Friday, April 01, 2005

ச்சீனுவும் நானும்!!!!

( ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாளின் தொடர்ச்சி. பாகம் 3)

எனக்கும் நம்ம சிங்கை ச்சீனுவுக்கும் இருவது வருசமா ஒரு தொடர்பு இருக்கு!!! இன்னும் சரியாச்
சொல்லணுமுன்னா இந்த மார்ச் மாசத்தோட இருவது வருசம் முடிஞ்சுடுச்சு!!! கோபாலுக்கும்
இது தெரிஞ்ச விஷயம்தான்! இன்னும் சொல்லப் போனா, அவரு தனியா சிங்கப்பூர் போனாலும்
( அதான் ரெண்டு மாசத்துக்கொருக்காப் போயிடறாரே!)ச்சீனுவைப் பார்க்காம வரமாட்டார்!!!


இந்தமுறை அங்கே போகணுமுன்னு நினைச்சப்பவே முடிவு செஞ்சுட்டேன், தினமும் காலையிலே
முதல் வேலையா, ச்சீனுவைப் பார்த்துட்டுத்தான் மத்ததைக் கவனிக்கணுமுன்னு! போனோமா,
பார்த்தோமா, வந்தோமான்னு இல்லாம, கொஞ்சநேரம் மனசமாதானத்தோட உக்காந்து படிக்கணுமுன்னு
கையோட ஒரு புத்தகத்தையும் சூட்கேஸுக்குள்ளே மறக்காம எடுத்து வச்சுக்கிட்டேன். ஒரு காரியம்
செய்யணுமுன்னு தீர்மானிச்சா, எப்படியாவது முடங்காது செய்யணும்னு நினைக்கறவ நானு. அதுக்குத்
தோதாத்தான் தங்குற இடத்தையும் வச்சுக்கறது.

முந்தியெல்லாம் சிரங்கூன் ரோடு ஸ்ரீனிவாசப் பெருமாள்ன்னு இருந்தது, இப்ப புதுசா எம்.ஆர்.டி ஸ்டேஷன்
வந்தபிறகு ஃபேரர் பார்க் பெருமாள்னு ஆகியிருக்கு! ( இதையும் நம்ம 'அல்வா'வோட பின்னூட்டத்துலே
இருந்துதான் தெரிஞ்சுகிட்டேன்) இந்த முறை அங்கே கொஞ்சம் வித்தியாசமா இருந்தது போல ஒரு உணர்வு.
வழக்கமா இருக்கற சிநேகமான தன்மை கொஞ்சம் குறைஞ்சது போல.

ச்சீனு என்னவோ அதேமாதிரிதான்,'நின்ற திருக்கோலத்துலே' சேவை சாதிச்சுக்கிட்டு இருக்கார். அங்கே
இருக்கற பட்டர்கள்தான் ஏதோ இயந்திர கதியா இயங்குற மாதிரி இருந்தது! என் கண்ணுலேதான் கோளாறோ,
இல்லை நாந்தான் அப்படியெல்லாம் நினைச்சுக் குழப்பிக்கிறேனோ?

எதா இருந்தாலும் அவுங்கவுங்க பாடு அவுங்கவுங்களுக்குன்னு நினைச்சுக்கிட்டு, உத்தேசிச்சுப் போன காரியத்தை
விடாமச் செஞ்சேன்னு வச்சுக்குங்க!

ஊருக்குப் போகறப்ப ரெண்டு நாள் தங்கி, வீட்டு ஜனங்களுக்காக ஷாப்பிங் செஞ்சுக்கிட்டுப் போறது, அதேமாதிரி
திரும்பி வர்றப்ப, இங்கே தேவைப்படற சாமான்களை வாங்கிக்கிட்டு வர்றதுன்னே இத்தனை காலமும் போயிக்கிட்டு
இருந்துச்சு. அந்த ருட்டீனை மாத்திட்டேன் இந்த முறை!

நான் திரும்பி வரவே மணி எட்டாயிரும். அதுக்குள்ளே மகளும் வெளியே கிளம்பத்தயாரா இருப்பா. அப்படியே
பொடிநடையா பழைய கோமள விலாஸ் போவோம்! நாம இருந்த இடத்துக்குப் பக்கத்துலெயே ஒரு கோமளா'ஸ்
ஃபாஸ்ட் ஃபுட் இருக்குதான். ஆனா அங்கே என்னவோ காஃபி நல்லா இல்லாதது போல ஒரு தோணல்.காஃபி
மட்டுமில்லை, எல்லாமே சுமாராத்தான் இருக்கு! ஆனா மகள் சொல்றது, 'எல்லாம் நல்லாத்தான் இருக்கு.உங்க
ளுக்குத்தான் மெண்டல் ப்ளாக்'

சாப்புடறவங்களுக்கும், சப்ளை பண்ணறவங்களுக்கும் ஒரு அண்டர் ஸ்டேண்டிங் வேணாமா? அந்த பர்சனல்
ஃபீலிங் பழைய சம்பிரதாயமான கடையிலேதான் இன்னமும் இருக்குன்னு நிச்சயமா நம்பறேன். எல்லாத்தையும்
மொதல்லேயே தீர்மானம் செஞ்சுக்கிட்டு, ட்ரேயிலே அடுக்கி எடுத்துக்கிட்டுப் போய், இடம் பிடிச்சு உக்காந்து
தின்னறதுலே எனக்கு சம்மதம் இல்லை!

நாம் போய் உக்காரணும். சப்ளையர் வருவார்.

" என்ன சாப்புடறீங்க?"

" சூடா என்ன இருக்கு?"

" எல்லாமே சூடா இருக்கு. இட்டிலி, வடை, தோசை...."

இப்படியெல்லாம் டயலாக் இல்லாம சாப்புடறது நல்லாவா இருக்கு?

அங்கே மத்த கடைங்கெல்லாம் பத்து, பத்தரைக்குத்தான் திறக்கறதாலே,கடைங்களுக்கு முன்னாலெ இருக்கற நடை
பாதை, வெராண்டாவெல்லாம் நாங்க போற நேரம் காலியா இருக்கறதும் ஒரு விசேஷம்தான்.கையைக் காலை
வீசிப்போட்டு நடந்து போறது ஒரு சுகம்தானே?

ச்சும்மா ஒரு நேரம் சாப்பிடப் போனாவே, நமக்குப் பரிமாறர ஆளோட பேரு எனக்குத் தெரிஞ்சாகணும்.அப்படிப்பட்ட
நான், இப்ப ஒரு வாரத்துக்குச் சப்ளை செய்யறவரைப் பத்தித் தெரிஞ்சுக்காம இருக்கமுடியுமா?

மொத நாளு அங்கெ போனப்ப, இதுவரை வழக்கமாப் பார்க்காத ஒரு இளமையான முகம் கண்ணுலே பட்டது.
நல்ல ஸ்மார்ட் லுக்கிங் யங் மேன்! யூனிஃபார்ம் போடாம, டி.ஷர்ட் போட்டு இன் செஞ்சுக்கிட்டு இருந்தார்.
தங்க ஃப்ரேம் மூக்குக் கண்ணாடி, முகத்துலே ஒரு நல்ல புன் முறுவல்....

' எப்படி இருக்கீங்க?' கேட்டது நாந்தான்!

' நல்லா இருக்கேங்க. என்ன சாப்புடறீங்க?'

பிறகு எல்லாம் வழக்கம் போல!

எங்க ஊருலே இட்டிலி, தோசைக்கெல்லாம் வழியே இல்லை. நானே செஞ்சாத்தான் உண்டு((((-:

இங்கேயிருந்து காஞ்சுபோனதாலே, சூடா ஒரு பேப்பர் ரோஸ்ட், அதுக்கு முன்னாலே ஒரு ப்ளேட் மெதுவடை!!!

இந்த வடையிலே கூட ஒரு விவகாரம் இருக்குதுங்க. என்னோட 31 வருஷ சமையல் அனுபவத்துலே வடையோட
ருசியிலே போண்டாதான் செஞ்சிருக்கேன். என்னதான் கவனமா மாவை அரைச்சாலும், எப்படியோ அது இளகிப்
போய் (எப்படியோ என்ன எப்படியோ? தண்ணி விட்டு அரைக்கும்போது கொஞ்சம் கூடிப் போறதுதான்!) வடையாத்
தட்ட வராம உருட்டிப் போடும்படியாத்தான் ஆகிடுது. எங்க வீட்டுலே ஹனுமாருக்குக்கூட 'போண்டா மாலை'தான்!!

அதனாலே வடைன்னாலே ஒரு அலாதியான ஈடுபாடு!!!!

சென்னையிலே எங்க மாமா ஒருத்தர் இருக்கார். வயசானவர். எம்பத்தி அஞ்சு வயசாச்சு. அதனாலே வயசான
வங்களுக்கு வழக்கமா வர்ற காது மந்தம் அவருக்கு இருக்கு. ஆனா, அவரோட மருமகள் எப்பவும் சொல்றது
என்னன்னா, தினம் வடை சாப்பிட்டு, காது செவிடாப் போயிருச்சுன்னு!!!!! தினம் ஏன் சாப்பிடறாருன்னா,
அவர் அங்கே கோயில் தர்மகர்த்தா. அந்தக் கோயிலே யாராவது ஒருத்தர் தினமும் ஹனுமாருக்கு வடை மாலை
சார்த்திக்கிட்டே இருப்பாங்க. சக்தி வாய்ந்த ஆஞ்சநேயராச்சே!!!!

நானும் மகளும் பேசிக்கிட்டே, கூட்டத்துலே நடந்து போறப்ப, அவ ஏதாவது ரொம்ப மெதுவாச் சொன்னான்னா
எனக்குக் காதுலே சரியா விழாதுல்லே? என்னன்னு திருப்பிக் கேட்டா, பதில் வருது 'வடை'ன்னு! இந்த
அநியாயத்தைப் பாருங்க! எனக்கொரு சந்தேகம் என்னன்னா, வேணுமுன்னே ரொம்ப மெதுவாப் பேசறாளோன்னு!

அது இருக்கட்டும். வடை வர்றதுக்கு முன்னாலே தண்ணி கொண்டுவந்து வைக்கற இந்த ச்சீனாக்காரரை நானும்
இருபது வருஷமாப் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். பாவம். வயசாயிருச்சு!ஹூம்...

மறக்கறதுக்கு முன்னாலே இன்னோரு விஷயமும் சொல்லிடறேன். இங்கே சிங்கப்பூர்லே தண்ணியை( அய்யோ.. குடிக்கிற
தண்ணீங்க!!!) பயமில்லாமக் குடிக்கலாம்! தண்ணீ பாட்டிலைத் தூக்கிக்கிட்டு லோலோன்னு ஓடவேணாம்!

வடை வந்துருச்சு! கூடவே தேங்காய்ச் சட்டினி, சாம்பார், ஒரு காரச் சட்டினி!! சாம்பாருலே என்ன காய்?
தேடிப் பாக்கறேன்.கத்தரிக்காய்! போகட்டும்.இப்பெல்லாம் சாம்பாருன்னா ரெண்டு பேர் ஞாபகம் வருதே!
ஒண்ணு நம்ம சாம்பார், பாவம்!! நான் அங்கே இருந்தப்பத்தான் 'ரோமியோ டெட்'ன்னு உள்ளூர் பேப்பரிலே
வந்துச்சு. இன்னொருத்தர் நம்ம 'மதி'

சப்ளையர் பேரு முத்து! ஆஹா, எனக்கு நம்ம ப்ளாக் வச்சிருக்கற முத்து ஞாபகம் வருது. ஸ்டூடண்ட்டான்னு
கேட்டேன். இல்லையாம். படிச்சு முடிச்சுட்டாராம். மதுரைக்காரராம். இங்கே வேலை செஞ்சுகிட்டே, வேற
வேலைக்கு முயற்சி செய்யறாராம். அப்புறமும் சிலது சொன்னார். அதையெல்லாம் எழுதி, வேறயாராவது படிச்சுட்டு,
முதலாளிக்குப் 'போட்டுக் கொடுத்திட்டா?' அதான் சிலதோட நிப்பாட்டிட்டேன்.

இதோ வருது நம்ம தோசை, பளபளன்னு எண்ணெய் மினுக்கோட, தட்டுக் கொள்ளாம ரெண்டு பக்கமும் கையை நீட்டிக்கிட்டு!!

மகளுக்குச் சொன்னேன், முதல்லே ரெண்டு கையையும் மடக்கி வச்சுக்கோன்னு! இதுக்கும் தொட்டுக்கே அதே
மூணு வகைகள்!!!! ஒரு கட்டுக் கட்டியாச்சு!

"அப்புறம் என்னங்க வேணும்?"

" இப்போதைக்கு இது போதுங்க. ரெண்டு காஃபி குடுங்க. ஃபில்டர் காஃபிதானே?"( இப்ப எம்.கே. குமாரோட ஞாபகம்!)

அட்டகாசமான ஸ்ட்ராங்கான நல்ல காஃபி!!!! டபரா, டம்ப்ளரிலே வருது.சம்பிரதாயம்,சம்பிரதாயம்!!!!
ச்சும்மா ஒரு ஆத்து ஆத்தி நம்ம முன்னாலெ பவ்யமா வைக்கறார் நம்ம முத்து!!!!!

பில் வருது. இவ்வளவுக்கும் சேர்த்து பத்து வெள்ளிக்கும் குறைச்சலாத்தான்! இது, இது, இதுதான் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு!

அப்புறம் மகளுக்கு ஒரு 'டிஜிட்டல் கேமெரா' வாங்க 'சிம் லிம் ஸ்கொயர்' போனதெல்லாம் தனிக்கதை!!!

அங்கிருந்து திரும்பறப்ப, நம்ம ஈழநாதன் தம்பி சொன்ன கடைக்குப் போனோம். இருக்கு, இருக்கு புத்தகங்கள்
நிறைய இருக்கு!!!! ஆனா எல்லாம் மத்த இடங்களிலே இருக்கறது போல ஒரே வாரப் பத்திரிக்கைக் குவியல்!!
இப்பெல்லாம் எல்லா வார இதழும் ஒரே மாதிரி இருக்கு. சினிமாவையும், அரசியலையும் தவிர அவுங்க உலகத்துலே
வேற ஒண்ணுமே இல்லாமப் போயிருச்சு!!! அடப் பாவமே!!!!

கவனிச்சுப் பார்த்தாக் கண்ணுலே பட்டது இன்னோரு சிறிய அடுக்கு. ஆஹா....நிறைய வகைகள் இல்லே.
ஆனாலும் இருக்கு! கவிதைகளா நிறைய இருந்துச்சு. எனக்கு வேண்டியது, கதைகளும், கட்டுரைகளும்!!!

திலகவதியோட சில புத்தகங்கள் எல்லாம் 'ஹார்டு கவர்'லே ச்சின்ன தலைகாணி சைஸ்! அதனாலே கொஞ்சம்
ஒல்லியா இருக்கறதைத் தேடுனேன்.

கிடைச்சிருச்சு!!! அஞ்சு புத்தகங்கள் கிடைச்சிருச்சு! எல்லாம் சந்தியா பதிப்பகம் போட்டதுதான்!

காலம் காலமாக... சா.கந்தசாமி ( எழுத்தாளர்களை பற்றிய விவரங்கள் அடங்கின கட்டுரைத்தொகுதி)

யதாஸ்தானம்......கோமதி( கவிஞர் சதாரா மலதியின் தாயாராம்)

செவக்காட்டு மக்கள் கதைகள்....கழனியூரான்

கிராமங்கள் பேசுகின்றன..... கார்முகில்

ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு....எழில்வரதன்( ஆதவன் தீட்சண்யா மதிப்புரை எழுதியிருக்கார்)

ரெண்டு நாளுலே இன்னும் புதுசா வருமாம். மறுபடி வரணும் இங்கேன்னு முடிவு செஞ்சிட்டேன்.

இதுலே பாருங்க, இந்த 'ரதிப்பெண்கள்.......' தலைப்பே 'ரொம்ப நல்லா இருக்கு'ன்னு தோணிப்போச்சு!

கதைகளும் ஏமாற்றம் இல்லாமே நல்லாதான் இருக்கு.ச்சும்மா, அப்படி இப்படின்னு ஒரு முறை படிச்சுட்டேன்.
இன்னும் ஒருதடவை கொஞ்சம் ஆழமாப் படிக்கணும்!


பி.கு:

நேத்து பின்னூட்டம் போட்டவுங்களுக்கு ஒரு பதில் எழுதுனா, அது என்னோட பதிலைப் பதியவே தகராறு செய்யுது!
அதனாலே இதுலே சொல்லிடறேன். பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி! தனிமடலிலே பதில் எழுதலாமுன்னு
இருக்கேன். சரியா?10 comments:

Anonymous said...

சோதனை மெயில்

துளசி

said...

//எங்க வீட்டுலே ஹனுமாருக்குக்கூட 'போண்டா மாலை'தான்!!//

நகைச்சுவையை நாந்தான் கலந்து எழுதுகிறேன் என்றால் எனக்கு மேல நீங்க!!! சுவாரஸ்யமாக இருக்கிறது தங்கள் அனுபவங்கள்.. இன்னும் வேனும்னா சொல்லுங்க.. வடைய FEDEXல போட்டு அனுப்பிடலாம்!!!

அன்புடன்,
மூர்த்தி.

Anonymous said...

//எங்க வீட்டுலே ஹனுமாருக்குக்கூட 'போண்டா மாலை'தான்!!//

நகைச்சுவையை நாந்தான் கலந்து எழுதுகிறேன் என்றால் எனக்கு மேல நீங்க!!! சுவாரஸ்யமாக இருக்கிறது தங்கள் அனுபவங்கள்.. இன்னும் வேனும்னா சொல்லுங்க.. வடைய FEDEXல போட்டு அனுப்பிடலாம்!!!

அன்புடன்,
மூர்த்தி.

Anonymous said...

//எங்க வீட்டுலே ஹனுமாருக்குக்கூட 'போண்டா மாலை'தான்!!//

நகைச்சுவையை நாந்தான் கலந்து எழுதுகிறேன் என்றால் எனக்கு மேல நீங்க!!! சுவாரஸ்யமாக இருக்கிறது தங்கள் அனுபவங்கள்.. இன்னும் வேனும்னா சொல்லுங்க.. வடைய FEDEXல போட்டு அனுப்பிடலாம்!!!

அன்புடன்,
மூர்த்தி.

Anonymous said...

//எங்க வீட்டுலே ஹனுமாருக்குக்கூட 'போண்டா மாலை'தான்!!//

நகைச்சுவையை நாந்தான் கலந்து எழுதுகிறேன் என்றால் எனக்கு மேல நீங்க!!! சுவாரஸ்யமாக இருக்கிறது தங்கள் அனுபவங்கள்.. இன்னும் வேனும்னா சொல்லுங்க.. வடைய FEDEXல போட்டு அனுப்பிடலாம்!!!

அன்புடன்,
மூர்த்தி.

Anonymous said...

//எங்க வீட்டுலே ஹனுமாருக்குக்கூட 'போண்டா மாலை'தான்!!//

நகைச்சுவையை நாந்தான் கலந்து எழுதுகிறேன் என்றால் எனக்கு மேல நீங்க!!! சுவாரஸ்யமாக இருக்கிறது தங்கள் அனுபவங்கள்.. இன்னும் வேனும்னா சொல்லுங்க.. வடைய FEDEXல போட்டு அனுப்பிடலாம்!!!

அன்புடன்,
மூர்த்தி.

Anonymous said...

//எங்க வீட்டுலே ஹனுமாருக்குக்கூட 'போண்டா மாலை'தான்!!//

நகைச்சுவையை நாந்தான் கலந்து எழுதுகிறேன் என்றால் எனக்கு மேல நீங்க!!! சுவாரஸ்யமாக இருக்கிறது தங்கள் அனுபவங்கள்.. இன்னும் வேனும்னா சொல்லுங்க.. வடைய FEDEXல போட்டு அனுப்பிடலாம்!!!

அன்புடன்,
மூர்த்தி.

said...

எங்க வீட்டுலே ஹனுமாருக்குக்கூட 'போண்டா மாலை'தாதான்//

LOL.....
நல்லா எழுதறீங்க....தொடருங்க...

said...

//இப்பெல்லாம் சாம்பாருன்னா ரெண்டு பேர் ஞாபகம் வருதே!
ஒண்ணு நம்ம சாம்பார், பாவம்!! நான் அங்கே இருந்தப்பத்தான் 'ரோமியோ டெட்'ன்னு உள்ளூர் பேப்பரிலே
வந்துச்சு. இன்னொருத்தர் நம்ம 'மதி' //

:D

±ÉìÌõ º¡õÀ¡÷ ¦ºöÂÏõÉ¡ ÐǺ¢ º¡õÀ¡÷ ¦À¡ÊýÛ ´Õ ¼ôÀ¡ & ¯„¡ º¡õÀ¡÷ ¦À¡ÊýÛ þý¦É¡Õ ¼ôÀ¡ ·À¢Ã¢ˆƒ¢Ä ÅÕ째ý. :D

¯í¸ ¦ÃñÎ §À÷ ¾Å¢÷òÐ Íó¾ÃÅʧÅø, ¦ƒÂ‚ & ÍÅ¡Á¢¿¡¾ý º¡÷(«Å§Ã¡¼ ¸¨¾¨Â ÁÈì¸ ÓÊÔÁ¡?) ±øÄ¡Õõ »¡À¸õ Å÷ãí¸. ;)

-Á¾¢

said...

திஸ்கியில் இருக்கும் பின்னூட்டம் இதுதான்.


:D

எனக்கும் சாம்பார் செய்யணும்னா துளசி சாம்பார் பொடின்னு ஒரு டப்பா & உஷா சாம்பார் பொடின்னு இன்னொரு டப்பா ·பிரிஜ்ஜில வச்சிருக்கேன். :D

உங்க ரெண்டு பேர் தவிர்த்து சுந்தரவடிவேல், ஜெயஸ்ரீ & சுவாமிநாதன் சார்(அவரோட கதையை மறக்க முடியுமா?) எல்லாரும் ஞாபகம் வர்ரீங்க. ;)

-மதி