Monday, April 04, 2005

கடவுளும் கதையும்!!!!!

(ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள்!! பாகம் 5)

"தினம் தினம் என்னன்னு ஷாப்பிங் போறது? கொஞ்சம் ஊரைச் சுத்திப் பார்க்கப் போலாமா?"

" எங்கே போறதும்மா? எல்லா இடமும் ஏற்கெனவே அப்பப்ப வந்தப்ப பார்த்துட்டோம்தானே?"

கையிலே, 'சிங்கப்பூர் டூரிஸ்ட் கைடு மேப்' வச்சுக்கிட்டு மகள் ஆராய்ஞ்சு பார்த்துக்கிட்டு இருக்கா.

"ஒண்ணுவேணாச் செய்யலாம். புதுசா என்ன மிருகங்கள் வந்துருக்குன்னு போய்ப் பார்க்கலாம்."



" உன்னாலே தனியாப் போகமுடியுமுன்னா நீ போயிட்டு வாயேன். அம்மாவுக்கு ஒரே கால்வலிடா!"

" உங்களுக்கும்தான் அனிமல் பேபீஸ் பிடிக்கும். தனியாப் போனா ரொம்பவே போர்! நீங்க அங்கெ வந்து,
குழந்தைகளை(!) பார்த்து, அய்யோடா, ரொம்பவே க்யூட் . செல்லம் போல இருக்கு! இந்தப் பாப்பா பாரு,
பட்டாட்டம் இருக்கு! இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு வந்தாத்தானே ஜோரா இருக்கும்!"

" போனமுறை வந்திருந்தப்பத்தானே ஒரே நாளுலே நைட்டு சஃபாரியும் பார்க்கணுமுன்னு காலையிலே 10
மணிக்கு வந்துட்டு, ராத்திரி 11 மணிவரை சுத்தினோம். இப்பவும் அதே அனிமல்ஸ்தானே இருக்கும்."

" ஆமாமாம். போனதடவை பெஸ்ட் என்னன்னா, மலைப் பாம்பைக் கழுத்துலே போட்டுக்கிட்டு ஃபோட்டோ
எடுத்துக்கிட்டதுதான்!!!!"

" உங்கஅப்பா அதைப் பார்த்துட்டு பயந்துட்டாரு!!! அவருக்கு பாம்புன்னாவே ரொம்ப பயம்!"

" அப்பா மட்டுமில்லேமா, என் ஃப்ரெண்ட்ஸ்கூட அதைப் பார்த்துட்டு பயந்துட்டாங்க. என் ஸ்க்ரீன் சேவர்
இந்த ஃபோட்டொதான்!!"

" இங்கே பூகி ஜங்ஷன்'ன்னு ஒரு ஷாப்பிங் சென்டர் இருக்காம். அங்கெ வேணாப் போகலாம்"

" சரி' கிளம்பு. கோயிலுக்குப் போயிட்டு அப்படியே போகலாம். பெருமாளைப் பார்க்க இதுவரை நீ வரலையே."

கோயில்லே, தாயார் சந்நிதிக்கு முன்னாலே நிக்கறப்ப நேத்துப் பார்த்த முகம் மனசுக்குள்ளே வருது. 'இதே
முகம்தானே இருந்துச்சு, நேத்து மூக்குத்திக் கடையிலே பாத்தவங்களுக்கு?' மக கிட்டே கேட்டேன்.

'இன் அ வே...யெஸ்' என்று சொன்னாள்.

'கடவுள் செய்யறது நியாயமே இல்லை!! அவுங்க பேசுனப்பதான் சட்டுன்னு தெரிஞ்சது. வாயைத் திறக்கலேன்னா
அப்படியே பொம்பிளைதான்' புலம்பல் ஆரம்பிச்சிடுச்சு!

'இதுலே கடவுள் எங்கெ வர்றார்? எல்லாத்துக்கும் கடவுள் அது இதுன்னு சொல்லிக்கிட்டே இருப்பீங்க' சொன்னது
கடவுள் நம்பிக்கை இல்லாத, என் வற்புறுத்தலுக்காக கோயிலுக்கு எப்பவாவது வர்ற என் மகள்.

"கடவுள்தானே இப்படி பிறக்க வச்சிருக்கார். இவுங்களை இப்பெல்லாம் 'அரவாணி' ன்னு சொல்லணும்.
முந்தியெல்லாம்தான் அசிங்கமா என்னென்னவோ சொல்லிக்கிட்டு இருந்தாங்க. பாவம்! இப்படிப் பிறந்தது
இவுங்க குற்றமா? ஆமாம். நம்ம ஊருலே இப்படி இருக்கறவுங்க இருக்காங்களா?"

" ஏன் இல்லாம? ஆனா அவுங்க எல்லோரையும் மாதிரி சாதாரணமாத்தான் தெரிவாங்க. என் ஃப்ரெண்ட் ஒருத்தன்
பொண்ணா ஃபீல் பண்ணறானாம். செக்ஸ் சேஞ்ச் செஞ்சுக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கான்"

" நிஜமாவாச் சொல்றே? யாரு? ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வந்தானே. நான் கூட 'ஜெகோவா'ஸ் விட்நெஸ் கூட்டத்தைச்
சேர்ந்தவன்னு நினைச்சுக்கிட்டேனே. அவனா? "

" இல்லேம்மா. அவன் 'கே'! நான் ஃபார்ட்டி அவர்ஸ் ஃபேமின் இருந்தப்ப, நம்ம வீட்டுக்கு, ஒரு நாய்க்குட்டியோட
வந்திருந்தானே அவன்!"

"அய்யய்யோ, அவனா? நல்ல அழகான பையனாச்சே! கடவுளோட கொடுமையைப் பார்த்தியா?"

" எல்லாத்துக்கும் கடவுளா? கதை விடுங்க! ஆமா, இதுக்கும் கதை வச்சிருப்பீங்களே. அப்படி ஏதாவது இருக்கா?"

" ஏன் இல்லாம? கோயிலுக்கு வந்தா ஒரு அஞ்சு நிமிஷம் உக்கார்ந்துட்டுப் போகணும். இப்படி உக்கார்.
சுருக்கமாச் சொல்றென்.

மஹாபாரத யுத்தம் ஆரம்பிக்கப் போகுது.அதுக்கு முன்னாலே, எடுத்த காரியம் ஜெயமாகணுமுன்னு சாமியை வேண்டிக்கிட்டு
ஏதாவது பலி கொடுக்கற வழக்கத்தின்படி பலி ஏற்பாடு ஆகுது. இந்தமுறை வேண்டிக்கற விஷயம் ரொம்பப் பெருசுன்றதாலே
ஒரு மனுஷனையே பலியாக் கொடுக்கணுமுன்னு தீர்மானமாச்சு.

எல்லா நல்ல அம்சங்களும் பொருந்திய மனிதனை, சாமிக்குன்னு பலி கொடுக்கணும்.இதுக்கு யாரு பொருத்தமா
இருக்கறாங்கன்னு பார்த்தா, அர்ஜுனனுடைய மகன் அரவான் சரியான ஆளா இருக்கான். அவனைக் கேட்டப்ப
அவன் சரின்னு ஒத்துக்கிட்டான். நாளைக்கு அவனைப் பலி கொடுக்கப் போறாங்க.பாவம். ச்சின்ன வயசு!
அவனுடைய கடைசி ஆசை ஏதாவது இருந்தா, அதை நிறைவேற்றலாமுன்னு அவன் கிட்டே கேக்கறாங்க. அதுக்கு
அவன் சொல்றான்,'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. அதாலே பெண் சுகம் என்னன்னு தெரியாது. நான்
பலியாகறதுக்கு முன்னாலெ அதைப் பத்தித் தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு'

மறுநாள் சாகப் போறவனைக் கல்யாணம் செஞ்சுக்க யாரும் முன்வரலை.இன்னைக்குக் கல்யாணம். நாளைக்கு
விடோன்னா யாரு வருவாங்க. கிருஷ்ணபகவான் பார்த்தாரு. இது சரியாவராதுன்னு, தானே பெண்ணா உரு
மாறிட்டாரு.அரவானைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு, அன்னைக்கு இரவு அவனோட மனைவியா இருக்காரு.
மறுநாள் அரவானை பலி கொடுத்துடறாங்க. கிருஷ்ணன் மறுபடி ஆணா மாறிடறாரு. அரவானோட மனைவி அரவாணி.
அதனாலே ஆணா இருந்து பெண்ணா மாறினவங்களை அரவாணின்னு சொல்லணும்.

கதையைச் சொல்லிட்டு, திடீர்னு சத்தமாச் சிரிச்சுட்டேன். நேத்து 'அவுங்க' கடைக்காரர்கிட்டே பேசிக்கிட்டு இருந்தப்ப
கிடைச்ச விவரம் அவுங்க 'சுவிஸ்'லேயிருந்து வந்திருக்காங்கன்னு. அதுக்கு எதுக்கு சிரிப்பா? சொல்றேன்.
அவுங்க கிளம்பிப் போனப்பிறகும்,பொறுமையா உக்கார்ந்திருந்த எங்களைப் பார்த்துக் கடைக்காரர், 'நீங்க அவுங்ககூட
வந்தவுங்க இல்லையா'ன்னு கேட்டார்!!!! நாமெல்லாம் கூட பாக்கறதுக்கு அப்படியா இருக்கோம்? அதை
நினைச்சுத்தான் சிரிப்பு!!

பூகி ஜங்ஷன், எல்லா ஷாப்பிங் மால் போலத்தான் இருந்தது. ஆனா அங்கெ இருந்த ஒரு 'வாட்டர் ஃபவுன்டென்'
ரொம்ப நல்லா இருந்துச்சு!( குமார் கவனிக்க!)





6 comments:

Anonymous said...

sOthanai

said...

அய்யய்யோ நான் போட்ட சோதனை அநாமதேயமாயிருச்சே!

said...

துளசி, எதிர்பார்த்த வகையில் உங்கள் அனுபவத்தை பதித்ததற்கு நன்றி. உடலால் சிறு மாறுபாடுடையவர்களை அரவணைத்து நம்மில் ஒருவராக பாவிக்காமல் அவரை ஒதுக்கி ஒடுக்கி வாழ வழியில்லாமல் செய்கிறோம்.நீங்கள் உள்ள NZ யில் அவ்வாறில்லை என அறிகையில் மகிழ்ச்சியே. உடல் ஊனமுற்றவருக்கும் நம் நாட்டில் மிகுந்த இடையூறுகளே. இந்த எழுதி ரொம்ப படுத்துவதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன் :) Puthuvai cut n paste is much better.

Anonymous said...

அன்புள்ள Voice on Wings,
பின்னூட்டத்துக்கு நன்றி!!

எங்க நாட்டிலேதான் ஒரு அரவாணி எம்.பி.
(உலகத்து முதல் அரவாணி எம்.பி)கூட இருக்காங்க.
முந்தி அவுங்க ஒரு நகரத்துக்கு மேயரா இருந்தாங்க.
இப்ப எம்.பி!!

ஜார்ஜ்ன்னு இருந்த அவுங்க இப்ப ஜார்ஜினா!!!!
பெண்ணாத்தான் அவுங்களை இப்ப எல்லோரும்
பார்க்கறாங்க!

அது சரி. இப்பத்தான் எல்லாத்துலேயும் 'யூனி செக்ஸ்' டிஸைன்ஸ்
வந்துருச்சே. இது எவ்வளவு செளகரியம்!!!!!

said...

அன்புள்ள Voice on Wings,
பின்னூட்டத்துக்கு நன்றி!!

எங்க நாட்டிலேதான் ஒரு அரவாணி எம்.பி.
(உலகத்து முதல் அரவாணி எம்.பி)கூட இருக்காங்க.
முந்தி அவுங்க ஒரு நகரத்துக்கு மேயரா இருந்தாங்க.
இப்ப எம்.பி!!

ஜார்ஜ்ன்னு இருந்த அவுங்க இப்ப ஜார்ஜினா!!!!
பெண்ணாத்தான் அவுங்களை இப்ப எல்லோரும்
பார்க்கறாங்க!

அது சரி. இப்பத்தான் எல்லாத்துலேயும் 'யூனி செக்ஸ்' டிஸைன்ஸ்
வந்துருச்சே. இது எவ்வளவு செளகரியம்!!!!!

said...

இந்த்யாவிலும் அரவாணிகள் MPஆகவோ MLAஆகவோ பதவியேற்றிருக்கிறார்கள். ஒரு சில விதிவிலக்குகள் உயரத்தை எட்டினாலும் சராசரிகளுக்கு இன்னும் இருண்ட வாழ்வுதானென்ற நிலை மாறி, அவர்களது உடலில் உள்ள சிறு மாறுபாடுகளை ஒரு பொருட்டாக எண்ணாது அவர்கள் பல துறைகளிலும் சிறந்து விளங்க வாய்ப்புகள் உருவாக வேண்டும். Hope we as a society will have the open mindedness to permit this. Thank you :)