குன்னு
லெட்டர் வந்தப்ப என்னடா செய்யறதுன்னு கொஞ்சம் தடுமாறித்தான் போயிட்டேன்.
அதுவும் ஒரு வாரத்துக்குப் போகணும். அப்படிப் போக முடியாதவங்க, ஏன் போக முடியாதுன்ற
காரணத்தை விளக்கமா எழுதிப்போடணும். அது நியாயமான காரணமுன்னா, நீங்க வரவேணாமுன்னு
அவுங்களே பதில் போடுவாங்க. அப்படி இல்லைன்னா, உங்க மேலே அரசாங்கம் நடவடிக்கை
எடுக்கும்!( இந்த நடவடிக்கைன்றது என்னவா இருக்கும்? அக்கம் பக்கம் கேட்டுப் பார்த்தப்ப ஏதாவது
அபராதம் கட்டச் சொல்வாங்கன்னு சொன்னாங்க! இது நல்லாயிருக்கே!)
இதுபோல 'ஜூரர் சர்வீஸ்' செய்யறது ஒவ்வொரு குடிமகன்/குடிமகள் ( இது வேற 'குடி') கடமையாம்!
இது யாருக்கு வேணா வருமாம். 'ரேண்டமா கம்ப்யூட்டர் செலக்ட்' செஞ்சிரும்போல இருக்கு!
அந்த மாதிரி வர்றவங்களுக்கு, அந்த வாரம் முழுசும் அவுங்க வேலை செய்யற ஆஃபீஸ்/ கம்பெனி
இன்னும் எதாயிருந்தாலும் சம்பளத்தோட விடுப்பு கொடுக்கணுமுன்னு ஒரு சட்டமும் இருக்கு!
எனக்குதான் அனுபவத்துக்குமேலே அனுபவமா நடந்துக்கிட்டு இருக்கே! இதையும் விட்டு வைப்பானேன்?
முன்னேபின்னே கோர்ட்டுக்குப் போன அனுபவம் கிடையாது. இந்த சமாச்சாரத்தையெல்லாம் சினிமாவுலே
பார்த்ததோட சரி! எனக்குத் தெரிஞ்சதெல்லாம்,
'அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்'
'அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்ட்'
'அப்ஜெக்ஷன் சஸ்டெயின்டு'
இந்த மாதிரி சில வார்த்தைகள்தான் மை லார்ட்!
( பார்த்தீங்களா, கோர்ட்டுன்னதும் மை லார்ட் எல்லாம் சரளமா வருது!)
முதலாவதா இந்த ஊருலே கோர்ட்டு எங்கே இருக்குன்னே தெரியலை. லெட்டர்லேயே அட்ரஸ் போட்டிருந்தாங்க.
அந்தத்தெருவோ எனக்குத் தெரிஞ்சதுதான். ஆனா அங்கெ, இது எங்கெ இருக்குன்னு தெரியலையே?
ஞாயித்துக்கிழமையே அந்தப்பக்கமா ஒரு 'ரைடு' போய் இடத்தைக் கண்டுபிடிச்சேன். அட! இதுதானா? எத்தனை
தடவை இந்தப் பக்கம் வந்திருக்கோம். தலையை நிமிந்து அந்தக் கட்டிடத்தைப் பாக்கலை பாரு!
சொல்ல மறந்துட்டேனே. இந்த சர்வீஸ் செய்யறதுக்கு நமக்குத் தினப்படி வேற அளக்கறாங்களாம்! காரை நிப்பாட்டிட்டுப்
போனா, பார்க்கிங் காசுகூடத் தருவாங்களாம். சிடியிலே பார்க்கிங் எப்பவுமே கிடைக்கறது கொஞ்சம் கஷ்டம்தான்.
அதுக்கு பதிலா பஸ்ஸுலேயே போயிட்டு வந்துரலாம். இதோ, ஆத்து வாசல்லெயே இருக்கு பஸ் ஸ்டாப்!
நிஜந்தாங்க!
மறுநாள் சொன்ன டயத்துக்கு அங்கெ நான் ஆஜர்!!! என்னைப்போலவே ஒரு பத்து பதினைஞ்சு ஆளுங்க வந்திருந்தாங்க.
எல்லோர் முகத்துலெயும் 'நீதி தேவனுக்கு உதவ வந்திருக்கோம்' என்ற பெருமையும், லேசான கர்வமும் கலந்த
பார்வை!!!
எங்களையெல்லாம் வரவேற்று, ஒரு பெரிய அறையிலே உக்காரவச்சு, காஃபி, டீ வேணுமான்னு கேட்டு உபசரிச்சாங்க.
அப்புறம் கோர்ட்டு எப்ப ஆரம்பிக்கும், எங்க ட்யூட்டி என்ன என்றதெல்லாம் விளக்கமாச் சொன்னாங்க.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டாருன்னா எங்களுக்கு வேலையே இல்லை. அப்படி இல்லாம
அவர் மறுத்தால்தான் குறுக்கு விசாரணை நடத்துவாங்களாம். அப்பதான் ஜூரிகளோட உதவி தேவையாம்.
எங்க எல்லாருக்கும் ஒரே சமயம் வேலை இருக்காதாம். ஒரு கேஸுக்கு அவுங்களுக்குத் தேவை ஏழு பேர்தானாம்.
ஆனா, யார் ஜூரியா இருக்கணுமுன்னு முடிவெடுக்கறது எதிர்க்கட்சி வக்கீல்தானாம்.
கோர்ட்டு குமாஸ்தா, ஜூரியா வந்திருக்கறவங்க பேரை ஒவ்வொண்ணாப் படிப்பாராம். அப்ப அவுங்கவுங்க பேரு
வர்றப்ப அவுங்கவுங்க எந்திரிச்சு நிக்கணுமாம். அப்ப எதிர்க்கட்சி வக்கீல் ந்ம்மைப் பார்த்துட்டு 'யெஸ்'ன்னு சொன்னா
அந்த வழக்குக்கு நாம் ஜூரி. அப்படியில்லாம நம்மைப் பார்த்து 'ச்சேலஞ்ஜ்'ன்னு சொன்னா நமக்கு அந்த வழக்குலே
வேலை இல்லை! ஆமாம், நம்ம மூஞ்சைப் பார்த்தே அவருக்குச் சாதகமா இருப்போம்/இருக்கமாட்டொம்னு அவரே
தீர்மானம் செஞ்சுடுவார்போல!
அப்படி'ச்சேலஞ்ஜ்' சொல்லப்பட்டவுங்க அதை பெர்ஸனலா எடுத்துக்க வேணாமாம். நல்லா இருக்கே கதை!
நாமளா வரோம் வரோம்ன்னு சொல்லிக்கிட்டு ஓடிவந்தொம். இவுங்கதானே லெட்டர் போட்டு வரவழைச்சாங்க. வருந்திக்
கூப்பிட்டுட்டு வேணாமுன்னு அனுப்புவாங்களாமா?
சரியாப் பதினோரு மணிக்குக் கோர்ட் ஆரம்பிச்சது! அதுக்குக் கொஞ்சம் முன்னாலே எங்களையெல்லாம் கோர்ட்டு
ரூமுக்குக் கொண்டு போனாங்க. அங்கே ஏற்கெனவே வக்கீலுங்க உக்காந்திருந்தாங்க. பின்னாலே போட்டிருந்த
'பெஞ்சு'ங்களிலே ஜனங்க உக்கார்ந்திருந்தாங்க.
ஜட்ஜ் வந்தாரு. எல்லோரும் எழுந்திருந்து நின்னோம்( அதான் சினிமாவுலே பார்த்திருக்கோமே!)
அவர் உக்காந்தவுடனே நாங்கெல்லாம் உக்கார்ந்தோம்.
குற்றம் சாட்டப்பட்டவரைப் போலீஸ் கொண்டுவந்து ஏற்கெனவே ஒரு கதவுக்குப் பின்னாலெ நிறுத்தி வச்சிருந்தாங்க.
போலீஸ்தான் நீலக்கலர் யூனிஃபார்ம் போட்டிருந்தாங்க. கு.சா. நல்லா அட்டகாசமா கோட்டு, டை எல்லாம் கட்டிக்கிட்டு
ஜம்முன்னு இருந்தார். போலீஸ்கிட்டே சிரிச்சுப் பேசிக்கிட்டுவேற இருந்தார்.
சம்பிரதாயப்படி கு.சா.( குற்றம் சாட்டப்பட்டவர்) பேரைக் கூப்பிட்டவுடனே, கதவைத் திறந்து அவர் வந்து கூண்டிலே
நின்னார். இப்பக் குற்றப் பத்திரிக்கை வாசிச்சாங்க. வாசிச்சாங்க வாசிச்சாங்க அப்படி விலாவரியா வாசிச்சாங்க.
ஆதியோடு தொடங்கி விவரிச்சு விவரிச்சு வாசிக்கவே ஒரு பத்து நிமிஷமாயிடுச்சு.
கு.சா. குற்றத்தை ஒப்புக்கலை. உடனே ஜூரிங்க பேரை படிக்க ஆரம்பிச்சாங்க. என் பேரு வர்ரதுக்குள்ளேயே ஏழு
பேரை செலக்ட் செஞ்சுட்டாரு எதி(ரி)ர் வக்கீல்.ஆல்ஃபபெடிகல் ஆர்டர்லே என் பேரு கடைசியால்லெ வருது! அப்பவே
சில பேருக்கு 'ச்சேலஞ்ஜ்' கூடச் சொன்னாரு.
எங்கள்லெ பாக்கிப் பேரை, இருந்து கோர்ட்டு நடவடிக்கையைப் பார்க்கணுமுன்னா பார்க்கலாம். இல்லாட்டா வீட்டுக்குப்
போறதானாப் போகலாமுன்னு சொன்னாங்க. நானும் இதுவரை இதையெல்லாம் நேர்லே பார்க்காததாலே, இருந்து
என்ன ஆவுதுன்னு பார்க்கலாமுன்னுட்டு, உக்காந்திருந்தேன். அந்த ஏழு பேரும் ஒரு அறைக்குள்ளே போனாங்க.
ரெண்டு நிமிஷத்துலே வெளியே வந்து ஜட்ஜ்க்கு இடது கைப் பக்கம் போட்டிருந்த நாற்காலிகளிலே
வந்து உக்காந்தாங்க.
அவுங்க இருந்த பகுதி, தனியா விளக்குங்கெல்லாம் நிறைய வச்சு, ஒரு அந்தஸா இருந்துச்சு! நல்ல குஷன் வச்ச
வசதியான இருக்கைகள்!
நான் கோர்ட்டு ரூமை சுத்தி முத்திப் பார்த்துக்கிட்டு இருந்தேன். எல்லாம் நல்ல மரவேலைப்பாடுகள். 'க்வாலிட்டி
டிம்பர்'லே செஞ்ச சாலிடான ஃபர்னிச்சர்ஸ்!!!!
கேஸு விசாரிக்க ஆரம்பிச்சாங்க. இது ஒரு 'ரேப் & அப்யூஸ்' வழக்கு. நல்லவேளை அந்தச் சின்னப் பொண்ணை
இன்னைக்கு ஆஜர்ப்படுத்தலை!
பழையபடி விஸ்தாரமா விவரிக்க ஆரம்பிச்சுப் படிக்கறாங்க. சாதாரணமா நாம தினப்படி சொல்லாத வார்த்தைகள்,
உடலோட பகுதிகளின் பெயர்கள்ன்னு விஸ்தரிச்சுக்கிட்டே போகுது. எனக்கு அங்கே இருப்பே கொள்ளலை. அதையெல்லாம்
கேக்கவே கொஞ்சம் அன் ஈஸி யா இருந்துச்சு. அப்ப ஒரு அஞ்சு நிமிஷம் ஷார்ட் ப்ரேக் விட்டாங்க. ஜட்ஜ் எழுந்து உள்ளெ
போனார். அப்ப சொன்னாங்க, வெளியே போறவங்க போகலாமுன்னு. நான் இதுதான் சாக்குன்னு வெளியே வந்துட்டேன்.
அப்புறம் சென்ட்ரல் சிடியிலே கடைங்களுக்கெல்லாம் போயிட்டு, கையோடு கொண்டு போயிருந்த 'ஸாண்ட்விச்'சை
ஏவான் ஆற்றுப் பக்கத்துலே உக்காந்து தின்னுட்டு( இங்கேதான் தெனாலி படத்துலே கமலும் ஜோதிகாவும் டூயட்
பாடினாங்க. இவுங்க மட்டுமில்லே, இங்கெ எடுக்கற எல்லாப் படங்களுக்கும் இதுதான் பிக்சர் பாய்ண்ட்!)
ஆற அமர வீட்டுக்கு வந்தேன்.
கோர்ட்டுலே ஒரு ஃபோன் நம்பர் கொடுத்திருந்தாங்க. அதுக்கு தினமும் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலே ஃபோன்
போடணுமாம். அப்ப அதுலே சொல்வாங்களாம், மறுநாளுக்கு ஜூரி சர்வீஸுக்கு போணுமா, வேணாமான்னு!
அன்னைக்குச் சாயந்திரம் ஃபோன் போட்டப்ப வேணாமுன்னு ஒரு ரெகார்டட் மெசேஜ் வந்துச்சு!
புதன் கிழமைக்கு மறுபடி கோர்ட்டுக்கு போகும்படியாச்சு. இன்னைக்கும் நமக்கு வேலை இல்லை.'சேலஞ்ஜ்டு'! மறுபடி கடை,
ஸாண்ட்விச், ஊர் சுத்தரதுன்னு போயிடுச்சு. வியாழனும் இப்படியே! வெள்ளிக்கிழமை வந்துருச்சு. கடைசி நாள்.
போயிட்டு வந்து வீட்டுலே வேலையைப் பாக்கலாமுன்னு பாதி சமையலை முடிச்சுட்டுப் போனேன். என்னமோ
காலங்காலமா இப்படிக் கோர்ட்டுக்குப் போறமாதிரி ஒரு பாவனை வந்துருச்சு!
நம்ம நேரம் பாருங்க. என் பேரைக் கூப்பிட்டப்ப 'ச்சேலஞ்ஜ்'க்குப் பதிலா 'யெஸ்'ன்னு சத்தம் வருது!
மீதி நாளைக்குச் சொல்றேன். இப்பக் கோர்ட்டுக்குப் போணும்:-)))))
Wednesday, April 27, 2005
யெஸ், யுவர் ஆனர்!!!!!
Posted by துளசி கோபால் at 4/27/2005 04:09:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
கணம் கோர்ட்டார் அவர்களே, கதையை இப்படி பாதிலே அட்ஜர்ன்ட் பண்ணிட்டியளே? அடுத்த வாய்தா வரும்தானே?
சுரேஷ்
கட்டாயம் வரும் என்று நினைக்கிறேன் யுவர் ஆனர்! அதற்குள் எதி(ரி)ர்வக்கீல்
சாட்சிங்களை விலைக்கு வாங்காம இருக்கணும்!
நன்றி சுரேஷ்!
ஆஹா... கலக்குங்க ஜீரியக்கா...
(ஜீரியானாலும் அப்படி சொல்லலாம்தானே... - அல்லது ஏதாவதொரு பிரிவில்ல முடியாதுன்னு ஏதும் இருக்கா:)
நல்ல அனுபவம்தான்... வழக்கத்தைவிட அதிகமா தனியா சிரிக்க வச்சுட்டீங்க.
அந்த மாதிரி வர்றவங்களுக்கு, அந்த வாரம் முழுசும் அவுங்க வேலை செய்யற ஆஃபீஸ்/ கம்பெனி
இன்னும் எதாயிருந்தாலும் சம்பளத்தோட விடுப்பு கொடுக்கணுமுன்னு ஒரு சட்டமும் இருக்கு!
ஆஹா அப்படிலாம் இருக்கா... இங்க தேசியசேவை போல அங்க ஜீரிசேவை-யா?
அப்படி'ச்சேலஞ்ஜ்' சொல்லப்பட்டவுங்க அதை பெர்ஸனலா எடுத்துக்க வேணாமாம். நல்லா இருக்கே கதை!
ச்சேலஞ்ஜ் வேணா சொல்லிக்கட்டும். ஆனா அந்த நாளைக்கும் காசு வந்துடும்தானே!? ஜூரியெல்லாம் காசு விஷயத்துல கறார இருக்கோணும்:)
ஜட்ஜ் வந்தாரு. எல்லோரும் எழுந்திருந்து நின்னோம்( அதான் சினிமாவுலே பார்த்திருக்கோமே!)
ஹஹஹா...
போலீஸ்கிட்டே சிரிச்சுப் பேசிக்கிட்டுவேற இருந்தார்.
ஓஹோ அங்கேயும் அப்படித்தானா? நான் ஏதோ சன் செய்திகள்ள காட்டறவங்கதான் அப்படின்னு நெனச்சேன்:)
இப்பக் குற்றப் பத்திரிக்கை வாசிச்சாங்க. வாசிச்சாங்க வாசிச்சாங்க அப்படி விலாவரியா வாசிச்சாங்க.
ஹஹஹா... சிரிச்சுட்டே இருந்தேன்ன்ன்ன்ன்ன்...
ஆனா கடைசில 10 நிமிஷம்னு முடிச்சுட்டீங்க:)
இங்கேதான் தெனாலி படத்துலே கமலும் ஜோதிகாவும் டூயட்
பாடினாங்க. இவுங்க மட்டுமில்லே, இங்கெ எடுக்கற எல்லாப் படங்களுக்கும் இதுதான் பிக்சர் பாய்ண்ட்!)
இது மறுபதிப்பு-தானே:) சரி... சரி...
நீங்க திட்டறது கேக்குது:
ஏவான் ஆறு அங்கயேதானப்பா இருக்கும், அத பார்க்கும்போதெல்லாம் அதே தெனாலி-தான யாவகம் வரும்..
அடுத்த வாய்தாவுக்கு காத்திருக்கிறேன்...
//இதுபோல 'ஜூரர் சர்வீஸ்' செய்யறது ஒவ்வொரு குடிமகன்/குடிமகள் ( இது வேற 'குடி') கடமையாம்!
இது யாருக்கு வேணா வருமாம். 'ரேண்டமா கம்ப்யூட்டர் செலக்ட்' செஞ்சிரும்போல இருக்கு!
//
இந்த லாட்டரி சீட்டு, லாட்டோக்கு எல்லாம் இந்த கம்ப்யூட்டர் நம்மளை செலக்ட் பண்ணது. இந்த மாதிரி மேட்டருக்கு நம்ம பெயர் தான் முன்னாடி வந்து நிக்கும்.
உங்களை 'யெஸ்'-ன்னு சொன்ன தைரியமா இருங்க. எதாச்சி பேச சொன்ன உங்க ப்ளாக்கை பத்தி சொல்லிருங்க. :-)
துளசி அக்கா,
எப்படியோ (நிரந்திரமில்லா!) நீதி அரசி ஆயிட்டீங்க :-) எவ்ளோ பேருக்கு இம்மாதிரி வாய்ப்பு கிடைக்குதுனு நினைச்சுட்டு அரசாங்கம் தந்த இந்த (குடிமகளுக்கான) கடமையை செவ்வனே செய்வீங்கன்னு நம்பறேன்!!!
"Challenged" க்கெல்லாம் அசந்து போற ஆளா நீங்க ;-)
என்றென்றும் அன்புடன்
பாலா
சுரேஷ், அன்பு, கிறிஸ், விஜய், பாலா
நன்றி !!!!
நாளைக்கு, மீதிப் பாதி வருது!
என்றும் அன்புடன்,
துளசி.
நீதிபதி அவர்களே, இங்கே தமிழ்மணத்திலும் நீங்கள் சில தீர்ப்புகளை சொல்லவேண்டியதிருக்கும் ;) உங்களோட முதல் வழக்கினை முடிச்சுட்டு வாங்க. சாவகாசமா, லீகல் விஷயங்களெல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கறோம்
துளசி, நல்ல அனுபவம் உங்களுக்கு. படிக்க எப்பவும் போல சுவாரசியமா. - நிர்மலா.
துளசி
எனக்கு ஆங்கிலம் இரண்டாம் மொழிதான் என்று எழுதி அனுப்பிவிட்டால் அதன் பிறகு கூப்பிடவே மாட்டார்கள்.(இது என்னுடைய வழக்கம்) கொலை என்றால் பரவாயில்லை, சாதாரண வழக்குக்கு இவர்கள் தரும் பணத்திற்காக போனால் என் வேலையை நான் தானே மீண்டும் வந்து செய்யவேண்டும்.
நன்றாக எழுதுகிறீர்கள் சுவைபட. NJயில் 5 நாளைகும் தேவையிருந்தால்முதலிலேயே சொல்லிவிடுவார்கள். தினமும் கேட்கவேண்டிய அவசியம் இருக்காது.
அன்பு நிர்மலா,
நன்றி.
அன்பு பத்மா,
போகலைன்னா ' நடவடிக்கை' எடுக்க மாட்டாங்களா?:-)
இது ரொம்ப ச்சின்ன நாடுன்றதாலே அவ்வளவா குற்றங்கள் இல்லைன்னுதான் சொல்லணும்.
ஆனால் ஜனக்க ரேஷியோ பார்த்தால் சரியா இருக்கும் போல!
என்றும் அன்புடன்,
துளசி.
ஹா ஹா ஹா உண்மையிலேயே உங்கள் பதிவில் நகைச்சுவை பொங்கி வழியுது... அருமை அருமை....
வாங்க சாதாரணமானவள்.
நம்ம பொழைப்பே சிரிப்பாக் கிடக்குதே! அதான்....:-)
Post a Comment